Sunday, May 10, 2020



ஸ்ரீ சேக்கிழார் பெருமான் பெருமை
[சமரஸம் சுவைப்போன்]

1. ஸ்ரீ சேக்கிழார் பெருமான் எண்ணூறு ஆண்டுகட்கு முன் கோவூருக்கடுத்த குன்றத்தூரிலே நல்லொழுக்கம் சான்ற வேளாளர் குலத்தில் சேக்கிழார் குடியில் அருண்மொழித் தேவர் என்ற பெயரோடு அவதரித்தார். இவர் பெருமையை அறிந்த இரண்டாம் குலோத்துங்க சோழன் என்ற அரசன் இவரைத் தனது முதல மந்திரியாக்கி இவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் கொடுத்து நலமுடன் ஆதரித்து வந்தான். சேக்கிழார் பெருமான் அரசனுக்குச் சிவனடியார்கள் பெருமையை எடுத்துக் கூறிச் சுயநல சமயத்திலிருந்து பரநல சமயத்திற்கு உள்படும்படிக்குச் செய்தார். அரசனது வேண்டுகோளுக்கிரங்கி அம்பலவன் கிருபையால் பதின்மூன்று சருக்கங்களாக நான்கு வேதக் கருத்தையும் 4253 பாடல்களில் அமைத்து உலகங்கள் உய்யுமாறு செய்து மடித்தார்.  'கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை யுள்ளோர் பெற்றோமென வுகந்து பின்பு கற்பர்'' என்பது போலச் சேக்கிழார் பெருமான் செய்த பெரியபுராணத்தின் பெருமையை ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் அளவிட்டுச் சொல்ல முடியாதென்றால் மற்றாரால் சொல்லத் தகுதி? - - எல்லா வேதங் களிலும் சிறந்தது சாமவேதம். அதற்கு ரசமாகச் சொல்லப்படு வது ப்ரணவம். அதைப் பூர்வமாகக் கானம் பண்ணப்படுவது உத்கீதம். அந்த உத்கீத அவயவமான ப்ரணவத்தைச் சாந்தோக்கியந் தன்னில் முதலில் எடுத்தாற் போல, இங்கும் முதல் பாட்டில் ப்ரணவத்தை எடுத்து எல்லாம் மங்களகரமாகவே அமைத்து மங்களங்களுக்கெல்லாம் மங்களத்தைத் தரும் பிராட்டி உமாதேவி அக்ஷரமான '' என்ற முதல் எழுத்தை அமைத்து அந்த ‘ உ' காரத்தை '' லகில் சோதியன் என்ற ஈஸ்வர வாக்கியமாகிய '' காரத்துடன் சேர்த்துக் காதலாகிய அன்பின் காட்சியைக் காட்டி அதிலிருந்து பெற்று உகந்தது கந்தனையே'' என்ற ஆனந்தத்திற்கு உடலாக '' காரமாகிய மலர் சிலம்படி என்ற வாசகத்தைச் சேர்த்து 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றது போல் ப்ரணவத்தை முதல் பாட்டில் வெகு அழகாகச் சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த முதல் பாட்டின் அர்த்த விசாரங்கள் மற்றப் பாட்டுக்களில் விவரிக்கப்பட் டிருக்கின்றன.

2. 'மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ என்ற உபரிஷத் வாக்யங்கள் போல் 'மலர் சிலம்படி' என்று முதல் பாட்டில் மாதாவையும், 'வரதர் பொற்றாள்' என்று இரண்டாம் பாட்டில் பிதாவையும், 'நமக்கருள் செய்திட' என்று மூன்றாம் பாட்டில் ஆசாரியனையும் 'நாயன்மார்' என்று நான்காம் பாட்டில் 'அதிதி' களையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசாரியன் ஸ்வரூபத்தால் ப்ரணவார்த்தமென்றும், ஐந்து ஞானக்கை என்றும் தாழ் செவி என்றும் நீள்முடி என்றும் யானைக்கு ஒப்பிட்டுக் குணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ப்ரணவார்த்தம் அ. உ. ம. என்று அதாவது ஈஸ்வரன் பிராட்டி ஜீவன் என்னும் மூன்று பொருளைக் குறிக்கிறது. ஐந்து ஞானக்கை என்பது. ஈஸ்வர நிலை, ஜீவ நிலை - புருஷார்த்த நிலை தக்க நெறி - தடை. இவை ஐந்தையும் உபதேசிக்கப்படுவதைக் குறிக்கிறது. இதைத்தான் பஞ்சமூர்த்தி உத்ஸவம் என்றும் சொல்லப்படுகிறது. "தாழ் செவி" என்று கருணையில் தாழ்மையும் "நீள்முடி என்று பரத்வத்தில் உயர்வும் காட்டப்படுகிறது. கடக்களிறு என்பது எப்படி யானை தன் பாகனைத் தன் மேல் வைத்துக்கொண்டு அவன் சொல்படி நடக்குமோ அவ்விதம் ஈஸ்வரனாகிய ஆசாரியனும் தன் அடியார்க்கு எளியவன் என்பதைக் குறிக்கிறது. நாயன்மார் ஸ்வரூபம்
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்''
என்று சொல்லப் பட்டிருக்கிறது. அந்த அடியார்களை ஆதரிப்பது தான் புருஷார்த்த மென்றும் அதனால் குடிமுழுதும் உய்து நல்ல பதத்தால் மனைவாழ்வர் என்ற பலன் ஏற்படுகிறது.

3. ஸ்ரீ சேக்கிழார் "வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்க, பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத. சீத வளவயற் புகலித் திருஞானசம்பந்தர், பாதமலர் தலைக்கொண்டு கிருத்தொண்டு பரவுவாம்" என்று லோகத்தை நீதி முறையில் வாழ்விக்க வேண்டுமென்ற கருத்துடன் நான்கு வேதத்தையும் கடைந்து அதன் உட்பொருளைச் செந்தமிழில் எளிய நடையில் யாவரும் கற்று உணரும்படிக்குப் பெரிய புராணமாகச் செய்தருளினார். இப்புராணத்தில் ஈடுபட்டவர்கள் வேறு எந்த நூலையும் துணை தேட வேண்டியதில்லை. எல்லாச் சாாங்களும் தத்துவங்களும் இதிலே பரிபூர்ணமாய் அடங்கியிருக்கின்றன.

4. வடமொழி வேதத்தில் அறியாத விஷயங்களை எல்லாம் தமிழ்மொழி வேதத்தில் அறிகிறோம் என்று ஒரு வைணப் பெரியார் உபய வேதாந்தமும் வேண்டியது அவசியம் என்று எடுத்துக் காட்டியது போல, வைணவத்தில் அறியாத சில தத்துவங்கள் சைவத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு சமயத்தையும் சேர்த்துப் பார்த்தால்தான் 'ஒற்றுமை கொண்டது என் உள்ளம்" என்பது போல் பிளவு ஏற்படாமல் உபய சித்தாந்தம் என்று - ஒற்றுமை ஏற்படும்.

5. ருக் வேதத்தில் "ஏகம் சத்விப்ரா பஹுதா வதந்தி" என்று சத் ஒன்றே என்றும், உபநிஷத்தில் ''பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்'' என்று பிரபஞ்சத்திற்கும் எல்லா ஆத்மாக்களுக்கும் நாயகனும் ஜனன மரணமில்லாதவனும் மங்களகரனென்றும் அடைந்தவர்களை நழுவ விடாதவன் என்றும், தமிழ் வேதங்களில் ஊழி முதல்வன் ஒருவனே என்றும் எல்லாம் உடைய ஈசனே இறைவனென்றும் பொதுவான நிலைமையில் ஈசனைக் கூறியுள்ளன. ஐந்து விரல்கள் சேர்ந்தால் மட்டும் தொழில் நடக்குமாபோல், ஐந்து பூத ஐக்கியம் தான் ஞானச்சுடர் என்றும் சோதி என்றும் அம்பலத்தில் ஆடுவான் என்றும் சொல்லப்படுகிறது. பூதங்களைப் பிரித்துப் பார்க்கும்போது ஜலம் குளிர்ச்சியா யம், அக்கி உஷ்ணமாயும் வாயு பலமாயும் பூமி பொறுமையாயும் ஆகாயம் ஓசையாயுமிருந்து வருகிறது. வாயு - ஆகாயம் பூமி இவைகளைப் பற்றி விவகாரமே இல்லை. ஜலத்தைப் பற்றியும் அக்கி யைப் பற்றியும் தான் வைணவம் சைவம் என்று விவரித்து வாதிக் கப்படுகிறது. காதலி காதலன் போல் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்திருக்க முடியாத தன்மையில் அரவணைத் துயின்ற ஆழியான் என்றும் நீர்மலி வேணியன் என்றும் சேர்ந்தே பேசப்பட்டும் வழி பட்டும் வரப்படுகிறது. வலத்தனன் திரிபுரம் எரித்தவன் என்றும் மாலுமோர் பாகம் கொண்டான் என்றும் ஒற்றுமையில் சிவபிரான் அவனே என்றும் செங்கண்மால் தானே கண்டாய் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அனுஷ்டானத்தில் கவனித்தால் இருவர் பக்கமும் இலச்சினை ஏற்பட்டிருக்கிறது. இலச்சினை ஸ்வரூபத்தைக் கவனித்தால் ஆழியும் சங்கும் திரிசூலமும் விடையுமாக ஏற்பட்டிருக்கிறது. ஆழி அக்கி ஸ்வரூபத்தையும் சங்கு ப்ரணவமாகிற விக்னேஸ்வரர் ஸ்வரூபத்தையும், திரிசூலம் நாமமாகிற ப்ரணவார்த் தத்தையும் செங்கண்மால் விடையுமான திருமாலையும் குறிக்கிறது. திருநீற்றைக் கவனித்தால் சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன், கால முழுதும் உலகனைத்தும் காக்கும் முதற் காரண மாகும் நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறு தரும் மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவென்னோ'' என்று பெரிய புராணத்தில் கூறப்படுகிறது. "ஆனில் மேய வைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மைநீ'' என்று வைணவத்தில் சொல்லப்படுகிறது. இதனால் திருமாலே திருநீறாகவும் அதை அடியவர் மேனிமேல் நிரந்த நீற்றொளி "ஆயிரம் பாற் கடல் போல்வது என்று இருப்பதாலும் அதை அனுசரித்துப் பாற் கடலில் திருமால் பள்ளிகொள்ளும் பாவனையில் அணிந்து வருவதால் புறம் வைணவம் என்றும் அகம் சைவம் என்று சைவர்க்கு விளங்குவது. திருமண் அடியார் பாததூளி என்றும் திரிசூலமாகவும் வைணவர்கள் அணிந்து வருவதால் புறம் சைவம் என்றும் அகம் வைணவம் என்றும் விளங்குவது, "முகமலர அக நெகிழ அன்பின் நினைந்தனை யல்லால் அறிவுறா மொழி நல்ல'' என்பது போல உள்ளும் புறமும் ஒத்தேயிருப்பன இரண்டும். "திருநீற்றொளி ஆயிரம் பாற்கடல் போல்வது'' என்று ஸ்ரீ சேக்கிழார் பெருமான் வாக்கியத்திலிருந்து அவருக்குப் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலிடத்தில் எவ்வளவு ப்ராவண்யம் இருக்கும் என்பதும் புனலுருவாய் அனலுருவில் திகழம் சோதி என்று திருமங்கை ஆழ்வார் வாக்கிலிருந்து அவருக்கு அனலுரு வாகிய சிவபெருமானிடத்தில் எவ்வளவு ப்ராவண்யம் என்பதும் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் "நீலஉருவில் குயிலே நீண்மணி மாட நிலாவுங் கோலஉருவில் திகழம் கொடி மங்கையுள்ளறை கோயில் - ஞாலம் விளங்க விருந்த நாயகன்'' என்ற வாசகத்தி லிருந்து நீல உருவாகிய திருமாலிடத்தில் எவ்வளவு ப்ராவண்யம் என்பதும் இதனால் நன்கு விளங்கும். நம்மாழ்வார் ஏறாளும் இறை யோனுங் திசை முகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன் என்றார். சுந்தரர் ''வையகம் முழுதுண்ட மாலொடு நான் முகனும் பையின் அரவல்குல் பாவையோடும் உடனே கொய்யளி மலர்ச் சோலை கூடலையாற்றூரில் ஐயன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே'' என்றார். இதனால் வஸ்து ஒன்று பலவிதமாக விளங்குவதும் முடிவில் அந்த வஸ்துவிடத்தில் எல்லாம் ஒடுங்குவதுமாய் இருக்கிறது. இவ்விதம் மாறிமாறி தோற்றமும் அழிவும் ஈசன் ஆக்ஞை என்று அறிவதுதான் ஞானம் என்றும் அதன்படி நடப் பதுதான் செயல் என்றும் அறிந்து வாழ்ந்தோம் காண் என்று பொறாமையும் பற்றுமில்லாமல் சமரஸமாய்க் கூடி வாழ்வதே வாழ்க்கை என்று ஒவ்வொரு சமயமும்  ''ஓதுவார் ஒத்தெல்லாம்'' எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை என்றும் அறுதியிடப்படுகிறது.

6. தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்ற அந்தணனாகி யாகிய சைவ தன்மை (சத்) வந்தால் தான் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் என்ற வைணவத் தன்மை (உயர்வு அற எல்லாம் சத்) என்ற ஞானம் ஏற்படும். அப்போது தான் ஆவின் பெருமை உள்ளபடி அறிந்து ஆயற்கருள் செய்யும்படி நேரிடும். அது தான் கிருஷ்ணன் பிறப்பு பெற்றம் மேய்த்து உண்ணுங் தலம். அது உத்தம லக்ஷணம் என்று கிருஷ்ணனை வழிபடுகிறார்கள். பசு பதி என்று கூறப்படுவதை நோக்குக.

7. பரத்வ நிலையைக் கவனித்தால் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் யாவர்க்கும் கீழாம் அடியேன் " என்றார். நம்மாழ்வார் “தான் முடிவு காணாதே'' என்றார். உயர்வு அற உயர்நலம் உடையவனாயவன் அவன் என்று ஜலஸ்வரூபமாக வர்ணிக்கப்படுகிற திருமால் தான் கீழ்மை என்று மேலிருந்து கீழே போக அக்நிஸ்வரூபமாகிய சிவ பெருமன்கான் கீழ்மை என்று ஜலஸ்வரூபத்தைக் கீழே போகவிடாமல் ஆவியாக்ரித் தன் தலை மேல் கங்கையாக வைத்துக் கொண்டிருக்கறார். இப்படி ஒருவருக்கொருவர் " பாஸ்பர நீசபாவை'' என்று நான் தாழ்மை நான் தாழ்மை என்று சம்பந்தரும் அட்பரும் கூடினாற் போல் இருக்கிற தன்மையைக் கவனித்தால் அவர்கள் அடியவர்களாகிய நாம் என் பெருமான் உயர்வு என் பெருமான் உயர்வு என்று வீண் வாதம் செய்து 'எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை'' என்ற கருத்தின்படி அபசாரப்பட்டு ஆழ்ந்த அஞ்ஞானத்தில் மடிந்து வீழ்கிறோம்,

ஏன் இப்படி சைவம் வைணவம் என்று இரண்டு நூல்கள் ஏற்பட வேண்டுமென்பதற்கு ஆண் பெண் இருவகுப்பு இருப்பதனாலும் இரண்டும் கலந்தால் கான் அன்பு நெகிழ்ச்சி ஏற்படுமென்றும் அதுதான் மண்ணும் மணமும் என்றும் அந்த மணங்கண்டு வாழ்ந்தோமென்றும் சொல்லப்படுகிறது. அப்பர் பெருமான் "ஆலின் இலைமேல் பாலனுமாய அவற்கோர் பரமாய மூர்த்தியவனாம் நமக்கோர் சரணே" என்று திருமால் நினைக்கிற மூர்த்தி தன் மூர்த்தி என்றும், திருமங்கையாழ்வார் சில மாதவத்தோர் சிந்தையாளி என் சிந்தையானே என்று சிவபெருமான் சிந்திக்கிற மூர்த்தி தன் மூர்த்தி என்றார். நம்மாழ்வார் "சிவனொடு பிரமன் வரை திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி யீடும்'' என்றார். எலக்டிரிக் விளக்குக்கு அக்கியிலிருந்து ஒரு காண்டு தலத்திலிருந்து ஒரு கரண்டு இரண்டும் சேர்ந்தால் வெளிச் சத்திற்கு உயிர். ஆனால் இரண்டால் பிரகாசமில்லை, பிரமனாகிய உடம்பு பல்பு சேர்ந்தால் பிரகாசம் உண்டாகிறது. அதுபோல் அருளும் அதனை உடையவனும் வேண்டும். அருளை உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே என்று சொல்லுகிறபடி வேற்றுமை நீக்கி ஒற்றுமைப்படவேண்டும்.

வல்லதோர் வண்ணம் சொன்னால் அது உனக்கு ஆம் வண்ண்மே'' என்றதுபோல் ஸ்ரீ சேக்கிழார் புராணத்தின் பெருமையை அடியேனாகிய சிறியன் அறிந்த மட்டில் தெரிந்து சைவமில்லாமல் வைணவயில்லை வைணவ யில்லாமல் சைவமுமில்லை என்றும், பெரிய புராணம் எல்லா மதத்தாருக்கும் சத்தஸ்யமென்றும், “சத்தியத் தைச் சொல் தர்மத்தைச்செய்" என்று தான் சொல்லுகிறதென்றும், நாடும் நகரமும் நன்குடன் காணும்படிக்கும் நலனிடை ஊர்தி பண்ணும்படிக்கும் தீமனங்கெடுத்து மருவித் தொழும் மனமே பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டாக மெய் அடியார்களாக விளங்கி, பரோபகாரத் தன்மையில் வாழ்ந்து வரும்படிக்கும் உபதேசிக்கப்படுகிற கிரந்தமாக அறிந்துகொண்ட விபரத்தைச் சுருக்கமாய் அடியேன் எழுதலானேன்.

சித்தாந்தம் – 1944 ௵ - மே, ஜுன் ௴


No comments:

Post a Comment