Saturday, May 9, 2020



நாற்பானைந்து உசாக்கள்.

செந்தமிழ்ச் செல்வர்காள்!.

சுமார் ஐம்பது வருடங்கட்கு முந்தி வைதிக சைவ சந்நியாச ஆசிரமத்து அறிஞரொருவர் '' எனும் முதலெழுத்தைப் பற்றிக் கீழ்க்குறித்த நாற்பத்தைந்து உசாக்கள் கேட்டிருக்கின்றனர். பதிலிதுகாறு மொருவரும் விடையளித்தாரில்லை. தற்காலம் தமிழ் எழுத்துக்களின் வண்ணம், வடிவு, ஒலிமுதலிய ஆராய்ச்சி மேலிட்டுமொழி களின் இலக்கணங்கள் (Philology) பலபாழைகளோடு ஒப்பிட்டுத் தற்பாழையின் ஏற்றம்பெறப்படுகிற காலமாய் உள்ளதாதலால், நாற்பத்தைந்து கேள்விகளை நான்கண்ணுற்ற நாள் முதலாய், இவைகளுக்கு விடைபெறவேண்டும் என எண்ணம் எனக்குண்டாகியது. அவை சித்தாந்தம்' எனும் பத்திரிகையில் வெளிவரின் எழுத்து சொல் முதலியவைகளின் இயற்கை உண்மை வடிவு ஒலிமுதலிய ஆராய்ச்சிசெய்து வரும் தமிழ்ப் பெருஞ்செல்வர்களிடம் பரவும் என்றும், அவர்களால் கூடுமான வரையில் நாற்பத்தைந்து கேள்விகளில் சிலவற்றிற்கேனும் விடைகள் கிடைக்கக் கூடுமென்றும் எண்ணி, பேரவாவுடன் வெளியிடலானேன், அன்பு கூர்ந்து ஆராய்ச்சி வல்லுநர் விரைவில் இப்பத் திரிகையில் பலர்க்கும் பயன்படும் பொருட்டு வெளியிடுமாறு தமிழ்ப் பேரவாவுடன் எழும் வந்தனத்துடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அகரவுயிர் என்பது யாது?
அகரவுயிர்க்கு,

1. வரிவரலாற்றின் இலக்கணம் என்னை?
2. ஒலி வரலாற் றின் இலக்கணம் என்னை?
3. தன்மைவரலாற்றின் இலக்கணம் என் னை?
4. உணர்ச்சி வரலாற்றின் இலக்கணம் என்னை?
5. அதன் உண் மையனுபவ விலக்கணம் என்னை?

அகரவுயிர்க்கு,

6. வரியுருவிலக்கணம் என்னை?
7. ஒலியுரு விலக்கணம் என்னை?
8. தன்மை யுருவின் இலக்கணம் என்னை?
9. உணர்ச்சி யுருவின் இலக்கணம் என்னை?
10. உண்மை யனுபவ வுருவின் இலக்கணம் - என்னை?


அகரவுயிரின்,

11. வரிச்சொருப விலக்கணம் என்னை?
12. ஒலிச்சொருப விலக்கணம் என்னை?
13. தன்மைச் சொருப விலக்கணம் என்னை?
14. உணர்ச்சிச் சொருப விலக்கணம் என்னை?
15 - உண்மையனு. பவச் சொருப விலக்கணம் என்னை.

அகரவுயிர்க்கு,

16, வரிச்சுபாவ இலக்கணம் என்னை?
17. ஒலிச்சுபாவ இலக் கணம் என்னை?
18. தன்மைச்சுபாவ இலக்கணம் என்னை?
19. உணர் ச்சிச்சுபாவ இலக்கணம் என்னை?
20, உண்மை அனுபவச்சுபாவ இலக்கணம். என்னை?

அகரவுயிரின்,

21. வரிச்செயற்கை இலக்கணம் என்னை?
22. ஒலிச்செயற்கை இலக்கணம் என்னை?
23. தன்மைச்செயற்கை இலக்கணம் என்னை?
24. உணர்ச்சிச் செயற்கை இலக்கணம் என்னை?
25. உண்மைச் செயற்கை இலக்கணம் என்னை?

அகரவுயிரின்,

26. வரியதிகார இலக்கணம் என்னை?
27. ஒலியதிகார இலக் கணம் என்னை?
28. தன்மையதிகார இலக்கணம் என்னை?
29. உணர்ச்சியதிகார இலக்கணம் என்னை?
30. உண்மைய திகார இலக்கணம் என்னை?

அகரவுயிரின்,

31. விரிப்பொது இலக்கணம் என்னை?
32. ஒலிப்பொது இலக் கணம் என்னை?
33. தன்மைப்பொது இலக்கணம் என்னை?
34. உண ர்ச்சிப்பொது இலக்கணம் என்னை?
35. உண்மைப் பொது இலக் கணம் என்னை?

அகரவுயிரின்,

36. வரிச்சிறப் பிலக்கணம் என்னை?
37. ஒலிச்சிறப் பிலக்கணம் என்னை?
38. தன்மைச் சிறப்பிலக்கணம் என்னை?
39, உணர்ச் சிச்சிறப் பிலக்கணம் என்னை?
40, உண்மைச் சிறப் பிலக்கணம் என்னை?

அகரவுயிரின்,

41. வரிக்குண இலக்கணம் என்னை?
42. ஒலிக்குண இலக் கணம் என்னை?
43. தன்மைக்குண இலக்கணம் என்னை?
44. உணர்ச் சிக்குண இலக்கணம் என்னை?

என்பன முதலாக இவ்வகர உயிர் ஒன்றற்கே இன்னும் பற்பல இலக்கண நியாயவிசார வினாக்கள் உள என்று எழுதியிருக்கின்றனர்.

மோ. கந்தசாமி,
தமிழ் நலப்பிரியன்.

சித்தாந்தம் – 1914 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment