Monday, May 4, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
அவிரோதவுந்தியார் விசாரம்.

தோல்வியும் வெற்றியும் சொன் மதங்கட்கெலாம்
கால பேதத்தினுண்டுந் தீபற 
கருத்தன் செயலதென் றுந்தீபற.”

(இக்காலத்தில் இதனால் அது தோல்வியடைந்த தென்றும், அக்காலத்தில் அதனால் இது தோல்வி யடைந்ததென்றும் சமயங்களாறும் காலபேதங்களின் ஒன்றுக்கொன்று வெற்றி தோல்வி யடைதல் உண்டாதலின் அவற்றை நிறுவியவொருபரனது இச்சையால் தெய்வத்தன்மை கொண்டு எக்காலத்தில் எதை உயர்த்தி எதைத்தாழ்த்தல் வேண்டுமோ அதை அங்ஙனஞ் செய்குவது ஒழிந்து மற்றோர் காலத்தினுள்ளே ஓர்மதத்தை ஒருவராலும் வாக்குவாதத் தினாலே செயித்தல் கூடாது எனவும், ''இறைவிதன் முலைப்பால யின்ற சீகாழிக்கிறைவனு மிறைவனைப்பரிமே, னறைமலர்ப்பொழில் சூழ் மதுரை யம்பதியினடத்திய வொரு பெருந்தவனும், புறநிலைச் சமண மாதியைச் செயித்தார் பொருந்து தெய்விகத்தெனி லெவரே, மறைசொல்சட்சமயத் தொன்றுகொண்டொன்றை வாக்குவாதத்தில் வெல்பவரே''  என்னும் வாக்கியமே இதற்குப் பிரமாண மெனவுங் கூறாநிற்பர்.)

இதனை விசாரித்துழிக் கேவலம் அசங்கத முண்டாகுந் தன்மையேயன்றி யுண்மை யொன்றும் பயவாமையை யீண்டு பிரவசனிப்பாம். சமயங்களாறும் ஒன்றை யொன்று அழித்தல் யாண்டமையும்? யாவும் பரிபாகத்தளவாய்ச் சீவர்களுக்குப் பெருமான் விதித்த வாணையாகையால். பெளதிகான்மவாதி யொருவனுக்கு அச்சித்தாந்தத்தில் அபிருசியுண்டாகி அவன் அதை யவலம்பிக்கையில் அதிலவனுக்குள்ள பற்றுக்கோடு அவனுடைய பரிபாகத்தளவாய் முடிதல் திண்ணமாகையால், அவன் அதற்கு மேலிட்ட உத்தம சித்தாந்தத்தை யெவ்வளவு பிரத்தியட்சமாக மேலோர் விளக்கிய காலத்தும் அவன் ஏன் அங்கீகரிப்பான். அவன் உத்தம பரிபாகியல்லாமையால். அவனுடைய தாழ்ந்தபரிபாகம் அத்ததியில் அவனுடை கோளுக்கு, முன்னே யெத்திறத் துசிதமுடிபுகளும் அநுசிதமெனச்காட்டித் தன் வசத்தினிறுத்தும் வல்லபம் பூட்டியங்கு முண்மையால். அப்படியே, பரசிவசித்தாந்தி யொருவனுக்கு அச்சித்தாந்தத்தில் அபிருசியுண்டாகி அவன் அதை யவலம்பிகையில் அதில் அவனுக்குள்ள பற்றுக் கோடு அவனுடைய பரிபாகத் தளவாய் முடி தல திண்ணமாகையால் அவன் அதற்குக் கீழிட்ட அதமசித்தாந்தங்களை ஆபாசமெனக்கண்டு கழித்தவுண்மையால் அவற்றை அவன் ஏன் அங்கீகரிப்பான்? அவன் உத்தமபரிபாகியாகையால். அவனுடைய உத்தமபரிபாகம் அத்ததியில் அவனுடைய கோளுக்கு முன்னே யெல்லாமத வாபாசங்களையு மினிது விளக்கிக் காட்டுந்தன்மை யுண்மையால். இதனால் அதமா தம மான அதிகாரி யொருவனும், உத்தமோத்தமமான அதிகாரி யொரு வனுமாக இருவர் ஏற்பட்டனர். இருவர்க்குங் கன்மவேறுபாடுகள் வெளியான வுண்மையால். இவர்க்கிடையே அநந்தவிதமான அதம பாசிகளும், உத்தமராசிகளுமாகிய பரிபாகிகள் பலருளராக வெளிப்படுகின்றனர். இன்ன பரிபாகங்களொருவனுக்கே யென்பது முண்மை. நேற்றுத்தேகான்மவாதியா யிருந்தவன் இன்று ஏகான்மவாதியாகக் காணுமநுபவவுண்மையால். கேவலம் அதமா தமனாகவும், அதமராசிகளில் சேருபவனாகவும், உத்தமபாசிகளில் சேருபவனாகவும், கேவலம் உத்தமோத்தமனாகவும், பல்வேறு தானவேறுபாடுகளை அடைகின்றவன் தேவதத்த னொருவனேயன்றி யெண்ணில் கோடியுயிர்களுள வென்னு முண்மையால் அன்னோர் பரிபாகத்தளவாய் அவர்களுக் குபகாரமாகவே யெல்லா வதமங்களும், எல்லா வுத்தமங்களும் எக்காலத் திலு நிலைபெற்றிருத்தல் அத்தியாவசியமாதல் பெறப்படுகின்றது. இந்தவிசாரத்தால் ஓர்காலத்தினும் ஓர்மதத்தால் மற்றொருமதம் அழிந்ததென்பது சர்வாபத்த மெனவறிக. எல்லாமதங்களும் நசித்துச் சைவமொன்றே யோர்காலத்தில் நிலைபெற்றிருந்தது எனின், அக்காலத்தில் உலக மடங்கலும் சிவனை வழிபடும் புண்ணிய மேலிட்டவர் களாகவே கொள்ளவரும். ஆகவே, கீழிட்ட பரிபாகத்தையுடைய வுயிர்களுக்கு அபாவஞ்சொல்லவரும். கீழிட்ட அதிகாரிகளுண்டாகப் பெறாமையுண்மையேல், இப்போது நானாவிதமான கீழிட்டபரிபாகிக ளுளராதலிழுக்காம். இப்படியே பாஞ்சராத்திரமுதலியன மற்றை மதங்களை யழித்துத் தனித்தனி யொவ்வோர் காலங்களில் நிலைபெற் றிருந்தன வெனின், அழிந்து முதலற்றுப்போன வம்மதங்கள் மீண்டும் எப்படி முளைத்துத் தழைக்கக்கூடும்? இதனால் எந்த மதமும் ஒன்றாலொன்றழிந்த தென்பது சர்வாபத்தமாம். ஒருமதத்தான் மற் றொருமதம் கெடாமல் யாவும் நிலைப்பதனால் எல்லாம் சமமரியாதை யுடையனவு மன்றாம். இந்த விசாரத்தால் சமயங்களொற்றையொன்று வென்றனவென்றும். ஒன்றுக்கொன்று தோற்றன வென்றுங் கூறுதல் கூடாமைகாண்க. விவகாரமெல்லாம் பரிபாகத்தளவில் நிற்பது வெளிப்பட்டமையால். பரிபாகம் ஏறியதும், குறைந்ததுமே சமயங்க ளுயர்ந்ததும் தாழ்ந்ததுமாகக் காணப்பட்டனவனறி யோர் காலத்தும் சமயங்க ளுயாவுமாட்டா, அல்லது தாழவுமாட்ட வெனவறிக. எனவே, உயர்ந்த சமயம் உயர்ந்ததேயெனவும், தாழ்ந்தசமயம் தாழ்ந்ததே யெனவும், உயர்ந்த சமயம் தாழமாட்டாதெனவும் தாழ்ந்தசமயம் உயரமாட்டாதெனவும், உயர்ந்தது போலும், தாழ்ந்தது போலுங் காண் பதெல்லாம் கேவலம் பிரமைமாத்திரமாக வெளிப்பட்டவாறறிக. ஒருவனுக்குக் கண்ணிலுண்டாகிய தோஷத்தால் நல்லது கெட்டதாக வும், கெட்டது நல்லதாகவும் புலப்படுமாற்றால் அவற்றை அப்படியே தனித்தனிக் கெட்டதென்றாவது, நல்லதென்றாவது கண்ணுடையார் பலரும் சொல்லயாண்டிசையும்? கண்கெடாதவர்க்கு நல்லது நல்லதா கவும், கெட்டது கெட்டதாகவும் புலப்படுதல். கூடுமேயெனின், சுண் கெட்டார் பலரும் தமக்குள்ள கேட்டைப் பிறர்மேலேற்றித் தமக் குள்ளவ நுபவமே யுசிதமெனவும், பிறரநுபவம் அநுசிதமெனவும் கூறத்துணிவதால் அவரவர நுபவம் அந்தந்தமட்டிலேதானே விவக ரிக்கற்பாலன வென்றறிக. இந்த நுட்பங்களை யறியாது ஒன்றை யொன்று வென்றது என்று கூறுவது தவறாய் முடிந்தது.

இனிச் சமயங்கள் யாவும் சமமேயென்று, அவற்றுள், பரனது இச்சையால் காலத்துக்கேற்ப எதையுயர்த்தி எதைத்தாழ்த்தக்கூடு மோ அது அவரால் செய்யக்கூடுமென்றுஞ் சொல்லு மாபாசத்தை விசாரிப்பாம். சமமாயுள்ள சமயங்க ளோர்காலத்தில் எப்படி யொன் றுக்கொன்று தாழக்கூடும் :? சுரர், நார், விலங்கு முதலியவற்றுள், சுரர் எப்போதும் சுரரே ! நரர் எப்போதும் நரரே ! விலங்கு எப்போதும் விலங்கே? இவற்றுக்குண்டாகிய வுயர்வு தாழ்வுகள் ஒன்றுக்குறிய தொன்றை யெய்தாவாம். சுரர் நரரில் தாழவாவது, விலங்கு நாரில் உயரவாவது அமைதல்யாண்டிசையும்? பரனது இச்சை யெனின் காரணமின்றியமையாது'காலத்தா லெனின், கன்மத்தை யன்றிய மையாது. ஆகவே, கன்மங்காரணமாய் உயர்தலும், தாழ்தலுமாந் தன்மை வெளிப்பட்டது. அஃதுந் தோற்றன் மாத்திரமாய் முடிகலுண்மையாம். கன்மத்தைவிட்டுக் கடவுள் ஒன்றுஞ்செய்யாராகையால் அவரிச்சையைக் காரணமாக்குதல் பிழையாம் அங்ஙனராயின், அது பித்தர் செய்கையாய் முடிதலின். அது அப்படியேதானென வற்புறுத்திக்கூறின், பானது இச்சையால் பரனே நாளைக்கு அபரனாதலுங்கூடும். அபானான பிறகு மீண்டும் பரனாதல் தன தபரத்வத்தால் செல்லாமையின், தான் முதல்வனாந்தன்மையும், அமலனாந்தன்மை யுங்கெடும். அன்றியும், பரனது இச்சையால் சைவம் ஓர்காலத்தில் தாழ்ந்ததெனின், அதிற்பெறப்பட்டபானாகிய சிவன் அபகர்ஷனாதல் அங்கீகாரமாய் முடியும். இப்படியுமமையுமா? இது என்ன குழகுழப்பு ஞானம்? இந்த விசாரத்தால் பரன திச்சையால் சைவத்தைத் தாழ்த்துவாரென்பது, வைணவத்தை யுயர்த்துவாரென்பதும், அல்லது வைணவத்தைத் தாழ்த்துவாரென்பதும், மற்றை மதங்களையுயர்த்து வாரென்பதும் கேவலம் அசங்கதமாய் முடிதல்காண்க.

இனிச் சாயாசாரிகள் புறச்சமயங்களாகிய சமணாதிகளையே தெய்விகத்தாலழித்தாரெனின், மற்றைச்சமயங்களை வாக்குவாதத் தால் யாவர் வெல்லுதல் கூடுமென்றெழுந்த கேள்வியுந் தவறுடைத் தாம். எல்லாச் சமயங்களும் ஒப்பமுடிந்த நிலையுடையவாகக் கொள்ளுங்கால் சமணாதிகளைப் புறச்சமயமென்றது பொருந்தாது. சைவம் சமயாதீதமெனக் கொண்டவர் மாத்திரமே அகச்சமயம், புறச்சமயம் என்று விவகரிக்கவிட முண்டாமன்றி எல்லாம் சமஞானமாகக் கொள்பவர்க்கு எது புறச்சமயம்? எது அகச்சமயம்?

இன்னும் ஞானசம்பந்தாதிகள் தெய்விகத்தால் வென்றாரென்று அத்தெய்விகத்தை அவர்க்குவேறா யிருப்பதொரு சித்தியாகக்கூறிய துந்தவறாம். அன்னோர்தெய்வங்களாத லுண்மையாகையால். எனவே சிவுவிபூதியென்பது வெளிப்படை. ஆகவே, ஸ்வசக்தியால் அவர் முடித்தாரென்பது ஒப்பமுடிந்தது. இவ்வவதார மூர்த்திகள் புறச்சமயங்களை யழித்தாரென்னு நுட்பத்தையாம் மேலே விளக்கியிருக்கின் றோமாகையால் மதங்களின் தோல்வி வெற்றிகளுடைய தன்மையித் திறத்தனவென்றூகிப் பாராக.

இன்னும் மறைசொல் சட்சமயம் என்றதும் பிழையாம். வேதம் ஒன்றையொன்று விரோதிக்குஞ் சமயங்களைச் சமமரியாதை யுடையனவாகக் கொண்டுணர்த்துவதின்றாகையால், ஒவ்வொரு மதத்தையும் உடன்பாடு போலக்கூறினும், பின்னர் மேலிட்ட சித்தாந்தங்களை நிரூபிக்குமவசரத்தில் முன்னவை பூர்வபட்சமாகும் பொருட்டு நிஷே தத்துக் கூறுந்தன்மையுண்மையால்,

ஆயின், உமாதேவியார் வளர்க்கும் முப்பத்திரண்டு அறத்தில் (அறுசமயத்தோர்க்குண்டி) என்பது மொன்றாத லிழுக்காமெனின், அது சைவம், பாசுபதம, மஹாவிரதம், காளாமுகம், வாமம், பைரவம் என்னுஞ் சித்தாந்தாசரண சௌபான மார்க்க மென்கையாலமை வுடைத்தாதலறிக. இஃதறியாதார், சைவம், வைணவம், சாக்தே யம், காணாபத்யம், சௌரவம், காபாலிகம் என்று ஷண்மதநிரூபனஞ் செய்யாநிற்பர். இவையொன்றிலொன்று பிராம்ஹணனுக்கும், பஞ்சமனுக்குமுள்ள தாரதம்யகிரஸ் தமாய்ப்புலப்படலால், இப்படிப்பட்ட வவலசித்தாந்தங்களை வேதம் ஒப்பமுடிந்ததாய்க் கொண்டுணர்த்தா தெனவறிக. மேற்போந்தசைவம், பாசுபத முதலியன சிவைகநிஷ்ட மாகுந் தன்மையுண்மையால், அறம் வளர்த்த அம்மையாரபிமத்துக் கேற்ப, வேதபாஷ்யமாய் விளங்குஞ் சிவாகமத்திற் பிரதி பரதிக்கும் பெரு நலங்கண்டு அறுவகைச்சமயம் என்று வேதாவிருத்தமாய், உடன பாடாக நம்மவர் கூறி வருமரபுரிமையுங் கண்டுதெளிக. இப்படி விசாரித்தறியாது ஷண்மதம், ஷண்மதம் என்று கத்திக்கொண்டு, அச்சண்மதங்களையுஞ் சங்கராசாரியர் தாபித்தாரென்று புலம்பா நின்று குழறிவழியுங்குமதிகள் போ தமுங் குணப்பாட்டின்மையா யொழிந்தது. சமயங்கள் அகச்சமயம் (சு) புறச்சமயம் (சு) அகப்புறச்சமயம் (சு) புறப்புறச்சமயம் (கா) என இருபத்து நான் குபேதத்தை யடைந்திருந்தாலும், இவவிருப்பத்து நாலுக்கும், அதீதப்பட்ட சித்தாந்தமென்று அதிக்கிரமித்துப் பிரகாசித்தலாலும் யாவும் ஒரே மரியாதையுடையனவாகக் கொண்டுரைப்பது குழறு பாடாகவே முடிந்தமைகாண்க. சங்கராசாரியர் புறச்சமயம் ஆறனுளொன்றுகிய ஏகான்மவாதத்துக்கு மாத்திரமே ஆசிரியராவர். மற்றைப்புறச் சமயங்களுக்கும் அவருக்கும் யாதொரு சம்பந்தமுங் கிடையாதென வறிக. புறச்சமயங்கள் தாமே அவருடைய தாபனத்தை யங்கீகரியா தனவாக, அவற்றின் மேலாய அகப்புறச்சமயம், அகச்சமயம், அதீத சமயம் என்பவற்றிற்கு அவர் தாபனக்கர்த்தாவாகல் யாண்டிசையும்? இது கோஹத்திசெய்பவன் பிராம்ஹண குருக்களாதல் போல்வ தொன்றாம். இதனால், மறை சொல் சட்சமயம் என்று ஹேயமார்க்கங்களை மதித்துரைத்தது தவறாய் முடிந்தது. அவை வேதநிஷ்டமாகிய உட்சமயம் ஆறெனக்கொள்ளின், ஒன்றையொன்று மறுப்பதவசியமன்றாம். வேதவிருத்தமாகிய புறச்சமயம் ஆறெனக்கொள்ளின், தன் றிலொன்று முரணுந்தன்மை யுண்மையால் அநாதரணியமாதல் சித்தம். ஆகவே, ''எவரே யென்று கொண்டொன்றை வாக்குவாதத்தில் வெல்பவர்" என்றதும் பிழைபட்டழிந்தமைகாண்க. இன்னும் விரிக் கிற்பெருகும்.

வாதிகடங்களுக் கல்லான் மதங்களுக்
கோதார் வலியின்மை யுந்தீபற
ஓதியுணர்ந் தோரென் றுந்தீபற.

இனி, ''முன்னைநாள் அச்சமயி இச்சமயியை வாதில் வென்று மனோரதம் அடைந்தானாயின், பின்னை நாள் இச்சமயத்திலே பின்னும் ஒருவன் அவனை மனோதுக்கம் அடையும்படி வாதித்து வெல்லுதலின, அவனவன் கற்றகல்விவலியினாலும், யுத்தி புத்தி வலியினாலும் வெற்றி தோல்வியடைந்தாராகலின், வாததுர்ப்பலமொழிந்து மததுர்ப்பலம் இல்லையென்று கூறுவர் எல்லாக்கலைகளுமுணர்ந்த பெரியோர்'' என்றுங் கூறுவர்.

இது கேவலம் அசங்கத மென்பதை நிரூபிப்பாம். வாதிகளுடைய துர்ப்பலத்தாலன்றி மதத்தினுடைய துாப்பலத்தால் ஓர் மதமும் ஒர்காலத்தினுந் தாழாதாயின் எல்லா மதங்களும் தாரதம்ய மில்லாத வுயர்நலமுடையனவாம். அப்படிக் கொள்வதில் யாது குற்றமெனின், உலகாயதம், வாமம் இத்தியாதி மதங்களில் அவலம் பிக்கப் படுமாசாரங்களும், அன்னவற்றுள் பிரதி பாதிக்கப்படும் வஸ்து நிச்சயங்களுமே கொள்ளற்பாலனவாக, அவ்வம்மதப் பிர வர்த்தகருள் யுத்தி புத்திகளிற் சிறந்தவர் வெளிப்படுங்கால் சைவ முதலிய புண்ணிய நெறிகளைக்கடிந்து ஏன் தாபிக்கவெழமாட்டார்கள்? அப்படி யெழுங்கால், சைவர் முதலாயினாருள் அற்பபரிஞான முடையவரால் அப்பீடை மதங்களை தொலைக்க வலியற்றபோது கொலைகளவு கர்மாதிகளையே யாசாரமெனக் காட்டித் தலை நீட்டு மவ்வாபாசநெறிகளும், வாய்மை, தவம், இரக்கமுதலிய வாசாரங்களையுடைய சைவமுதலியனவும், ஏன் சமநிலையுடையனவாகா? இப்படியும் அநியாயமுண்டா? யாம் கூறியது வேதத்திற்போந்த மார்க்கங்களே யன்றிப்புறச்சமயங்களன் றெனின், வைதிகமராக்கத்தர்க்கே யுத்திபுத்திகளுண்டென்றும், லௌகிகர்க்கு யுத்திபுத்திகளுண்டாவதில்லை யென்றும் ஏற்பட்டாலல்லது வைதிகம், அவைதிகம் என்று பிரித்துரைப்பது பிழையாம். கேவலம் யுத்திபுத்திகளையே தழுவிப் பிரமாணங்களைக்கைவிட்டு இச்சைபோன வழியெல்லாம் விவகரிப்பவர் லௌகிகரே யாதலால் அன்னலௌகிக துல்யரே புறச்சமயிகளுமாவர். ஆகையால் யாம் கூறியது வேதவழி நிற்பாரையே யென்று மலைந்துரைப்பதுந்தவறாம், வேதவழி நிற்பார் ஒருவரையொருவர் விரோதி யாராகையாலும் அது செல்லாமைகாண்க.

பொய்ய னொருவனும், மெய்ய னொருவனுஞ் சண்டையிட்டுக் கொண்டு அதிகசரியிடஞ் சென்று தத்தமக்குள்ள விவகாரங்களைச் சொல்லிக் கொள்ளுகையில் பொய்யன் அதிகமாய்ப் பேசும் வல்லமையால் மெய்யனை வென்றானாயினும், அல்லது இருவருஞ் சமமாய்ப் பேசுந்திறமையுடைமையால் ஒருவரை யொருவர் வெல்லக்கூடாமல் சமநிலையினிற்பாராயினும், அன்ன ஹேதுக்களையே மதித்து மெய்யன் பொய்யனில் தாழ்ந்தவனென்றாவது, அல்லது சமானமானவனென்றாவது கூறுதல் யாண்டிசையும்?'' மெய்யுடையொருவன் சொன்மாட்டாமையால், பொய்போலும்மே பொய்போலும்மே'' எனவும்,'' பொய்யுடையயொருவன் சொல்வன்மையினால், மெய்போலும்மே மெய்போலும்மே" எனவும் வரும்வாக்கியங்களைச் சிந்தித்துழி மேலாபாசம் பரிகாரத்தைப் பெறுமென்க, மேல்யாம் விளக்கிய விவகாரத்தை வற்புறுத்திக்காட்டு மிவ்வாக்கியம் பொய்யு மெய்யுஞ் சமமரியாதையுடையனவென்று நாட்டுங்கால் மததுர்ப்பல மாகாதென்னும் மதுரவாசகம் மணக்கும்! மணக்கும்!!

சகலமுந் தேரினுந் தத்த மதநெஞ்
சகலா துரத்தலி னுந் தீபற
அபல மியர் தென்ப துந் தீபற.

இனி (எச்சமயத்தின்கனின்றுள்ளயாவரும், வேதாகமமாகிய நூல்களும், மற்றைச்சமய நூல்களும் கசடறக் கற்றுணர்ந்தோரேயாயினும் இதுவே ஞான சமயமென்று ஒரு சமயத்தையே அடையாது தத்தஞ்சமயமே ஞான சமயமென்று தாபித்தற்கு ஏது திட்டாந்தங்கள் மிகவும் மனத்தின்கண் வலிதலின், வலியின்மைச் சமயம் யாது) என்று கூறுவர். இதைப்பரியாலோசிக்கில் ஒவ்வொருமதமும் ஞான மார்க்கமென்று நாட்டுதற்குப் போதுமான ஏது திட்டாந்தங்கள் புல ப்படுமென்னுங்கால் எல்லா மார்க்கங்களும் ஞானமார்க்கங்களாம். அத னால், உலகாயதத்தைப்பற்றிப் பெண்ணின்பமே முத்தியென்று கூறு வார்ஞானமும், சைவமார்க்கத்தைப்பற்றிச் சிவன்றிருவடியின்பமே முத்தியென்று கூறுவர் ஞான முமொன்றாய் முடிந்தது. இரண்டு சமயிகளுந் தத்தம்ஞானமே யுண்மை ஞானமென்று நாட்டுதற்குப் போதுமான ஏதுதிட்டாந்தங்கொண்டு வெளிப்படுகையால், இங்கன மாக, (சகல சமயத்தினுண்மையும் உள்ளபடி அறிந்து அவற்றின் முடிவுகண்ட ஞானிகள் எச்சமயாபிமானமும் பற்றிநிற்பதேயில்லை நீங்கிவிடுவார். அங்ஙன நீங்கியது கொண்டு அவரடையும் தாழ்வுயாது) என்று கூறுவது என்னமதி? எல்லாச்சமயஞானமும் சமஞானமும், அவாதிதமுமாகையால் அவற்றின் முடிவுகண்ட ஞானிகள் அவற்றி லபிமானம் விடுப்பது யாதுக்கு? அவற்றிலபிமான மொழிப்பாரென் கையில் ஞானிகளாலொழிக்கத்தக்க தோஷாரோபணமுடைய மார்க் கங்களவை யென்றன்றோ கொள்ளவரும்? அவற்றை யெல்லாம் விட்டு வேறெதையோ ஞானிகள் பற்றி நிற்பது? முன்னே எல்லாச்சமயத் திலுஞானமுண்டென்று கூறிப் பின்னர், அவற்றை ஞானிகள் பற்ற மாட்டாரென்பது விந்தை! விந்தை!!

இது வேதாகமத்திலில்லாவிநோத விசித்திரமென மெய்ஞ்ஞானிகள் கண்டுபரிகசிப்ப ரென்க. ஆகவே, எல்லாச் சமயஞானமும் போலிஞானங்களெனவும், அதுவே பாச பசு ஞானங்களைக் கடந்த பதிஞானமென்று சத்துக்கணிரூபித்துள்ளாராகையால், மோக்ஷத்தைப்பயக்கு ஞானமெனவும் நாட்டப்பட்டது. இதனையே திருவடி ஞானமென்றும், திருவருண்ஞானமென்றும், உண்மை நூலனைத்துங்கூறும்.

வைதிகசைவசித்தாந்த சண்டமாருதம்.

சித்தாந்தம் – 1915 ௵ - நவம்பர் / டிசம்பர் ௴
             

No comments:

Post a Comment