Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
தேவாரக் குறிப்பு.

கல்லூர்ப் ருமணம் வேண்டாக் கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில்
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம்பரனே.

(இ - ள) நல்லூர் என்னுந்திருத்தலத்தின் கண்ணதாய திருப்பெருமணம் என்னுந் திருத்தளியினையே விரும்பி ஆண்டெழுந்தருளிவைகும் நம்பிரானே, நும்மையே நம்பி நும் அல்லவற்றை நம்பாத நும் திருத்தொண்டர்வாக்கு மனங்களானுணர்ந்து சொல்லப்படாத அவ்வூர்ப்பெருமண மொன்றே மேற்கோடலுடையரன்றி அவற்றானுணர்ந்து சொல்லுதற்குரிய இவ்வூர்ப்படும் ஆரவாரமாய இம்மணத்தை மேற்கொள்ளாரன்றோ? அற்றேல் அவர் அதனை மேற்கொண்டாற்படும் இழுக்கென்னை யெனின்? ஒருவன் நுமது கழுமலம் முதலிய பலவேறூர்களைத் தொழுமாற்றாற்றொழு மாயின் அதன் அதனானே தன் மலங்கழுவி பெருமணமாய பேரின்ப மெய்துமெனவும் "நிருமலமுடையார் பெருமணங்கண்டோரும் நிரு மலரே" எனவும், ஓதும் நூல்கள் மெய்ப்பொருளவாகாது பொய்ப்பொருளவாய் முடியும் ஆகலான். இருந்தவாற்றான் மலைபோலும் பெருந்துன்பு பரவுதற்கு ஏதுவாய்ப் பந்தமுறுக்கும் இம்மணம் எனக்கு வேண்டாம் வேண்டப்படுவது அவ்வூர்ப்பெருமணமே ஆகலான் அதனையே ஈந்தருளும். எ - று.

கல் என்பது = எடுத்துக்காட்டுவமை.. ஊர் = முதனிலைத் தொழிற் பெயர். ஊர்தல் = பரத்தல். மிகுதி எனினுமையும். இனி கல்லூர் என்பதற்கு கல்லின் கண்ணே வரன் வரிதால் தொட்டுக்காட்டும் மணக்கிரியையுள் ஒன்றென்பாருமுளர், அஃது அப்பொருள் படாமையானும் அல்ல தூஉம், உபலக்கணமாதற் கேலாமையானும் பொருட்சிறப்பின்மையானும் இதனுள் அடங்குதலின் வேறுகூற வேண்டாமையானும், அவ்வுரை ஈன் பனடாமையடைக்குயாதும் இயைபின்மையறிக. பெருமை = அகந்தை. எல்லாப் பந்தங்கட்கும் மூலகாரணமாய அவிச்சை எல்லார்க்கும் புலனாகாமையின் எல்லார்க்கும் எளிதிற் புலனாதற்குரிய அதன் காரியமாய் அகந்தையே கூறினார். தூலமுணர்த்தியே சூக்குமமுணர்த்தல் முறையாகலான். அகந்தை என முன் வருதலின் மேல் ஊர்தல் என்றது அதனது ஊர்தல் என்பது தானே போதரும் என்னுங் கருத்தால் விதவாதோதினார். சொல்லூர்ப் பெருமணம் என்புழி, பெருமை = ஆரவாரம். வேண்டப்படுவதென்பது முதலியன குறிப்பெச்சம். பல் ஊர் = பலவூர். மேற்கழுமலமென நிற். றலின், பல்லூர் = அக்கழுமல முடையார்க்குரிய பல்லூர் என்பது உணரப் படும் என் லுங் கருத்தான் சொற்பல்காமைப் பொருட்டு அதனை யொழித் துக் கொள்ளப்பட்டது. பெருமணப் பாட்டு என்பது மெலிந்து நின்றது. கழுமலம், பல்லூர், கழுமலமும், பல்லூரும், பெருமணக்கழுமலப் பல்லூர்ப்பாட்டு என இயையும். பெருமணமாய பெருமயன் - உரிமை யுடைத்தாக வைத்துப் பல்லூர் மேற்பாடும் பாட்டு எனவும், 'நிருமலமுடை யார் பெருமணங் கண்டோரும் நிருமலரே” என அவ்வவ்வூர்வாய் நிகழும் மணநூல் எனவும், இரட்டுறமொழிந்து கொண்டுரைக்கப்பட்டது. பால் விளங்காத அஃறிணையியற் பெயராகிய பாட்டு ஆகுபெயர். மெய் = மெய்ப் பொருள். சூடல் = மேற்கோடல். ஆய்த்தில என்பது ஒருமைப்பன்மை மயக்கம். சூடார் என மேற்கோளெடுத்தோதி, மெய்யாய்த்தில என்னும் எடுத்துக்காட்டான் வலியுறுத்தருளினார். தொண்டர் சூடலர் என இயையும் சொல்லாவூர்ப் பெருமணத்தைப் பிரித்தமையின் ஏகாரம் பிரி நிலை. தேற்றமெனினுமமையும். சொல்லூர் வினைத்தொகை. நல்லூர்ப் பெருமை = நல்லூருடைத்தாய பெருமணம். மேய - விரும்பிய. மேவிய என்பதனின் திரிபு எனினும் இடைக்குறை யெனினுமமையும். நம்பனே என்பது நீட்டும்வழி நீட்டல். ஏகாரம்விளி

நம்மை எவற்றினும் சிறந்த நன்மை எனப்படும் வீடுபேற்றைத்தப் பாது பயத்தலின் காரணக்குறியாயிற்று என்பது தேற்ற எல்லூர்” எனவும், பெறும்பயன் பெறுதற்கு ஏதுவாய் நிகழும் இப்பெருமணமாய இதுவே அதற்கு அமையுஞ்சான்று என்பது தேற்ற “பெருமணம் எனவும், பிறவற்றான் விசேடிக்கப்படும் பிறவூரும் இதனால் விசேடிக்கப்படினும் முன்வாக்கியம் பெய்துரைக்கப்படாத புறவூரும் இதனை யொப்பன அல்லவென்பது தேற்ற இரிண்டினுள் ஒன்றைத் தனிநிலையாக்காது  'நல்லூர்ப் பெருமணம்” எனவும், - இப்பெற்றித்தாய விதனை நீகைவிட விருப்பின்மை பற்றியாதல், அன்றி நின்னன்பர் விடாது விரும்புதல் பற்றியாதல், நினக்கு இத்திருப்பெயர் எய்திற்றுப்போலும் என்பது தேற்ற மேய் நம்பனே" யெனவும், சதசத்தாய வுயிர் தம்மிற் கீழுள்ளவற்றைக் கழியு முறையாற் கழித்துப் போங்கால் தம்மின் மேலுள்ள தனை யுணர்ந்து கோடற்கிடையே நிகழும் நான் பிரமம் என்றன் மாத்திரையினமைந்து மேலறிய வேண்டுவன அறியாத ஏகான்மவாதிகள் போலாது “தைவ மென்றுந் தைவமே" என்னுமுயிரியல்பை உள்ளவாறுணர்ந்துடையர் என்பது தேற்ற “தொண்டர்'' எனவும், ஒன்றனையுள்ளவாறுணர்ந்து இதுவே எமக்குத் தகுமெனக்கொண்டார் பின் தகாதவற்றைக் கைக்கொள்ளாதவாறு போல வாக்குமனாதீதமாய் நும்மியல்பை உள்ளவாறுணர்ந்து அதனையே மேற்கொண்டு பிறவற்றைக்கீழாகவைத்துக் கண்டுடையார் பிறவிக்கேது வாய அவ்விழி பொருளைப்பின்னும் வேண்டுமெனக் கொள்வாரென்கை, ஒருவன்கான்ற சோற்றை விரும்பும் என்பதனோடொக்கும் என்பது தேற்ற சூட்ரென்றொழியாது ஏகாரமுகத்தானினிது விளக்கி ''சூடலரே" எனவும், பதிபாசங்கள் சத்தென்னும் சொல்லொப்புமை, யுடையனவாயினும் தம்முள் பெரிதும் வேற்றுமையுடைமைபோல பேரின்ப சிற்றின்பங்கள் பெருமணமென்னும் வாக்கியத்தான் ஒப்பனவாயினும் அஞ்ஞானத்தானாவது, மெய்ஞ்ஞானத்தானாவது என்னும் பொருளான் வேற்றுமைப் படுவன வென்பது தேற்ற பல்லூர்ப்பெருமண மென்றாற் போலாது வேறு விசேடனங்காட்டி “சொல்லூர்ப் பெருமணம்' எனவும், உடன் வைத் தெண்ணப்பட்டோர் நால்வரின் முதல் நின்றாரும் அவரன்ன பிறரும், முதனூலும், உலகியல்பு நில்லாத இயல்புடைத்து, ஸ்ரீ தலங்களை வழிபடு மாற்றான் வழிபட்டுடையர் அவ்வுலகியல்பாய சிறுமணம் கைவிட்டு வீடு பேறாய பெருமணப் பேறுடையர் என'நியாயமுகத்தான் வலியுறுத்து வைத்தோதும் பாட்டுக்களின் மெய்ப்பொருள் அவர் அதனைச் சூடுவா ராயின் பொய்யாய் முடியுமென்பது தேற்றவும், சிற்றறிவுடையர் சிற்றின் பத்திற் கேதுவாய்ச் செய்யும் சிறுமணம் போலாது பிறர்பெரும் பயன் பெறுதற்தேதுவாய்ச் செய்யும் நும்மணம் நும்சிறுவர் மணம் ஆயபெரு மணங்கன் டோர் பேரின் பெய்துவர் என்றோதும் மண நூல்கள் அம்மணம் போலும் இம்மணங்கண்டோர் பேரின் பெய்தாராயின் பொய்ப்பொருளாய் முடியுமாகலான், இதுகண்டோர்க்கு அதனை ஈந்தருளும் என்பது தேற்றவும், இருபொருள் தோன்ற “கழுமலம் பல்லூர்ப் பெருமணப்பாட்டு மெய்யாய்த்தில'' எனவும், ஆகலின் அளவைகளானும் பொருந்துமாற்றானும் அநுபவமுடைய ஆசிரியர் ஆசாரத்தானும் வீட்டின்பம் எவ்வாறு 'அளக்க லாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையுந் தோற்றமுடைத்து, கட் டானாந்துன்பம் அவ்வாறேயாம் என்பது தேற்ற, "கல்" எனவும் இங்ஙன மாகலின், அது இதுவென நினைப்பினும் நினைந்த மாத்திரையே நெஞ்சு 'துண்ணென்னும், ஆகலானும் அஃது அகந்தைக் கேதுவாமெனவே அதற் கேதுவாய ஆணவமல மறாமையானும், அம்மணத்தாற் றப்பாது காம வெகுளிமயக்கங்கள் நிகழ்ந்து அவற்றான் அழுந்தப்படுமென்பது தேற்ற, 'ஊர்ப்பெருமணம்'' எனவும், "வேண்டாமை" வேண்டப் பிறவாமையாம் ஆகலானும் "தூய்மை யென்பது அவாவின்மை மற்றது வாய்மைவேண்ட வரும்” ஆகலானும், நும்மை இடைவிடாது பாவித்து அவாவின்மை எய்தப் பெற்றேன் அதுவேவீடாம் என்பது கூறவேண்டாம், ஆகலின், அதுவேண்டாமைமேல் வேண்டுவது தானே பெறப்படும் என்பதுதேற்ற வேண்டா' எனவும் வைத்து உபதேசித்தருளினர்.

நல்லூர்ப் பெருமணம் மேவியருளிய நம்பிரானே சிவானுபூதி உணர்வு தூர்ந்து மேற்பயின்று போந்த உலகியல் உணர்வு மேம்படுதற்கு ஏதுவாய இம்மணம் எனக்கு வேண்டாவாம், அற்றேல் அது வேண்டா வென்றது என்னையோவெனின் முறையே அநித்தம் நித்தா நித்தம் நித்த மாயபாசம் பசு பதி என்னும் மூன்றனுள் பதி நித்தப்பொருளென யாமுண ரும் மெய்யுணர்ச்சி மெய்யாகாது பொய்யாய் ஒழியுமாகலான், அற்றேல் இனி நினக்கு வேண்டுவ தென்னையோ வெனின் நம்மனோராய நுமது தொண்டர்கள் எல்லாவுலகத்தினும் புகழ்மிக்க வீட்டுலகப் பெருமணமே ஒருவன் சூடும் அலர்போற் சிறந்ததெனப் போற்றிக்கொள்வார், ஆகலின், யாம் கோடற்குரியதும் அதுவேயாம். (எ - று)

கற்றல் = பயிறல். ஊர் இருமடி ஆகுபெயர். பெருகும் என்பது திரிந்துநின்றது. கழுமலம் = கோடற்குரிய தாகாது கழுவதற்குரிய மூல மலம். பல்லூர் = பலவேறுபுவனம். எனவே மாயையின் காரியமாதல் பெறப்படும். பேர்தல் = புடைபெயர்ச்சி. இதனான் ஒழிந்த வனையியல்பு'கூறியவாறாயிற்று. ஆகவே முப்பாசங்களும் கண்டுகொள்ளப்படும். சத சத்தாய உயிர் ஏனைச் சதசத்துக்கள் போல் தோன்றல் தோன்றாமை இர ண்டுமின்றி இவ்வீரியல்பு முடைமையின் மலரின் கண் விளங்கல் விளங்காமை இரண்டுமின்றி அதனுள் அடங்கித்தோன்றும் மணம்போறலின், அது பற்றி மணம் ஆகுபெயரான் உயிரை உணர்த்தி நின்றது. பாடு = இடம். மூன்றனுட்பதி, ஏனை இரண்டற்கும் ஆதாரமாய் நிற்றலின் அதுபற்றி அதனைப் பாடு என்றார்.

மெய்யாவது = முப்பொருள்கள் சதசத்தாய உயிர், பாசம், அசத்தா கலின் பதியே சத்தென உண்மையியல்பு உணரும் நித்தா நித்தங்களது வேறுபாட்டுணர்வு. சொல் = புகழ், மணமே தொண்டர் சூடு அலர் என இயையும். சூடு அலர் = வினைத்தொகை, ஒற்று இரட்டியாமை இலேசாற் கொள்க. அவராம் என்னும் ஆக்கந்தொக்குகின்றது. அவர்போல் அதனை மேந்கோடலின் அலர் என்று உபசரித்தார், மெய் = இலது. ஆய்த்து என இயைத்துரைத்துக் கொள்க.

(வேறு உரை) நல்லூர்ப்பெரும் மேயநம்பானே, கல்லூர்ப் பெரு மணம் வேண்டா = அம்மிமிதித்தலாய இந்த மணம் எனக்கு வேண்டா. (வேண்டில்) கழுமல முதலாகிய பல ஸ்தலங்களுக்கு அருளிய திருப்பதிகங் கள் மெய்யாகியது இல்லை (மெய்யாகமாட்டா) பெருமணம் ஊர் சொல் தொண்டர் சூடலர் = பெருமண மூர்ந்த திருப்பதிகங்களைத் தொண்டர்கள் மேற்கொள்ளார்கள், (ஆகலின் வேண்டா)..

(வேறு உரை) நல்லூர்... நம்பானே - கழுமலம் பல்லூர் பெருமணம் பாட்டு மெய்யாய்த்து = திருப்பதிகங்கள் மெய்யாயினவைகள் (இல = சொல்லூர் பெருமணம் சூடலரே தொண்டர் = அப்பதிகங்களில் தீமை யென்று விலக்கப்பட்டன) புதழ்பரந்த பெரியமங்களகரமாகக் கொள்ளாத வர்களே தொண்டராவார். (சூடலரே = அங்கீகரியாதவர்களே) மெய் யாய்த்து + இல என் றுபிரித்துக் கூறப்பட்டன. ஆய்த்து என்பது “ பாதகம் நன்மையாய்த்தே என்பதுபோல " திரிந்து நின்றது.

புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்
பூதங்களவையெட்டும் பொழில்களெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சியெட்டுங்
கழற்சேவடியடைந்தார் களை கனெட்டு
நகையெட்டு நாளெட்டு நன்மையெட்டு
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டுந்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோபின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே.   *

* திருவாரூர் - 10 - வது திருத்தாண்டகம் க - வது திருச்செய்யுள்.

இதன் பொருள் = அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்தப் பிழம் பாய முதல்வரே ! சதாசிவ தத்துவத்தின் வைகும் நீயிர் யாமிவ்வாறீண்டு, வைகுது மெனின் எம்மை ஆண்டையுயிர்கள் வழிபடுமாறெவ்வாறென் றெண்ணி அவைதாந்தந் நிலையினின்றவாறே எளிதின் வழிபட்டுய்தற் பொருட்டுப் புறத்தே திருமேனி கொண்டருளி பலவேறாகப்பரந்த இந்நில வுலகின்கண் பலவேறு திருக்கோயில் கொண்டருளுங்கால் அவை தம்முள்,. இத்திருவாரூர் திருக்கோயிலாக் கைக்கொண்டருளிய திருநாளாவது.
ஒரோ வொன்றுர் தனித்தனி எண் வேறு திறப்பட்ட பதினாற் பகுதியவாய் வகுத்துச் சுட்டிக்காட்டிய வினையீட்டல், துய்த்தல், காரகம், புற மலர், பொழில், மலை, பாலிப்போர், மூர்த்தி, குணம், கரம், மனம், ஆனந் தம், அகமலர், திசையென்னு மிவை தம்மை பொதுவகையான் வைத்து விளக்குதற்கு முன்னை நாளா? பின்னை நாளா? பல தலைப் பட்டனவாய இவை தம்முள் இவையல்ல மற்றிதுவே யென ஒருதலை துணியுமர்றின்றி ஐயப்பாடுடைமையின் அதனை யொழித்துத் துணியுமாறு “எந்தை தாட் பால் வணங்கித் தலைநின்று கேட்குமாறென்பது''  குறிப்பெச்சம்.

திருவாரூர் கோயிலாக் கொண்டநாளென்பதூஉம் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ என்பதூஉம் முறையே தனித்தனி புகை முதலிய அனைத்தின் முன்னும் சென்றியைந்து சுட்டுப்பெயர் மாத்திரையாய் நிற்கும், நாளென முன்வருதலின் இதுவும் அதுவென்பது தானே போதருமென்னுங் கருத்தால் “முன்னோ பின்னோ வென'' வாளாவோதி யொழிந்தார். தெரித்தல் என்பதும் அது.

கலையென்பது புகை முதலிய மூன்றனோடும் முரணாமை இலேசாற் கொள்க. புகை, போக்கு, புலம், பூ, பொழில், மலை, காப்பு, நாள், நன் மை, திகை, காட்சி, நகை, மலர், களை கண் என்னு முறை வைப்புடைமை யுடையவாதற்கு உரியவாயினும் செய்யுளாகலின் இவ்வாறு பிறழ வைத்தார்.

காரக மெட்டாகலின் வினை யீட்டல் துய்த்தல்களு மெட்டாயின. நகுதல் நகையென்பன போல புகுதல் = புகையென்பன ஒரு பொருட் கிளவி, அது தோன்றலென்னும் பொருட்டாகலானும், காரகமுன் வருத லானும், வினை நிகழ்ச்சியின் மேற்றாய் நின்றது. துய்க்கப்படுவன தோன்றாது போதலின் அப்பெயர்த்தாயிற்று. வினையீட்டல், துய்த்தல் கட்கிடமாய் நிற்பனவாய காரகங்கள் அவ்வாற்றான் புலமெனப்பட்டன. இடமென்றது ஈண்டு துணைக்காரணமாதலை. தளம் தலமெனப் போலியாயிற்று. தளப்பூவென வியையும் ஸ்ரீ மேருவின்'திசை நான்கினும் படும் பொழில் மூல நான்கும், உபபொழில் நான் குமாக பொழில் எண் வேறு திறப்படும் ஆகலின், பொழிலெட்டெனப் பட்டதென்பது,

கலையென்புழி. ஐ பகுதிப்பொருள் விகுதி. கல்லென்பது மலை. யென்றவாறு. காப்பு ஆகுபெயர். காட்சிப்படும் வடிவை காட்சியென வுபசரித்தார். வடிவு, மூர்த்த மென்பன வொரு பொருட் கிளவி. எஞ்ஞான்றுங் களைகணின்றி யமையாதாயவுயிர் சேவடியைத் தலைக்கூடுழி, எண் குணங்கள் களைகணா நிற்பன வாகலின் அது பற்றியவை யவ்வா றோதப் பட்டன.

நகை யென்பதனுள் நகரம் + கீரன் = நக்கீரன் என்றாற் போல சிறப்புப் பொருள் தந்து நின்றது. நாள் பற்றிச் செய்யப்படு மணத்தை நாளென்றோதினார். அவை அறிவு குணமென்பன போல ஏற்புழிக்கோட லான் ஈண்டு நன்னாளை புணர்த்தி நின்றது. நன்மை = ஆனந்தம். அது மனுடானந்த முதல் எண்வகைப்படு மென்பது சிவதருமோத்தர முதலிய வற்றுட் காண்க. இனி நன்மை = சித்தி யெனினு மமையும். சிறந்த நலத்தாரென விகுதி பிரித்துக் கூறப்பட்டது. நலமெனப்படு மெவற்றி னுஞ் சிறந்த நலமாவது வீடு பேறென்ப. ஈண்டு அதனையுடையாரென்றது சீவன் முத்தரை. ஏனைய வெளிப்படை.,

உயிர் காரகத்துள் ஒன்றாக வைத்தெண்ணப்படுதல் பற்றி ஆண்டோதினார். அதுவே எண் வகை வடிவுள்ளும் ஒன்றாகவைத் தெண்ணப் படுதலின் ஈண்டுங் கூறினார். காரகமும் வடிவும் தம்முள் வேறாகலின்.

மலர் மரத்தோடு உடன் றோன்றாமையானுந் தெரித்தற்கு முன்னோ பின்னோ வென்ற தனான் ஈன்டெடுத்துக் கொண்டது அவை தூலமாய்த் தோன் றற்கேதுவாய காலவிசேடமே பிறிதன்று ஆகலானும் முற்பிற்பாடுடையவாய வவையிரண்டுந் தோன்றுங் காலம் இடையிட்டுத் தம்முள் வேறாகலானும், மரமும் மலரும் வேறாக வைத் தெண்ணப்பட்டன. ஈண்டோதிய வற்றை உபலக்கணமாக வைத்து ஓதாதொழிந்த வேனையவுந் தெரித்தற்கு முன்னோ பின்னோ வென வைத்துரைத்துக் கொள்க.

இஃதென் சொல்லியவாறோ வெனின். இம்மை மறுமை வீடுகட்கு ஏதுவாகிய விவை தோன்றற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளெனக் கடாயினார்க்கு அங்ஙன மையப்படக் கூறுமுகத்தான் அவ்வாறாயினும் “ ஆட்பாலவர்க்கருளும்... தலைநின்றிவை கேட்க தக்கார்'' என விடுத்தவா றாயிற்று.

இனி யிவ்வாறன்றி புகைபோக் கென்பதற்குப் பொருள் பிறப் பிறப் பெனக்கொண்டு தத்துவம் முப்பத்தொன்றும் இனம்பற்றி யெண் வகைப் படுதலின் அவற்றினின்றுந் தோன்றுந் தூலதேகம் பற்றி நிகழுமவையும் அவ்வாறு எண்வகைப்படுத் தோதப்பட்டன வெனவும், புலமென்பது புரியட்டகமெனக் கொண்டு விட்டும் பற்றியும் வருமேனைத்தூலவுடல் போலாது வீடுபேறாந்துணையு மிடையறவு படாது உயிர் நிற்றற் கிடமாகலின் அதுபற்றியது புலமெனப் பட்டதெனவும், பூதல மென்பது உலக மெனக் கொண்டு காக்ஷிப்படுந் தீ வேழனோடு காக்ஷிப்படாத கீழ் மேலுலகங்களை யொன்றாகவைத் தெண்ணப்பட்டதெனவும், பொழிலென்பது பூஞ் சோலை யெனக் கொண்டு மேருவைச் சூழ்ந்த பொழி லெட்டாம் அவை மேருவின் றிசை நான்கினுமுள்ள உய்யானம் நான்கனோடு மேருவின்மே லுள்ள மரம் நான்கும் ஏனை மரங்கள் நோக்க உயர்மையும் பெருமையு முடைமையின் அவையுமுளப்பட ஈண்டு பொழிலெனப்பட்டன வென வும், கலையென்பது தலைமைபற்றி வேதமெனக்கொண்டு மூலவேதம் நான் கும் உபவேதம் நான்கும் எனவும், காப்பு, காட்சி யென்பன வற்றைமுறையே கா + பூ, காண் - + சி, எனக் கண்ணழித்துப் புறமல ரெட்டென வும், இலக்குமிகள் எண்மரெனவும், களைகணென்பது = எண் வகைப் பத்தி யெனவும், நகையென்பது ஒளியாகலானும் அது சாத்திக்குப் பரியாயப் பெயராகலானும் அதுபற்றி யீண்டு எண்வகைச் சத்திகளை யுணர்த்திற் றெனவும், நாளமென்பது அம்முக்கெட்டு நின்ற தெனக் கொண்டு " மண் முதல் நாள'' மென்பது பற்றி இதய கமல தளமெட்டெனவும், நன்மை யென்பதனுள் மை = மலமெனக்கொண்டு மலகுண மெட்டெனவும், அக மலர் என்றது முதனிலைத் தொழிற்பெய ரெனக் கொண்டு, இயமம் முத லிய அட்டாங்க யோகங்களை யுணர்த்திற் றெனவும், திகையென்பதை தீ + கை எனக் கண்ணழித்து உயிருணர்ச்சிக் கேதுவாய இறைவன் கைகள் எட்டெனவும், பொருள்கோடலு மொன்று. இவற்றை யின்னு மீண்டுரை த்தவாறு பற்றி விரித்துரைத்துக் கொள்க. தீ = அறிவு.

உரைக்குமாறுரைக்கும் பொருள் பொருந்துவவாய்ச் சிறந்தன பிறவு முளவேல் கோடற்பால அறச்சிறிதாய பர உடலை ஆனந்தமெனத் திரியக் கொண்டு தருக்குப் பெருக்கு முயிர்போலவும் ஓராறும் உணர்விலியாய ஒருவற்கு ஒருவன் ஓர் ஆறுகாட்டுமாயின் பின் அக்காட்டியா னுபகாரத்தை மறந்து தான் கண்டதாய்க் காண்பா னொப்பவும் இயைபற உரைத்தற் கெழுவாரும் இழுக்குரைத்தற் கெழுவாரும் இனி உளராவர் போலும்.

எண்வகைப்பத்தி திருத்தொண்டர் புராணசாரம்.

“தொண்டரடித் தொழல் பூசைத் தொழின் மகிழ்த லழகார் துளங் கிய வர்ச்சனை புரித றொகுதி நியமங்கள், கொண்டபணி திருவடிக்கே கொடுத்த வீசன் குணமருவு மருங்கதைக் குலவிக் கேட்டு, மண்டிவிழி துளம்பன் மயிர்ச்சிலும்ப லுன்னன் மருவு திருப்பணிக்காட்டி வருவவாங்கி யுண்டிகொளா தொழிதலென விவையே ஈரெட்டு முடையரவர் பத்த ரென உரைத்துளாரே.

"காரகம் எட்டாவன. சிவஞானசித்தி. 2 - ம், சூ - ம். 22.

உலகுடல் கரணங்கா லமுறுபல நியதி செய்தி
பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்பதனா
னிலவிடாதி வைதாஞ்சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா
தலகிலா வறிவனாணை யனைத்திடு மருளினாலே."

உலகு, உடல் கரணம், காலம், நியதி, செய்தி, இன்ன தற்காக இது பயனாக வென்னும் இரண்டு பதங்களையும் நியதி யென்பதனாற் றழீ இனார்.

மைப்படிந்த கண்ணாளுந்தானுங் கச்சிமயானத்தான் வார் சடையான் மாசொன் றில்லான், ஒப்புடையனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, அப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படிய னிந்நிறத் தனிவ் வண்ணத்தனிவ னிறைவனென் றெழுதிக் காட்டொணாதே.

மயானத்தான் வார்சடையா னென வாக்கு மனம் பற்றி யுரைத் துணர்த்துமாயின், அவன் அவ்வாக்கு மனாதீதனாய் நிற்றல் செய்கின்றா னென்னை? யவற்றானோதி யுணர்தற்குரிய வொப்புடையனாகலும், அதுபற் றிவைகுமோரூ ருடையனாகலும் அல்லனாகலான். ஆகலி னவ்வாற்றா னோதியோதியுளர்தற்குரிய அவ்வொப்பு முதலிய மூன்று மிலனாய அவனது அவ்வாக்கு மனாதீதத்தில் கோசரிக்கு மியல்பாய அப்படி முதலிய மூன்றனையும் அறியு மறிவு அவனருளேயாகக் கொண்டு அறியலுறினாண் டேயறியப்படும். அவ்வாறன்றி யம்மூவே றியல்பிவை, அவற்றையுடைத்தாய அவ்விலக்கியப் பொருளிஃதென வுலகப் பொருள் போல் இவ்வுலகப் பொருளளக்கு மளவை பற்றி யறிவுறுத்த லாகாதென்றவாறு.

ஏனைப்பொருளின் வேறுபடுத்துமோ ரியல்பாய முடிதலின் அல்லா னெனப்பட்டது. ஒன்றலாவொன்று என்றதுமது. முன் வரும் அல்லன் இறுவாய் மூன்றும் மேல் நிற்கும் அல்லானென என்னு மேற்கோளைத்தாதிக்குங் குறிப்பேதுவாய் நின்றன. உவமனில்லை யென்பது மேல் நிற்கும் மூன்றனையு முளப்படுத்துஞ் சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. ஆண்டாறாவது விகாரத்தாற் றொக்கது. இல்லியென்பது வில்லியென்றாற்போல நின்ற குறிப்பு வினைப்பெயர். ஏனையபோல் அன் ஈறுபடுத் தோதாமை உனரயளவை பற்றியு மஃதங்கனமாத லறிந்து கொள்க. கண்ணவனருளே யாகவென மாறுக. அறியுமென்பது சொல்லெச்சம். கண் அறிவு ஆவது காணி னெனவே காண்டற்கருவி அதுவே யாகலும் அனுவாகமுகத்தா னீண்டே பெற்றாம். எழுதிக்காட்டல் = ஆகம வளவை பற்றி யறிவுறுத்தல். அது கூறவே அதனை வலியுறுக்கும்'அனுமான வளவையும் ஆண்டே யடங்கு மென்ப துணர்த்தற் பொருட்டு எனின் என்றார். உரையளவை யென்பதுணர்ந்து கோடற்கு அளவை யறிவைப் பிரித்தமையின், ஏகாரம் முன்னையது பிரிநிலை. பின்னையது ஈற்றசை. 'அல்லை யீதல்லை யீதென மறை களுமன்மைச் சொல்லினால் துதித்திளைக்குஞ் சுந்தரன்' எனவும், “பூதங்களல்ல பொறியல்ல வேறு புனலல்லவுள்ள மதியின், பேதங்களல்ல விவை யன்றி நின்ற பிறி தல்லவென்று பெருநூல், வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளி யென்பர் கூடன் மறுகிற், பாதங்க ணேவ வளையிந்தனாதி பகர் வாரையாயு மவரே” எனவும், 'முன்னதின் முன்னென மொழிதுமே யெனின், பின்ன திற் பின்னுமாய்ப் பேச நிற்றியால், அன்னவையே யெனினொழிந்த தல்லையோ, வென்னென நின்னையா மேத்துகின்றதே" என்றற்றொடக்கத்த பற்றி யுருவும் அருவு மென்னு மிருகூற்றுப் பிரபஞ்சத்துள் ஒரு பொருளாய் வைத்தெண்ணப்படான் என்பார் “அல்லான்'' எனவும், ஊர் பேர் உருவுடைய ரொருவர்க்கே யொப்பு முதலியவுளவாம் அவர்க்கவையின்மையின் அளவை பற்றி யறிவுறுத்தற் கெடுத்துக்காட்டு மவ்வெடுத்துக் காட்டு முதலிய மூன்று முளனாகா னென்பார் “அலலனல்ல னல்லன்" எனவும், இருவினையொப்பு நிகழ்ந்து அருள்வழி வழுவரது நிற்பார்க்கு அவ்வியல்பு தெளிய படுமன்றியது வழீ இனார் தாம் தெளியப் படாததூஉ மன்றி தெளிந்தார் தெளிப்பினும் அது தெனியாதென்பார் “ஒணாது'' எனவும், வைத் துபதேசித்தருளினார்.

இனி “என்னி னல்லான்” என்பது பாடமாயினென வெடுத்தோதிலது பேதைப்பருவத்துப் பெண் காமநூற் பொருளுணர்ந் துரைக்குமாறு, வாசகஞான மாய் முடியுமன்றிப் பிறி தன்றென் றுரைத்துக்கொள்க. இப் பொருட்கு அன்றி யென்பது அல்லாலெனத் திரிந்து நின்றதென்பது. எனின் ஒப்புடையனல்ல னல்லாலெனக் கூட்டுக. என்னினல்லா லென் பதனை என்னின் + னல்லால் எனக் கண்ணழித்து நல்லாள்போல வென வைத்துரைத்தலு மொன்று இதற்கொற்றுமைபற்றி லகரம் ளகரமாயிற்று. நல்லாளென்பதீண்டுப் பேதைப்பருவத்துப் பெண்மேல் நின்றல்.

வேறு பொருள்.

உலகப் பொருளெல்லாம் வாக்கு மனங்களானோதி யுணரப்படும். ஆகலினவற்றுட் படாமைபற்றியப் பொருளல்லனாய அவன் என்னைப்போ லுருவுடையனா யோரிடைப்பட்டு ஒரு துணைவியோடு கூடிவாழுமாற்றான் அவ்வுலகரெடுத் தோதப்படும் உவமையை யுடைத் தொழிப்பானன்றி யொருபுடைத் தன்மை யுண்மையின் அஃதுடைமைபற்றி யொருவனாமாயி னும் அநேகமாய வுயிர்களின் வேற்றுமையற்றுக் கலந்து நிற்கும் இயல்பு பற்றி அநேகனுமாமாகலின் ஏகனாதலும் அதுபற்றியவன் வைகுதற் குரித் தாயவூர் ஒன்றென வரை யறுக்கப்படாமையி னுரியதோரூரும் இலனா மன்றி யுளனாகான் இனி யவ்விரண்டு முடையர் தாமே ஒன் றனோ வெக்கப் படுதல் உலகின்கட் கண்டாமன் றேயவற்கு அவையின்மையின் அதுவுமில் னாதல் தானே போதரும். அற்றேல் இவ்வாற்றான் அறியப்படாமை பற்றி அவனியல்பு எவ்வாற்றானும் அறியப்படாதுபோலு மென மலையற்க. ஏனைப்பசுபாச அறிவின் மேம்பட்டு நின்று தாமறியும் அறிவு அவனருளே யாக வைததறிக. என்றவாறு.

“சீலமோவுலகம் போலத் தெரிப்பரி தவன் றானின் றகோலமு மறிவா ரில்லை." என்றதுமது.

அன்மைக்கு மறு தலைப்பொருள் வருவித் துரைக்கப்பட்டது அல்லா னெனின் மயானத்தான் வார்சடையான் ஒப்புடையனல்லன் எனவியையும் உடையன் - இறந்தகால வினைப் பெயர். உடையன் - உடைத்தல் செய்தவன். உடைத்தல் - ஒழியச் செய்தல். ஆகலான், ஆயினும், என்பன சொல்லெச்சம். ஏனைய வற்றிற்கு மேலுரைத்தாங்கு உரைக்க. என்னின் என் புழி இன் - உவம உருபு ஆண்டு இரண்டாவது தொக்கு நின்றது.

இது வார்சடையான் என்னின் அல்லான் ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஒரூரனல்லன், ஒருவமனில்லி என்னும் பாடத்திற்கு எனக் கொள்க.

3 - வது. வேறுபொருள்.

நுமக்கு இறைவனாவா னொருவனுளனேல் ஆகுக. ஒருவன் ஒருவற்கு அறியாப்பொருளை அறிவுறுக்கு முபாயமாவது அறிந்தபொரு ளொன் றின் வைத்துக்காட்டி அஃது இஃதன்னது என அவ்வொப்புமையானே முதற்கண் நிருவிகற்பத்தின் வைத்துத் தெரிப்பப்பின்பு அவன் அது வைகுழிப்போந்துநேரே சவிகற்பத்தின் வைத்து அறிந்துகோடல் உலகின்கட் கண்டாமன்றே? அதுபோல நுமதிறைவர்க்கு ஒப்புறுத்தும் அவ்வொப்பும், அதுபற்றி அறியும் பொதுவியல்பும், அதற்குரிய நிலைக்களமும், அவ் விறைமையீந்தாரும் ஆய இன்னவை உளவோ இலவோ எனின்! அற்றன்று அனாதிபெத்த சித்துருவாய உயிர்கள் வாக்கு மன கோசரமாமாறு தெளியக் கண்டு வழிப்பட லாகாமையின் அவை தாம் தம்மைச் சோபான முறை யான் வைத்து, எளிதின் வழிபட்டுய்தற் பொருட்டு மூவேறு வடிவுடையன் ஆகலின் அவற்றுள் அவன் தாதான் மிய சத்தியும், கச்சிமயானமே தனக்குரிய நிலைக்களமும், ஆண்டே நிலைபேறுடைய அவ்வடிவுமுடையன் என அவனுடைய பொதுவியல்பை முன்னர் சிந்தித்தறிந்துகொண்டு அவ்வாற்றானே பின்னர்ச் சிறப்பியல்பும் அறியப்படும். மற்றிம் முறையானன்றி அனீசராயநம்மனோர் போல் அவன் தன்னோ டொப்புறுத்தும் ஒப்புப்பொருள் யாதும் இலனாமன்றி உளனாகான். அவ்விறைமையுடையர் பலருளராகலின். அங்ஙன மாகவே அவர்க்குரியதொரு திருவுரு அதற் குரிய நிலைக்களமாய ஊர் எனவும், அவ்வாறே இலனாமன்றி யுளனாகான். இவை இலனாகவே தன்னின் மிக்கார் இலனாமென்பது தாமே போதரும்.

அற்றேல் முற்றொப்போது மாறின்றேனும் ஒருபுடை யொப்புப் பற்றி உத்தேசம் பொதுவியல்பு சிறப்பியல்பு என்பன நூல்களுட்கேட்கப் பட்டன வன்றே யெனின், பேதைப் பருவத்துப் பெண் காமநூற் பொருளுணர்ந்து சொல்லுமாறுபோல அவனியல்பும் பொதுவகையான், அங்ஙனமாயினும் அதற்கெடுத்துக் காட்டு மவ்வொப்புபற்றி யறியுமுத்தேசம் அதுபற்றியறியும் பொதுவியல்பு, ஏனைச்சிறப்பியல்பாய விவை தம்மை தன்னறிவென வேறாய் முனையாது அவனறிவினுளடங்கி அவனறிவு தான் அதற்குரிய வறிவாக வைத்து அறிக.

இவ்வாறன்றி யவனிவ் வொப்புடையன் இவ்வுருவுடையன் ஆகலினவற்குப் பொதுவியல்பிது இருந்தவாற்றான் எமதிறைவனே யெனக் கொண்டு குறையறிவாகிய பாசவறிவான் அறிவுறுத்தலாகாது. பசுவறிவும் இவ்வியல்பிற்றாகாலான தனியல்பு மன்னதே யாமென்றொழிக. என்பது குறிப்பெச்சம்.

அல்லுழி யிலனாகலின், கோயிலுள தாய வித்தலத்தி னிறைவனுளன் - என்னுமொருசாரர் வழக்குப்போல பொதுவகையான் ஒருவாறெடுத் தோதவும் அவ்வாறுணரவும் படுமன்றி, யவன துண்மை யியல்புணர்தற் குரிய வுவமை முதலியன இன்றென்பார் "ஒப்புடையனல்லன் ஒருவமனில்லி" எனவும், “வழங்கற்பட்பால தாமாறு ஒப்பு முதலிய வுடையனாக அங்ஙனம் வைத்தோதப்படுமாயினும் அவனியல்புள்ளவா றறிய லுறுவார்க்கு எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்று கேட்டலாய சிவஞானத்தானன்றி யேனைப் பசுபாச வறிவுகளான் அறிய லாகாதென்பார் அப்படியும் எழுதிக் காட் டொனாதே” எனவும், அருளிச் செய்தார்.

போகமோக்ஷ மிரண்டனையு மீயுமுழுமுதற் கடவுளென்பார் “மைப் படிந்த சடையான்" எனவும், அசிந்திதனாய் நிற்கும் தான் உயிர்கள் பொருட்டுச் சிந்திதனாய் நிற்பினும், அசிந்திதனாதற் கிழுக்கின் றாகலின் “திறம்பிய பிறவிச் சில தெய்வம் போலாது அவ்லிழுக்குகட்கு நெடுஞ் சேய்த்தாய இறப்பியல்புடைய னென்பார் மாசொன் றில்லா” னெனவுங் கூறினார்.

இதனானே - இறைவனுக்குத் தள்ளப்பட்ட குணங்கள் இவையென் பதூஉம், கொள்ளப்பட்ட குணங்களிவை யென்பதூஉம், அவற்றை யறியு மாறி துவென்பது உம் கூறப்பட்டன.

(இஃதன்னது - அதுபோல்வது.) அனீசர் - சுதந்தர மில்லாதவர். ஈசன் - சுதந்தர முடையவன்.'தலைமையுடையன். (அன்மை இன்மைச் சத்தங்களெல்லாம் தள்ளப்பட்ட குணங்கள்) (அல்லுழி) இன்றாகலின் கோயிலில்லா விடத்துச் சுவாமியில்லை.

வி. குஞ்சிதபாதம் பிள்ளை
வீரசோழகன்
ஸ்ரீசிவஞானத் திருத்தளி
ஸ்ரீ சிதம்பரம்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர், ௴


No comments:

Post a Comment