Saturday, May 9, 2020



திருப்பாசுர விளக்கம்.

ஸ்ரீமன் மாணிக்க வாசக சுவாமிகளின்
ஹிருதயசுலோகம்.
திருச்சிற்றம்பலம்.

இன்றெனக்கருளி யிருள் கடிந்துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின்றன்மை நினைப்பறநினைந்தே
நீயலாற்பிறிது மற்றின்மை
சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம்
திருப்பொருந்துறையுறை சிவனே
ஒன்று நீயல்லை யன்றியொன்றில்லை
யாருன்னை யறியகிற்பாரே.
     (திருக்கோயிற்பதிகம், 7.).
 
என்ற இத்திருப்பாசுரமே, இத்திருமறையின் திருவுள்ளக் கருத்தை விளக்காநின்றது என்பதை, ஸ்ரீமத் தாயுமான சுவாமிகளால் அருளப்பட்ட அறிஞர் உரை யென்பதில் காணக்கிடக்கும் பின்வரும் இருபாவினால் அறியலாகும்.

''நினைப்பறவே தானினைந்தே நின்ற நிலை நாடி
அனைத்தும் மப்பொருளிலாழு நாளெந்நாளோ.''
"சென்று சென்றே மனுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாகி
நின்றுவிடுமென்ற நெறிநிற்கு நாளெந் நாளோ''
   
மற்ற அறிஞர்களின் உரையினை எடுத்து வியந்து ஒதுங்கால், ஒரு முறை சொல்லியும், இப்பாசுரத்தை இரு முறையெடுத்தோதியனை நோக்குங்கால் இதன் பெருமை எம்மட்டெனவும் விளங்கும். ஆகவே இத்திருப்பாசுரத்தில் மற்றெதிலும் அமையாத வண்ணம், எல்லா உண்மைகளையும் ஒருங்கே தொகுத்துக் கூறியதாகும். எவ்விதமெனில் விசாரிப்பாம்.

இதன் அகந்வயமும் பிரிவும்
(1) ஒன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்று நீயல்லை அன்றியொன்றில்லை
யாருன்னை யறியகிற் பாரே..
(2) இன்றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத்
தெழுகின்ற நின்ற நின்றன்மை.
(3) நினைப்பற நினைந்தே நீயலாற்
பிறிது மற்றின்மை
(4) சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து
ஒன்றாம்.
(5) ஞாயிறே போன்று.

இதன் பொழிப்புரை.
   
(1) ஒன்றே தெய்வமாகியும், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! பதார்த்தங்களில் ஒன்றாக நீ நிற்கவில்லை. ஆயின் உன்னை யன்றி வேறு பதார்த்தங்களும் இன்றாகும். உன்னையாவர் தாம் அறியும் வல்லவர்.
(2) எனினும் நாயேனுக்கு, இன்றே என்முன் வந்து என்னுள்ளத்துள்ள ஆணவமாயுள்ள இருளைப்போக்கடித்து ஞானப்பிரகாசத்தை எனக்கருளிநின்ற நின்தன்மையை யானென் னென்று சொல்லுவேன்.
(3) உன்னருட் பிரகாசத்தை அவ்வாறுணர்ந்து நிற்கும் வண்ணமெவ்வண்ண மெனில், உன்னையான் நினையாது நினைத்தும், உன்னையன்றி வேறு பொருளே இல்லையெனவும் யான் நிலைப்பதினால் தான்.
(4) அங்ஙனம் உன்னை அடுத்துக்கூடி நிலைக்குங்கால் என் பசு கரணங்களெல்லாம், புரை புரையாகக் கழன்று எரிந்து நசித்துப்போகவும், யானும் உன்னுடன் ஒன்றாக நின்றேன்.
      (5) அது அப்படி அருளியதும் சூரியன் உதயம் செய்தது போன்றிருந்தது.

இதன் கருத்தை விளக்குங்கால், ஒப்புயர்வற்ற இறைவனுடைய தன்மையையும், அவனுடன் ஒன்றாகியும் வேறாகியுமுள்ள பதார்த்தங்களின் உண்மையும், அப்பொருள்களில் யான் எனது என்று முனைத்து நிற்கும் ஆன்மாவின் கேவல சகல சுத்த நிலைக ளின் இயல்பினையும், அந்நிலைகளில் இறைவன் நமக்கு அருளு மாறும், அவ்வருளைப் பெறுதற்கு உபாயமும், அவ்வருளில் அழு ந்தி நிற்கும் நிலையினையும் இதனை யெல்லாம் துலக்கிக் காட்ட ஒரு உபமானத்தையும் இப்பாசுரம் கூறியதாமென்க.
இவை யெல்லாம் பெறுமாறு எங்ஙனமெனில் விரிச்குதும். மேல், இதனைத்திருமறை அல்லது வேதம் என மேலே குறிப்பி த்தோமானபடியால் அதனையும் விளக்குவாம்.

1. இந்த அதிகரணத்தில், முதலாயுள்ள சொல் ஒன்றாம்' என்பது. இது எல்லா ஆஸ்திகமதங்களுக்கும் பொதுவாயும் இன்றியமையாதனவுமாகிய ஒரு கொள்கையினை உணர்த்திநின்றது. தெய்வம் ஒன்றேயுள்ளவன். அவனை யொப்பாரும் மிக்காரும் இலர், ஒரே கடவுள் உண்டு. பல தெய்வங்கள் இல்லை. ஆயின் நம்முடைய வேதாகமங்களில் அநேக தெய்வங்கள் கேட்கப்படுகின்றதே யெனின் அவையெல்லாம் தெய்வமாகாது. அப்படிப் படிக்கப்படும் தெய்வங்களும் சீவர்களே யாவர். அவர்களே முப்பத்தாறு தத்துவங்களில் சிலவற்றை தேகமாகக்கொண்டு, முழுமுதற்பொருளாகிய இறைவனால் ஏவப்பட்ட சில அதிகாரங்களை வகித்துச் செலுத்தாநிற்பர்கள். அவர்களையும் ஆன்மாக்கள் பரிபக்குவத்துக்குத்தக்கபடி ஆராதிக்கும் பொழுதும், அவ்விறைவனே அவர்களுக்கு அக்கடவுளர் மூலமாக அருளைப்புரியா நிற்பர். ஆகவே ஒரு பட்சம் எந்த தெய்வத்தை நாம் வழிபடினும், அவ்வொருவனையே வழிபட்டவர்களாவோம். ஆயினும், கடைசியில் நமக்கு முத்தியை அளிப்பது ஒரே இறைவனாகலின் அவனடிக் கன்பு செய்கையே மாட்சிமை தங்கிய அறமாகும். *
[* சித்தியார் சுபக்ஷம் II.24,27, பார்க்க]
மற்றவன் பாதத்தை மறந்து செய்யு மற மெல்லாம் வீண்செயலாகும். இவ்வொருவனும்; அயன் மால் ருத்திரனாகிய மூவரில் ஒருவனல்லன். அவர்களுக்குக் கீழிட்ட இந்திரன் முதலிய தேவர்களுமல்லன். அவர்களுக்கு மேலிட்ட மகேஸ்வரன், சதாசிவன் விந்து மூர்த்தி, நாதமூர்த்தி யுமல்லன். இவர்களடங்கலும் பசுக்களாகவும், அவர்களுக்குமேலாய் அதீதமாய் நின்ற ஒருவனை பதியென்றும், பசுபதி மேதபதியென்றும், திரிமூர்த்திகளுக்கு அதீதப்பட்டதினால் சதுர்த்தம் துரிய மென்றும் கூறப்படும். இதனாலே வேதங்களில், அவனை பின் வருமாறு பேசப்படுகின்றன.

      ஏகோஹிருத்ர: - சுவேதாஸ்வதரம், 3. 2.
      ஏகமேவாத்திவி தீயம் பிரம்மா: -  சாந்தோக்யம்.
      கோதேவ: - சுவேதாஸ், 6. 11.
      யஏகோஜாலவான்: - 3. 1,
      ஏகம்சத்விப்ராபகுதாவதந்தி: - இருக்குவேதம், 1, 162. 46.
      காதபதிம்மேதபதிம்: -  1. 43. 4.
      தஸ்மாத்ருத்ரபசுனாமதிபதி,,
      சிவஏவகேவல: - சுவேதாஸ், 4. 18.
      சிவஏகோத்யேய
      சிவம்கரஸர்வமந்யத்பரித்யஜ்ய: - அதர்வசிகா.

மற்ற தமிழ் வேதத்திலும், இதனையே பின்வருமாறும் வற்புறத்தியிருக்கிறார்கள்.

      ஒருத்தனார் உலகங்கட் கொருசுடர்: - (5)
      மூர்த்தியைமுத லாயொருவனை: - (5)
      ஒருருவாயினை'''' ஒருவனாகிகின்றனை''
      ஒருவனாயுலகேத்த நின்றநாளோ, (731)  
      ஒருவனாகி நின்றானிவ்வுலகெலாம் : - (1213)
      ஒருவனையல்லா துணராதுள்ளம் : - (649)
      ஒருத்தனாயுலகேழுந் தொழநின்று'- (380)
      ''ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும் அருத்தனை: - (770)
      யாவருமறிதற் கரியான்றனை
      மூவரின்முதலாகிய மூர்த்திபை: - (770)
      ஒருவரைத்தஞ்சமென்றெண்ணா துன்பாதமிறைஞ்சுகின்றார்.
      பருவரைத்தோலுரித்தா யெம்மையாளும்பசுபதியே: - (1197)
      மூவராகிய மொய்ம்பரல்லரே: - { 929)
      மூவரரியாச்சிந்துரச் சேவடியானை: - (திருவாசகம்)
      தேவர்கோஅறியாத தேவதேவன்
      செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்குமற்தை

    * இந்த எண்கள் ஸ்ரீமான் சுவாமிநாத பண்டிதரவர்கள் தேவாரப் பதிப்பின் பக்கம் குறிக்கும்.

மூவர்கோவறியாத மூர்த்தி: - “
      கொள்ளேன்புரந்தரன் மாலயன்வாழ்வு: -  
      மற்றுப்பற்றெனக்கின்றிநின் றிருப்பாதமேமனம்பாவித்தேன்
                                                       (தேவாரம்)
      அன்னேயுனக்காளாயினி யல்லேனெனலாமே
      'ஒன்றவன்றானே இரண்டவன் இன்னருள்: - - திருமந்திரம்.
      ஒன்றேகுலமும் ஒருவனேதெய்வமும்: -
      'ஒருவன்எனனும் ஒருவன் காண்க.'
      மூவருமுப்பத்து மூவருமற்றொழிந்த
      தேவருங்காணாச் சிவபெருமான்''
      ஒப்புனக்கில்லா ஒருவனே'
      ''அருவமாம் ஒருவனே''
      ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனேபோற்றி -
      தேவருமறியாச் சிவனேகாண்க.''
   
இறைவன் ஒருவனாகவும், அவனுறையும் விடம், பேர் தான் என்னை யெனில், அவைகளைப் பின்னில்லானின்ற பதங்கள் விளக்குகின்றது.   
   
அவன் உறைவிடம் திருப்பெருந்துறை. அவன் பேர் சிவன். அவன் உறைவிடத்தை விசாரிக்குங்கால், திருப்பெருந்துறை யென்றது பாண்டிநாட்டில் உள்ள ஒரு க்ஷேத்திரமாகவும், அதிலுள்ள கோயிலாகவும் சாதாரண பார்வையில்படும். அப்படிச் சொல்லில் அவன் கண்டப் பொருளாகானோவென்னில், அவ்விதமாகாவண்ணமே, அவனுறை விடத்தை திருப்பெரும்' என்னும் அடைமொழிகளால் விசேடித்ததும் என்க. பெரும் என்றதால் பிரம்மாண்டங்களும், திரு என்ற சொல்லால், லட்சுமியின் வர்க்கமாகிய சீவகோடிகளையும் குறித்து, அவனுக்கு உண்மையாகிய வாசஸ்தலம், சேதனம், அசேதனம் என்று சொல்லப்பட்ட இருகூற்றுப் பிரபஞ்சமேயாமென்க. அவனில்லாத இடமும்பொருள்களுமில்லை அவனெல்லாவற்றிலும் நீக்கமற நிற்கின்றான். எல்லா பூதங்களிலும், பொறிகளிலும், கரணங்களிலும், எல்லா வுடல்களிலும், உணர்வுகளிலும், சூரியன் சந்திரன் தேஜஸ் முதலியவற்றிலும் எல்லா உயிர்களிலும் அவன் ஊடுருவி நிற்கின்றான். இவ்வித முறைவதனால், இவ்வுலகுயிரை அவனுடைய சந்நிதி அல்லது கோயிலாகவும், அவைகளை அவன் சரீரமாகவும் கூறப்படுகின்றது. இவ்வுலகத்தில் திருக்கோயில் அமைத்திருப்பதும் இக்கருத்துப் பற்றியே யாம். ஒவ்வொரு ஆவரணங்களும், கோபுரங்களும், மண்டபங்களும், தீர்த்தங்களும், வாயில்களும், மூர்த்திகளும், இவ்வுலகுயிரின் பகுதிகளேயாகும். நம்முள்ளத்தையும், ஹிருதத்யதையும், மனதையுமே அவன் உறையும் கோயிலாகவும், குகையாகவும், கர்ப்பமாகவும், யோனி*யாகவும், புண்டரீகமாகவும் வேதங்கள் முழங்குகின்றது. இதற்கு உபயவேதாந்த திருஷ்டாந்தம் வருமாறு: -

* யோனியென்பதின் ஆதிப்பொருள் மக்டன்னல் அகராதிப்படி இடம், வீடு, கூடு, நுழை, குளி என்பதுதான். முதலில், இந்தப்பதம், அக்னியை வளர்க்கும் குழிக்கே உபயோகிக்கப்பட்டிருக்கின்றது. இதனையே கர்ப்பமென்றும், கர்த்தா வென்றும் குகையென்றும், இருதயமென்றும் பேசப்பட்டிருக்கின்றது.
   
நீ (அக்னி) என்னுடைய யோனியாய் இருக்கிறாய் நான் உனது யோனியாயிருக்கின்றேன். (தைத்திரியபிராம்மணம் III. 7. 7. 8.)
  
'அக்நேஸ்வம் யோனின் ஆசீத'ஹேஅக்நி, உன்னுடைய யோனியில்
(இடத்தில்) வீற்றிருப்பாய்,
   
"யஞ்ஞரூபமாய், யஞ்ஞமாகிய என்னுடைய யோனியில் வீற்றிருப்பாய் " (தைத்திரிய பிரா. 11. 5. 8. 8. தைத்திரியசம்மிதை 111 4. 10. 5.)
   
யஞமானோவா அக்நேர்யோநி :
அதே மந்திரத்தில், இந்த யோநியானது யஜமானனுடைய விருதய மென்றும் சொல்லியிருக்கின்றது இந்த அக்நியே ருத்ரராகவும், அக்கி யின் பீடத்தையும், அக்தியையும், யோனியாகவும் , லிங்கமாகவும் கூறியிருக் கின்றது. (சித்தாந்த தீபிகை Vol X. பக்கம் 186. 189 பார்க்க.) வில்ஸன் பண்டிதர் இச்சிவலிங்க மூர்த்தம் ஆட்சேபனைக்கிட மில்லாததெனக்காட்டிப் பின்வருமாறு பேசுகின்றார்.
   
"இதில், பழையகாலத்து (எகிப்பது முதலிய தேகத்து) அஸந்தர்ப்ப மானவழக்கங்கள் பொருந்தியதன்று. அது குஹ்யமானதும், ஞானமயமா யுள்ளது. லிங்கம இரண்டுவிதம், அகம், புறம்என புறக்குறிவேண்டிய பாமரர், கல், கட்டையினாலாகிய ஒரு லிங்கத்தை உபாசிக்கின்றார்கள். லிங்கம் என்றதற்கு குறி, அடையாள மென்பதே உண்மைப்பொருள். ஞா னிகளோ இப்புறக்குறியைப் பொருட்படுத்தாது, தங்களகத்தினிடத்தே அரூபியாயும் அவ்வியயமாயு முள்ள சிவத்தைத் தியானிக்கின்றார்கள்.  (இதனை அலிங்கமென்று பேசுகின்றது வேதம்.) இவ்வுபாசனை எவ்விதமேற்பட்ட போதிலும், சில ஐரோப்பியர்களுடைய அசுத்தமான கருத்துப்போ னபிரகாரம், சிவபுராணங்களிலும் காணப்படவில்லை " இன்னுமொருவி டத்தில் " லிங்கமூர்த்தத்தினிடத்தேயே சிவபெருமான் வழிபடப்படுகிறார் பூதங்களையும், விசேஷமாக அக்நியையும் வழிபட்டு வந்த வேதவழக்கின் பிறகு, சிவலிங்க மூர்த்தமே மிகவும் புராதனமாக வழிபடப்பட்டது. வேதத்தில் எந்தமட்டும் சிலலிங்க உடாஸனை பெறப்படுகின்றதோ சந்தேகம். ஆயின் அநேக புராணங்களில் சிவலிங்கத்தைப் பற்றியே பேசப்படுகிறது. மகமதியர் முதல் படையெடுத்த காலத்து, அது எங்கும் பரவியிருந்த தென்பதற்குச் சந்தேகமில்லை'' கர்னல் வான்ஸ கென்னடி கனவானும் அவ்விதமாகவே பேசுகின்றார்.

காயமே கோயிலாகக் கடிமன மடிமையாகக்
வாய்மையே துய்மையாக மனமணியி லிங்கமாக
      நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய வாட்டிப்
      பூசனையீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே. - - தேவாரம்.
      உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசற்
றெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
      கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.               திருமந்திரம்.

ஸ்ரீமத் அப்பய தீக்ஷிதர் தம் சிவார்க்கமணி தீபிகையில் (II. ii. 38 - ன் கீழ்) பின்வரும் இருக்கு வேதமந்திரத்தைக் காட்டி, அதிற் கண்ட ஜனிமா என்றபதம் சிவலிங்கத்தைக் குறிப்பதாகக் கொள்கின்றார்.
தவஸ்ரீயெமருதோமர்ஜயந்தருத்ரயத்தேஜ திமசாருசித்ரம்
பதம்யத்விஷ்ணோருபமந்நிதாயிதேநபாஹிகுஹ்யந்நாமகநாம்.  V. 3. 3.

இதற்கு உபப்பிருங்கணம், பராசர புராணத்தில் பின்வருமாறு காணப்படுகின்றது.

ரொத்ரம்லிங்கம்மஹாவிஷ்ணுர்புக்த்யாஸுத்தம்ஸிலாமயம்
சாருசித்ரம்ஸமப்யர்ச்யலப்தவாந்பரமம்பதம்.
   

பிரமபுரத்தில், புண்டரீக வீட்டில், தகர ஆகாச மிருக்கின்றது. அத்தகாரகாசத்தினையே, நாம் அறிய வேண்டும்.''        சாந்தோக்கியம் vii. i. i.
''யஸ்யப் பிருதிவிசரீரம்."
      ...............................................................................................................
யஸ்ய விக்ஞானம் - (ஆத்மா) சரீரம். (பிருகதாரண்ய உபநிஷத். III. 7. 3. to 11.)
இந்தப் பிரபஞ்சமெல்லாம் அந்தப் புருஷனால் ஆவரிக்கப்பட்டிருக்கின்றது. (சுவேதாஸ். III. 9.)

பகவான் எல்லாபூதங்களின் (ஹிருதய) குகையின் கண்ணே வசிக்கின்றான். எங்கும் வியாபி, ஆகையால் சர்வவியாபக சிவன்.                  (Do. III. II)

இந்தப் புருஷன், ஆத்மாவின் ஹிருதயத்தில் வசிக்கின்றான்.  (Do. Ill. 13.)

இந்தப் புருஷன், ஆயிரம் சிரங்களுடனும், ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் பாதங்களுடனும் உலகத்தை முழுதும் ஆவரித்து தசாங்குல அளவாக அதிகமாகின்றான்.                                                  (Do. III. 14.)
தைத்திரிய III. 11. 1. வாஜாசம். X. 1. இருக்கு X. 901. அதர்வணம் X | X B1.

அதன் கரங்களும் கால்களும் எங்குமுள. அதன் கண்களும் சிரங்களு மெங்குமுள. அதன் செவிகள் எங்குமுள, எல்லா உலகையும் சுற்றியிருக்கின்றது. (Do. III. 13.)
   
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
புந்தியாய் புண்டரிகத்துள்ளாய் போற்றி.             (1968)
"பூதங்கள் தோறும் நின்றாய்.''                      திருவாசகம்.
      சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமாள்
      என் உடலிங் கொண்டாய்.''                        (Do.)
      புன்புலால்யாக்கை புரை புரைகனியப்
            பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்.
      என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
            ஈசனே! மாசிலா மணியே.                   (Do)
      ''அறைவை யேன்மனமே கோயிலாக்கொண்டான்.''
      நினைப்பவர் மனமே கோயிலாக் கொண்டவன்      (அப்பர்தேவாரம்)

      நீருள்ளான் தீயுளானந்த ரத்துள்ளான்
            நினைப்பவர் மனத்துளான் நித்தமா வேத்தும்
     ஊருளான் எனதுரை தனதுரையாக
            வொற்றை வெள்ளேறுகந் தேறியவொருவன். (1079)

      மனத்தகத்தான் தலை மேலானான் வாக்கினுள்ளான்
            வாயாரத்தன்னடியே பாடுந்தொண்டர்
      இனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
            ஏழண்டத்தப்பாலன் இப்பாற் செம்பொன்

புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
      பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்துச்சி யுள்ளான்
      காளத்தியானவன் என் கண்ணுள்ளானே. (1098.)

அவன் பெயர் சிவன்,
   
ஒருருவம் ஓர்நாமம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் என்றும் அவன் நாமங்கள் அளவிறந்தன் வென்றும் பேசியிருப்பதால், இவ்வொரு நாமம் எவ்விதம் சிறப்பாகுமெனின் விளக்குதும். |

''சிவஎன்னும் பதம் இரண்டு விதமாகப் பொருள் படுத்தப்படுகின்றது. ஹிம்ச என்ற பதம் சிம்ம என்றாயினதுபோல் வசி 'என்றபதம் 'சிவ' என்று ஆயினதென்பார் ஆன்றோர், * வசி''1 என்பதின் பொருள் ‘இச்சிப்பவர்' என்பதாகி, தேவர் மனுஷர் முதலாகிய எல்லா உயிர்களுக்கும் இன்பம் கொடுக்க விரும்பி, அவையனைத் திற்கும் ஆகற்பாலனவாகிய உபகரணங்களை எக்காலமும் விருத்தி செய்கின்றவர்2  எனப் பொருள்படும்.
1 பிருகதா உபநிஷத் IV. 4. 22. "அதில் (இருதய ஆகாசத்தில்), வசியும், ஈசனும், இறைவனுமாகிய அவர் அமர்ந்திருக்கிறார்."

2 ஸமேதயதியந்நித்யம் ஸர்வார்தாநாமுபக்ரமம்,
  சிவமச்சிந்மணுஷ்யாணாம் தஸ்மாத்தேவ : ஸிவ : ஸ்முருத :,
  ஸமாபவந்திமே ஸர்வ தாநவாஸ்சா மராச்சயே..
  ஸிவோஸ்மிஸர்வபூதாநாம் சிவத்வம்தோமேஸுரா
இன்னும் இம்மொழி, சுபம், கல்யாணம், மங்களம் என்றபொருளாகி, யாவர்க்கும் சுபத்தைக் செய்கின்றவரெனவும் போதரும். இவ்விருபொருளாலும், யாவர்க்கும் என்றும் அவரவர்கள் சுகத்தை விரும்பி அவர்களுக்கு முடிவில் பரமசுகமாகிய மோட்ச இன்பத்தைக் கொடுப்பவர் என்பதாகும். அதுவே, அவன் அருளுடையவன், அன்பே உருவாகவுள்ளவன்' 3 என்றும் ஏற்படும்.
3 "ஒன்றவன்றானே இரண்டவன் இன்னருள்.'' -
  "அன்பே சிவமாதலா ருமறிந்திலர்." - திருமந்திரம்.

அவ்வருள் நிகழும் வழி என்றும் என்றதினால், ஆன்மா, ஒருவித உணர்வுமின்றிக் கேவலத்திற் கிடந்தழுந்தி நிற்குந்தொறும், சகலத்தில் வந்து தனுகரணங்களைப் பெற்றுக் கொஞ்சம அறிவு நிகழ்ந்து வினையைச் செய்து இன்பதுன்பங்களை யெய்திப், பின்னர் மெய்யுணர்ந்து இறைவன் அடித்தொண்டு செய்து புத்திர மார்க்க மெய்தி, யோகத்தினமர்ந்து, ஞானசமாதிகைக் கூடிநிற்குந்தொறும், பின் அவனுடன் கலந்து சிவப்பேறு பெற்றுநிற்கும் தொறும், எல்லாம் அவன் உபகாரம் பெற்று நிற்குமேயன்றி இதற்கென ஒரு செயலுமில்லாமையும் பெற்றாம். ஆகவே இவ்வான்மா ஆதிமுதல் அந்தம்வரை அவனருள்4  வழி நிற்றலால் அச்சிவத்தொழிலை விளக்கவந்த பதம் எல்லாவற்றிலும் மேலாயதென்க.
4 அருளிற் பிறந்திட்டருளில் வளர்ந் கிட்டு
  அருளிலழிந்திளைப்பாறி, மறைந்திட்டு
  அருளான வானந்தத்தா ரமு தூட்டி
  அருளாலென்னந்தி அகம்புகுந்தானே. - திருமந்திரம்.
அதாவது அவன் ஐந்தொழிற்கும் முதல்வன் என்பதனை விளக்கும். மற்றபதங்களெல்லாம் சடசம்பந்தமானப் பொருளைத் தந்தும், இறைவனின் அருந்தகல்யாண குணங்களில் ஒவ்வொன்றைக் காட்டியும், அவன் அளவற்ற வியாபகங்களிலும் தொழில்களிலும் ஒவ்வொன்றைக் குறித்தும் நிற்கும். இருக்குவேதத்திலே மிகவும் காணப்படும் உருத்திரபதம், 'துன்பத்தைப் போக்குகின்றவன்' அல்லது பாசக்ஷயம் செய்கிறவன் என்பதாகும். சிவ என்னும் பதம் அவன் 'இன்பம் செய்பவன்' அதாவது பதிஞானத்தை ஊட்டுபவன் எனப்போதரும். பவன், சர்வன் முதல் பசுபதி இறுதியாகிய பதங்கள் அவன் அஷ்டமூர்த்தங்களில் அந்தரியாமிபாயிருத்தலைக்காட்டும். 'ஹரன்' என்பது மாறுதலைச் செய்பவன் என்றும் பொருளாகி, பவத்தை மாற்றுபவன், தேகத்தை மாற்றுபவன், அழிப்பினைச் செய்பவன் (சம்மாரகாத்தா) என்பதாகும்.
ஆத்மா, என்பது 'உயிர்' எனவும் 'பரமாத்மா' மேலான உயிர் எனவும் படும். பிரமம்' என்பது பெரியது என்று பொருள்படும். ஈசன், ஈசானன், ஈஸ்வரன் என்ற பதங்கள் இறைவன் என்ற பொருளைத்தரும். சம்பு என்பதும் சங்கான் என்பதும் 'அழகிய'நன்மையைச் செய்பவன் என்ற பொருளாகிய' சிவ' என்றபதத்துக்குக் கூடியவரை சமானமாய் நிற்கும். விஷ்ணு நாராயனன் என்ற பதங்கள்   எங்கும் நிறைந்தது'5 சலத்தில் உள்ளது என்று பொருள்படும். மற்ற மதங்களிற் காணப்படும் பதங்களும் சாமானிய அர்த்தங்களையே கொடுக்கும்.
5 ஹர: ஸர்வஸ்யஹரணா த்விபுத்வாத்விஷ்ணுருச்யதே.
  பகவாந்ஸர்வவிக்ஞானா தவனாதோமிதிஸ்முருத:

மேலும் 'சிவ' என்னும் பதம் யாவற்றையும் விட அதிகமாகச் சிறந்ததென்பதற்கு இன்னுமொன்றுளது. மேற்காட்டிய பதங்களினாலெல்லாம் போந்தது, அவன் அங்குளன், இங்குளன், பெரியவன், மேலானவன், உயிர்க்குயிராயுள்ளவன், இறைவன் முதலிய பொருளைத்தந்தும் அவன் உண்மை சொரூபத்தை நாம் உணரும் படி விளக்காது. இம்மொழிகளெல்லாம் நாம் அத்துவித அனுபவத்தை அடையும் வரை இறைவனைப்பற்றிப்பேசவும், பாவிக்கவும் ஏதுவாயுள்ள வைகளே யன்றி வேறில்லை. அவ்வனுபவம் சித்திக்கும் வரை அவனை உணரமாட்டோமாகையால், அவ்வனுபவம் கை கூடி அவனை யறியும்போது அவன் உண்மைச் சொரூபத்தை விளக்குவது இச் 'சிவ' பதமேயாம்6.
6 "அன்பே சிவமாயமர்ந்திருந்தாரே " - திருமந்திரம்.
  நான் கெட்டு சிவமாகி நின்றவாதோணோக்கமாடாமோ - திருவாசகம்.
'எங்ஙனமெனில், நாம் ஒருவரையொருவர் உணரும் போது, அவரவரின் புறக்கரணங்களையும் நற்குண நற்செயல்களையுமே காண்கின்றோம். அவரவரின் ஆத்மாவையறிந்ததில்லை. ஆத்மா இச்சாஞானக்கிரியா சொரூபமென்று சொல்லுவார்கள். கிரியையினை புறத்தொழில்களின் மட்டும் காணலாம். ஞானம் அகத்தொழிலானதால் காணமுடியாது. 'இச்சை' ஒன்றினையே நாம் அறியக்கூடும். 'இச்சை' என்பது விருப்பம், ஆர்வம் ஆசை அன்பு அருள் என்னும் பொருளைத்தந்து பிறர்மாட்டு நிகழும் ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கும். ஒருவரை ஒருவர் கண்டறிந்த பிறகு கொஞ்சம்கொஞ்சமாய் இவ்விச்சை, அன்பு இவ்விருவர் பாலும் நிகழக்காண்கின்றோம். இது வர வர அதிகரித்து நிறைந்து ததும்புங்காலத்து, ஒருவரை ஒருவன் கண்டபொழுதும், அவர் உருவத்தையும் கண்டும் காணார்கள். அவர்கள் அழகும் அழகின்மையும் கண்ணுக்குப் புலப்படாது. அவர் என்ன உடை உடுத்திருப்பதும், என்ன ஆபரணங்கள் அணிந்திருப்பதும் கண்ணுக்குப் புலப்படாது.7
7 பிருகு. உபநிஷத். IV. 3. 21. இதுவே அவன் ரூபம். ஆசை, தீமை பயமற்றது. ஒருவன் தன் அன்புடைகாதலியை அணைந்தபோது உள்ளும் புறமும் எவ்வாறு உணர்ந்திலனோ, அவ்வாறு, பிரஞ்ஞனாகிய (பரமாத்மா இவனுடன் ஒன்றிய போது உள்ளும் புறமும் தெரிந்திலன். இதுவே இவன் ரூபம். இதில் இவனுடைய எல்லா ஆசையும் முற்றுகிறது; பரமாத்மாவே இவன் எல்லாமாசையுமாகிறது. வேறு ஆசையில்லையாகிறது துன்பமும் மேல் முளைக்காது. 
ஆயின் என்ன தான் காணப் பட்டது. கண்டபொழுது, உள்ளத்தில் அன்புநிறம்பி அன்புமயமாகவே கண்டார்கள்.  அவர்கள் பக்கல் நிற்கும் போது, அவ்வன்பு ஊடுருவிப்பாயும், பரவும். இந்நிகழ்ச்சி காண்டொறும் தானா? நினைக்குந்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்தெலும்புள் நெக ஆநந்தம் பொங்கும்.8
8 சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனே
  கெட்டேன் மறப்பேனோகேடு படாத் திருவடியை.
  எட்டாத பாவித்தொழும்பரை நாம் உருவறியோம் சிட்டாய
  சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. - - திருவாசகம்,

அந்நிலையில் யான் எனது என்னும் பகுப்பற்று, வேற்றுமையற்று இருவரும் ஒன்றாவார்கள். ஆக இந்நிலையில் ஒருவர் ஒருவருக்கு என்னவிதமாகக் காணப்பட்டார்கள், கண்டார்கள். இச்சை, அன்பு, ஆநந்தமாகக் கண்டார்கள். ஆகவும் ஆன்மாவின் தன்மையும் இச்சை அன்பு ஆநந்தம் என்பதே உண்மைச் சொரூபமாகி அவ்வான்மாவை உணரும் படியாகும். இதற்கொரு அனுபவம். ஆலயவழிபாட்டில், சிலர் தரிசனம் செய்து திரும்பும் போது, சிவலிங்கம், வெண்பளிங்கு, சிறிது பெரிது, இன்ன ஆபரணங்கள் அணியப்பட்டிருந்தது இன்ன பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது எனப் பேசிக்கொள்வார்கள். இன்னும் வெகுசிலர், இதுவெல்லாம் இவர்கள் கண்ணுக்குப் புலப்படாதாகி, அச்சந்நிதா தானத்தை நெருங்கி நிற்கும் போதும், கண்மூடியாகி, இறைவன் புகழைப்பாடிக் கண்ணீர் சொபுரிந்து ஆநந்தபரவசராய் வீட்டுக்குத்திரும்புவார்கள். இவ்விருதிறத்தவர்களில் எவர் உண்மையில் சிவதரிசனம் செய்தார்களென்பதில் ஐயமேற்படுமா?
   
இவ்விதமாகவே நாமும் இறைவனை உணருங்கால், அயரா அன்பின் அவன் கழல் சார்ந்து, அன்பு மயமாகி அவனை இன்பமாத் திரையாக அனுபவிப்பதே அவனை உண்மையில் உணர்ந்த தாகும். வேறுவிதமாக அவனை எக்காலத்தும் எவ்விதத்தும் உணரமுடியாது திரிநேத்திரம், காளகண்டம் சடை முதலிய குறிகள் ஒன்றும் தோற்றாது. இவரிச்சை, அன்பு, இன்பத்தைக் குறிப்பதாயுள்ளது
'சிவ' என்னும்பதம். மற்றொன்றும் இல்லவேயில்லை.. அந்நிலையில் நான்கெட்டுச் சிவமாயும், அன்பே சிவமாயும் அமர்ந்திருக்கின்றோம். இதனாற்றான், மும்மறையுள் நடு மறையுள், எழுகாண்டத்தினடுவுள், உள்ள சதருத்ரியத்தின் நடுவுள் நடுநாயகமாக அமைந்து கிடப்பது 'சிவ' என்னும் இப்பதம்.9
9 வித்யாஸுஸ்ருதிருத்க்ருஷ்டா ருத்ரைகாதஸிநீஸ்ருதென
  தத்ரபஞ்ச ஷ்ரீதஸ்யாம் ஸிவ இத்யக்ஷரத்யமிதி.

அச்சதருத்திரத்தில் கூறியதும் இறைவனுடைய விஸ்வஸொரூபம். முத்தனுக்கு எல்லாம் சிவமயமாகத் தோன்றும். உயிருள்ளன உயிரில்லாதன, கூன் குருடு, நல்லவன் கெட்டவன், நன்மை தீமை, இருள் ஒளி, கோரம் அகோரம் கல் மண் முதலியன எல்லா மாகிய சேதன அசேதன பிரபஞ்சம் எல்லாவற்றுமுள்ளும் புறம்புமாக நிகரில் இறை நீக்கமின்றி நிற்கின்றானென்று முன்னமே காட்டினோம். இப்படியிருக்க பிரம்ம நிர்வாணத்தையடைந்த சீவன் முக்தனுக்கு இப்பொருள்கள் கண் முன்றோன்றினும்; அப்பொருள்கள் தோற்றாது ' அச்சிவமே தோன்றி நிற்கும். எனினும் அவனைப்பேசிப் புகழும் போது பூதங்கள் தோறும் நின்றாய், பூதங்கள் அனைத்தும் ஆனாய் பூதங்கள் அவனே யெனப்பேசப் பெறும். அவ்விதம் பேசியது தான் சதருத்ரியம். (சிவ'என்பது நடுவில் நிற்றலால், முன்பின் உள்ளயாவற்றினும் அவனியங்குந்தன்மையும் பெற்றாம். சதருத்ரியம் முழுதும் சிவமயம்'என்பதில் அடங்கும். 
 .
அப்படி நடுவுள் நின்ற முழுமொழி (சிவாயநம' என்பது. இதனையே பஞ்சாட்சரமாகிய மகா மந்திரமென்பது. எல்லா மந்திரங்களுக்கும் மந்திர ராஜமாகச் சொல்லப்பட்டது, பிரணவமாகிய ஓங்காரம். அந்த ஓங்காரமும் அட்சரம் என்று சொல்லப்பட்டு அழியாதது என்று பொருள் பட்டு இறைவனைக் குறிக்கும்.10
10 கடஉபநிஷத். 1. 2. 16. அந்த அக்ஷரம் பிரமம். அந்த அக்ஷரம் உயர்ந்தது. எவன் அந்த அக்ஷரத்தை அறிகிறானோ, எதை விரும்புகிறானோ அதனை அடைகிறான்.
அவ் வோங்காரமும், இரண்டு விதம். காதுக்குப் புலப்படுவது ஓம் என்னும் சப்தம். கண்ணுக்குப் புலப்படுவது சிவலிங்கம். சப்தமும் லிங்கமும், சுத்தமாயா முதலிய தத்வங்களினின்றும் பிறந்து ஜட மாத்திரமாகும். எனவே இவ்விருதிற ஓங்காரமும் இறைவன் உண்மைச் சொரூபத்தை விளக்காது. அவனது அறிகுறியாக நிற்கும்.11
11 முண்டக உபரி. II. 2. 4. ஒங்காரம் வில், ஆத்மா, அம்பு; பிரமம் அதன் லட்சியம்.
அவ்வோங்காரமும் இன்னும் விரிக்கில், அகார, உகார மகாரமாகி,12
12 பிரஸ்ன உபநி. V. 5.'அகாரவுகார மகாரமாய் மூன்று மாத்திரையாயுள்ள அக்ஷரத்தை எவன் தியானம் செய்கின்றானோ, எந்த உத்தம புருஷன் மீது தியானம் செய்கிறானோ, அவன் சோதியினிடத்தும் சூரியனிடத்தும் சேருகிறான்.''
மும்மறையையும், மூன்றவஸ்தையையும் மூன்று லோகங்களையும், மும்மூர்த்திகளையும் விளக்கி, அப்பிரணவத்தில் தோன்றியும் தோன்றாமலும் நிற்கின்றது அர்த்தமாத்திரை. அதுவே துரியப்பொருளாகிய சிவமெனப்படும்.13  
13 ''சிவம் சாந்தம் அத்வைதம் சதுர்த்தம்மந்யந்தே, மாண்டூக்ய உபநிஷத்
இதனாலும், மந்திர ராஜத்தினும் சிறந்தது சிவமந்திரம். அதனால் அதற்குப் பிரசாதமந்திரமென்றும் பேர். அம்மந்திரத்தில் 'சி'. என்பது பதியையும், '' என்பது அவன் அருளாகிய சக்தியையும் குறித்து, மற்றைய எழுத்துக்களில் '' என்பது உயிரையும், '' என்பது திரோதான சக்தியையும் ,'' என்பது மலசக்தியையும் குறிக்கும்.14
14 சிவனருளாவிதிரோ தமலமைந்து
   மவனெழுத்தஞ்சினடைவாம் - இவனின்று
   நம்முதலாயோதிலருணாடாது நாடுமருள்
   சிம்முதலாயோது சென்று.
இந்த ஐந்து எழுத்துக்களும் கூடிநின்றதே ஈசன் உலகுயிருடன் ஒற்றித்து நின்றது; இவ்வட்சரங்கள் மாறும் நிலையில், பந்த முக்திநிலைகளையும் குறிக்கும். இன்னும் இப்பஞ்சாட்சரத்தின் உண்மையும் மகிமையும் அளப்பரிதாய்க் கிடக்கின்றது. நாயினும் கடையான நான் அதனை அளக்கற்பாலனோ?
     
எல்லா தியாகங்களிலும், ஆத்மதியாகம் மேலானது. எல்லா ஞானங்களிலும் பிரம்மஞானம் மேலானது. எல்லா அனுபவங்களிலும் பரானுபவம் மேலானது. இதனையெல்லாம், சிவார்ப்பணம், சிவஞானம் சிவானுபவம், சிவானுபூதி என்ற சொற்கள் எவ்விதம் நன்கு விளக்குகின்றது.

இச்சிவசப்தத்தை நாவினால் ஒருதரம் உச்சரித்தலால் அது விரைந்து பாபங்களையெல்லாம் நாசமாக்கும்.15 
15 யத்வ்யக்ஷரந் நாமகிரேரிதந்ருணாம் ஸக்ருத்
   ப்ரஸங்காதகி மாஸுஹந்தி.
      "சண்டாளனாயினும் 'சிவ' என்னும் சப்தத்தை உச்சரிப்பானாயின், அவனோடு கலந்து பேசுக அவனோடுறைக, அவனுடனிருந்து உண்ணுக'' என முண்டக உபநிடதம் விதந்து கூறி அச்சப்தத்தின் மகிமா பிரபாவத்தை வெயாக்கிற்று.16
16 யஸ்சண்டால: ஸிவ இதிவாசம் வதேத்தோஸஹஸம்
  வதேத்தேந ஸஹஸம் வஸேத்தோ ஸஹபுஞ்சீத.

உபய வேதாந்ததிருஷ்டாந்தம்.

ஸ்தோமன்வா அத்யருத்ராய சிவசே கூயாத்வீராய
நமஸாதிதிஸ்டானயேபி: சிவாயவான்:
ஏவயாவபிர் திவா : சிக்க்ஷதி ஸ்வாயஸ! நிகாமிபி:
(இருக்கும். X. 92. 9.)

      சிவகாமாசி'யஜுர். சம்மிதை.                      III. 63.
      நமசாம்பவே சமயோபவேச் சங்கராயச
மயஸ்காராயச நமசிவாயச, சிவதராயச''
                                                 (யஜுர் சம்மிதை IV 5. 1 14.)

சிவனெனு நாமந்தனக்கேயுடைய செம்மேனியெம்மான்”    1200
சிவனென்று நானுன்னைச் சொல்ல செல்வம் தருவானே   (298.)
     
சிவனெனுமோசை யல்லதறையோ
உலகிற்றிருநின்ற செம்மையுளதே. (1179)     
'சிவ மல்லதில்லை யறையோ'                     - திருமந்திரம்.
     
வைத்தபொருணமக்காமென்று சொல்லி மனத்தடைத்து
சித்தமொருக்கி சிவாயநம வென்றிருக்கினல்லால்
மொய்த்தகதிர்மதிபோல் வாரவர் பா திரிப்புலியூர்
அத்தனருள்பெறலாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே
கருவாய்க்கிடந்துன் கழலே நினையுங்கருத்துடையேன்
உருவாய்த்தெரிந்துன்னாமம் பயின்றேனுன தருளால்
திருவாய்ப்பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தே
      தருவாய் சிவகதி நீபா திரிப்புலியூரானே.            (1012)

காதலாகிக்கசிந்து கண்ணீர்மல்கி –
ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பதும்
வேதநான்கினும் மெய்ப்பொருளாவதும் –
நாதநாம நமச்சிவாயவே.                          (1176)

சொற்றுணைவேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.                  (1182)

மற்றுப்பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம்பாவித்தேன்
பெற்றபின் பிறந்தேனினிப் பிறவாததன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக்கொடுமுடி
நற்றவாவுன்னை நான் மறக்கினுஞ் சொல்லு நாநமச்சி வாயவே. 927'

நமச்சிவாய வாழ்க''
போற்றியோ நமச்சிவாய                        திருவாசகம்.
திகழொளியே சிவனே உன்ன பயநானே.            (392)
வாறேசிவாய நமச்சிவாயநம
      வாறேசெடிக்கில் வரும்பேர்பிறப்பில்லை
      வாறேயருளால் வளர்கூத்துக்காணலாம்
      வாறேசெபிக்கில்வரும் செம்பு பொன்னே.           திருமந்திரம்.

''ஆலயமா கவமர்ந்த பஞ்சாக்கரம்.''
''நாடும்பிரணவ நடுவிருபக்கமும்
      ஆடுமவர்வாய அமர்ந்தங்குநின்றது.
      நாடு நடுவுள் முக நமசிவாய
வாடுஞ்சிவாயநம புறவட்டத்தாயதே.''

''அஞ்செழுத்தாலே மர்ந்தனன் நந்தியும்.''
"வெளியிலிரேகையில் ரேகையிலத்தலை
      சுழியிலு காரமாம் சுற்றியவன்னி
     நெளிதருகால்கொம்பு நேர்விந்து நாதம்
      தெளியும் பிரகாரம் சிவ்மந்திரமே.'' -

''அகாரமுயிரே உகாரம்பரமே
      மகாரமலமாய் வருமுப்பதாறிற் -
      சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
      அகாரமுயிரென்றறையலு மாமே.

      "சிவனருளாகிய சிவன் திருநாமம்''
சிவசிவவாகும் திருவருளாமே''
சிவசிவவென்னச் சிவகதிதாமே''
"சிவாயநமவெனச் சித்தமொருக்கி
அவாயமறவே அடிமையதாக்கி
சிவாயசிவசிவ வென்றென்றேசிந்தை
      அவாயங்கெடநிற்க வானந்தமாமே.''
"ஓங்காரத்துள்ளே யுதித்தவைம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்தசராசரம்
ஓங்காராதீத்துயிர் மூன்றுமுற்றன
ஒங்காரம்சிவ பரசிவரூபமே''
அம்பலமாவது அகிலசராசரம்
அம்பலமாவது ஆதிப்பிரானடி
அம்பலமாவது அப்புத் தீமண்டலம்
அம்பலமாவது அஞ்செழுத்தாமே.

உண்மை விளக்கம்.

      சிவனருளாவி திரோத மலமைந்து
மவனெழுத்தஞ்சினடைவாம் - இவனின்று
நம்முதலாயோ திலருணாடாது நாடு மருள்
சிம்முதலாயோது நீசென்று.

ஒன்று நீ யல்லை, யன்றி யொன்றில்லை.

இச்சொற்றொடர்கள் இறைவனது அத்துவித இலக்கணத்தை விளக்குகின்றது. அவன் உலகு உயிருடன் வேறாயும், ஒன்றாயும், உடனாயுமிருக்கின்றான். உலகானது நமது உடல் அந்தக்கரணங்கள் புறக்கரணங்கள், நாம் வாழும் புவனங்கள், நாம் அனுபவிக்கும் போகங்கள் எனவிரியும். இவையனைத்தும்
நிலைப்பன போலத்தோன்றினும், க்ஷணத்துக்குச் க்ஷணமாறி மாறியழிகின்றன. உயிருக்குமே புறம்பாக நின்று, சுட்டுப் பொருள்களாகி, உயிரில்லாத சடப்பொருளாகின்றன. சாதாரணமாக நம் உயிர், அல்லது அறிவை நோக்குழி, இவை எவ்வளவோ வித்தியாசமுள்ள பொருளாகின்றன. இவைகளின் முக்கிய குணமானது இடம் கொண்டதாகின்றது. இதற்கு அகலம் குறுக்கம் கன முதலியன சொல்லலாம். அறிவோவென்றால் அவ்விதமாக அளக்கப்படாதது. இடத்திலும் அடங்காதது. மேல், உலகானது நம்முடைய நற்குணம் தீயகுணம், நல்வினை தீவினை, இன்பம் துன்பம், புண்ணியம் பாவம் இவைகளுக்கு ஆதாரமாகி உயிரைச் சிக்குவிக்கின்றது. மேலும், இச்சடப்பொ'ருள் அசைவித்தாலன்றி யசையாதனவாயுள்ளது. உடலில், உயிரில்லாத வழியும், அறிவு வேறுவிதமாய் நிலைத் திருக்கும்போதும், கண்ணிருந்தும் கண்காணாது. காதிருந்தும் அதுகேளாது, மணமிருந்தும் மற்றொன்றில் பற்றாது மற்ற கரணங்களும் அவ்வாறே, இன்னும் விசாரிக்கில், இவையெல்லாம் உலகியற்பொருள்களில் அதிசூக்குமமாய் நிற்கும் பொருளையும் கடந்த ஒரு சக்தியினால் சுழல்வதாகவும் தெறிகிறது. இம்மண்ணுலகமும, சந்திரனும், அதனை சசார்ந்த கிரகங்களும், சூரியனைப்பற்றிச் சுழல்கின்றன. இச்சூரியனைப்போல எண்ணிறந்த சூரியர்கள் உள. இவைகளெல்லாம், இவற்றின் அதீதப்பட்ட ஓர் சக்தியாற் சுழல்கின்றன. ஆகவே இம்மாயையும், ஒன்றின் மிடைந்ததாகவும், தனக்கென ஓர் சுதந்தரமற்றதாகவும்; உயிரையன்றி பிறக்காததாகவும், நிலைக்காததாகவும் உள்ளது. இதனால் நாமறிந்தது உலகம் (பிரகிருதி, மாயை, மோகினி முதலியன பரியாய நாமங்கள்.) அடிக்கடிமாறும், சலனப்பொருள் மாறி மாறி அழியும் பொருள், அறிவற்ற சடப் பொருள் (அசேதனப்பொருள்,) சுட்டுப்பொருள், எல்லாதீயவற்றிற்கும் ஆதாரமாய், உயிரை மயங்கச்செய்வது, அசைவித்தாலன்றி அசையாது, ஒன்றின்மிடைந்ததாய், சுதந்திரமற்றதாய், தனித்து நில்லா தபொருள். இப்பொருள்களின் மூலகாரண
ங்களை விசாரித்துழி, சுத்தமாயை அல்லது குடிலை அல்லது குண்டலினி என்னும் மூலகாரணத்தினின்றும் நாதம் முதல் பிருதிவியீறாக முப்பத்தாறு தத்துவங்களாகவிரியும். பிருதிவி முதல் ஏழுநின்ற 24 தத்துவங்கள் அசுத்தமாயை அல்லது பிரகிருதி, அல்லது மூலப்பிரகிருதியில் அடங்கல். அதற்கு மேலிராநின்ற கலை கால முதலிய 5 தத்துவங்கள் சுத்தா சுத்தமாயையில் அடங்கும். அதற்குமேல் நின்ற சுத்தவித்தை முதலிய ஏழு தத்துவங்கள் சுத்தமாயையில் ஒடுங்கும். பிரகிருதி தத்வங்களே நமக்கு சாதரணமாகப் புலப்படுகின்றன. யோகப்பயிற்சியில் மேல் நின்ற தத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். மேல் ஏற ஏற அத்தத்துவங்கள் அதிநுட்பமாயும் அதன் சக்திகள் அளவற்றதாயும் காணப்படுமாதலால், அவற்றையே உயிரென்றும், கடவுளென்றும் மயக்கமுண்டாவதற்கு ஏதுவாகும். மின்சாரசக்தி தற்காலம் கண்டு பிடிக்கப்பட்டு அதன்வலியை எவ்வளவு அபாரமாகக் கொண்டாடுகிறார்கள். ஆயினும், இதுவும், சில நவீன தத்துவ சாஸ்திரிகள் கொள்ளுவது போல உயிராகா, கடவுளாகா. இதுவும் மூலப்பிரகிருதியில் அடங்கியது. இதற்கு எவ்வளவோ அதிதூரமாயும் அதிநுட்பமாகியுமுள்ள சுத்த, சுத்தா சுத்தமாயா தத்துவங்களும் உயிராகா, கடவுளாகா.
மேல், சித்து, அறிவு, ஆத்மா என்னும் பெயர்களால் ஒருவாறு இறைவனோடு இணைத்துக்கூறும் உயிர்களுமே இறைவனாகுமோ வெனில், அவைகளும் ஆகா. அவைகளின் பேதங்கள் நம் கண்ணுக்குப் புலப்படாத அனுக்களாயும், புலப்படும் புழுப் பூடு முதல் மக்களீறாகவும், நமக்குப் புலப்படாத தேவர் நாகர்களாகவும் விரியும். இவைகளுக்கு அறிவு, இச்சை, தொழில்கள் உண்டு. இவைகளும் எவ்வளவோ குறைந்தும் எவ்வளவோ மேம்பட்டும் காணப்படும். அப்படி காணப்படினும், அவ்வறிவும் தொழிலும் இச்சையும், அறியாமையால் மூடப்பட்டு அதன் வலி குன்றி, தனக்கு நன்மையைத் தருவது இது தீமையைத் தருவது இது, என உணராது நினைப்பு மறப்புமுடையதாய், விருப்பு வெறுப்பு மேலிட்டுப் புண்ணியபாவங்களைச் செய்து, இன்பதுன்பங்களை நுகர்ந்து, இறப்பு பிறப்பு என்னும் பெரும்வலையில் சிக்குண்டு உழல்கின்றது. அவ்வறிவும், இவ்வுலக இயற்கையினையும், அத்தோற்றங்களையும், அதன் வலியினையும் நன்குணரவில்லை. உலகின் ஆகிருண சக்தியை (gravitation) க் கண்டு பிடித்த பேர்போன ஸர் ஐனாக் நியூடன் பண்டிதரும், தாம் கண்டதெல்லாம், சிறுவர்களும் சிறுமியர்களும் கடற்கரையினோரம் அப்பப்போது கிடைக்கும் அழகிய சிப்பிகளைக் கண்டெடுத்துக் களிக்குமாறு போலென்றார். இயற்கை சக்திகளைக்கண்டு பிடிக்க வேண்டியது எவ்வளவோ வுண்டு. கண்டுபிடிக்கப்பட்டதாகக் கொண்டதிலும் கூட எவ்வளவு நுட்பமாய் விசாரிக்கின்றோமோ, அவ்வளவாக நமது அறிவுக்கு கடந்து செல்கின்றது. உலக இயற்கையினை நாம் சரியாக உணருவோமாயின், எவ்விதமான துன்பங்களினின்றும் நாம்தப்புவதற்கு இடமுண்டு நாம் உண்ணும் உணவு, நாம் குடிக்கும் நீர், நாம் உட்கொள்ளும் காற்று, நாம் இருக்கும் இடம், நம்மைச் சூழ்ந்திருக்கும், புல், பூச்சி, புழு, மரம் மட்டை பசு பட்சி முதலியவைகளால் எவ்வி தமான இன்னல்கள் உண்டாகின்றன. சில வருஷங்களாக, காற்றைவலித்து, அதிற் பறக்க முயலுகிறார்கள். இதற்குள் அதளைச் சரிவர செய்து முடிக்காததனால் மாண்டவர்கள் எத்தனை பேர்! நேற்று ஒருவர் எழுதுகிறார். இதுவரையும் பட்சிகள் அமைப்பைப் பார்த்துக் காற்றுக் கப்பல்களைச் செய்கிறார்கள். அது சரியன்று. பூச்சிகளின் பறக்கும் அவயவங்களைச் செய்ய வேண்டுமென்கிறார். இன்றுண்டாகி நாளையழியும் ஒரு சிறு பூச்சியில், இறைவனால் அமைக்கப்பட்ட அமைப்பு என்ன அற்புதம்! அதை நாம் அறியவல்லேமா?
   
நாம் செய்யும் தொழில்களிலும்கூட என்னபோதம், நாம் ஐயறிவுடைய மானிடராகியும், நாம் செய்யும் ஒவ்வொரு தொழில்களிலும், அற்பமாகிய பூச்சிகளும்கூட நம்மை செயிக்கின்றன. ஓர் சிலந்தி எவ்வளவு எளிதாய் நூற்கும் நூலைவிட நுண்ணியதாய் நாம் நூற்கமுடியுமா? அச்சிலந்தியும், குழவியும் செய்யும் காகிதங்களைவிட நுட்பமாய் நாம் செய்யமுடியுமா. அச்சிலந்தியும் அக்குளவியும், தேனீக்களும் அமைக்கு வீடுகளையும், அரண்மனை களையும், கூடகோபுரங்களையும் மாடமாளிகைகளையும் விட நாம் அலங்காரமாயும் வலியுளதாகியும் அமைக்க முடியுமோ? சிறு பூச்சிகள் செய்யும்பட்டுமே யன்றோ நமக்குச் சிறந்த ஆடையாகின்றது. நம்மால் செய்ய முடிவதெல்லாம் இமிடேஷன் (போலி) பட்டேயன்றோ? ஒரு எறும்பினிடத்துள்ள அறிவும், யுக்தியும், தற்காத்தற்றன்மையும் ஒற்றுமையுமே நம்மிடத்தில்லையே ! இவ்விதமாய் இவற்றின் அமைந்துள்ள அறிவும் தொழிலும், இறைவனால் அமைக்கப்பட்ட தன்றோ?
   
இதுநிற்க, இவ்வுயிரும் பொருள்களையறியுமிடத்துத் தானாக அறிந்ததுண்டோ? தன்புறக்கரணங்கள் அகக்கரணங்களைக்கொண்டு அறிந்ததேயன்றி வேறின்று. கண்ணில்லாவிடில் காணமுடியாது, செவியில்லாவிடில் கேட்கமுடியாது, மனதில்லாதபோது நினைக்கமுடியாது. அப்படிக்கண்ணிருந்தும், இது அறியாமை மேலிட்டதால், சரியாகப்பார்க்க முடியவில்லை, காதிருந்தும் கேட்க முடியவில்லை. மன திருந்தும் நினைக்கமுடியவில்லை, மருட்சி அடைகின்றது,. அகக்கரணங்கள் குறைந்து ஒய்வுறும்போது இதுவும் அயர்கின்றது. மேலிடும்போது, மேல்நோக்குகின்றது. இவ்விதமாய் நினைவு, கனவு, உறக்கம் முதலிய அவத்தைகளை யடைகின்றது. இதற்குமேல் கேவல சகலமென்னும் நிலைகளையும் அடைகின்றது. மேலிவ்விந்திரியம் கரணங்களுடன் செறிந்து நிகழும்பொழுது, இவைகளை யடக்கி ஆளுந்தரமும் உண்டோவெனில் இதுவும் இல்லையே! அவைகள் எல்லாம் இதனைப் பற்றியீர்ப்பதல்லால், தன் வசத்தின் அவையடங்கவில்லையே குரங்கைப்போல் மனம் என்றும் சலித்துத்தாவுகின்றதே. பிரகிருதியில் பிறந்த உடலையிது கொள்ளவும் அதன் கூறாகிய சத்துவம், இராஜஸம், தாமதமாகிய முக்குணவயப்பட்டு இது உழல்கின்றாதன்றோ? இவைகளின் பகுதியும், அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், பைசாசம், சூதியம், ஆச்சரியம், பயம் அன்றோ இதனைமூடும் ஆணவத்தின் பகுதியும், விகற்பம் சங்கற்பம், குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை என்பனவன்றோ, இருத்தல், கிடத்தல், இருவினையியற்றல், விடுத்தல், பரநிந்தை மேவலாகிய கர்மமலத்தின் கூறுகளும் இதனை பந்திக்கின்றதன்றோ. இம்மும்மலங்களும் சடமாயிருந்தும், இது சித்தெனப் பேர்பெற்றும், அவற்றிற்பட்டுப் பங்கமுறுகின்றதன்றோ?
   
மேல், இவ்வுயிரும், தான் ஒன்றை யறியத்தொடங்குமுன் இன்னொருவுயிரால் அறிவுறுத்தப்பட்டாலன்றி தானாக அறியும் தரமுடையதோ எழுத்தும், சொல்லும், பொருளும் அதற்கு மேல் நின்ற கலைகளும் பிறரால் உணர்த்த உணருமேதவிரத் தானாக உணருமோ? உணர்ந்த வழியும் அதனை மறந்து விடுகின்றதே? இம்மட்டன்றி, தன்னையும் தானிது அறிந்ததோ? தன்சொரூபமின்ன தென்றே தனக்குத்தெரியாமல், தன்னையுமறந்து, யாதொன்று பற்றின் அதன் இயல்பாய்நிற்கின்றதே. தீயவினத்திற் சேர்ந்துழி தீயதாகின்றது. நல்லினத்தின் சேர்ந்துழி நல்லதாகின்றது. ஆணவத்தோடும், தேகத்தோடு கரணங்களோடும் சேர்ந்தபோது, தான் அவையல்லா திருந்தும், அவை யெல்லாம் தானேயென மதித்து, அக்குணங்களும் தானேயாய் அவையிற்றின் ஏவலினின்று, அத்தொழில்களைப் புரிந்து, இன்பதுன்பங்களை நுகர்ந்து பிறவிப்பிணியிலாழ்கின்றதே. இவைதானல்லவென்று அறிவடைவதும் அதன் சிக்கினின்றும் விலகி உய்வு பெறுவதும், இதன் வலியானன்றே. இறைவன் தனதின்னருளால், தம்முதல் குருவாய்வந்து தனது கட்டுகளின் இன்மையும், தனதுண்மையும் காட்டாக்கால், இது காணுமோ? வேதத்தப்பானின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாகிய கற்பகம், நிலையிலாதன் நெஞ்சினுள்ளே நிலவாத புலாலுடம்பே புகுந்து நிற்பினும் அவன் தன்னைக்காட்டுவித்தாலன்றிக் காணுந்தரமோ மேல், இவ்வுயிரின்பால் நிகழும் குற்றங்களெல்லாம், உண்மையல்லவென்றாவது, அத்தியாச மென்றாவது, இறைவனிடத்துள்ளதே இதன் பாலும் தோன்றிற்றென்றாவது கொள்ளவும் கூடாது. தானல்லாததைத் தானாகப்பாவித்தும், உண்மை யல்லா ததை உண்மையாக உணரும் குற்றம் குற்றமேயன்றோ ! சுத்தமெய்ஞ்ஞானச் சோதியாகிய செம்பொருளிடம் அசுத்தஞானம் மொத்துறுமோ. சூரியன் கதிரொளியின் முன் இருளும் நிற்குமோ?

   இவ்விரண்டும் ஒருவிதமாகச் சித்து, அறிவு என்று முன்கூறினேமாயினும், சிவன் அருட்சித்து, சீவன் அருளைச்சேரும் சித்து அவன் பவங்கெடுபுத்தி முத்திபண்ணும் சித்து, இவன் அவற்றில் படியுஞ் சித்து; ஆகையால் இவ்விரண்டு மொன்றாகா?

சித்தாந்தம: உலகும் உயிரும் சிவமல்லை.
ஒன்றாம் திருப்பெருந்துறை சிவனே ஒன்று நீ யல்லை.''
இதற்கு திருஷ்டாந்தம்

कस्मिन्नुत्वं चात्माच प्रतिष्ठितौस्थ इतिप्राण इतिकस्मिन्नुप्राणः प्रतिष्ठित, इत्यपान
इतिकस्मिन्वपान प्रतिष्ठित इतिव्यान इतिकस्मिन्नुव्यानः प्रतिष्ठित इत्युदान इतिकस्मिन्नु
பிருகதாரண்யம். 5. 9. 26.
   
எதில் நீயும் ஆன்மாவும் பிரதிஷ்டிக்கப் பட்டிருக்கிறீர்களோ அது பிராணத்தில், பிராணன் எதிலெனில் அபானத்தில், அபானன் எதிலெனில் வியானனில், வியானன் எதிலெனில் சமானனில், சமானன் இவன் (ஆன்மா) அல்லை அல்லை.

यःपृथिव्वांतिष्ठन् पृथिव्यं अन्नरोयंपृथिवीन वेदयस्यपृथिवीशरीरं यः पृथिवीमन्तरोय
பிருகதாரண்யம். 4. 5. 15.
   
எவன் பிருதிவியில் இருந்துகொண்டு பிருதிவியினின்றும் வேறானவனோ, எவனை அந்தப்பிருதிவியறியாதோ, எவனுக்குப் பிருதிவிசரீமோ, எவன் பிருதிவிக்கு நடுவனோ, இது எவனை அடைகிறதோ அவன் உன் ஆன்மா அவன் அந்தரியாமி அமிர்தன்.

योविज्ञानेतिष्टन् विज्ञानादन्तरोयं विज्ञानं नवेदयस्यविज्ञानग्शरीरं यो विज्ञानमन्तरोय                                                                       பிருகதாரண்ய ம். 5. 7. 3.
   
எவன் விஞ்ஞானத்தில் இருந்துகொண்டு விஞ்ஞானத்தினின்றும் வேறானவனோ, எவனை விஞ்ஞானமறியாதோ, எவனுக்கு விஞ்ஞானம் சரீரமோ, எவன் விஞ்ஞானத்திற்கு நடுவனோ இது எவனை அடைகிறதோ அவன் உன் ஆன்மா அவன் அந்தரியாமி அமிர்தன்.

कालस्वभावोनियतिर्यदृच्छभूतानियोनिः पुरुषइतिचिन्त्यं    சுவேதாசுவதரம். 1. 2.

கால சுபாவம், நியதி, எதிர்ச்சை, பூதங்கள் யோனி, புருஷன் இவைகட்கு ஆன்மபாவத்தால் சமயோகம் இல்லை. ஏனென்றால் சுகதுக்க வேதுவைக் கொண்டு ஆன்மாதலைவனல்லன்.

तेध्यानयोगानुगतं अपश्यन्देवात्मशक्तिग् स्वगुणैर्किगूडां          சுவேத. 1. 3.
   
தியானயோகநெறி நின்றோர் பரமான்மாவின் கண்ணுள்ள இயற்கை குணங்களாலே மூடப்படுகிற திருவருட்சத்தியே கால முதலாக நிற்குங் காரணங்களையும் சீவான்மாவையும் தன்வழி நிறுத்தி நடாத்துகின்ற தென்றறிந்தார்.

ज्ञाज्ञौद्ववजावीशनीशावजाह्येका भोक्त्यभोगार्थयुक्ता            சுவேத. 1. 9,

ஒன்று ஞானவுருவாயுள்ளது, மற்றையது அஞ்ஞானவுருவாயுள்ளது, ஈசன் அநீசன் இருவரும் பிறவாதவர் அங்ஙனமாயினும் ஒன்று எல்லாம் வல்லது, மற்றையது அவ்வாறாகாதது. உலகவியற்கை நுகர்வோனும் துகரப்படுவன வற்றோடுங் கூடிப்பிறப் பின்றியுள்ளது. ஆன்மாக்களனந்தம் விசுவசொரூபமுடைமையினால் முதன்மையில்லாதன,
     
क्षरप्रधानममृताक्षरग्हरः क्षरात्मानवीशतेदेवएकः
तस्याभिध्यानाद्योजनात्तत्ववादाद् भ्याश्चान्तेविश्वमायानिवृत्तिः     சுவேத. 10. 11.

பிரதானம் அழிதலுறுவது, அரன் அழிதலும் மரணமுமில்லாதவன். அழிதலுறுகின்ற இயற்கினையும் ஆன்மாவினையும் ஒரே தேவனான ஈசனே ஆளுகிறான் அவனையே தியானித்தலானும் அவனோடு யோஜித்து ஒருமையுறுதலானும் திரும்பத் திரும்பத் தன்னையுண்மையுருவாக நினைதலானும் விசுவத்தின் கண்ணாகவரும் மாயங்கள் அகலுகின்றன. தேவனையறிதலாலே சருவபாசங்களும் அழிதலுறுகின்றன. பிறப்பும் இறப்பும் எல்லாவித துன்பங்களும் குறைய ஒழிகின்றன.

यथैवबिंबंमदयोपलिप्तं तेजोमयंभ्राजतेतस्सुधौतम्               சுவேத. 2. 14.
     
இவ்வியோக சமாதியின் கண்ணே அழுந்தப்பெறுகிற விடத்துத் தன்கட் சோதியாய் விளங்கப்பெறுந்தன் ஆன்மவுண்மைத் தன்மையோடு ஒட்டித் தத்துவாதீத நித்தியமான பிறப்பில் பிரமத்தின் உண்மைத் தன்மை கண்டு எவ்லாப்பாசங்களி னின்றும் விடுபடுகிறான்.

यदात्मतत्वेनतुब्रह्मतत्वं दीपोपमेनेहयुक्तःप्रपश्येत्        சுவேத. 2. 15.

தீபத்தைப்போன்ற ஆன்மதத்துவத்துடன் கூடிப் பிரமத்துவத்தைக்கண்டு அஜன் நித்தியனும் சர்வதத்துவங்களால் விசுத்தனும் ஆன தேவனை அறிந்து சர்வபாசங்களினின்றும் நீக்கம் பெறுகிறான்.

மண்ணல்லைவண்ணல்லைவலயமல்லை
            மலையல்லை கடலல்லைவாயுவல்லை
       எண்ணல்லை எழுத்தல்லை எரியுமல்லை
      இரவல்லை பகலல்லையாவுமல்லை

பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாயநீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை  
யுணர்வரிய வொற்றியூர் உடைய கோவே.          (தேவாரம் 1109)

உரைசேருமெண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேத
நிரைசோப்படைத்தவற்றின் உயிர்க்குயிராய் யங்கங்கே நின்றான். (575)

மோத்தையைக்கண்டகாக்கை போலவல்வினைகண்மொய்த்துன்
வார்த்தையைப் பேசவொட்டா மயக்கநான் மயங்குகின்றேன்
சீத்தையைச்சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன்றில்லா (1190)

மருளவாமனத்தனாகி மயங்கினேன் மதியிலாதேன்
      இருளவாவறுக்குமெந்தை யிருவினை யடி நிழலென்னும்
      அருளவாப்பெறுதலின்றி யஞ்சிரானலமந்தேற்குப்
      பொருளவாத்தந்தவாறே போதுபோய்ப் புலர்ந்ததன்றே.            (1190)

      ஆசைவன்பாசமெய்தி யங்குற்றேனிங்குற்றோனாய்
      ஊசலாட்டுண்டுவாளாவுழந்து நானுழிதராமே                    (1191)
  
      விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணுநிலனும்,
      திரிதருவாயுவல்லர் செறிதீயுமல்லர் தெளிநிருமல்லர் தெளியில்
      அரிதருகண்ணியானை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்,
      எரியாவாரமார் பரிமையாருமல்லர் இமைப்பாருமல்லவரே.       (1175)

      தொண்டனேன் பிறந்து வாளாதொல் வினைக்குழியில் வீழ்ந்து
      பிண்டமேசுமந்து காக்கும் பெரியதோரவாவிற் பட்டேன்.          (1192)

      கற்றிலேன் கலைகள்ஞானம் கற்றவர் தங்களோடும்
      உற்றிலேனாதலாலே உணர்வுக்கும் சேயனானேன்.               (1193)

      முன்னையென்வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன்
      பின்னைநான் பித்தனாகிப்பிதற்றுவர் பேதையேனான்.            (1194)

வளைத்துநின்றைவர் கள்வர் வந்தெனை நடுக்கம்செய்யத்
தளத்துவைத்துலையை யேற்றித் தழலெரிமடுத்தநீரில்
திளைத்து நின்றாடுகின்ற வாமைபோற்றெளிவிலாதேன்
இளைத்து நின்றாடுகின்றேன் என்செய்வான் னோன்றினேனே.     (1195)

ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரே
யடங்குவித்தா லாரொருவ ரடங்காதாரே
ஒட்டுவித்தா லாரொருவ ரோடாதாரே
உருகுவித்தா லாரொருவ ருருகாதாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பணியாதாரே
காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.
யன்றியொன்றில்லை.

இச்சொற்றொடர்கள், இறைவன் உலகுயிருடன் நிற்கும் - அத்துவித அபேதநிலையை விளக்குவதாகும். இறைவனையன்றி, மற்றொன்றும் இல. இறைவனே இவையெல்லாமாவன். அனைத்தும் இறைவனே, எல்லாம் ஒன்றே, இரண்டாவது இல்லை. முன்னர் இவையொன்றும் இறைவனல்லன் எனபேதங்கூறி, இப்பொழுது அபேதம் கூறுதல் முரணாகாதோவெனில், ஆகாது. அதனை விளக்குதும்.
      
இவ்விதம் அபேதம் கூறுவதெல்லாம், இவ்விரண்டினுக்கும் உள்ள பிரிக்கப்படாத அருந்திய சம்பந்தத்தை நோக்கியே யின்றி, பொருள் ஒற்றுமையாலன்று. இவ்வநந்நிய சம்பந்தம் எவ்விதங்களால் ஏற்படுகிறதெனின் விரிக்குதும்.

      1. உலகுயிரெல்லாம் இறைவனிடம் உதித்து, ஓங்கி, மறுபடியும் அவனிடம் ஒடுங்குகின்றது.
      
இவைகள், அவனன்றி, தனித்து உளவர் மாதலாவது, தானாக, தோன்றி, வளர்ந்து, அழிதலென்பதாவது இல்லை. அவன் அசைவித்தாலன்றி, இவை யசையா, அறிவித்தாலன்றி உயிர் அறியா. அவன் சங்கற்பித்தால் தான், இவைகள் தோன்றி நின்று வெளிப்படும். இல்லையாயின் இதன் தோற்றமேயில்லாமல், சூன்யமாய் நிற்கும். இறைவன், எல்லாவற்றிற்கும் முந்தியும், நடுவிலும் இறுதியாயுமுள்ளவன், ஆதிபுராதனன். முதல் முதலில் அவன் ஏகமாய் நின்றுள்ளான். அப்பொழுது வேறு ஒருபொருளும் இல்லை. இவையெல்லாம் தோன்றி நின்று அழிந்தபிற்பாடும், அரன் தனித்து நிற்பான். - எல்லா உயிர்களும், பிறந்துழன்று, சன்மார்க்க நெறிநின்று குருவருளைப்பெற்று, வீட்டுப்பேற்றை யெய்துங்காலையும், அவை, சிவபெருமான் அடி நீழலையெய்துமே யன்றித் தனித்துநில்லாது. அக்காலையும் சிவமொன்றே வேறொன்றுமில்லையென உணர்ந்தார்கள் அநுபூதிச் செல்வர்கள்.
    
ஆகவே, இவைகளின் உண்மைக்கும், சிருஷ்டி, திதி, சம்மாரம்மாகிய பலவிதகாரியங்களுக்கும் சர்வகாரணணாயிருப்பவன் சங்கரன். இவ்வானையன்றி, என்று நிலைக்காத, தோன்றாத, வளராத இயங்காத ஒருபொருளை உள்பொருள் என்றாவது, தனிப்பொருள் என்றாவது வேறு பொருள் என்றாவது எவ்விதம் கொள்வது? ஒன்றையன்றி இன்னொன்று நிலையாதபட்சம், இயங்காதபட்சம், அவைகளை ஒன்றெனக்கூறுவது மரபு.

2. இன்னமொரு விதத்தாலும் இவ்வொற்றுமை ஏற்படும். இறைவன் எல்லாவற்றிலும் அந்தர் யாமியாயும், சர்வ வியாபகமாயும் உள்ளான். கடவுள் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் நிறைந்து நிற்கின்றார். நூலிற்பாவுபோல ஊடுருவி நிற்கின்றான். எல்லாவுடல்களிலும், எல்லா இந்திரியங்களிலும், எல்லா கரணங்களிலும், எல்லா உயிரிலும், உள்ளுக்குள்ளாய் நிற்கின்றான். அப்படி நில்லாவிடில் அவையொன்று மியங்காது. அப்படி நின்றும், அவையிற்றையெல்லாம் கடந்து நிற்கின்றான். அவன் சர்வவியாபி, பரிபூரணன் அவனில்லாவிடம் ஒன்றுமில்லை. அணுவுக்கு அணுவாய் மகத்துக்கு மகத்தாய் பாலில் நெய்போலும், விறகில் தீபோலும் கலந்து நின்று, எல்லாவற்றையும் தன்னுளடக்கி, எல்லாவற்றிற்கும் மேலாகி நிலவுகின்றான். அவன் அவ்விதமாய் ஒவ்வொரு அணுவிலும் அந்தர்யாமியாய் பரிபூரணணாய் நிற்பதும் அவன் சித்தாயும், மற்றவையெல்லாம் சடமாயுமுள்ள தால்முடிந்தது எனவேறு விடங்களில் காட்டியுள்ளேம். இந்த நியாயத்தினாலும் இறைவனை யன்றி வேறுபொருள்கள் இல்லையெனவும், உண்மைநிலை பெறும்.  

3. மேலும், இவ்வுண்மை, எல்லாவற்றிற்கும் சூக்குமமாயும், அளவற்ற அகண்டமாயும்; எல்லாவற்றின் மூலமாயும், ரசமாயும், வித்தமயும், அணிக்கு அணியாயும், அழகுக்கு அழகாயும், அறிவுக் கறிவாயும் இறைவன் நிற்பதால் இவ்வுண்மைபோதரும். அவனுள் அடங்காததொன்றில்லை. எல்லாதத்துவங்களும் கரணங்களும்ஸ்து லத்தினின்றும் சூக்குமமா கொடுங்கிவரும்காலத்தில் இறைவன் இவைகளுக்கெல்லாம் சூக்குமமாகி இவைகளை அடக்கி நிற்பன். ஒவ்வொன்றின் மூலத்தை, வித்தை, விசாரித்துச் சென்றுளி, அது கண்ணுக்குப்புலப்படாது சூனியமாய் நிற்கும். அச்சூன்யத்தினாலும் - சூன்யமாய் இறைவன் நிற்பன். ஒவ்வொன்றின் உள்ள ஒனியும், அழகும், பொலிவும் அறிவும், இறைவனுடையதே யாகும். இதை நீக்கின், அவைகள் தன் ஒளியும் அறிவுமின்றி ஒன்றுமில்லாமற்றோன்றும். எதற்கு எதனால் பொலிவுண்டாகின்றதோ, அதனைத்தான் பொருள் என்று கூறுதலும் மரபு.

      4. மேலிந்த அபேத சம்பந்தம், உலகு உயிர்களும் இறைவனும், உடல் உயிர்போல் நிற்றலால் ஏற்படும். அறிவுள்ளதும், அறிவில்லாததுமாகிய சேதன அசேதனப் பிரபஞ்சம், இறைவனுக்கு உடல்போலாகும். அவன் உயிராவான். எவ்விதமாக உடலும் கரணங்களும், உயிர் இயக்கினவழி நிற்குமோ, அவ்விதம், இறைவன் இயக்கினவழியே உலகுயிர்களும் இயங்காநிற்கும். ஒருவன் கண்விழித்திருந்தும் அவன் அறிவு அதனோடு செல்லாவிடில், கண்காணாது. அதுபோலச் செவிகேளாது. மூக்குமுகபாது, இறைவனும் ஒற்றித்து நிற்காவிடில், உலகின் பலவித இயக்கங்களும் நிகழா. உயிருக்கும் அறிவு இச்சை செயல்களும் நிகமா. இறைவனுக்கு இச்சை நிகழ்ந்துழியே, உலகம் தோற்றம் முதலிய நிலைகளை யடைந்தது. உயிர்கள் சகலத்திற்பட்டன. உயிரும் உடலும் வேறுபிரிக்கப்படாமல் ஒற்றித்து நிற்பினும், உயிர் உடலாகா உடல் உயிராகா, உயிரினின்றும் உடல்பிறவா, உடலினின்றும் உயிர்பிறவா. இவ்வுடலுயிருக்குள்ள சம்பந்தம், ஐக்கிய சம்பந்தமுமன்று, சமவாயசம்பந்தமுமன்று, சையோகம், குணகுணி, சொரூபம், அநிர்வசநிய சம்பந்தமுமன்று. *
* திராவிடபாஷ்யம், மதுரைப்பதிப்பு 246, 247 - ம் பக்கம் பார்க்க
 இதன் விரிவையும் அத்துவிதம்' என்னும் நூலில்பார்க்க
மற்றிதன் சம்பந்தம் என்னையோவெனின், தாதான்மியம் (அது அதுவாதல்). தாதான்மியம் இருவகைப்படும். ஒருபொருளே அவயங்கள் அதனையுடைய அவயவி (தேகம் - தேகி உடல் உயிர்) யாதல், அல்லது குணங்கள் அதனையுடைய குணியாதல் ஒருவகை தாதான்மியம். அதுபோல, இருபொருள் அதுவதுவாய் ஒற்றுமைப்பட்டு நிற்றல் இன்னொரு வகையான தாதான்மியம் முன்னையதை தாதான்மியமென்றும், பின்னையதை அத்துவிதமென்றும் சொல்லப்படும். அத்துவிதம் என்ற சொல்லை அநந்நியம், (அந்யநாஸ்தி, வேறல்லாதது) என்று பொருள்படுத்தி, அது ஒன்றாகவும், இரண்டாகவும் ஒன்றிரண்டாகவும் (பேதம், அபேதம், பேதாபேதம்) ஒன்றல்லாதது, இரண்டல்லாதது, ஒன்றிரண்டல்லாதது என அதன் சூக்கும சம்பந்தத்தை விளக்கியுள்ளார்கள். இம்முறையில், தாதான்மிய சம்பந்தமாகிய உடல் உயிர் சம்பந்தம் அபேதத்துள் அடங்கும்.

மேல், இவ்வுடலுயிர் சம்பந்தம் உயிர் மெய் எழுத்து உதாரணத்தால் மிகவும் தெளிவுபெறும். பரமஞானிகளாகிய நம்முடைய ஆன்றோர் உடல் உயிருக்கும், உயிர்மெய்யெழுத்துகளுக்கு முள்ள ஒற்றுமையை நோக்கி அவ்வெழுத்துகளுக்கு அப்பெயரிட்டனர்.
    
"உடமேலுயிர்வந்து ஒன்றுவந்து இயல்பே" என்பது சூத்திரம். இவ்வுயிர் மெய் எழுத்து இயல்பு புணர்ச்சிக்கு ஒன்று என்ற பதத்தாலேயே அதன் சம்பந்தம் விளக்கியுள்ளார்கள். இதனை விரிக்கும்கால், உயிர் எழுத்தின் உதவியில்லாமல், எவ்விதமெய்யெழுத்தும் பிறக்கா, ஒலியா. 'க்' என்றதை ஒலிக்கும்கால், இக், என்றாவது '' என்றாவது ஒலிக்கவரும், இவ்விரண்டு விதத்திலும், இகரவுயிர் அல்லது அகரவுயிர் தொக்கி இயங்குகின்றது. அப்படி இயங்காவிடில், மெய் ஒலிபெறா "அகரவுயிரின்றேல் அக்கரங்கள் இன்றாம்'' உயிரில்லாதகாலத்து மெய் இல்லை யெனவே சொல்லவரும். அப்பொழுது உயிர் ஒன்றே (இறைவன் ஒன்றே) என்று யோதரும். ஆயினும், உயிர் மெய்யாகாது. உடலெழுத்து உயிராகாது. ஒன்றினின்றும் ஒன்று காரணகாரிய சம்பந்தத்தால் பிறவாது. *  
*  இதன்விரிவை "அத்வைதம், சைவசித்தாந்தத்தின்படி” என்ற எம் நூலில் காண்க.

இங்ஙனம், உயிர் எழுத்து ஒன்றே, இறைவன் ஒன்றே, வேறுபொருள் இல்லையென்று சொல்லலாகும். இன்னொருவிதம், சீவனின் அது வது வாதற்றன்மையால், இறைவனுடன் ஒற்றித்து நிற்கும் காலை, தான் எனவேறாகக் காணப்படாமல், இறைவன் ஒருவனாகவே நிற்றலும் ஒன்று. அதாவது, ஆன்மா, சிவத்துடன் சார்ந்து நிற்கும் பொழுது தன்சொரூபம் கெட்டு, சிவத்தின் சொரூபமே மேலோங்கி நிற்கும்; சிவத்தோடு நிற்கும்போது, சீவன் அங்கு காணப்படாது.

       "யான் எனல்காணேன் பூரணவொளியில்''
    
அதுவதுவாதல்' என்பது, 'சார்ந்த தன்வண்ணமாதல்' என்றும், 'யாதொன்றுபற்றின் அதன் இயல்பாய் நிற்றல்' எனவும் விரியும்.: [*3]   இதன் உள் பொருளைக்காட்ட பன்னிறம் கவரும் அல்லது ஒளிகவரும் பளிங்கின் உபமானம் எடுத்தோதப்படுகின்றது. பளிங்கு, கண்ணாடி இருளோடு சேர்ந்தகாலத்தில் இருளாகவும், ஒளியோடு சேர்ந்த காலத்து ஒளியாகக்காணப்படுமே யன்றி, கண்ணாடிகாணப்படாது. பன்னிறந்தீட்டிய ஒருபடத்தின் பின் கண்ணாடியை வைக்கும்போது படம் காணப்படுமே யன்றி, கண்ணாடி காணப்படாது. சூரியன் ஒளியின் முன் அக்கண்ணாடியை வைக்கினும், சூரியகிரணம் பிரதிபலித்து நம் கண்ணை மூடச்செய்யும், அப்பொழுதும் கண்ணாடியைப் பார்த்ததில்லை. இவ்விதமாயுள்ள பல நியாயங்களானன்றே, நம்மணிவாசகப் பிரானும் "அன்றி யொன்றில்லை'' என திருவாய்மலர்ந்தருளி யுள்ளார்.

உபய வேதாந்த திருஷ்டாந்தம்.
 
உலகத்தின் காரணம் தான் என்னை? ஆகாசம், ஏனெனின் இவ்வெல்லா பூதங்களும், ஆகாசத்தினின்றும் தோன்றி அதில் ஒடுங்குகின்றது இவற்றினெல்லாம் ஆகாசம் முந்தியது, ஆகாசம் அதற்கு உறைவிடம்''   (சாந்தோக்கியம் 1. 9 - 1)
(ஈண்டு ஆகாசம்' என்றது சின்மாத்திரமாயுள்ள கடவுளை)

''ஒவ்வொன்றினும் ஊடுருவி நிற்பது சாமமாகும் இதனை எவற்றினும் ஊடுருவி நிற்பதாக உணருவான் அவை எல்லாமாவன்.''

      தான் எல்லாமென, எல்லாமென ஒருவன் (சாமத்தை) தியா னம் செய்யவும்.''
(Do 2. 21. 1, 2, 84.

(ஈண்டு சாமவேதமாகிய சப்தபிரமம் ஹாசிவனாரைக்குறிக்கும். இந்த மந்திரம் அதுவதுவாதற் றன்மையையும் விளக்குவது).
    
"எல்லா இலைகளும் ஒரு தண்டில் ஒற்றிநிற்றல்போல், எல்லாவாக்கும், ஓங்காரத்தில் (சிவனில்) நிலைபெறும். ஓங்காரமே இவையெல்லாம்."

4. “வானில் உள்ள ஆகாசம், நம்மை எங்கும் சுற்றியுள்ளது இதுவே, நம்முள்ளும், நம்முள்ளத்திலும் உள்ளது, நம்முள்ளத்தில் உள்ள ஆகாசம், எங்குமுள்ளதும், என்றும் மாறாததாயுமுள்ளது. இதையுணர்ந்தான் எங்குமுள்ள, என்றும் மாறாத ஆனந்தத்தையடைகிறான்.                                           (Do. 3. 12 - 9.)
      (இந்த தகர ஆகாசம் தான் சிதம்பரநாதன்.)

5. "இது வெல்லாம் பிரமம். அதில் எல்லாம், உதித்து ஒடுங்கி உயிர்ப்பதாக ஒருவன் பிரம்மத்தை தியானிக்கக் கடவன்.                              (Do 3. 14 - 1)

6. ஹே, சௌமிய, ஆதியில், ஒன்றாயுள்ள ஒரு பிரமந்தானிருந்தது. இரண்டற்று இருந்தது. ஏகமேவாத்விதீய்ம் பிரம்மா''                                   (சாந் - 4. 2. 1.)

7. “ஏகம் ஏவருத்ரோநத் விதீயாய்தஸ்தே''     (யஜுர்வேதம்-சுவேதாசுவதர உப)

8. எது அதிசூக்குமமாயுள்ளதோ, அதுவே யாவற்றிற்கும் மூலம், யாவற்றிற்கும் அதுவே ஆத்மா. அதுதான் சத்தியம் அதுதான் ஆத்மா. அது நீயாகின்றாய்."
(சாந். 4. 8. 7.)
9. ''அளவற்றதாயுள்ளது, கீழுளும், மேலுளும், முன்னிலும், பின்னிலும், இடத்திலும் வலத்திலும் உள்ளது. இவையெல்லாம் அதுவே."          (Do : 5. 25. 1.)

10. 'எல்லாவுலகமுமானாய் நீயேயேகம்பமேவியிருந்தாய் நீயே (திருநாவுக்கரசு - திருவையாறு 7.)

11. “ஊரானையுலகேழாய் நின்றான்றன்னை
   ஒற்றைவெண்பிறையான் றன்னையுமையோடென்றும்
   பேரானைப்பிறர்க் கென்று மரியான் றன்னை.           (Do - திருவால்- 5.)

12. ''நிறைந்தானை நீர் நிலந் தீ வெளிகாற்றாகி
    நிற்பனவும் நடப்பனவுமாயினானை.''            (Do - திருநாகேச்சுரம் - 6 :)

13. ''மாலாகிநான்முகனாய் மாபூதமாய்
மருக்கமாயருக்கமாய் மகிழ்வுமாகிப்
   பாலாகி எண்டிசைக்குமெல்லையாகிப்
பரப்பாகிப் பரலோகந்தானேயாகிப்
   பூலோக புவலோக சுவலோகமாய்ப்
பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
   யேலாதனவெல்லாமேல்விப்பானா
யெழுஞ்சுடராய் நம்மடிகள் நின்றவாறே.''       (Do. நின்ற திருத்தாண்டகம்)

14. மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
            வயிரமுமா மாணிக்கந்தானேயாகிக்
         கண்ணாகிக் கண்ணுக்கோர்மணியுமாகிக்
            கலையாகிக் கலைஞானந்தானேயாகி
         பெண்ணாகிப் பெண்ணுக்கோராணுமாகிப்
            பிரளயத்துக் கப்பாலோரண்டமாகிப்
         யெண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்துமாகி
            யெழுஞ்சுடராய் நம்மடிகள் நின்றவாறே. (Do)

     15. மனத்தகத்தான் வாக்கினுள்ளான்
            வாயாரத்தன்னடியே பாடுந்தொண்டர்
        இனத்தகத்தானிமையவர்தம் சிரத்தின்மேலா
            னேழண்டத்தப்பாலானிப்பாற்செம்பொன்
        புனத்தகத்தானறுங் கொன்றைப்போ தினுள்ளான்
            பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
        கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்
            காளத்தியானவன் என் கண்ணுள்ளானே.           - (திருக்காளத்தி 5.)

சித்தாந்தம் – 1913 ௵ - ஜனவரி, மார்ச், செப்டம்பர், நவம்பர், ௴


No comments:

Post a Comment