Sunday, May 10, 2020



வைப்புத் தலங்கள்

[தி. கி. நாராயணசாமி நாயுடு]

நடை முறையில் தேவாரப் பதிகமுள்ள ஊர்களைப் பாடல் பெற்றதலம் என்றும், பதிகம் பெற்றோ, பெறாமலோ இன்று பதிகமின்றித் தேவாரப் பாசுரங்களில் காணப்பெறும் திருப்பதிகளை வைப்புத்தலம் என்றும் கூறுவது மரபு.
    
வைப்புத் தலங்களில் பல இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இவையாவையென அறிய முதன் முதல் தேவாரப் பதிப்புக்களில் அச்சிட்ட வைப்புத் தலப்பட்டியல்களே அடிகோலின. வைப்புத் தலங்கள் தொகுத்துக்கூறும் தனிப் பாடல்கள் (7) தனியே வழங்கி வருகிறது. அஃது ஆய்வின்றி வெளிவந்தது.
    
முதன் முதல் வைப்புத் தலப்பட்டியலுடன் வெளிவந்த தேவாரப் பதிப்பு, இராமசாமிப் பிள்ளை (ஞான சம்பந்தம் பிள்ளை) தலைமுறைப் பதிப்பாகும். இது ஊ, புஷ்பரதச் செட்டி யாரது கலா ரத்நாகர அச்சுக்கூடத்தில் 1881 - ல் அச்சிடப் பட்டது. அதில் 249 வைப்பு ஊர்கள் உள்ளன. இப்பட்டியலில் பேறனூர் இருமுறை பிழையாக அச்சிடப்பட்டுள்ளது, இப்பட்டியல் அபிதான சிந்தாமணியில் 1934 - ல் அப்படியே வெளிவந்தது. இதனை அடுத்துக் காணியம்பாக்கம் முரு. சண்முக முதலியாரது ரிப்பன் பிரஸ் (1898) தலமுறைப் பதிப்பு. இதிலும் அப்பட்டியல் அப்படியே உள்ளது. வைப்புத்தலப்பட்டியல் இல்லாத தலமுறைப் பதிப்புகளைச் செந்தில் வேலு முதலியார் 1893 - லும், சுவாமிநாத பண்டிதர் 1911 - லும் வெளியிட்டார்கள். பங்காளம் அப்புப் பிள்ளை 1907 - லும் 1916 - லும் இருமுறை சென்னை திராவிட புத்தகடிபோ மூலம் வெளியிட்டார்கள். இப்பதிப்புகளில் கண்ட வைப்புத் தலப்பட்டியல்களில் மேற்கண்ட பட்டியலை அகரவரிசைப்படுத்திப் பேறனூர் இருமுறை அச்சிட்டதைக் களைந்து 248 ஊர்களாக வகுத்தார்கள். வைப்புத் தலப்பட்டியல் இல்லாத பண்முறைப் பதிப்புகள் பல வெளிவந்தன. அவை வருமாறு :
    
1. காஞ்சீபுரம் வித்வான் சபாபதி முதலியார் பார்வையில் திருமயிலை சுப்புராய ஞானியார் பகுதி பகுதிகளாக வெளிப்பட்டவை சம்பந்தர்: 1863, 1877 அப்பர்: 1866 சுந்தரர்: 1875,  

இவற்றை அடுத்தது புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் மாணவர், திருமயிலை வித்வான் சண்முகம் பிள்ளை பார்வையிட்ட பிருங்கிமாநகரம் வே. நமசிவாய முதலியார் (1917) பதிப்பு. கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் பார்வையிட்ட கழகப் பதிப்பு 1927 - 1929 - ல் வெளிவந்தன. சமாஜம் 1929 - 31 - ல் வெளியிட்டது. திருப்பனந்தாள் மடத்துப் பதிப்பு 1949 - 50 - ல் ஆசிரியர் முறையில் தனித் தனியே தலமுறையில் வெளிவந்தன. மேலே காட்டிய பதிப்புகளில் கண்ட வைப்புத் தலப்பட்டியல்களைக் காண்க.

வைப்புத் தலங்கள் முதலில் வெளியான பட்டியல்படி

1
திங்களூர்
39
தேரூர்
2
நங்களூர்
40
பேரூர்
3
தங்களூர்
41
மாவூர்
4
எங்களூர்   
42
பிடவூர்
5
பாசனூர்
43
கோவந்தபுத்தூர்
6
நாசனூர்
44
தேனூர்
7
ஈசனூர்
45
ஆமாவூர்
8
தேசனூர்
46
அளப்பூர்
9
கூறனூர்
47
ஊற்றத்தூர்
10
னூர்
48
மாற்றூர்
11
தேனூர்
49
சேற்றூர்
12
பேனூர்
50
நல்லாற்றூர்
13
காட்டூர்
51
ஏமப்பேறூர்
14
மாட்டூர்
52
குன்றியூர்
15
பூழியூர்
53
செங்குன்றூர்
16
ஆழியூர்
54
வெற்றியூர்
17
வேலனூர்
55
மூவலூர்
18
மூலனூர்
56
கருப்பூர்
19
நாலனூர்
57
தேவனூர்
20
வேங்கூர்
58
ஏமநல்லூர்
21
நாங்கூர்
59
பெருமூர்
22
பொன்னூர்
60
பேராவூர்
23
தென்னூர்
61
வாதவூர்
24
தாழையூர்
62
வழுவூர்
25
கூழையூர்
63
நியம நல்லூர்
26
ஏழூர்
64
பொய்கை நல்லூர்
27
தோழூர்
65
வடபேறூர்
28
விடங்களூர்
66
கொடுங்கோளூர்
29
கடங்களூர்
67
தகட்டூர்
30
முந்தையூர்
68
துடையூர்
31
பந்தையூர்
69
தக்களூர்
32
மறையனூர்
70
முழையூர்
33
நிறையனூர்
71
வேலூர்
34
பிறையனூர்
72
விளத்தூர்
35
இறையனூர்
73
துவையூர்
36
முதல்வனூர்
74
நாவலூர்
37
நம்பனூர்
75
தஞ்சை எழுமூர்
38
பாய்ஞலூர்
76
கூந்தலூர்
77
கச்சையூர்
117
விவீச்சுரம்
78
பனங்காட்டூர்
118
ஏயீச்சுரம்
79
கூரூர்
119
அக்கீச்சுரம்
80
போற்றூர்
120
குக்குடேச்சுரம்
81
காற்றூர்
121
நாகளேச்சுரம்
82
கறையூர்
122
சோமேசம்
83
பாட்டூர்
123
குருந்தங்குடி
84
மூதூர்
124
மாணிகுடி
85
பேனூர்
125
விடைவாய்க்குடி
86
அரண நல்லூர்
126
கருந்திட்டைக்குடி
87
கொடுங்கோவலூர்
127
கடையக்குடி
88
குழையூர்
128
செம்பங்குடி
89
பொய்கை
129
புற்குடி
90
நெற்குன்றம்
130
மத்தங்குடி
91
நற்குன்றம்
131
குத்தங்குடி
92
திருமலை
132
சாலைக்குடி
93
பொதியின் மலை
133
தனிச்சாத்தங்குடி
94
மகா மேருமலை
134
புதுக்குடி
95
உதயமலை
135
தென்களக்குடி
96
அத்தமயனமலை
136
நல்லக்குடி
97
மகேந்திரமலை
137
கிள்ளிக்குடி
98
ஏமகூட மலை
138
திருவண்குடி
99
கந்தமாதனமலை
139
மாகுடி
100
விந்தமாமலை
140
இடைப்பள்ளி
101
சைய மலை
141
கொல்லியறைப்பள்ளி
102
நீலமலை
142
பரப்பள்ளி
103
கொல்லிமலை
143
பொருப்பள்ளி
104
மந்தாரம்
144
தவப்பள்ளி
105
இராப்பட்டீச்சுரம்
145
சிவப்பள்ளி
106
மயிண்டீச்சுரம்
146
அறப்பள்ளி
107
திண்டீச்சுரம்
147
சிறப்பள்ளி
108
வெகுளீச்சுரம்
148
நெடுவாயில்
109
மாகாளேச்சுரம்
149
நெய்தல்வாயில்
110
அயனீச்சுரம்
150
குணவாயில்
111
அத்தீச்சுரம்
151
அண்ணல்வாயில்
112
ஆடகேச்சுரம்
152
ஞாழல்வாயில்
113
அகத்தீச்சுரம்
153
இடைக்குளம்
114
நந்திகேச்சுரம்
154
தஞ்சைத்தளிக்குளம்
115
தேவீச்சுரம்
155
பாற்குளம்
116
வேதீச்சுரம்
156
திருக்குளம்
157
விளைக்குளம்
197
இறையான் சேரி
158
கஞ்சாறு
198
வாரணாசி
159
தெள்ளாறு
199
அசோகந்தி
160
வெள்ளாறு
200
தண்டந்தோட்டம்
161
நாலாறு
201
தண்டங்குறை
162
பழையாறு
202
சடைமுடி
163
பூந்துறை
203
அரிச்சந்திரம்
164
தவத்துறை
204
புலிவலம்
165
கோடுக்காடு
205
மாநதி
166
பனங்காடு
206
குமரி
167
நிறைக்காடு
207
சூலமங்கை
168
மிறைக்காடு
208
புரிசை
169
இறைக்காடு
209
சீக்காலி
170
தண்டலையாலங்காடு
210
திருவேட்டி
171
ஞாழற்கோயில்
211
மணிமுத்தம்
172
மணிக்கோயில்
212
கச்சிமயானம்
173
கச்சிப்பலதளி
213
விளத்தொட்டி
174
குரக்குத்தளி
214
உருத்திரகோடி
175
ஆறைமேற்றளி
215
பாவநாசம்
176
மாதானம்
216
கொண்டல்
177
இடைத்தானம்
217
கண்ணை
178
நாற்றானம்
218
காறை
179
தஞ்சாக்கை
219
வளவி
180
பஞ்சாக்கை
220
நல்லாளை
181
குருக்கேத்திரம்
221
திரிபுராந்தகம்
182
விராடபுரம்
222
கோட்டுக்கா
183
மாநிருபம்
223
மாகோணம்
184
சித்தவடம்
224
சுழியல்
185
கொங்கணம்
225
காவம்
186
காளிங்கம்
226
வரந்தை
187
உஞ்சேனைமாகாளம்
227
எச்சில் இளமர்
188
இடவை
228
உண்ணீர்
189
பிரம்பில்
229
கோத்திட்டை
190
மணற்கால்
230
கரபுரம்
191
கருமாரி
231
கீழையில்
192
களப்பாழ்
232
கீழையம்
193
காம்பீலி
233
திருஆதிரையான் பட்டினம்
194
நாட்டுத்தஞ்சை
234
கீழைவழி
195
தஞ்சை
235
தேவன்குடி
196
காரிகரை
236
கொடுமுடி
237
தென்கோடி
244
மாகாளம்
238
கொங்கு
245
பெருந்துறை
239
கொழுநல்
246
வடமாகறல்
240
பட்டி
247
படம்பக்கம்
241
கருகற்குரல்
248
அங்கணம்
242
பருத்தி நியமம்
249
ஆறை
243
நல்லேமம்


குறிப்பு: - பேறனூர் 12, 85 எண்ணுடையதாக இருமுறை வருவது காண்க.

வைப்புத்தலங்கள் - அகர நிரலில்

1
அகத்தீச்சுரம்
29
உதயமலை
2
அக்கீச்சுரம்
30
உருத்திரகோடி
3
அங்கணம்
31
ஊற்றத்தூர்
4
அசோகந்தி
32
எங்களூர்
5
அண்ணல்வாயில்
33
எச்சில் இளமர்
6
அத்தமயன மலை
34
ஏமகூடமலை
7
அத்தீச்சுரம்
35
ஏமநல்லூர்
8
அயனீச்சுரம்
36
ஏமப்பேரூர்
9
அரண நல்லூர்
37
ஏயீச்சுரம்
10
அரிச்சந்திரம்
38
ஏழுர்
11
அளப்பூர்
39
ஏவனூர்
12
அறப்பள்ளி
40
கச்சிப்பலதளி
13
ஆடகேச்சுரம்
41
கச்சிமயானம்
14
ஆமாவூர்
42
கச்சையூர்
15
ஆழியூர்
43
கஞ்சாறு
16
ஆறை
44
கடங்களூர்
17
ஆறைமேற்றளி
45
கடையக்குடி
18
இடவை
46
கண்ணை
19
இடைக்குளம்
47
கந்தமாதன மலை
20
இடைத்தானம்
48
கரபுரம்
21
இடைப்பள்ளி
49
கருங்கற்குரல்
22
இராப்பட்டீச்சுரம்
50
கருந்திட்டைக்குடி
23
இறைக்காடு
51
கருப்பூர்
24
இறையான் சேரி
52
கருமாரி
25
இறைவனூர்
53
களப்பாழ்
26
ஈசனூர்
54
கறையூர்
27
உஞ்சேனைமாகாளம்
55
காட்டூர்
28
உண்ணீர்
56
காம்பீலி
57
காரிகரை
97
சீக்காலி
58
காவம்
98
சுரியல்
59
காளிங்கம்
99
சூலமங்கை
60
காறை
100
செங்குன்றூர்
61
காற்றூர்
101
செம்பங்குடி
62
கிழையம்
102
சேற்றூர்
63
கிள்ளிகுடி
103
சைய மலை
64
கீழையில்
104
சோமேசம்
65
கீழைவழி
105
ஞாழல்வாயில்
66
குக்குடேச்சுரம்
106
ஞாழற்கோயில்
67
குணவாயில்
107
தகட்டூர்
68
குத்தங்குடி
108
தக்களூர்
69
குமரி
109
தங்களூர்
70
குரக்குத்தளி
110
தஞ்சாக்கை
71
குருக்கேத்திரம்
111
தஞ்சை
72
குருந்தங்குடி
112
தஞ்சைத்தளிக்குளம்
73
குழையூர்
113
தஞ்சை எழுமூர்
74
குன்றியூர்
114
தண்டங்குறை
75
கூந்தலூர்
115
தண்டந்தோட்டம்
76
கூரூர்
116
தண்டலையாலங்காடு
77
கூழையூர்
117
தவத்துறை
78
கூறனூர்
118
தவப்பள்ளி
79
கொங்கணம்
119
தனிச்சாத்தங்குடி
80
கொங்கு
120
தாழையூர்
81
கொடுங்கோவலூர்
121
திங்களூர்
82
கொடுங்கோளூர்
122
திண்டீச்சுரம்
83
கொடுமுடி
123
திரிபுராந்தகம்
84
கொண்டல்
124
திருக்குளம்
85
கொல்லிமலை
125
திருமலை
86
கொல்லி அறைப்பள்ளி
126
திருவண்குடி
87
கொழுநல்
127
திருவாதிரையான் பட்டினம் 
88
கோட்டுக்கா
128
திருவேட்டி
89
கோட்டுக்காடு
129
துடையூர்
90
கோத்திட்டை
130
துவையூர்
91
கோவந்தபுத்தூர்
131
தெள்ளாறு
92
சடைமுடி
132
தென்களக்குடி
93
சாலைக்குடி
133
தென்கோடி
94
சித்தவடம்
134
தென்னூர்
95
சிவப்பள்ளி
135
தேசனூர்
96
சிறப்பள்ளி
136
தேரூர்
137
தேவனூர்
177
பாய்ஞலூர்
138
தேவன்குடி
178
பாவநாசம்
139
தேவீச்சுரம்
179
பாற்குளம்
140
தேறனூர்
180
பிடவூர்
141
தேனூர்
181
பிரம்பில்
142
தோழூர்
182
பிறையனூர்
143
நங்களூர்
183
புதுக்குடி
144
நந்திகேச்சுரம்
184
புரிசை
145
நம்பனூர்
185
புலிவலம்
146
நல்லக்குடி
186
புற்குடி
147
நல்லாளை
187
பூந்துறை
148
நல்லாற்றூர்
188
பூழியூர்
149
நல்லேமம்
189
பெருந்துறை
150
நற்குன்றம்
190
பெருமூர்
151
நாகளேச்சுரம்
191
பேராவூர்
152
நாங்கூர்
192
பேரூர்
153
நாசனூர்
193
பேனூர்
154
நாட்டுத்தஞ்சை
194
பொதியின் மலை
155
நாலனூர்
195
பொய்கை
156
நாலாறு
196
பொய்கை நல்லூர்
157
நாலூர்
197
பொருப்பள்ளி
158
நாற்றானம்
198
பொன்னூர்
159
நியம நல்லூர்
199
போற்றூர்
160
நிறைக்காடு
200
மகாமேருமலை
161
நிறையனூர்
201
மகேந்திரமலை
162
நீலமலை
202
மணற்கால்
163
நெடுவாயில்
203
மணிக்கோயில்
164
நெய்தல்வாயில்
204
மணிமுத்தம்
165
நெற்குன்றம்
205
மத்தங்குடி
166
பஞ்சாக்கை
206
மந்தாரம்
167
படம்பக்கம்
207
மயிண்டீச்சுரம்
168
பட்டி
208
மறையனூர்
169
பந்தையூர்
209
மாகாளம்
170
பரப்பள்ளி
210
மாகாளேச்சுரம்
171
பருத்தி நியமம்
211
மாகுடி
172
பழையாறு
212
மாகோணம்
173
பனங்காடு
213
மாட்டூர்
174
பனங்காட்டூர்
214
மாணிகுடி
175
பாசனூர்
215
மாதானம்
176
பாட்டூர்
216
மாநதி
217
மாநிருபம்
233
வாதவூர்
218
மாவூர்
234
வாரணாசி
219
மாற்றூர்
235
விடங்களூர்
220
பிறைக்காடு
236
விடைவாய்க்குடி
221
முதல்வனூர்
237
விந்தமாமலை
222
முந்தையூர்
238
விராடபுரம்
223
மூதூர்
239
விளத்தூர்
224
மூவலூர்
240
விளத்தொட்டி
225
மூலனூர்
241
விவீச்சுரம்
226
மூழையூர்
242
வெகுளீச்சுரம்
227
வடபேரூர்
243
வெள்ளாறு
228
வடமாகறல்
244
வெற்றியூர்
229
வரந்தை
245
வேங்கூர்
230
வழுவூர்
246
வேதீசுரம்
231
வளவி
247
வேலனூர்
232
வளைக்குளம்
248
வேளூர்

சித்தாந்தம் – 1962 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment