Saturday, May 9, 2020



திருஞானசம்பந்தர் வாழ்க்கை

[கோவைகிழார் ம. இராமச்சந்திரனார்]

சேர்க்கை

விக்கக் குறிப்புக்கள்

கால நிலை

இந்திய சரித்திரத்தில் காணும் சில ஆண்டுக்குறிப்புக்கள்:

வடநாடு
கி.மு.
625
மகாவீர மார்த்தாண்டர்
சமணமதத் தோற்றம்
கி.மு.
600
கெளதம புத்தர்
புத்தமதத் தோற்றம்
கி.மு.
350
சந்திரகுப்தன்
சமணானாகித் தெற்கே சிரவண பெளகுளத்திற்கு வந்தவன்.
கி.மு.
300
அசோகன்
பெளத்தன்’ இலங்கைக்குத் தூது அனுப்பினவன்.

தென்னாடு
கி.மு.
1000
சேர சோழ பண்டியர் ஆதிக்கம்
தமிழர் இயற்கைச் சமயம்
கி.பி.
200
கி.மு.
200
கடை சங்கத்தார்
சமண பெளத்தம் வரத் தொடங்கியது.
கி.பி.
200

கி.பி.

100
திருவள்ளுவர்
பொது நூல்
மணிமேகலை
பெளத்தம்
சிலப்பதிகாரம்
சமணம்

கி.பி.

300
பல்லவர் தொடக்கம்

ஆரியக் கலப்புத் தொடக்கம்.
சேரர் தனி நிற்றல்
சோழ பாண்டியர் குன்றியது
கி.பி.
600
மகேந்திரவர்மப் பல்லவன் சமணர் ஆதிக்கம்
அப்பர்; வைதீக சைவம் புகுத்தியது.
கி.பி.
650
கூன் பாண்டியன், மதுரை சமணர் ஆதிக்கம் 8 குன்றுகளில் 8000 குரவர்கள்
சம்பந்தர்; வைதீக சமயம்.
கி.பி.
825
சுந்தரர்
வைணவ ஆழ்வார்கள்
கி.பி.
900
விசயாலயச் சோழ வம்சம்
சோழர் மேம்பாட்டின் தொடக்கம்; வைதீக சைவம்; ஆலய நிர்மானம்.
கி.பி.
1000
சோழர் மேம்பாடு; இராசராசன், இராசேந்திரன்
ஆலய மேம்பாடு திருமுறை ஓதுதல்.
கி.பி.
1100
உரையாசிரியர்கள்
அடியார்க்குநல்லார் - சமணம்
கி.பி.
1100
இலக்கண ஆசிரியர்
வீரசோழியம் – புத்தகம்
கி.பி.
1250
சைவ வைணவ காவியங்கள்
சேக்கிழார் – கம்பர் - வைதீகம்
கி.பி.
1200
இலக்கணம்
பவணந்தி சமணம்
கி.பி.
1300
சமய நூல்கள்
மெய்கண்ட சாத்திரங்கள்; பகவத் விஷய நூல்கள்
கி.பி.
1300
சைவ சமய மட நிலையங்கள்


சித்தாந்த ஞானம்

சிவஞானபோதச் சூத்திரங்களின் கருத்துக்களும் அவற்றைக் குறிக்கும் சம்பந்தர் வாக்குகளும்.

1 உலகம் சடம்; உள்ள பொருள்; கர்த்தா உடையது; கர்த்தா சங்காரகாரணன்; முதற் காரணம் மாயை; முதற் கடவுள் அரன்.

“இருநில னதுபுன லிடைமடி தரஎரி புக எரி யதுமிகு
பெருவளி யினில் அவி தரவளி கெடவிய னிடைமுழு வது செட்
இருவர்க ளுடல்பொறை யொடு திரி யெழிலுரு வுடையவன்"
- திருமறைக்காடு - திருவிராகம் செ. 7

பிறவினொ டிறவு மானான்''                                   செ. 1.
"தோற்றவன் கேடவன்''                                       செ. 2.
- திருஇடைமருதூர் - வியாழக்குறிஞ்சி
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை"
- திருப்புறம்பயம் - திருவிராகம் செ. 3

2 பெத்த உயிர்கள் இறத்தல் பிறத்தல் புரியும்; அத்தொழில்களுக்கு முதல்வன உயிரோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருப்பன்; தன் சத்தியோடும் இருப்பன்.

புலிமுதல்ஐம் பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன்ஐந்தாய்க்
கரணம் நான்காய்,
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றான்''
    - திருக்கழமலம் மேகராகக்குறிஞ்சி செ. 7
"உடலே உயிரே உணர்வே            - திருஅழுந்தூர் - இந்தளம் செ. 2

ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே''
- திருஇராமேச்சுரம் - காந்தாரபஞ்சமம் செ. 9
கருவினாலன்றியே கருவெலா மாயவன்
உருவினாலன்றியே உருவு செய்தான்''
- திருத்தென்குடித்திட்டை - கொல்லி செ. 3
"ஒருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகி''
- திருப்பரங்குன்றம் குறிஞ்சி செ. 3

3 உயிர் உண்டு. அது உடல், பொறி, சூக்கும உடம்பு. பிராணவாயு, முதல்வன் இவைகளின் வேறு.

“எற்றுநீர் தீக்காலு மேலைவிண் இயமானனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான்''
- திருமுதுகுன்றம் - பழந்தக்கராகம் செ. 2
"தாவி யவனுடன் இருந்துங் காணாத தற்பரன்''
- திருக்கோளிலி - பழந்தக்கராகம் செ. 9
''பூவினில் வாசம் புனலில் பொற்புப் புதுவிரைச் சாந்தின்
இன் நாற்றம்''
- திருவாலவாய் - திருநள்ளாறு - நட்டபாடை செ. 4

4. உயிரின் அறிவை மறைப்பது ஆணவம்; அதற்கு. உதவுவது அந்தக்கரணம்; ஆனால் அது வேறு; உயிர் ஐந்து விதமாய் அறியும்.

"அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கி
அருள் பெற்று வளர்வார்''
- திருத்தோணிபுரம் - சாதாரி - திருவிராகம் செ. 11
அடிபணிந்தவர்கள் மேலைக் குற்றமதொழித்தருளும்
கொள்கையினன்''
முன்னைய முதல்வினை அற அருளினர்"
- திருப்புறவம் - சாதாரி - திருவிராகம் செ. 5.

5 உயிரால் அதிஷ்டிக்கப்பட்ட கருவிகள், விஷயங்களை அளந்து அறியும், அக்கருவிகள் உயிரை அறியா; உயிரே அறியும்; உயிரும் முதல்வனை அறியாது; முதல்வன் உயிர்க்கு உணர்த்தினும் விகாரியாகான்.

6 சுட்டறிவால் அறியப்படுவது அசத்து; முதல்வன் எல்லாவற்றாலும் அறியப்பட மாட்டான்; முதல்வன் சிவசத்து.

"ஓதியாரும் அறிவாரில்லை ஓதி உலகெலாம்
சோதியாய் நிறைந்தான்"          திருவையாறு - இந்தளம் செ. 7.
மண்ணொடு நீர் அனல் காலோடு மதியிரவி
எண்ணில் வரும் இயமானன்'இகபரமும் - பேராளன்''
- திருவெண்காடு - சீகாமரம் செ. 3
நிலம் தண் நீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்'-
- திருஅரிசிற்கரைப்புத்தூர் - காந்தாரம் செ. 7
இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது"
- திருவைகாவூர் செ. 4.

7 சிவம் அசத்தினை அறியாது; உயிர் சத்து, அசத்து இரண்டினையும் அறியும்; ஆனால் இரண்டும் ஆகாது.

8 உயிர் தன்னியல் பறியாது கருவிகளால் மயங்கி நிற்கும்; சிவம் உயிர்க்கு அதன் இயல்பை உணர்த்தும்; உயிர் சிவம் நாடிச் செல்லும்.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்'' –
- திருப்புள்ளிருக்குவேளூர் - சீகாமரம் செ. 11

9 சிவத்தை நாட உயிர் சிவோகம் பாவனை செய்யும், பஞ் சாக்ஷரம் மூலமாய்.
“வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்''
- திருவண்ணாமலை - தக்கேசி செ. 7
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று
அழுதுநிற்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பார்.''
- திருக்கானூர் - தக்கேசி செ. 11
"காதலாகிக் கசிந்து கண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"
- நமச்சிவாயத்திருப்பதிகம் செ. 1

10 சிவபணி வழுவாது செய்தல் வேண்டும்; அதனைச் செய்யும் உயிரை ஆணவம் தாக்காது; அதற்கு மாயா கன் மங்களும் இல்லை.

“நாச மாம்வினை நன்மை தான் வரும் – ஈசன்
கூசி வாழ்த்து துங் குணம தாகவே''
- திருஇந்திரநீலப்பருப்பதம் இந்தளம் செ. 4
"கையால் தொழுது தலைசாய்த்து உள்ளம் கசிவார்கள்''
- திருப்பாசூர் - காந்தாரம் செ. 3

11 சிவம் உயிர்க்கு அறிந்தும் அறிவித்தும் உபகரிக்கும்; சிவ நிஷ்டையில் நிற்பவரே சிவத்தின் சீபாதம் அடைவர்.

"பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள் வாய்ப்
பாலே போகாமே காவாப் பகையறும் வகைநினையா
கழுமல வளநகரே''
- திருக்கழமலம் - வியாழக்குறிஞ்சி செ. 7
ஒருரு வாயினை - நீள் நிலத்தே''           திருவெழுகூற்றிருக்கை
மேவி லொன் றர்விரி கசைவுற்ற இரண்டினர் மூன்று மாய்
நாவின் நாலர் உடலஞ்சினர் ஆறர் ஏழோசையர்
தேவில் எட்டர் திருவாஞ்சியம் மேவிய செல்வனார்''
- திருவாஞ்சியம் - இந்தளம் செ.3.

12 ஜீவன் முன் தன் மும்மலங்களை அறக் களைவன்; சிவன் அடியார், சிவவேடம், சிவலிங்கம் இவைகளைச் சிவமாக வழிபடல் வேண்டும்.

“கன்னியர் நாள்தோறும் வேடமே பரவும்''
- திருக்கழுமலம் - குறிஞ்சி செ. 6
"திருவாஞ்சியத்து அடிகள்பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே.''
- திருவாஞ்சியம் - இந்தளம் செ. 9
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி எளிதாமே"
- திருக்கடிக்குளம் - நட்டராகம் செ. 10
தொண்டரொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத்
தொடர்வோமே''
- திருவலஞ்சுழி - பழம்பஞ்சரம் செ. 6

தொண்டரொடு கூட்டுக் காணல்

சம்பந்தருடன் உடனிருந்து திருத்தொண்டு புரிந்தோர்

திருநீல நக்கர், முருகர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், குங்கிலியக்கலயர், நின்ற சீர்நெடுமாறர், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், சிவபாத இருதயர்.பகவதியார், நம்பாண்டார், மயிலைச் சிவநேசர், கொல்லி மழவன், திருநாவுக்கரசர், அவருடன் தொண்டு புரிந்த அப்பூதி யடிகள், மகேந்திரப் பல்லவனார் முதலியோர்.

அற்புதச் செயல்கள்
1
ஞானப்பால் உண்டு அருள் பெற்றது
சீகாழி
2
திருத்தாளம் பெற்றது
கோலக்கா
3
முத்துச் சிவிகை பெற்றது
நெல்வாயில்
4
உபநயனத்தின் போது ஐந்தெழுத்தை ஓதினது
சீகாழி
5
சொற்பொருள் அணிப்பாக்கள்
சீகாழி
6
கொல்லிமழவன் மகளின் முயலக நோய் நீக்கியது
பாச்சிலாச்சிராமம்
7
குளிர்ச்சுரம் நீக்கியது
திருச்செங்கோடு
8
முத்துப் பந்தர்
பட்டீச்சரம்
9
வேள்விக்குப் பொற்கிழி
ஆவடுதுறை
10
யாழ்முறி
தருமபுரம்
11
விடம் நீக்கியது
மருகல்
12
பொற்காசு பெற்றது
வீழிமிழலை
13
கதவு அடைக்கப் பாடியது
மறைக்காடு
14
பாண்டியன் சுரம் நீக்கியது
மதுரை
15
வாதங்கள், ஏடு, நெருப்பு மூட்டியது
மதுரை
16
ஓடம் விட்டது
கொள்ளம்பூதூர்
17
புத்தன் தலை இடி
போதிமங்கை
18
ஆண்பனை பெண்பனை ஆக்கியது
திருவோத்தூர்
19
பூம்பாவை எழுப்பியது
மயிலை
20
திருமணத்தில் சோதி கலப்பு
நல்லூர்ப் பெருமணம்


பிற சமயத்தார் இந்து சமயம் தழுவினது
1
கிரேக்கர்
ஆண்டியால் சிடாஸ் அவன் தூதன் ஹிலியாடோரஸ்
115 – 135 கி.மு.
2
ஹூணர்
தோரமணன்
500 – 502 கி.பி.
3
ஹூணர்
மிஹிரகுலன்
502- 542 கி.பி.
4
சமணன்
பிட்டி தேவன் (விஷ்ணு வர்த்தனன்)
1115 – 1141 கி.பி.

கீர்த்தனங்கள்

[பின்வரும் மூன்று கீர்த்தனங்களும் அரசாங்கத் தொன்னூல் நிலையத்துள்ள ஒரேட்டுப் பிரதியிற் காணப்பட்டன. தமிழ்ப்பாட்டுக்கள் வேண்டும், தமிழிசை வளர வேண்டும் என்ற உணர்ச்சி பெருகி வருகிற இக்காலத்தில் இவை பயனுடையனவாகும். ஏட்டிலே ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. 2, 3 - ம் கீர்த்தனங்களில் காணும் இராகமும் தாளமும் ட்டிலே கண்டவை. - மு. அருணாசலம்]




1. கச்சி ஆனந்த ருத்திரேசர் கீர்த்தனை

பல்லவி

ஏனிந்தப் பெண்ணினை இடத்தினிலே வைத்திங் (கு)
இருக்கிறீர் சொலும் ஐயரே
அனுபல்லவி

தேனந்து மலர்செறி - ஆனந்த முயர்சோலை
தானந்த முறுங்கச்சி - ஆனந்த ருத்திரேசரே               (ஏன்)
சரணங்கள்

1.     வில்லடி படும்போதும் மெய் தனிலே நோவக்
கல்லெறி படும்போதும் காவலன் பிரம்பினால்
நல்லடி படும்போதும் நாடிப்பயந் தீர்த்திட
வல்லவள் இவளென்றே வைத்தீரோ சாமிநீர்              (ஏன்)

2.     மாதவ ரிஷிகளால் வரும் ஆனை புலிபாம்பு
மானொலிக் கஞ்சினீரோ மதனன்பா ணத்தினாலே
காதலா னீரோ அல்லால் கங்கைத னக்குப்போட்டிக்
காட்டிச் சண்டைமூட்டிக் களரிபார்க்க வைத்தீரோ          (ஏன்)

3.     இமய கிரியுதவும் உமையிடத் துறிலுயிர்
இன்பந் தழையு மென்றோ ஏழையடி யார்க்கெல்லாம்
தமதுளத் திருள் நீக்கிச் சமமிரு வினையாக்கிச்
சமயமீ தெனநோக்கிச் சத்திநிபாத மாக்கவோ              (ஏன்)

2. திருமயிலைக் கபாலீசர் கீர்த்தனை

ஆனந்த பைரவி

பல்லவி
சூலபாணியர் கபாலீசர் - இவர்
தொண்டர்க்கு மகா நேசர்                         (சூல)

அனுபல்லவி

ஞாலமெ லாம்புகழுந் திருமயி லாபுரி
நண்ணுங் கற்பகவல்லி நாயக ராந்திரி              (சூல)


சரணங்கள்

1.     மெய்யன்ப ரெனும்வாத வூரருக்காய்
மேலவர் உள்ளங் களிகூரச்
செய்யுந் திருவிளை யாட்
டெல்லாம் அறிவீர்களே
பொய்யல இவரால் மெய்ப்
போதம் பெறுவீர்களே                             (சூல)

2.    திருநாவுக் கரையருக் காக - இவர்
செய்த கருணை மூன்று லோகத்
தரும் நாளுந் துதித்திடுஞ்
சரித்திரம் அறியீரோ
அரியாரண னுங் காணா
தவரெனக் குறியீரோ                              (சூல)

3.     நம்பியா ரூரர்க்கா யன்று - தூது
நடந்தார் திருவா ரூரிலென்று
அம்புவி யெலாஞ்சொல்வ
தறியீரோ மறைபுகழ்
உம்பர்க்கர சிவர் தாம்
ஒளிர்செஞ்சுடர் போல் திகழ்                      (சூல)

4.     திருஞான சம்பந்த மூர்த்தி - உள்ளம்
தெரிந்தவ ரெண்ணமெலாம் பூர்த்தி
பரிவா யியற்றிப்பூம்
பாவைக்குயிர் தந்தாரே
பெருஞ்சீர் வாயிலார்முத்தி
பெறவிடைமேல் வந்தாரே                         (சூல)

3. திருஞானசம்பந்தர் சரித்திரக் கீர்த்தனை

கலியாணி – ஆதி தாளம்
பல்லவி

ஞானசம் பந்தர் திருவடி பூசித்தால்
நன்மைபெற் றுய்யலாம் நெஞ்சே                        (ஞான)

அனுபல்லவி
வானளா விய சோலை மாடமா ளிகைசூழும்
வளமும்பன் னிருபேரும் மருவும்சீ காழிவாழும்           (ஞான)
சரணங்கள்

1.     பார்புகழ் மறையோர் கவுணியகோத் திரச்சிவ
பாத இருத யரும் - அவர்
பத்தினியாம் பகவதி யாருஞ் செய்தவப்
பயனால் அண்டத் தவரும்
ஆர்வமுற ஆதிரை நாளி லுதித்தந்த
ஆண்டு முதல் மூவாண்டில் அன்னையுமை யாள் தந்த
பேர்வளர் ஞானப்பா லருந்திச் சிவானந்தப்
பெருமான்பாற்கோலக்காவிற்பொற்றாளம் பெற்றுவந்த.     (ஞான)

2.     திருவரத் துறையத் தன் பால்முத்துச் சிவிகைபொற்'
சின்னங் காளந்தாரை - யெங்கும்
திகழ்முத்துக் குடைபெற்றே ஓங்குந்திருப்பாச்சிலாச்
சிராம மெனுமூரைப் 00மூடிய பா
பெருமையொடுஞ் சேர்ந்து மழவன் புதல்வியுற்ற
பிணியகற்றி யகன்று பேசுங்க லைகளகற்ற
அருந்தவர் வாழ்செங்குன் றூரிலன் பரைப்பற்ற
அணுகி யொறுக்கும் நளிர் சுரந்தீர்த் தருளைப் பெற்ற      (ஞான)

3.    நீடுபுகழ் திருப்பட் டீச்சுரத் தத்தன்பால்
நித்திலப் பந்தரும்சீர் - நாளும்
நிலவு மாவடுதுறை யினிற்றந்தை செய்வேள்வி
நிறைவேறும் படி யுலகோர்
தேடுதற்கரிய பொற்கிழி பெற்று நீடிய
செல்வத் திருமருகல் சேர்ந்தங்கு நாடிய
ஆடக வணிக னாவிசோர
அரவின் விடமகல அண்ண லைப் பாடிய                (ஞான)

4.     வீழி மிழலை தன்னில் அன்பர்கள் பசி தீர்க்க
வேண்டிப் படிக்காசு - நித்தம்
விமலரளிக்கப் பெற்றே திருமறைக் காட்டினில்
மேவி மெய்ப்புகழ் வீசு
ஊழி முதல்வன்வாழுந் திருக்கோயிற் கதவங்கள்
ஓங்கும் வேதத் தால்மூடப் பட்டிருந்ததைத் திங்கள்
வாழ்சடை யானையப்ப ரோடும் பாடித்.
மகத்துவத்தாற் றிறக்கவும் மூடவுஞ்செய்த எங்கள்         (ஞான)

5.      வையம் புகழ்மதுரை மாநகர் தனிற் பாண்டி
மாதேவி யாரழைக்கச் - சென்று
மடத்திருக்க அமணர் கனலிட அதை மன்னன்
மருங்கேவி அன்பர் செழிக்கச்
செய்ய அவ்வழற் சுரம்போல் மன்னன் தான த்திங்கு
செய்தத னாலவன் அழைத்திடச் சென்றாங்கு
பொய்யம ணர்கள் செய்த சுரமன லோடு தேங்கு
புனல்வாதமும் வென்று விபூதியை யளித்தோங்கு         (ஞான)

6.    நலமிகுந் திருக்கொள்ளம் பூதூர்சேரப் பொன்னி
நதிப்பிர வாக மீறி - யோங்க
நாத ரடியவரை ஓடத்தேற்றித் தாமே
நடத்தி யக்கரை யேறி தங்கள் வை
இலகுமா லயத்துட் சென்று சேவிக்கும் போது
எதிருற்ற போதமங்கை சாக்கியர் செய்வாது
பலவும் வென்று திரு வோத்தூ ரமணர்தீது
பகரவாண் பனையைப் பெண்பனையாம் பதிகமோது.       (ஞான)

7.     திருமயி லையிற்சிவ நேசசெட்டி யார்முன்
செய்தவக் கொடியொன்று - சர்ப்பக்
தீண்டவவர் அங்கத்தை மீண்டும்பூம் பாவையாச்
செய்தப் பதியை யகன்று
பெருமண நல்லூரில் நம்பாண்டா ரெனுமொரு
பெரியோர் பெண்ணை மணம் புரிந்தபின் அதில்வரு
மிருவினை யாகாதென் றவரோடின்'
மெந்தை சபாநாதர் இணையடி சேர்திரு                   (ஞான)

சித்தாந்தம் – 1942 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment