Saturday, May 9, 2020



தேனூறும் வாசகங்கள்
[வித்துவான் திரு. கு. நடேச கவுண்டர்,
முதல்வர், சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரி, பேரூர்,]

தேனூறும் வாசகங்கள் அறுநூறுந் திருக்கோவை
நானூறு மமு தூற மொழிந்தருளும் நாயகனை
வானூறுங்   கங்கை நிகர் மாணிக்க வாசகனை
யானூறு படாதவகை யிருபோது மிறைஞ்சிடுவேன்.
(எல்லப்ப நாவலர்)

திருவார் பெருந்துறையில் செழுமலர்க் குருந்த நீழலில், சிவபெருமான் குருவாகி எழுந்து அருளி இருந்து திருந்திய வேதசிரப் பொருண் முழுதும் உரைத்தருளக்  கொள்ளை கொண்டு, ''காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டு கொள் என்று காட்டிய சேய மாமலர்ச் சேவடியைச் சென்னி" யிலும் சிந்தையிலும் மலர வைத்து, மாறி நின்று மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்று உள்ளே எழும் பேரின்ப வெள்ளத்துள் திளைத்துப், பிச்சேற்றி வாராவழி அருளிவந்து தம் உள்ளம் புகுந்த பேராசை வாரியன் பாற் பொங்கி எழும் போன் பாலே கரைந்து கரைந்து இருகண் நீர் மழைவாரச் சிவானந் தம் தேக்கெறிந்து மாணிக்கவாசகர் வாய் மலர்ந்த திருவாசகங்களே தேனூறும் வாசகங்களாகும்.

இயல்பாகவே மதுரநிறைந்த முந்திரிக்கனி தேனிலும் ஊறிச் சுவை நனிமிக்கு விளங்குதல் போலத் தண்ணிய மெல் லிய தேனின் சுவையும் கலந்து திருவாசகப் பாடல்களாய் வாதவூர் அடிகளது மணி நாவில் தோன்றின. ஆதலால் மதுா வாசகம்' எனப் பெயர் பெற்றன. பரதகண்டத்தில் தமிழகத்தில் சைவசமயத்தில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெருமக்களுக்கு மட்டும் அல்லாமல் வேறு கண்டத்தில் பிறமொழி பேசும் நாட்டினராய்ப் பிறசமயத்தில் பிறந்து வளர்ந்த நடு நிலை நெஞ்சத்து நல்லறிவாளர்க்கும், தன்னை யோதுங்கால் தன்னை மறந்து அன்பில் திளைக்கும் அநுபவம் தரும் ஆற்றல்உள்ளது திருவாசகம் இதற்கு G. U. போப் பாதிரியாரே சான்றாவர்.

எனக்கு அறிமுகமான ஒருவர் - நாத்திகம் பேசுவது பகுத்தறிவுடைமைக்குப் பின்னமாகும் என்பதை உணராது, சின்னமாகும் எனக்கொண்டு பேசுவார். 'திரு வாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்'என்கின்றார்களே! யான் படித்துப் படித்துப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் உருக்கம் வரவில்லையே என்று இகழ்ச்சிக் குறிப்பொடு வினவினார். அவருக்கு என்ன விடை கூறுவது? 'திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்......... அன்பராகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலர்,'' என்று தான் அறிஞர்கள் கூறுகின்றனர், " என்ற அளவில்தான் விடைகூறினேன். நீலம் உண்டது வெள்ளை நிறமாமே?’ என்று ஞானசம்பந்தப் பெருமான் அருளியது போல, அகத்தும் புறத்தும் சுறுப்பை ஏற்றி அறிவின் செம்மையை வெள்ளையாக்கிக் கொண்டார் சிலருடைய உள்ளத்தைத் திருவாசகமும் உருக்காது என்றால், அவர்களு டைய வினையின் வலிமை வியக்கற் பாலதே. விழியுள்ள வர்க்கே விளக்கு; மொழியுள்ளேர்க்கே முது நூல்; அன்புள் ளவர்க்கே அருள் நூல்; என்று அமைதியுறுவதே யாம் செயற்பாலது.

திருவாசகப் பாக்களில் தேன் ஊறுவது ஏன்?

பாக்களின் இனிய ஓசையும் சொற்களின் செம்மையும், கருத்தின் ஆழமும் பொதுவாகவும், சிவம் என்னும் நாமம் தனக்கே உடைய செம்பொருளின் அருமையும், பெருமையும், பரங்கருணைத் திறமும் தேனில் இனிமை போலக் கலந்துள்ள பக்திச்சுவையும் ஆகிய பொருட் சிறப்புச் சிறப்பாக-வும் திருவாசகப் பாக்களில் செறிந்து நிற்பதால் அவை இது வார் உள்ளத்தில் தேனூறச் செய்கின்றன. ஒரு சில எடுத் துக் காட்டுக்கள் காண்போம்.

திருவாசக நூல், "நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க," எனத் தொடங்கி, 'அம்மை எனக் கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே" என முடிபு பெறுகின்றது. அங்ஙனம் தொடங்கும் அகவலுக்குச் சிவபுராணம் என்பதும், முடியும் பதிகத்துக்கு அச்சோப்பதிகம் என்பதும் பெயர் ஆம். அந்த அகவலின் சிறப்பு, 'ஈசர் தமக்கு இயல்பான திருநாமம் முதல் எவையும் மாசறவே வாழ்க வென வாழ்த் துகின்ற அருட்குறிப்பாம், " எனவும், அச்சோப் பதிகத்தின் சிறப்பு, "ஈசர் போக சுகம் தமக்கு அளித்தது ஆரே பெறு வார் எனும் அருமை புகல் அச்சோவே" எனவும் பழைய திருப் பெருந்துறைப் புராணம் கூறுகின்றது. எனவே சிவ பெருமானுடைய திருநாமமாகிய திருவைந் தெழுத்தைத் துணைக்கொண்டு அவன் திருத்தாளை வாழ்த்தி அவன் திரு வருள் பெற்றுச் சிவபோக சுகம் பெற்று, " அம்மை எனக் கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே,'' எனச் செம் மாந்து வாழ்வதே திருவாசகத்தின் குறிக்கோள் என்பது போதரும். சிவபுராணத திருவகவலில் வரும் விளிகள் அவ அடைய இலக்கணங்களையும், பரங்கருணையையும் புலப் படுத் துவனவாக உள்ளன.

"ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க," என்பது சிவன் தன்மைக் கண் தானே ஆகியும், கலப்பால் எல்லாப் பொருளும் ஆகியும் நிறைந்து விஸ்வரூபன், விஸ்வாந்தர் யாமி, விஸ்வநாதன், விஸ்வாதீதன் என்ற பெயர்களுக்குப் பொருத்தமானவன் என்று உணர்த்துகின்றது.

ஏகன் என்ற பெயரின் விளக்கமாக.

"ஸர்வாந் லோகாந் உத்க் ருஹ்ணாத்யஸ்ரம்
ஸ்ருஜதி விஸ்ருஜதி வாஸயதி தஸ்மா துச்யத ஏக:''

என அதர்வ சிசோப நிடதம் கூறுகின்றது.

அதன் பொருள்: - எல்லா உலகங்களையும் தன்கண் ஒடுக்கிக் கொள்கின்றான்; படைக்கின்றான்; துடைக்கின்றான்; காக்கின்றான். ஆகலான் எகன் எனப்படுகின்றான் என்பது. " காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண்ணார் விசும் பின் விண்ணோர்க் கெல்லாம் மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா" எனத் திருவாசகமும் கூறிற்று. இறைவன் ஏகனாகவும் அநேகனாகவும் இருப்பதைப் பற்றிக் கூறும், "சகலத்தும் ஒற்றைப் பட்டயல் பட்டு நிற்கு நிற்பதைக் கூறும் சரணப்ரசித்தி சற்றுணராரோ'' என்ற அருணகிரி நாதர் திருவாக்கும் ஈண்டு உன்னற் பாலது.

"சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன் தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான்''

[மோய = கொட. 'ஓய' எனப் பிரிப்பது பிழை]

என்பதுள் முதலிரண்டு வரிகள் அடிக்கடி அன்பர்களால் எடுத்தாளப்படுவன. அவற்றின் கருத்து ''சிவபக்தியோ அவ்விறைவனது பிரசாதத்தினாலேயே உண்டாகத் தக்கது" என்று சிவ மஹா புராணத்திலும் காணப்படுகின்றது. பின்னிரண்டு வரிகளால் சிவனுடைய கீர்த்திகளை உரைப்பதனால் "வெய்ய வினை இரண்டும் வெந்தகலும்' என்பது அறிகின்றோம். "இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன், - பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு'' என்று பொதுமறையும் புகலும்.

சிவபெருமான் எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்பதை

"விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லையிலாதானே,''  என்பதாலும்

'வேதங்கள் - ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே'', என்பதாலும்

"நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே,''

என்பதாலும், பிறவற்றாலும் திருவாசகம் கூறுகின்றது. இக் கருத்து "ஊர்த்வ பூர்ணம் அத: பூரணம் மத்ய பூரணம் சிவாத் மகம்" என்று முத்தி கோபநிடதம் கூறிற்று. இனி, பிறப்பினால் தாம் உற்ற இளைப்பினைப் பற்றிக் குறிப்பிட்டு,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்''
என்று வாதவூரடிகள் மொழிந்துள்ளார். கல்லாகவும் பிறப்பதுண்டோ? கல்லிலும் உயிர் உண்டோ எனின் உண்டு என்பதாக, " ஸர் ஜான் வுட்ரோப்'என்ற ஓர் ஆங்கிலேயர் (கல் கத்தா ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்தவர். தேவி பக்தர்களில் சிறந்தவர். ஆரியத்தினின்றும் சக்தி சம்பந்தமான பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். சொந்தமாகவும் பல நூல்கள் எழுதியவர்) கூறுகின்றதைக் கேண்மின் :

''மலைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அங்குலம் அங்குலமாக மேலே கிளம்பிப் பின் அங்ஙனமே நிலத்தின் வயிற்றுள் இறங்கி மறைகின்றன. மலைக்கும் பிறப்பும் இறப்பும் உண்டு. செத்த மரத்தில் வலிமை இல்லை. செத்தமலையின் கற்கள், பனி முதலியவற்றால் வலிமை இழந்து பசையற்றுப் போகின்றன. செத்த மரத்தின் கட்டையைப் போலவே. மெல்லப் புடைத்தாலே அக் கற்கள் பொடிந்து போகின்றன. கல்வாணிகர் இதனைத் தடையேது மின்றி ஒத்துக் கொள்கின்றனர். அவர்கள் உயிரோடு இருக்கும் மலைக்கு வேறுபாடு காட்டவும் வல்லுநராயுளர். (Principles of Tantra Sastra - Page no. 98 - 99) நமக்குத் தெரியாத செய்திகள் உலகத்தில் எத்தனை யுளவோ| “கற்றது கை மண்ண ளவு கல்லாததுலகளவு"!

முந்திய பிறவிகளில் புண்ணியம் செய்துள்ளோர்க்கே பிறவித துன்பம் புலனாம். அது புலனாகியவர்க்கே இனிப் பிறவாமே காக்கும் தெய்வத்தின் பாற் சிந்தை செல்லும். மானிடப் பிறவியிலேதான் தெய்வத்தைத் தேடி உய்யும் அறிவு உண்டாகும். இன்னோரன்ன செய்திகள் பலவும் போற்றித் திருவகவலில் சாற்றப் படுகின்றன,

யானை முதலா எறும்பு ஈறாய ஊனமில்யோனி
யின் உள்வினை பிழைத்தும்''

என்பதனால் -மனிதப் பிறவி வாய்த்தலின் அருமை அறிவுறுத்தப்பட்டது.

''மானுடப் பிறப்பினுள் மாதவு தரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்," என்பது தொடங்கி, "தக்கதச மதி தாயோடு தான் படுந்துக்க சாகரத்துயரிடைப் பிழைத்தும்,'' என்பது ஈறாகக் கருப்பையிற் படுந்துன்பமும், அதி னின்று வெளிப் படுங்கால் விளையும் துன்பமும் விளம்பப் பட்டன.

"காலை மலமொடு" என்பது தொடங்கிப் "புல்வரம்பாய பல துறைபிழைத்தும்" என்பதீறாக மனித வாழ்க்கையிற் படுந்துன்பங்கள் வருணித்துக் கூறப்பட்டன.

“தெய்வ மென்ப தோர் சித்தமுண்டாகி' என்பது முதல் அதிற் பெருமாயை எனைப் பல சூழவும்'என்பது வரை நெறியல்லா நெறி தன்னை நெறியாக நினைந்து அலையும் அல்லல்கள் கூறப்பட்டன.

இங்ஙனம் சொல்ல மாளாத் துன்பத்திற்சுழலும் ஒருவனை அறை கூவி ஈர்த்து ஆட்கொண்டு, கொள்ள மாளா இன்ப வெள்ளத் தழுத்தி வினை கடிவிக்கின்றான் எல்லையில் கருணை இறைவன் என்பது, தேனூறும் வாசங்கள் பலவற்றி லும் கூறப் படுகிறது. அதிசயப்பத்து, அற்புதப்பத்து ஓதியின் புறற்பாலன.

திருச்சதகத்தில் சுட்டறுத்தல் என்னும் பகுதியில் அடிகள் தம் சிறுமையையும் இறைவன் எளிதில் வந்து ஆட்கொண்ட பெருமையையும் பற்றிப் பாடிய பாடல்கள் மிகக் கனிவானவை.

"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந் தாழுறு புனலிற் கீழ் மேலாகப்
பதைத் துருகு மவர் நிற்க என்னை யாண்டாய்க்கு
உள்ளந்தா ணின் றுச்சி யளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணா யண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந் தீவினையி னேற்கே'

என்ற திருப்பாட்டுத்தான் எத்தனை உருக்கமாயுள்ளது இத்திருப் பாட்டில் போன்பர்களின் இயல்பு கூறக் கேட்கின்றோம். யாரேனும், "வெள்ளந்தாழ் விரிசடையாய் விடை யாய் விண்ணோர் பெருமானே" என இறைவன் பெயரைக் கூறவே அதனைக் கேட்ட மாத்திரத்திலே அன்பர்கள் நெஞ்சத்தில் சிவ வேட்கை எழுகின்றது. அவ்வேட்கையால் கெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகுகின்றது. சிவனைப் புல்லிப் புணர்வது என்று கொல்லோ என்று பதைக்கின்றனர். பள்ள மடையிற் பாயும் நீர்போல் அன்பு பாய்ந்து ஓடுகின்றது எனக் கேட்கின்றோம். "தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்" என்பதும் அது பற்றியே: இந்தக்கருத்து விதையே,

"தேரொலிக்க மாவொலிக்கத் திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி
யூரொலிக்கும் பெருவண்ணா ரென ஒண்ணா நிலைமையினார்
நீரொலிக்க அளவொலிக்க நிலாமுகிழ்க்குஞ்சடைமுடியார்,
பேரொலிக்க உருகுமவர்க் கொலிப்பர் பெருவியப்பி னோடும்,''

என்று சேக்கிழார், செய்யுள் நிலத்தில் முளைத்தெழுந்தது.

அங்ஙனம் பதைத்துருகுமவர்கள் இன்னும் ஆண்டவன் அருளைப் பெறாது காத்து நிற்கவும், வாதவூரரை வலிந்து ஈர்த்து ஆட்கொண்டு "அடித்து அடித்து அக்காரம் தீற்றி யாது" போல அருள் செய்தானாம்.

அத்தகைய அருளுதவியை அறிந்து உருகுதற்கு அடிகளுக்கு உள்ள நெஞ்சின் இடம் போதாதாம். உள்ளங்கால் முதல் உச்சி அளவும் நெஞ்சேயாகி அந்த நெஞ்சு உருகுவதாகவும் இருக்கவேண்டுமாம், அகத்தே அவ்வாறு நிகழும் அன்புக்கு ஏற்பப் புறத்தேயும் உடம்பு முழுவதும் கண்களேயாகி அடங்காத அன்புக் கண்ணீர் பாய வேண்டுமாம். அங்ஙனம் ஆகமாட்டாமல் இருக்கின்ற நெஞ்சு நெஞ்சல்லவாம்; கண் கண்ணல்லவாம். அவை முறையே கல்லும், மர முமாம். என்னே! அவரது அன்பாசை! இப்பாட்டினை யாமும் கலந்து பாடுங்கால் எம்முள்ளத்தும் அன்பரும்பி இன்பத் தேன் ஊறாதோ!

இனி மாணிக்க வாசகர் தமக்கு இறைவன் அருள் செய்த இயல்பினைக் காண்போம்.

“வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது, நான் வினைக் கேடன்'என்பாய் போல'
இனையன் நான்'என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன், அந்தோ
அலறிடேன், உலறிடேன், ஆவி சோரேன்;
முனைவனே, முறையோ! நான் ஆனவாறு
முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே"

என்பது ஒரு தேனூறும் வாசகம். இதன் பொருள்:

"யாதொன்று சூழினும் தான் முந்துறும்" தன்மைய தான வினைவசப் பட்டுச், "செய்வதறியாச் சிறுநாயேனை நீ ஆட்கொண்டு எம்பிரான் ஆயினை! புகுந்து நின்று ஆண்டனை. எவ்வாறு புகுந்து ஆண்டனை எனின் கற்போலும் சிந்தை கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போல என் நெஞ்சினுள்ளே புகுந்து அருளியாண்டனை! குரு வடிவாகி வந்து புறத்தே என்கண் எதிரில் நிற்பவனைப் போலவே நின்று கொண்டிருந்தும் "கண்வழி நுழையுமோர், கள்வனினும் கள்வனாகி உள்ளே புகுந்து அகத்தும், புறத்தும் ஆயினை ! நான் இத்தன்மையன் என்று உன்னை எனக்கு அறிவித்தனை ! அதனால் உன்னை வினைக்கேடன் (வினையைக் கெடுப்பதைத் தொழிலாக உடையவன்; வேலை கெட்டவன்) என்று அறிந்தேன். உன்னைக் "காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக் தாலே'' உன்னை நீ அறிவிக்க அறிந்த யான் என்னையும் அறிந்து ஏனைய எல்லாவற்றையும் அறிந்தேன். உனக்கு ஆட் பட்டேன். அதனால் என்னுடைய, மூவேழ் சுற்றமும் முரண் உறுநரகிடை ஆழாமே, "ஆட்கொள்ளப் பெற்றனர். ஆதலால் எனக்கு மட்டுமே பிரான் ஆகாமல் எம்பிரான் ஆயினை. அத்தகைய கருணைச் செயலுக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். யான் பெற்ற பேற்றினை நினைந்து உன்னைப் பற்றிப் பாடவேண்டும், பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு நின் நாட வேண்டும், அலறிட வேண்டும், உலறிட வேண்டும். ஆனால், இரும்பாலான பதுமை போன்ற நான் அவற்றுள் ஒன்றும் செய்திலேன். முனைவனே யான் இவ்வாறு ஆயினது முறை தானோ? இதன் பயன் யாதாய் விளையுமோ? முதலும் முடிவும் ஆகியவனே என்றவாறு, (உலறுதல் = மயிர் சிலிர்த்தல்;  " 'பெயல் உழந்து உலறிய பீலி மஞ்ஞை" என நற்றிணையில் வந்து உள்ளது.

முனைவன் = வினையின் நீங்கி விளங்கிய அறிவினன். ஆவிசோரல் = தற்போதம் அழிதல். 

வாதவூரடிகள் மலர் வாய்ப் பிறந்த மணிவாசகங்கள் சிவானந்தமாகிய தேனிலே ஊறினவை. ஓது வார்க்குத்தேன் ஊறுபவை. அடிகள் தாம் திளைத்த பேரின்பத்தின் பெற்றியை "ஆற்றேனாக அவயவஞ் சுவை தருகோல் தேன் கொண்டு செய்தனன்........ வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்...........
அற்புதமான அமுத தாரைகள் எற்புத்துளை தோறும் ஏற்றினன், உருகுவது உள்ளங் கொண்டு ஒருருச் செய்தாங்கு எனக்கு அள்ளூ ராக்கை அமைத்தனன்..............
அருளொடு பராவமுதாக்கினன்" என்று திருவண்டப் பகுதியில் தெளிய உரைத்து அருளினார். இப் பகுதியை நாம் கலந்து பாடுங்கால் அவர் நுகர்ந்த பரமானந்தப் பழங் கடலின் சில திவலைகளேனும் நம் உள்ளத்திலும் உறாவோ!

பன்னூறாண்டுகளுக்கு முன்னரிருந்த அடிகள் அருளிய அருள் அநுபவத்திற்குச் சான்றாகச் சென்ற நூற்றாண்டில் இருந்த இராம கிருஷ்ண பரமஹம்சர் அருளிச் செய்ததைக் கேண்மின்:

"ஒருவன் இறைவன் பாற் பேரன்பு பெற்றான் ஆனால், உடம்பின் மயிர்க் கால் எல்லாம் இன்பம் நுகர்வதற்கு ஏற்ற உறுப்பாக இறைவனோடு கலந்த இன்ப வெள்ளத்தை நுகர் கின்றான்.'

அன்பே சிவம். சிவமே இன்பம். அன்பு இன்பு சிவம் என்ற சொற்களால் குறிக்கப்படும் பொருள் ஒன்றே என்பது தேனூறும் வாசகங்களால் அறிகின்றோம்.

"புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலா முருக்கி யெளியையா யாண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே யிறப்பொடு, மயக்காம்
தொடக்கெலா மறுத்த நற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங் கெழுந் தருளுவது இனியே"

என்னும் இன்ப வாசகத்தை ஓதின் அன்பு விளைவதும் அதிசயமோ!

சிவன் சேவடியிற் பேரன்பு செனிக்கப் பெற்றோர் “ பரமானந்தப் பழங்கடல் " சேர்வர். அதனால் ஆவியாக்கை யான் என தென்றியாது மின்றியறுதல் " ஏற்படும். ஆவியை யானென்றும், உடலைஎனது என்றும் நினைத்திருத்தல் அறவே ஒழிவது தான் சிவானந்தப் பேற்றுக்கு வழி. அன்பின் முழுப் பயன் பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரி வில்லா, மறவா நினையா அளவில்லாமாளா இன்பமாகடலே'' என்ற பிரார்த்தனையினும் சிறந்த பிரார்த்தனை வேறு யாது? சிவமாகிய இன்பமாகடல் ஒன்றே ஏழு கடலினும் பெரியது என்பது விளங்கத்தானோ, அடிகள் அக்கடலினை 'பேரா' என்பது முதலாக ஏழு விசேடணங்களால் விசேடித்துக் கூறி யருளினார்.

இன்பமா கடலில் திளைத்த போருளாளர் தம் நெஞ்சில் அதனையன்றி வேறெதுவும் புகுதற்கும் இடம் இராது. எல் லாம் அதுவேயாகவே இருக்கும். "பாஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பாமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்" என்று சைவசாத்திரம் சாற்றும். அத்தகைய ஞானி களுக்குத் தலைவராகும் வாதவூரர் "யாருறவெனக்கிங்கு ஆர் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்குமென்சோதீ", "ஊடுவ துன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி' என்றவாசகங்களில் ஊறுந்தேன் “தினைத்த னையுள்ளதோர் பூவினிற்றேன்" போல அறிவை மயக்காமல் தெளிவிக்கின்றதன்றோ?

தேனூறும் வாசகங்களை ஓதி உய்வோமாக. அவை தோன்றற்கு ஏதுவாக இருந்த அன்பும் அருளும் அடியே முக்கும் அடிகளார் கமலச் சேவடியருள்வதாக.

"தேசத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்தமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளுதியே"  (வடலூர் வள்ளலார்)

ஆரவார மறவொரு வார்த்தைசொல் அங்கணானை நினை தொறும் கண்ணினீர்
வாரவார அழுதருள் வாதவூர் வள்ளலார் மணிவாசகம் வாழியே

திரு ஞான சம்பந்தன் சேவடி வாழ்க !

சித்தாந்தம் – 1962 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment