Sunday, May 10, 2020



மும்மூர்த்திகள்.

மக்கள் பண்டைக்காலத்திலிருந்தே தங்களினும் மேலான ஒரு பொருள் இருக்கின்றதெனக் கருதி அப்பொருளை வழிபட்டு வரும் இயல் புடையரா யிருக்கின்றார்கள். எந்தப் பொருள் மனிதர்களுடைய ஆன்ம உணர்ச்சியை எழுப்பி விட்டு அவர்களைச் சிந்திக்கும் படியும், நன்மார்க்கத்தில் ஒழுக்கும் படியும் செய்கிறதோ, எந்தப் பொருள் ஒவ்வொருவருடைய மனோபாவசு உணர்ச்சிக்கு ஒவ்வொரு விதமாய்த் தோன்றி அவர்கள் ஒவ்வொருவரும் தாந்தாம் கொண்டதே உண்மையென மருண்டு தம்முள் போரியற்றி நிற்கத் தான் மாத்திரம் சாட்சி மாத்திரையாய்த் துலங்குகின்றதோ, எந்தப் பொருள் தூல ரூபமாய் அறிந்திடுதற்கும் சூக்கும ரூபமாய் உணர்ந்திடுதற்கும் ஏலாதவாறு இரண்டு மற்ற நிலையிலிருந்து கொண்டு ஒரு சிலர் உருவம் என்று வழக்கிடுதற்கும் வேறு சிலர் அருவம் என்று வாதிடுதற்கும் இடந்தந்து நிற்கின்றதோ, எந்தப் பொருள் எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் நிரம்பியதாய் உலகத்தோடு கலந்து அதனை அசைவித்து உயிர்களோடு கலந்து அவைகளை அறிவித்தும் வருகின்றதோ, அந்தப் பொருளே மேலான பொருள் என்று மக்களாற் கருதப்படும் பொருளாம் - அதுவே கடவுள் என்று அழைக்கப்படும் பரம்பொருளாம்.

இனி, இந்தக் கடவுள் என்னும் செம்பொருள் ஒன்றா அல்லது பலவா எனின், ஒன்றேயாம். பலவென்று கூறலாகாதோ வெனின், ஆகாது. ஏனெனில் ஒன்றுக்குமேல் இரண்டு பொருள் இருப்பின் ஒன்றைவிட மற்றொன்று ஆற்றல் மிகுந்ததாயிருக்கும். ஆற்றல் மிகுந்தபொருளால் மற்றொரு பொருள் தாழ்வெய்து மாதலால். அப்பொருள் கடவுள் என்று அழைக்கப்படுதற்குச் சிறிதும் உரியதன்றாம். ஏனெனில் எல்லா அறிவும், எல்லா ஞானமும், எல்லா இன்ப மும் எல்லா ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றதாய்த் தான் என் றனுள் அடங்காமல் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கும் பொருள் கடவுள் எனப் பெயர்பெறுமே தவிர ஏனைய பொ ருள்கள் அப்பெயர் பெறுதற்கு உரியவாகா'' இரண்டு பொருள்கள் எல்லா வகையினும் தம்முள் ஒத்த தன்மையவாய்க் காணப்படுத்தலில்லை'' என்பது தருக்க நூற்றுணிபு., - தற்கால பூதபௌதிக சாஸ் திரங்களால் அறுதியிடப்பட்ட உண்மை. ஆகவே இரண்டு கடவுள் உண்டென வைத்துக் கொண்டோமானால் ஒன்றைவிட மற்றொன்று : ஆற்றல் மிகுந்ததெனக் கொள்ள நேரிடும். அங்ஙனம் நேர்ந்திடின் ஆற்றல் மிகுந்தது கடவுள் என்றும், மற்றொன்று கடவுள் அன்றென் றும் முடிவு செய்திடுதல் வேண்டும். இரண்டும் சமமான ஆற்றலுடையது என்று வைத்துக்கொண்ட போதிலும் 'ஒன்றினால் ஆகக் கூடிய காரியந்தானே மற்றொன்றாலும் ஆக முடியும்? இதற்கு இரண்டு எதற்காக? " என்று வினவுவார்க்குப் பதில் கூற முடியாமல் தயங்க நேரிடுகிறது. ஆகவே கடவுள ஒன்று என்று கொள்ளலே பொருத்த முடைத்தாம்.

"அங்ஙனமாயின் இந்துக்களாகிய நம்முடைய மத நூல்களில் பிர்மா, விஷ்ணு, சிவன், என்னும் மூன்று கடவுளர்களைப்பற்றிய பிரஸ்தாபம் வரக்காரணம் யாது. சிருஷ்டித் தொழிலாகிய படைத்தலை நான்முகனும், திதித் தொழிலாகிய காத்தலை நாராயணனும், சங்காரத்தொழிலாகிய அழித்தலை உருத்திரனும் முறையே இயற்றிவருகிறார்கள் என்று புராணங்கள் கூருகின்றனவே? அங்ஙனம் கூறுதற்குக் காரணம் என்ன? மூன்றும் ஒரே கடவுளா, ஒன்றாயின் மூன்று பெயர்கள் எதற்காக? மூன்றாயின் ஒரே கடவுள் தான் உண்டெனக்கூறு தல் யாங்ஙனம் பொருந்தும்?” என்னும் இவை போன்ற பல ஆசங்கைகளை ஒருவாறு தீர்த்திடுவான் கருதியே இவ்வியாசம் எழுதப்படுகிறதென்பது.

நம்முடைய கட்புலனுக்குக் காணப்படுகின்ற இந்த நிலவுலகத்தில் இரண்டுவிதமான சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன, அவை யாவன; அறிவுள்ள சேதன வஸ்துவின் இயக்கம் ஒன்று, அறிவற்ற அசேதன வஸ்துவின் இயக்கம் மற்றொன்று. அறிவுள்ள'சேதன வஸ்துவின் இயக்கத்தைச் சிற்சக்தி என்றும், அறிவற்ற அசேதன வஸ்துவின் இயக்கத்தைச் சடசக்தி என்றும் ஆன்றோர் வழங்குவர். இவை முறையே 'புருஷன்'' பிரகிருதி' என்றும் சொல்லப்படும். இவைகளை மேனாட்டுத் தத்துவசாஸ்திரிகள் முறையே  'Intelligent Active Force' என்றும் ' Blind  passive Force '' என்றும் கூறுவர். இந்த இரண்டு சக்திகளின் இயக்கம் இல்லா விடில் இவ்வுலகில ஒன்றுமே நடைபெறாது.

இவ்விரண்டு விதமான சக்திகளுள் முதலில் சடசக்தியை நாம்'எடுத்துக்கொள்ளுவோம். சடப்பொருளாகிய இப்பிரபஞ்சத்திற்கு மூன்றுவிதமான நிலைகள் உள. அவையாவன : - 1. ஸ்தூல நிலை 2. சூக்கும நிலை 3. காரணநிலை, நம்முடைய கட்புலனுக்கு விவித பேதங்களோடு ஸ்தூலாகாரமாய்க் காணப்படும் பிரபஞ்சம் இச்சமயம் : எந்நிலையிலிருக்கிறதோ அந்திலையே ஸ்தூல நிலையாம். இந்த நிலையின் ஒடுச்கமே சூக்குமநிலையாம் மாயையில் ஒடுங்கி நிற்கும் நிலையேகாரண நிலையாம். சைவசித்தாந்த முறைப்படி பரமாணுக்களினும் நுண்ணி தாயுள்ள சடவஸ்துவே மாயை என்று சொல்லப்படும். இந்த அதிநுட்பமாகிய வஸ்துவே பிரகிருதி மாயை என்றும் சொல்லப்படும். சடசக்தியாகிய பிரகிருதியும் சிற்சக்தியாகிய புருஷனும் ஒன்றோடொன்று கலப்பு றுவதனாலேயே பிரபஞ்சம் தோன்றி, இன்று, அழிகின்றது.

இவ்விரண்டு சக்தியையும் கலப்பதனால் உண்டாகும் இயக்கமே புருஷப்பிரகிருதி (Spirit - matter) என்று சோல்லப்படும். இவை இரண்டும் ஒன்று சேருங்கால், பிரகிருதியில் மூன்றுவித நிலைகள் ஏற் படுகின்றன. அவையாவன; - 1. சத்துவம் 2. இராசதம் 3. தாமதம். இர்மூன்று நிலைமைகளுக்கு ஏற்பவே சிற்சக்திபிலும் மூன்று நிலைசுள் உள.

இவ்வுண்மையை விளந்துவதற்காகத்தான் இராசத குணத்தால் பிர்மா பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தாரென்றும், தத்துவ குணத்தால் விஷ்ணு பிரபஞ்சத்தைக் காக்கின்றார் என்றும், தாமதகுணத்தால் சிவன் பிரபஞ்சத்தை அழிக்கின்றார் என்றும் நம்முடைய புராணங்கள் உருவகப்படுத்திக் கூறியிருக்கின்றன. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய தத்துவார்த்தம் யாது? புருஷப் பிரகிருதியின் மூன்று விதமான நிலைமைகளே - அதாவது உலகம் சிருஷ்டிக்கப்படும் போது அது நிற்கும் நிலையும், காக்கப்பட்டு வரும்போது அது நிற்கும் நிலையும், இனி அழிக்கப்படும் போது அது நிற்கும் நிலையும் - பிர்மா, விஷ்ணு, உருத்திரன் என்று உருவகப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதே. உலக சிருஷ்டி என்பது கட்புலனுக்குத் தோன்றாமல் அதிசூக்குமநிலையில் பிரிந்து பிரிந்து நிற்கும் பரமாணுக்கள் ஒன்று சேர்ந்து கட்புலனுக்குத் தோன்றும்படியான ஸ்காலரூபத்தை அடைதலாம். இவ்வணுக்கள் ஒன்று சேருவதற்கு மிகவேகமான இயக்கம் வேண்டும். ஒரு காரியத்தை விரைவாயும் ஊக்கமாயும் செய்து முடிப்பது இராசதகுணத்தின் இயல்பாதலால், சிருஷ்டி கடவுளான பிர்மா வுக்கு இராசதகுணம் கற்பித்தும், ஒன்றை இரட்சித்து வருவதற்கு அமைதியும் சாந்தமும் அவசியமா தலால், அக்குணங்களை இயல்பாகக் கொண்ட சத்துவ குணத்தை இரட்சிக்கும் கடவுளான விஷ்ணுவுக் குக்கற்பித்தும், ஒன்றை அழிக்கும் குணம் தாமதகுணத்தின் இயல் பாதலால் சங்கார கிருத்தியத்திற்குரிய சிவபெருமானுக்கு அக்குணத்தைக் கற்பித்தும் நம்பு பாணங்கள் கூறியிருப்பதானது மிகவும் பொருத்தமுடையதாம் என்க. ஆகவே, படைத்துக் காத்து அழிக்கும் சக்திகளே பிர்மா, விஷ்னு, சிவனென உண்மை நூல்களில் பிரஸ்தாபிக் கப்பட்டுள்ளன : இம் மூன்றும் வெவ்வேறு சக்திகளோ எனின்; அன்று, மற்று யாதோவெனின்; - ஒரே சக்தியின் மூன்று விதமான நிலைகள் என்று உணர்க.

இதனை ஒரு சிறு உதாரண முகத்தால் விளக்குவாம்.. இராமன் என்னும் பெயருடையான் ஒருவன் நியாயவாதியாயும், போதகாசிரியனாயும், உபந்நியாசகனாயும் இருக்கின்றான் என்று நாம் வைத்துக் கொள்ளுவோம். அவன் வீட்டிலிருக்கும் போது அவனை இராமன் என்று எல்லோரும் அழைக்கின்றார்கள். நியாய ஸ்தலத்திலிருக்கும் போது நியாயவாதி என்று அங்குள்ளார் கூறுகின்றார்கள். அவன் கல்வி பயிற்றுவிக்கும் போது போதகாசிரியர் என்று மாணாக்கர்கள் அவனை அழைக்கின்றார்கள், பயரங்கத்தில் பேசும்போது அவனை உபந்நியாசகர் என்று பொது ஜெனங்கள் சொல்லுகிறார்கள். அங்கனம் ஒரே மனிதன் அவன் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவ்வச்சமயங் களில் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படினும் உண்மையில் உள்ள மனிதன் ஒருவனே, - அப்பெயரெல்லாம் அவனையே குறிக்கின்றன. அஃதேபோல் எல்லாம் வல்ல இறைவன் சிருஷ்டித் தொழில் செய்யும் போது பிர்மா என்றும், காத்தற்றொழில் புரியும் போது விஷ்ணுவென்றும் சங்கார கிருத்தியஞ் செய்யும்போது சிவன் என்றும் அழைக்க ப்படுகின்றார். ஆனாலும் கடவுள் ஒருவரே, - அம்மூன்று பெயர்கள்ளும் அவர் ஒருவரையே குறிக்கின்றன. இவ்வுண்மையை வலியுறுத்தவே.

“ஒருருவாயினை மானாங்காரத்
தீரியல்பாயொரு விண்முதல் பூதல
மொன்றிய விரிசுடரும்பர்கள் பிறவும்
படைத்தளித்தழிப்பமும் மூர்த்திகளாயினை''.

என்று ஸ்ரீ ஞானசம்பந்தப்பெருமானும் திருவாய்மலர்ந்தருளினார்,

செழும் தேவர் கோவறியாத தேவதேவன்
மற்றை பொழில்கள் பயந்து காத்தழிக்கும்
மூவர்கோனாய் நின்ற தனிமுதல்வன்'' "
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ.''

என்னும் தமிழ்வேதத் திருவரக்குகளும் இக்கருத்துப்பற்றியே எழுந்தன.

உண்மை இவ்வாறிருப்பவும் அதனை உணராது, பல கடவுளர் இருப்பது போற்கொண்டு, விஷ்ணுவே உயர்ந்தது 'என்று வைணவர்களும்'' சிவமே உயர்ந்தது'' என்று சைவர்களும் தம்முள் தருக்கையாடி வீண்வாதம் புரிதல் பெரியதோரறியாமையாகும் இங்ஙனம் மதப்போர் விளைவிப்பதால் ஜனசமூகத்தில் ஒற்றுமையும் அன்புரிமையும் குறைதற்கு இடமுண்டாகின்றதே யன்றி வேறு நற்பயன் ஏதும் விளைவதாயில்லை.

நாகை - வி. கோபாலகிருஷ்ணன்.

சித்தாந்தம் – 1914 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment