Saturday, May 9, 2020



நல்ல யாத்திரை
[கா, இராம நாதன், பி. ஏ. பி. எல்., மலேயா.]

மலாயாவிலிருந்து சிலரைக் கூட்டிக்கொண்டு இந்தியா யாத்திரை செல்லவேண்டுமென்ற எண்ணம் பலநாளாக எனக்கு இருந்துவந்தது. யாத்திரையால் பெறும்பலன் பல, பக்தி வளரும்; சற்குருவாய்க்கும்; இறையருள் கிட்டும்.

யாத்திரைக்குச் சிலர் சேர்ந்து போவதால் அன்பு பெருகும், பொறுமையும் கட்டுப்பாடும் கைகூடும். வயது முதிர முதிரக் கோஷ்டி யாத்திரையில் எனது ஆர்வம் குறையத் தொடங்கியது.

நான் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினன். அச்சங்கத்தின் உறுப்பினரில் சிலர் ரிஷிகேசம் சென்று சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களைக் கண்டு வணங்கி வந்திருக்கிறார்கள். அவரவர்கள் திரும்பியபோது சங்கத்தில் சிலர் தங்கள் அனுபவத்தைச் சொல்வது வழக்கம் அதனால் பலருக்கு ரிஷிகேசம் போகவேண்டுமென்ற ஆசை. சிவானந்த சுவாமிகளின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரான டாக்டர் சுசிலா நாயர் கோலாலம்பூருக்கு வந்தபோது ரிஷி கேச யாத்திரையின் ஆசையை அவர்கள் வளர்த்தார்கள். இந் நிலையில் திரு. க. நல்லய்யா தனக்கும் சிலருக்கும் ரிஷிகேசம் போகவேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகவும் நான் கூட் டிக்கொண்டு போக முடியுமா என்றும் கேட்டார். ஒன்றும் யோசிக்காமல் பத்து பேர் சேர்ந்தால் போகலாம் என்றேன்.

ஏழெட்டு நண்பர்கள் சேர்ந்தார்கள். அதற்குமேல் சேராதென்று நினைத்தேன். பேப்பரில் அறிவிக்க நான் ஒத்துக் கொள்ள வில்லை. யாத்திரை விஷயம் வெளியில் பரவியதும் பலர் சேரவிரும்பினர். சிபார்சுகள் வந்தன. தக்க குணமும் ஒத்த நோக்குமுடையவர்களைப் பொறுக்கினோம்.

யாத்திரை போவதால் பொது அறிவும் பக்தியும் வளருகிறது. படிப்புக்கு உறுதி தர யாத்திரை அவசியம். ஒரு குழுவாய்ச் செல்வதால், கட்டுப்பாடும், சகிப்புத் தன்மையும், சேவை மனப்பான்மையும், பிறரைப் பார்த்து ஆர்வ உணர்ச்சியும் உண்டாகிறது.

டிக்கட்: இனி கப்பல் டிக்கட் வாங்கவேண்டும். இது பெரிய பிரச்னை. கோலாலம்பூரில் எந்தக்கப்பலுக்கும் இரண்டு மூன்று டிக்கட் சிபார்சின் பேரில் கிடைக்குமென்றார்கள். என் பேர் சொன்னாலே டிக்கட் கிடைக்காதென்று சிலர் சொன்னார்கள். பிரமப்பிரயத்தனம் செய்யப்பெற்றது. இந்த விதமான கஷ்டத்தைத் தீர்க்க எத்தனையோ பேர் இந்தியாவி விருந்து வந்தார்கள். விருந்துபசாரம் ஏற்றார்கள். விசாரித்தார்கள். அறிக்கையும் எழுதியிருப்பார்கள். முன் இருந்தநிலை மாறவில்லை. நாங்கள் பின்னர்ச் சிங்கப்பூருக்கு எழுதினோம். பினாங்கிற்கு எழுதினோம். பன்னிரண்டு டிக்கட் எற்பாடு செய்துகொண்டனர். குடும்ப அசௌகரியத்தால் எங்கள் குழுவோடு வர முடியவில்லையே என்று சிலர் மிக வருந்தினர். சிலர் டிக்கட் கிடைக்கவில்லையே என்று துக்கப்பட்டனர்.

கடைசியாகப் பயணம் தொடங்கும் போது நாங்கள் 16 பேர். இருவர் கோலாக்கிள்ளானில் சென்னை ராஜ்யக் கப்ப லில் ஏறினர். இதர 14 பேர் பினாங்கில் ஏற ஏற்பாடு.

குழுவினர்: திருவாளர்கள்: கா. இராமநாதன், பள்ளத் தூர், தலைவர். பே. கிருஷ்ணர், சுளிபுரம், உபதலைவர். உத்தி யோக ஓய்வு பெற்றவர். சு. நேசமணி, ஊரேழு. க. நல்லையா, புன்னலைக் கட்டுவன் வடக்கு, உத்தியோகம். ந. கனகாம் பிகை, ஷையார் மனைவி. செ. நாகம்மா, நல்லூர். இ. செல்லாச்சி, கார தீவ, வீ. சுந்தரம், கரம்பொன், சு. அன்னலெட்சுமி, க்ஷயார் மனைவி, தி. விஜயலெட்சுமி வட்டுகோட்டை மேற்கு, நா. வேலாயுதம் செல்ல சன்னிதி, உத்தியோகம். ஆ. நாகம்மா, வட்டுக்கோட்டை மேற்கு, வ. வயித்தியலிங்கம். புன்னாலைக்கட்டுவன் வடக்கு, உத்தியோக ஓய்வு பெற்றவர். வ. சிவகங்கை, ஷையார் மனைவி, சு. விக்னேஸ்வரி, கறம் பொன் ஆசிரியை திரு. சுந்தரம், அன்னலெட்சுமி மகள், மு. இரத்தினம்மாள், கொண்டிவில், ராமகல்பகம், பி. ஏ. தலைவர் மகள், வி. நாகலிங்கம், தொப்புரம் உத்தியோகம். சங்கீத பூஷணம், நா. போகேஸ்வரி, ஷையார் மனைவி. உருத்திராணி மேனன், பினாங்கு. விசாலாட்சி, ஓய்வு பெற்றவர், பார்வதி, ஆசிரியை. முதல் 17 பேரும் எல்லாப் பகுதிக்கும் வந்தனர். மற்றவர் பெரும்பாலும் வந்தவர்கள். இடையிடையே சேர்ந்து கொண்டவர் பலர்.

விருந்து: யாத்திரைக் குழுவினருக்கு விருந்துகள் நடந்தன. முதல் விருந்து கிரியா பாபா சங்கத்தாரால். திரு. க. வீ. அழ. மு. இராமநாதன் செட்டியார் தலைமை வகித்தார். தன் அனுபவங்களை ஒட்டிப் பல உதவியான விஷயங்கள் சொன்னார். எங்களுக்குச் சௌகரியம் செய்து கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்குப் பல ஊர்களுக்கு எழுதினார். மகாமாரியம்மன் கோவிலில் அர்ச்சனை நடந்தது. இலங்கைச் சங்கத் தலைவர் திரு. செவ்வந்திநாதன் ஒரு பிரார்த்தனைக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 200 பேர் வந்திருந்தனர். அன்பு மொழி பல கூறினர், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் முத்தமிழ்ப் பெருஞ் சொற்கொண்டல் புரிசை முருகேச முதலியார் அவர்களும் பேசினர். வேஷ்டி, துண்டு கொஞ்சமே கொண்டு போகவேண்டுமென்றும், சில கெட்ட குணங்களை விட்டுவிட வேண்டுமென்றும் கூறினார். இன்னும் பல யோசனைகள் கூறப்பெற்றன. ரிஷிகேசத்திலிருந்து சுவாமிகள் எழுதிய கடிதத்தில் எல்லோருக்கும் நல்வாவு கூறி எல்லா வசதியும் செய்து தருவதாகவும், தனி சத்சங்கக்கூட்டம் எங்களுக்கு ஏற்பாடு செய்வதாகவும் எழுதியிருந்தார்.

நான் மலாயாவில் இல்லாதபோது என் வேலைகள் நடை பெறப் பல ஏற்பாடுகள் செய்யவேண்டியதிருந்தது. அது புறப்படும் நாள் வரை சரியாக இருந்தது. அதோடு கொண்டு போக வேண்டிய சாமான்களை ஒவ்வொன்றாக மறந்து விடாமல் எடுத்துவைக்கவேண்டும். போகும் இடங்களுக்கு எழுதுதல், பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், இந்தியாவில் ரயில் டிக்கட்டு, பணம் அனுப்புதல் என்பன போன்ற பல விஷயங்களைக் கவனிக்கவேண்டிய திருந்தன. இந்த யாத்திரைக்கு இவ்வுளவு தயார் செய்யவேண்டிய திருந்தது; ஆனால் இந்த உலகைவிட்டு பாத்திரை செய்வதற்கு ஒருவிதத் தயாரிப்பும் செய்யத் தோன்றவில்லையே! இது ஏனோ? ஒரு யாத்திரை போவது நமக்குக் தெரிகிறது, மற்ற யாத்திரை போவோம் என்பதை அறவே மறந்து விடுகிறோம். நான் யாத்திரை புறப்பட எண்ணியபோது கைகூடவில்லை. அப்பொழுது முயற்சி செய்திருந்தாலும் என்னை நம்பி ஒருவரும் சேர்ந்திருக்கமாட்டார்கள். நான் அவ்வெண்ணத்தைக் கைவிட்டபோது அது கைகூடுகிறது. அடியேன் காற்றடித்தால் பறக்கும் துரும்பு. இல்லையானால் அசையாது கீழே கிடக்கும். திருவருள் உந்தும் போது யாரே தடுக்க வல்லார்?

நாய்க்கடி: பொய்விட்டு உடையான் கழலைக்காணப் பயணமாகும் நாள் வந்தது. 1959 பிப்ரவரி 25s அன்று காலை செந்தூல் தண்டபாணி கோயிலில் விபூதிக் காப்பிட்டு ஆயிரநாம அர்ச்சனை செய்து வணங்கினோம். ஐக்கிய வணக்கம் செலுத்தினோம். உடல் பலவாயினும் உள்ளம் ஒன்றாக, உணர்ச்சி ஒத்ததாக இருக்க வேண்டினோம். மாலை ஆறு மணிக்கு முன்னர், சர்ச் தெரு, 5 - ம் நெம்பருக்குப் பெட்டிகளை அனுப்பிவிட வேண்டும் என்றும், எட்டு மணிக்கு அங்கு வந்து சேரவேண்டு மென்றும், எட்டேகால் மணிக்கு மகாமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து கொண்டு 9 மணி ரயிலுக்குப்பயண மாவதென்றும் ஏற்பாடு. அவ்வாறே எல்லாரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் வந்து விட்டனர். விநாயகர் நாமம் சொல்லி, கோளறு பதிகம் சொல்லிப் போற்றிச் செல்வதென முடிவு செய்தோம். அச் சமயம் திரு. நேச மணியை, வீட்டில் குட்டி போட்டிருந்த நாய் ஒன்று கடித்து விட்டது, பல் அழுத்தமாகப்பதிய, இரத்தம் கசிந்தோடியது. அழுதாள், உடனே கட்டுப் போட்டு டாக்டரிடம் ஊசி போட அனுப்பிவிட்டுப் பயணப் பிரார்த்தனை நடந்தது. அவள் ரயில் நிலையத்திற்கு நேரே வந்தாள். நல்ல காரியத்தில் பல சோதனை ஏற்படுவது இயல் பென்று சமாதானம் செய்து கொண்டோம். எங்கள் குழுவினரில் சிலருக்குப் பயணத்திற்கு முன்னர் சுகவீனம். ஒருவர்இருவர் பின் தங்க நேரிடுமோ வென்ற ஐயம் இருந்தது. ஆண்டவன் அருளினால் அவ்வாறு ஒன்றும் ஏற்படவில்லை.

கோலாலம்பூர் புகை நிலையத்திற்கு ஏராளமான பேர் வந்திருந்தனர். சுமார் நூற்றைம்பது பேருக்கு மேல் இருக்கும். பலர் மாலை அணிவித்தனர். பிரயாண அன்பளிப்பாகச் சிலர் பொருள் தந்தனர். யாவரும் வாழ்த்துரை பகர்ந்தனர். மணி ஒன்பது, ரயில் நகர்ந்தது. தென்னாடுடைய சிவனே என்ற ஒலி ரயிலிலிருந்து கிளம்பியது. கீழ் நின்ற கட்டத்திலிருந்து, எதிரொலி வந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்தாட்டவர்க்கும் இறைவா போற்றி.

சித்தாந்தம் – 1960 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment