Saturday, May 9, 2020



திருக்குறள் மாட்சி

பெறுதற்கரிய மாநுடப் பிறவியெய்திய ஆன்மாக்களடைய வேண்டியதும் அடையக் கூடியதுமான பயன் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காம். இது பற்றியே இந்நான்கினையும் புருடார்த்தமெனக் கூறு. ஆன்மாக்கள் சிற்றறிவுஞ்சி தொழிலுமுடையராதலின் இயற்கையால் பெறும் வண்ணம் வேதாசுமங்களை இறைவன் அருளிச்செய்தனன். அவையும் பரந்து விரிந்து கிடப்பதால், அவற்றை யாராய்ந்தறிய இயலாதவர்களு முய்ய வெண்ணி அவ்வேதாகமப் பொருள்களின் சாரங்களைத் திரட்டிச் சில பெரியோர் நூல்களாக்கித் தந்தனர். அந்நூல்களும் அறம் ஒன்றே கூறுவனவும், பொருளொன்றே கூற வனவும், இன்பம் ஒன்றே கூறுவனவும், வீடு ஒன்றே கூறுவனவும் இவற்றுள் இரண்டு அல்லது மூன்று பயன் கூறுகின்றனவுமாக இருந்தமையான் நான்கு பயனும் சுருங்கிய ஒரு நூல்வழியாக எல்லா ஆன்மாக்களும் பெறவெண்ணி அமிழ்தினுமினிய தமிழ்மொழியில் முதற்பாவென்னுங் குறட்பாவில், தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் ஒரு நூல்வருளிச் செய்தனர். இதனை
      இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
      முன்பறியச் சொன்ன முதுமொழி நூன் - மன்பதைகட்
      குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
      கொள்ள மொழிந்தார் குறள்

என்னும் நரிவெரூஉத்தலையார் சாற்றுக்கவியாலறிக. இங்ஙனம் நான்கு பயனையும் ஒருசேரத் தொகுத்துதவிய வள்ளற்றன்மையென்னுங் காரணத்தால் இந்நூலாசிரியர் வள்ளுவரெனப் பெயர் பெற்றனர்.
இப்பெயர்ச்சொல்லில் வள் பகுதி, அர் விகுதி, உ சாரியை, அப்பகுதிக்குப் பொருள் கொடை. இவ்வாறன்றி வள்ளுவர் என்பது ஒர் சாதிப்பெயராகக் கொள்ளக் கூடாதென்பதை.
              அறம்பொருளின்பம்வீ டென்னுமந்ரான்கின்
      றிறந்தெரிந்து செப்பிய தேவை - - - மறந்தேயும்
      வள்ளுவ னென்டானோர் பேதை யவன்வாய்ச்சொற்
      கொள்ளா ரறிவுடை யார்.
  என்னும் மாமூலனார் சாற்றுக் கவியாலறிக.
இந்நூற்குப்பாவின் பெயரே பெய்ராய்த திருக்குறளென வழங்கிவருகின்றது. இப்பெயரை நோக்குங்கால், இந்நூல் வெளிவருவதற்கு முன்னர், குரட்பாவில் நூலில்லையென்று ஊகிக்க இடந்தருகின்றது. இந்நூலாசிரியர் காலம் கடைச்சங்க காவமென்பது சாற்றுக்கவி சொன்ன புலவர்களால் அறியத்தக்கது அச்சங்கப் புலவருள் சீத்தலைச் சாத்தனாரென்பா ரொருவர். இவர் சங்கத்தில் அரங்கேற்று வதந்தாக வரும் நூல்களிலுண்டாங் குற்றத்தைப் பொறாதவராய் ஆயுதத்தால் சிரசில் குத்திக் குத்தி சீவைக்கப்பெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றவர். திருக்குறளென்னு மிந்நூல் அரங்கேற்றுங்கால் ஒரு குற்றமுங்காணாதவராய் பெருமகிழ்வெய்தி இவர் தலைக்குத்து நீங்கினாரேன்பதை.
சீந்திநீர்க் கண்டத் தெறிசுக்கு தேனளாய்
      போந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி
      மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் டாலாற்
      றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.
என அப்புலவரு ளொருவராகிய மருத்துவன்றாமோதரனார் கூறிய சாற்றக்கவியா லறியத்தகும்.
இச்செய்யுளில் இந்நூல் முப்பாலென் கூறியிருக்கவும் உரையாசிரியர் பரிமேலழகரும்'' வீடென்பது சிந்தையுமொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின் நூல்களாற் கூறப்படுவன வேனை மூன் மேயா” மெனக் கூறியிருக்கவும், நாற்பாலுங்கூவதிந் நாலென முன்னர்க் கூறியது முரணாதோ வெனின், முரணாது; என்னை? அறம் தொகையாலொன்றாயினும் இல்லறம், துறவறமென, வகையாலிரண்டாய், அத்துறவறமும், விரதம் ஞானமென விரண்டாய், ஞானம் வீடு பயத்தற்குச் சிறந்ததாய் நிற்றவினென்க. இதுபற்றியே பரிமேலழகர், வீடு துறவறமாகய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற்தெப்படாமையின், என்று கூறினார். இம்மொழியால் துறவறங் கூறப்பட்டது கொண்டே வீடு கூறப்பட்டதென நன்குபுலனாம். இக்கருத்தை துறவறத்து ஞானவியல் அவாவறுத்தலென்னுமதி காரத்தில்,
        ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
        பேரா வியற்கை தரும்.

என்ற பாட்டில், இதனால் வீடாவது இதுவென்பதூ உம். அஃது அவாவறுத்தார்க்கு அப்பொழுதே உளதாமென்பதூ உங் கூறப்பட்டன, எனக்கூறிய உரையும் வலியுறுத்தும். இங்கனம் வலியுறுத்தியதை யுற்றுநோக்காது முன்னர் வீடு கூறமுடியாதென் கூறி, பின்னர் வீடு இதுவென முன்னொடு பின் முரண்படக் கூறினரெனக் கூறுதல் பொருந்தாது.
இங்னம் நாற்பாலும் இந்நூலிலடங்கியுள்ளன வென்பதை முன்னர்க் கூறிய மாமூலனார் செய்யுளாலும்,
       
அறமுத னான்கு மகலிடத்தோ ரெல்லாந்
      திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள் வெண்பாப்
      பன்னிய வள்ளுவனார் பான் முறைநே ரொவ்வாதே
      முன்னை முதுவோர் மொழி.

என்னுங் கோவூர்கிழார் செய்யுளானும் அறிக.
              முப்பாலில் நாற்பாலடங்கு மென்பதை
      தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
      முப்பாலி னாற்பான் மொழிந்தவ - - ரெப்பாலும்
      வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழுந்
      தெய்வத் திருவள் ளுவர்.

என்னுங் கீரந்தையார் செய்யுளாலறிக.
நான்கு பயனுங் கூறிய இத்திருக்குறள் 133 அதிகாரங்களையுடையது அவற்2ள் முதனான்கதிகாரம் பாயிரம். அடுத்து முறையே யிருபததிகாரம் இல்லறம். துறவறம் பதின்மூன்றதிகாரம். ஊழ் ஒரு அதிகாரம். பொருள் எழுப ததிகாரம். இன்பம் இருபத்தைந்த திகாரம். இனி இவ்வாறு வகுத்தருளிய முறைமையைப்பற்றி ஆராய்வாம். நூலியற் றுவோர் எடுத்துக் கொண்ட நூல் இடையூறின்றி இனிது முடிதற் பொருட்டு கடவுள் வாழ்த்துடன், யாவருக்கும் மனவெழுச்சி சேறற்பொருட்டுப் பயன், சம்பந்தம், அதிகாரி, நுதலிய பொருளாகிய நான்கும் பாயிரமாக முதற்கட் கூவதியல்பாதலின் அவ்வாறே ஆசிரியர் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து என்னும் முதல திகாரத்தில், முதற்பாட்டால் கடவுள் வாழ்த்தும், ஏனைய ஒன்பது பாட்டால் பயனும், இரண்டாவது வான்சிறப்பு என்னும் அதிகாரத்தால் சம்பந்தமும், மூன்றாவது நீத்தார் என்னு மதிகாரத்தால் அதிகாரியும், நான்காவது அறன்வலியுறுத்த லென்னுமதிகாரத்தால் நுதலிய பொருளும், பாயிரமாகக் கூறினர்.
பயன் முதலிய நான்கினையும் அநுபந்த சதுட்டயமென்று வடநூலார் கூறுவர். தமிழ் இலக்கண நூலில் இந்நான்கினையுஞ் சிறப்புப்பாயிரத்துளடக்கி நூலாசிரியர் சொல்லக் கூடாதென்று வரையறை செய்திருக்கவும், அதற்குமாறாக நூலாசியர் தாமே கூறினாரென்றல் பொருந்துமோவெனின், பொருந்தும். என்னை? சிவஞானசித்தியார் என்னுஞ் சித்தாந்த நூலில் பாயிரத்தில் ''பண்டை நற்றவத்தாற்றோன்றி " என்னும் செய்யுளாலும் " என்னையிப்பவத்திற்சேரா " என்னும் செய்யுளாலும், கைவல்ய மென்னும் வேதாந்த நூலில்'' படர்ந்த வேதாந்த " மென்னும் செய்யுளாலும் இந்நான்கினையுங் கூறியிருத்தலா லென்க. அந்நூல்களிற் கூறியது தானும் இலக்கணத்திற்கு முரணாகாதோவெனின், ஆகாது. என்னை? இலக்கண நூலிற் கூடாதென்றது தன்னைப் புகழ்தல் கூடாதென்றதொன்றே கருதியல்லது வேறன் ! !. இந்நான்கும் தன்னைப் புகழ்தற்சியைபின்றாதலானும், ஆக்கியோன் பெயரே அதற்கியைபுடைத் தாதலானு மென்க. இனி முதற் பாவாற் கூறிய கடவுள் வாழ்த்து, வாழ்த்து, வணக்கம், பொருளியை புரைத்த லென்னும் மூவசை வாழ்த்துள் பொருளியைபுரைத்தலாம். கடவுள் வாழ்த்துக் கூறியபின்னர், இந்நூலாலாம் பயன் கூறுவான்றொடங்கி, இறைவன் திருவடியடைதலும் பிறவித்துன்பம் நீங்கலும் ஆகிய இரண்டு பயனையும் ஒன்பது பாட்டால் கூறினார், இவ்வொன்பது பாட்டாலும் பயன் கூறினாரென்பது "கற்றதனா லாயபயனென்கொல் வாலறிவ னற்றாள் தொழா அரெனின்என்ற       இரண்டாவது பாட்டனேயினிது விளங்கும்.
இனி, இரண்டாவது வான் சிப்பு என்னும் அதிகாரத்தா லிந்த நூற்குச் சம்பந்தங்கூறினர். சம்பந்தமாவது நூற்கு மதி காரிக்குமுரிய சம்பந்தமெனவும், விடயத்திற்கும் நூற்குமுரிய சம்பந்தமெனவும் பலவகைப்படும். அவற்றுள் ஈண்டுக்கூறிய சம்பந்தம் விடயத்திற்கும் நூற்குமுரிய சம்பந்தமாம். விடய மாவது இல்லநந் து நவரம் என விரண்டாம், அவ்விரண்டும் மழையின்றி நடவாமையின் அவற்றிற்கு மழைசம்பந்தம் ஆத லினால் நாலுக்குமதுவே சம்பந்தமாயிற். இதனை ''தானந்தவ மிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்'' என்னும் ஒன்பதாவது பாட்டால் தெளிக.
இனி இந் நூற்கு அதிகாரி கூறுவான் றொடங்கி “நீத்தார் பெருமை” யென்னும் மூன்றுவது அதிகாரம் கூறினர். நீத்தாரென்பது துறவறத்திற் கதிகாரியாகிய முற்றத் துறந்த முனிவரையும், இல்லறத்திற் கதிகாரியாகிய தமக்குரிய பொருளின் பங்களையே யன்றி, பிறபொரு ளின்பங்களைப் பற்றாத கிருகஸ்தரையுங் குறிக்கும். இவ்வதிகாரம் கிருகஸ்தரையுங் குறிக்குமென்பதை, " ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி'' என்னும் 5 வது பாட்டில் அகலிகையோடு கூடிய கௌதமரிஷியை “ ஐந்தவித்தா " னாற்றலுக்கு எடுத்துக்காட்டினமையால் இனிது தெளிக, இனி நான்காவது அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தால் இந்நூலிற் கூறப்படும் பொருள் கூறுவான்செடங்கி அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் அறத்துளடக்கி அறமே விடயமெனக் கூறினர். பொருள், இன்பம், வீடு அறத்துள் அடங்குமென்பதை, பொருட்பால் கூறுமிடத்து அறமே கூறுதலானும், இன்பத்துப்பால் கூறுமிடத்தும், தருமவழியால் தனக்குரிய மனைவியின்பமே, இன்பமெனக் கூறுதலானும், வீடு " அன்றாலின் க. திருந்தங் கநஞ்சொன் னானை'' என்ற முதுமொழியால் அறமேயாதலினாலும், அடுத்துளடக்கக் கூறினர். அன்றியும் வீடு துறவறமென்னுங் காரணவகையாற் பெறப்படுவதென்று முன்னர்க் கூறியவாதமும், அடித்துளடங்கு மென்பது தெளிக.
இவ்வாறு பாயிரஞ் சொல்லி முடித்து ஆன்மாக்களுக்குரியனவாகிய இந்திரியம், மனம், அறிவு என்னும் மூன்று கருவிகளின் தொழிற்பாட்டில், முன்னர் நிகழ்வது இந்திரியத் தொழிவாதலின் அதனை நீத்தவர்க்கே மனத்தொழிலால் யோகமுயற்சி செய்யவும், அது முற்றுப் பெற்றவர் க்கே அறிவுத்தொழிலால் ஞானமுயற்சி செய்யவுங் கூடுமாதலின் முன்னர் இந்திரியங்களின் விருத்தி குறைவதற்குரிய இல்லறவியல் கூறினர். இவ்வியல் இருபது அதிகாரங்களையுடையது. இவ்வதிகாரங்களால் இரண்டும் செய்தலும், விலக்கியன செய்யா தொழிதலும் ஆகிய விதன தித் ஒருசேர நியமிக்கப்பட்டுள்ளன.
இனி இல்லறத்தை இனிது நடாத்தி இந்திரியப்பற்றாகிய எனதென்னும் புறப்பற்றுக்கள் நீங்கின ஆன்மா யானென்னும் அகப்பற்று நீங்க வேண்டுவது முறைமையாதலின், இதனடுத்து துறவறவியல் கூறினர். இவ்வியலில் யான் என்னும் சொல்லுக்குப் பொருளாக தேகத்தையே கொண்டிருந்த ஆன்மா, அத்தேகத்தினிடத்துப் பற்றொழிந்தபோது ஞானத்திற் பிரவிர்த்திக்கக் கூடுமாதலின் தேகப்பற்றொழிதற்குத் துணையாக விரதமென்றும், உண்மை உணர்வதற்கு துணையாக ஞானமென்றும்பகுத்து முன்னர் விரதத்தைக் கூறினர். ஒன்பது அதிகாரங்களால் விரதங்கூறி, இவ்வதிகார ஆராய்ச்சியால் தேகப்பற்று நீங்கிய ஆன்மா ஞானத்தை அடையும் முறைமையில் அந்நெறி மனோநாசம், தத்துவஞானம், வாசனாக்ஷயம் என்னும் மூன்று பிரிவுடையதாயிருப்பதை நான்கு அதிகாரங்களால் விளக்கினர். அவற்றுள் நிலையாமை, துறவு என்னும் இரண்டு அதிகாரங்களும் மனோநாசமாம். மனோநாசமென்பது மன, நாசம் என்னும் இருமொழிகள் சேர்ந்த ஒருதொடர்மொழி. மனமாவது அது, இது என்னும் சங்கற்ப விகற்பங்களையுடையது. அவற்றை நீத்தலே நாசம். நீத்தற்குபாயம், அது இது வென்று காணப்படும் நிலையாமையை உணர்தலும், உணர்ந்தவாறே அப்பொருள்களைப்பற்றா. தொழிதலுமே யாதலின் நிலையாமை துறவு. என்னும் இரண்டு அதிகாரங்களும் மனோநாசமாயின. இங்ஙனம் மனோநாசம். சித்திப்பது அறிவுத்தொழிலாகிய தத்துவஞானத்தாலன்றி முடியாமையின் மூன்றாவது மெய்யுணர்தலென்னு மதிகாரத்தை வைத்தனர்.
தத்துவஞானமென்பது உண்மையறிதல் என்னும் பொருண்ட டும். அல்வறிதல் நல்லாசிரியனையடுத்து ஞானோபதேசங் கேட்டு, சிந்தித்து, தெளிந்து, நிட்டை கூடினார்க்கே உறுவதாம். இவ்வ திகாரத்தில் “ கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாரா நெறி'என்னும் பாடல் ஆசிரியனிடத்து உபதேசங் கேட்டலையும்'' ஓர்த்துள்ள முள்ள துணரி னொரு தலையாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு " என்னும் பாட்டால் சிந்தித்தலையும்,“ பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு” என்னும் பாட்டால் தெளிதலையும், தெளிதற்கும், நிட்டைக்கும் இடையீடின்மையின் நிட்டையும் இப்பாட்டிலேயே'' காண்பது'' என்னும் சொல்லால் அமைத்தும் கூறினர்.

இவ்வாறு கூறிய மனோநாசம், தத்துவஞான மிரண்டும் அவா நீங்கினவிடத்தன்றி சித்தியாமையின் வாசனாக்ஷயமென்னும் அவாவறுத்த லதிகாரத்தை யதன்பின்வைத்தார். வாசனை யென்பது பொருள்களைக் கண்ட பொழுது அதனைப் பற்றிச் செல்வதாகிய ஆசை உள்ளத்தில் வசித்திருப்பது. வசித்திருக்குங்கால் அவாவென்றும், பொருள்களைப் பற்றிச் செல்லுங்கால் ஆசையென்றும் பெயர்பெறும். உள்ளத்திற் றங்கியிருக்கு மவா அறாதவழி, ஆசையறாது. இவ்வவா அறுதலுஞ் சித்தித்தபொழுதுதான் முத்தி சித்திக்கும். இதுபற்றியே இவ்வதிகாரத்தில் “ ஆராவியற்கை யவாநீப்பி னந்திலையே பேராவியற்கை தரும்” எனப்பத்தாவது பாட்டருளிச் செய்தார். இப்பாட்டுக்கு உரையாசிரியர் பரிமேலழகர் “ இதனால் வீடாவது இது வென்பது. உம். அஃது அவாவறுத்தார்க்கு அப்பொழுதேயுளதா மென்பதூஉங் கூறப்பட்டன.''       என்று கூறினர். அன்றியும் உண்மை ஞானத்தையடைந்தார்க்கும் பிராரத்தம் உள்ளளவும் தேகமிருக்கும். அது பற்றுக்கோடாக, விருப்பு வெறுப்புக்கள் உளவாம். அவற்றைத் தோன்றுந்தோறுந் தோன்றுந்தோறுங் கெடுக்க வேண்டும். இதுபற்றியே மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தின் பின் அவர்வறுத்தல் என்னும் அதிகாரம் வைக்கப்பட்ட தென்றலும், ஒன்று. இவ்வாறு துறவறத்தில் ஞானபாதம் கூறிய பின்னர், ஞானத்தால் வீடெய்திய முத்தரும் பிராரத்தத்தை அநுபவித்தே தீரவேண்டுமென்பது தோன்றவும், இது காறுங் கூறப்பட்ட இல்லற ஒழுக்கம் துறவற ஒழுக்கங்களாகிய இரண்டும் இனிக்கூறப்படும் பொருளின்பங்கள் இரண்டும் பிரா எத்தத்தினாலேயே சித்திக்குமென்பது தோன்றவும், பிராரத்தமும் வினையின் பயனைப் பிறழாமல் அனுபவிக்கச் செய்தலின் அறமேயென்பது தோன்றவும், ஞானத்தின் பின்னாகவும், அறம் பொருளின் பங்களின் நடுவாகவும், அறத்துப்பாலுடன் ஒன்றாக வைத்திறுதியாகவும், ஊழ் என்னும் அதிகாரங்கூறினர். அன்றியும் பொருள் அடைவதற்குரிய பந்த ஊழும், வீடடைவதற்குரிய விடுதி ஊழும் என ஊழ் இருதிறப்படுமாதலின், அக்கருத்துத் தோன்ற ஞானத்துக்கும் பொருளுக்கும் நடுவில் ஊழ் என்னும் அதிகாரத்தை வைத்தாரென்றலு மொன்று.
இவ்வாறு அறத்துப்பால் கூறியபின்னர், இவ்வறத்தின் வழிப்படுவனவாயும், அறமும், அதனால் உண்டாம் இன்பமும் எய்துதற்குத் துணையாயுமுள்ள பொருட்பால் அறத்துக்குப் பின்னும், இன்பத்துக்கு முன்னுமாக எழுபது அதிகாரங்களால் அரசன்மேல் வைத்துக் கூறினார். தலைமைபற்றி அரசன் மேல் வைத்துக் கூறினாரேனும், ஏனைய ஒவ்வொருவருக்கும் உரியதேயாம்.
இங்கனம் பொருட்பால் கூறியபின்னர், இல்லறந் துறவறமென்னு மிரண்டின் பயனாகிய இன்பத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களால் கூறி நூலை முடித்தனர். இன்பத்துப்பாலில் இல்லறத்தின் பயனாகிய மகளீரொடு கூடி யனு பவிக்குஞ் சிற்றின்பம் ஒன்றனையே கூறினாரென்பர் ஒரு சாரார். அது பொருந்தாது. என்னை? துவறத்தின் பயன் வேறு கூறாமையின் என்க,
அற்றன்று : துறவறத்தின் பயன் சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின் அதனைக் கூறாது இல்லறத்தின் பயனாகிய இன்பம் ஒன்றனையே இப்பாலிற் கூறினாரென்றல் அமையாதோவெனின், அமையாது. என்னை? துறவறத்தின் பயனாகிய பேரின்பம் சிந்தையுமொழியுஞ் செல்லா நிலைமைத்தாதலின், இல்லறத்தின் பயனாகிய இன்பத்தின் உள்ளுறை பொருளாய்க் கூறினராதலி னென்சு..
இவ்வாறே திருக்கோவையாரில் சிற்றின்பத்துப் பாலில் வைத்தே பேரின்பத்தை ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமானும், அருளிச்செய்தனர். சிற்றின்பத்தில் தலைமகனும், தலைமகளும் போல பேரின்பத்திலுமுண்டு. அதுவும் ஆண்டானடிமைத் திறம்பற்றியும், அனுபவிப்பான் அனுபவிக்கப்படுந் திறம்பற்றியும் இருவகைப்படும். ஆண்டானடிமைத் திறத்தில் இறைவன் நாயகன், உயிர் நாயகி; அனுபவிப்பான் அனுபவிக்கப்படும் திறம்பற்றி ஆனந்தம் நாயகி, உயிர். நாயகன், அருள் தோழி. இவ்வின் பத்துப்பாலை களவியல் கற்பியல் என இரண்டு இயல்களாகப் பிரித்துக் கூறினர். களவியல் என்றது  திருட்டுப் புணர்ச்சியையன்று. அது. கற்பியலில் அறம்பொருளின் பங்களின் பொருட்டுத் தலைமகன் பிரிந்தபொழுது, தான் அனுபவித்த இன்பத்தை நோக்கி பிரிதொரு தலைமகனைக்கூடி அனுபவிக்க எண்ணாது. சென்றவனையே நாடிவருந்தினாளெனக் கூறியதனாலேயே இனி.துவிளக்கும். களவு என்னும் சொற்குப்பொருள் நாயகன் நாயகி கூடியனுபவிக்கும் இன்பம் பிறர் அறியாமைபற்றியும் அவ்வின்பம் : இத்துணைத்தென பிறர்க்குச் சொல்ல முடியாமை பற்றியு.மேயாம். இவ்வின்பத்துப் பாலில் இன்பம் அனுபவிப்பதாகிய களவியல் - ஏழு அதிகாரத்தானும் அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு தலைமகன் பிரிந்தபொழுது, அப்பிரிவாற்றாமையாகிய கற்பியலை பதினெட்டு அதிகாரத்தானுங் கூறினர்.
இவ்விரு இயல்களைப் பேரின்பப் பொருள்களாகக் கொள்ளுமிடத்து களவியல் பரமுத்தி. கற்பியல் சீவன் முத்தி : களவியலில் அனுபவிப்பான் அனுபவிக்கப்படுந்திறம். கற்பியலில் ஆண்டானடி மைத்திறம். களவியல் பரமுத்தி யென்பதை'' நலம்புனைந்துரைத்தல்'என்னும் அதிகாரத்தில்'அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்; செறிதோறுஞ் சேயிழை மாட்டு'' என்னும் 10வது பாட்டால் இன்பானுபவத்தில் அனுபவிக்குந்தோறும் எல்லையின்றி மேலும் மேலும் விருப்பம் உண்டாகு மென்ற தனாலறிக. அன்றியும் இப்பாட்டுக்குக் கூறிய முடிவுரையில் “ இப் புணர்ச்சிமகிழ்தல் - தலைமகட்கு முண்டேனும் அவன் மாட்டுக் குறிப்பானிகழ்வதல்லது கூற்றானிகழாமையயென்றும் முன்னர்க கூறியதை வலியுறுத்தும். உயிர்தத்துவ சோதனை செய்த விடத்து, தலைவனையும் தன்னையும் தலைவனருளால் அறிந்து தலைவனில் அடங்கி இன்புறுதலாகிய பரமுத்தி முதற்கண்ணதாகலின், அதனைக் களவிய லென்னும் பேரால். முன்னர் வைத்தார்.
இங்னம் முத்தியடைந்த உயிர் பிராரத்வ அனுபவத்தின் பொருட்டு அந்நிலையில் நின்று நீங்கியபொழுது தலைமகனைப் பிரிந்த தலைவி பிறிதொருவனைக்கூடி அனுபவிக்க நினையாது அவனையே நாடியிருப்பது போல வினைகாரணமாகப்பற்றிய விடயங்களில் அழுந்தாது அகமுகத்தில் அனுபவித்த பேரின்பத்தையே நாடி நிற்றலால் சீவன்முத்தி யெனப்பேர்பெறும். இந்நிலையில் உயிர் தலைவி, இறைவன் தலைவன். இதனை'' அறிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோரிடத்துண்மை யான்'' என்னும் பிறிவாற்றாமை அதிகாரத்து 3 - வது பாட்டால் தெளிக. பரமுத்தியில் அருள் தோழியாயிருந்து தன் ஜாதியாகிய சிவானந்தமென்னும் தலைமகளை உயிராகிய நாயகனுக்குக் கூட்டுவிக்கும். சீவன் முத்தியில் உயிர் சிவமாந்தன்மை யெய்தப் பெற்றமையால் ஆண்டான் அடிமைத் திறம்பற்றி தலைவியாகி நிற்கு முயிரை அருளாகிய தோழி தலைமகனாகிய இறைவனோடு கூட்டு விக்கும். இவ்வாறு அருள் என்றும் தோழியாயிருந்து பரமுத்தியில் இறைவனை ஆன்மாவிலும், ஜீவன் முத்தியில் ஆன்மாவை இறைவனிலும் சேர்ப்பிக்குமென்க. நிற்க.
முடிபுரை.
இதுகாறும் கூறியவாற்றால் ஆன்மாக்கள் அடையவேண்டியபயன் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்காமென்பதூஉம், அவற்றைச் செயற்கை யறிவாகிய நூலறிவால் பெறவேண்டு மென்பதூஉம், இதுபற்றியே வேதாகமங்களை இறைவன் அருளிச் செய்தானென்பதூஉம், அவற்றையாராயும் வலிமையில்லாரும் உய்ய வெண்ணி அவற்றின் பொருள்களைத் திரட்டி நூல்களாக்கி பெரியோர் சிலர் தந்தனரென்பதூஉம், அவை நான்கு பயனும் ஒருசேரத்தொகுத்துக் கூறாமையின் அவற்றைத் தொகுத்து தமிழில் குறட்பாவில் திருவள்ளுவர் ஒரு நூலருளிச் செய்தாரென்பதூம், வள்ளுவர் என்பது நான்குபயனுந் தொகுத்துத் தந்தமையின் வள் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த காரணப் பெயரென்பதூ உம், பாவின் பெயரே நூற்குப் பெயராய் வழங்குதலின் முன்னர் இப்பாவால் நூலில்லையென ஊகிக்கப்படுமென்பதும், இந்நூ லியற்றிய காலம் கடைச் சங்கக்காலமென்பதும், அச்சங்கத்தில் அரங்கேற்றவரு ஏற்குறைகண்டு மனம் பொறாதவராய் தலையிற் குத்தி சீவைத்துள்ள காரணத்தாற் பெயர்பெற்ற சீத்தலைச்சாத்தனார் இக்குறளைக் கேட்டுத் தலைக்குத்து நீங்கினாரென்பதூம், இந்நூலில் நாற்பாலுமடங்கியிருக்கின்றதென்பது பரிமேமேலழகருரையானும் சிறப்புப்பாயிரத்தானுந் துணியப்படு மென்பதூம், முப்பாலென்று  கூர வது நாற்பாலும் முப்பாலுளடங்கு மென்றல் பற்றியே யாமென்பதூம், இந்நூல் 133 அதிகாரங்களையுடைய தென்பதும், முதனான்கதிகாரமும் பாயிரமென்பதூம், அவற்றுள் முதலதிகாரத்து முதற் செய்யுள் கடவுள்வாழ்த்தென்பதூம், ஏனைய ஒன்பது செய்யுளும் பயனென்பதூஉம், இரண்டாவது வான் சிறப்பு சம்பந்த மென்பதூம், மூன்றாவது நீத்தார் பெருமை அதிகாரியென்பதூம், நான்காவது அறன் வலியுறுத்தல் நுதலிய பொருளென்பதூஉம், பாயிரத்தை வடநூலார் அனுபந்த சதுட்டய மென்பரென்பதூஉம், இப்பாயிரம் நூலாசிரியரேசொல்லவுந் தக்கதென்பதும், வாழ்த்து, வணக்கம், பொருளியைபுரைதல், என்னும் மூவகை வாழ்த்துள் முதற்பாட்டாற்கூறிய வாழ்த்து பொருளியை புரைத்தலாமென்பதூ உம், பாயிரஞ்சொல்லி முடித்து ஆன்மாக்களுக்கு இந்திரியம், மனம், அறிவு மூன்றும் முறையே அடங்கவேண்டுமாதலின் புறப்பற்றொழிதலாகிய இந்திரிய திக்கிரகத்தின் பொருட்டு அடுத்த இருபத்திகாரத்தில் கூறப்பட்டது இல்லறமென்பதூஉம், இதனை அடுத்து துறவறத்தை விரதம், ஞானம் என இரண்டியல்களாகக் கூறினரென்பதூம், விரதம் மன மடங்கச் செய்யுமென்பதும், ஞானம் மனோநாசம், தத்துவ ஞானம், வாசனாயமெனமுத்திறப் பட்டு உண்மை யுணரச் செய்யுமென்பதூம், ஞானிக்கும் ஊழ் உண்டென்பதற்கும் பொருளின்பங்கள் ஊழாலா மென்பதற்கும் அடுத்து : ஊழ்கூறினாரென்பதூஉம், இதனடுத்து பொருட்பாலும், இன்பத்துப்பாலும் முறையே கூறின ரென்பதூம், இன்பத்துப்பால் பேரின்பத்தையுங் குறிக்குமென்பதூம், திருக்கோவையாரே இதற்குச் சான்றென்பதும், பேரின்பத்தில் ஆண்டானடிமைத்திறம் பற்றி இறைவன் நாயகன் உயிர் நாயகியும், அனுபவிப்பான் அனுபவிக்கப்படுந்திறப்ப நறி உயிர் நாயகன், ஆனந்தம் நாயகியுயாமென்பதூம், இப்பாலுட் களவியல், பரமுத்தி, கற்பியல், சிவன்முத்தியென்பதூம், முன்னையது அனுபவிப்பான் அனுபவிக்கப்படுந்திறம், பின்னையது ஆண்டானடைமைத்திற மென்பதும், இவ்வாறு கூறி நூலை முடித்தன ரென்பதூம் பிறவுமாம். அறிஞர் குணநாடிக் குத்தமுநாடி அவற்றண்மிதாடி மிக்க கொள்வாராக.
                 பொ.மு. முத்தைய பிள்ளை.
சித்தாந்தம் – 1912 ௵ - செப்டம்பர் ௴




No comments:

Post a Comment