Tuesday, May 12, 2020



சத்திநிபாதம்.

     நல் குஞ்ரக்கன்று நண்ணிற் கலைஞானங்
            கற்குஞ்சரக்கன்று காண்''
     மனநினைவில் வாக்கிலனைவருக்கு மறிவரிய
            வள்ளல் கள்ளத்தினான் மறுகு மறிவிலியேன்
     றனை நினைவிலுட் கொண்டே யவனவளோடதுலாந்
          தன்மையினின்மல வடிவு தன்னை மன்னித்
     தினை பனையவளவி லிருவினைதுலை யொப்பறிந்து
          சீர்காழிமன்னு சிற்றம்பல நாடினானென்
     முனைவினையு முடல்வினையும் வருவினையு மறுத்து
          முத்தியளிப்பவன் மலர்த்தாள் சித்த முறவைப்பாம்.
     
பரமபதியாகிய சிவபெருமானே முதற்கடவுள், அப்பெருமானை  விட்டு நீங்காத அருட்சத்தியே பராசத்தியாம். அஃது பேரொளியோடு கூடிய ஞான மயமாயுள்ளது. அஃது பரசிவத்தி லாயிரத்திலொரு கூறுடையதாம். இதில் ஆயிரத்திலோரு கூறுடையது ஆதிசத்தி என்னும் திரோதான சத்தியாம். இதில் ஆயிரத்திலொரு கூறுடையது இச்சா சத்தி. இதில் ஆயிரத்திலொரு கூறுடையது ஞானசத்தி. அதில் ஆயிசத்திலொரு கூறுடையது கிரியா சத்தியாம். இச்சத்திகளுள் இச்சை உயிர்க்கிரங்கும். ஞானம் இசைந் துணர்த்தும். கிரியை பஞ்சகிருத்தியங்களை நடத்தும். திரோதான சத்தி ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயங்களாலியற்றிய புண்ணிய பாவங்கள் துலையொக்கு மளவும் மறைந்து நின்று அறக்கருணையோடு பொருந்தி முத்தியளிக்குமதாம். அஃது ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் நீறாக முத்திநிலை நிற்போர்க்கு அன்னை போல் நின்று ஆதரிக்கும் தோன்றாத் துணையாய்நிற்கும். அச்சத்தி ஆன்ம போதம் இழந்த விட்த்தில் பேரொளியாய்ப் பிரகாசித்து நிற்கும். அப்பொழுது அஃது அருள்ஞானசத்தி என்று அழைக்கப்பெறும். அதனை நமது கரணங்களைக்கொண்டு அறியில் பாச ஞானமாம். - சீவபோதத்தாலறியில் பசு ஞானமாம். அந்த ஞானத்தையே கொண்டு நாமறியில் அஃது நமக்கோர் கருவியாம். ஆதலால் அந்த அருண் ஞானமே ஆன்மாவை நட்த்து மென்றுணர்க. இங்ஙனம் நடத்து முறையைக் காண்டல் ஞான தரிசனமாம். அஃது விளக்கைக் கையில் பிடித்துக்கொண்டு முன்னே போவாரைப்போல் ஆன்மாவை நடத்தும். – அத்தன்மைகண்டு அதன் வழி நிற்றல் ஞானாதீதமாம். ஆதித்தன் நேர்வைத்த விழி யவன் மயமாய் நிற்பதன்றி பொருள் கவராததுபோல இந்த ஞானத்தின் வழி நின்றால் பசுபாச ஞானங்கள் பிரகாசியா வென்பதாம். அந்த ஞானம் எரி விளக்குப் போலவும், ஒளிபோலவும், சூரியப் பிரகாசம்போலவும், விடியற்  காலம் போலவும் பிரகாசித்து நிற்கும். 'இருள்கிழித்தெழுந்த ஞாயிறே போன்று" "மின்னேரனைய பூங்கழல்கள்" என்றருளியவாற்றாலுணர்க.
     
ஆன்ம அறிவில் சிச்சத்தி எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருந்தும், பிறவியந்தகனுக்குச் சூரியப் பிரகாசம் யாதொரு பயனும் பயப்பியாதது போல, ஆணவ இருள் செறிந்துநின்ற பெத்தான்மாக்களுக்குயாதொரு பயனு மின்றி நின்றமை யுணர்க. ஆனால், இறப்பில் தவங்களால் ஆணவ  இருளின் வலிகுன்றி நின்றபோது அச்சத்தியின்றன்மையாகிய ஞானப் பிரகாசந் தோன்றும். இவ்வாறு சிற்றறிவிற் பேரறிவு படிப்படியாய்த் தோய்ந்து நிற்றலே சத்திநிபாதமாம். இஃதுபதிதற்கு இருவினை துலையொத்து நிற்கவேண்டும். ஏனெனில் அஃது ஒருவன் ஒரு லக்ஷியத்தைக் கட்டித் தூக்கினவிடத்து அஃது அசைவற்றுச் சமமாக நின்ற காலம் பார்த்து எய்தாற்போல வென்க. அன்றியும் ஆன்மாக்கள் தங்கி நிற்கும் நிலைகள் மூன்றாம். அவை கேவலம், சகலம், சுத்தம் என்பவைகளே. இவற்றுள் கேவலம், ஆன்மா தேகங்களோடு பொருந்தி நில்லாது ஆணவத்தோடு மாத்திர மியைந்து நிற்கும் நிலை. சகலம் தேகத்தோடு பொருந்தி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களுட் பிறந்து இறந்து திரியுங்கால் இயற்றிய இருவினையாலுறும் இன்ப துன்பங்களை யநுபவித்தற்குரிய பெத்தநிலையாம். திருவருளாற் பாசம் பகையெனக் கண்டு நீங்கித் தன்னையுந் தலைவனையு மறிந்து இறை நிறைவுள் அத்துவிதமாய் நிற்கும் நிலை சுத்தமாம்.
     
இம்மூன்று நிலைகளுள் சகல நிலையுள் இயற்றப்பெறும் புண்ணிய பாவங்கள், ஒரு ஜன்மத்திலே புசித்துத் தொலையத்தக்கதாக மந்திர முதலிய ஆறத் துவாக்களிலேயும் முன்னரே கட்டுப்பட்ட சஞ்சிதம், எடுத்த தேகத்தில் புசித்து முடிவதாயுள்ள பிராரத்துவம், அங்ஙனம் புசிக்குங்கால்வறும் இதர்வகிதங்களால் வரும் ஆகாமியம் ஆகிய மூன்றும் முடிந்துபோம்படி சிவபுண்ணிய மிகுதியினாலே துலையொத்து நிற்பனவாம். அதாவது ஆன்ம அறிவின்கண். இருவினையொப்புக் குறிவிளங்கி நிற்குமென்பதாம். அக்குறியாதெனில் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றி, இரு வினைகளினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்பு நிகழ்ந்து விடுவோன தறிவின்கண் அவ்விருவினைகளும் அவ்வாறு ஒப்ப நிகழ்தலேயாம். இலவாறு அறிவின்கண் இக்குறி நிகழ்ச்சி கூடுமாறில்லையாயின் முத்தியடை தற்கேதுவா தல் கூடாதென்க.

அவ்விருவினைசளுள் புண்ணியமும் பதிபுண்ணியமென்றும் பசு புண்ணி மென்றும் இருவகைப்படும். பசு புண்ணியத்தைப்பயன் விரும்பிச் செய்யில் காவியத்துட்பட்டு அழிவெய்தும். ஆதலால் அஃது நிலைபேறு டைய மெய்ஞ்ஞானத்தைப் பயப்பியாதென்பது பெற்றாம். - பயன் விரும் பாது செய்யில் அஃது பதி புண்ணிய பண்பினதாய் நிற்கும். ஆதலால் இப்புண்ணியம், செய்வோன் கருத்தினைப்பற்றி நிற்றலை யுணர்க.

      சிவபுண்ணியமும் புத்திபூர்வம், அபுத்திபூர்வமென்றிரு திரனுறும். பின்னையது முன்னைய திற் கேதுவாய் நிற்கும், வேள்வி, பசு புண்ணியத் துட்பட்டதாயினும் பயன் கருதாது செய்யில் அபுத்தி பூர்வ பதிபுண்ணியமாம். மாபலி முன்னைப் பிறப்பிற் செய்த செயல் அபுத்திபூர்வ சிவபுண்ணியாயினமையறிக.
 
இஃது இங்ஙனமாக சிவபெருமான் சாதகாசிரியனை யதிட்டித்து நின்று சமயதீக்கை செய்து சரிபை தன்னை நவையற இயற்றச் செய்வன். அங்ஙனம் இயற்றினவர்கள் சிவலோகத்தைப் பொருந்தி அங்குள்ள போகமருந்தி அவனியிலுதிப்பர்கள், பின்னர் போதகாசிரியனாலே விசேட தீக்கை பெற்று சிவபூஜை இயற்றி சிவசாமீபம் பெற்றுப் பெரும் போகந் துய்த்து ஒழிந்தகாலை டவியில் நண்ணுவர்.
   
பின் யோகாசிரியனை கண்ணி சீவ போதத்தால் நாடுதற்கரிய சிவ. யோக மியற்றி சிவனுடைய சாரூபஞ் சேர்ந்து நிற்பர். இச்சாரூப தேகத்திற் பொருந்திவரும் போகத்திற் பற்றிலரேல், உலகமெலா மழியுங்காலத்தில் முத்தி எய்துவர். போகத்தி லாசையுடையரேல் சிருஷ்டி காலத்திலுலகிலுதித்து ஆணவமல பக்குவமடைந்து சத்திபதிந்தபின் குருவினருளால் முத்தி எய்துவர்.

    இப்படியே விசேடமாஞ் சிவதருமச் சரிதை
        எழிற்கிரியை யோகமிவை யியற்றியிடுந் தவத்தாற்
    றப்பறவே யொன்றை யொன்றங் கொழிப்பதாகத்
        தகும்பாவ புண்ணியங்கள். சமனாகப் பொருந்த.
    வப்பொழுதே வினையனைத்தும் பருவமாகி
        யாண வமும் பக்குவத்தை யடைதல் செய்ய
    வொப்புயர் வொன் றில்லாத சிவன் சத்தி பதியு
        முணரிலது மந்தாதி நால்விதமா யுரைப்பார். -

இத்திருவிருத்தத்தால் இருவினையொப்புப் பிறந்தபின் மலபரிபாகம் எய்துதலும் அதன்பின் சத்திநிபாதம் நிகழ்ந்தலும் முறைவயின் கண்டாம். இனி மலபரிபாகமாவது : ஆணவமலத்தின் சத்தி தேய்ந்து தேயந்து நின்று மீண்டும் அவ்வான்மாவைப் பிறவிக்குக்கொண்டுய்க்காத ஓர் நிலை. இதுகாறுங் கூறி பவாற்றால் இருவினையொப்பிற்குக் காரணமாயுள்ளது சிவ புண்ணிய மென்றும் சத்தினிபாதத்துக்கு காரணமாயுள்ளது மலபரிபாகமு மெனக் கண்டாம். அன்றியுஞ் சரியை கிரியை யோகங்கள் ஞான விளைத்தற்கு அங்கமாய் நின்றனவே யன்றி தாமே முத்திகொடுக்குந்தகைமையனவல்ல வென்பதும் பெற்றாம். மேலும் முன்னர்க் கூறிப்போந்த சத்தியானது நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை எனப்பல பேதப்பட்டு ஆன்ம அறிவின்கண் தோற்றி நிற்கும். இவைகளுக்குக் கலைகளென்று பெயர். கலை யெனினும் ஞானமெனிலும் ஒக்கும்;. பக்குவ ஆன்மாவினிடத்து நிவிர்த்திகலை பதிந்தபோது பொய்வாழ்வில் விரத்தி வரும், முத்தியிலிச்சையுண்டாம். பிரதிட்டாகலை பதிந்தபோது அவ்வெண்ணத்தை நிலைநிறுத்தும். வித்தை அறிவைச் சுத்தமாய் விளக்கி நிற்கும். இவ்விளக்கத்தில் ராகத்துவேஷம் அற்றிருக்கை சாந்தி. அதீதமான பாசொரூபமாய் நிற்கை சாந்தியாதீதையாம். ஆறத்துவாக்களுள் மற்றையன இக்கலைகளுள் அடங்கி நிற்குமாற்றை உய்த்துணர்ந்து கொள்க. ஆகவே நிவிர்த்திகலையுள் மந்ததர சத்தியும், பிரதிட்டாகலையுள் மந்தசத்தியும், வித்தியாகலையுள் தீவிரசத்தியும், சாந்திகலையுள் தீவிரதர சத்தியும் செறிந்து நிற்கு மென்று சிவாகமங்கள் கவனவாம். இந்நால்வகைச் சத்தியும் ஆன்மாவினிடத்துப் பதிதல் அல்லது வீழ்தலாகிய சத்திநிபாதம், சோபான முறையால் மந்ததர முதலிய நால்வகைப்பட்டு பின் பலவேறு வகைப்பட்டு நிற்கு மென்க. அதிக மந்தமாய் மெய்ஞ்ஞானத்தை யுதிப்பிப்பது மந்ததரம். மந்தமாய் உதிப்பிக்குமது மந்தம், விஞ்ஞானம் சடுதியிலுதிப்பிப்பது தீவிரம். அந்தமாதிகளில்லாச் சிவஞானம் மிகவும் ஆக்கல் தீவிரதர மெனவறிக..
   
மந்ததர சத்தினிபாத முடையார் தன்மைகளாவன. - -
      "ஆலயம் பணிதலு மதுவலம் வருதலுஞ்
      சீலமெய்த் தொண்டரைச் சென்றடி வணங்கலும்
      யான் செயும்பணியே தென்று கை குவித்தலும்"
   
மந்தசத்திநிபாத முடையார் தன்மைகளாவன. -
      "அவ்வயி னவனுக் காகிய குணங்கள்.
      இவ்வென வுரைப்பனிறைவனை விதியா
      லர்ச்சனை செய்த லதனை யாதரித்து
      அவ்வழி பஞ்ச சுத்தியி னர்ச்சனை
      செய்வது மளித்துச் செயலுரை சிந்தனை
      யகம்புற மிரண்டினுமானவர்ச்சனையிற்
      றகும்படி நிறுத்துந் தன்மையதாகும்.''

தீவிர சத்திநிபாத முடையார் தன்மையாதெனில். -
      ஆவதோ ராசா னருளினட்டாங்க
      மானதோர் சமாதி யடைவதிங் கடைவே
      யியற்றுமிப் பிறவியி லென்கொல் ஞான்று
      முயற்றிட வருமென முன்னுதலளவே
      யச்சிவ தரும மானவேதுவினால்
      மெய்ச் சிவஞான மேவுவரன்றே.

தீவிரதா சத்திநிபாத முடையார் குணங்களுரைக்கில்
      சரியை முதலிய சரித்தோர் தாங்கள் :
      வருமொரு பிறவியில் ஞானம் வாய்ப்பதற்கு
      சத்திய தீவிரதர சத்திநிபாத
      முய்த்திடு மவர்கட் குள குண முரைத்திடி
      னிரண்டொன்றல்லா வின்பமாகும்
      புரண்டெழு மநுபவ பூரண நிலையா
      முத்திமெய்த் தொண்டர்தம் முன்னடி வணங்கலும் -
      பத்தி செய்திடலும் பன்முறை தொழலும்
      பரந்த சைவாகமப் பதிபசுபாச
      நிரந்தர மறியுஞான் றென்றென நினைத்தலும்
      என்பொடு நரம்பு மிறைச்சியும் பொதிந்து -
      துன்ப விவ்வுடலாஞ் சுமை துளக்கறவே :
      நீங்குவதென்றென நினைதொறு நினைதொறு
      மேங்கிய வயிர்ப்பா விளகிய விதையமும்
      பிறவியிற் பயமும் பெருகருள் முத்தியி
      லுறவு கொண்டிடுதற் குற்றெழு காதலு
      மந்தரத்தவர் வாழ் வவனியி லிவர்வாழ்
      விந்திரசால மென வறிந்திடுதலும்
      வினைத்துரிசறுத்து மெய்ச் சிவஞானந்.
      தனைப்பெறு நாளென்றென்று தவித்தலு
      மோர்வருஞ் சிவனதுண்மையி னுருவை
      யார்தெளி விப்பாரென வலம் வருதலு
      மின்னெறியினர்க ளிரும்பசிதன்னா
      லன்ன தா தாவை யவாவினர் போலும்
      வேனிலி னுச்சி விரிகதிர்ப் பாலையிற்
      றான் வரும் வேளையிற் றண்ணீர் வேட்டுத்
      திரிதரு பிறவிக் குருடனை யொத்து.
      வருபவர்க் கருங்கானகத்துவா வியினைப் –
பொருவ நின்றிடுவனப் பூரணக் கடவு
ளணைந்தவப் பரம்பொருளாரெனின்
ஞானக் குணந்தரு சைவக் குருபர நாதன்
என்று கூறியருளிய அகவலினா லறிக.

இப்பக்குவத்தையே வழி நூலாசிரியராகிய அருணந்தி சிவாச்சாரியார், " மிக்கதொரு பக்குவம்'' என்றருளினர். இவர்கள் மிகு சத்தினிபாத முடைய சீவன் முத்தர்கள். இவர்கள் வெறுப்பும் விருப்புமன்றி செடுஞ் செம்பொன்னும் ஒக்கவே காண்பர். ஆண்டு, " அவனிவரை இவரவனை விடாதே அத்துவிதமாய் நின்று தாமுளராத லறியப்பெறாது சிவத்தோ ற்ற மொன்றுமே கண்டு நிற்பர் " என்க. மிகு சத்திநிபாத முடைய தீவிர தா சத்திநிபாதர்க்கு பரமகுருவால் சத்தியோ நிர்வாண தீக்கை செய்யப் பெறும்.
இது காறுங் கூறியவாற்றால் மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்திநிபாத முண்டென்றும் அஃதுடையார் கூற்றி னைத் தென்றுங் கூறினாம்.

இனி ஆன்மாக்களும் மூன்று வகைப்பட்டுப் பக்குவ பேதத்தால் பத்து வகைப்படுவர். மூன்றுவகையாவன : - விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் பிரிவுகளாம்.

ஞானத்தால் கலையகன்றோரை விஞ்ஞானகலரென்றும் எல்லாக்கலையுங் கூடினோரை சகலரென்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன. அன்றியும் விஞ்ஞானகலர்: தீர்ந்ததுகளோர், தீராத்துகளோர், அபக்குவர், பக்குவர் என நால்வகைப்படுவர். பிரளயாகலர் : அபக்குவர், அபரமுத்தர், பரமுத்தர் என மூவகைப்படுவர். சகலர் : பக்குவர், மந்தபக்குவர், அபக்குவர் என மூவகைப்படுவர். விஞ்ஞானகலருக்கும் பிரளயாகலருக்கும் மலபரிபாகத்தில் சத்திநிபாதமுண்டாம். விஞ்ஞானகலருக்கு இருவினையொப்பு இல்லை. பிரளயாகலருக்கு மப்படியேயாம். ஏனெனில் மாயாபோக மின்மையால் கன்மசாமிய மில்லையாம்.
   
இனி முன்கூறிப்போந்த நால்வகைச் சத்திநி பாதங்களின் பிரிவுகளையும் அவைகள் ஆன்மாக்களினிடத்துப் பதியுந் தன்மையுங் கூறுவாம். ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலருக்கு தீவிரதர மந்ததரம், தீவிரதர மந்தம், தீவிரதர தீவிரம், தீவிரதர தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்திநி பாதங்களுள்ளன. இனி இருமலத்தாராகிய பிரளயாகலருக்கு முன்னைய நாலுடன் தீவிர மந்ததரம், தீவிரமந்தம், தீவிர தீவிரம், தீவிர தீவிரதரம்  என்னும் வேறு நான்குஞ்சேர்ந்து எட்டாம். மும்மலத்தாராகிய சகலருக்கு முன்னைய எட்டுடன் மந்ததர மந்ததரம், மந்ததர மந்தம், மந்ததர மந்த தீவிரம், மந்ததரதீவிரம், மந்த மந்ததர தீவிரம், மந்த மந்த தீவிரம், மந்த தீவிரம், மந்த தீவிரதரம் என்னும் எட்டுஞ் சேர்ந்து பதினாறு பேதமாம். அதுபற்றி இறப்பில் தவமும் சோபான முறையாய் பதினாறு பேதங்களாய் வைத்தெண்ணப் பெறும்.
    (1) சரியையிற் சரியை - இஷ்டதேவதைகள் முதலியோரை நினைத்து மந்திரத்தால் செபித்தல்.
    (2) சரியையிற் கிரியை - திருவலகிடல், இண்டைமாலை சாத்தல், தொண்டர்க்கடிமை செய்தல் முதலியனவாம்.
    (3) சரியையில்யோகம் - சதாசிவ நாயனாரை பதுமராக வொளிபோல் இருதயத்தில் தியானித்தல்.
    (4) சரியையில் ஞானம் - அத்தியானபாவனையின் உறைப்பானோரனுபவ வுணர்வு நிகழ்தல்,
    (5) கிரியையிற் சரியை - சிவபூசைக்கு வேண்டும் உபகரணங்களெல்லாஞ் செய்து கோடல்.
    (6) கிரியையிற்கிரியை - - சூரியபூசை முதல் சண்டேகர பூஜை வரை செய்து முடித்து ஒடுக்கிச் செபித்தல்.
    (7) கிரியையில்யோகம் - அகத்தே பூசைஜெபம் தியானம் மூன்றற்கு மூவிடம் வகுத்துக்கொண்டு செய்யப்படும் அந்தரியாகம்.
    (8) கிரியையில் ஞானம் - இவ்வந்தரியாக வுறைப்பின் கண்ணிகழு மோரனுபவ வுணர்வு.
    (9) யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் நான்கும்.
    (10) யோகத்திற் கிரியை - பிரத்தியாகார முந்தாரனையும்.
    (11) யோகத்தில்யோகம் - தியானம்.
    (12) யோகத்தில் ஞானம் - - சமாதி.
    (13) ஞானத்திற் சரியை - நீடித்து பிட்டைகலையா திருத்தல்.
    (14) ஞானத்திற் கிரியை - ஞான பூஜா விதிப்படி செய்தல்.
    (15) ஞானத்தில் யோகம் - முத்தி பஞ்சாக்ஷரத்தை உச்சரிப்பது.
    (16) ஞானத்தில் ஞானம் - முப்பொருளுண்மை யுணர்ந்து பேரானந்தத் துள்ள மிழ்ந்தி நிற்றல்.
   
இனி விஞ்ஞானகலர்க்குரிய தீவிரதர மந்ததர முதல் சத்திரிடாதம் நாலில் மலபாகமும், அதமபக்குவம், மத்திமபக்குவம், உத்தமபக்குவம், உத்த மோத்தமபக்குவம் என நான்கு வகையாம்.
   
சிவபிரான் நமக்கு மேலென்றுணர்வது அதமபக்குவம். சிவன்போல வடிவு பெறுதல் மத்திமபக்குவம். நீங்காச் சேவை'பண்ணுதல் உத்தம பக்குவம். அவனாயிருப்பது உத்தமோத்த மபக்குவம். பிரளயாகலருக்கு கன்மபாகமும் மலபாகமும் நாலாம். அது கீழ்ப் பிருதுவியப்புக்களில் உருத் கமதிரராய சிவனாலுண்டாய தென்னும் நினைவுவருதல். மேலே அக்கினிவாயு ஆகாசங்களில் உருத்திரராய சிவச்செயலாய்த் தங்களைப் பாவித்திருத்தல். தங்களுடலுங் கரணமும் சிவனதாகக் கொள்ளுதல் போதமறந்து சீகண்டராதியராம் அவதர மாம் புகழை யுடைத்தாதல்.
   
இனிச்சகலருக்குரிய எட்டில். (1) அரம்பைத் தண்டிலக்கினிபற்றினாற் போல் தவஞ்செய்வாரைக் கண்டு தவஞ்செய்து இடையிலே விடுவது மந்த தர மந்ததரம் (2) நீரில் நெருப்புப்போலச் செய்யும் சரியை மெய்யெனக் கொள்வது மந்ததர மந்தம். இவை யிரண்டுஞ் சரியை, (3) பச்சைமரத்திலக்கினி பற்றுவதுபோல கிரியை நினைவுபற்றி அருமை கண்டுவிடல் மந்ததர் மந்த தீவிரம் (4) நனைந்தவிரகி லக்கினிபோல பற்றவரிதாயப் பற்றினால் விடாதாகை மந்ததர தீவிரம். இவை யிரண்டுங் கிரியை. (5) உலர்ந்த விறகில் அக்கினிபோல் பற்றினது விடாமற் பிடித்தல் மந்த மந்ததரதீவிரம் (6) கரியிலக்கினிபோல் காட்டின யோகம் ஞானம் பற்றல் மந்த மந்ததீவிரம். இவையிரண்டும் யோகம். (7) செப்புப் பொடியில் அக்கினிபற்றின பொருளை பற்று விடாமற் பிடிப்பதுபோல ஞானத்தைப் பற்றல் மந்த தீவிரம் (8) பொற்சோதியாகிய சுவர்ணத்தில் அக்கினி கடுகப்பற்றி உருகிக் கலப்பதுபோல ஞானத்திலழுந்தல் மந்ததீவிரதரம். இவையிரண்டும் ஞானமாம். இவையுடையோரை தீக்ஷிக்கு முறைமையும் சட்சுதீக்ஷை, பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மான ததீக்ஷை, சாத்திரதீக்ஷை, யோகதீக்ஷை என்னும் ஆறும், இவையங்கமாயுள்ள அவுத்திரிதீக்ஷையும், சமையம், விசேஷம், நிருவாணம், ஞானம் எனப்பலவகைப்படும். அவைகளை ஈண்டு விளக்கி வீரித்திலம்.

      அனைத்துயிர்க்கு முயிராகி நின்றே யென்று.
          மாறாறு தத்துவத்துக்க தீதனாகி
      நினைப்பரிசாயுள்ள சிவன் கருணையாலே
        நீடுலகிற் சற்குருவாம் நிமலன் றேகர்
      தனைப் பொருந்தியவன்றானேயாகி நின்று
        சத்திநிபாதத் துள்ளோர் தங்கள் பா :
      வினைத்தொகுதி யொழிந் திடவே நோக்கித் தீண்டி
          லிளம்பிய வுத்திரியாதியா லளிப்பன் வீடே. a
    என்று கூறிய செய்யுளாலு மறிக.
 
சிவனுக்குஞ் சத்திக்குஞ் செய்த புண்ணிய பாவங்கள் முற்கூறிய கலைகளினிடத்து மருவி நிற்பனவாம். மந்ததர சத்திநிபாதர்க்கு ஆசான் நிவிர்த்தி பிரதிட்டை என்னும் கலைகளிலுள்ள வினைத்தொகுதிகளை மாய்த்து பிரகிருதிக்கு மேலுள்ள புவனங்களில் வைப்பன். மந்த சத்திநிபாதர்க்கு வித்தியாகலையிலுள்ள வினைகளையழித்து சுத்தவித்தையில்வைப்பன். தீவிர சத்திநிபாதர்க்கு சாந்திகலையிலுள்ள பாசங்களை நீக்கி சிவசம் முத்தி யென்னும் பதமுத்தி யளிப்பன். இவர்களுக்குப் பரமுத்தி பிரளய காலத்திலளிப்பன். தீவிரத ரமாம் சத்திநிபாதம் பதியில் யாதொரு பற்று மிலராகி சத்தியோ நிருவாணத்திற்குரியராவார். அதாவது உடனே பரழுத்தி எய்துவர் சந்தான குரவரிலொருவராகிய உமாபதிச் சிவாச்சாரியரால், பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செட்டிக்கும் இத்தீக்கை செய்யப்பெற்ற உண்மைச் சரிதங் கேட்டுணர்க.

      சத்தியோ நிருவாணஞ் சஞ்சிதமாம் வினைக
        டன்னுடனே பிராரத்த வினைகடனு வாதி
      யத்தனையு மொழித்தருளி யகண்டாகாரதையா
        யளவிறந்த வானந்தமாகச் சுத்த
      சித்துருவாய் நித்தமாய்ச் சிறிதாய்ப் பெரிதாய்த்
        திகழுமொளியாய் மனத்தாற் சிந்திக்கொண்ணா
      நித்தனுடன் வேற்றவே நிறுத்த வென்றே
        நிகழ்த்தியிடுஞ் சித்தாந்த முத்தியிந்த நிலையே. - 16
 
ஆதலால் அன்பர்களே ! சரியையாதி சிவபுண்ணியங்களை இயற்றி இருவினை யொப்பெய்தி மலபரிபாக மடைந்து இறைவனுடைய சத்தி பதிதற்குரியராமாறு சற்குரு பாதாரவிந்தங்களை வணங்குவாம்.

திருவாசகம்.

      பித்தனென்றெனை யுலகவர் பகர்வதோர் காரணமிதுகேளீ
      ரொத்துச் சென்று தன் திருவருட் கூடிடுமுபாயம தறியாமே
      செத்துப் போயருநரகிடை வீழ்வதற் கொருப்படுகின்றேனை
      யத்தனாண்டு தன்னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே.
      பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
        மானுன்னாமங்கள் பேசுவார்க்
      கிணக்கிலாததோ ரின்பமேவருந்
        துன்பமே துடைத் தெம்பிரா
      னுணக்கிலாததோர் வித்துமேல்விளை
        யாமலென்வினை யொத்தபின்
      கணக்சிலாத் திருக்கோலநீ வந்து
        காட்டினாய்க் கழுக்குன்றிலே.
வேறு.
    தரைமுதலா மண்டமிந்திர சாலமாய்த் தோன்றிடவும்
'பிரமன் முதலோர் வாழ்வு பேய்த்தே ரென்றெண்ணிடவும்
நிரதிசயானந்த சிவ நித்தியங்கா ணென்றிடவும்
பரகுருவே சத்திபதிப்பாயடி யேற்கே.
கரமிரண்டினாற் குருவின் கால் தலைமேல் வைத்திடவும்
      அரவென் றலரிடவு மாடிடவும் பாடிடவும்
      நிரதிசயாநந்த நீச்சி லழுந்திடவும்
      பரசிவ சத்தி பதிப்பாயடி யேற்கே.
      ஆகஞ்சீ சீயென்றரு வருத்து நின்றிடவும்
      மோகமலமாயை கன்ம மோசித்திருந்திடவும்
      ஏகவருளுள் வந்திருந்திடவு மன்னை தையல்
      பாகனே சத்தி பதிப்பாயடி யேற்கே.

[1910 ௵ இராமநாதபுரத்தில் கூடிய சைவசித்தாந்த மகா சமாஜக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ப - ர்.]
S. பால்வண்ண முதலியார்.
சித்தாந்தம் – 1912 ௵- மார்ச்