Sunday, May 10, 2020



வேதமும் சிவாகமும்.

      நற்குஞ்சரக்கன்று நண்ணிற்கலைஞானங்,
      கற்குஞ்சரக்கன்று காண்.
    
உலகின் கட்டோன்றி நிகழும் பல்வகைச் சமய நூல்களுள் உண்மைப் பொருளையுள்ள வா றுணர்த்தும் நூல்யாதென்று ஆராயுங்கால், கண்ணிலார் பலர் குழீ இக் கொண்டு வேழநின்றுழித் தங்கரத்தாற்றடவி வந்துகூறம் இலக்கணமெல்லாம் கண்ணுள்ளானொருவன் கண்டுகூறும் இலக்கணமதனுள் ஒருபுடையமைந்து காணப்பட்டடங்குமாறு போல ஏனைச்சமய நூலாருந் தங்கடங்கள் சிற்அறிவிற்கு எட்டியயவாறே அவ்வந் நூல்களிற் கூறிய பொருள்கள்யாவும் முற்றுணர்வுடைய முதல்வனாற் செய்யப்பெற்ற அருமைபுடையனவாய (வேதம் ஆகமம்) என்னும் இரு நூல்களிலும் கூறும் பொருளியல்புகளின் ஏகதேசமாகக் காணப்பெற்று அவற்றுள் அடங்களின் இவ்விருவகை நூலே முழுமுதன்மை. நூலெனப்பெறு மென்க.
    
ஆகவே, சமுத்திரகலச நியாயம்பற்றிச் சிற்றறிவுள்ள ஆன்மாக்கள் முற்றுணர்வின்மையாற் றம்புலம்போயவாறு எடுத்துச் செய்த வழி நூல் - சார்பு நூல் - பூருவபக்க நூல் என்னும் இவையிற்றிற்கு முதனூல்களாகிய (வேதம் ஆகமம்) என்னும் இவ்விருநூல்களின் உண்மையும் அபேதமும், அறியாது உலோகாயதர், வைபாடிகர் மாத்தியமிகர், யோகசாரர், சௌத்திராந்திகர், ஆருகதர் என்னும் அறுவகைப் புறப்புறச்சமயிகளும் இவ்விரண்டனையும் நிந்திப்பர், தார்க்கீகர், மீமாஞ்சகர் மாயாவாதியர், சாங்கியர், பாதஞ்சலர், பாஞ்சராத்திரர் என்னும் புறச்சமயிகள் அறுவரும் இவ்விரு நூல்களில் ஆகமத்தைப் பிரமாணமாகக்கொள்ளாது நிந்தித்து (வேதம்) ஒன்றனையே பிரமாணமெனக்கொள்வர். அங்ஙனங்கொள்வாராயினும் தார்க்கிகர் வேதப்பொருளோடு முரணிப் பொருட்டன்மை கொண்டும் மீமாஞ்சகர் வேதத்துட் கருமகாண்டத்தையே கொண்டு, ஞான காண்டமாகிய உபநிடதங்களை நிந்தித்தும் ஏகான்மவாதிகளாகிய மாயாவாதியர் ஞான காண்டத்தையே ஒருவாறங்கீகரித்துக் கருமகாண்டத்தைக் கை விட்டும் சிவாகமத்தை நிந்தித்தும் ஞானகாண்டத்திற்கும் பூர்வாபாவிரோதமாக மாறுபட்ட பொருள் விரித்தும் நிற்பர். ஏனையசாங்கியர், பாதஞ்சலர், பாஞ்சராத்திரர் என்பாரும் அங்ஙனே வேதத்துள் தத்தமக்கியைந்தவாறே சிலபாகங்களை மாத்திரங்கொண்டு ஏனையவற்றை பொரீ இச்சிவாகமங்களையும் இகழ்ந்து ஒழிவார். எனவே இப்பன்னிருவருள் புறப்புறச்சமயிகளான மூன்னைய அறுவரும். வேதாகம நிந்தகரும், புறச்சமயிகளான பின்னைய அற வரும், வேதத்துள் ஒருபுடையையும் சிவாகமம் முழுவதையும் நிந்திப்பவரும் ஆயினர்.
     
அகப்புறச் சமயிகள் ஆகிய பாசுபதர், மாவிரதர், காபாலர், வாமர், வைரவர், யிக்கவாதசைவர் என்னும் அறுவரும், வேதத்துடன் சிவாகமத்தையும் பொதுப்பிரமாணமாகக்கொள்வார். ஆயினும், சிறப்புப் பிரமாணமாக மாயாருத்திரர், வித்தியாருத்திரர், காலருத்திரர், சித்தபுருடர், ஆதிபைரவர், மந்திரேசுரர் என்பவராற் செய்யப்பெற்ற பாசுபதம், மாவிரதம், காபாலம் முதலிய நூல்களைக் கோடலான், அவரும் அகப்புறமாயினர். இறுதியினின்ற அகச்சமயிகள் ஆகிய சங்கிராந்தவாதசைவர் பாடாணவாதவர், அவிகாரவாத சைவர் பரிணாமவாத சைவர், சுத்சைவர், பேதவாத சைவர் என்னும் அறுவரும் வேதாகமமென்னும் இரண்டனையும், சிறப்புப் பிரமாணமாக அங்கீகரித்தாராயினும், தன்னியல்பு பொது வியல்பு சிறிது வேறுபாடு உள்ளாராகலின், அவரும், சித்தாந்த உண்மை முற்றுங்காணாராயினர். இவ்வாறே யீண்டுரைக்கப் பெற்ற சமயிகள் யாவரும் வேதம் ஆகமம் என்னும் இரு நூலையும், அவற்றுள் ஒன்றனையும், ஒன்றுட் பல பகுதியையும் வெறுத்தும் அவற்றுண்மை முற்றுங்காணாது வாளா மயங்கி இடர்ப்பட்டு நிற்பர். இவரெல்லாம். இவ்வாறே இடர்ப்பட்டு நிற்பச் சுத்தாத்துவித சைவ சித்தாந்தி யொருவனே வேதசிவாகம மிரண்டனையும், சிறந்த பிரமாணமாகக்கொண்டுண்மை யுணர்ந்து இன்புற்ற வாழ்வனென்க.
    
இவ்விரு நால்களினு மடங்காத பொருளாக ஒன்றனை யெடுத்துக் கொண்டு தஞ்சுதந்தரமாக வேறொருவரான் இயற்றப்பெற்ற நூல் என்றும் இன்று. ஆகையால் வேதம் ஆகமம் என்பவற்றுள் எல்லாப் பொருள்களும் அடங்கியுள்ளனவாகும். இவையிரண்டும் ஒரே தனி முதல்வனால் அருளப்பெற்றன அதனால் இரண்டும் வேறாகா வென்று ஆன்றோர் கூறுவாராயினர். அவ்விறை முதற்பொருளாவான் இவ்வேதாகமம் இயற்றுதற் கேதுவென்னையோவெனிற் ஆன்மாக்களெல்லாந் தன்னையறிந்து வழிபாடியற்றி உய்திகூடுதற் பொருட்டாகக்கொண்ட பெருங்கருணைத் திறமே யாமென்றுணர்க. அங்ஙனமருளானேல் அவ்விறைமுதற் பெற்றியும் பிறவுந் தேறமாட்டாராய் ஆன்மாக்கள். உண்மையுணர்ந்து உய்திகூடுமாறுயாண்டைய தென்க. இதனை ''ஆரணமாக மங்களருளினா லுருவு கொண்டு. காரணனாளா னென்னிற் கதிப்பவரில்லை'' என்னுஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தத்தானுணர்க.
    
இனி அவ்விறைவன், வேதாகமங்களை எக்காலத்து எவ்வாறு தோற்றுவித்தருளினன் என்னிற் கூறுதும். மகாசங்கார முடிவின்கண் உலகங்களை மீளப்படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிப் பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கிய வழி வேதாகமங்கள் குடிலையினின்றும் நாதவடிவாயும் அதன்பின் விந்து வடிவாயும். அதன் பின்னக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறருக்கருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப் பிரமமனுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய வவயங்களாகச் சகள நிட்களத்திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று. தற்புருடம் அகோரம் வாமம் சத்தியோ ஜாதம் என்னும் நான்கு திருமுகங்களான் இருக்கு, எசுரு, சாமம், அதர்வணம் என்னும் நான்குவேதங்களைத் தோற்றுவித்து அவ்வேதங்களை அனந்ததேவர் வழியானே பிரமனுக்கருளிச்செய்து உச்சிமுகமாகிய ஈசானத் திருமுகத்தினின்றும் காமிகாதி வாதுளாந்தமாகவுள்ள இருபத்தெட்டாகமங்களையுந் தோற்றுவித்து, அச்சிவாகாங்களைப் பிரதி சங்கிதை முறைபானே, பிரணவர் முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மருமாகிய விருப்பத் தெண்மருக்குஞ் சிவபேதம் உருத்திரபேத மெனப்பகுத்து ஒரோ வொன்று, ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து பின்பு மகவுக முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேச ரெண்மரின் முதல்வராகிய அனந்த தேவருக்கருளிச் செய்தார் என்க இதுவே வேதசிவாகம வரலாறாம்.
    
பிரதிசங்கிதைமுறை ஒருவிஷயத்தை வேறு வேறு வகுத்துக் கூறதல் மகவுகமுறை வேறு வேறு வகுக்கப்பெற்ற பலவற்றைத் திரட்டிக் கூறுதல்.
    
இனி இவ்வாறாய் வேதம் “சுயம்பு'' என்றும் “அபௌர்ஷேய'' மென்றும் நூல்கள் கூறாநிற்க ஈண்டு சிவபெருமானாற் கூறப்பெற்றதென்பதென்னை யெனிற்கூறுதும், சுயம்புவான பரமசிவனாற் றோற்றுவிக்கப்பெற்ற காரியமாதல் பற்றியும் பசுக்களாகிய புருடராற் செய்யப்பெற்ற தன்றென்னுங் கருத்துப்பற்றியுமேயா மென்க. ஆதலின் அவ்வழக்குக்கொண்டு இறைவர் திருவாக்கன்றென்றல் பொருந்தாதென்க. இகனை “தொகுத்தவனரு மறையங்கமாகமம்''  என்னும் ஸ்ரீஞானசம்பந்தப் பெருமான்றிருவாய் மலர்ந்தருளிய திருவொற்றியூர்த் திருப்பதிகத்தானும் “வேத மோடாகம மெய்யா மிறைவனூல்''  என்னும் திருமூல நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருமந்திரத் திருமுறையானும் பிறவற்றானுமுணர்க.
    
இனி அட்டாத சவித்தையுள் சிவாகமம் அடங்காமை யென்னையோவெனில் அறியாது கூறினாய் என்னை பதினெண்வித்தைகளில் முதற்கண்ணதாகிய வேதம் பிரமகாண்டமும், பிரமஞானத்திற்கு நிமித்தமான கருமகாண்டமும் என்றிருபகுதித் தாதலால் சிவாகமம் பிரமகாண்டமா யடங்குமாதலானும் வேதசத்தத்தில் சிவாகமமும் அடங்கி நிற்குமாதலானுமென்க.
    
இனி வைதிகரிலொரு சாரார் இவ்வாறு பகுத்துணரும் மதுகையின்றிப் பதினெண்வித்தைகளிற் சிவாகமம் படிக்கப்பட்டிலவா மென்று கூறிப் பிணங்காநிற்பர்.
    
இனிவேதம் ஆகமம் என்னும் இருசொற்பொருட் பெற்றி சிறிதாராய்வாம்.
    
வேதம் என்னுஞ் சொல் அறிதற்கருவியெனப் பொருள்பட்டுச் சதுர்வேதங்களுக்கும் காரணவிடுகுறியாயும், சைவாகமங்களுக்குக் காரணக்குறியாயும் பொருந்தும்,'எனவே பதிபசுபாச மென்னும் முப்பொருள்களை அறிதற்கு கருவியென்பது கருத்து.
      
ஆகமம் என்னுஞ்சொல் (பரமசிவன் பானின். று) வந்தது என்னும் பொருட்டாய்ச் சைவாகமங்களுக்குக் காரண விடுகுறியாயும் சதுர்வேதங்களுக்குக் காரணக்குறியாயும் பொருந்தும்.

அன்றி ஆகமமென்ற சொல்லில், ஆ. என்பது, பாசம், எனவும், க. என்பது, பசுவெனவும், ம. என்பது, பதியெனவும் பொருள்படலால் திரிபதார்த்த விலக்கணத்தை புணர்த்து நூலென்றும் பொருந்தும், அன்றி, ஆ என்பது சிவஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது பலநாசமும் ஆதலால், ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம்பண்ணிச் சிவஞானத்தை உதிப்பித்து, மோக்ஷத்தைக் கொடுத்தல் பற்றி ஆகமம் எனப்பெயராயிற்று. என்று கூறுதலுமொன்று. முழுமுதற்பொருளாகிய சிவபரஞ்சுடராவார் உலகுய்யுமாறு தமதுபெருங்கருணையா லுபகரித் தருளிய வேத சிவாகமமென்னும் இவ்விரு நூல்களையுமே முழுமுதன்மை நூலாகக்கொண்டு சுத்தாத்துவிதச் சித்தாந்தச் செல்வர்கள் மகிழ்வர். இங்ஙனம் உணருந்திறமின்றி வேதமே பிரமாணமென்னும் வைதிகரிலொரு சாராரை மறுத்துச் சிவாத்துவித சைவாசாரியர்களான நீலகண்ட ஆசிரியர் அப்பயதீக்கிதர் முதலினோர் நீலகண்ட பாடியம் சிவாதித்தமணிதீபிகை சிவதத்துவ விவேக முதலியவற்றில் சிவாகமப் பிரமாணம் வலியுறுத்துரைத்திட்டார். சிவாகமம் ஒன்றுமே பிரமாணமென்னுஞ் சைவரிலொரு சாராரை மறுத்து வைதிக சைவசித்தாந்த ஆசிரியர்களான ஸ்ரீ அரதத்தாசாரியர் ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் முதலினோர் வேத சிவாகமமென்னும் இரண்டுமே பிரமாணமெனச் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், பவுட்கரவிருத்தி முதலிய நூட்களினன்கு வெள்ளிடை
மலைபோற்றெள்ளிதின்விளக்கி யிட்டனர், இவையிற்றை யெல்லாம் ஆங்காங்குக் கண்டுணர்க.
    
இனி அவ்விறைவன் இவ்வாறு இருவேறு வகையாகப் பிரித்து முதனூலியற்றியவாறென்னையோ வெனிற் கூறுதும்.

மந்தம், மந்ததரம், தீவிரம், என்னும் மூவகைப்பட்ட பக்குவமுடைய உலகினரைக் குறித்து வேதமும், அதிதீவிரபக்குவமுடைய சத்திநிபாதத்துத்து மரைக்குறித்துச் சிவாகமங்களையும் அதிகாரிபேதம் பற்றிக் கூறியதாமென்க. இனி மந்தம், மந்ததரம் தீவிரம் என்னும் முத்திறப்பட்ட பக்குவமுடையாராகிய உலகினருக்கு பகரித்தற்பொருட்டெழுந்தனவாகிய வேதம், பொது நூலென்றும், அதிதீவிரபக்குவமுடைய சத்தினிபாதச் செல்வராம் சிவஞானிகளுக்குப் பயனளித்தற்பொருட்டாக வெழுந்தனவாகிய சிவாகமங்கள், சிறப்பு நூலென்றும் பெயர்பெற்று விளங்குமென்க. இதனை “வேதமோடாகமம் மெய்யாமிறைவனூல், ஓதும்பொதுவுஞ்சிறப்பு மென்றுள்ளுக.'' என்னுந் திருமந்திர வேதத்தானும் ''உலகியல் வேதநூலொழுக்கமென்பது, நிலவுமெய்ந்நெறி சிவநெறியதென்பதும்'' என்னும் பெரியபுராணத்தானும் ''மறைகளாமம் பொதுச்சிறப்பென விறைவகுத்த'' என்னும் திருவிளையாடற்புராணத்தானும். "ஆரண நூல்பொதுச் சைவமருஞ் சிறப்பு நூலாம்” நீதியினாலுலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது என்னும், நம்சித்தாந்த குலதெய்வமாகிய, ஸ்ரீசகலாகம பண்டித சுவாமிகளின் திருவாக்கானும் உணர்க,
    
இனிபொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது நூலெனவும், சிறப்பு இயல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு நூ லெனவும் கூறப்பெறும், சிறப்பியல்புசகசமாய் உள்ளதாகலின் உண்மையெனவும்படும்,
     
பொதுவியல்பு அளவை முதத்தானும் இலக்கணமுகத்தானும் கூறப்பட்டுக்கேட்டல் சிந்தித்தல் - என்னும் இருதிறத்தான் உணரப்படும், சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன் முகத்தானும் கூறப்பட்டுக்கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்னும் நான்குதிறத்தால் உணரப்படும். பலபொருட்குப் பொதுவாகிய இலக்கணம் பொதுவியல்பு என்றும் ஒருபொருட்கே உரிய இலக்கணஞ் சிறப்பியல்பென்றும் அளவை நூலாற்கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்பு வேறு, தடத்தலக்கணம் சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக்கூறப்படும். பொது வியல்பு சிறப்பியல்பு வேறு எனத் தேர்ந்து உணர்ந்துகொள்க இவ்விருவே. று வகைக்குஞ் சொல்லொருமை மாத்திரையே பற்றி மயங்கற்க.

அல்லதூஉம், அதர்வசிகைமுதலிய உபநிடதங்களும் சிவாகமங்களும் கூறும் பொருளை போக்கும் வழிச்சூத்திரமும் பாடியமும் போலத்தூலாருந்ததி முறையாம், ஆதலின் வேதம் பொது நூலென்றும் சிவாகமம் சிறப்பு நூலென்றும் கூறுதலொன்று.

இனி எவ்வாற்றானும் பொது நூலெனப்பட்ட வேதத்திற்கூறுங் கருமகாண்டப்பொருட்கு இன்றியமை. பாது வேண்டப் பட்டெஞ்சி நின்றனவாகிய பொருள்களையும் வேதமுடியாகிய உபநிடதத்தின் சாரமாய் உள்ளபொருள்களையும் வேறு எடுத்துக்கொண்டு இனிது விளக்குதலின் சிறப்பு நூலாகிய சிவாகமம், சித்தாந்தமென்று கொள்ளப்படும். படவே வேதம் பூருவபக்கமெனப்படுமென்க. இதனை ''நீண்மறையினெழிபொருள் வேதாந்தத்தீதில் பொருள் கொண்டுரைக்கு நூல் சைவம் பிற நூல் திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்'' என்னும் ஸ்ரீ அருணந்தி சிவத்தினமுதவாக்கானுமுணர்க.
    
இனியிப்பொதுச் சிறப்பு நூல்கட்கு அதிகாரியாவார் யாவரெனிற் கூறுதும். பிராமணர் சத்திரியர் வைசியர் என்னும் மூவறில் முதல்வருணத்தார் வேதத்தை ஓதுதற்கும் ஓதுவிற்கும் இரண்டாம் வருணத்தாரவர் ஓதுதற்கும் மூன்றாம் வருணத்தாராவர் கேட்டற்கும் அதிகாரியாவார்.
    
சிவாகமம், அங்ஙனமின்றி அம்மூவருணத்தவரோடு சூத்திரரென்னும் நான்குவருணத்தவருள்ளும் சைவசம்ஸ்காரம் பெற்ற அதி தீவிரபக்குவமுடையவர்களே அதிகாரியாவாரென்க.
    
ஆகவே வேதசிவாகமம் மூன்று வருணத்தாருக்கும் நான்கு வருணத்தாருக்குப் உரிமையாதல் பெற்றாம்.

இனி வேதாகமம் என்னுமிரண்டனுள் வேதம் பக்குவாபக்குவநோக்கிப் பலதெய்வங்களைக் கூறுவது. சிவாகமம் சிவபரஞ்சுட ரொருவரையே எடுத்துக்கூறுவது.
    
வேதம் தருமார்த்தகாம மோக்ஷங்களைக்கூறுவது, சிவாகமம் மோக்ஷ மொன்றினையே கூறுவது.

வேதம் யாகாதிகாரியங்கள் எடுத்து விளக்குவது. ஆகமம் சரியையாதிசதுர் பாதங்களை எடுத்துக்கூறுவது. அவையாவன சரியாபாதம். கிரியா பாதம், யோ சுபா தம், ஞானபாதம், என்பனவாம் இவற்றுள், சரியாடாதத்துள் பிராயச்சித்த விதியும் பவித்திர விதியும் சிவலிங்கவிலக்கணமும் நந்திமுதலிய கணநாதரினிக்கண மும் செபமாலையோகபட்டந் தண்டங் கமண்டலமுதலியன எடுத்துக் கூறப்படும்.
    
கிரியாபாதத்துள் மந்திரங்களானது உத்தாரணம், சந்தியா வந்தனம் பூசைசெபம் ஓமம் சமயவிசேட நிருவாண அசாரியாபிடேகங்களும் புத்திமுத்திகளுக்குபாயமான தீக்கைகளும் கூறப்படும். யோகபாதத்துள் முப்பத்தாறு தத்துவங்களும் தத்துவேசுரரும் ஆன்மாவும் பரமசிவசத்தியும் சகத்திற்குக் காரணமான மாயைமாமாயைகளைக் காணும் வல்லமையும், அணிமாதி சித்திகளுண்டா முறைமையும் இயம நியம ஆதன பிராணாயாம் பிரத்தியாகாரதாரணத்தியான சமாதிகளினுடைய முறைமையும் மூலாதாரமாகிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும்.

ஞானபாதத்துட் பரமசிவனுடைய சொரூபமும். விஞ்ஞானகலர், பிரளயாகலர் சகலர் என்னும் ஆன்மாக்களின் சொரூபமும், ஆணவம் கன்மம், மாயேயம் வைந்தவம் திரோதானசத்தி என்னும் பாசங்களின் சொரூபமும், சிவதத்துவமுதற் பிரகிருதி தத்துவம்வரை முப்பத்தாறு தத்துவங்களினது உற்பத்திமுறை இவையான்மாக்களுக்குப் போகம்புசிக்கைக்குக் கருவியாமுறை புவனங்கள் புவனேசுவரர் சொரூபங்களும் அதமமத்திம மகாப்பிரளயங்களின் சொரூபங்களும் அதமப்பிரளயங்களின் பின்னர்ச் சிருட்டியாதி முறைமையும் பிறவுங்கூறப்படும், வேதம் சுவர்க்காதிலோகங்களைக் கொடுதற்குரியது. ஆகமம் சாலோக சாரூப சாமீப சாயுச்சியமாதிகளைத் தரவல்லது.
    
இனி இதுகாறுங் கூறிப்போந்த இவ்வுபந்நியாசத்தாற் பெறப்பட்டன வென்னையோ வெனிற் கூறுதும்.
      
அநாதி மலமுத்த பரமபதியாகிய சிவபாஞ்சுடரே ஆன்மாக் கண்மீது வைத்த பெருங்கருணையால் வேதாகமங்களை அருளிச் செய்தாரென்பதூஉம், அங்ஙனமருளானே யான்மாக்களுய்தி கூறுமாறிஃதென்பதூ உம், ஆதலின் இவையே முழுமுதன்மை நூல் என்பதூஉம், மற்றவையெல்லாம் இவையிற்றினின்று மெடுத்து எனையவான்ம வர்த்தகத்தால் ஆக்கப்பட்டதென்பதூஉம் இவைகளுள் அடங்காதபொருளாக யாண்டுமென்னூல்களினு மின்றென்பதூஉம், ஒரே பரம்பொருளா லாக்கப்பெற்ற இவ்விரு நூல்களும் பிரமாணமே யாமென்பதூஉம், அதிகாரிபேதம்பற்றி இவை இரு வேறுவகையாக வியற்றப்பெற்ற தென்பதூஉம், அவ்வாறே முத்திறப்பட்ட உலகினருக்குறித்தாய் வேதம் பொது நூலென்பதூஉம், அதிதீவரதரா பக்குவமுடையாருக்கே உரித்தாகியவாகமம் சிறப்பு நூலென்பதூம், வேதம் மூன்றுவருணத்தார்க் குரித்தென்பதூஉம், ஆகமம் நான்குவருணத்தாருக்கு முரித்தென்பதூஉம், வேதம், கருமகாண்டம், ஞான காண்ட மென்பவற்றுண் முந்தியதை விரிவாயெடுத்துக் கூறவந்ததென்பதூஉம் ஆகமம் பிந்தியதை மாத்திரமே விரிவாயெடுத்துரைத்த தென்பதூஉம், இவற்றானும் பிறவாற்றானும், வேதம் பூருவமென்பதூஉம், ஆகமம் சித்தாந்தமென்பதூம், வேதா நுட்டான முடையார்க்குபயன் சுவர்க்காதி போகமென்பதூஉம், ஆகமா நுட்டான முடையாருக்குப் பரமன்பரமுத்தியென்பதூ உம் பிறவுமாம். இவ்வுண்மையை நீலகண்ட பாடியம் சிவாதித்த மணிதீபிகை, சிவதத்துவவிவேகம் சதுர்வேத தாற்பரியசங்கிரகம், பவுட்கரவிருத்தி முதலியவடமொழி நூல்களினும், தேவாரம் திருமந்திரம் பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் சிவஞானசித்தியார், திராவிடமாபாடியம் முதலிய செந்தமிழ்த் தெய்வத்திருவணூல்களினும் சிவஞான சித்தியாருக்கு மறைஞான சம்பந்தர் முதலாகவுள்ள ஆசிரியர் உரைத்த உரைகளினும் நன்குகாண்க.

அவற்றுள் ஈண்டு எடுத்துக்கொள்ளப்பெற்றப் பிரமாணச் செய்யுட்களை எடுத்துக்கூறி இவ்வுபந்நியாசத்தை முடிப்பாம்.

"வகுத்தவனருமறை யங்கமாம், ஸ்ரீஞான சம்பந்தப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருவொற்றியூர்த் தேவாரம்.

      வேதமோடாகம மெய்யா மிறைவனூல்
ஒதும் பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக
      நாதனுரை யிவை நாடிலிரண்டந்தம்
பேதமதென்பர் பெரியோர்க் கபேதமே.


ஸ்ரீ திருமூலநாயனார் திருமந்திரம்

      உலகியல்வேதநூ லொழுக்கமென்பதும்
நிலவுமெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்

ஸ்ரீ சேக்கிழார் பெருமான் பெரியபுராணம்
திருஞான சம்பந்தமூர்த்தி புராணம்.

“மறைகளாகமம் பொதுச்சிறப்பென விறைவகுத்த
ஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணம் வேத நூல்

சைவநூலென் றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள், ஆதி நூலநாதிய மலன்றரு நூலிரண்டு மாரண நூல் பொதுசைவமருஞ் சிறப்பு நூலா நீதியினார் லுலகர்க்குஞ் சத்திரிபாதர்க்கு நிகழ்த்தியது நீண்மறையினொழிதி பொருள் வேதாந்தத் தீதில்பொருள் கொண் டுரைக்கு நூல் சைவந்திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்தமாகும், சிவஞானசித்தியார்.

                       தெ. பெரியசாமி பிள்ளை.

சித்தாந்தம் – 1913 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment