Monday, May 4, 2020



அறத்தின் மேம்பாடு

1. அறம் இன்னதென்பது வகை. - அறமாவது மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். மனுமுதலிய ஆன்றோர்களால் செய்தற்பால வின்னவென வரை யறுக்கப்பட்டதே அறமாகும். அது ஒழுக்கம், வழக்கு, தண்ட மென மூவகைத்து. அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார்தத் தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலை களினின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின்'வழுவா தொழுகு தல். 
வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனதெனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முண் மாறுபட்டு அப்பெர் ருண்பேற் சொல்வது. அது கடன்கோடன் முதலிய பதினெட்டுப் பதத்ததாம்.
தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற்பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்குந்தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத் கவாவதல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்குச் சிறப்பிலவாதலானும் அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும் தேயவியற்கையானும் அறியப்படுதலாலும் அவற்றையொழித்து ஈண் இத்தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமெனக்கொள்ளப்பட்டது. நால்வகை நிலைத்தாய வருணந்தோறும் அது வேறுபாடுடைமையின் பொதுவியல்புபற்றி நாயனாராற் கொள்ளப்பட்டது இல்லறந் துறவறமென்ற விரண்டுமேயாம்.

2. இல்லறம். 'அற்புடை நெறியிற் கற்புடைமனைவியொடு விருந்து புறந்தந்தருந்தவர்ப்பேணி வரையாநாளின் மகப்பேறு குறித்துப் பெருநலந்துய்க்கும் பெற்றித்தன்றே' என்றிருப்பதால் இல்லறம் விழைவானொருவன் மேற்சொன்ன வழிகளைத் தவறாதனனனுட்டித்து வரல் வேண்டும். பொருள் செய்யுங்கால் பாவத்தையஞ்சியீட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர்முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துக்கொடுத்துப்பின் எஞ்சியவற்றை யொருவன் உண்டு வருவானாயின், அவன் மரபு இந்நிலவுலகத்து அழிவுறாது. எப்போழ்தும் நிலைநிற்குமென்க. அங்ஙனம் பொருளீட்டுங்கால் தன்மனைவிமேற் செயத்தகும் அன் பினையும், பிறர்க்குப் பகுத்துப்பின் தானுண்டலாகிய அறத்தினையும் ஒருவனது இல்வாழ்க்கை உடைத்தாயிருக்குமாயின், அவ்வுடைமையே அவ்வில்வாழ்க்கைக்குப் பண்பும் பயனுமாகும். தவம் செய்வாரையும் ஓம்பும் ஆற்றல் இல்வாழ்வானுக்கிருத்தலின், அன் னாரைத் தத்தம் நெறியின்கண் ஒழுகப்பண்ணித்தானும் அவ்வறத் தில் தவறா திருத்தல் சாலவும் சிறப்பாகும். இந்நிலையே அத்தவ ஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்தாம் என்னை? நோற்பார் நிலைக்கு அவர் தம்மையுற்ற நோயல்லது இவர் நிலைபோற் பிறரை யுற்ற நோயைப் பொறுத்தலின்மையின் என்க; அன்றியும்
'ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்'

என்றவாறு, தவத்தான் வலியார்க்கு வலிமையாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தலாம். அவ்வலிமையோவெனின் அங்ஙனம் பொறுத்தற்கரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்னேயா மென்க. தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றலினும் தாமும்பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆகிய இல்லத்தாராற்றல் மிகவும் பெருமையென்பதைச் சொல்ல வும் வேண்டுமோ? ஆகலின் அறனெனப்பட்டது இல்வாழ்க்கையே. மெய்ஞ்ஞான நெறியுணர்ந்த பெரியோர் இல்லறத்தில் இனி துவாழ்ந்தாலும் அறச்சிறிதும் பற்றடையாரென்பது தேற்றம். இதற்கு மேன்மையாம் இல்லறத்தின் மேதகவாழ்ந்திருந்தும் அணு த்துணையும் பற்றிலாது. சிவமாந்தன்மையுற்ற சனகமகாராசரே சான்றாவர். இவரையே சின்னாட்களுக்கு முன் இப்பரதபூமியின் கணிருந்து இவ்வுலகமுழுது'ஞான சூரியன் போற்றம் புகழ்ப்படா த்தைத் திகந்தமெங்கணும் பரப்பிச்சென்ற தவயோகியாரம் நம் விவேகானந்தச் செம்மலுமிடையிடையே தம்பிரசங்கத்திற் சிறப்பித்துப் புகழ்ந்துளார். இதுபற்றியன்றே,
'சிறப்புறுமில்லறத்தி னினிதுண்டுடுத்து மனைமக்களொடுஞ் செறிந்தாரேனும், பெறப்படுமப்பற்றடையார் மெய்ஞ்ஞான நெறியுணர்ந்தபெரிய நீரார், அறப்பெரிய துறவறஞ் சார்ந்தவர்க்குமிவாதிகமென வறையு நூல்கள், விறப்பறுமஞ்ஞானிய ரெவ்வகையறத் தினெவ்வகைச் சிறப்புமே விடாரால.
எனக்கு சேலோபாக்கியானக்காரரும் கூறுவாராயினார். இது காறுங் கூறியவாற்றால், ஆச்சிரம நான்கனுள் சந்நியாசம் பெருமை யாமென்றும், இருத்தற்குரிய நிலை சிறிதும்வழாது இல்லறத்திருப் பின் மேற்கூறிய துறவறத்தினும் இந்நிலைமிக இனிதாமென்பதும் பெறப்படும். மற்று, துறவறத்தினும் இந்நிலை கைக்கொள்ளுதற்கு மிக எளிதேயாமன்றோ! இனி அறத்தின் பொதுப்பான்மையை விவரிப்பாம்.

3. அறத்தின் பொதுப்பான்மை. அறம், தருமம், வண்மை, ஈகை, கொடையென்பன ஒருபொருளனவா மென்ப வொருசாரார். தருமத்துக்கும் தானத்துக்கும் சிறிதுபேதமுண்டு, தத்த மினத்தார்க்குத் தக்ககாரணம்பற்றி யொன்றையீதலைத்தான மென்றும், அங்ஙனமின்றி வறியராய் ஏற்றாரனைவர்க்கும் மாற்றாதீதலைத் தருமமென்றுங் கூறுபவான்றோர். கன்னிகாதானம், பூதானம் முதலியன காண்க.

'அறஞ்செறி வண்மைதான மளவிலா தளித்து நானும்
புறஞ்சுவர் கோலஞ்செய்வான் பூபதிக்குரைக்க லுற்றான்'

என்று பாரதத்திலும் இக்கருத்துப்பேதங் கூறப்பட்டவாறு காண்க.
செயற்பால வறங்கள் முப்பத்திரண்டென்ப, அவையாவன: - ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தார்க்குண்டி. பசுவுக்குவாயுறை, சிறைச்சோறு, ஐயம், திண்பண்டநல்கல், அற வைச்சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர்த்தல், மகப்பால்வார்த் தல், அறவைப்பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம், சுண்ணம், நோய் மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், பிறர் துயர்காத்தல், தண்ணீ ர்ப்பந்தல், மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சு தறி, விலங்கிற் லலக குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துயிர்காத்தல், கன்னிகாதா னம், என்பனவாம். அறஞ்செய முற்படுவான் தன்டனத்திடத்து மாசில்லா மலிருக்க வேண்டும். மற்றதுவே அறனாகும்.
'மனத்துக்கண் மாசில னாத
லனைத்தற னாகுல நீர பிற' 

என்.று நம் நாயனார் கூறி பிருத்தலையுங் காண்க.
'யாமிளையோம், பொருள் வருவாயதிகமின்று' என்றின்னோரன்ன வீணெண்ணங்களின்றித் தத்தமக்கியலுந் திறத்தான் அறவினையை யிடைவிடாது அது செல்லுமிடமெங்குஞ் செய்து வரல் வேண்டும். என்னை! 'செயற்பாலதோருமறனே' யாகலின் இற்செய்குறைகளை நீக்கிப்பின்னர் அறவினையையறிவாம் என்றிருப்பார் தன்மை அலைகடலாடச்சென்றார் ஓசையொருங்க விந்த பின் ஆடுவோமென்றிருப்பதை யொக்குமாகலின், இன்றென்றும், நாளையென்றுங் கூறிக்காலத்தை வீணேகக்ழிகாது கூற்றம்பிடரிக் கண் உள்ளானென்று கருதிச் செயற்பால சிவதருமங்களைச் செவ்வனேபுரிய முன்வரல் வேண்டும் 'கரும்பாட்டிக்கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெருந்து வேங்காற்றுப ராண்டுழவார் - வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்காற்பரிவதிலர்' என்பது பெரிதுங்கவனிக்கற்பாற்று.
அறஞ்செயப்புகுவான் பொருள்வழிச் செய்யமனமில்லாதி ருப்பினும் அவன் முதலில் அஃதை விரும்புவானாக. விருப்பமறத்தின் மேற்சாரின்பின் நலம்பயக்குமென்ற நயம்வாய்ந்த'அறஞ் செயவிரும்பு'என்றதன் கருத்து நுணுகி யறிதற்பாலது. பிச்சைக்கு வந்த இரவலன், மறுநாளும் ஒருவனில்ல நுழைபின்,. அவன்மீது, அறத்துக்கு நேர்பகையாகிய சினஞ்செயக்கூடுமாகலின் சினந்தவிர்தற்பாற்று எனவிலக்குதற்கு அதன்பின் 'ஆறுவது சினம்' என்ற தமைந்திருந்தல் பெருவனப்பாகும். ஒர் கால் சினங்கொள்ளின் அறங்கெட்டுச் சிதையுமாகலின், அறஞ்செய மனமிலாதா னொருவன், மெல்லக் கொடுக்கக் கூடியவற்றைக்குறைத்துவரின், வறியன் 'இவனிடம் செல்லுதல் கூடாது குறைத்திடுகின்றான்' என நினைத்துப் புறம்போவான் 'பின் நாம் உய்தல் கூடும் என வுன்னிக் கொடுத்தலைக் குறைத்தல்கூடும்; இது முற்றும் ஒழிக்கற்பாற்றென்றற்கே அதனையடுத்து 'இயல்வது கரவேல்' எனக்கூறுவா ராயினார். இதனை
'இரத்தலு மீதலே போலுங் சரத்தல்
கனவினுந் தேற்தார் மாட்டு'  

என நம் நாயனார் சிறப்பித்துரைத்திருத்தலைக் காண்க.
தான் கொடுக்க மனமிலனாயினும் பிறர்கொடுப்பதைத் தடுக்கலாகாது என்ற பெருநீதியமைந்த ஈவது விலக்கேல் என்பதனை அடுத்தாற்போல் அமைந்திருத்தல் மிகவும் மெச்சத்தக்கதாகும்,
'கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பது உமின்றிக் கெடும்' ஆகலின்

பிறர் கொடுப்பதை பெஞ்ஞான்றுந் தடுத்தலொண்ணாது

4. அறத்தின் மேம்பாடு. மனிதன் புகழெய்துதற் குரித்தான வை மூன்றாகும். அறம், குணம், கல்வியென்பனவாம். இவற்றுள் கல்விப் புகழ் மிகப்பெருமையாயும் சென்மங்கடோறும் அறப்புகழ் போலப் பின்றொடர்வதாயினும் அறப்புகழுக்குப் பின்னாகவே வைத்தெண்ணப்படும்.
இம்முறைகளை 'அறஞ்செய விரும்பு.' 'ஆறுவது சினம்' 'இயல்வது கரவேல்' 'ஈவது விலக்கேல்'ஊக்கமது கை விடேல்' 'எண்ணெழுத் திகழேல்' ஆதியவற்றாலறிக,
கல்வியாலெய்தும் புகழ் அற்பபுகழினும் மேம்பட்டிருக்கு மாயின் 'எண்ணெழுத் திகழேல்' என முதலிற் கூறியிருக்கலா மன்றே 'அங்ஙனங்கூறாது அறத்தை முதற்கண் நிறுத்தியதால் அதன் பெருமை தெற்றென விளங்குமென்க. இதை
'ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதீய மில்லை யு பிர்க்கு'

என்ற குறளாலும் நன்கு அறியலாம். புருடார்த்த நான்கனுள் அறம் முதலில் நிறுத்தப்பட்டவாறு காண்க. ஏனைப்பொரு ளின்பம் போலாது வீயின்பத்தையும் தருதலின் அறமே அறப்பெரிய பொருளென்க.
'கடிப்பிடு கண்முரசந் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் சேட்டர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே
நல்லார் கொடுத்தா ரெனப்படுஞ் சொல்'
என்றதூஉங் கவனிக்கற்பாற்று. 
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமு
மறத்து வழிப்படூஉந் தோற்றம் போல, இதனையே

ஏனையவை வழிபடுவதாலும், இருமையின்பத்தினையும் பயப்பதா லும் இதனின் மிக்கதோரூதியப்பொருள் வேறில்லை. புறநானூற்றிற் பலவிடங்களிலும் இதன் பெருமையே பரக்கக் கூறப்பட்டுளது,

'தருமமே போற்றிடி னன்பு சார்ந்திடும்
அருளெனுங் குழவியு மனையு மாங்கவை
வருவழித் தவமெனு மாட்சியெய்து மேல்
தெருளுறு மவ்வுயிர் சிவனைச் சேருமால்'

என்பது கந்தபுராணம் இதனாற் றருமமே ஏனையகுணங்க ளமை தற்கேற்ற பண்பாம். ஆன்றோர் பலரும் கடவுளையும் இக்காமத் தாலன்றோ கூறுவாராயினார். உதாரணமாக, அன்பேயுருவமைந்த ஸ்ரீகாரைக்காலம்மையார் சிவபெருமானை வரம் வேண்டிய போது,
'இறவாத வின்பவன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டு மீண்டும் பிறப்புண்டே லுன்னையென்று
மறவாமை வேண்டு மின்றும் வேண்டுநான் மகிழ்ந்துபாடி
யறவா நீ யாடும்போ துன்னடியின் கீழிருக்க வென்றார்,

என்று வேண்டிச் சிவபெருமானை 'அறவா' எனவிளித்திருக்கின்றார். அறக்கடவுளையடைதற்கு அறமே காரணமாகும்.
அறம்பொருள் வழியைச் சார்ந்தாலும், பொருளிலாதான் எங்கனமறமியற்றக்கூடும் எனின் நன்றுகடாயினாய், பொய்கூறாமை, கள்ளாமை, கொல்லாமை, புலாலுண்ணாமை, அழுக்காறாமை, பிறர்பொருளபகரியாமை, பிறர்மனைநயவாமை, அடியார்ப் பிழையாமை யாதியனவும் அறமாக யாவர்க்கு மொத்தலின் இக் குணங்களுடையராய் வழுவாதொழுகுதலும் சாலச்சிறந்த வறமேயாம் எனக்கூறி விடுக்க. அடியார்களிடத்து அன்பு செலுத்துதல், இயன்றவாறு மனவன் புடன் பொருளீந்து உபசரித்தல், கேட்ட படை பரணவற்றையிதல், அன்னமளித்தல் முதலியன சீரியசிவபுண்ணியங்களாம். என்னை சிற்பரஞ்சோதிச் சிவபெருமான் தொண்டருள்ளத் தணுக்கமாய் நிற்பதாலும் அவர்மாட்டுச் சொலற்கரிய பேரன்புடையராயிருத்தலாலு மென்க. நாயன்மார் சரிதங்களை யுௗங்கனிந் தோதுதலும் பிறர் கேட்ப வுரைத்தலும் உத்தமசிவ புண்ணியமாகும். சிவபெருமான் கோயில் கைங்கர்யங்களுக்குப் பொ ருளீதலும், மடங்கள் சத்திரங்கள் குளங்கள் ஆதியவற்றைச் சீர்ப் படுத்தப் பணமுபகரித்தலும் பெரும்புண்ணியமாகும். நம் சைவ சித்தாந்தசபை தில்லையம்பலக் கூத்தனருளாற் றுவக்கப்பட்டு இந் றைவரை நன்கு நடைபெற்று வருவதை நண்பர் பலருமறிவர். இதுநாடோறும் விருத்தியாம் பொருட்டு அன்புடைய உத்தமசீலர் கள் தத்தமக்கியன்றவாறு பொருளீதலைச் சிவதருமமெனக்கொ ண்டு உதவி வருவார்களாயின் அவ்வறப்பெருஞ் செயலின்பயன் இனைத்தெனக் கூறவும் ஒண்ணுமோ.
‘உறக்குர் துணையதோ ராலம்வித் தீண்
டிறப்ப நிழற்பயர் தாங்கறப் பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்து விடும்'

ஆகலின் நண்பர்களே! தமிழாபிமானிகளே! கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை யெய்திய நீவிர் இத்தகைய பேரறச்செயலுக்கு முற்படுவீர் முற்படுவீர்.
அறங்கை வரப்பெற்றான் தெருண்மிகவுற்று ஈற்றில் சிற்சிவ பதமாம் பேரின்பநீழலி லமர்தல் திண்ணம் திண்ணம்.
சே. ரா. திம்மப்பையன்
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴

No comments:

Post a Comment