Saturday, May 9, 2020



பதி புண்ணியம்

ஸ்ரீ சித்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்தனடியினை மறவாத அன்பர்காள்! சற்று! செவிமடுப்பீர்களாக!

"சைவம் வேதம் யஜேத்''

''பல்கலையாகம வேதமியாவையினுங் கருத்துப்
பதி பசுபாசந்தெரித்தல் பதிபரமேயது தா
      னிலவு மருவுவின்றிக் குணங்குறிகளின்றி
            நின்மலமாயேகமாய் நித்தமாகி
      யலகிலுயிர்க்குணர்வாகி யசலமாகிய
            கண்டிதமாயினந்த உருவாயன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
            திகழ்வது தற்சிவம் என்பர் தெளிந்துளோரே.''

நிருமலம், பூரணம், நித்தம், ஆதிசூக்குமம், உண்மையறிவானந்தம் என்று கூறும் குணங்கள் சொரூப இலக்கணங்களாகவுடைய பதிப்பொருள் பொதுப் பெயரான் பிரமம் என்றும், ஒரு பொருளுண்டு என்றும், அனேகசித்திகளையும், சிவசாயுச்சியத்தையும், பதிப்பொருளினருளினால் அடைபவர் உளராகலின் அநாதியாய் அநேக உயிர்கள் உளர் என்றும் அப்படிப்பட்ட பல்லுயிர்களுக்கும் முத்தியடைகுதல் உளதாகலின் அவ்வுயிர்களை அநாதியால் மறைத்து நிற்பதொரு பந்தமுண்டென்றும் வீட்டு நெறியாராயும் பலசமயிகளுக்கும் துணிவுண்டாக வேதசிவாகமாதி கலைகளில் கூறப்பட்டுள்ள பதிப்பொருளை சிவம் என்று ஆப்தர்கள் கூறுவார்கள்.
பதிப்பொருள் சிவம் = சிவமென்பது வேதசிவாகமா திகளாற் பிரதிபாதிக்கப்படும் பாதத்துவப்பொருள். அட்சரத்து வயமாகிய சிவ என்பது ஸ்ரீ பஞ்சாட்சரியின் மத்தியி லிருக்கின்றது... ஸ்ரீ பஞ்சாட்சரமோ ஸ்ரீ ருத்திரத்தின் மத்தியிலிருக்கிறது. ஸ்ரீ ருத்திரமோ ஏழு கண்டங்களோடு கூடிய எஜுர் வேதத்தின் நான்காவது காண்டத்தில் இருக்கிறது. நான்காவது காண்டம் எஜுர் வேதம் 'திரயீ'' என்னும் பேருடைய இருக்கு, எஜுர், சாமங்களினிடையிலிருக்கின்றது. சிவ என்னும் பதத்தால் ஸ்ரீ பஞ்சாட்சரம் சிறந்து, அதனால் ஸ்ரீ ருத்திரம் சிறந்து, அதனால் நாலாவது காண்டஞ் சிறந்து, அதனால் ஏழு காண்டங்களோடு கூடிய எஜுர் வேதம் சிறந்து, அதனால் ஏனையதுட்ட சிறந்து, எல்லா வேதங்களும் சத்பிரமாணமென்று வைதிக சைவமகாத்மாக்கள் வந்தித்து வாழ்கின்றார்கள் என்பது திண்ணம். இன்னும், சிவம் என்னும் சொல் ஒரு சமயத்திற்கே பொருத்தமாமென்று சொல்வாரும் உளர். அது பொருந்தாது சிவம் என்னும் பதம் வேதாதி கலைகளில் முழங்கி யிருப்பதை மேலேகாட்டினாம். இச்சொல்லையே பிரமமென பொது.ச்சொல்லால் எனையோரும் வழங்குவர்.
சமய ஒற்றுமைக்கு யாதொரு இழுக்குமின்று. சமய அரசாக விளங்கும் சைவசித்தாந்தத்தின் கண்ணே சொல்லப் பட்ட முழுமுதற் கடவுளரின் குணங்களைச் சிறிது எடுத்து விசாரிப் போமாயின் அவை எல்லாச் சமயத்தாருக்கும் உடன்பாடாயுள்'ளமை தெற்றெனப் புலப்படும். நம்முடைய அனுபவ விஷயங்களிலே காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகுத்துப் பார்ப் போமானால் அவைகள் அறிவுடையச் சேதனப் பிரபஞ்சம், அறிவில்லாத அசேதனப் பிரபஞ்சம் என்னும் இரு கூற்றிலடங்கும். அறிவுடைய சேதனப் பிரபஞ்சத்துள், புல் முதல் தேவர் ஈறாகச் சொல்லப்படும் அளவு படாத சரீரங்களுள் அளவு படாத எல்லாவுயிர்களுமடங்கும். இவ்வுயிர்களெல்லாம் சிற்றறிருடைய வைகளாயும் ஜெனன, மரண துஸ்தரபீதி முதலிய குற்றங்கள் உடையனவாயும் காணப்படுதலின் பதிப்பொருள் என்று சொல்லப்படும் குற்றமற்ற பொருள் இவ்வுயிர்களுள் ஒன்றாக மாட்டாது என்பதுபசு மரத்தாணிபோல் நாட்டப்படும். பஞ்ச பூதங்கள் முதலாகநமது பஞ்சேந்திரியங்கட்கும் புலனாகாமல் அதிசூட்சமமாய் விளங்காநிற்கும் விந்து நாத தத்துவங்கள் ஈறான எல்லாப் பொருள்களும் அடங்கும். ஆகவே இத்தத்துவங்கள் அறிவில்லாத சடப்பொருளாகையால் இவைகள் தம்மை ஒருவர் அசைவித்தால் அன்றி தாமாகவே அசையமாட்டா.

இதனை ஸ்ரீ வாகீசப்பெருமான்.

                ஆட்டுவித்தாலா ரொருவர் ஆடாதாரே
 படக்கு வித்தாலாரொருவரடங் காதாரே
யோட்டு வித்தாலா ரொருவரோ டாதாரே
யுருகுவித்தாலா ரொருவரு ருகாதாரே
பாட்டு வித்தாலா ரொருவர் பாடாதாரே
பணிவித்தாலா ரொருவர் பணியாதாரே
காட்டு வித்தாலா ரொருவர் காணாதாரே -
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.''

என்ற அருமைத் திருவாசகத்தால் வெளிப்படுத்தி யருளினார்கள். ஆகலே மேற்போந்த விஷயம் எல்லாச் சமயிகட்கும் பொருத்தமான உடன் பாடேயாம். - இனிச் சிற்றறிவுடைய உயிர்களான சேதனப் பிரபஞ்சத்திற்கும் அறிவேயில்லாதசடப் பொருள்களான அசேதனப் பிரபஞ்சத்திற்கும் வேறான சொரூபமும் வியாபகமும் உடைய முழுமுதற் பொருளுக்கே சிவம் என்னும் மங்களப் பெயர் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பதிப்பொருளாகிய சிவத்திற்கு அல்லது பிரமத்திற்கு வேறாயுள்ளவை அபரவஸ்துக்கள். அவைகளைப் பசு, பாசமென்று ஆப்தர்கள் கூறுவர். பதி நிர்மலசித்து, பசு மனலினசித்து, பாசம் அசித்து. இவற்றுள் அசித்தாகிய பாசநீங்கலாக பசுவைக்குறித்துச் செய்யும் புண்ணியம் பசு புண்ணியம், பதியைக்குறித்துச்செய்யும் புண்ணியம்பதி புண்ணியம். பதி புண்ணியம், பசு புண்ணியம் என்னும் இரண்டனுள், பதிபுண்ணியம் பெரும் பான்மையும் பசு புண்ணியம் சிறு பான்மையும் செய்யத்தக்கது. திருவாசல் கட்டுதல், குளத்தை வெட்டுதல், அன்னசத்திர மமைத்தல், சித்தாந்தகல்விச்சாலைகளைத் தாபித்தல் முதலியது பசுபுண்ணியம். வேதாத்தியயத பாட சாலை திராவிட வேதபாடசாலை, குருபூசை மடம், சிவதீர்த்தங்களைப் புதுப்பித்தல், சிவாலயங்களைப்புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்தல், சிலாலயத்திற்கு அபிஷேகம், நிவேதனம், அர்ச்சனை, திருவிளக்கு, மீலர்மாலை, கற்பூரக்கட்டளை, ஆதிசைவர்கட்கு சித்தாந்தக் கல்விகற்பித்து சிவாகமத்தில் சொல்லிய மந்திரம் தெரிவித்து மூர்த்தி சாந்நித்தியம் விளங்கச் செய்தல் முதலியன பதி புண்ணியமாம். பசு புண்ணியம் செய்யத்தவறின் உய்தல் கூடும், பதி புண்ணியம் செய்யத்தவறின் உய்தியில்லதோர் குற்றம்சாரும். இக்கருத்து பற்றியே ஸ்ரீ திருமூலசுவாமிகள்'ஆற்றரும் நோய்மிகுமவனிமழை குன்றும் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத்தான் றிருக்கோயில்களானவை சாற்றிய பூசை கடப்பிடிற்றானே', என்று அருளிச்செய்தார்கள். மிகமேன்மையும் சிவசாயுச்சியத்தைத்தானே கொடுக்கக்கூடிய பதி புண்ணியத்தை உண்மையாகங் செய்வோர் செய்யத்தக்க காரியம் ஒன்றுண்டு. ஸ்ரீ சிற்சபேசனை அருச்சிக்கும் புண்ணியமுடைய ஆதி சைவர்களை போஷித்தல் (அன்னபானியங்களையன்) சித்தாந்த விருத்தி, சிவாகமத்தேர்ச்சி சிவாதீட்சாசமஸ்காரம் முதலிய உத்தமோத்தமமான சிவதருமங்களை பெருகச் செய்வதே. இப்போது இக்காரியங்கள் நடைபெறவில்லையோவெனில் இதற்கு விடையிறுக்க மனமில்லை யானாலும் சிலவற்றை ஈண்டு குறிப்பிக்கின்றாம். சிவார்ச்சகர்களுக்கு பூசைமுறையேற் பட்டிருக்கின்றது. அதற்கு அவர்களுக்கு சம்பளம் சொற்பமும், பட்டை சாதமும் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் சரிவரக்கிடைப்பதில்லை. இவ்வளவு பெரியவருவாயைக் கொண்டு தாங்களும் சீவனஞ்செய்து சிவபூசையும் சரிவர நடத்தவேண்டியது. இது மட்டோ, தங்கள் குழந்தைகளுக்கு, உபநயனம், கலியாணம், சிவபூசைக்குரியாரம்படி கல்விப்பயிற்ச்சி, ஆசாரியா பிஷேகம் முதலிய சமரட்சணையும் செய்து கொள்ள வேண்டியது. இவர்களுக்கு வேறு பலமான வரும்படியுமுண்டு என் சொல்வாருமுளர். அதாவது, சிரார்த்த வீடுகளில் கிடைக்கும் வரும்படி. இது எவ்வுளவு அழகாய் இருக்கிறது. அன்பர்களே! இவைகளை நாம் கவனியாமல் சிவார்ச்சகர்களுக்கு வேதம் வராது, சொல்லி வைத்தாலும் வராது, பூசைவிதி தெரியாது, காலத்தில்பூசை செய்வதில்லை, படிப்பும் தெரியாது, படிக்க வைத்தாலும் கோயில் பூசை தவறும் என்று வீணாய் அவர்கள் மேல் குற்ற மேற்ற வேண்டியிருக்கின்றது. இக்குறைவை நீக்கவேண்டியது அன்பர்களுக்கு முக்கிய கடமையாயிருக்கிறது. இது மிகவும் சுலபமாய் முடியக்கூடியகாரியம். கோடிக்கணக்காய் சிலவு செய்து கும்பாபிஷேகம் செய்பவர்களும் ஏனைய அன்பினரும் ஸ்ரீ சித்சபேசன் திருவருளால் ஒன்று சேர்ந்து சித்தாந்த பாடசாலைக்கென்று ஒரு மூலதனம் ஏற்படுத்தி அதில் ஆதி சைவர்கட்கும் சற்சைவர்களுக்கும் அன்ன பானீயங்களைத் தவிர சைவவித்தியாபிவிருத்திக்கான சற்சாஸ்திரங்களைக் கற்பிக்கச்செய்து அபிவிருத்திக்குக் கொண்டு வருவதே பதி புண்ணியமாம். பதி புண்ணியத்திற் சிறப்புற்றது சிவாலயத் திருப்பணி. அதில் சிறந்தது கும்பாபிஷேகம். அதிலுஞ் சிறந்தது நித்தியம், நைமித்தியம். அதனிலும் சிறந்தது ஆதிசைவ பரமாசாரியர்களால் பாடல் பெற்று சீரணமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்தல் போல, ஆதிசைவர்களை சிவபூசைக்குரியராகும்படி செய்தல் மிக மேலான பதிபுண்ணியம்.

இதுகாறும் போந்த விஷயங்களால் புண்ணியத்திற் சிறந்தது பதிபுண்ணியமென்றும், அதுவும் பதிப்பொருளை உத்தேசித்தே செய்யத்தக்கன வென்றும் பிறவும் ஒருவாறு விளக்கினாம்.

சகலசமயாதீதாத்வைத சுத்தசிவ சந்மார்க்கம் பற்றி வாழும் உத்தம பரிபாகிகட்கேயன்றி, சாமானியருக்கும் இப்பதி புண்ணியம் கைகூடி நற்கதி யடையும்படி ஸ்ரீ சித்சபேசன் திருவருள் புரியும்படி பிரார்த்திக்கின்றேன்.

                    N. S. வைத்தியலிங்க முதலியார்.
சித்தாந்தம் – 1912 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment