Sunday, May 10, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.

மூர்த்திதலம் தீர்த்தமும் குருலிங்க சங்கமும்.

ஸ்ரீகயிலையின் கண் மாதாளும் பாகத்தனாய் வீற்றிருக்கும் இறைவன் செய்யும் செயல்கள் யாவையெனின் ஆன்மாக்களும் பந்தசாதனமும், பந்த நிவிர்த்தியும் உண்டாதற்கும், முத்திசாதனமும் முத்திப்பேறும் அடைதற் குமான செயல்கள் எவையோ அவையேயாம். இச்செயல்களுள் நிக்கிர கமுமுள்ளன.

பந்தசாதனமாவது - சுராசுரர்களுக்கும் ஏனையோர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு போகங்களைக் கொடுத்தல். பந்தநிவிர்த்தியாவது - அசுரர்களுக்குப் போகத்தைக் கொடுத்து அவர்களால் தேவர்களுடைய போகானுபவங்களுக்கு இடையூற்றை விளைவித்தல். இவற்றுள் - சுராசுரர்கள் செய்யும் தவத்துக்கீடாய் வேற்றுமையின்றி வேண்டிய வேண்டியாங்கு கொடுத்தல் - அனுக்ரகம். அசுரர்களைச் சங்கரித்தலும், தேவர்களுக்கு இடையூற்றை விளைவித்தலும் நிக்கிரகம். ஏனைய ஆன்மாக்களுக்கும் இம்முறையானே நிக்கிரகா நிக்கிரகமுமாமென வறிக.,

முத்திசாதனமாவது - நித்தியா நித்திய வஸ்து விவேகம், இகமுத் திரார்த்த பலபோகவிராகம், சமாதிஷட்க சம்பத்து, முமூக்ஷ த்வம். என்'னும் நான்கு சாதனங்களும் வரப்பெற்றுப் பந்தப்பற்றற்று. முத்திபற்றுக் குப் பற்றவேண்டிய பற்றற்றான் பற்றினைப் பற்றுவதற்கான சரியைகிரியா யோகமென்னும் மூன்றுமேயாம். இச்சரியையாதிமூன்றும் கைகூடுவதற்கு மூர்த்தி தலம் தீர்த்தமென்னும் மூவடிவாயிருந்து வழிபாடுகளை யேற்று அவ்வழிபாட்டான் பந்தநிவிர்த்தி யுண்டாக்குவதே நிக்கிரம்.

முத்திப்பேறாவது - சரியையாதிமூன்றால் ஞானம் எய்தப்பெறுதலும், அதுவன்றி அவாந்தரப் பயனாகிய சாலோகாதிபதங்களும், ஞானத்தால் எய்தற்பால தாகிய சிவானுபவமேயாம். பதமுத்தியும் பரமுத்தியாகிய சிவானுபவமும் அடைதற்கான குருலிங்கசங்கம வடிவமாயிருப்பதே அநுக்கிரகம்.

பந்தசாதனத்துக்கும் பந்த நிவர்த்திக்கும் உரியார் பெத்தான் மாக்களெனவும், முத்திசாதனத்துக்கும் முத்திப்பேறுக்கும் உரியார் முத்தான் மாக்களெனவும் சொல்லப்படும்.

இதனால் உமாநாதனாகிய இறைவன் பெத்த திசையில் செய்யும் நிக்கிரகம் இத்தன்மைத் தென்பதும், முத்தி திசையில்செய்யும் நிக்கிரகாநிக்ரகம் இத்தன்மைத் தென்பதும், அவ்வத்திசையுடையாரே பெத்தான் மாக்கள் முத்தான் மாக்களென வழங்கப் படுவரென்பதும் முத்திசாதனத்துக்கு மூர்த்தி தலம் தீர்த்தம் என்னு மூன்றும் இன்றியமையாதெனவும், முத்திப் பேறுக்கு குருலிங்கசங்கமமென்னு மூன்றும் இன்றியமையாதெனவும் வெளிப்பட்டது.

இனி, முத்தான் மாக்களால் விருப்பப்படும் ஞானத்திற்குச்சாதன மரய் நிற்கும் மூர்த்தி தலம் தீர்த்தமென்னு மூன்றின் வழிபாடே பெத்தான் மாக் களால் விரும்பப்படும் போகத்துக்கும் இன்றியமையாததாகும். ஞானத் துக்குச் சாதன மாயுள்ளது போகத்துக்குச் சாதன மாதல் எங்ஙனமெனின்! போகமோகப் பிரதாயகனாயுள்ளவன் “எல்லாருஞ் சிவனென்ன நின்றாய் போற்றி''  என்றபடி சிவனொருவனே யாதல்போல் சாதனமும் ஒன்றே யாயிற்று. கடவுளர் பலரிருக்கச் சிவனொருவனே போகமோக்ஷப்பிரதாய கனாதல் யாங்ஙனமெனின்!

“போகியாயிருந்து யிர்க்குப்போகத்தைப் புரித லோரார் –
யோகியா யோகமுத்தி யுதவு தலதுவு மோரார் –
வேகியானாற் போற்செய்த வினையினை யீட்டலோரார்
யூகியாமூடரெல்லாம் உம்பரி லொருவரென்பர்.

இந்தப் பிரமாணத்தால் சிவனொருவனே யென்றலமையும். வேறு சிலரைக் கூறுவது அறிவின் விசாலமற்றவர்கள் கூற்றாமென வொழுக.

இவ்வுண்மையைக் காட்சிப் பிரமாணத்தானும் அறியவே மூர்த்தி தலம் தீர்த்தமென்னு மூன்றும் போககாமியர்களாலும் மோக்ஷகாமிகளாலும் வழிபடப்பட்டு அவ்வவர் பெயர்களால் வழங்கிவருகின்றன. இக்காட்சிப் பிரமாணத்தான் கருதக்கிடக்கின்றதொன்று அது கருத்து செயல் என இருவகை. பெத்தான் மாக்கள் போகத்தைக் கருதிமூர்த்திமுதலிய மூன்றிடத்தும் செய்யும் வழிபாட்டைக் காமியமாகச் செய்கின்றபடியால் அது போகசாதன மாயும், முத்தான்மாக்கள் மோக்ஷைத்தைக்கருதி அம்மூவிடத்துச் செய்யும் வழிபாட்டை நிஷ்காமியமாகச் செய்கின்றபடியால் அது முத்திசாதளமாயும் ஆயிற்று. ஆகவே, செயல்ஒன் று கருத்து இரண்டு. இனி முத்திப்பேற்றில் கூறிய குருலிங்க சங்கமமென்றது என்னை! இதற்கும் மூர்த்தி தலம் தீர்த்தமென்ற அதற்குமுள்ள வேறுபாடென்னை என்றாராயின், இவ்விரண்டிடத்தும் வழிபட்டு அன்பு பூண்டுள்ளோர் சங்கமர். சிவலிங்கந்தான் மூர்த்தி அம்மூர்த்தி எழுந்தருளியிருக்குமிடமே தலம், நானாதி நித்தியகர்மங்களுக்கு உரித்தாய் சலரூபமாயிருப்பது தீர்த்தம்.

க்ஷேத்திரவாசத்தால் ஆகாமிய நிவிர்த்தியும், தீர்த்தபரிசத்தால் கன்ம நிவிர்த்தியும், மூர்த்திசேவையால் சஞ்சி தநிவிர்த்தியும் உண்டாம். குரு சேவையால் ஞானப்பிரகாசமும், அந்த ஞானப்பிரகாசத்தைக் கொண்டு செய்யும் சிவலிங்கார்ச்சனையால் ஆன்மப்பிரகாசமும், அந்த ஆன்மப்பிரகா சத்தால் அன்பரையறிந்து அவரைவழிபடுவதால் சிவானந்தவிளைவும் உண்டாம்.

மூர்த்தி முதலிய மூன்றின் விசேடம் பெத்தான் மாக்களுக்கு முத்தி சாதனம் வரும் பரிபாகத்தை யுண்டுபண்ணும் குருலிங்க சங்கம மூன்றும் முத்தான் மாக்களை முத்திப்பே றெய்துவிக்கும். இதுவே இரண்டிற்கு முள்ள வேற்றுமை.

இதனால் முத்திக்குச் சாதனமாயுள்ள மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவைகளே போகத்துக்கும் சாதன மாகுமென்பதும், அதற்குச் சான்று மூர்த்திதலம் தீர்த்தமென்னும் அம்மூன்றும் பெத்தான் மாக்களாலும் முத். தான்மாக்களாலும் வழிபடப்பட்டு அவ்வவர்பெயர் கொண்டிருப்பதேபிரத் தியக்ஷம் பிரமாணம் என்றும், சாதன மாயிருக்கும் ஒரு செயல் போகம் ஞானம் என்னும் இரண்டையுங் கொடுத்தல் கருத்துவகையா லென்பதும், அக்கருத்து காமியம் நிஷ்காமியமென்பதும், கருத்துவகையான் இருவகைப்பட்ட பிரயோசனத்தை ஒருசெயலே கொடுப்பது சிவன்போல் என்பதும் சிவனென்னும் ஒருகருத்தாவே போகமோக்ஷங்களைக் கொடுக்கும் சுதந்தரஆற்றலுடைய னென்பதும், ஏனையகடவுளர் போகமோக்ஷங்களைச் சுதந்தரமாய்க் கொடுக்கும் ஆற்றலுடை யரன்றென்பதும், பெத்தான்மாக்கள் முத்தான்மாக்களாகும் பரிபாகத்தை வரச்செய்தல் மூர்த்தி தலம் தீர்த்தங்களெ ன்பதும், முத்தான்மாக்களாய் முத்திசாதனங்கைவந்த பின்னர் அவர்களை முத்திப்பேறெய்வித்தல் ஞானப்பிரகாசமும், ஆன்மப்பிரகாசமும், சிவானந்த விளைவுமேயாகலான் அவையுண்டாம் வண்ணம் செய்தல் குரு உபதேசமும் சிவலிங்கார்ச்சனையும் அன்பர்வழிபாடும் என்பதும் விளக்கியவாறு காண்க.

இனி மூர்த்தி தலம் தீர்த்தம் என்பதும், குருலிங்கசங்கம மென்பதும் தனித்தனி விசேட முடைத்தோ, ஒன்றினால் ஒன்று விசேடமுடைத்தோ என்றாராயின் மூர்த்தியினாலேயே தலத்துக்கும் தீர்த்தத்துக்கு விசேடமும், இலிங்கத்தினாலேயே குருவுக்கும் சங்கமத்துக்கும் விசேடமும் உண்டாம். எங்ஙனமெனின் இது அரசன் மாளிகை என்று ஒன்றைச்சுட்டிச் சொல்லுங்கால் அரசனால் மாளிகைக்குச் சிறப்போ மாளிகையினால் அரசனுக்குச் சிறப்போ என்னுமிடத்து அரசனாலென்பதே தேற்றம் அதுபோலென்க. தீர்த்தவிசேடமும் அப்படியே.

மூர்த்தி என்பதும் இலிங்கம் என்பதும் ஒன்றே. ஒன்றேயாயினும் மூர்த்தி என்னுங்கால் வடிவத்தையும், இலிங்கம் என்னுங்கால் ஓர் அடையா ளத்தையுங் குறிப்பதாகும். ஆகவே இலிங்கவடிவத்தினிடத்தில் ஓங் கொளியாய் அருண்ஞான சொரூமாயிருக்கும்.
கா. ஆலாலசுந்தரம் பிள்ளை.

சித்தாந்தம் – 1916 ௵ - மே ௴


No comments:

Post a Comment