Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
தைத்திரீயோபநிஷத்து

பூமி, ஆகாயம், நட்சத்ராதிமண்டலம், அஷ்டதிக்குள் (இவ்வைந்தும் உலகபஞ்சகம்) அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் (இவ் வைந்தும் தேவதாபஞ்சகம்) ஜலம், ஒளஷதிகள், விருட்சங்கள், ஆகாயம், ஆத்துமா (இவ்வைந்துந் திரவியபஞ்சகம்) இம்மூன்று வகுப்பும் அதிபூதம் (பூதசம்பந்தம்)

ஆதியாத்மக வகுப்பு.

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் (இவ்வைந்தும் வாயுபஞ்சகம்) க்ஷேத்திரம், மனது, வாக்கு, துவக்கு (இவ்வைந்தும் இந்திரியபஞ்சகம்) தோல், ஊன், ஜலம், எலும்பு, மச்சை (இவ்வைந்தும் தாதுபஞ்சகம்) இம் மூன்று வகுப்பும் ஆத்தியாத்மிகம் (ஆன் மசம்பந்தம்) இத்தகைய பஞ்சகங்களனைத்தினும் பிரமவியாபகத்தையறிகிறவனே உபாசகன்.

பிரணவவுபாசனை.

ஓம் என்பது பிரமம், * சப்தத்தினெந்தரூபமும் ஒங்காரத்தால் வியாபகம், ஓம் அனுக்கிருதி (அங்கீகரித்தற்குவிடை) ஓம் எனச் சாமங்களைகானஞ்  செய்கிறார்கள், ஓம் சோம் என்பதாய்ப் பிரார்த்தனை செய்கிறார்கள், (யஞ் ஞத்தில்) அதர்வர்யு (யஜுர்வேதியான ரித்விக்கு) உச்சரிக்கிறான். பிரம்மா (வாத்தியார்) ஓம் எனக்காரியத்தைச் செய்கிறான், ஓம் என்பதாக அக்னி ஹோத்திரத்திற்கு அனுஞ்ஞை கொடுக்கிறான். ஓம் என அத்தியயனஞ் சொல்ல விச்சிக்கிறான். ஓங்காரத்தால் பிரம்மத்தை யடைவேனென விச் சிக்கப் பிரமத்தையடைகிறான்.

* கேவலம் சப்தசொரூபமான ஒங்காரம் பிரம்மமாதல் எங்ஙன. மெனின்? பிரம்மத்தை யடையவேண்டுமென இச்சிக்கிறவன் பிரணவத்தை யுச்சரித்துக்கொண்டு அதனர்த்தமாகிற பிரமத்தை யுபாசித்தற்கு ஓம் சப்தம் ஏதுவாகவிருத்தலின் அங்ஙனம் கூறுவதாயிற்று. அன்றியும் ஈன்டு பிரமம் என்றது ஈர்வரனை.. எங்ஙனமெனின்? நிவர்த்தியாதி பஞ்சகலை களுக்கும் மேற்பட்டபூர்ண வியாபகத் தன்மையையுடைய பெரியன் ஈஸ்வரனேயாகலின், பெரிய என்னும் பொருளைப் பயப்பிக்கும். பிரம்மசப்தத்தால் கூறினர். மற்றைய தேவர்கள் பஞ்சகலைகளுக்குட்பட்டவராகலின், அவர்கட்குப் பிரம்மசப்தம் பொருந்தாது. எவன் பிரமமோ அப்பகவான் ருத்திரன்' எனும் பொருளைத்தரத்தக்க “ருத்ரஸ்ஸ பகவாந்யச்சம்ரஹ்ம" எனும் அதர்வசிரோபத்தா லுண்மையறிக. ''அகாரம் ப்ரஹ்மாணம்", "உகாரம விஷ்ணும்", "மகாரம் ருத்ரம்'' "ஓங்காரம் ஸர்வேச்வரம்' எனும் நிருஸிஹ்மோத்தாதாபிந் யுபநிஷத்தால், ஈர்வரனின் சமஷ்டி வியாபகத் தையும் மற்றைய தேவரின் வியஷ்டி வியாபகத்தையும் காண்க. இது போன்ற பற்பல சுருதிகள் உபநிடதங்களின் பிரணவ சப்தத்திற்குரியார் ஈர்வரனேயென முழங்குகிறது.

1 - வது அனுவாகம்.
உபாசகனது கருமம்.

தர்மம், வேதாத்தியயனம், பிரயஞ்ஞம், சத்தியம், தபசு, இந்திரிய நிக்கிரகம், மனோநிக்கிரகம், அக்கினிகாரியம், அக்கினிஹோத்திரம், அதிதி பூஜை, வியாகாதிவியவகாரம், புத்திரோர்ப்பத்திவம்ச விருத்தி இவை முத லிய கவனிக்கத்தக்கது.

10 - வது அனுவாகம்.
ஞானோதயம்.

நான் சம்சார விருட்சத்திற்குப் பிரேரனைச் செய்கிறவனாக விருக்கி றேன், (என்னுடைய) கீர்த்தியானது பர்வதத்தின் சிகரம்போலிருக்கிறது, மேலான வனால் சுத்தம் செய்யப்பட்டவனாய், சூரியனிடத்தில் இருக்கிறவன் போல் அமிருதமாகவிருக்கிறேன், பிரகாசமான தன மாகவும், புத்தியுள் ளவனாகவும், மரணமில்லாதவனாகவுமிருக்கிறேன் இது (திரிசங்கு'' ஞான போதம்.

11 - வது அனுவாகம்.,
அனுஸாஸனம்.

ஆசாரியர் வேதத்தை அத்தியயனும் செய்வித்துச் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார். நிஜத்தைச்சொல், தர்மத்தையனுசரி, ஆசாரியருக்கு விருப்பமான, தன த்தைக் கொடுத்து விடைபெற்றபின் கிரகஸ்தாசிரமத்திற் பிரவேசி, சத்தியத்தினின்றும், தர்மத்தினின்றும், க்ஷேமத்தினின்றும், ஐசுவரியத்தி னின்றும், வேதகாரியம், பிதுர்காரியங்களினின்றும் தவறுதல் கூடாது.

தாயாரையும், தந்தையையும், குருவையும், அதிதியையும் பூசிப்பா யாக. நிந்திக்கப்படாத கர்மங்களெவைகளோ அவைகளை அனுசரி, மற்ற வற்றை விலக்கு', எங்கட்கு ஏவை நல்லகர்மங்களோ அவைகளே உன்னால் செய்யத்தக்கவை.

எவர்கள் சிரேஷ்டர்களான பிராமணர்களோ, அவர்களுக்குச் சம்பத் துடனும், லஜ்ஜையுடனும், பயத்துடனும், சினேகத்துடனும் கொடு.

உனக்குக் கர்மத்திலாவது, ஆசாரத்திலாவது சந்தேகம்வரின் அக்காலத்தில் அத்தேசத்தில் சமர்த்தர்களாகவும், அனுஷ்டான பராளாகவும், சாஸ்திரயாராய்ச்சி யுடையர்களாகவும், கடூரமில்லாதவர்களாகவும், தரும விச்சையுள்ளவர் களாகவுமுள்ள பிராமணர்கள் எவ்வாறு நடப்பரோ அப்படி நட.

இது விதி, இது உபதேசம், இது வேதரகசியம், இது ஆஞ்ஞை, இங்ஙனம் உபாசிக்கவேண்டுவது.

12 - வது அனுவாகம்.

உம்மையேபிரத்தியட்சமான பிரம்மமாகச் சொன்னேன், புத்தியைச் சொன்னேன், சத்தியத்தைச் சொன்னேன், அது என்னையிரட்சித்தது. அது வக்தாவையிரட்சித்தது.

ஆனந்தவல்லி*
* இவ்வானந்த வல்லியைப்பிரம்ம வல்லியெனப் பாஷ்யகாரர்கள் தங்கள் வியாக்கியானங்களில் குறித்திருக்கின்றனர்.

முதல நுவாகம்.

சிஷ்யன் குருவாகிய வெங்களிருவரையும் பிரமம் இரட்சிக்கட்டும்.' வித்தையால் ஏற்படக்கூடிய சாமர்த்தியம் எங்களுக்கு இருக்கட்டும். நாங்கள் துவேஷிக்கும்படியான சந்தர்ப்பம் நேரிடவேண்டாம்.

பிரமம் அறியத்தக்கது. இப்பிரமாண வாக்கியத்தால் சத்தியம் ஞானம் அநந்தம் பிரமமெனரிக்கு வேதம் கூறுகின்றது.

எந்தப் புருஷன் குகையென்னும் சிரேஷ்டமான ஆகாயத்தில் மறைக்திருக்கிறதை யறிகிறானோ அவன் சமஸ்தமான இச்சைகளையும் ஒரேகாலத்தில் ஸர்வஞ்ஞமான பிரமமாகவிருந்து அடைகிறான்.

அந்த ஆத்மாவினின்றும் ஆகாயமும், ஆகாயத்தினின்றும் வாயுவும், வாயுவினின்றும் அக்கினியும், அக்கினியினின்றும் ஜலமும், ஜலத்தினின்றும் பூமியும், பூமியினின்றும் ஔஷதிகளும், ஔஷதிகளினின்றும் அன்னமும், அன்னத்தினின்றும் புருஷனும் உண்டாயின.

அந்தப் பிரசித்தமான இப்புருஷன் (தேகம்) அன்ன ரசத்தாலுண் டானவன், இதுவேயவனுடைய சிரசு, இது வலது இரக்கை (வலதுகை) இது இடது இரக்கை (இடதுகை), இது ஆத்துமா (மத்தியபாகம்), இது ஆதாரமானவால் (கால்)



அநுவாகம். 2.

எவை எவை பிருதிவியை ஆசிரமித்திருக்கின்றனவோ அந்தப் பிரஜைகள் அன்னத்தினின்று முண்டாகின்றன, பிறகு அன்னத்தினாலேயே ஜீவிக்கின்றன, பிறகு இதையே முடிவில் அடைகின்றன. அன்ன மானதே பிராணிகளுக்கு முன்னமேயுண்டாயிற்று, ஆகலின் சகலத்திற்கும் ஔஷதமாகச் சொல்லப்படுகிறது, எவர்கள் அன்னத்தைப் பிரமமாக வுபாசிக்கிறார்களோ அவர்கள் சமஸ்தமான அன்னத்தையடைகிறார்கள், அன்னமானது பிராணிகளுக்கு முதலிலுண்டானதாக விருக்கிறது, ஆகலின் சகலத்திற்கும் ஔஷதமென்று சொல்லப்படுகிறது. அன்னத்தினின்றும் பிராணிகள் உண்டாகின்றன, உண்டானவைகள் அன்னத்தால் விர்த்தியாகின்றன, அன்னம் பட்சிக்கப்படுகிறது பிராணிகளைப் பட்சிக்கிறது, ஆகலான் அன்னமென்று சொல்லப்படுகின்றது.

அன்னவிகரரமான பிண்டத்தைவிட வேறானதுள்ளேயிருக்கிறது. பிராணவிகாரமான ஆத்மா இப்பிராணமய ஆத்மாவால் அன்னமயம் நிறைந்திருக்கிறது.

இந்தப் புருஷாகாரமே அந்தவன்ன மயத்தின் புருஷாகாரத்தை அனுசரித்து இவன் புருஷாகாரமாயிருக்கிறான், அவனுக்குப் பிராணனே தலை, வியானன் வலதுகை, அபானன் இடதுகை, ஆசாசம் ஆத்துமா, பிரு திவி வால்!

அநுவாகம். 3.

தேவதைகளும் மனிதர்களும் மிருகங்களும் எவர்களோ அவர்கள் பிராணனையனுசரித்து ஜீவிக்கிறார்கள், பிராணன் பிராணிகள் ஆயுள் நிச்சயம் ஆகையால் சகலத்திற்குமாயுள் சொல்லப்படுகிறது. எவர்கள் பிராணனைப் பிரமமாக உபாசிக்கிறார்களோ அவர்கள் சர்வ ஆயுளையே அடைகிறார்கள், பிராணன் பூதங்களின் ஆயுள் நிச்சயம் ஆகலின் சர்வாயுள் சொல்லப்படுகிறது.

முன்னம் சொன்னதற்கு இவனே சரீரசம்பந்தமுள்ள ஆத்துமா. பிராணனாலுண்டான இதை விட வேறாயுள்ள மனத்தாலுண்டான ஆத்மா விருக்கிறான். அவனாலிவனிறைந்திருக்கிறான்.

புருஷாகாரனே அவனுடைய புருஷாகாரத்தை அனுசரித்து இவன் புருஷாகாரமானவன், அவனுக்கு யஜூசே சிரசு, ரிக்கு வலதுகை, ஸாமம் - இடதுகை, விதிவாக்கியம் ஆத்துமா, அதர்வாங்கிகள் வால் ஆதாரம்,




ஆனந்தவல்லி.
4 - வது அநுவாகம்.

வாக்குகள் மனதுடன் எதினின்று மடையாமல் திரும்பிவிடுகின்றனவோ, அந்தப்பிரம்மத்தில் ஆனந்தத்தை யடைகிறவன் எக்காலத்திலும் பயப்படுகிறதில்லை.

மனோமயத்தைவிட வேறானது உள்ளேயிருக்கிற விஞ்ஞான விகார மான ஆத்துமா, அதனால் இது பூரணமாயிருக்கிறது.

அவன் புருஷாகாரமே அவன் புருஷாகாரத்தை அனுசரித்து இவன் புருஷாகாரம், அவனுக்குச் சிரத்தையே சிரசு, தருமம் வலது இரக்கை, சத்தியம் இடது இரக்கை, யோகம் ஆத்மா, மகத்து வால்.

5 - வது அநுவாகம்.

வேதாந்தத்தில் நிச்சயமடைந்த புத்தி யக்ஞத்தையும் கர்மத்தையுஞ் செய்கிறது. சகலமான தேவதைகள் விஞ்ஞானத்தை முதலாவதான பிரம்மமாக உபாசிக்கிறார்கள். விஞ்ஞானத்தைப் பிரமமாக வறிந்து, அது னின்றும் வழுவாமலிருந்தால் சரீரத்தின் பாபங்களை விட்டுச் சமஸ்தமான இச்சைகளை அடைகிறான்.

அந்த விஞ்ஞான மயத்தைவிட வேறாயு முள்ளேயு மிருக்கிற ஆத்துமா ஆனந்தமயன் அவனாலிவன் பூர்ணமானவன்.

பரமாத்துமா வெகுவாகவேண்டு மென்பதாக விச்சித்தார்.. அவர் தமது ஞானத்தால் அனைத்தையுஞ் சிருஷ்டித்தார்.

சகலத்தையுஞ் சிருட்டித்து அவற்றிற் பிரவேசித்தார். அவற்றிற் பிரவேசித்து மூர்த்தமாயும் அமுர்த்தமாயும் ஆனார். இத்தகையதெனச் சொல்லவும் சொல்லக் கூடாததுமான ஆதாரமாயும், ஆனாதாரமாயும், சேதன மாயும், ஜடமாயும், சத்திய அசத்திய சொரூபமாயும், பரமார்த்த சொரூப முமானார்.

பார்க்கப்படுவது எதுவோ அது பரமார்த்த சத்தியம் என்று சொல்வர்.

6 - வது அநுவாகம்.

ஜகத்து சிருஷ்டிக்கு முன் அசத்தாகவே யிருந்தது. அதினின்றும் சத்துண்டாயிற்று. அது தன்னைத் தானாகவே செய்து கொண்டது. ஆக லினது சுகிர்த மென்பதாச் சொல்லப்படுகின்றது.

எது சுகிர்தமோ அது ரசம் இவன் ரசத்தை யடைந்து ஆனந்த முடையவனாகிறான்.

இருதயாகாசத்தில் இந்த வானந்தம் இராவிடின் எவன் அபான கர் மத்தையும் பிராணகர்மத்தையும் செய்வான். இவனே யானந்தன்.

எப்போழுது ஞானவிச்சையுள்ளவன் காணப்படாமலும், அசரீரமாயும் அவாச்சியமாயும் நிராதாரமாயுமிருக்கிற பிரம்மத்தினிடத்தில் பயமற்ற ஸ்திதியை அடைகிறானோ வப்போது பயமற்றவனாகிறான்.

எப்போது ஜிஞ்ஞாசுவானவன் பிரம்மத்தினிடத்தில் ஸ்வல்ப பேதத்தைச் செய்கிறானோ அப்போது அவனுக்குப் பயமானது உண்டாகிறது.

ஆனந்தவல்லி.
8 - வது அனுவாகம்.

வாயு, சூரியன், அக்கினி, இந்திரன், மிருத்தியு இவர்கள் முறையே பிரம்மத்தின் பயத்தால் வீசுகிறான், உதிக்கிறான், ஓடுகிறார்கள்.

ஆநந்த விஷயத்தில் இந்த விசாரனையிருக்கிறது.

யௌனத்திலிருக்கிறவனாயும், சீக்கிரத்தில் வேலை செய்யத் திறமையுள்ளவனாயும், வெகுதிடமுள்ளவனாயும், வெகுபலமுள்ளவனாயும், யோக்ய, மானபூர்வவயதையுடையவனாயும், வேதாத்தியனம் செய்கிறவனாயும், ஆவானெவனோ அவனுக்கு இந்தச் சமஸ்தமான பூமி யோகசாதனமான தனத்தால் நிறைந்ததாகும். இது மனிதாநந்தம்.

மனிதாநந்தம் பலகூடி யொன்றுள்ளதெதுவோ அஃதொரு மனுடனா யிருந்து தவசு முதலியவற்றால் கந்தருவனாய்ச் செல்வனது மனுடகந்தருவானந்தமாம்..

அதுபலகூடி யொன்றாயுளதெதுவோ அஃதொரு தேவகந்தருவானந்தமாம்.

அதனின் மேம்பட்டது பன்னாள் உறுதியாயிருக்கும் பிதிர்தேவ தானந்தமாம்.

அதனின் மேம்பட்டது தேவானந்தமாம். இவ்வானந்தமே வைதிக கன்மங்களால் தேவர்களையடையும் கன்மதேவானந்த மெனப்படும்.

இதனின் மேம்பட்டது தேவலோகத்தில் தேவதைகளாய்ப் பிறந் துள்ள சுபாவதேவானந்தம்.

அதினின் மேம்பட்டது இந்திரானந்தம்.
அதனின் மேம்பட்டது பிருகற்பதியானந்தம்.

அதனின் மேம்பட்டது நூறு கொண்டது பிரஜாபதியானந்தம். அஃதொரு பிரமானந்தம்.

புருஷனிடத்தில் ஆனந்தஸ்வரூப பரமாத்மா எவனோ அவன் சூரியனிடத்துள்ளான்.

எவன் இப்படியறிகிறானோ அவனிந்த வுலகத்தினின்றும் வெளி சென்று (மரணமடைந்தபின்) இந்த அன்னமயமான ஆத்மாவையடைகிறான்.

9 - வது அனுவாகம்.

எதினின்றும் வாக்குகள் மனதுடன் அடையாமல் திரும்பி விடுகின்றனவோ, அத்தகைய பிரமத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எதினின்றும் பயப்படுகிறதில்லை.

நான் எந்தக்காரணத்தால் சுபகர்மத்தை செய்யாமற் போனேன், நான் எந்தக்காரணத்தால் பாபகர்மத்தைச் செய்தேனென்ற தாபம் இவனைத்தபிக்கச் செய்கிறதில்லை.

எவனிவ்விதமறிகிறானோ அவனிவைகளே ஆத்மஸ்வரூபமேன்பதாகச் சந்தோஷமடைகிறான்.

பிருகுவல்லி.

பிரசித்தமான வருண புத்திரனாகிய பிருகுவானவர் தமது பிதா வான வருணனை நோக்கிப் பூஜ்யரானவரே பிரம்மத்தை உபதேசியும் என்று அவரிடமடைந்தான்.

அன்னத்தையும் (சரீரம்) பிராணனையும், கண்ணையும், காதையும்,மனதையும், வாக்கையும் (சாதனங்கள்) என்பதாய்ப் பிருகுவுக்கு அவர்பிதா சொன்னார்.

பிரசித்தமான எதினின்றும் இந்தப்பிராணிகள் உண்டாகிறார்களோ எதனால் ஜீவிக்கிறார்களேர் எதை அடைகிறார்களோ எதில் பிரவேசிக்கிறார்களோ அதையறி அது பிரம்மம் என்று வருணன் சொன்னான்.'

பிருகு தவத்தைச் செய்தான் அவன் தவத்தைச் செய்து அன்னத்தைப் பிரமமென வறிந்தான். (அறிந்த பிறகு அன்னத்திற்கு உற்பத்தி முதலியவை யிருக்கிறபடியால் இது எப்படியென்ச், சந்தேகித்தான்). 

மறுமுறை தவஞ்செய்து பிராணனைப் பிரம்மமென வறிந்தான் (பிரா ணனுக்கு உற்பத்தி முதலியவை யிருக்கிறபடியால்'இது எப்படியெனச் சந்தேகித்தான்.) –

மறுமுறை தவஞ்செய்து மனம் பிரம்மமென வறிந்தான் - (மனத் திற்கு உற்பத்தி முதலியவை யிருக்கிறபடியால் இது எப்படியெனச் சந்தே கித்தான்.)

மறுமுறை தவஞ்செய்து விஞ்ஞானம் பிரம்மமென வறிந்தான் (விஞ்ஞானத்திற்கு உற்பத்தி முதலியவை யிருக்கிறபடியால் இது எப்படி யெனச் சந்தேகித்தான்)

மறுமுறை தவஞ்செய்து ஆனந்தம் பிரம்மமென வறிந்தான் (இந்த ஆனந்த வித்தையானது சிரேஷ்டமான இருதயாகாசத்தில் வைக்கப்பட்டிருக்கிறதென வுணர்ந்தான்.

எவனிந்தப் பிரகாரம் அறிகிறானோ அவன் பிரம்ம ஸ்வரூபசித்தியையடைகிறான். அன்னமுடையவனாகிறான். அன்னத்தைப் புசிக்கிறவனாகிறான். சந்தானத்தாலும், பசுக்களாலும், பிரம்மதேஜஸாலும் மகத்தான கீர்த்தியாலும் மகானாகிறான்..

(அன்னமாகிற துவாரத்தின் வழியாகப் பிரம்மம் அறியப்பட்டதா கையால்) சாப்பிடக்கூடிய அன்னம் நிந்திக்கத்தகாதது.

பிராணஸ்வரூபமும் அன்னம், சரீரமானது அன்னத்தைப் பட்சிக் கிறது. பிராணனிடத்தில் சரீரமானது ஸ்திரமாயிருக்கிறது. சரீரத்தில் பிராணனிருக்கிறான். அன்னம் அன்னத்தில் ஸ்திரமாயிருக்கிறது.

ஆகையால் அன்னத்தை விசேஷமாகச் சேகரிக்க வேண்டும். அன்னத்தை யாவருக்கும் கொடுக்க வேண்டும்.

இந்த அன்னம் (பாலியத்தில்) கொடுக்கப்பட்டால் பாலியத்தில் இவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அன்னம் மத்தியம் வயதில் கொடுக்கப்பட்டால் இவனுக்கு மத்தியில் அன்னம் கொடுக்கப்படுகிறது. அன்னம் விருதாப்பியத்தில் கொடுக்கப்பட்டால் இவனுக்கு அன்னம் கடைசியில் கொடுக்கப்படுகிறது. –

பிரம்மம் வாக்கில் க்ஷேமரூபம், பிராண அபானங்களில் யோகக்ஷேம்ரூபம், கைகளில் கர்மரூபம், பாதங்களில் கமனரூபம், பாயுவில் விசர்ச்சன ரூபம்.

இனித் தேவதை சம்பந்தரூபமாக மழையில் திருப்திரூபம், மின்னலில் பலரூபம், பசுக்களில் ஏயசஸ்ரூபம், நட்சத்திரங்களில் தேஜோ ரூபம்,உபஸ்தேந்திரியத்தில் அமிருதரூபம், ஆகாசத்தில் சர்வரூபம்.
அந்த ஆகாசமாதாரம் என்பதாக உபாசிக்க, ஆதாரமுள்ளவனாகிறான் அது மஹத்ஸ்வரூபம் என்பதாக உபாசிக்க மகானாகிறான் அது மனது என்பதாக உபாசிக்க மனனத்தில் சமர்த்தனாகிறான் அது பிரம்மமென்பதாகஉபாசிக்க பிரம்மமாகிறான் அது பிரமத்தின் சம்ஹார சாதன மானவாயு என்று உபாசிக்க, துவேஷிக்கிறவர்களும், சத்துருக்களும், பிரியமற்ற தம்பிதமயன்மார்களும் பிள்ளைகளும் நாசமாகிறார்கள்.

புருஷனிடத்தில் எவன் ஆத்துமாவோ, அவனும் சூரியனிடத்தில் எவன் ஆத்துமாவோ அவனும், ஒருவனே, எவன் இப்பிரகாரம் தெரிந்துகொண்டிருக்கிறானோ அவன் இந்தலோகத்தினின்று மரணமடைந்து அன்னசொரூபமான ஆத்துமாவையும் பிராணஸ்வரூபமான ஆத்மாவையும் மனோமயமான ஆத்மாவையும், விஞ்ஞான மயமான ஆத்மாவையு ஆனந்தமயமான ஆத்மாவையு மடைந்து கர்மானுசாரமாய் அன்னத்தை யுடையவனாயும்இச்சானுசாரமாக ரூபத்தைத் தரிக்கிறவனாயும் இந்தலோகங்களை யனுசரித்துச் சஞ்சரித்துக்கொண்டு இச்சாமத்தைக் கானஞ்செய்துகொண்டு இருக்கிறான்.

நாராயணவல்லி.
அனுவாகம் 1.

அனேகவித் சமுத்திர மத்தியிலிருக்கிற ஜலத்திற்கு அக்கரையில் யாதொரு பெரிய லோகாலோக பர்வத முதலியன விருக்கின்றனவோ அவற்றை விடவும், இந்தப் பரமேர்வரன் மிகவும் பெரியவர். பிருதிவி முதலிய லோகத்தின் மத்தியில் யாதொரு பெரிய மேரு முதலிய பர்வத முண்டோ அவற்றை விடவும் நிரம்பப் பெரியவர். சுவர்க்கத்துக்குமேல் யாதொரு பெரிய பிரம்ம லோகாதி யுண்டோ அவற்றை விடவும் நிரம்பப் பெரியவர். பிரகாசிக்கிற ஜீவசைதன்ய ரூபத்தால் பிரகாசிக்கிற அந்தக் கரணங்களிற் செவ்வையாக அவர் பிரவேசித்தார். பிரம்மாண்ட ரூபகர்ப்பத்தின் மத்தியில் விராட்டுரூபமாயிருக்கிறார்.

இந்தச் சமஸ்த ஜகத்தும் எந்த அவ்வியா கிருதத்தில் அதாவது மூல காரணத்தில், சிருஷ்டிகாலத்தின் உற்பன்ன மான சத்துப்போய்ச் சேர்ந்து விடுகிறதோ, சங்கார காலத்தில் லயமடைந்த சத்து வெளிப்பட்டதாகிறதோ, இரண்ணியகர்ப்பர் விராட் அக்கினி இந்திரன் முதலான சமஸ்த தேவதைகள் எந்த மூலகாரணத்தில் விசேஷமாய் ஆசிரயித்திருக்கிறார்களோ, அதுவே சிருஷ்டி சங்காரங்கட்கும் தேவதைகட்கும் ஆதாரமான அவ்வியாகிருதமே. முன்னிருந்த ஜகத்தும் வரப்போகிற ஜகத்தும் இப்போ திருக்கிற ஜகத்தும் அந்த அவ்வியாகிருதமே. அத்தகைய அவ்வியாகிருதம் விநாசமற்ற உத்கிருஷ்டமான ஆகாசம்போல அமுர்தமான பரமாத்மாவி லிருக்கிறது.

எந்தச் சத்சித் ரூபமான காரணத்தால் அந்தரிக்ஷலோகமும் த்யுலோகமும் மகிபூலோகமும் இவையெல்லாம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, எந்தப் பரமோர்வரனால் அனுக்கிரகிக்கப்பட்ட சூரியன் தன்னுடைய மண்ட லத்திலிருக்கிற பிரகாசத்தாலும் பிரசரிக்கும் கிரணங்களான பிரகாசத்தாலும் சமஸ்த ஜகத்தும் பிரகாசிக்கும்படி செய்கிறானோ, ஞானிகள் பரமாத்மாவைச் சமுத்திர சப்தத்தால் குறிப்பிடப்பட்ட சகல சகத்திற்கும் மத்தியில் நூல்கள் போல் அறிகிறார்களோ அந்தப் பிரம்மம் நாசமற்ற உத்கிருஷ்டமான நிஜஸ்வரூபத்திலிருந்து கொண்டு பிரஜைகளைப் பண்ணுகிறது.''

முன் சொல்லிய ஜகத்தின் சிருஷ்டியானது எந்த அவ்வியாகிருதத்துடன் கூடின சைதன்யத்தினின்றும் பிரவிர்த்தித்ததோ, அது ஜலத்தால் உபலட்சிதமான பூதபஞ்சகத்துடன் மனுஷ்ய பசு முதலிய ஜீவ தேகங்களைப் பூமியில் சிருஷ்டித்தது. மாயையுடன் கூடின சைதன்யமாகிற காரணம் நெல் எவை முதலியவைகளால் கூறப்படும் அன்ன மாவாகி மனிதர் களையும் பசுக்களையும் சராசரங்களான பூதங்களையும் ஸ்தாவர ஜங்கமான சர்வசரீரங்களையும் பிரவேசித்தது. விருட்சங்களில் மழை ஜலரூபமாகப் பிரவேசித்தது. இந்தச் சைதன்னியத்தால் சகல ஜகத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.

எந்த வஸ்துவானது உத்கிருஷ்டமான விரணிய கர்ப்பாதிகளைவிட அத்தியந்த முத்கிருஷ்டமோ, எது ஆகாச முதலியவைகளை விட பெரியதாயிருக்கிறதோ, எது ஸஜாதீய விஜாதீய ஸ்வகதபேத மற்றதோ, இந்திரியத்திற்கு விஷயமன்றோ, தேசகாலவஸ்து பரிச்சேத மற்றதோ, ஜகத்ஸ்வரூபமோ, அனாதிசித்தமோ அஞ்ஞானமாகிற தமசுக்கு வேறாகவிருக்கிறதோ, அத்தகைய வஸ்துவை விட அத்தியந்தம் பார்க்கக்கூடாததாயும் உத்கிருஷ்டமாயும் இருக்கிற வேறு வஸ்து இல்லை.

மனதினாலுள்ளபடி சிந்தித்தல் ரிதம், வாக்கினால் அதை யுச்சரித்தல் சத்தியம் இவ்விரண்டும் அதிஷ்டானமான பிரம்மமே ஞானிகளுக்கு வேத சாஸ்திர பாரங்கதர்களுக்குப் பிரமாணமாக விருப்பதாலாதரிக்கும் படியான யாதொரு வேதரூபவஸ்து உண்டோ வதுவும், அவர்களுக்கு அதிஷ்டானமான பரப்பிரம்ம ஸ்வரூபமே தர்சபூர்ணமாசாதி சுரௌதகர்மம் என்ன குளம் வெட்டல் முதலிய ஸ்மார்த்தகர்மம் என்ன இவ்விரண்டும் அந்தப் பிரம்மமே. அப்படியேயிப்போது முண்டாயிருக்கிற சமஸ்த ஜகத்தையும் சக்கிரத்தின் குடம்போலச் சகல லோகத்துக்கும் ஆதாரமான பரமாத்மா தரிக்கிறார். ஆதீயமான சர்வமு மதிஷ்டானரூபமே அக்கினி யும் வாயுவும் சூரியனும் சந்திரனும் பிரகாசிக்கிற நட்சத்திர முதலியன வும் தேவர்களால் சேவிக்கப்படும் அமிருதமும் அதிஷ்டான பிரம்மமே. ஜலத்தால் உபலட்சிதமான பஞ்சபூதங்களும் விராட்ரூபமும் அந்த வதிஷ்டானமே.

சுயம்பிரகாசமான அகண்டமான ஈர்வரனிடத்தில் நிமிஷம், காஷ்டை, முகூர்த்தம், அகோராத்திரம், பட்சம், மாதம், வருடம் உண்டாயின.

அந்த ஈர்வரனை இன்ன அளவனென யாரும் கிரகிக்க முடியாது. ஆகலின் அவனை யாரும் மஹத்யச: என்பர். அவர் உருவம் ஆன்மாக்களின் திருஷ்டியிலில்லை.

அவனை இருதய மத்தியிலிருக்கிற அந்தக்கரணத்தால் அதோமுகப் பார்வையில் ஏகாக்கிரமனத்தால் கிரகிப்பவரே மரணமற்றவர்.

தீரர்களால் அனுபவிக்கப்பட்ட அத்தேவர் அஷ்டதிக்குகளிலும் பிரவேசித்திருக்கிறார். சகலமு மவரேயாகிறார். அவர் ஒருவராகவே யிருக்கிறார்.

உலகப் பிரசித்த பிதாவானவன் புத்திரனுடைய தேகத்தை மட்டும் உண்டு பண்ணுகிறான். பிரம்ம தத்துவத்தை அறிந்தவனோ பரமாத்ம ரூபமாகச் சகல ஜகத்தையும் உண்டு பண்ணுகிறபடியால் தமது தகப்பனையும் உண்டுபண்ணுகிறவனாக வாகிறான்.

அவர் வியவகாரகாலத்தில் சகல பிராணிகட்கும் உபகாரஞ் செய்கிறார். பரமார்த்தத்தைப் பகர்கின் றவர்கட்கு முத்தியைக்கொடுக்கிறார்.

சிவாக்கினி பிரார்த்தனை.

அநிஷ்டத்தைச் செய்யும் பாபதேவதையை நாசஞ்செய்து, பசு முதலியவைகளையும் தீர்க்காயுளையும் சம்பாதித்துக் கொடும்.

ஜாதவேதஸரே! எங்களுடைய பசு குதிரை பிரஜை கிரகம் பூமி முதலியவைகளை நாசஞ்செய்ய வேண்டாம். அக்கினியே நீர் எங்களுடைய அபராதத்தை மனதில் தரிக்காமல் அநுக்கிரகிக்கவாரும், தன தானியாதி சம்பத்தை என்னை அடையும்படி செய்யும். –

விசுவரூப ருத்திரபிரார்த்தனை.

அறிவோம் அடைவோம் அதற்காக அந்த விராட்டின் சுவரூபத்தைத் தியானஞ் செய்கிறோம். அந்தத் தியானத்தில் எங்களை உருத்திரன் விராட்ரூபமாகப் பிரேரணை செய்க.

உருத்திர பிரார்த்தனை,

ஆகம பிரசித்தமான புருஷரூப மகாதேவரை அறிவோம் அந்தத் தியானத்தில் எங்களை உருத்திரன் பிரேரனை செய்க,



விநாயக பிரார்த்தனை.

வக்கிரரூபமான துதிக்கையுடைய விநாயகக் கடவுளைத் தியாநிக்கின் றோம். அந்த விநாயகர் எங்களைப் பிரேரணை செய்க.

நந்திகேசுவர பிரார்த்தனை..

பரமசிவனுக்கு வாகன ரூபமான புருஷாகாரந் தரித்த சக்கிரமான முகமுடைய் நந்திகேசுவரரை அறிவோம் தியானிப்போம். அவர் எங்களைப் பிரேரணை செய்க.

சுப்பிரமணியர், பிரார்த்தனை.

அந்தர்யாமியாகச் சகலத்திலும் பூர்ணமாயிருக்கிற தேவசேனையை யுடைய சுப்பிரமணியரை அறிவோம் தியானிப்போம். அவர் எங்களைப் பிரேரணை செய்க.

கருட பிரார்த்தனை.

அழகாகப் பரக்கச்சாதனமான இரக்கைகளையுடையவன். அவனை யறிவோம் தியானிப்போம். அவன் எங்களைப் பிரேரணை செய்க.

பிரம்ம பிரார்த்தனை.

சதுர்முக ஸ்வரூபத்தைப் புண்ணியபாப கர்மங்களில் பிரேரணைசெய்யும் அவனைக் குருகுவாசம்செய்து அறிவோம், நித்தியாசனத்தின் பொருட்டுத் தியானிப்போம்..

நாராயண பிரரர்த்தனை.

பக்தஜன சமூகத்திற்கு ஆதாரமான வாசுதேவ புத்திரரை அறிவோம் - தியானிப்போம் அவர் எங்களைப் பிரேரணைசெய்க,

நரசிம்ம பிரார்த்தனை.

வஜ்ஜீரநகமும் தீட்சண்ய பல்லுமுடைய நாரசிம்மனை அறிவோம் தியானிப்போம் அவன் எங்களைப் பிரேரணை செய்க




சூரிய பிரார்த்தனை.

மூன்று லோகங்களிலும் பிரகாசத்தைச்செய்கிற சூரியனை யறிவோம் தியானிப்யோம் அவன் எங்களைப் பிரேரணை செய்க,

அக்கினி பிரார்த்தனை.

தன்னிடத்திலே கொடுக்கப்பட்ட அவிசைத் தான் சாப்பிடாமல் இதர தேவதைகட்கு உத்தேசப்படி கொடுக்கிறவனும், சகல வைதிக காரியங்களில் இதமாயிருக்கிறவனுமாகிய அக்கினியை அறிவோம் தியானிக்கின்றோம் அவன் எங்களைப் பிரேரணை செய்க.

துர்க்கா பிரார்த்தனை

காத்தியாயனியை அறிகிறோம் தியானிப்போம் அவள் எங்களைப்பிரே ரணை செய்க.

மிருத்திகை மந்திரம்.

குதிரை இரதம் விஷ்ணு இவர்களின் பாத சம்பந்தத்தால் பரிசுத்த மான பூமியே! ஸ்னான கர்மத்தில் என்னுடைய சிரசால் தரிக்கப்பட்டவளாயும் பிரகாச ரூபியாயு மிருக்கு ஸ்னானத்தின் பொருட்டு ஜலத்திற்குப் போகுமென்னை அடிக்கடி இரட்சிப்பாயாக.

காமதேனுபோல பிரியமானவளாயும், கிருஷ்ணவர்ணமுள்ள அநேக கைகளுள்ளவராக அவதாரத்தால் வெளிப்படுத்தப்பட்டாய். எந்தப்பாபம் என்னாற் செய்யப்பட்டிருக்கிறதோ அதை நாசம் செய், பரமாத்மாவால் பூமிரூபமாக ஸ்தாபிக்கப்பட் டிருக்கிறாய். எனக்குப் புஷ்டியைக் கொடு. என்பாபத்தை நாசஞ்செய் அதனால் மோட்சத்தை யடைவேன்.

மண வழகு.

சித்தாந்தம் – 1916 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment