Monday, May 11, 2020



உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும்.
(மனசும் தேகமும்)

எழுத்துகளிலே, நான் அகரமாயிருக்கின்றேன்.” - பகவத்கீதை.

 ஜடப்பொருளாகிய விஷயம், அல்லது பதார்த்தத்தோடும் பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தோடும் மனம் ஒன்று பட்டிருக்கின்றது. ஆனால், அந்த சம்பந்தம் அடைந்துள்ள மனதுக்குநிகளமகல மில்லாததால், மற்றதனுடன் இட சம்பந்தத்தையது பெறுதலு மரிது. இந்த அபூர்வமான ஒற்றுமையை எந்தவிதமான பாஷையினாலாவது வழக்கத்திலுள்ள எந்த விதமான உதாரணத்தினாலாவது விளக்கலா மென்றால் கஷ்டமாயிருக்கின்றது. எல்லா சாமான்யமான சேர்க்கைகளையும் நோக்கி இது முரணாகவும், நொடியுள்ளதாகவும் காணப்படுகின்றது. [பெயின் பண்டிதர்]

மேலே நாம் உதகரித்துள்ள வசனங்களானவை ‘ மனமும் உடலும்' என்ற மகுடங் கொடுத்து டாக்டர் பெயின் எழுதியுள்ள முக்கியமான புத்தகத்தினின்றும் எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தி லடங்கியுள்ள பல அத்தியாயங்களும் நாம் சிரத்தையோடும் வாசிக்கக் கூடியவைகளையே யாம். ஆனால் மகா பண்டிதராகிய அவர்களின் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் காணோம். அவர் எண்ணுவது போல இவ்விதமான தத்வஞானம் தான் இனிமேல் வருங்காலத்து நிலைக்கு மென்றும் நாம் எண்ண வேண்டியதில்லை. ஆனால் முக்கியமாக இப்போது அவர் காட்சிப் பிரமாணத்தினால் அறியக்கூடிய விஷயங்களைக்குறித்து மட்டும் ஆராய்வது தான் நமது கடமை.
அதன்மேல் கிரமமான தர்க்கசாஸ்த்திர சம்பந்தத்தைக் கொண்டு நாம் அநுமானிக்கக் கூடிய விஷயங்களை யநுமானிக்கக்கூடும். இவ்விதமாக ஆராயப் புகுந்த விடத்து மனதுடல் இவற்றின் தன்மையும், அவற்றின் சம்பந்தமுந் தானென்ன. மனம் என்பது அறிவு (Intellect) இச்சை (Will) உணர்வு (feelings) (உணர்வு என்றபதம் ஐம்புலனுகர்ச்சியின் உண்டாகிய இன்பதுன்ப உணர்ச்சியுடன் காமகுரோத முதலிய அது.பவங்களையும் உணர்த்தும்.)

 "இவைகள் ஒன்றினில் மூன்றாயுள்ளது. இவைகள் மூன்றும் தம்மில் வேறுபட்டிருந்தும் ஒன்றைவிட்டு ஒன்று இயங்காத்தன்மையால் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றது. அறிவும் இச்சையும் உணர்வு நிகழ்ந்தாலன்றித் தனியே எதுவும் காணப்படமாட்டாது. உணர்வு பூரணமாக வெளிப் பாடடையுங்காலம் அவைகளோடும் கூட, மற்றவைகளின் மூலமும் தோன்றியே நின்றதென்க.''

உணர்வும் முடிவில் இன்பதுன்பமேயாகும் ! அவ்வுணர்வை இச்சையுடன் ஒன்றாக மயங்குதல் சாலாது. ஆனாலும் டாக்டர் பெயின் என்பவர்மேலே உதகரித்த வாக்கியங்களில் அபிப்பிராயப் படுவது என்னவெனில், உணர்வு நிகழ்ச்சியின் பின்பற்றியே அறிவும் இச்சையும் வளருமென்றும் எண்ணமாவதும் அவ்வுணர்வுள்ளும் ஐம்புலன்கள் வழியாக உண்டாகின்ற தென்றும் தான் வெளியாகின்றன. மேலும் இன்பமும் உயிரை வளர்ககச் செய்யும் யாதொரு கர்மத்தினாலே உண்டாகக் கூடியதாயுள்ளது (உயிர்க்கிதம் செய்தல்) துன்பமும் யாதொரு உயிர்க்கு கேடு தேடியசெய்கையைப் பொறுத்ததாயுள்ளது (உயிர்கதம் செய்தல்) நீதி நூல்களினும் இதைக் கொண்டே நன்மை தீமை, புண்ணியம் பாவமெனவும் பாகுபாடு ஏற்படுகின்றது. மையைத் தான் காப்பு விதியென (Law of conservation) * மேலும் கூறுவர். ஆனாலும் எல்லா இன்பதுன்பங் கட்கும் ஒருவனரயறை யுள்ளது. அதிக்கிரமித்தால் சந்தோஷமுங்கூட துக்கமாய் முடியும். இன்னொரு உண்மையு முண்டு. இம் மனோதத்வ சம்பந்தமாக அதை சம்பந்தவிதி யென்பார்கள்..
* காப்புவிதி யென்றது பதார்த்தங்களின் சூட்சுமசக்தி யென்றும் குன்றுபடாது என்றும், அதிகப்படாதென்றும் கொள்வது.
நாம் பிரஞ்ஞையோடு விளங்கவேண்டுமானால் நம்முடைய நினைப்பும் உணர்வும் மாறுபட்டு வரவேண்டு'' மென்பதே. எவ்வித வுணர்வும் அறிவும் நீண்டு அநுபவிப்போ மானால், அது வர வரக்குறைந்து மெலிந்தும் முடிவில் உணர்வு அற்றே அந்த காரமாய்ப் போய் விடும். மறுபடியும் படி உணர்வை நினைப்புக்குக் கொண்டு வரவேண்டுமானால் அதனை மறந்து வேறொன்றை நினைத்து மறுபடியும் முன் நினைப்பை நினைக்கவேண்டும் தமிழ் தத்வஞானிகள் இந்த உண்மையை' நினைப்புண்டேல் மறப்புண்டாம்' என்று கூறுகின்றார்கள்.
இந்த விதியின் உண்மை எட்டவில்லை விளங்கவில்லை யென்றார், பய்ன்பண்டிதர், ஆனால் ஹிந்து தத்வஞானிகள் இதற்கு தக்க நியாயம் கூறவல்லவராயினர். மனிதனறிவு சிற்றறிவு. அது நாளடைவில் அதிகமாகப் பலப்படுத்திக்கொண்டேபோகவும் நிறைந்த சாதனத்தினாலே, மனமுழுமையும் அறிவு மயமாகி விடக்கூடும். யோக அப்பியாசம் செய்யும் போது முதல் முதல் வரக்கூடியது இருளேயாம். பிரகாசமல்ல. இருட்டே அதிகரித்துக் கொண்டுபோகும் சில நேரம்., ஆனால் யோகசாதனையிலேயே ஒருவன் முற்றுவானானால் முடிவில் உண்மை ஒளிபிறக்கும். அவனுக் குண்டாய் விடுகிறது இடையிலுள்ள காலத்திலே அந்த வொளியின் பலவித வேறுபாட்டால் பலவித தப்பபிப்பிராயத்துக்குட் படுத்தப் படுகிறது. முடிவில் நம்முடைய இச்சைதான் நம்முடைய உணர்வு வழியே சென்று நம்முடைய கர்மங்களை ஏவுகின்றது. அறிவும் பேதவறிவென்றும் அபேத அறிவென்றும், ஞாபக அறிவென்றும் பிரிகின்றது. ஞாபகசக்தி, புத்தி, தீர்மானம் செய்யும் சக்தி, முதலிய மற்றைய எல்லா மனோசக்திகளையும் இந்த மூன்று தலைப்பின் கீழாகக் கொண்டுவந்து விடலாம். அறிவுண்டாதற்கு மூலமாயுள்ளதது என்க. விஷ யங்களில் பேதமில்லா விடில் எல்லாம் ஒரே தன்மையினதாகவே விருந்து விட்டால், யாதொரு அறிவும் அல்லது யாதொரு அறிவு நிகழ்ச்சியும் கூடாமை யாகும்.
பேத அறிவு (Sense of difference) என்றது பதார்த்த ங்களை வெவ்வேறாக வைத்து அறியும் அறிவு - அபேத அறிவு (Sense of similarity) அப்பதார்த்தங்களில், ஒற்றுமை யிருப்பதையறியும் அறிவு.
ஒரே வர்ணடமிருந்திருக்குமானால் சித்திர சாத்திரம் குதிரைக் கொம்பாக முடிந்துவிடும். ஒரே சப்தம், ஒரே சுரம், இருக்குமானால் நாம் சங்கீதம் கேட்பதற் கில்லாமற் போய்விடு மன்றே? இப்போதிருக்கிற விஷயங்களை யுய்த்து நோக்குவோமானால், சம்பந்த விதியானது ‡ நம்முடைய எல்லா வியவகாரங்களுக்கும் அடிப்படையாயிருக்கின்றது. பேதமிருந்தால் மட்டும், அபேத ஞானம் நமக்கு உபயோகமாகும். ஆகையாற்றான் அபேத ஞானத்தையும் ஒரு அறிவின் கூறாக எண்ணப்பட்டு, உலக வியாபாரங்களை நவீனம் நவீனமாகக் கண்டு பிடிப்பதில், முக்கியகரமாயுள்ளது.
சம்பந்தவிதி - (Law of Relativity) என்றது நாமும் உலகமும் பேதீப்பட்டு நின்று தான் அறிவுண்டாகும் என்பதும், ஏகபதார்த்தமுண்டெனில் அதனைத் தரிசிக்க இயலா தென்பதும்.
கடந்துபோன நமதநுபவங்களையும் எண்ணங்களையும் நாம் ஞாபகம் பண்ணிக்கொள்ளும் சக்தி நமக்கில்லாத பட்சத்தில் அதி யற்புதமான மனோசக்தியை நாம் பெறுதல் அருமையாய் விடும் மேலும் மனசுக்கு ஒரு அபூர்வமான குணமுண்டு. அதைய தன் தோஷமாகக் கூடச்சொல்லலாம். அதுவும் முன்னே சொன்ன சம்பந்த விதியை ஒட்டியது. நம்முடைய அறிவு நம்முடைய எல்லாப் புலன்களை ஒன்றாக ஒரே காலத்தில் அறியமாட்டாது கிடக்கிறது. ஒரே தடவையில் யாதொரு கண்ணினால் காணும் ஒரு பதார்த்தத்தையும், ஸ்பரிசத்தால் அறியும் மற்றொன்றையும், செவியால் தொடும் பிறி தொன்றையும், நாசியால் உணரும் இன்னமொன்றையும் அநுபவித்தல் கூடாமையே. எத்துணையற்பமாக அது காணப்பட்ட போதினுங் கூடபனம் ஒன்றி னின்றும் ஒன்றுக்குபாய்வதற்கு இடையில் கால அவகாசம் ஒன்றுண்டாய் விடுகிறது. அஷ்டாவதான சக்தியும் இதற்குமுரணல்ல வென்க. அவனுக்கு நல்ல ஞா பகசத்தி யிருத்தல் இன்றியமையாத தொன்றாம். அதைக் கொண்டும், எத்துணையதிகமான அவதானங்களை ஒருவன் செய்து முடிக்கின்றானோ அத்துணை பதிகமாக அவன் காலத்தை நீட்டியே செய்தல் வேண்டும்.
இப்படி மனோதத்துவத்தைக் கூறுபாடு செய்து காண்கிறபோது, யாதோ ருணர்வுக்கும் அதோடு சேர்ந்த பிரஞ்ஞைக்கும், இச்சைக்குப் அதோடு சம்பந்தப்பட்ட பிரஞ்ஞைக்கும் அதுமிதித்தற்கும் அதைத்தழுவி நிற்கும் பிரஞ்ஞைக்கு, பேதம் பாராட்டாமல் இரண்டும் ஒன்றாகவே எண்ணப்படுகின்றன. ஆயின் நம்முடைய தத்வ ஞான விசாரணையில் அவைகளின் வித்யாஸம் பேசப்படுகிற துண்மை. உணர்வு இச்சை அறிவினையும், அவைகளைத்தழுவிய பிரஞ்ஞையினின்றும் வித்யா ஸப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. சுத்தப்பிரஞ்ஞையைத்தான் ஆத்மா அல்லது சத்தென்று நாம் அழையா நின்றோம். மற்றைவை யெல்லாம் உடம்போடும் உலகத்தோடும் சேர்த்துப்படிக்கப்பட்டு அநாத்மா அல்லது அசத் என்று தள்ளப்படுகின்றன. இந்த விதயாஸத்தைப்பற்றி மேலே போகப்போக நாம் விரிவா  கப் பேசுவோம். ஆனாலும், அறிவு அறிவின் கூறுகளினின்றும் உடலும் 2. லகமும் அதனுடைய வியாபாரங்களும் வேறு பிரித்துக் காட்டப்படுகின்றன. இவை யெல்லாம் மொத்தமாக ஐடமென்றேனும், அல்லது அநாத்மா வென்றேனும், அல்லது ஞேய் (விஷயம்) (object) பதார்த்தமென்றேனும், அழைக்கப்படல் காண்க. இவைகட்கென்றே சில குணங்களுள்ளன. அவைகள் மனசினிடத்தே காணப்படவே வில்லை. அவையாவை? அகலமும் நீளமும் (இடசம்பந்தமான அமைப்பு) இடங்கொளல், கெட்டியாயிருக்குந் தன்மை, மிருதுவாயிருக்குந்தன்மை, (அசைவிலாமை) பளுவு, வர்ணம், சூடு, ஒளி, மின்சாரசத்தி, உறுப்புகளைச்சேர்ந்த தருமங்கள், ரசாயன சாஸ்திர சம்பந்தமான தருமங்கள் முதலிய. இவைகள் யாவற்றினும் முக்கியமாவது இடங்கொளற் றன்மை யென்பதே. மனம் அங்கனமன்று. டாக்கடர் பெயின் கூறுவதாவது.
      நமக்கு இந்த கஷ்டம் நேரிடுகிறது. மனோ நிலைகளும் தேகநிலைகளும் முழுவதும் வேறு வேறாக காணப்படுகிறது. அவை யொன்றா கவைத்தெண்ணப் படுவதற்கு மிகவும் பொதுவாகச் சொல்லலாகும், காலவொற்றுமையைத்தவிர எவ்விதமான சமத்வமும் சொல்லுவதற் கிடமில்லை. ஒன்றினிடத்து நாம் புத்தியை வைத்துள்ளபோது மற்றொன்றின் குணங்களின் வேறுபாடுகள் முழுமையுமே நாம் மறந்து விடவேண்டியிருக்கிறது. நாம் ஒரு மூளையையும், நரம்புகளையும் பற்றி விசாரணை மேற் கொண்டபோது, நாம் ஞேயபதார்த்தம் அல்லது ஜடபதார்த்த சம்பந்தமான விஷயத்திலேயே மனமுழுதையும் செலுத்தலாகிறோம். அந்த நிமிஷத்திலே உள்ளபடி அறிவின் தொழிலைச் சிந்திப்பது கூடாமையாயுள்ளது அதிதுரிதமாக, நாம் நினைப்பை மாற்றினாலொழிய. - நம்முடைய மனோ அநுபவத்திற்கும், நம்முணர்ச்சிகளுக்கும் நமதெண்ணங் கட்கும் பரப்பில்லை, இடமில்லை, உருவமில்லை, உருவம் போன்ற   குறியுமில்லை, பிரிவுமில்லை அவயவமுமில்லை. § ஆவையெல்லாவற்றையும் மறந்தாலொழிய மானசவியாபார மொன்றையும் நாம் கவனிக்க முடியாது. நாம் நாட்டுப்புறத்தில் இளவேனிற் காலத்தில் உலாவித்திரியும் போது, நம்முடைய மனசானது அங்குள்ள கொடிகள் புட்பங்கள், புல் மேடைகள் முதலிய வைகளின் கண்ணே பிரவர்த்திக்கிறது கண் கூடாமே! இவைகள் முழுமையும் ஞேயபதார்த்தங்களேயாம். திடீரென்றும் பலத்தோடும் மேபிளாசம் என்ற புட்பத்தின் வாசனை நம்முடைய மனதைக் கவர்கின்றது.
§ சிவஞான சித்தியார், 4 சூ - 15 பாட்டில், உயிரை அணுவென்றால் அதற்கு அவயவம் செப்பவேண்டி சடப்பொருளோடு ஒன்றாய்க்கெடும் என்றார்.
"ஒருநிமிஷம் அந்த சுகவாசனையில் நாம் விழுங்கப்பட்டு நிற்கின்றோம். அந்தக்கணம் வரைக்கும் பிரபஞ்ச வாசனை நமக்கில்லாமற் போய் விடுகிறது. பரப்புள்ள பதார்த்தம் எதனையும் நாம் நினையாமல் நிற்கின்றோம். நமக்கு இடம் என்ற பொருளே இல்லாமற் போய்விடுகிறது. அப்படிப்பட்ட நிலைகளானவை வெகு சொற்பநேரம் தான் ஜீவிக்கின்றன. க்ஷணமாத்திரமாக மின்னல் போல மிளிர்வன. அவைகள் அடிக்கடி பிரபஞ்சவிஷய வாசனைக ளோடும் கலந்து மாறி மாறி வருகின்றன. அவைகள் இருக்கும் வரையில், முழுசக்தி யோடும் பிரவர்த்திக்கும் வரையில், நாம் வேறு லோகத்திலிருக்கின்றோம். ஜடவுலகம் கெட்டழிந்து போகின்றது. மறைக்கப்படுகின்றது, அந்த நிமிஷத்துக்கு நினைக்கக் கூடாதபடி போல் விடுகின்றது கண்டீர்.
இவ்வறிவு நிகழ்ச்சிகளை அதிசந்தோஷம் நமக்கு திடீரென்று உண்டாகுங் காலங்களினும், அல்லது சொல்ல முடியாத பெருந்துக்கம் நம்மை சடுதியில் மூடும் போதும், மற்றொன்றையு முணராது நாம் ஒரு தனி விஷயத்தில் புத்தி முழுதையும் செலுத்தி மனோவியாபாரம் செய்து கிடக்குமமையத்தும், முக்கியமாக தியான கிலையிலழுந்தும் போதும், நாம் சரியாக உணரக்கூடும். ஆனால் அவைகள் கொஞ்சம் காலத்துக்கு அல்லாமல் நீண்டகாலம் பரிசுத்தமாக நம்மால் நினைக்கப்படுவதில்லை. அடிக்கடி விஷயவாசனைகள் - பரப்பு இடமுள்ள உலகவிஷயம் – நம்மை யிழுத்துக்கொண்டு போய் விடுகின்றன.''
எத்துணைபேதமுள்ள வைகளாக இவைகள் காணப்பட்டாலுங் கூட, ஒரு ஆச்சர்யமான விஷயமுண்டு. உணர்ச்சியுள்ள ஒரு ஆத்மாவினிடம் - மனிதன், அல்லது மிருகத்தினிடம் - அவை ஒன்று சேர்ந்துள்ளதைக் காண்பாம். இவ்விரண்டின் சேர்க்கை, ஒற்றுமை, அடுத்தடுத்து வளருந்தன்மை, - இவைகளைத்தான் டாக்டர் பெயின் துரையவர்கள் பல அத்தியாயங்களில் வெகுசிரமத்தோடும் நமக்குக் காண்பிக்க முயலா நின்றனர். இதை நாம் மறுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. இந்த சேர்க்கையாலும் ஒற்றுமையாலும், மனம் உடம்புக்குக் காரணமென்றாதல் உடம்பு மனசுக்குக் காரணமென்றாதல், நாம் யூகிப்பதற்கு யாதொருகாரணமுமில்லை யென்றே டாக்டர் பெயின் துரையும் ஒப்புக் கொள்ளுகின்றன ரன்றே? ஆனால், அவருடைய கட்சிதான் யாதோ வென்றால், சொல்லுதும். மனோதேகமே. (உடல் உயிர்) மனோதேகத்துக்குக் காரணம் என்கிறார். எவ்வளவு தூரம் சென்றும் நாம் கூறுபாடு. செய்து பார்க்கும் போது துவைதம் ஏற்படு கிறதே தவிரவேறில்லை. ஆனாலும் உடலை விட்டுத் தனியாக நிற் கும் யாதொரு உயிரையும் சித்திக்கத்தக்கதாயில்லை. இதனை விளக்க அவர் பல்வேறு சொற்களை யுபயோகிக்கின்றார். அவையும்?
பிரிக்கக் கூடாத இரட்டைப் பிள்ளைகள்'
'இரண்டு முகமுள்ள ஒருபதார்த்தம்'
'இருகுணமுள்ள ஒரு குணி' முதலியன.
இங்ஙனமாகவும் டாக்டர் பெயின் துரையவர்கள் ஏன் தாம் ஜடவாதிகளோடு சேர்ந்துக்கொள்ள வேண்டுமென்பது விளங்கவில்லை. அவரை இவையிரண்டனையும் ஆடம் ஒன்றென்றே கூறிவிடவில்லையே. சடம் மனசு அல்லது மனமும் - - படமும் (சத்து அசத்து) மட்டுமாகத்தானே அவர் அவைகளை யழையாநின்றனர். ஒருவேளை அவயவம் பெற்றயாதொரு தேகத்துக் கந்நியதா மனசை யவர் நிரூபணம் செய்ய முடியாமையால், அவர் அவ்வாறு கொண்டனர் போலும். இந்த முடிவும் சித்தாந்தியை யசைத்திலது கண்டீர், அவன் ''முத்தியிலுமும் முதலுமுண்டுஎன்று கொண்டமையால் சித்தாந்தியும் டாக்டர் பெயினைப்போலவே உடம்புக்கந்தியாதா உயிர் ஒன்றிருப்பதைநம்புவதேயில்லை. இவ்வுடம்பு 25 கீழ்த்தத்வங்களா லானதெனக் கொண்டான். சித்தாந்த தீபிகையின் முதல் தொகுதி 10வது சஞ்சி கையில் கண்டிருக்கும் தத்வமாத்தைப்படித்துப் பார்த்தால், சர்வோத்கிருஷ்டமான பெருந்தேவதைகட்குக் கூட அசுத்தம் அல்லது சுத்தமாயையினாலான வொரு தேகம் உண்டென்பது பிரகாசமாகும். மேலும் நாம் ஒன் முன்னமேயே குறிப்பிட்டிருக்கின்றோமல்லவா? ஆடத்தை செயலற்றதோர் பதார்த்தமென்று சாதாரண சனங்கள் நினைக்கும் அபிப்பிராயம் தவறென்பதே. ஜடபதார்த்தத்தின் அதிசூக்கும் நிலையில் அபார சக்திகள் இருப்பதால் அவைகளையே கடவுளென்று பலர் மயங்கியும் போய் விடுகிறார்கள். நிற்க, இப்போது நாம் கவனிக்கத்தக்கது உடல் உயிருக்கு உள்ள ஒற்றுமையே யாம். அச்சம் பந்தத்தை யிங்கே பேசும் போது முதற்கண் நமக்குண்டாகும் எண்ணம் எல்லாம் இடத்தைப் பொறுத்த சம்பர்தமாகவே முடியும்.
டாக்டர் பெய்ன்துரை, அப்படிப்பட்ட இடசம்பந்தம் நினைக்கக்கூடிய தல்லவென்றும் அசாத்ய மானதென்றும் பன்முறையும் வற்புறுத்திக் கூறாநின்றனர். பாப்புள்ள, நீளமகலமுள்ள அசித்துப்பதார்த்தத்துக்கும் அங்ஙனமில்லாத சித்பதார்த்தத்துக்கும் இடத்தைப் பொறுத்த சம்பந்தம் இருத்தலமையாது. ஆகையினாலே, 'அகம்'' புறம்'' வியாபகம்'' வியாப்தி' என்ற பலவிதக் கூற்றுக்களெல்லாம் பிசகானவாயும் கெடுதியை விளைவிக்கக் கூடியனவாயுமுள்ளன. இந்த சம்பந்தம், காரணகாரிய சம்பந்தமல்ல. அப்படிப்பட்ட பொருத்தத்தை ஒன்றையொன்று இயக்கும் சம்பந்தமென்றும், அல்லது ஒன்று மற்றதை துணைக்காரணமாகக் கொண்டதாகவும் கூடாது. ஒரேவழியுண்டாகும் காரணசம்பந்தம் என்றதும், தெய்வாதீனமா யேற்படுத்தப்பட்ட பொருத்தமும், இப்போது பழங்கதைகளாகத் தள்ளுபடியாய் விட்டன. $ இவ் இயற்கைப் பொருத்தம் அபூர்வமானதென்று நாம் கருதவேண்டி யிருக்கிறது.
$ இப்பொருத்தங்களெல்லாம், ஐரோப்பிய தத்வஞானிகளால் கூறப்பட்டது.
இதைப்போன்ற வேறொரு தனிப்பொருத்தம் பிரகிருதி சம்பவங்களில் வேறெங்கும் கிடையவே கிடையாது. அப்படியிருந்தால் உதாரணத்தால் நாம் இவையோடு ஒத்திட்டுப் பார்க்கலாம். அல்லாமலும் அத்தகைய பொருத்தத்தை வெளியிடற்குத் தகுதியான சொல்லுங் கிடைப்பது அரிது. ஞேயபதார்த்த ஞானத்தினின்றும் ஞா துரு அறிவினுக்கு மாறிச்செல்லும் மானசகர்மத்தைத் தெரிவிக்க, நிலைமையின் வேறுபாடு'என்ற சப்தபிரயோகத்தான் திருப்திகரமாயுள்ளது. இதனை விளக்க சரியான சொல்லுமில்லை, உதாரணமுமில்லை. அச்சம்பந்தம் இருந்தும், ஒருவகையில் அது ஒரு குஹ்ய விஷயமாயினும், முடிவாக ஏற்பட்ட விஷயத்திற்கு, மேலும் காரணம் தேடுவது எந்த வகையாலும் தர்க்கசாஸ்திரத்திற்கு ஒவ்வாது. மேலும், நாம் செய்யக்கூடியன வெல்லாம் என்னவென்று பார்ப்போம். பல்வே பட்ட இந்த சம்பந்தத்தின் தோற்றங்களை முடிந்தகாரணங்களைத் தேர்ந்தவுடன் நாம் செய்யக் கூடியனவெல்லாம் செய்தாய்விட்டன வென்க. இரண்டிற்கு மேற்பட்ட யாதொரு பெருமுடிவுக்கு நாம் போகக்கூடாது நின்ற பட்சத்தில் நாம் அங்கேயேயிருந்து திருப்தியடைவதே உத்தமம்.
இதுவரையும் பேய்ன் பண்டிதரின் கூற்றாகும்.
இது நாம் தங்குவதற்கு உத்தமமான நிலையென்று நாம் நிச்சயமாக வறிகிறோம். இந்த வியாசத்தை நாம் எழுதப் புகுந்ததின் நோக்கம் இந்த அபிப்பிராயத்தி னின்றும் மாறுபடுதற் கல்ல. ஒன்றுமாத்திரம் கவனிக்க. தமிழில் இதற்கோ ருபமானம் இருக்கிறதென்று நாம் எண்ணலானோம். அது இந்த விஷயத்துக்கு முழுவதும் பொருந்துமென்க. மேலும் இந்த சம்பந்தத்தையும் அது அதிகமாகப் பிரகாசப்படுத்திவிடு மென்க. இவ்வுதாரணம், பௌதீக ஞானிக்கும் மேம்பட்டு உண்மையை விளக்காநிற்கும். மேலும் நாம் தினந்தோறும் ஒருவித சொல்லை உபயோகப்படுத்தி வருகிறோம். அச்சொல்லில் இந்த முரண்பாடும் நொடியும் அமைந்துகிடக்கவும் காணலாம். இதைக் கூறுமுன் பெய்ன் பண்டிதர் தமது மானசசாஸ்திரத்தில் (Mental science) காட்டிய சிலவுண்மைகளைக் காட்டுவோம். ஞேயவுணர்வெல்லாம் ஞா துருவுண்டென்பதையே அநுமானிக்கிறது என்பதே ! “ எல்லா ஞேயபதார்த்த - சம்பந்தமான அறிவு நிலையங்களும், ஒருவகையில் மானசசம்பந்த நிலை களுமாகுமென்க.” மனம் இருந்தாலொழிய, - பிரத்ஞையில்லாமல் இருக்கலாம் - ஒருபோதும் ஞேய பதார்த்தங்களின் அறிவு (நாம்) அடையவே மாட்டோம். உள்ளபடியே வெறும் ஞேய அறிவின் நிலைமை நமக்குக் கிட்டவே கிட்டாது. மனசு அதைத் தாங்கி நின்றாலொழிய விஷயஞானம் நமக்கெட்டாது. அந்த சமயத்துக்குமட்டும் மனசு இருக்கிறதென்ற அறிவை நாம் அடைவோமில்லை. அச்சமயம் அவ்வறிவு கெட்டழிந்து நிற்கிறது. அல்லது இப்படிச் சொல்லிப் பார்ப்போமா? ஒன்றையொன்று அவை ஒத்தில்லாமற் போய்விட்டாலும், மனசானது முழுமையும் ஜட பதார்த்தத்தோடும் ஒன்றுபட்டுப் போய்விட்டது என்று சொல்லுவோம். ஆனால் மனசானது சுத்த மனோநிலையையும் எட்டியடைதல் அமையும், அப்போது ஞேயபதார்த்தங்கள் உள்ளனவென்று அந்த உயர்ந்தநிலையில் அது உணராது. ஆனால் விஷயஞானத்தோடு சம்பந்தப்பட்டதோடு ஞாதுரு ஒன்றுண்டென் 'அநுமானித்தற்கு இடனுண்டு. அப்படிப்பட்ட சுத்த மனோநிலையத்தில் ஞேயவிஷய பதார்த்தம் எங்கேயிருக்கிறது? அதுவுங்கூட இல்லாதது போலாய்விட்டது (சூந்யம்). ஜடம்தான் ஆதிமுதல்லா தத்வம் என்று நினைத்தாலோ (அதற்கு பிரதிபந்தமாக) இந்தவுண்மை யொன்றிருக்கிறது காண்க. தடம் உயிர் உள்ள தாயும் உயிரற்றதாயும் காணப்படுகிறது, இந்த இரண்டு ஆடபதார்த்த அவஸ்தைகளுக்குள் எத்துணை வித்யாஸம் ஏற்பட்டுள்ளது. அதலுடைய உயிருள்ள வடிவத்தின் பெருமிதமிருக்கிறதே! அதென்ன? மனசினுடைய சாந்நித்பத்தின் விசேஷத்தினா லுண்டாயதா? அல்லது கடத்திலேயே இயற்கையாயுள்ள ஒருகுணமா? உயிரற்ற உடபதார்த்தமென்று சாமான்ய சனங்கள் கூறும் யாதொரு ஐடமும், அபாரசக்திகள் பொருந்தி யிருக்கின்றவென்று நாம் முன்னமேயே கூறினோம். அப்படியிருந்தும் நடத்தின் உயிரற்ற உருவங்களின் குணங்கட்கும் உருயிள்ள உருவங்களினுடைய குணங்கட்கும் யாதானும் ஒரு ஒற்றுமையிருக்கிறதா? இது எப்படியிருந்தாலும் இருக்கட்டும் நம்முடைய உவமானத்தை நாம் சொல்ல ஆரம்பிப்போம். அது தான் உயிரெழுத்து மெய்யெழுத்து உவமானமென்பது. கீதா சுலோகத்தை நாம் உதகரித்துக் காண்பித்தோமல்லவா? அதற்கு நாம் கொடுக்கப் பிரயத்தினப்பட்ட அர்த்தபுஷ்டி சங்கரபாஷ்யத்திலும் தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை.
ஒருவேளை. சங்கரர் தமது முன்னமேயே தீர்மானம் செய்யப்பட்ட அபிப்பிராயத்துக்கு முரண்படுமபிப்பிராயத்தைச் சொல்ல வெளிவர மாட்டார் போலும் ஆகையினாலே அதில் உண்மையிருந்தால் அது அதன் கண்ணேயே மறைந்திருந்தது கண்டீர். அதனுடைய திறவுகோலும் சித்தாந்த நூலாசிரியர்களிடமே யிருந்து விட்டது. அதிபழமையான உவமானம் திருக்குறளில் ஒன்று உள்ளது அதன் முதற்பாவிலேயே அதுகாணலாகும்.
       ''அகரமுதல் வெழுத் தெல்லாமாதி
        பகவன்முதற் றேயுலகு.''
'' என்ற அக்ஷரம் எல்லா எழுத்துக்களுக்கும் முதலாயுள்ளது போலவே, பழம்பொருளாகிய பகவான் இந்த பிரபஞ்சத்தின்முதலாக விருக்கின்றார்.
'' என்ற எழுத்து முதலெழுத்தாகாது சில பாஷைகளில் இருந்தாலுமிருக்கலாம். இந்த உதாரணத்தால், கடவுளினுடைய இடத்தைப் பொறுத்த முதன்மையை விளக்க வேண்டியதாயின் இன்னும் எத்தனையோ உவமானங்களை யதற்காக நாம் காணலாம் அதனாலே பரிமேலழகர் அந்த வரிசைக்கிரமம் இடத்தைப் பொறுத்த தொன்றன்று, ஆனால் நாதமாத்திரையாகி இயல்பாற் பிறந்த தென்றார். இவ்வொலி முதல்முதல் நம். வாய் அங்காத்ததினால் உண்டாகக்கூடியது. அவ்வொலியும், மற்ற உயிர்களுக்கும் மெய்களுக்கும் ஆதியாயுள்ளது கண்டீர். மற்றைய உயிரெழுத்துக ளெல்லாம் அகரத்தின் சிதைவினால் உண்டாகிறதேயொழிய மற்றில்லையென்க. மேல் உயிர் மெய்யின் இலக்கணந்தான் என்னை? தானே ஒலிக்கக்கூடிய வெழுத்து உயிரெழுததென்  பேசப்படுகிறது. அதற்கு வேறு ஒலியினுடைய வுதவி வேண்டியதேயில்லை. மெய்யெழுத்தோ உயிரெழுத்தின் உதவியிருந்தா லன்றித்தானே ஒலிக்கக் கூடாதென்று கூறுப. இந்த ஒலிகளின் சுபாவத்தை இன்னும் கொஞ்சம் கூர்ந்து நாம் பரியாலோசனை செய்யப் புகுவாம். நாமொவ்வொருநாளும் இந்த ஒலிகளை சப்திக்கலாகின்றோம். அப்படியிருந்தும் அவைகள் சம்பந்தமாகவுள்ள அற்புதத்தைத் தெரிந்துக் கொள்ளாமல் போய்விடுகின்றோம்.
அது ஏன் அப்படி? அடிக்கடி அவைகளை நாம் தரிசிக்கும் பழக்கத்தினாலே. " அ'' என்ற அக்ஷரத்தை யுச்சரிக்க நாம் பிரயாசைப்படுகின்றோம். அது சர்வசாதாரணமாக வந்துவிடுகின்றது. வாயைத்திறப்பதினாலேயே அது வெளியாகிறது. யாதொருவிகாரமும் உதவியும் வேண்டியதில்லையே. ஆனால், நாம் (க்) என்ற சப்தத்தை யுச்சரிக்க முயற்சிப்போம். அதை இங்கிலீஷில் கே என்றும் தமிழில் க என்றும் க் என்றும் உச்சரிக்கிறோம் அதிலே ஒரு உயிரெழுத்தின் சப்தம் அடங்கியிருக்கிறது பாருங்கள். ஏ, அல்லது, , அல்லது, இ. இந்த உயிர்ச்சப்தத்தை நாம் பிரித்து விடுவோம். அப்புறம் மெய்யெழுத்தை யுச்சரிக்க முயல்லோம். முயற்சி வீண் முயற்சியாகும். மெய் ஒலியே பிறக்காமற் போய்விடும். ஆகையினாலே மெய்யெழுத்தில் எப்பேர்தும் ஒரு உயிரெழுத்தின் ஒலி இருந்தேதீரும். ஆனால் நாம் பிரக்ஞையோடும் அது அங்ஙனமிருப்பதாக அறிவது மட்டுமில்லை. ஆனால் தமிழ்ப்பாஷை மேம்பாடுடைய தத்வஞானார்த்தமுடையதா யுள்ளபடியினாலே, நாம் எப்போதும் அதனுடைய உயிர்ப்பைக் கவனிப்பதற்கா சுத்த மெய்யெழுத்தை யெழுதும்போது அதன் தலைப்பில் நாம் ஒரு புள்ளியைப் போடுகின்றோம். மற்றைய வளைவானவும், நோரனவும், செங்குத்தானவுமான கோடுகளைப்பற்றி பிறிதொரு சமயம் நாம் விவரித்துக் கூறுவோம். ஆகையினாலே, (க்) என்ற மெய்யெழுத்தை நாம் எழுத ஆரம்பிக்கும் போது, நெடுங்கணக்கையுண்டு பண்ணினவர்கள் எவ்வண்ணம் மெய்யெழுத்தின் கண் உயிர் அடங்கியும் அதற்கு ஆதாரமாகியும் உயிர்ப்பைக்கொடுத்தும் உள்ளது என்று வுண்மையைக் காட்டுவான் அந்த புள்ளியையுபயோகித்தார்களெனத் தெரியவருகிறோம்.'' என் எழுதும் போது, அப்புள்ளி, அநாவசியம், ஏனெனில், அவ்வுயிரொலி வெளிப்படையாயிருப்பதால். ஆகவே சுத்த மெய்யொலியில், உயிரொலி வெளியாகாது, மெய்யோடு அதுவது வாய்க்கிடத்தலையும் காண்க.
'இப்புள்ளியும், உயிரை உணர்த்தி நின்றது. எல்லா உயிரும், இப்புள்ளி அல்லது வட்டத்தை முதலாகக் கொண்டே ஆரம்பிக்கின்றது. நாம் மிகவும் பாண்டித்யத்துடன் மனசுக்கும் தேகத்துக்குமுள்ள சம்பந்தத்தைக் குறித்து விசாரணை செய்கின்றோம். ஆனால் எப்போதாவது உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கு (முள்ள அந்யோந்ய சம்பந்தத்தைக் குறித்து விசாரணை செய்யப் புகுந்தோமா? ஒன்று மற்றொன்றின் உதவியின்றி உயிர்வாழாத இந்தவிதமான அபூர்வ சம்பந்தமானது பிரகிருதி சம்பவங்களில் வேறெங்காவது காணக்கிடைக்குமா? மேலே காட்டிய அநந்ய சம்பந்தத்தைத் தவிர, வெறும் மெய்யெழுத்தாவது, ஒருபோதும் உயிரெழுத்தினின்றும் பிறந்ததில்லையென்றும், உயிரெழுத்தும் மெய்யினிடம் பிறந்ததில்லையென்றும், நாம் அறியலானோமல்லவா?
இவைகட்கு பிரபஞ்சத்தில் வேறெந்த இரண்டு வஸ்துக்களுக்குளுள்ள வித்யாஸத்தைவிட, அதிகமான வித்யாஸம் காணக்கிடக்கிறது. உற்பத்தி ஸ்தானம் வேறு.'' என்ற அக்ஷரம் வாயைத் திறப்பதனாலேயே ஒலிக்கப்படும். நாவானது அடித்தொண்டையோடு சேரக்கொண்டு வரப்பட்டாலொழிய '' என்ற ஒலி பிறக்கமாட்டாது. அதையே செய்து பார்த்தால் உயிர் பிறவாது. ஆனபடியினாலே உயிர் தான் மெய்க்கு பிறப்பிடமென்றும், அல்லது மெய்தான் உயிர்க்கு பிறப்பிடமென்றும் சொல்ல முடியாது. அல்லது மெய்யெழுத்தையேனும், மெய்க்கும் உயிருக்கும் உண்டான சம்பந்தத்தையேனும் பொய்யென்று சொல்லவுமுடியாது. மாயையென்றும் மயக்கமென்பூம் அவைதமைப் பேசவும் போகாது.
ஆகையினாலே பரிணாமவாதமாவது விவர்த்தமாவது இந்த சந்தர்ப்பத்திலே பிரயோசனப்படாதென்க. ஆகவே, நாம் சொல்வதெல்லாங்கூடி யிதுவேயாம். அவைகள் பிரிக்கக்கூடாத விதமாக ஒன்றோடொன்று சம்பந்தமடைந்துள்ளன. மேலும் உயிபெழுத்துகள் மாத்திரம் கொண்டேனும் அல்லது மெய்யெழுத்துக்கள் மாத்திரத்தினால் மட்டும் யாதொருபாஷையும் ஏற்படமாட்டாது. ஒவ்வொரு மெய்யெழுத்தும் அதேசமயத்தில் உயிர் மெய்யெழுத்தாகுமென்றும் நாம் அறியவேண்டும். மெய்யெழுத்தில் உயிர் பிரகாசமாயேனும் அப்பிரகாசமாயேனும் வாழாநின்ற தென்க. உயிரெழுத்துக்கள் தனித்து நிற்பது சாத்தியமாகும். மெய்யெழுத்துக்கள் மட்டும் தனித்து நிற்றல் முடியாது. மெய்யெழுத்துக்கள் தாமே ஜீவிப்பது கானற்சலத்தின் இருப்பையே மானுமென்க. நல்லது, இதையெல்லாம் உயிருடம்பென்ற வியவஸ்தைக்குப் பொருத்திப் பார்ப்போம். உயிர் தான் உயிரெழுத்தாயிருக்கிறது, உடம்பு (ஆடம்) தான் மெய்யெழுத்தாக விருக்கிறது. உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் எத்துணை வித்யாஸம் காணக்கிடக்கிறதோ அத்துணை வித்யாஸம் உயிருக்குமுடம்புக்கும் உண்டென்க. ஒன்றினின்றும் ஒன்று - பரிணாமத்தினாலாவது அல்லது விவர்த்தத்தினாலாவது பெறப்படுதல் குதிரைக் கொம்பேயென்க. அப்படியிருந்தும் இரண்டும் பிரிக்கக்கூடாத விதமாக சேர்ந்துள்ளன. மேலும், உயிர் தனக்கே ஒரு நிலைமையை சுவதந்தரமாக உடைத்தாயிருந்தும், சிற்சில வேளை தனது சொந்தமான வடிவமாகவே நின்றுவிடும் ஸ்வதந்திரத்தையது அடைந்துள்ளது, உடம்போ தனித்து உயிரின் சம்பந்தத்தைப் பெறாமலே ஜீவிக்கும் யோக்கியதை யுடையதன்றென்க. உடம்பு என்ற பொழுதே மனமும் தொக்கிநின்று, அதற்கு ஆதாரமாயும் உள்ளாயும் ஜீவி தமாயுமிருக்கின்றது. நாம் சுத்த அறிவு மயமாயிருக்கும்போது தேகம் இல்லையென்னும்படி அசத்தாயும் சூன்யமாயுமிருக்கிறது. உடம்பு சுத்த உடம்பாயிருக்கிறபோது, அறிவு கூட அங்கேயிருக்கிறது. ஆனால் தோற்றமாகிறது மட்டுமில்லை. அது உடம்புடன் ஒன்றி நிற்கிறது. மனசு அங்கேயிருக்கிற துண்மை. ஆனால் அது தன்னைத்தானே மறைத்துக்கொண்டு விடுகிறது. அதனுடைய சொரூபத்தையது காண்பிக்கிறதில்லை. அது இல்லாதது போலவும் காணப்படுகிறது. எப்போதோ சில அபூர்வமான காலங்களில் மட்டும் ஒழிய, நம்முடைய அறிவு கேவலம் விஷய உலகவாழ்க்கையாக மட்டுமே ஒழிந்து போய்விடுகிறது. நம்முடைய உண்மை தத்வமாகிய அறிவு நிலைமையை சாதாரணமாக நாம் அறிவதே கிடையாது. இந்த உவமான உவமேயமாக அமைந்த இரண்டு திருஷ்டாந்தரங்களும் தமிழ்ப்பாஷையிலே வெகு அழகாக பரிமளிக்கப்பட்டுள்ளன கண்டீர். இவைகளிரண்டு மட்டுந் தான் உவமான உவமேயங்களாகக் கொள்ளக் கிடக்கின்றன. ஒரேவித மான வார்த்தைகள் அல்லது சப்தங்களே உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் உடலுக்கும் உயிருக்கும் அதிவிநோதமாக உபயோகிக்கப் பட்டுள்ளன. 'உயிர்' 'மெய்' என்ற வார்த்தைகளை நாம் கேட்கும்போது என்ன அற்புத வெளிச்சம் உண்டா கிறது பாருங்கள்.'உயிர்' என்ற வார்த்தை உயிரெழுத்துக்கும் உபயோகமாகிறது. மனஸ், அறிவு, ஆன்மாவுக்கும் உபயோகமாகிறது. 'மெய்' யென்ற மொழியானது உடலுக்கும் மெய்யெழுத்துக்கும் கூட உபயோகமாகின்றது. டாக்டர் பேய்ன் என்பவர் இந்த ஒற்றுமையறிவானது ஒன்றைப் புது தாகக் கண்டுபிடிக்கும் நவீன அறிவைக் கொடுக்கும் என்பார். பௌதிக கலாசோதனையில் அருமையாகக் கண்டுபிடிப்பதும், இவ்விதமாக சிற்சிலகாலத்திலே விளங்கிய ஒற்றுமை ஞானத்தாலே உண்டாகியதென்க. ஆதியில், நம் தமிழர்கள் உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் 'உயிர்'' மெய்' யென்றழைத்தாரானால் அவர்கள் அப்பொழுதே பிறவிஞானிகள் என்று சொல்லத் தடையென்னை? மேலும் அவர்கள் உள்ளபடியே உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும், உயிருக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தத்தைக் கண்டுபிடித்தவர்களல்லவா? இந்த உதாரணத்தை முதல் முதல் ஸ்ரீமெய்கண்டதேவரும்பின் அவர் சந்தான பரம்பரையிலும் வெகு அருமையாக விளக்கியிருக்கின்றார்கள். (சிவஞானபோதம் 11 & 6 - ம் குறிப்புகள் பக்கம், 12, 19, 20 - ம் பார்க்க.) (திருவருட்பயன் பக்கம் 7 - ம் 8 - ம் பார்க்க) ஸ்ரீ மெய்கண்டதேவர் இந்த சம்பந்தத்தை விளக்குவான் அதேபாசுரத்தில் ஒரு பெயரொன்று கொடுத்திருக்கின்றார். இப்பெயரும் அத்வைதெமென்பது. இப்பெயர் அனேகருக்கு ஒரு அவிழ்க்கமுடியாத சிக்காய் முடிந்தது கண்டீர். அதற்கு அனேக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நமது தமிழ் தத்வஞானியார் இந்தவிதமாக அதை விளக்கியிருக்கின்றார்.
      "ஒன்றாகாமல், இரண்டாகாமல்,
     ஒன்றுமிரண்டு மின்றாகாமல்.''

என்று அவர் அதை விரிப்பாராயினார். அது ஒன்றென்றும் சொல்லப்படாது. அதை யிரண்டென்றும் கூறப்படாது. ஒன்று மிரண்டுமாகாமல் ஒழிந்ததோர் சம்பந்தமு மல்ல. டாக்டர் பேய்ன் துரை அதை முரண் என்றும் கூறியுள்ளாரே. அந்த விஷயத்தை சுவாமிகளது வாக்கியம் வெகு அருமையாக வெளிப்படுத்தாநின்றது கண்டீர். சித்தாந்திகளல்லாதவர் இவ்வுண்மையை அறிவது சுலபமல்ல. மேலும் தங்களபி மதத்திலேயே அவர்கள் ஊன்றி நிற்பதாலும், இவ்விதம் அறியாமற் போவதற்குங் காரணமாகின்றது. ஆனால், நாம் இன்னும் சிறப்பான நியாயங்களைவிட உயிர் மெய்யெழுத்தும் என்ற உவமானத்தையே அடிக்கடி எடுத்துக்காட்டி விஷயத்தை மிகவும் சுலபமாக விளக்கியிருக்கின்றோம்.
ஆகையினால் நாம் எந்த வார்த்தையை யுபயோகித்தாலுங்கூட, இந்த சம்பந்தத்தின் சுபாவம் பிரகாசமாயுள்ளது. வேதமந்திரங்கள் (முன்னெடுத்து ஆண்டவை)' ஒன்றாந்தன்மையை' சொல்லினும் இப்போது. வழக்கத்தில் வந்திருக்கும் மதங்கள் கூறப்படுவதற்கும் அதிகமாக வுயர்ந்த அர்த்தத்தில் அவைகள் அங்ஙனம் கூறா நின்றனவென்றே நாம் கொள்ளக் கடமைப்புட்டிருக்கின்றோம். இந்த அமைப்பில் அதிக வுயர்ந்ததும் அதிகவுண்மையானதுமான ஏகீபாவம் ஒன்று நம்மால் அடையப் பட்டது கண்டீர். “ அ'' காரத்தைத் தவிர்த்து இதரமான யாதொரு அக்கரங்களும் கிடையவே கிடையாவென்று ஸ்ரீ மெய்கண்ட நாதன் கூறிய கூற்றை யெவ்வளவு சத்தியமான தொன்றென்று நாம் அறியக்கடமைப் பட்டிருக்கின்றோம். ஆகையினாலே, நாம், கடவுளையன்றி வேறு யாதொரு பதார்த்தமும் கிடையாதென்று கூறத்தடை யென்னை? ஒன்றுதான் உள்ளது. தனக்கு இரண்டாவதாகும் வேறொன்றில்லாதது " இதுவும் அதியுயர்ந்த ஞானம், சுவானுபூதி, சிவானுபூதி, என்ற அநுபவத்தின் பயனாகவே வெளிப்போந்தது கண்டீர். மேலும் இதுவே திருவாசகத்தின் ஹிருதய சுலோகத்தில் அருமையாகப் பெறப் பட்டுள்ளது!
      "இன்றெனக் கருளி இருள் கடிந்துள்ளத்
            தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தே
            நீயலாற் பிறிது மற்றின்மை
சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
            திருப்பெருந்துறை யுறை சிவனே
ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை
            யாருன்னை யறியகிற் பாரே.”
  ஜெ. எம். நல்லசாமிப் பிள்ளை
சித்தாந்தம் – 1912 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment