Saturday, May 9, 2020



மலபரிபாகம்.
            நற்குஞ்சரக்கன்று நண்ணிற்கலை ஞானங்
கற்குஞ்சாக் கன்று காண்.
மனநினை வில்வாக்கி லனைவருக்குமறிவரிய
வள்ளல் கள்ளத்தினான் மறுகுமறிவிலியேன்
      றனை நினைவிலுட்கொண்டே யவனவளோடது வாந்
      தன்மையினின் மலவடிவு தன்னை மன்னித்
      தினையனையவளவிலிரு வினை துலையொப்பறிந்து
      சீர்காழிமன் - சிற்றம் பலநாடினானென்
      முனை வனையு முடல்வானையும் வருவினையு மறுத்து
      முத்தியளிப்பவன் மலர்த்தாள் சித்தமுறவைப்பாம்.
    
உலகத்தையும் அதன்கண் நிகழும் பலவித தோற்றங்களையும் செயல்களையும் யாம் கருதும்பொழுது இவற்றை நிகழ்விக்கும் ஓர் அறிவுடைப் பொருளுண்டென்று கருதுகிறோம். அப்பொருள் பரமபதியாகிய சிவபெருமான, அவன் இயற்கையில் பாசங்களின்று நீங்கியவனாதலால் நின்மலன். அவன் போறியும் பேராற்றலு முள்ளவன். அவனுக்கு அறிவு, இச்சைசெயல்களென்னும் மூன்று சத்திகளுள்ளன. இச்சத்திகளைக் கொண்டே. அவன் கிருத்தியங்கள் பலசெய்வான். அக்கிருத்தியங்கள் தன் பொருட்டன்றிப் பிறர்பொருட்டேயாம். பிறராவார் ஆன்மாக்களேயாம். அவ்வான்மாக்களும் இறைவனைப்போல் என்று முள்ள நித்தியப் பொருள்களாம். அங்ஙனம் அவைகள் நித்தியப் பொருள்களாயினும் சிற்றறிவும் சிறு தொழிலு முடையன. அவை அவ்வான்மாக்களுக்கு ஆணவமல சம்பந்தத்தாலுண்டாயின. இவ்வான்மாக்களும் சேதனப்பொருள்களாதலால் அறிவு இச்சை செயல்களுள்ளன. இறைவனது அறிவு இச்சை செயல்களுக்கும் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களுக்கும் வேறுபாடென்னையெனில், கண்போல் காணுமொளி உயிர்களறிவாகும்; கதிர்போலக் காட்டுபொளி, கடவுண்ஞானம்; உண்போருமன்றல் உயிர்கள் இச்சை ஊட்டிடுவோபென்பது ஈசனிச்சை பலதொழில் பண்ணல் உயிரின் கிரியை பலதொழில் பண்ணுவித்தல் சிவன் கிரியை ஆணவம் இவ்வுயிர்களின் அறிவை செம்பிற்களிம்பென்ன, அரிசியிலுமியென்ன, கண்ணிலிருளென்ன கண்ணிற் படலமென்ன, அநாதியே ஏற்றக்குறைவாய் மறைத்து நிற்கும். அவ்வாறு பறைத்துநிற்றலால் ஆன்மா மலினனாகி அணுவெனும் பெயர் பெறுவன் அணுவென்னும் ஆன்மாகாலம் நியதிகலை வித்தை ராகம் என்னும் ஐந்தினாற் பொதியப்பட்டவனாகிப் பஞ்சகஞ்சுகங்களென்றழைக்கப்பெறுவன. இப்பெயர் பெற்று விஷய உன்முகனாகி நிற்குங்கால் புருடனெனப்படுவன். கன்மத்திற்கேற்பஸ்தூல சரீரத்தைப்பொறுவன. சிறைச்சாலை போன்ற அத்தேகத்துடபொருந்திப் பல அவஸ்தை யுறுவன (அவஸ்தை எனினும் நிலையெனினும் ஒக்கும்). அவை ஆன்ம அறிவை மறைப்பதே தனக்குத் தொழிலாகப் பூண்ட அவ்வாணவத்தால் வந்தனவாம். அது தீமையில் விருப்பையும் நன்மையில் வெறுப்பையும் தருவதாம்.
    
இத்தன்மையுள்ள அவ்விருண்மலம் ஆன்மாவின் குணமோ அல்லது பிறிதொரு திரவியமோ என்பதைக் கொஞ்சம் ஆபாய்வாம். திரவியமெனினும் பொருள் எனினும் ஒக்கும். அட்பொருள் இயற்கைப்பொருள் செயற்கைப்பொருளென்றும், ஸ்தூலப் பொருள் சூக்குமப்பொருளென்றும், பலவகைப்படும் இவற்றுள் காரணமும் ஆக்கமுமில்லாது வருவது இயற்கைப் பொருள் காரணமும் ஆக்கமும் கூடிவருவது செயற்கைப்பொருள் தடித்து வருவது ஸ்தூலப்பொருள். நுணுகி நிகழ்வது சூக்கமப்பொருள் அன்றியும் இயற்கைப்பொருள் இன்னகாலத்தி லுண்டாயினதென்று வரையறுத்துக் கூறப்படாதது. அது பற்றியது அநாதிநித்தியப் பொருளாம். செயற்கைப்பொருளோ அங்ஙனம் நிகழாது ஓர்கால எல்லையுட்பட்டே நிகழும் ஆவணம் இயற்கைப்பொருள் தேகம் செயற்கைப்பொருள். பிருதுவி ஸ்தூலப்பொருள் ஆகாயம் சூக்கமப்பொருள் ஆணவத்தைச் சூக்கமப்பொருளெனினும் இழுக்காது. ஆகையால் ஆணவம் இயற்கைச் சூக்கமப்பொருளாம். அருவப்பொருள்களாகிய சூக்குமப்பொருள்களுக்கும் உருவமுண்மையின் ஆணவத்திற்கும் உருவமுதலியன உண்டு.

திரவியமெனப் படுவதற் கெல்லாம் உருவம், சொரூபம் சுபா வம், குணம், விசேடம், வியாபகம், வியாத்தி, நிறம், தரிசனம் என் னுந் தன்மைகளுவா தலினால் இவ்வாண்வத்திற்கும் அத்தகைய தன்மைகள் வாய்ந்திருந்தாலன்றோ அஃது ஓர் திரவியமென்பது சாலும் அங்ஙனம் அஃதுடைய தென்பதைக் காட்டுவாம்.

     ஆவணத்திற்கு உருவம்    ...     இருட்டு இருள்
     சொரூபம்                 ...     வருத்துமஞ்ஞானம்
     சுபாவம்                  ...     மறைத்தல்
     குணம்                   ....    அறிந்தவற்றை மீள மறைப்பித்தல்
     விசேடம்                 ....    பக்குவத்திலதன் சத்திமாய்தல்
     வியாபகம்                ...     பரனை உயிர் அறியாமல் உடனிற்றல்
     வியாத்தி                 ....     மூவகை உயிரினுமுறுதல்
     நிறம்                     ....    கருமை
     தரிசனம்                  ....     கருமையைக்கண்டறியுமாறுநிற்றல்
    
இவ்வகைத் தன்மைகளெல்லாம் ஆணவத்தின் பால் நிலவுதலால் அஃது ஓர் திரவியமென்பது கண்டாம் இவ்வாணவத்தை சைவ நூல்களில் இருளுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவது கண்கூடாம் இருள் ஒர் உள் பொருளாயிருந்தா லன்றோ அவ்வொப்புமை கூறப்பொருந்தும். தருக்க நூலார் அதற்கு மாறாக இருள் ஒரு பொருளல்லவென்றும் ஒளியின் அபாவமே இருள் என் நுங் கூறியிருக்க முக்காலத்திலுமில்லாத ஓர் பொருளை உள்ளதோர் பொருளுக்கு உவமை கூறல் அடாதெனின், அங்ஙனமன்று'; இருள் ஓர் உள்பொருளே என்று நிரூபித்து மேற்செல்வாம்.
    
சைவ நூல்களுள் புறவிருளை அகவிருளாகிய ஆணவத்திற்கும் கண்ணை ஆன்மாவிற்கும் ஞாயிற்றினைச் சிவத்திற்கும் உவமைகூறி முப்பொருளுண்மை கூறினமை உண்மையே அங்ஙனம் கூறுமாற்றால் இருள் ஓர் உள் பொருள் என்றற்கு ஐயமின்று ஆனால் தார்க்கிகா திரவியங்களின் எண்ணங்கூறுமிடத்து திரவியங்கள், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் என ஒன்பது வகைத்தாகக் கூறினாரேயன்றி, இருளையும் ஓர் திரவியமாய்க் கூறினாரல்லர் என்பது முண்மையே. அம்மட்டோ, வடிவுடைப்பொருளை விளியாற் கவருதற்கு ஒளியே காரணமாம். இருள் ஓர் வடிவுடைப்பொருளாயின ஒளியோடுங்கூடாத விழியாற் கவரப்படுவதன்று, அதற்கு மாறாக ஒளியோடு கூடாத கண்ணினால் இருள் கவரப்படுதலால் அஃது ஓர் வடிவுடைப் பொருளன்றென்றும் கூறுவாராபினர். இதனால் ஒளிபான சுபாவமே இருளெனப் பெறப்படும் இருள் இயங்குகின்றது கருவடி விற்று' என்பதெல்லாம் உணர்ச்சிமயக்கத்தாற் றோன்றியது எனவுங்கூறி இருள் ஓர் பொருளல்லவென மறுத்தமையும் உண்மையே.
      
அங்ஙனமாயின் அஞ்ஞானம் என்னும் ஆகவிருள் ஞானாபாவபாகாதென்று மறுக்கப்படும். அது போல அந்தகாரமென்றும் புறவிருள் அலோகத்தின் அபாவமென்பது மறுக்கப்படும் அஃதாமாறு அலோகத்தின் அடாவமே அந்தக்கார மென்பார்க்கு அம் முறைபற்றிச் சுகத்தின் அபாவமே துக்கம், தன்மத்தின் அபாவமே அதன்மம், சையோகத்தின் பாவமே விபாகம் என்று இவ்வாறு கோடல் வேண்டும் அங்கனம் கொள்ளாமை சண்டாம். அன்றியும் ஆண்டொளியில்லை இருளுள்ளதென ஒளியின்மையின் வேறாய் இருள் என்னும் உணர்வு நிகழ்தலானும் அபாவத்தாற் செய்யக் கடவதொன்று யாண்டு மின்மையானும் கண்ணொளியைத் தடை செய்து நிற்பதாகிய இருளை அபாவமென்பது கூடாமையறிக.

இவ்விருளின துண்மை வெள்ளிடையில் அலரவிழித்து நோக்கியவ நீயும் மறைத்தற்றொழில் நிகழ்தல் பற்றியறியப்படும். நீலவடிவிற்றாய்த் தோன்றுதலின் இருள் காக்ஷிப்பொருளென்றாற் படுமிழுக்கென்னையெனின் அற்றன்று துன்னியவிருளின் கண்விழித்துழிப்போல கண்ணிமையிறுக மூடியவழியும் ஒருதன்மைத் தாய்த் தோன்றுதலின் வேற்றுமையின்மையால் அதுமயக்க உணர்வே யாமென்பது போதருதலின் விழித்துழி அவ்வாறு தோன்றுவதும் அதுபோல மயக்க உணர்வாவதன்றி இருளின் றோற்றமன்றென்பது அனுபவத்தாற்கண்டுகொள்க.
      
அன்றியும் மனம் ஆன்மா முகலியவற்றைப்போலவே அஃதும் காகிப்பொருளாகாமையக.
      
அன்றியும் இவ்வாணவாலம் பயாகாரியமெனின் மாயா காரியம் பின்வந்து கூடியதாலும், மாயை இருளில் விழித்திருகுங் கண்ணுக்கு ஓர் ஒளிபோலுள்ள தாதலினாலும் அவ்வாணவம் மாயா காரியமின்மையறிக. இதுகாறுங் கூறியவாற்றால் இவ்வாணவம் ஓர் திரவியமென்று கூறியதோடு அதற்கு ஒப்புக்கூடலும் இருளும் ஓர் உள் பொருளெனக் கண்டாம் மேலும் பலவித இச்சைகளை ஆன்ம அறிவிற்கொண்டுறுத்தும். இவ்வாணவத்திற்கு விகற்பு முதலிய எண்குணங்களுள்ளன : அவைபாவன.

      1. விகற்பம்  -      தன்னையொழிய மற்றொருவரும் ஒவ்வாதவரென்றல்.
      2. கற்பம்    -      பிடித்ததையே பிடித்திருத்தல்
3. குரோதம் -      கோபங்கொண்டு நினைத்தல்
     4. மோகம்   -      யாதாமொன்றிற்கு ஆசைப்படல்
     5. கொலை -      உயிர்களைக் கொல்லுதல்
      6. அஞர்     -      சந்ததமுந் துக்கப்படல்
      7. மதம்     -      அகங்கார மேலிடுதல்
      8. ஈகை     -      சிரித்தல் என்பனவாம்.
    
இவ்வெண்வகைக் குணங்சொண்டு ஆணவம் ஆன்ம அறிவிலோர் கறையெனப்பொருந்தி நின்று பலவித செயல்களை நிகழ்த்தும் அவ்வாறு நிகழ்த்துங்சால் பலவித இச்சைகளுண்டாம். அவ்விச்சைகளை யநுபவிக்குமாறு இறைவன் மாயாதேசத்திற் பொருந்துவன் இவ்வெண் குணங்சளாலுறும் இச்சைகளே தீயகன்மங்களுச்கு மூலகாரணமாம் ஞானத்தால் வந்த அறிவு விளக்கம் நல்வினை இயற்று தற்குக்காரணமாம், இவ்விருவினைகளும் பாவபுண்ணியங்களைப் பயனாய்த் தரும். அவைகள் நரககவர்க்கங்களையும் இவ்வுலகத்தினையும் ஆன்மா பொருந்தி அநுபவிக்குமாறு நிற்கும் இங்கனம் காற்றாடியும் ஊசலும் போல ஆன்மாகழன்று திரிவன்.
    
இங்ஙனம் கூறப்பட்ட ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் மும்மல மெனப்படும் இயற்றுள் ஆணவம் மூலமலமெனவும் மற்றவை ஆகந்துகமலங்களென்றுங் கூறப்படும்.
    
அம்மூலமலமே சகசமலமாம் அரிசியை ஆன்மாவெனக் கருதில் உமி ஆணவமாம் அவ்வரிசியின் முளைத்தற் சத்தி கன்மாம் அவ்வரிசியை மூடியிருக்கும். தவிடு மாயையாம். செம்டை ஆன்மாவென வைக்கில் அதன் சளிப்பு ஆணவடாம் நாற்றங் கன்மமாம் அதன் சண்ணுள்ள சிவப்புமாயையாம். மாய்

இம்மும்மலங்களும் சடமாகையால் அவைகளை இறைவன் சத்தியை தொழிற்படுத்தும் சத்தி ஒன்றேயாயினும் கருமபேதத்தால் பலவகைப்படும், அச்சத்திகளுக்குப் பலவித பேராற்றல்களுண்டு அச்சத்திகளும் ஐவகைப்படும் (1) பராசத்தி (2) ஆதிசத்தி (3) இச்சாசத்தி (4) ஞானசத்தி (5) கிரியாசத்தி என்பனவாம் அச்சத்திகளின் தன்மைகளாவன;

1. முத்திபெற்றிடா வுயிர்களுக்குப் பேறு அளிப்போம் என்று நிற்பது - பராசத்தி.
2. மலத்தைச் செலுத்துவது - ஆதிசத்தி
      3. சிருஷ்டியாதி செய்யவுன்னல் - இச்சாசத்தி
      4. அத்தனை யு நோக்கிடுதல் - ஞானசத்தி
      5. பிரவிர்த்தி நிகழ்த்தல் - கிரியாசத்தி
    
இச்சத்திகளுள் ஆதிசத்தியெனும் திரோதான சத்திதான் ஆன்மாவைத் தேகத்தோடு கட்டுதல் செய்யும், அப்படிக் கட்டப்பட்டதால் ஆன்ம அறிவானது ஆணவத்தால் மறைக்கப்பட்டு உயிராய் நிற்குந் திருவடியை யறியாது. சரியையிற் சரியைமுதல் ஞானத்தில் ஞானம் வரை கூறப்பட்ட பதினாறு பதிகளினின்று செய்பும் புண்ணியங்கள் யாவும் இறப்பில் தவங்களாகிய சிவபுண்ணியங்களாம். பூமியின்கண் செனித்தகாலை இச்சிவபுண்ணியம் ஆர்ச்சித்த விசேடத்தால் இருவினை யொப்பு வந்துறும்.
    
இருவினையைப்பற்றி ஒருசிறிது பேசுவாம். வினையெனினும் செயலெனினும் ஒக்கும் இவ்வினையும் நல்வினை தீவினை என இருதிரனுற்றுச் சஞ்சிதம் பிரார்த்தம் ஆகாமியம் என மூன்றுவகைப்படும். இவற்றுள் சஞ்சிதம் முன்பலபிறவிகளுள் ஈட்டிய இருவினைத் தொகுதிகள் இவைகள் குருவின் திருவருளாற்போம் அதாவது கன்மபக்குவமறிந்து கிரியையால் தீக்ஷித்துக் கன்மமறுப்பன் மிகுந்த பக்குவமுடையார்க்குச் சட்சுதீக்கை செய்து கன்மமறுப்பன. இத்தீக்ஷா விகற்பங்களைத் தீக்ஷை என்னுந் தலைப்பின் கீழ்க்காண்க.
      
பிரார்த்தம் எடுத்த தேகத்தில் ஆன்மாபுசிக்குமாறு இறைவன் எடுத்துக் கூட்டியதும் பக்குவப்பட்டதுமான வின இஃது அத்தேகத்தோடு தொலையும் மற்றைய ஆகாமியமோ பிரார்த்தம் புசிக்கும்போதே மனம் வாக்குக் காயங்களால் வந்தேறும் வினை, இஃது செபம், தவம், அர்ச்சனை, நல்லோர், இணக்கம், கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிஷ்டைகூடல் என்பனவற்றாற்போம்.
    
இனிமேற்கூறிய இருவினை யொப்பு யாதெனில், "புத்தி இருவினையின்கண் விசாரித்தறியாது. நடுநிலையாகி ஒத்து நிற்றலேயாம்' இது வந்தகாலையில்  மேல் ஆகாமியம் ஏற்றதாகும் ஈண்டு இருவினை யொப்பின் விரிவுரை எல்லாம் வேண்டப் படாமையின் சிறிது கூறிவிடுத்தாம்.
    
இருவினை யொப்புக்குப்பின்றான்மலபரிபாகமுண்டாம். அப்படி இருவினை யொப்பு வந்தகாலை ஆணவமலம் பக்குவ மெய்துவ தெப்படி? மலபரிபாக மென்பதென்னை? ஆதிசத்தி என்னும் திரோதான சத்தி மூலமலந்தனில் மோகமாதி குணம் சத்தி அனைத்தினையும் பிரித்து உயிர்ப்பால் அநேகவிதமாக அணைத்துப்பாகத்தையாக்கும். இனிமலபரிபாகமாவது, ''மலம் தனது சத்திதேயதற்குரிய துனைக்காரணங்களெல்லாவற்றோடுங் கூடு தலேயாம்''  அத்துணைக்காரணங்கள் யாவை எனில் சிவபூசைதவம் செபம் அட்டாங்கயோகம் தானம் தீர்த்தமாடல் முதலியனவாம். இவற்றால் ஆணவ சத்தியானது பிறிந்து பிறிந்து செல்ல அருண்ஞானக்கண்ணாகிய சத்தியின்றொழில்கள் விளங்கி நிற்கும்.

மேற்கோள்.

      செய்திடுநற் சிவபூசை யாதிதொழிலாலுஞ்
            செப்பரிய தவத்தாலுஞ் செபத்தினாலு
பெய்திடு சீரட்டாங்க யோகத்தாலும்
            எழிற்றீர்த்தமாடி யதினாலு மணியாலும்
     பெய்துறு தானத்தாலு மவுடதத்தி னாலும்
            பிறிந்திடு மாணவ சத்திபிறிந்து பிறிந்தடைவே
     மெய்தரு சீர்ஞானக் கட்டொழில்கள் சத்தி
            விளங்கியிடு மிவைசருவமல விசற்பமென்றே.

அன்றியும் செம்பினிடத்தே அநாதியாய்ப் பொருந்தி நின்றகளிம்பானது இரசகுளிகைபரிசித்தவாறே நீங்கிச் செம்பு ஏகப்பொன்னாப் நிற்பது போலவும் நிறைந்த இருளின் கண்ணே, பூனை முதலிய பிராணிகளின் கண்மணிகள் எங்ஙனம் பார்க்குஞ் சத்தியடைந்தனவோ, அங்ஙனமே அருள் மன்னினோர்பால் ஆணவம் துன் னாது கெடும். இவ்வாணவம் மற்றோர் தம்மைத் துடக்கி நிற்கு மா தலினால் சோர்வில்லதாகும். இவ்வாணவந்தான் அநாதிநித்தியப் பொருளாதலினால் கெடாது நிற்கும். ஆனால் தன் சத்தி மாத்திரம் மாய்ந்து நிற்கும். எங்ஙனமெனில்.

''தெரியவரிய பொய்ஞ்ஞானஞ் சேர்ந்தவாறே
            சிவம்பிரகாசிக்கு மிங்கே சீவன்முத்தனாகு
       முரியமல் மௌடதத்தாற்றடுப் புண்டவிடமு
            மொள்ளொளிபினொளி முன்னரிருளுந் தேற்றின
     வருபால் சேர் நீர்மருவு கலங்கலும் போலாகி
            மாயாதே தன் சத்திமாய்ந்து காபந்
      திரியுமளவு முளதாயப் பின்புகாயஞ்
            சேராதவகைதானுந்தேயு மன்றே.''
                                                 - மிக்க
      "விடங்கெழு பெருவலி யுளங்கொள் மந்திரத்
      தடங்கிய தன்மையு மற்றே குடங்கரிற்
      கலங்கனீரி னலங்கிளர் விமுக்கா
      லனைந்தமா றெனவிளங்கிறந்த கன்ற
      பாசப்பெருவலி தீர்த்தனன்
      மாசிலஞானப் பெருந்தகையே.''
    
மேலும் முற்கூறியாங்கு அம்மலத்தின் காரியமே, மேலாலவத்தை, கீழாலவத்தை.. என இருவகைப்படும். இருளாகிய அந்தத்திலே கிடந்த ஆன்மா, அறிவிக்குங் கருவியுங்கூடி மேலே போகந்துய்த்தற் பொருட்டுச் செல்வது மேலாலவத்தை. புசிப்பு நீங்கி மலமேயாக விளங்குமவதாரம் கீழாலவத்தை. இவ்வவத்தையில் ஆணவமலத்தின் செய்தி எல்லாந்தெரிவது கேவல தெரிசனமாம் இப்படிக்கொத்தது கேவலமென்றறிவது சேவலமாம். கேவலமிதுவென்று அறிந்து நீங்குவதே கேவலா தீதமாம். இத்தனை யுமறிவிக்க அறிந்தது ஆன்மா இவன் கேவல தரிசனத்தில் இருளினைக் காணலுறுவன் அவ்விருளாகிய ஆணவமலம் இதுகாறும் ஆன்மாவின் நிலையையும், கருவிகள் நிலையையும், தன்னையுங் காட்டாமனின்றது இப்பொழுது ஆணவத்தை ஆன்மா இருளாக நிற்கக் கண்டனன். இவ்வா). இருளினைத் தன்னிலும் வேறாகக்கண்டு பின் தன்னைக் கண்டது ஆன்மதரிசனம்.

மேற்கோள்.

      அந்தமலமா மறியாமை கண்டாயே
யந்தவறிவு நீயையனே - தொந்தவிருள்
போனதே புன்னை விட போக்கித்திரோதையரு
ளானதே கண்டாயறி
வைத்தவ்வதரங்களெல்லா முடன்வந்து -
மத்தகமை கண்டு மறியாயான் - முத்தனாய்ப்
பாசவறிவும் பதியறிவு மன்றியே
யாசறவே நின்றவனீயாம்
இருட்டுமொளிக்கு மிடமாகும் வான்போ
லருட்குமருட்கு மகமாயச் - சுருக்கமிலா
நீசத்தசத்தன்று நேரேசதசத்த
னாய்சத்ததுவ சதத்தாம். என்பதனாலறிக.
  
ஆன்மா தரிசனத்துக்கு மேலுள்ள நிலைகள் ஈண்டு வேண்டற்பாலன வல்லவாதலால் கூறிற்றிலம்.
  
அன்றியும் முத்தியைப்பெற்ற ஆன்மாக்களின் ஆணவமலம் அழிந்து போமென்று சொல்லில் "முத்தியிலு மும்முதலுமுண்டு' என்னும் வாக்கியத்துக்கு விரோதமாம். மேலும் பதி பசு பாசம் என்று சொல்லப்பட்ட முப்பொருள்களும் அநாதி நித்தியப் பொருள் களென்று வேதாகமங்கள் கூறினவாதலால் அவை மெய் மொழிகளாம். முத்தியிலுமழியாதென்னில் ஆணவமலம் அறியாமையைப் பண்ணி நிற்குமாகையால் அது ஆன்மாவோடுங்கூடி மறைத்து நிற்குமட்டும் அறிவாயுள்ள சிவத்தோடுங்கூடி அதுபவித்தலென்றது சற் மில்லையாம்.
    
ஆதலால் ஆன்ம போதத்தை யநாதியே மறைக்கப்பட்ட அந்த மலத்தின் காரியமாயுள்ள சத்தி அழியும். அதன் காரணமாகிய ஆணவத்தின் நித்தியத்துக்கழிவில்லை. அஃதென் போலென்னில் ஆதித்தப்பிரகாச முதலாகவுள்ள வொளிகளின் முன்னர் நில்லாத இருளானது அழிந்ததுமில்லை மறைந்து நிறைந்துமில்லை. அதாவது ஒளியாயின் மேலீடுகொண்டு இருளடங்கித் தோற்ற முமற்றுக் காரியப்படாமல் நின்ற து போல அருளின் மேலீடுகொண்டு மலம் கீழ்ப்பட்டு நின்ற தெனவறிக.

மேற்கோள்.

சேணாரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்
காணாதொழியுங் கணக்கேபோ - லாணவத்தி
னாதி குறைபாமலென்பா லணு காம
னீதி நிறுத்துநிலை போற்றி.

என்று அருளியவாற்றாற்காண்க.

மேலும் மதவாதிகளுள் பேதவாதி சமவாதி இவ்வாணவ மலக் கேட்டைப் பற்றிக் கூறும் கொள்கைகளைச் சிறிது ஆராய் வாம். பேதவா தியானவன் செம்பிற் காளி தடமானது குளிகையி னாலேகெட்டுப் பொன்னான தன்மைபோல ஆணவமலமும் அருளி னாற் கெட்டு ஆன்மா சிவமயமா மென்பன், அது அடாது. ஏனெ னில் செம்பு தன்னைச் சுத்தமாக்கிய குளிகையுமாகாமல் தன் தன் மையுங்கெட்டு நடுவே பொன்னாந் தன்மைபோல இவ்வான்மாவும் தன்னைச் சுத்தமாக்கிய சிவசொரூபமுமா காமல், தன் தன்மையுங் கெட்டு வேறொரு சொரூபமாக வேண்டுகையால் குற்றமாம். அன்றியும் சமவா தியோ முத்தியைப்பெற்றவிடத்தும் சரீரமழியாதென்பன். சரீரமுள்ள மட்டும் மும்மலமும் போகா தென்கையினாலே அஃது அடாதெனமறுக்க.
    
இவை இங்ஙனமாக அக்கினியைச் சார்ந்தவித்தானது அதன் கண்ணுள்ள முளைத்தற் சத்தியை இழந்து முளைத்ததற்குரிய காரணங்கள் சேர்ந்துழியும் முளைதர மாட்டாமைபோல சஞ்சித கருமங்கள் தீக்ஷையால் விரைவிற்கெட்டொழியும் பிராரத்தம் உடலோடுபோம்.
    
மேற்கூறியாங்கு ஆன்மதரிசனமுதலிய மேனிலைகள். கடந்த சீவன் முத்தர்க்கு முன்புண்டான ஜனங்கள் தோறும் பிராரத்தகன்மம் புசிக்கச்சே ஆகாமியங்கட்டுப்படாதோ வென்னில், அங்ஙனம் உண்டாகாது. ஆயினும் வாதனாபலத்தாலும் அபுத்தி பூர்வத்தாலும் புண்ணிய பாவங்கள் மேலைக்குவித்தாகக் கட்டுப்படுமாகில் விளக்கின்முன் இருள் பேனாற் போல இவனிடத்துள்ள ஞானாக்கினியினாலே யழிந்துபோம் பிரார்த்த கன்மமோ புசிப்பு மாத்திரமாய்வந்து போகிறதொழிய அவர்கள் ஈடுபடத்தக்கதாக மேலிட்டு வருத்தாது அவர்கள் இப்படி ஈடுபட்டு வருந்தாதது கொண்டே மற்றயகாமியகன்மமும் ஏறாது அப்படி ஏறிற்றாயினும் பேதமாக்கி வித்து ஜநந்தை யுண்டாக்காது.

     "இனிச்செய்கன்ம மூலமலஞானத்தாலிடிப்பன்'' ஆங்கித்தம்பனை வல்லார்க்கு அனல்சுடாதாடு மௌடத மந்திர முடையார்க்கருவிடங்களேறா.
    
வெங்குற்ற கன்மமெலாஞ் செய்தாலு ஞானிக் கிருவினைகள் சென்றனையாமுற் செய்வினையிங்குத் தங்கிப்போம்
    
பாத்திரமுங் குலாலன்வினை தவிர்ந்த சக்கரமுஞ் சந்தித்துச் சுழலுமாபோன்.

மங்கிப்போய் வாதனையா லுழலவிக்குமெல்லா மலங்களும் பின்காயமொடு மாயுமன்றே.

      அன்றியும் பஞ்சாக்ஷரஞ் செபிக்கில் கன்மங்கள் வருத்தா
பந்தனமானவை யறுத்துப்பவுதிக முழலுமெல்லைச்
சந்தியாதொழியாதிங்குத் தன்மைபோல் விளையுஞ்சாரு
மந்தமாதிகளிலாத வஞ்செழுத் தருளினாலே
வந்தவா றுரை செய்வாரை வாதியாபேதியாவே
விண்ணுறவடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்றுமில்லையாம்,
பண்ணியவுலகினிற் பயனற் பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.
    
அவ்வாறு பாவங்களையறுத்த பெரியோர் எத்தன்மையுடையரெனில்.

தீங்கு ரமாயை சேராவகை வினை திரிவிதத்தா
     னீங்கிட நீங்காமூல நிறையிருளிரிய நேயத்
      தோங்குணர்வகத் தடங்கியுளத் துளின்பொடுங்க நேரே.
தூங்குவர் தாங்கி யேகத்தொன்மையிற்றுகளிலோரே.

அன்றியும் ஆணவமலம் ஆன்மாக்கள் தனித்தனியாய் வியாபித்திருக்கிற ஞானக்கிரியைகளை மயக்கும். இஃது சகலருக்குக் கருவிகூடின சகல வஸ்தையில் ராசமுதலிய கருவிகளா லாவேசித்து நின்று மோகமுதலிய காரியங்களைச் செய்விக்கும். ஆத்மா சிவத்தைப் பெறுமிடத்து ஆத்மசத்திகெடாது. அப்படிக்கின்றி ஆணவசத்திவிட்டு நீங்குகையால் இம்மலம் ஆன்மாவின் குணமன்று குணமாயிருக்குமெனில் குணமழியில் குணிமழியுமாகலான்
 அங்ஙனம் கூறல் தகாது : இது நிற்க.
    
இருவினை பொப்பில்லா தவர்களிடத்திலும் மலபரிபாகமுண்டாகிய பொழுது சத்திநிபாத முண்டாம். இருவினை யொப்பில்லார் யாவரெனில் விஞ்ஞானகலர், பிரளயாகலார் என்பவர்களே. விஞ்ஞானயோக சந்நியாசங்களால் மாயை சன்மங்களைவிட்டுச் சுபாவசித்தமான மலசத்தியினாலே மறைக்கப்பட்ட சிவத்துவத்தைக்காட்டும் விஞ்ஞானம் என்று மாத்திரமுடைய விஞ்ஞானாகலருக்குக் கன்ம ஒப்பு சத்திநிபாதத்துக்குக் காரணமன்று மலபரிபாகமே காரணமாம் எனவறிக.

மாயாபோகத்தால் கன்மசாமிய முண்டாகவேண்டும். பிரளயாகலருக்கு இஃதின்மையால் இருவினை யொப்பு உண்டாகாமல் மலபரிபாகம் நிகழ்தலே சத்திநிபாதத்துக்குக் காரணமாம்.

பிரளயாகலரில் அருங்கலாதி போகமுண்டாகையால் சகல பாவார்கள். இச்சகலருக்கும் மற் றுள்ள சகலருக்கும் கன்ம ஒப்பு சத்திநி பாதத்துக்குக் காரணமே எனில் பிரளயாகலரிற் சகலராவர்க்குக் கன்ம ஒப்பு சத்திநிபாதத்துக்குக் காரணமன்று, ஆனால் மலபரிபாகமே காரணம் மாகையால் ஆதியிலிருக்கும் சகலர்க்கே கன்ம ஒப்புடன் கூடிய மலபரிபாகங் காரணமெனவறிக.

சகலருக்கு மலபரிபாக மில்லாவிடத்து சத்திநிபாத முண்டாகாது. இருவினையொப்பு என்பதற்குப் புண்ணியத்துக்குச் சமமாகப்பாவமும் துலை யொத்து நிற்றலெனக் கூறுதலுமுண்டு. அக்காலத்து அந்த வினையொப்பை புசிக்கவொட்டாமல் சிவசத்திகெடுத்து விடும் என்பர். இருக்கருத்தில் இருவினைப் பொருட்படுத்துவது அத்தனை பொருத்தமுடையதாய்த் தோன்றவில்லையாதலினால் விடுக்க. விஞ்ஞான கலர்களை ஈசுவரன்தாமே பிரேரிக்கிறார். பிரளயாகலார தியரை அநந்தாதிகளின் வழியாகப்பிரேரிக்கிறார். சகலாகலை முதல் பிருதுவிவரையுள்ள தத்துவங்களிலுள்பட்டிருக்கிறார்கள். மலம் கர்மம். இரண்டோடுங்கூடி பிரளயாகலரிற் சிலர் மாயையிலிருக்கிறார்கள். இறைவன் மலபக்குவத்துக்குத் தக்கபடி இவர்களுக்கு மோக்ஷ மருளுகிறார்.
மலபரிபாகத்துக்குத் தக்கபடி சகலர்க்குப் பிரளயா கலபதங்கிடைத்தபின்பு விஞ்ஞான கலபதம் கிடைக்கும். பின்பு உருத்திரர், மந்திரர், மந்திரேஸ்வரர் இவர்களுடைய பதங்கள் முறையே கிடைக்கும் மலமிகப்பக்குவமாகில் உடனே சிவபதங் கிடைக்கும். இது நிற்க.
    
மலபரிபாகம் வந்தவர்க் கடையாளம் யாதெனில், சம்சாரத்தில் த்வேஷம், முத்தியில் விசுவாசம், சிவபக்தி குருசிச்ருஷை முதலானவைகளாம். பரிபக்குவமான பேருக்குப் பரமேஸ்வரர். குருமூர்த்தியாக வந்து மலபரிபாகத்துக்குத் தக்கபடிபதம் கொடுத்து மோக்ஷம் கொடுக்கிறார்.
    
ஆன்மா வியாபகன அவனை மறைப்பதால் மலமும் அவனைவியாபித்திருக்கும் அதாவது ஆன்மாவின் வியாபகம் மலத்தின் வியாபகத்துள்ளடங்கலால் வியாப்பியமாம். வியாபக வியாப்பியங்களாகிய மலான்மாக்களுக்கு அநாதியே மறைப்பதும் மறைக்கப் படுவதுமாகிய சம்பந்தமிருப்பதால் ஒரு காலமும் பிரிவில்லையாமாதலால் ஸ்பாவத்தில் மோக்ஷமே இல்லையாமென்றும் சங்கையுண்டாம். அதற்கு உத்தரமாக அதிகார முடிவில் அழிகின்ற அநேகசத்திகளை ஆணவம் உடைத்தாயிருக்கும். (அதிகாரம் - மறைப்பு) கண்ணிற்குப்படலம் போல மலம் திரவியமாதலால் அதற்குப் பாகமுண்டு அப்பொழுது அதன் சத்திகள் மாய்வனவாம்.
    
ஒரு ஆன்மாவிற்குச் சிவசத்தியால் மலம் நீங்குமாகில் எல்லா ஆன்மாக்களுக்கும் நீங்கவேண்டிவருமே என்னில் அப்படிக்கன்று புருஷன் தோறும் ஞானத்தை மறைக்கும் அநேக சத்தியுண்டு நித்தமாயும் வியாபகமாயுமுள்ள மலத்திற்கு மறைக்குஞ் சத்திகள் : அநேகமுள்ளனவென்று ஒப்புக்கொள்ளவேண்டும்.  அக்கினியின் தாஹசக்தியானது ஸ்தபனாதி மந்திரத்தால் தடுக்கப்படும் அது போல ஈசுவரனுடைய அநுக்கிரக சத்தியினாலே மலசத்தி தடுக்கப்படும்.
    
அன்றியும் அரிசியை மூடிக்கொண்டிருக்கும் உமியானது எப்படி பரிபாகத்சையில் நீக்கப்படுகிறதோ, அப்படியே மலசத்தியும் பரிபாகத்சையில் சிவசக்தியால் நீக்கப்படும் அபக்குவமான தசையில் உலக்கையினாலே குத்தினால் அரிசியுமழிவது போல அபக்குவதசையில் மலத்தை நீக்கினால் ஆன்மாவிற்கு விகாரமுண்டாகும். செம்பான் களிம்புக்குப் பரிபாகதசை ரசசம்யோகத்தாலுண்டாகும் ஆதலால்பரிபாக காலத்திற்றான் மலசத்தியழியும்.

பாகியா திவிர்த்தி நீங்கினபோது மலம் நீங்குகிறதென்பது சித்தம் எப்படி உலகத்தில் ஒரு புருஷனிடத்தில் திருட்டைக் கண்டு இவன் திருடனென்று விலங்கு முதலானவற்றாற் கட்டப்படுகிறானோ அப்படியே ஆன்மாவும் மலமுள்ளவனென்று ராகமுதலானவற்றாற் கட்டுபடுகிறான்.
      
இம்மலத்தினாலேயே ஆன்மாவிற்குப் பரதந்திரனாந் தன்மையுண்டாயிற்று. இத்தன்மைக்குக் காரணமாய் நின்ற மலத்தைத் திரோதானசத்தியே அநுக்கிரக சத்தியாய் நின்று விடு தலைசெய்யும் மலத்திற்கு அதிகாரம் இருக்கும்வரை ஒருவனுக்கு முத்தியுண்டாகிறதில்லை. மலம் நீங்குதலே முத்தியாகையால் மலத்தின் அதிகாரம் மலசத்தி பரிணமித்தபின்றான் நீங்கும். அம்மலம் பரிணாம யோகியமான போதிலும் தனக்குத்தானே யுண்டாக்கிக்கொள்ளாது அசித்தெல்லாம் சித்தினாலசைவிக்கப்படக் காண்கையால் என்க.
      
மலபரிணாமம் சிவசந்தியால் அநுக்கிரக நிமித்தம் செய்யப்படும் பரிணாமம் என்பது யாதெனில் வேறுபடல் என்னும் பொருட்டாம். அது படங்குடிலானாற்போல விருத்தியாயக் காரியப்படுவதின்றிப் பேதிக்கப்படலாற் காரியப்படுவதாம் அஃது முழுவதும் பரிணமித்தல் ஏகதேசத்தில் பரிணமித்தல் என் இருதிரனுறும் பால்தயிராய் மாறுதல் முழுவதும் பரிணமித்தலாம். நெய்யின் சண் புழுவுண்டாதல் ஏகதேசத்திற் பரிணமித்தலாம்.
      
இதுபற்றி ஒரு ஆன்மாவிற்கு அநுக்கிரக நிமித்தம் செய்யும் மலபரிணாமம் அவ்வான்மாவிற்கு மாத்திரம் உரியதாதலால் இப்பரிணாமம் ஏகதேசபரிணா மடாப், ஞானக்கிரியைகளைத் தடுக்கும் மலசத்தி நீங்கின பசுவினிடத்தில் இறைவன் சந்தி அநுக்கிரகரூபமாய் வளரும். அப்பொழுது பாசத்தினிடத்தில் அதன் சத்திகளைப் பரிணமிக்கச் செய்வதே அநுக்கிரகமாம் அதிகாரத்துடன் மலசத்தி நீங்கும்போது திரோதான சந்தியும் நீங்குமாதலால் சேதனனுடைய அறியுந் தன்மையையும் அசித்தினுடைய பரிணமிக்குந் தன்மையையும் அநுசரிப்பதே யநுக்கிரகம். மாயை கன்மங்கட்கும் இவ்வாறே கண்டுகொள்க.
    
அன்றியும் ஞானமெல்லாம் விஷயமாகவேயிருக்கும். நிர்விஷயஞான மேயில்லை. கண்ணானது இருட்டால் மறைபட்டிருந்தாலும் தன்னுடைய பிரகாசமுங்கெடாமல் விஷயாபிமுகமும் ஆகாமல் தன்னிடத்திலிருக்கிறதோ அவ்வாறே மலசத்தியால் மறைக்கப்பட்டிருக்கிற சிற்சத்தியும் விஷயத்தையுமறியாமல் அறிவுங்கெடாமல் தன்னிடத்தில் தானேயிருக்கும் எல்லாக் கர்மங்களின் நாசம் வந்தபோது கர்ம சககாரியாயிருக்கிற ஆணவமலத்திற்குப் பரிபாகம் வருமளவில் மேற்கூறிய மலாநிக்கிரக ரூபியாய் ஸ்வப்பிரகாசமாய் விளங்குகின்ற சத்தியானது பதியும் மலத்தினுடைய சத்தியானது நிவிர்த்தியாகும்.

அரிசியோடுஞ் சகசமாய் நின்ற முளை தவிடு உமிகள் அவ்வரிசியை விட்டுக்கெட்டொழிய அரிசி கேடின்றி நிலைபெறுதல் கண்டாம். அம்முளை முதலியன அடங்கி நிற்குமேனும் வேறொரு நெல்லுத்தோன்றுதற்குக் காரணமாதல் செல்லாவாம் அங்ஙனஞ்செல்லாமையால் குற்றமற்ற அவ்வரிசியின்கண் அடங்கிநிற்குமென்றற்கோர் இயைபின்மையின் மெல்ல மெல்ல நீங்கி அவை ஆண்டில்லை என்பதே தேற்றம். அவை போல அநாதியே உயிர்களோடு சகசமாய் நின்ற மும்மலங்களும் நல்லசிவமுத்தி நிலைக்கண் விண்டொழியுமென்றே கொள்க. ஆண்டு விண்டொழியினும் ஏனைப்பெத்தரிடத்துக்காணப்படு தலால் அவை நித்தப் பொருளாதற்குமிழுக்கில்லை இறைவன் ஆன்மாக்களுய்யும் பொருட்டு வேதசிவாகமங்களை அருளினர். வேதசிவாகமங்களிற் கூறிய வண்ணம் நடக்க எண்ணுவது ஆன்ம இச்சையாம். அவ்வாறு நடக்க வெண்ணிய ஆன்மாவை நடப்பிப்பது இறைவனிச்சையாம். ஆகவே இச்சையால் இறைபணி இயற்ற எண்ணாத ஆன்மாவிற்கு அவன் எங்ஙனம் அதனைக்கூட்ட இறைவன். ஆன்மாவும் எங்ஙனம். இருவினை யொப்பு உறும். அக்காலமெல்லாம் ஆணவசத்தி மிண்டி நில்லாதோ? எண்பத்து நான்கு யோனி போதங்களுள் மனிதயோனியுள் மன்னியன்றோ பெருப்பாலும் முத்தி பெறவேண்டுவது. மனிதயோனியொழிந்த மற்றயோனிகளின் மன்னிய உயிர்சள் அம்மனிதயோனி எய்த எத்தனை காலம் செல்லும். மனிதயோளியுட் பொருந்திய உயிரும் எத்தனையோ ஊழிகாலம் இறைவனை அர்ச்சித்தன்றோ நல்லறிவு சுடர்கொள்ளும். ஆதலால் ஆன்மா, மலபரிபாகம் வரும் வரை மலசத்தியால் மொத்துண்டு அலைவதன்றி இறைவன் சத்தியால் அருள் பெறுவது எங்கனம். காலவெல்லை கூறுவார்யார்? காலவெல்லை கருது வார்யார்? ஒருவருமின்று சிற்றறிவும் சிறுதொழிலும் உள்ளபசுக்களோ இறைவன் திருவிளையாட்டின் எல்லையை அறியவல்லார்; அந்தோ அவர் அறியாமை இருந்த வண்ணம் என்னென்பேம் இருவினை யொப்பின்றி மலபாகம் வராபையால் அவ்வொப்புறுதற்கு இயையாத ஆன்மாக்கள் அநாதியே சுழன்று கொண்டிருக்கின்ற பிரட்சக்கரத்தில் நின்றுகொண்டு சுழன்று திரியுமேல் முத்தி எய்துதல் எங்ஙனம். மலபரிபாகம் நிகழ்ந்து இறைவன் சத்தி பதியும்வரை மலத்தின் சத்தி அதிக ஆற்றலுடன் நின்று தொழிற்செய்வதால் ஆன்மஞானம் அதன் வழிமிக்கோங்கி நின்று செல்லுதல் கூடும். இருவகை சத்திகளும் ஒரு நிலைக்களமாகிய ஆன்ம வியாபகத்தில் தொழிற்பட்டகாலத்திலன்றே வலியதாகிய இறைவன் சத்தி மெலியதாகிய ஆணவசத்தியைக் கீழ்ப்படுத்தி நிற்கும். வலியதாகிய இறைவன் சத்திபதிதற்கு பலபரிபாகம் வேண்டற்பாலதாம். அதற்குரிய துணைக்காரணங்களைக் கைக்கொள்ள நினையாச்குற்றம் ஆன்மாவின் பாலதன்றோ. அப்படிக்கின்றேல் இறைவன் இதுவரை யாவரையும் முத்தியில் வையாதிரான் அக்குற்றம் ஆன்மாவின் பாலதாயிருத்தலினால் எல்லா ஆன்மாக்களும் முத்தி எய்தி விடுமென்பது இல்லவேயில்லை. ஆதலால் அன்டர்களே.

இருவினையொப்பு வருதற்குரிய இறைபணியியற்றினீராகில் மலபரிபாகயெய்தி சத்திநிபாதமுற்று இறைவன் திருவடியில் என்று மாறாமுத்தியின்பம் அது பவித்தல் கூடும். சுபம்.

பித்தனென்றெனை யுலகவர் பகர்தோர் காரணமிது கேளீ
ரொத்துச்சென்று தன் திருவருட்கூடிடு முபாயம தறியாமே
செத்துப்போயருநரகிடை வீழ்வதற்கொடுப்படுகின்றேனை
யத்தனாண்டு தன்ன பரிற் கட்டியவதிசயங்கண்டாமே.

      பிணக்கிலா தபெருந்துறைப் பெருமானுன்னாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாத தோரின்பமே வருந்துன்பமே துடைத்தெம்பிரா
னுணக்கிலாத தோர்வித்து மேல்விளையாம் லென்வினை யொத்தபின்
கணக்கிலாத் திருக்கோல நீவந்து காட்டினாய்க் கழுக்குன்றிலே.

      ஊசலாட்டுமிவ்வுடலுயிராயின விருவினையறுத்தென்னை.
யோசையாலுணர்வார்க் குணர்வரியவனு ணர்வுதந்தொளியாக்கிப்
பாசமானவைபற்றுத் துயர்ந்ததன் பரம்பெருங்கருணையா
லாசைதீர்த்தடியாரடிக் கூட்டியவதிசயங்கண்டாமே.

மன்னுமிருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னுமானே மலந்துரந்து - - தன்னின்
வலித்திரும்பைக் காந்தம்வசஞ் செய்வான் செய்தல்
சலிப்பில் விகாரி யவன்றான்.

                      S. பால்வண்ண முதலியார்.  
                                   திருநெல்வேலி

சித்தாந்தம் – 1913 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment