Sunday, May 10, 2020



முயற்சி

"முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்'' என்றும்

தெய்வப்புலமைவாய்ந்த திருவள்ளுவநாயனார் ''முயற்சி திருவினை ஆக்கு; முபற்றின்மை இன்மைபுகுத்திவிடும்” என்றும் கூறியுள்ளார்.
  
விதிப்படி நடக்குமென்றெண்ணி யாதொரு காரியத்திலும் முயற்சி செய்யாமலிருத்தலே வறுமையை யடைதற்கு முக்ய காரணமாம்.'
    
ஸாத்தியப்படாத பொருளையடைய முயல்கின்றவன் மேன்மையை யுடையவனாயினும் பெயர்களில் முந்தினவாகக் காணப்படுவான். யாதொருகாரியத் தினிடத்துஞ் சோம்பலின்றித்தக்க முயற்சி செய்பவனை வறுமை நெருங்குதற்கு அஞ்சும்; ஆதலால் சோம்பலுக்கு இடம்கொடாது முயற்சி செய்யவேண்டும். மேலாகிய விரதங்களை யிடையூரின்றி நடத்த முயல்கின்றவன் சிறியவனாக யிருக்கினுந் தபஸியெனப் பெயர் பெறுவான்.
  
பயிர் என்பது பயிற்சி - முயற்சி யெனவுங்கொள்ளப்படும் ஆதலால் பயிர்செய்வதிலியற்றப்படும் முயற்சியே செல்வப் யேற்றுக்கு முதற்குறியாம். உழவு முதலியவைகளில் வருத்தமுற்று இட்ட பயிர் பலனைக் கொடுக்குங்காலத்தில் சோம்பலால் தக்கபடி நடத்தவறியா தவன் தரித்திரத்தையடைவான் எல்லாக்காரியங்களுக்கும் அவைகளாலடையும் பயனுக்கும் தெய்வகாரணத்தைப் பார்க்கிலும், புருஷகாரணமே மேலானதாகும்; எப்படியெனில், ஒற்றைத்தேருருளையால் ரதம் நட்வாத தன்மைபோற் புருஷாகாரமில்லாமல் தெய்வஸங்கல்பத்தினாலொன்று முடியாது.
    
எள்ளும் அதற்குள் எண்ணெயும் பகவானாலுண்டாக்கப்பட்டிருந்தாலும் புருஷாகார மென்கிற முயற்சியினாலல்லாமல் எண்ணெய் வெளிப்படுவதில்லையே ஆதலால் முயற்சியின்றி ஒன்றும் நிறைவேருது. அகதில்லாமற் சோம்பலுற்றவன் பயன்படான் முயற்சியில்லா விடின் கல்வி பில்லை; கல்வியில்லா விடின் புத்தியுமில்லை; பராக்கிரமுமில்லை இவைகளில்லா விடின் பொருளுமில்லை, பெருமையுமில்லை; சிலவேளை பொருள் மாத்திரமிருத்தாலும் பயன்படாது ஆதலால் முயற்சியில்லா விடினொன்று மில்லை யென்பதற்கு அனுமானிக்கவேண்டுவதில்லை.

முயற்சியுள்ள புருஷஸிம்ஹத்தையே மஹாலஷ்மியடைகிறாள் தெய்வத்தினால் பாக்கியங்கொடுபட வேண்டுமென்று ஆலஸ்யமாகிய சோம்பலும், அவிவேகயாகிய தெரியாமையுமுள்ள புருஷர் நினைக்கிறார்கள்; ஆகையால், தெய்வத்தினிடத்தில் நம்பிக்கையைவிட்டு ஸொந்த ஸத்தியினாலே முயற்சி செய்தும் ஒருவேளை கார்யம் ஸாதிக்கப்படாமற் போனால் குற்றமென்ன வென்று ஒருவித்துவானுரைத்திருக்கிறார் அதையோசித்தால் எளிதில் தெரிந்து கொள்ளலாகும். தெய்வத்தால் யாவும் நடக்குமென்று முயற்சியைக்கைவிட்டவன் கெட்டுப்போவான், புருஷாகாரமில்லாமல் தெய்வம் எத்திக்கிறதில்லை யென்பதையறிந்தவனே புத்திமான். பலவற்றினும் சென் - ழன் றலைகின்ற மனஸ்ை விவேகத்தால் தடுத்து நிலைக்கச் செய்வதே மேஷத்திற்கு முக்யகாரணமான முயற்சியாம். கஷ்டதலையிலிருக்கும் ஒருவன் அக்கஷ்டத்தைப் பாராட்டாமல் ப்ரயோசனத்தைக் கொடுக்குத் தொழிலின்னதென்றும் அதனிடத்து மனதை செலுத்தி முயற்சிசெய்தால் பிரயோசனத்தையடையலாகு மென்றும் புத்தி கூர்மையால் பகுத்தறிந்து நடப்பானாகில் அவனுக்குச் செல்வமும் பெருமையும் ஏன் உண்டாகாமற் போகும்? உண்டாவது ஸித்தமே. செய்யத்தக்க கார்யமின்ன தென்றும் அதனிடத்து புத்தியைச்செலுத்தி முயற்சி செய்தால் பலனுண்டாகுமென்றும் தெரிந்திருந்தும் சோம்பலால் அதைக்குறித்து முயற்சி செய்யாமல் தரித்திரத்தால் வருந்துவோன் கல்வியிற் சிறந்தவனாக விருந்தாலும் அப்பரயோசகனென்று உலகம் பழிக்கும். இவ்விதப்பழிப்புக்காளாவதைவிட இறத்தல் நலமாகயிருக்கும். பிறருக்குபகாரஞ் செய்தவனிடத்து புத்தியை சோரவிடாமலிருப்பவன் பல நன்மைக்கும் ஆகாரமாகிய முயற்சியினிடத்து சிந்தையுடையவனாக யிருப்பான்.
 
முயற்சி செய்வதில் சிரத்தையில்லா தவன் பரோபகாரஞ் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தை மாத்திரங் கொண்டிருந்தால் அவ்வெண்ணம் முடிவு பெறாது.
    
எளிதில் பெறத்தக்க பல நன்மைகள் தனக்கெதிராக யிருந்தும் முயற்சியின்மையால் சோம்பலுற்று அவைகளைப் பெறாமல் விட்டு விடுகிறவன் யாதொரு பயனும் அடையமாட்டான் அல்தெவ்வாறெனின் எல்லா உயிரையும் வதைப்பதற்குக்காரணமாகிய கூர்மையுடைய வாளாயுதம் பேடிகையில் விளங்கிக்கொண்டிருந்தால் அதனால் யாது பயன்.
    
உபகாரிசளாகவிருக்கின்ற நல்லோர்கள் தங்களுடைய ஸௌக்கியத்தை விரும்பாமலே ஒரு காரியத்தில் பிரவேசித்து அதனாலாகிய த்ரவிய சம்பாதனையைத் தன் சுற்றத்தார் நட்பினர் முதலாகியவர்களுக்கு உண்டாகிய துன்பங்களை மாற்ற உபயோகப்படுத்தி அவர்களுக்கு ஸௌக்யத்தை யுண்டாக்குவார்களென்று முன்னோர்சுள் சொல்லியிருக்கிறார்கள். அஃதெவ்வாறெனின், மாளிகை முதலாகிய வீடுகளினாலே துாண்களுக்கு யாதொரு நன்மையுமில்லாதிருந்தாலும் அத்தூண்கள் தங்கள் வருத்தத்தை நினையாமலே அம்மாளிகையைத் தாங்கிக் காப்பாற்றுவது போலவாம். ஆதலால் இவர்களைத் தாங்குவோரென்று நாயனாருஞ் சொல்லியிருக்கிறார். முயற்சியினிடத்து மனத்தளர்ச்சி யில்லாதவனுக்குச் செல்வம் வளர்ந்தேறுமென்றும், அம்முயற்சியில் மனவூக்கமில்லாதவனிடத்து வறுமை நிரந்தரங் குடிகொண்டிருக்குமென்றும் சொல்லப்படும். இந்த நீதியையறிந்து நடக்கின்றவனுக்கு எல்லா நன்மையும் எளிதில்வந்து கைகூடும்.
    
மூதேவி சோம்பலை யுடையவனிடத்து வாசஞ் செய்து கொண்டிருப்பாளென்றும், சோம்பலையகற்றி நன்முயற்சி செய்பவனிடத்து ஸ்ரீதேவி நர்த்தனஞ் செய்து கொண்டிருப்பா ளென்றும் மூன்னோர்கள் சொல்லிய நீதிவாக்யம் இப்போது அனுபவத்திற்கும் ஸரியாகயிருப்பதால் யாவரும் முயற்சி செய்வதில் சிரத்தையுடையவர்களாக விருக்கவேண்டும்.
    
ஒரு தொழிலினிடத்து முயற்சி செய்தும், ஊழினாலாகிலும் தெரியாத மற்ற காரணத்தினாலாகிலும் பலன் கிடையாமற்போனால் குற்றமொன்றுமில்லை இதற்காக உ.லகம் பழியாது. ஆனால் விதியில்லையென்று முயற்சியைக் கைவிட்டுச் சோம்பலுற்றவனை உலகம் பழிக்கும்.
    
ஊழினாலே ஒன்றுமடைவதற் கிடமில்லா திருந்தாலும் மன வுறுதியுடையவன் தனது நன்முயற்சியால் அவ்வூழையுங் கடந்து நடப்பானென்று அறிவுடையோர் சொல்லியிருப்பதற்கு நிதர்சனமென்னவெனில், பதினாறுவயதிற் கதிகமில்லாத மார்க்கண்டேயர் தன்னுடைய மனவூக்கத்தின் முயற்சியால் என்றும் பதினாறு வயஸ்ஸை யுடையவராக விருந்தாரென்கிற பிரமாண மிருக்கவில்லையா?
    
ஒருகாரியத்தை முயன்று நடத்திவரும்போது அதற்குப் பல விவாதங்கள் மேன்மேலும் வருமாயினும், அவைகளுக்கு இடங்கொடாமலும் மனங்கலங்காமலும் தான் தொடங்கிய காரியத்திற்கு பங்கம் வராமல் நிறைவேற்றுகிறவனுக்கு ஸமானம் உலகத்திலோருவனுமா கமாட்டான்.
    
கரை புரண்ட வெள்ளம் போல் பல துன்பம் வந்தாலும் அவற்றை உள்ளத்தில் உன்னிப்பார்த்து மனமகிழ்ச்சி கொண்டிருப்பவனுக்கு அத்துன்பம் ஊழினாலே வந்ததானாலு முடனேகெடுமென்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
    
உளையிலழுந்திய வண்டிலை கடாதன் வருத்தத்தைப் பாராட்டாமல் மாருரங் கொண்டிழுப்பது போல் நன்முயற்சியில் புத்தியுடையவன் தான் நடத்துங்கார்யத்திற் கிடையூறுவருமாகில் தன்னுடல் வருத்தத்தைப் பாராட்டாமல் கூடிய முயற்சி செய்து நிறைவேற்றுவான். இவ்வகையோருக்குப் பல துன்பமுண்டாயிருந்தாலும் அவையுடனே அவர்களைவிட்டு நீங்கிப்போய்விடும்.
      
ஆதலால், உயிர்க்குத் துணைக்காரணமாக விருக்கும் முயற்சியினிடத்தில் மனத்தளர்ச்சி செய்யாமல் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும்.

      நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையின்
           காரிய நிர்வாகசபை மெம்பர்
S. மெய்கண்ட பிள்ளை.
சித்தாந்தம் – 1913 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment