Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
தெய்வச் சேக்கிழார்
திருவாக்குண்மை.

சிவனடியே சிந்திக்குத் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்.''

நன்னெறிப் பேற்றிற்கேதுவாகிய முற்றவ விசேட முடையரும் பருவமுதிர்ச்சி யுடைய்ருமாகலான் அவர் தாம் தமது ஞானசத்தி அன்னிய - மின்றித்தமக் காதாரமாய் உடனின் றறிவித்து உபகரிப்பதாய முதல்வனது.. ஞானசத்தியேயாய் நிற்றலின் தன்ன றிவென வேறாய் அறியுமாறின்றி அதனறிவேயர் யறிவதாய தமது ஞானசத்திய தியல்பும், இனியவர் தமது இச்சாசத்தி மேலோதியவாறு நின்று இச்சித்துபகரிப்பதாய முதல்வனது இச்சாசத்தியேயாய் நிற்றலின் தமது இச்சையென வேறாயிச்சித்தலின்றி அதனிச்சையேயாய் இச்சிப்பதாய தமதிச்சாசத்திய தியல்பும், இனியவர் தமது கிரியாசத்தியும் அவ்வாறே நிற்றலின் தமது செயலென வேறாய் செய்யும் செயலின்றி அதன் செயலேயாய்ச் செய்வதாய தமது கிரியா சத்தியதியல்பும், இனி அசத்தானறிவு விளங்கும்வழி தனக்காதாரமாகாது வேறாய்நின்றுபகரிப்பதாய ஆகமமென்னும் அபரஞானமும் அசத்தைஉணர் தற்குரிமை யில்லாதாய மேலதற்கு மறுதலையாய் நின்று உபகரிப்பதாய் பரஞானமும் ஆகிய இவற்றை இந்நிலையில் தன்னறிவு அச்சிவனடியுளடங்கி அறிவிறந்தறிந்தனர் அந்நிலைபோல. (எ - று.)

முதல் தவத்தர் சம்பந்தர் தாம் சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் ஒங்கிய இனின் பாங்குஞானம் பவமதனை யறமாற்று ஞானம் அந்நிலையின் உணர்ந்தார் எனக்கூட்டுக. 

சிவனடி - சிவசத்தி. அறிவிக்கு முபகாரமாத்திரையே ஆண்டு அறியு முபகாரம் உளதென்பதியை பில்லை யென்பதனையும் பசுகரணம் கிவகரண கன்றறியு மென்பதே இயையுமென்பதனையும் நீக்குதலின் ஏகாரம் இயை பின்மை நீக்குதற்கும் பிறி தினியைபு நீக்குதற்கும் பொதுவாய்நின்ற பிரி நிலை. தேற்றமெனினும் அமையும். சிந்தித்தல் - எவற்றையு மொருங்கே பொதுவாயறிதல் போலாது சிறப்பாயறிதல்.

பாச வறிவின் நீக்குதற்குத் திருவெனவும், மலத் தடைதீர்ந்துஏகதேச விடுதியுடைத்தென்ப துணர்த்தற்குப் பெருகும் எனவும் விசேடிக்கப்பட்டன, சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு என்றது மாற்றுதல் பாங்கு என்பவற்றோடுங் கூட்டியுரைக்கப்பட்டது. கிரியாஞானத்தை ஞானமென்றது தலைக்குறை. ஆண்டுசிந்தித்தல் என்பது “எத்திறம் ஞானமுள்ள தத்திறமிச்சை செய்தி" என்பவாகலின் பிள்ளையாரதிச்சை கிரியைகட் கேற்ப இச்சித்தல் செய்தல் எனக் கொண்டுரைக்கப்பட்டது. சிவனடி யென்பது பொதுச்சொல். முன் வரும் ஞானம் என்பதும் அது. சிவஞானம்  - சிற்சத்தி. அவை முறையே. அப்பொருளாமாறு சிவசத்து  என்பது சித்துச்சத்து என்னும் பொருட்டு" எனவும் ஞானம் சாத்திக்குப் பரியாயப்பெயரெனவும் உரைத்தருளிய உரையோத்துடையார் திருவாக் கானுமறிக. மும்மலவறு திகாட்சிப் புலனாதல் செல்லாமையின், காட்சிப் புலனாயெளி தின றியப்படுவதாய பிறவியறு தியையே ஈண்டோதினார். படி முறையின் வைத்துணர்த்துதல் மரபாகலின் பற்றறக்கழித்தொழிப்பதென் பார் மாற்றுமென் றொழியாது அறமாற்று என வைத்தோதினார்.. அது பகுதிப் பொருள் விகுதி. பாங்கு - இச்சை. அது இச்சைக் குரியாரை பாங்கன் பாங்கி என வழங்கு மாற்றானுமறிக. இன்ப இன்பம் எனற்பாலது இனின் எனத்திரிந்து நின்றது. இன்ப இன்பம் - இன்பத்துளின்பு. அதாவது ஏனை இன்பெல்லாம் துன்பாமாறு நிகழும் இன்பு. ஓங்குதல் - மீதுருதல். ஓங்கிய இனின்பாங்கு ஞானம் என இயையும். அத்துவித வுரிமை யறியுந்தோறும் அறியுந்தோறும் அப்பொருட்கட் செல்லுமிச்சை அடங்காது மீதூருமாகலின் அவ்வழி அவ்விச்சையே தானாக விளங்கித்தோன்றும் பேரானந்தம் என்பது தேற்ற ஓங்கிய இன்ப இன்ப பாங்கு ஞானம் எனப்பட்டது.. ஞானம் என்பது மாற்றுதல், பாங்கு என்பவற்றோடு - தனித் தனி சென்றியையும். அறிவு இச்சை செயல்கள் மூன்றுமொருங்கே உடனாய் நிகழுமியல்பின் கண் என்றவாறுரைப்பினு மமையுமாகலின், அதுபற்றி ஈண்டுச் செயலிச்சையென வைக்கப்பட்டது. சீவனது இச்சாஞானக் கிரியைகளின் நிகழ்ச்சி சிவன்து இச்சாஞானக் கிரியைகளின் நிகழ்ச்சியை பயின்றியமையாமையின் இவ்வாறு வைத்தோ தப்பட்டது. அது “விரும்பு மாவிரும்பே” “ பணியுமாபணியே” “ கருதுமா கருதே'' என்னும் அநுபவ முடைய ஆசிரியர் திருவாக்கானுமறிக. “அடிக்கீழ் நாமிருப்பதே” எனப் பிள்ளையார்க்கு முன் நிகழும் அதுபவ நிகழ்ச்சி பற்றியும் அது அங்ஙனமாதல் தெற்றென அறியப்படும். ''உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய" என்றதும் அது. உவமையிலா எனவே உயிர்விலா. என்பதும் பெறப்படும். அது செய்பவணியல்பு செயப்படு பொருள்மேல் வைத்து உபசரிக்கப்பட்ட உபசாரம். தம்முள் வியாப்பியமாய ஏனைக்கலைகளின் நீக்குதற்கு அவ்வாறு விசேடிக்கப்பட்ட தென்பது உணர்தற்குச் செயப்படுபொருள் அவாய்நிலையான் வந்தது. அருமை ஈண்டு உரிமையின்மையை உணர்த்தி நின்றது. இனியுணர்த்தற்குரிய மெய்ஞ்ஞானத்தின் நீக்குதற்கு உணர்வரிய என விசேடிக்கப்பட்டது. எனினும், தலையாய அபரஞான உணர்ச்சி நிகழின் பரஞானம் நிகழும் அல்லுழி நிகழாது எனி னும் அமையும். இப்பொருட்கு அருமை இன்றியமையாமை. உணர்தற் குரிய மெய்ஞ்ஞானமாவது - பசுஞானம். ஞானங்களின் முன்னையவை ஆகுபெயராய்ப் பிள்ளையாரது இச்சாஞானக் கிரியைகளை உணர்த்திநின்றன. பின்னைய்வை சிவஞான மாய அபரஞான பரஞானங்களின் மேலான தவ முதல்வர் என்பது முதற்றவத்தர் என விகுதிபிரித்துக் கூட்டப்பட்டது. முதன்மையாகிய தவவிசேட முடையரெனினு மமையும். அது உண்மை ஞானத்துச் சரியை கிரியாயோகமென்னும் இவைமுதல் இல்தவமாவன உபாயச்சரியை முதலியன என்க. சம்பந்தம் - இயைபு. இல்லாத என்னும் பெயரெச்சத்தகரமும் லகரமெய்யுங் கெட்டு நின்றன. திரிபு, ஐயம், தெளிவென்னும் மூவகைக்காட்சியும் முறையே நிகழ்ந்து தன்னியல்பு இடை யிட்டுணரும் ஏனையர்போலாது அவையிடையீடின்றி அப்பொழுதே ஒரு ங்கு நிகழ்ந்து முற்றுப்பெறும் அதிபரிபக்குவ முடையரென்பது தேற்ற சம்பந்தர் என்றோ தப்பட்டது. ஆகலான் என்பது சொல்லெச்சம். தாம் என்பது உயர்த்தற்கண்வந்த அநுவாதம் “உளதாய் நிற்பது ஞானசொரூபம்” என்னுஞ்சுருதி பற்றி புதிதன்றென்பது தேற்ற அடைந்தார் என்னாது உணர்ந்தாரென்றார்.

அந்நிலையில் என முன்வருதலின் ஈண்டு இந்நிலை யென்பது தானே பெறப்பட்டது. இல் - உவம உருபு. இனி அந்நிலையின் என்பது பாடமா யின் அதுவுமது அநுபவமுடையராய எமது குரவர் பிள்ளையார் கலைஞா னம் மெய்ஞ்ஞானங்களை உணர்ந்தனரென முன் ஓதுகின்றாராகலின் முறை யே உணர்வருமை, உவமையின்மையினவாய அவைதாம், தம்மை யுணர்தற் குரிய கருவியுள் வழியன்றி நிகழாமையின் அதற்குரிய இயைபு என்னுஞ் சிறப்பு உபகாரம் முன் உணர்த்துவாராய் சிவனடியே சிந்திக்கும் சிற்சத்தி, சிவனடியே செய்யுங் கிரியாசத்தி, சிவனடியே இச்சிக்கும் இச்சாசத்தியென வைத்தோ தினார். என்னை? தன்னை யறிந்தன்றித் தலைவனையறிய மாட்டாதாய உயிர் சிவனை யறிதற்குச் சிவஞான மின்றி யமையாதவாறு போல, அறிவித்தாலன்றி யறியலாகாத தன்னையறிதல் சிவனருளாய் சிவனடி - வேற்ற நின்று சிறப்புவகையான் அறிவிப்ப அறியுமியல்பிற்றென அறிவதூஉம் தனது வியாபகமெங்கும் அறிவுவிளங்கப் பெறுவது உமாய'இந்நிலையில் நிகழ்ந்த தன்னறிவு நிகழ்ச்சியதியல்பு இதுவென முன்னறிந்து கோடல் இன்றியமையாது வேண்டப்பட்டுடைமையான். இதனானே ஈண் டோதிய ஞானசத்தமெல்லாம் சத்த ஒப்புமைபற்றி நான்கு மூன்று இர, ண்டு ஈரிரண்டாம் போலுமென இப்பொருள் காணமாட்டா துரைப்பார் உரைப்பனவெல்லாம் போலியா யொழியுமாறும் மனக்கோட்டம் விட்டு நுண்ணுணர்வும் நடுவு நிலைமையு முடையராய் நோக்குவார் யார்க்கும் இனிது விளங்கும். ''கண்டொல்லை காணுநெறிகண்ணுயிர் நாப்பணொளி யுண்டில்லை யல்லாதொளி" "புன்செயலினோடும் புலன் செயல்போல் நின் செயலை மன்செயலதாகமதி' “ஓராதே யென்றையு முற்றுன்னாதே நீ முந்திப்பாராதே பார்த்ததனைப்பார்" என்றெழும் திருவாக்குகளும் அது.

உயிர் அறியுமாற்றிவிப்பதாய சிற்சத்தி யெனப்படும் சிவனடியே மெய்ஞ்ஞானமாகலானும், அச்சிவனடி வேற்ற நின்றறியும் ஆன் மசிற்சத் தியே மெய்ஞ்ஞானமாவதன்றி வேறன்மையானும், முன் வரும் மெய்ஞ் ஞானத்தின் ப்ரியாயப் பெயராய்நின்ற சிவனடியே உணருமாற்றை சிவனடியே சிந்திக்கும் சிற்சத்தி யெனவும், கிரியர்சத்தி இச்சாசத்திக ளென வும், சிவனது சத்திகளாக முன்னும் வைத்தோதிய தென்னையோவென மலையற்க. உயிர் தன்னை யறியுங்கால் உடன் நிகழ்வது தலைவனையறித லென்னும் இடையீடின்மை யுணர்த்தற்கும் அறிவேயாதலும் வேறாதலும் உடனாதலுமாய முத்திறமுந் தன்கட்டோன்ற நின்ற சுத்தாத்துவித இயல் புணர்த்தற்கும் அவ்வாறு உரைத்தாராகலின் ஏனையவும் இவ்வாறோர்ந் துணர்ந்து கொள்க.
திருப்பெருகு என்பது இடைப்பிறவரல் இஃதென் சொல்லியவாறோ' வெனின் பாலினெய்போல வேறாயும் தமக்கு முதலாயும் இதுகாறும் முன்னின்றுணர்த்தி வந்த பரம்பொருளே பருவமறிந்து அந்நிலைமாறி ஆண்டுத் தயிரின் நெய்போலவிளங்கிச் சுத்த சைதன்னியமே சொரூபமாய், குரு உருவாய் அறிவுறுத்து நின்ற ஏதுவானே, பிள்ளையார் மேற்சரியை முதலிய மூன்றும் முற்றிய பின்னர் இம்முற்றுதலானே மலபரிபாகம் சத்தரிபாதம் நிகழ்ந்து தத்துவஞானத்தின் அவாவுதலுடைய ராகலானும், அப்பேறு பெறுதற்குரிய பருவமுதிர்ச்சியுடைய உத்தமத்திலுத்தம, அதிகாரமுடையராகலானும் முதல்வனையின்றி அமையாராய அப்பிள்ளையார் ஆண்டு விடயத்தை அறியுங்கால் அம்முதல்வனது சிற்சத்தி பிள்ளையாரது சிற்சத்தி யெனத்தானென வேறின் றியுடையனாய் விரவிநிற்ப முதல்வனும் அவ்வாறு - விரவிநின்று பிள்ளையார்க்கறிவித்த தொன்றனைப் பிள்ளையார் அறிந்தன ரென்றும் அவரை அதிட்டித்து நின்ற தானறிந்தானென்றும் பகுத்தறிய வாராது அவர் ஞானசத்தி இவன் ஞான சத்தியாய இருவகை யறிவும் என் றனையொன்று விடாது அத்துவிதமாய் ஒருங்கு நிகழுமாறு செய்துவரும் இவ்வுபகாரநிகழ்ச்சி ஆண்டுப்பிள்ளையாருக்கு இனிது விளங்கி யுண்மையின் பிள்ளையார் அம்முதல்வனோடு உடனாய் நின்றறியினும் தமது அறிவென வேறு காணப்படாதவாறு அவனோடொற்றுமைப்பட்டுத் தன் செய்திக்கு முதல்வன் செய்தியை யின்றி யமையாமையின், அவனருளின் வழி நிற்பாராய் அம்முதல்வன் அங்ஙனம் அத்துவிதமாய் உபகரித்து வருமுண்மையை மறவாதறிவதாகிய பாச அறிவிச்சை செயல்களல்லாத முழுதும் வெளிப் பட்டுத் தோன்றும் இச்சாஞானக்கிரியை என்னு மூன்றனுள் அறிவு அறி யுந்தோறும் அறியுந்தோறும் அப்பொருட்கே செல்லும் இச்சை அடங் காது மீதூருமாகலின் அவ்வழி அவ்விச்சையே தானாகத்தோன்றும் பேரானந்தத்தை அனுபவித்தனரென அப்பிள்ளையாரது அறிவிச்சை செயல்கள் மூன்றுங்கண்டு விடயிக்குமாறுணர்த்தி அவர்க்கு நிகழ்ந்த அதீத நிலைய தியல்பு கூறுமுகத்தானே அவர் பேறு கூறியவாறாயிற்று.

இனி, இதனுள் ஓதப்படும் அறுவகைப் பெயரெச்சங்களானும் பிள்ளை யார்மாட்டு பதியப்பட்ட அறுவகைக் குணங்களும் ஓதப்பட்டன என் றுரைத்துக் கோடலுமொன்று. அஃதெங்ஙனமெனிற் காட்டுதும். சிவனடியே சிந்திக்கும் எண்பதனால் வரம்பிலின்பமும், திருப்பெருகும் என்பதனால் அளவிலாற்றலும், பவமதனை யறமாற்றும் என்பதனால் பேரருளுடைமையும், பாங்கினி லோங்கிய என்பதனால் தன்வயமுடைபையும், தூயவுடம்பின னாதலும் ஈண்டேயடங்கும். உவமையிலா என்பதனால் முற்றறி வுடைமையும், உணர்வரிய என்பதனால் இயற்கையுணர்வு உடைமையும், இயல்பாகவே பாசங்களினீங்குதலும் ஈண்டேயடங்கு மெனக் கொள்ளப்படும்.

சிவஞான பரமாசாரியப் பரம்பொருளின் திருவடி வெல்க.

வி. குஞ்சிதபாதம் பிள்ளை.
சி. வீரசோழகன்
ஸ்ரீ சிவஞானத்திருத்தளி
ஸ்ரீ சிதம்பரம். 

சித்தாந்தம் – 1916 ௵ - மே ௴


No comments:

Post a Comment