Sunday, May 10, 2020



அதர்வணவேத
முண்டகோபநிஷத்து*

* இவ்வுபநிடதத்தில் ஆங்காங்கு உபயான்மப்பிரயோகம் காணப்படுகிறதனால், ஏகான்மவாதத்திற்கிடமில்லை, உபநிடதங்களில் பரமான்மாவை ஆன்மா வென்பது அங்காங்கிலட்சணை, ஆன்மாவைப் பரமான்மா வென்பது ஆதார லட்சணை.

முண்டகம் - 1 - கண்டம் - 1.

1. உலகினுக்குத் கர்த்தாவாயும், போக்தாவாயும், தேவர்கட்குள் பிரதமமாகப் பிரம்மா வுண்டானார். அவர் அவரது ஜேஷ்ட புத்திரராகிய அதர்வாவிற்குச் சர்வவித்தியாதாரமான பிரம்மவித்தையை யுபதேசித்தார்.

2. பிரம்மா அதர்வாவிற்கு எதைச் சொன்னாரோ அதைப் பூர்வத்தில் அதர்வா அங்கிரசுக்கு உபதேசித்தார். அவர் பாரத்துவாஜசம் பவரான சத்தியவாகற்குப் பராவரையாகிய அந்தவித்தையை உபதே சித்தார்.

3. மகாசாலராகிய சவுனகர் அங்கிரசு முன்னிலையில் விதவத் தாக விருந்து கொண்டு பகவானே! எது அறியப்படின் இவையெல்லா மதியப்பட்டதாகின்றன வென்றார்.

4. பரவித்தை அபரவித்தை ஆகியவிரண்டு வித்தைகள் அறிய வேண்டுமென பிரும்ம வித்துக்கள் சொல்லுவார்கள்.

5. அபரவித்தையானது இருக்கு, யஜுர், சாமம், அதர்வம், சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தசு, ஜோதிஷமாம். அக்ஷரம் *  எதனாற் கூறப்படுகிறதோ அது பரவித்தையெனும் ஞானமரம்.
* ஈண்டு அக்ஷரம் என்பது சிவபெருமானையே குறிக்கும் பதமாம். “சிவமக்ஷரமவ்யயம்" எனும் பஸ்மஜாபாலோபநிஷத்தானும், “ஸதாசிவோ க்ஷரம் விமலம்எனும் திரிபுரதாபிந்யுப நிஷத்தானும்அறிக.

6. எது பார்க்கப்படாததாய், பற்றப்படாததாய், கோத்திரமில்லாததாய், வர்ணமில்லாததாய் காது - கை - காலில்லாததாய், நித்தியமாய், விபுவாய், எங்கணுமிருப்பதாய், அதிசூட்சுமமாய், அழிவில்லாததாய் இருப்பது எதுவோ அதை எல்லா பூதங்கட்கும் காரணமாயுள்ளதாகத் தீரர்கள் பார்க்கிறார்கள்.

7. யாதொரு பிரமத்தைக்காட்டிலும் வேறு சிறந்தது கிடையாதோ, எதில் சிறியதில்லையோ, எதில்பெரியதில்லையோ, அத்தகையனை ஒருவனாய் விருட்சம்போல ஒருவருக்கும் வணங்காதவனாய்ப் பரமபதத்திலிருக்கிறார், அப்புருஷனால் இவையெல்லாம் வியாபிக் கப்பட்டிருக்கிறது.

ஈண்டு புருவனென்றது சிவபெருமானையேயாம், ''புருஷோவைருத் ராஸந்மகோநமோநமா'' (புருஷராவார் மகானாகிய சத்தெனப்படும் உருத்தி ரரே நமஸ்காரம்) எனத்தைத்ரீ யோப நிஷத்து கூறுமாற்றானேயறிக. இம் முண்டகம் - ந - கண்டம். க, சுலோகப்பொழிப்பு - ஈ - ல் - ஈசம்புருஷம் என்றதாலுமறிக. இங்ஙனமாயின், விஷ்ணுவைப் புருஷோத்தமனென்ற தென்னையெ'னின் ,'வாசுதேவோபராப்ரகிருதி' ''ப்ரகிரு திபரமோவிஷ்ணு'''' யோ நிஜர் தனா'' ''விஸ்வம் நாராயண'' '' ஜகத்விஷ்ணு " என்ற சுருதிகளின்படி, 'சிவத்துவம், வித்தியாதத்துவம், ஆன்மதத்துவம் எனும் முத்திறத்தத்துவங்களுள் ஆன்மதத்துவமான பிரகிருதி தத்துவமாகிய புருஷதத்துவத்தின்றலைவனே விஷ்ணுவாகலின் அவர் புருஷோத்தமனென் பதிற்றட்டில்லை. ஆகவே முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்த புருஷனுக்கும் இருபத்துநாலு தத்துவங்களைக் கடந்த புருஷனுக்குமுள்ள வேற்றுமையை அறிதல் வேண்டும்.

8. சிலந்திப்பூச்சி எவ்வாறு (நூலைச்) சிருட்டித்துக் கிரகிக்கிறதோ? எவ்வாறு பிருதிவியில் ஒளடதிகள் உண்டாகின்றனவோ? ஜீவித்திருக்கிற புருஷனிடத்தில் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகிறதோ? அங்கனமே அக்ஷரத்திலிருந்து பிரபஞ்சமுண்டாகிறது.

இச்சிலந்திப்பூச்சிகொண்டு ஏகான்மாவதியர் பிரமத்திற்கு நிமித்தோப தானம் கூறுவர். அது அடாது. நூலும் மயிர்களும் சித்தல்வாத அசித்தா யிருத்தலைக்கொண்டே அவை சிலந்தியின் உடம்பாகிய அசித்திலிருந்து பரிணாமமாக வந்தன. சிலந்தியின் உயிராகிய சித்திலிருந்து வந்தனவல்ல, ஆகலின் நூலுக்கும் மயிர்களுக்கும் உபாதானம் அசித்தாகிய தேகமும், நிமித்தகாரணம் சிலந்தியின் உயிராதல் போல, உலகிற்கு மாயை உபாதானமும், பிரமம் நிமித்தகாரணமுமாமெனக் கொள்ள வேண்டுவதே நியாயமென்க.

9. தவத்தால் பிரமம் தேடப்படுகிறது, அதிலிருந்து அன்னம், பிராணன், மனது, சத்தியம், கர்மங்களினின்று நழுவாத உலகங்கள் அமுர்தமுண்டாகின்றன.

முண்டகம் - க - கண்டம் - 2.

1. எவ்வெவ்கர்மங்களைச் சாத்தியமான மந்திரங்களுள் கவிகள் பார்த்தனரோ? அவைகளை மூவிதமாய் வெகுபிரகாசமாய் விஸ்தரிக்கப்படுகின்றன, சத்தியபலனை அபேட்சிக்கிறவர்களே! அவைகளை நியதமாய் அனுஷ்டியுங்கள், சத்காரியத்தையுடைய உலகத்தை யடையவேண் டியதற்கிது தான் நல்ல வழி.

2. காந்தியானது எப்போதும் அக்கினியைச் சொலிப்பிக்க உண்டாகிறதோ? அப்போது ஆஜ்ஜிய பாகங்கட்கு மத்தியில் ஆகுதிகளைச் சமர்த்திக்க வேண்டியது. இது சிரத்தை யாகம்.

3. எவனுடைய அக்கினிஹோத்திரம் சுகர்மமில்லாததாயும் பவுர்ணமாசகர்ம மில்லாததாயும் சாதுர்மாச கர்மமில்லாததாயும் அதிதிகளில்லாமலும், வைச்சுவவேதமில்லாமலும், விதிப்பிரகாரமில்லாமலும் இருக்கிறதோ அவனுக்கு ஏழுவம்சம் மோட்சமில்லை.

4. காளி கறாளி மனோஜவை சுலோகிதை சுதூர்ம்ரவர்ணை ஸ்பலிங்கினீ விஸ்வரூபிசதேவி என அளாவிய ஏழு நாக்குகள் இருக்கின்றன.

5. இவைகள் பிரகாசிக்கையில் எவன் அனுஷ்டிக்கிறானோ? அந்தக்காலத்தில் ஆகுதிகளைக் கொடுக்கின்றானோ? அவனை யழைத்துக்கொண்டு, தேவர்கட்குப் பதியானவர் வசித்துக்கொண்டிருக்கிற இடத்தில் சேர்ப்பிக்கின்றன.

6. அவனை வருகவருக என்று நல்ல அழகான ஆகுதிகள் சூரிய ரசிமிகளுடன் யக்கியம் பண்ணுகிறவனைப் பிரியமான வார்த்தையைச் சொல்லி, இது உங்கட்கு நற்காரியத்தா லுண்டான புண்ணிய பிரமலோக மென்று தோத்திரம் செய்து அழைத்துக்கொண்டு போகின்றன.

7. குறைந்த பதினெட்டு விதமான தர்மங்களைச் சொல்லியிருக்கிற எக்யமென்கிற தெப்பங்கள் நிலையில்லா தவைகளாக விருக்கின்றன.

8. அஞ்ஞான மத்தியிலிருந்து கொண்டு தம்மையே புத்திமான்கள் பண்டிதர்க ளென்று நினைத்துக்கொண்டிருக்கின்ற மூடர்கள், குருடரை யழைத்துக்கொண்டு போகின்ற குருடரைப் போலத் துக்கசம்பந்த முடையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

9. அஞ்ஞானத்தால் பலவகையாக விருந்து கொண்டு சிறுபாலர்கள் தாங்கள் கிருதார்த்தகளானோமென நினைக்கிறார்கள். காமிகள் அவற்றில் ஆவல் கொண்டவர்களாகிச் சிறந்த ஞானத்தையடை கிறதில்லை. கர்மங்களின் பயனொழிந்தால் மறுபடி உலகங்களில் வருகிறார்கள்,

10. யாகஞ்செய்தல் தடாகமுதலிய யுண்டாக்கலே சிரேஷ்ட் மெனவெண்ணி மூடர்கள் வேறே சிரேயசை யறியவில்லை. அவர்கள் சுவர்க்கத்தில் சுகிருதபலனை அனுபவித்துப் பின்னிவ்வுலகிலாவது கீழுலகிலாவது வந்தடைகிறார்கள்.

11. வனாந்தரத்தில் பிட்சைசெய்து கொண்டு சாந்தராய் வித்து வான்களாய்ச் சிரத்தையை யெவர்கள் ஆசரிக்கிறார்களோ? அவர்கள் சுபாவத்தில் முக்தர்களாய், அமுர்தனாயும் அவிகாரியாயும் உள்ள புருஷனிடத்தில் சூரியன் மூலமாக வடைகிறார்கள்.

12. எந்தப்பிராமணன் கர்மங்களாலாய உலகங்களை, விசாரித் துப்பற்றற்றவனாய், நித்தியப்பொருளை அநித்தியகர்மத்தினால் அடை யப்படாதென்னும் சிந்தையுடையனாகின்றானோ? அந்தப்பிராமணன் அம்மெய்ப்பொருளை அறியும் பொருட்டு வேதாந்த மறிந்தவனாயும் பிரமநிஷ்டை யுடையவனாயுமிருக்கிற குருவையே சமித்தைக்கையிற் கொண்டு அடைவானாக.

13. அதிசாந்தனாய் சமித்துடன் முன்பாக வந்திருக்கிறவ னுக்குப் புருஷனை அறியக் கூடுமான பிரம வித்தையை யதவத்தாய் (குரு) சொல்லுகிறார்.

முண்டகம் - 2 - கண்டம் - 1.

1. சவுமியனே! இது சத்தியம், நன்கு சுவாலிக்துக்கொண்டிருக்கிற அக்கினியிலிருந்து பொறிகள் ஆயிரங்கணக்காக எவ்விதமுண்டாகின் றனவோ? அங்ஙனமே அக்ஷரத்திலிருந்து நானாவிதமான தோற்றங்கள் உண்டாகி அவ்விடத்திலேயே சேருகின்றன.

இச்சுருதியில் முன்குறித்த ஊர்ணநாபிப்பூச்சி போலிருக்கும் பிரமத்தின் சரீரமாயமாயைவயினடங்கிக் கிடக்கும் உயிர்கள் சிருட்டிஞான்று வெளிப் பட்டுலயகாலத்தில் ஒடுங்குமெனக் கூறிற்றேயன்றிப் பிரமமெனுமான்மாவே அவ்வாறாயதாகக் கூறும் ஏகான்மவாதிகட்கு இடமில்லை.

2. பிராணன், மனசு, இந்திரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு அனைத்தையுந் தாங்கும் பிருதிவியாதிய எல்லாமதிலிருந்து உற்பத்தியாகின்றன.

3. அவர் திவ்வியராயும், அமுர்தராயும், புருஷராயும், உள்ளும் புறம்பு மிருக்கிறவராயும், பிறப்பில்லாதவராயும், மனமில்லாத வராயும், சுப்பிரமமாயும், உயர்ந்த அபரவித்தைக்கு உயர்ந்தவராயு மிருக்கிறார்.

4. அக்கினி யவர் தலை, சூரியனும் சந்திரனும் அவர்கண்கள், திக்குகள் அவர் காதுகள், புலப்படுத்தப்பட்ட வேதம் அவர்வாக்கு, பிராணன் அவர் சுவாசம், பிரபஞ்சம் அவரிருதயம், பூமி அவரடிகள் அனைத்திற்கும் அவரே அந்தரியாமி.

5. எவரிடத்திலிருந்து எதற்குச் சூரியன் சமித்தாயிருக்கிறானோ? அவ்வக்கினியும், சோமத்தினின்று மேகமும், பூமியில் ஔட தங்களும், புருஷன் ஸ்திரீயிடத்தில் இரே தசைவிட வெகுவிதமான பிரஜைகளுமுண்டாயின.

6. அவனிடம் இருக்கு சாமம் எஜுர் தீட்சை யக்கியம் கிருது தட்சணை சம்வத்சரம் சோமன் சூரியன் சஞ்சரிக்கிற உலகங்கள் உண்டாயின.

7. அவனில் பல பிரகாரமான தேவர்கள் சாத்தியர் மனிதர் பசுக்கள் பட்சிகள் பிராணன் அபானன் நெல் செந்நெல் தவம் சிரத்தை சத்தியம் பிரமசரியம் விதிகள் உண்டாயின.

8. அவனினின்றும் எழுபிராணன் எழுஜுவாலை எழுசமித்து எழுஓமம் இருதய குகையில் சயனித்துக் கொண்டிருக்கிற பிராணன் எங்கும் சஞ்சரிக்கும் எழு உலகங்கள் இவ்விதமாக எவ்வேழாக எற் படுத்தப்பட் டிருக்கின்றன.

9. இதில் சகலசமுத்திரங்கள் மலைகள் உண்டாயின. இவற்றில் நதிகள் பெருகுகின்றன. இதில் ஒளடதங்களும் அந்தராத்மா எதனால் நின்றிருக்கிறதோ அந்தாஸங்களு முண்டாயின.

10. சவுமியனே! புருஷனே பிரபஞ்சமும் கர்மமும் தபசுமாம். அமிர் தடாகிய பிரமம் குகைக்குளிருக்கிறதை யெவனறிவானோ அவனே அஞ்ஞான முடிச்சியை யவிழ்க்கிறான்.

முண்டகம் - 2 - கண்டம் - 2.

1. பிரகாசமாயும், சமீபமாயும், குகையில் சஞ்சரித்து அடையவேண்டிய மகாபதமென்னும் பெயரைவாய்ந்ததாக விருக்கிறது. சலிப்பதும் சுவாசம் விடுவதும் கண்ணை மூடுவதும் ஆகியவிவையிதற்குளடங்கும்,. சத்தாயும் அசத்தாயும் பரமாயும் சிரேஷ்டமாயும் பிரஜைகளுடைய ஞானாபேட்சையால் உயர்வா யிருப்பதாயு மறிவீர் களாக.

2. சவுமியனே! எது காந்தி யுடையதோ? அணுவுக் கணுவா யிருப்பதோ? உலகும் உலகினரு மடங்கி யிருக்கின்றனரோ அந்த அக்ஷர பிரமம் இதுவே.. இது பிராணன், இதுவாக்கு, இதுமனது, இதுசத்திய பதார்த்தம், இது மரணமில்லாதது, இதுகுறியையடிக்க : வேண்டிய லட்சிய மென்றறிக.

3. சவுமியனே! உபநிஷத்தாகிய தனுசைப்பிடித்து, உபாசனை யால் தீட்டப்பட்ட அஸ்திரத்தை யதில் சந்திக்கவேண்டியது. பகவத்பத்தியால் வளைத்து உபாசனையாகிய தீட்சண்ணியமாகிய பாணத்தை விடவேண்டியது, அக்ஷரநாதன் லட்சியம்.

4. பிரணவம் தனுசு, ஆத்மா பாணம், பிரமம் லட்சியம், பிரமாதமில்லாதவனால் அக்குறி யடிக்கட்டும். பாணம்போல் தன் மயமாக வேண்டியது.

5. எவரில் ஆகாயமும், பூமியும், அந்தரிட்சமும், குறுக்குமறுக்குமாயினவோ? பிராணன்கள் அனைத்தினோடு மனசும் (உளவோ)? அந்த ஏகராகிய ஆன்மாவையே அறிக, பிறவார்த்தைகளை விடுக, அவர் அமிர்தத்திற்கு அணை.

6. (இரதசக்கரத்தின்) உளுவாய்க்குள் அரங்கள் போல நாடிகள் எவ்விடத்தில் ஒன்றாய்க் கலந்திருக்கின்றனவோ? அவர் நாநாவிதமாய்ச் சம்பவித்துக்கொண்டு உள்ளே யெரிந்து கொண்டிருக்கிறார். ஆத்மாவைப் பிரணவத்தால் தியானம் பண்ணுக உங்கட்கு மங்கள முண்டாகுக.

7. எவர் சர்வஞ்ஞராயும், சர்வவித்தாயும் இருக்கிறாரோ பூமி யில் இம்மகிமை எவருடையதோ? இவ்வாத்துமா திவ்விய பிரமபுரத் திலேயுள்ள ஆகாயத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறார்.

8. மனோமயராயும், பிராணத்திற்கும் சுவர்க்கத்திற்கும் நாயக ராகியும், அன்னத்தில் ஸ்தாபிதமாயும், இருதயத்தைத் தாரணஞ் செய்து சத்விஷய ஞானத்தால் ஆனந்த ரூபமாயும், அமுர்தமாயும் எது பிரகாசிக்கிறதோ? அதைத் தீரர்கள் செம்மையாய்ப் பார்க்கிறார்கள்.

9. பாபரத்தைப் பார்த்தால் இருதய முடிச்சவிழும் சம்சயங்கள் அறும், கர்மம் க்ஷயிக்கும்.

10. பொன்போன்ற வுயர்ந்த பரமபதத்தில் சர்வதோஷ வீனமான குணங்களில்லை. அது நிரவயவம் சுப்பிரமம், ஜோதிகளினும் ஜோதி, அதனை ஆத்தும வித்துக்களறிவர்.

11. அவ்விடத்தே சூரியன் சந்திரன் நட்சத்திரம் மின்னல் அக்கினி பிரகாசிப்பதில்லை. இவையெல்லாம் அவர் தேஜஸினாலேயே பிரகாசம் பெறும்.
12. அமிருதமான இப்பிரமமே முன்னும் பின்னும், தெற்கும், வடக்கும் கீழுமேலும் வியாபித்திருக்கிறது, இப்பிரமமேயிச்சி ரேஷ்டமான சமஸ்த பிரபஞ்சமுமாம்.

முண்டகம் - 3 - கண்டம் - 1.

1. பிரியா நட்புடைய அழகுடைய பட்சிகள் இரண்டு ஒரேமரத்தில் இசைந்துள்ளன. அவற்றுள் ஒன்று இனியபழத்தை யுண்கிறது. மற்றது உண்ணாது பார்த்துக்கொண்டிருக்கிறது.

2. அதேமாத்தில் புருஷன் மோகத்தால் மயங்கி முழுகிச் சோகித்துக் கொண்டிருக்கிறான். எப்போதிவன் மகிழ்வுடையவனாய் வேறாகிய சிவபெருமானை மகிழ்வுடன் காண்கிறானோ? அவர் புகழைச் சோக நீங்கவடைகிறான்.

3. எப்போது பார்ப்பவன் பொன்வண்ணனாயும், கர்த்தாவாயும், ஈசனாயும் புருஷனாயும் தோற்றங்கட்கெல்லாம் காரணமாயுள்ளவனைக் காண்கிறானோ? அப்போது அவன் வித்துவானாய் புண்ணிய பாவத்தை யொழிந்து நிரஞ்சனனாய்ப் பரமசாமியத்தை யடைகிறான்.

4. பிராணன் சகல பூதங்களாலும் விளங்குகிறது. இதையறியும் வித்துவான் வேறொன்றைப் பேசவதில்லை, அவன் லீலை ஆத்மாவில், அவனிச்சை யாத்மாவில், பிரமஞானிகளுள் அவன் சிரேஷ்டன்.

5. ஆன்மாவானது நிலையான சத்தியத்தாலும், தபசாலும், நல்லறிவினாலும், பிரமசரியத்தாலும் அடையத் தக்கது. குற்றமற்ற யதிகள் யாரைக் காண்கிறார்களோ? அவர் சரீரத்திற்குள் ஒளிபொருந்தியவர்களாகவும், பரிசுத்தராகவு மிருக்கிறார்கள்.

6. சத்தியமே வெல்லும், பொய்யல்ல, சத்தியத்தினாலே தேவயானத்திற்கு மார்க்கம் வெளியாகிறது. இதனால் பெரியோர் விருப்பங்களையடைந்து சத்தியத்திற்குரிய சிரேஷ்ட பதவியையடைகிறார்கள்.

7. அது பெரிதாயும், திவ்வியமாயும், மனத்தாலுமெட்டொணாத உருவத்தினையுடைய தாயும், சூட்சுமாசூட்சமமாயும் பலவாகவும் விளங்குகிறது. இது வெகு தூரத்திலிருக்கிலும் தூரமற்றிருக்கிறது.

8. காண்பார்க்கு இவ்விடத்திலேயே குகையில் விளங்குகிறார், கண் வாக்கு இந்திரியங்கள் தபசு கர்மங்களால் கிரகிக்கப்படமாட்டார். ஞான சகாயத்தால் சித்த சுத்தியுடையவன் தியானத்தால் நிஷ்களமாக அவரைப் பார்க்கிறான்.
9. பரமாத்மர அணுவைப்போல வெகுசிறியர், மனத்தாலறி யத்தக்கவர், பிராணன் ஐந்து விதமாகப் பிரவேசித்திருக்கிறது, பிரஜைகளின் சித்தங்களெல்லாம் - பிராணன்களா லாக்கப்பட்டன. அவை சுத்தமானால் கடவுள் பலவகை விளங்குகிறார்.

10. பரிசுத்தன் விரும்பும் உலகங்களையும் விருப்பங்களையும் அடைவன், ஆகலின் செல்வம் விரும்புவோன் ஆத்மஞ்ஞனைப் பூசிப் பானாக.

முண்டகம் - 3 - கண்டம் - 2.

1. எதை யாதரவாக்கொண்டு சகல சுப்பிரமமாய்ப் பிரகாசிக்கிற பிரமத்தை யறிகிறாரோ? எவர்கள் புருஷனை யுபாசிக்கிறார்களோ அத்தீரர் ஆசை துறந்து ஜன்மத்தைத் தாண்டுகிறார்கள்.

2. விருப்பங்களை யெண்ணி விரும்புவோன், அவ்விருப்பங்களால் அவ்விடங்களிற் பிறக்கிறான். விருப்பற்றவனாயும், கிருதார்த்த னாயுமிருப்பவன் இம்மையிலேயே சகல விருப்பங்களையு மனுபவிக்கிறான்.

3. இவ்வாத்தமா சொற்களினாலும், புத்தியினாலும், கேள்வி களினாலும் விளங்குதலில்லை. எவர் விரும்புகின்றனரோ? அவருக்கே அவ்வாத்துமா தன் சொரூபத்தை விளங்கச்செய்கிறார்.

4. இவ்வாத்துமா பலவீனனாலும், சந்தேகத்தாலும், குறியற்ற தபசாலும்; அடையத்தக்கதன்று. உபாயத்தால் முயற்சிக்கின்ற வித்துவானிடத்தில் பிரமதருமமான ஆத்துமா செல்கின்றது.

5. இஃதடைந்த முனிவர்கள் ஞான திருப்தாளாய்த் தீரராயிருந்து வியாபகராயும் சர்வாத்மகராயுமுள்ளவரை யடைகிறார்கள்.

6. வேதாந்த ஞானத்தாற் றெளிந்து சந்நியாச யோகத்தால் மனசுத்தியடைந்த யதிகள் பிரமலோகத்திலே பரமாந்திய காலத்தில் பராமிருதராய் வீடுறுகின்றனர்.

7. பதினைந்துகலைகளும், அதனுடன் சேர்ந்து அந்தந்தப்பொறிகளும், அததின் அபிமான தேவதைகளிடஞ் சேர்ந்து, கர்மங்களும் ஞானமயமான ஆத்மாவும் நிர்விகாரபரதேவதயிலொன்றாகின்றது.

8. எங்கனம் ஓடுவனவாகிய நதிகள் சமுத்திரத்தில் சேர்ந்து பெயரும் வடிவுமொழிந்து மறைகின்றனவோ? அங்ஙனம் வித்துவானும் பெயர் வடிவினின்றும் நீங்கி வீடுற்றுப் பரத்திற்குப்பாமாயிருக்கும் திவ்விய புருஷரை யடைகின்றான்.
9. சண்டாளனாயினும் சிவவென்னு மொழியை சொல்லுவானாயின் அவனுடன் வசிக்க, அவனுடன் பேசுக, அவனுடனுண்ணுக. †

† இச்சுருதியை ஸ்ரீநீலகண்ட சிவாசாரியர் தமதுபாஷியத்தில் எடுத்தாண்டிருக்கின்றனர். இதன் உபப்பிருங்கணம் வாசிஷ்டலைங்கத்தில் உளது. எக்காலத்தில் எவரால் இது ஒழிக்கப்பட்டதோ தெரியவில்லை, கான்ம வாதியர் செய்திருப்பரெனச் சிலமேதாவியர் ஊகிக்கின்றனர். இங்ஙனம் பலசைவ பரமான சுலோகங்கள் பல உபநிவத்துக்களினின்றும் ஒழிந்தவைற்றை மற்றொருமுறை வெளிப்படுத்துவாம். இச்சுருதியின் கருத்தைத் திராவிடமா பாஷ்யகர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அடியில் வருமாறு அருளிச் செய்துள்ளார்.

சிவனெனு மொழியைக் கொடியசண்டாளன் செப்பிடினவனுடனுறைக
அவனொடுகலந்தி பேசுகவவனோ டருகிருந்துண்ணுக வென்னும்
உவமையில் சுருதிப்பொருடனை நம்பாவூம்ரோடுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தாலையனே கதிவேறெனக்கிலை கலைசையாண்டகையே.”

10. பிரமத்தையறிபவன் பிரமமேயாகிறான். அவன் குலத்தில் பிரமத்தை யறியாதவன் பிறக்கிறதில்லை, துக்கத்தையும் பாபத்தையும் தாண்டிக்குகையின் முடிகளினின்று நீங்கி அமிதர்னாகிறான்.

11. அவ்விஷயத்தில் செய்பவராயும் கேட்பவராயும் பிரமையில் லாதவராயும் அக்னி கோத்திரராயும் சிரத்தையுடன் ஓமம் செய்பவராயும், சிரோலிரத முறைப்படி செய்பவராயுமுள்ளவருக்கே இந்தப் பிரமவித்தையைச் சொல்லக்கடவன்.

12. ஆகலின் இந்த வுண்மையை முன்னம் அங்கிரச முனிக்குச் சொன்னார். இவ்விரதத்தை அனுஷ்டியாதவன் இதனைப் படிப்பானல்லன். பரம ரிஷிகட்கு நமஸ்காரம்.

மணவழகு.

சித்தாந்தம் – 1914 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment