Saturday, May 9, 2020



மந்திரம்

முதலாவது: ஆளும், கிருத்தியத்தைப் புரியவல்ல ஈஸான மாகிய நகாரத்தில்:

1. உச்சாடனத்தை யுதவவல்ல, அகோரபஞ்சாக்கரம்
2. சந்தானத்தை யருளவல்ல, சௌம்யபஞ்சாக்கரம்
3. வியாதி நீக்கம்புரியவல்ல, ரூபபஞ்சாக்கரம்
4. யோகசித்தியை யருளவல்ல, அம்ஸபஞ்சாக்கரம்
5. ஆயுள் விருத்தியை யாக்கலான, ஆன்மபஞ்சாக்கரம்
6. பூதங்களையோட்டவல்ல, ஆக்ஞாபஞ்சாக்கரம்
7. இராஜவசியம் தரவல்ல, மதனபஞ்சாக்கரம்
8. உலக சம்பத்துக்களை யுதவவல்ல, மாயாபஞ்சாக்கரம்
9. வித்யாபி விருத்தியாக்கவல்ல பாலாபஞ்சாக்கரம்
10. நினைத்ததை யாக்கவல்ல, அஸ்திரபஞ்சாக்கரம்
11. அட்டமாசித்தியை யருளவல்ல, சக்திபஞ்சாக்கரய்
12. சுவரநிவிருதியைச் செய்பவல்ல, சித்திபஞ்சாக்ஷரம்
13. விஷங்களைப் போக்கவல்ல, ருத்ரபஞ்சாக்ஷரம்
14. நிலங்களை பருளவல்ல, ஜபதிபஞ்சாக்ஷரம்
15. கலைமகள் நோக்கை யு தவவல்ல, சரஸ்வதிபஞ்சாக்ஷரம்
16. கள்ளரச்சத்தை யகற்றவல்ல, ஸ்கந்தபஞ்சாக்ஷரம்
17. மோக்கத்தை யருளவல்ல, மூலபஞ்சாக்கரம்
18. இராஜியசித்தியை யு தவவல்ல, மகாவித்யாபஞ்சாக்கரம்
19. காலனை வெல்லவல்ல, மிருத்யஞ்சயபஞ்சாக்ஷரம்
20. சௌபாகியங்களைத் தரவல்ல, லக்ஷ்மிபஞ்சாக்கரம்
21. வாணிபசித்தியைக் கொடுக்கவல்ல, க்ஷிப்ரபஞ்சாக்கரம்
22. பசியின்மையைப் பயக்கவல்ல, அனந்தபஞ்சாக்ஷரம்
23. ஸ்ரீவசியமாக்கவல்ல அனங்கபஞ்சாக்கரம்
24. சூலநோயைத் தவிர்க்கவல்ல, காம்பவபஞ்சாக்கரம்
25. பரகாயப் பிரவேசத்தைப் பயக்கவல்ல, சருவபஞ்சாக்கரமும்.
                     
ஆக 25

இரண்டாவது: காக்குங் கிருத்தியமுடைய, தற்புருடமாகிய மகாரத்தில்.

      1. வித்வேஷணத்தை யீயவல்ல, வித்வேஷண பஞ்சாக்கரம்.
2. கட்கசித்தியைக் கருணிக்கவல்ல, சர்ப்பபஞ்சாக்ஷரம்
3. அனந்தசித்தியை யருளவல்ல, சத்திபஞ்சாக்கரம்
      4. அதிருசியத்தைக் காட்டவல்ல, பிரமபஞ்சாக்கரம்
5. ஜலம்சுரக்கச் செய்யவல்ல, வருணபஞ்சாக்கரம்
6. கடல்சுவரச்செய்யவல்ல, சமுத்ரஸோஷண பஞ்சாக்கரம்
7. மதயானைகளை வசமாக்கவல்ல, கஜவசிய பஞ்சாக்காம்
8. யானைகளைத் தம்பிக்கவல்ல, கஜதம்பன பஞ்சாக்கரம்
9. கடலைக் கட்டவல்ல, பிரமரிபஞ்சாக்கரம்
10. சிலந்தியினானிமுனையாதிகளை நீக்கவல்ல, சம்பிரமபஞ்சாக்ஷரம்.
11. தேவமாதர்களைக் கூடச்செய்யவல்ல, யோகினிபஞ்சாக்ஷரம்.
12. முக்குணங்களை யொழிக்கவல்ல குணபஞ்சாக்கரம்
13. பாதாளத்தைக் காணச்செய்யவல்ல, சரபபஞ்சாக்கரம் -
14. பாடகனாகச் செய்யவல்ல, ஸாரபஞ்சாக்ஷரம்
15. உம்பருலகை படையச்செய்யவல்ல, வித்யாதரபஞ்சாக்ஷரம்
16. நினைத்தபடி யாக்கவல்ல, சிருட்டிபஞ்சாக்ஷரம்
17. பூமிகளைப் பிளக்கவல்ல, சம்மாரபஞ்சாக்ஷரம் -
18. தெங்குகளை வளையவும்நிமிரவும் புரியவல்லஸ் திதரபஞ்சாக்கரம்
19. பசியைப் போக்கவல்ல, வைஸ்வாரை பஞ்சாக்கரம்
20. மழையைப் பெய்விக்கவல்ல, பர்ஜனி பஞ்சாக்கரம்.
21. மழையில், நனையாமல் வரச்செய்யவல்ல, புஷ்டிபஞ்சாக்கரம்.
      22. ஆறானது இருபுறமும் விலகச்செய்யவல்ல சரணிபஞ்சாக்கரம்
23. கடலில் உருவோடாமலிருக்கச்செய்யவல்ல, யானபஞ்சாக்கரம்
24. ஜலமேல் நடக்கச் செய்யவல்ல, சாமுத்ரிய பஞ்சாக்கரம்.
25. யக்ஷணிகளைப் புரியச்செய்பவல்ல, யக்ஷணிபஞ்சாக்ஷரம்

ஆக 25

 மூன்றாவது: அழிக்குங்கிருத்தியமுடைய, அகோரமாகியசிகாரத்தில்:

      1. தம்பிக்கச் செய்பவல்ல, தம்பனபஞ்சாக்கரம்
2. அமுருதத்தைத் தரிசிக்கச்செய்யவல்ல, வஜ்ரபஞ்சாக்ஷரம்
3. தேவதைகளைக் காட்டவல்ல, ஸ்தோகபஞ்சாக்கரம்
4. விமானங்களை வரவழைக்கவல்ல, விமானபஞ்சாக்கரம்
5. கர்ப்பகத்தை வரவழைக்கவல்ல, மானஸபஞ்சாக்ஷரம்
6. காமதேனுவை வரவழைக்கவல்ல, தேனுபஞ்சாக்கரம்
7. இந்திரன் சபையைக்காணச்செய்யவல்ல, இந்திரபஞ்சாக்கரம்.
8. இச்சாசத்தியினைக் காட்டவல்ல, இச்சாபஞ்சாக்கரம்
9. விஷ்ணுமாய்கையினைக் கடக்கச்செய்யவல்ல, லகுபஞ்சாக்ஷரம்
10. ஆதித்தர்களைக் காண்பிக்கவல்ல, ஸௌரபஞ்சாக்கரம்
11. சிவனாரது போக்குவரவைக் காண்பிக்கவல்ல. வைந்தவபஞ் சாக்ஷரம்.
      12. பூமிக்கு ளுள்ளனவற்றைக் காண்பிக்கவல்ல, கலியாணபஞ் சாக்கரம்.
13. சலத்திலுள்ள பாதைகளைக் காட்டவல்ல, சரஸ்பஞ்சாக்கரம்
14. சந்திரசூரிய நட்சத்திர மண்டலங்களைக் காட்டவல்ல ஆலோ பஞ்சாக்கரம்.
15. ஆன்மாவைத் தரிசிப்பிக்கவல்ல, பிரமக்ஞான பஞ்சாக்ஷரம்
16. ஆகாயகமனம் புரிவிக்கவல்ல, கேஸரிபஞ்சாக்கரம் -
17. பதினைந்து வித வித்தைகளை யூட்டவல்ல, பஞ்ச தசாக்ய பஞ்சாக்ஷரம்.
18.. நினைத்தவிடத்தில் ஏகச்செய்யவல்ல, மனோவேகபஞ்சாக்காம்
19. சித்துகள் சித்திக்கும்படி செய்யவல்ல, கூபபஞ்சாக்ஷரம்
20. மந்திரசொரூபங்களைக் காண்பிக்கவல்ல, நிர்வாணபஞ்சாக்ஷரம்
21. சகலவித விஷங்களையும் போக்கவல்ல, நிர்விஷபஞ்சாக்ஷரம்
22. இளையோர்களை முதியோர்களாகவும், முதியோர்களை
இளையோர்களாகவும் செய்யவல்ல, சுந்தர பஞ்சாக்கரம்.
      23. வித்வான்களை ஊமைகளாகவும், ஊமைகளை வித்துவான்களாகவும்
ஆக்கவல்ல, மர்ஜனி பஞ்சாக்கரம்.
24. பட்டமரத்தைத் துளிர்க்கச்செய்யவல்ல, சஞ்சீவிபஞ்சாக்ஷரம்
25. இந்திரனை யழைப்பிக்கவல்ல, அகண்டபஞ்சாக்கரம்

ஆக 25

நான்காவது, விளக்குங் கிருத்தியமுடைய வா மமாகிய வகாரத்தில்

      1. வீக்கத்தை யுண்டாக்கவல்ல, பேதபஞ்சாக்ஷரம்
2. செத்தவர்களை எழுப்பவல்ல, பூர்ண தாயினி பஞ்சாக்ஷரம்
3. எங்குமுள்ள போக்குவரவுகளைக் காண்பிக்கவல்ல, சுவர்க்க பஞ்சாக்ஷரம்.
4. எல்லாவற்றையும், ஆகருஷணிக்கவல்ல, பிரஜாபத்திய பஞ்சாக்ஷரம்.
5. முறிந்த வுறுப்புக்களைக் கூட்டவல்ல மகா பலபஞ்சாக்கரம்
6. குருட்டை நீக்கவல்ல, நவநீத பஞ்சாக்ஷரம்.
7. மலைகளையடியோடப் பெயர்க்கவல்ல, கிரிபஞ்சாக்கரம்
8. விஷ்ணுவைத் தரிசிப்பிக்கவல்ல, வைஷ்ணவ பஞ்சாக்கரம்
9. இந்திரன் குதிரையை வரவழைக்கவல்ல, உச்சை ஸ்ரவ பஞ்சாக்ஷரம். - -
10. ஆகாயகங்கையை அழைப்பிக்கவல்ல மந்தாகினி பஞ்சாக்ஷரம்
11. அக்கினியின் நாவையறுக்கவல்ல, அக்னிபஞ்சாக்கரம்
12. பாவபுண்ணியங்களைக் காண்பிக்கவல்ல, ஆகருஷண பஞ்சாக்கரம்.
13. அன்னத்தை வரவழைக்கவல்ல, ஆஞ்ஞாபஞ்சாக்கரம்
14. மேகத்தில்மறைந்து கொள்ளச்செய்யவல்ல, மேகபஞ்சாக்கரம்
15. வாயுவின் கதிகளைக்காட்டவல்ல, வாயுபஞ்சாக்கரம்,
16. சித்தர்களது, போக்குவரவுகளைக்காட்டவல்லவாயுபஞ்சாக்ஷரம்
17. பூசிப்போர் அடையும் பலன்களைக் காட்டவல்ல பூஜாபஞ்சாக்ஷரம்.
      18. புட்பபரிமளங்களின் ஒடுக்கங்களைக் காட்டவல்ல, பரிமண்டல பஞ்சாக்கரம்.
19. தழைப்பதைக் காட்டவல்ல, சேவியபஞ்சாக்ஷரம்
20. திசைகளின் தோற்றங்களைக் காட்டவல்ல, திசாபஞ்சாக்கரம்
21. திக்கந்தங்களைக் காட்டவல்ல, திகந்தபஞ்சாக்ஷரம்
22. தன்விழியினிடத்தே, நிலம் நீராதியனவற்றைக் காண்பிக்கவல்ல, விலோபன
ஞ்சாக்கரம்.
23. மகான்களினிருப்பைக் காட்டவல்ல, ஜிம்மபஞ்சாக்ஷரம்
24. எல்லாவற்றின் கூட்டுறவுகளைக் காட்டவல்ல, சம்போக பஞ்சாக்கரம்.
25. சகல பரிபாஷைகளையும், அறியச் செய்யவல்ல, சருவபரி பாஷா
பஞ்சாக்ஷரம் .
ஆக 25

      ஐந்தாவது, தோற்றுவிக்குங் கிருத்தியமுடைய, சத்யோசாதமாய யகாரத்தில்,

1. மூலாதாரத்தைத் தரிசிப்பிக்கவல்ல, மூலா தார பஞ்சாக்ஷரம்
2. சுவாதிட்டானத்தைக்காட்டவல்ல, சுவாதிட்டான பஞ்சாக்கரம்
3. மணிபூரகத்தைக் காட்டவல்ல, மணிபூரக பஞ்சாக்கரம்
4. அநாகதத்தைக் காண்பிக்கவல்ல, அநாகத பஞ்சாக்கரம்
5. ஆக்கினையைக் காட்டவல்ல, ஆக்கினாபஞ்சாக்ஷரம்
6. விசுத்தியைத் தரிசிப்பிக்கவல்ல, விசுக்திபஞ்சாக்ஷரம்
7. அண்டவகுக்குகளைக் காட்டவல்ல, அண்டபஞ்சாக்கரம்
8. முனிகணங்களைத் தரிசிப்பிக்கவல்ல, முனிபஞ்சாக்கரம்
9. சிட்டித்தொழிலைப் பயக்கவல்ல, பிரம்மபஞ்சாக்கரம்
10. குருபாதத்தைக் காட்டவல்ல, குருபஞ்சாக்கரம்
11. காட்டினைக் கொளுத்தவல்ல, வனாக்னி பஞ்சாக்கரம்
12. முக்காலங்களையும் உணர்த்தவல்ல, காலக்ஞான பஞ்சாக்கரம்
13. மாய்கையினை யறுக்கவல்ல, மாயா நிவாரணபஞ்சாக்கரம
14. வரைகளைத் தகர்க்கவல்ல, பருவத பஞ்சாக்கரம்
15. சந்திரசூரியர் கூடுவதைக்காட்டவல்ல, அரிச்சந்திர பஞ்சாக்ஷரம்
16. இயமனை வெல்லவல்ல, பமபஞ்சாக்கரம்
17. மனோன்மணியின் காப்பைப்பெறவல்ல, மெனோன்மணி பஞ்சாக்ஷரம்
18. 64 - கலை ஞானங்களை யுணர்த்தவல்ல, சதுஷ்சட்டிகலா பஞ்சாக்ஷரம்
19. அரயர்களை ஏவல் செய்விக்கவல்ல, இராஜுசேவிய பஞ்சாக்ஷரம்
20. அரயர்கள் வணங்கச்செய்யவல்ல, இராஜவசிய பஞ்சாக்கரம்.
21. உன்மணியைக் காட்டவல்ல, உன்மனா பஞ்சாக்ஷரம்
22. பிந்துவைக்காட்டவல்ல, பிந்து பஞ்சாக்ஷரம்
23. நாதத்தைத் தரிசிப்பிக்கவல்ல, நாதபஞ்சாக்ஷரம்
24. திரிகோணத்தைத் தரிசிப்பிக்கவல்ல, திரிகோணபஞ்சாக்ஷரம்
25. சதுர்பீடத்தைத் தரிசிப்பிக்கவல்ல, சதுஷ்பீடபஞ்சாக்ஷரம்

ஆக 25
      ஆக எழுத்தைந்து நின்றும் 125 பஞ்சாக்ஷரங்களுற்பத்தியாயின.

                                               வடபதி திருப்பருப்பத பரம்பரை 
         தி. மா, அப்பாவுப் பிள்ளை, தமிழ்ப்பண்டிதர்,
கருவூர்.

சித்தாந்தம் – 1913 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment