Saturday, May 9, 2020



சரபோபநிஷத்

1.     ஓம். பின்னும் பைப்பலாதர்  * பிரமனை நோக்கி ஓ பகவானே பிரமன் விஷ்ணு உருத்திரர் என்பவர்களுள் யாவரே அதிகமாகத் தியானிக்கப் படுபவர். உண்மையினையே அன்புடன் விளங்கச் செய்வீர் என்று கேட்டனர்.

[* பைப்பலாதர் என்பவர் வேதங்களிலே பிரதிபாதிக்கப்பெற்ற வொருமுனிவர். அதர்வண வேதங்கண்டுபிடித்த அதர்வண விருடியின் குமாரர். தத்தியங் என்னு மிருடி, அது, "தமுவாதத்தியங்ருஷி: புத்ர ஈதே அதர்வண: தத்தியங்தாதர்வண:' என்ற வேதவசனத்தாற் காண்க. அந்தத்தத்தியங்ரிஷி புத்திரர் ததீசி முனி. இவர் புத்திரர் பைப்பலாதர் எனப்பிரம புராணத்திலே கூறப்பட்டுள்ளது.

2.     அதற்குப் பிதாமகன், பைப்பலாதரே! இந்த வசனத்தைக் கேட்பீராக வென்றனர்.

3.     பரமேஸ்வரர் மிக்க புண்ணியஞ் செய்தவர்களா லடையத் தக்கவர். நானும் விஷ்ணுவும் இந்திரனும் மற்றையரும் அவருடலினின்று முற்பத்தியானவர்கள்.

4.     அப்பிரபுவைத் தேவர்களும் மற்றையரும் தங்கள் அஞ்ஞானத்தால் தனக்கு மேலொருவரில்லாத பரமேஸ்வரனெனவும். தந்தை யெனவு மறியார்கள்.

5.     அவர் முதலில் பிரமனைப்படைத்து அவனுக்கெல்லா வேதங்களையும் அருளிச்செய்தனர். அவரைத்துதிப்போமாக. அவரே தெய்வீக் பிரபு. தேவர்கட்குப் பிதா. என்னையும் விஷ்ணுவையும் படைத்தவர்.

6.     அவர் பிரதானமானவர். சர்வசங்கார காலத்தில் எல்லாவுலகங்களையுமழிப்பவர். அவரே யெல்லாவற்றையுமாளு மதிபதியாவர்.

7.     அவர் பரமபதி. சரபபட்சியின் பயங்கரமான திருவுருக் கொண்டு, உலகநாசத்திற் கேதுவாகிய நரசிம்மத்தைத் தமது பராக்கிரமத்தா லடிக்க விருந்தனர். தேவதேவர்கள் நரசிம்மமூர்த்தியினுயிரைத் தமதுபாதங்களால் வாங்கவந்த இறைவனைத் தொடர்ந்து தொழுது மகத்தானவரே! புருஷனாகிய விஷ்ணுவினுயிரை இந்த நடுராத்திரியில் அடித்துப் போக்கா தீரென வேண்டிக்கொண்டனர்.

8.     கிருபையினால் சர்மாம்பரதரராகிய விறைவன் தன்னுடைய கூரிய நகங்களால் நரசிம்மத்தைக் கிழித்து வீரபத்திர மூர்த்தியாக விளங்கினர்.

9.     எல்லாஞ் செய்வல்லமை யடைதற்கு உருத்திர மூர்த்தியைத் தியானிக்க வேண்டும்.

10.    பிரமனது ஐந்தாவது முகத்தைச் சேதித்த அவ்வுருத்திரமூர்த்திக்கு நமஸ்காரம்.

11.    தமது நெற்றிவிழி யக்கினிப் பொறியால் சர்வலோகங்களையும் சாம்பலாக்கி மறுபடியும் படைத்துக் காப்பவராகலின் அவர் சுதந்தரம் வெளியாகும். அந்த உருத்திரமூர்த்திக்கு நமஸ்காரம்.

12.    இடப்பாதத்தாற் காலனை யுதைத்தவரும், கொடியவிஷத்தைப் பானம் பண்ணினவருமான அவ்வுருத்திரருக்கு நமஸ்காரம்.

13.    அவரது இடதுபாதத்தில் கண்ணா லர்ச்சிக்கப் பெற்ற விஷ்ணுவிற்குச் சக்ரமளித்த அவ்வுருத்திரர்க்கு நமஸ்காரம்.

14.    தக்ஷபிரஜாபதியின் யாகத்தில் அனேகமான தேவர்களை வென்றபிறகு விஷ்ணு மூர்த்தியைப் பெரிய கயிற்றினால் கட்டிய, பரமபதியாகிய அந்த உருத்திரர்க்கு நமஸ்காரம்.

15.    திருவிளையாட்டாகவே காமனையும் காலனையும் திரிபுரத்தையு மழித்தவர். சந்திரசூரியாக்சினி யென்னூர் திரிநேந்திரம் முடையவர். தேவர்கள் எல்லாரு பவருக்கு அடிமைகள். இக்காரணத்தால் சுயமாக அவர் பசுபதிகாமம் பூண்டனர். அந்த உருத்திரர்க்கு நமஸ்காரம்.

16.    இந்தப்பிரகாரம் அனேகவிதமாகத் தோத்திரஞ்செய்து நீலகண்டராகிய மகேஸ்வரனைத் தணித்தார்கள்.

17.    விஷ்ணு மூர்த்தியின் அவதாரங்களாய்ப் பயங்கரத்தையும், இடுக்கண்களையும் விளைவித்த மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், திரிவிக்ரம வாமனம் இவற்றை யழித்தவரும், மன்மதனைப் பஸ்மமாக்கியவருமான அந்த உருத்திரர்க்கு நமஸ்காரம். இந்த விதமாக அனேக தோத்திரங்களால் மகேஸ்வரமான நீலகண்டரைத் தேவர்கள் நமஸ்காரஞ் செய்தார்கள்.

18.    மலத்திரயங்களால் விளையும் ஜனன மிருத்தியு ரைமுதலிய நாநாவித துக்கங்கள் யாவையும் பரமேஸ்வரன் துடைத்தருள்வர். வ்விதமாகப் புகழப்பட்டவர் பூதான்மாக்க ளெல்லாவற்றிற்கும் ஆன்மாவாய் விளங்குபவர். சங்கரர் பகவானாகிய முதல்வர். யாவற்றையுங் காக்கின்றவர். மனோவாக்கினுக் கெட்டாதவர். இன்னும் விஷ்ணு மூர்த்தியால் தமது திருவடிகளைக் காணத் தேடப்பட்டவருமான பரமனை வாழ்த்துவோமாக. மிகுந்த பத்தி பாராட்டிய விஷ்ணுவினுக்கு அருள்புரிந்தவர்.  

19.    எந்த பிரமத்தினிடத்து மனவாக்குச்சென்று அவனையறியாது. திரும்பி விடுமோ அந்தப் பிரமத்தின் திருவருளைப் பெற்றவர்கள் எந்தக்காலத்தும் எதற்கும் பயப்படவேண்டியதில்லை.

20.    அந்தப் பரமேஸ்வரன் அணுவிற் கணுவாயும், மகத்திற்கு மகத்தாயுமுள்ளவர். அவரான்மாவின் குகையிலிருப்பவர். ஞானிகள் அந்தப் பிரமத்தை போக்குகிறார்கள். அவர் வேண்டுதலிலாதவர்., துக்கமிலாதவர்.

21.    வசிஷ்டர், வியாசபுத்திரர், வாமதேவர், விரிஞ்சன். முதலியோரால் தங்கள் இருதயங்களிலே தியானிக்கப் படுபவர். சனத் சுஜாதியர், சனாதனர் முதலானவரால் சிந்திக்கப்படும் மகேஸ்வரனாகிய பகவான். ஆதிதேவர், சத்தியர், நித்தியர், சர்வசாட்சியாயுள்ளவா, மகேசர், நித்தியானந்தர், நாமரூபமில்லா தவர், வரம்பிலாற்றலுடையவர், பகவான், நிரீசன், தமது அவித்தையால் பிரபஞ்சோற்பத்தி செய்பவர்.

22..    அவிர்ப்பாகங்களை யர்ப்பணமாகக் கொள்ளும் தேவர்களே! எனது மாயையும் விஷ்ணுவின் மாயையும் கலங்கச் செய்கிறது. ஈஸ்வரனது திருவடியை நினைத்தால் கடத்தற்கரிய மாயையை யெளிதிற் கடக்கலாம்.

23.    சமஸ்த லோகங்களுக்கும் * உற்பத்திஸ்தானமாய் விள ங்கும் விஷ்ணுவின் மூர்த்தங்களாலும், எனது மூர்த்தங்களாலும் எல்லா வுலகங்களையும் காக்கின்றார். காலாந்தரத்தில் அவைகள் மறைந்துவிடும். மற்றவை பொய். ஆகையினால் ஈஸ்வரன் தவிர வே றாயாவும் நிலையில்லாதன.

[* சமஸ்தலோகங்களாவன விஷ்ணுவின் வியாபகத்துள் பிரதிஷ்டாகலையில் பிரகிருதிக்குக் கீழ்ப்பட்ட உலகங்கள். அது, ''வாசுதேவா: பரா: ப்ரகிருதி,'' "ப்ரகிருதி: பரமோ விஷ்ணு:" "வாமதேவ சக்ராத்மா வாரிததைவக நாயகா:'' எனுஞ் சுருதி வசனங்களாலளறிக.]

24.    உலகங்களை விழுங்குபவர் மகாதேவர், சூலி, மகேஸ் வரர் மிருடர். அந்த உருத்திரர்க்கு நமஸ்காரம்.

[† விழுங்கு தலாவது ஒடுக்கு தலாம்.]

25.    விஷ்ணு ஒரு பெரியபூதம், மற்றையபூதங்கள் வெகுவிதமாக விருக்கின்றன. மூவுலகங்களையும் வியாபித்துக் கொண்டு அப்பூதங்களையெல்லாம் உண்டு விடுகிறார்.

26.    சர்வவியாபகராகிய இறைவன் எனக்கருள் புரிவாராக. அவர் நான்காலும், மறுபடியும் நான்காலும், இரண்டாலும் ஐந்தாலும், [*4] மறுபடியும் இரண்டாலும் எந்த விஷ்ணுவால் ஓமம் செயப்படுகின்றாரோ அவ்வியாபகர் என்பொருட்டுத் தயை செய்வாராக.

[ நான்கென்பது ஓம் சிவய, இரண்டென்பது சிவ, ஐந்தென்பது சிவயநம.]

27.    யாகபாத்திரமும் பிரமமே, ஓமத்திரவியமும் பிரமமே, அக்கினியும் பிரமமே, ஓமகர்த்தாவும் பிரமமே, பிரமகர்ம சமாதியாலடையத்தகுந்த பலனும் பிரமமே. §

§ செய்வோனையின்றிச் செய்வினையும் செயப்படுபொருளும் நிகழர் தாகலினாலும்; உடலுமுயிரும்போலவும், பாலுநீரும்போலவும், பரிதியு மதியும் போலவும் இறைவன் உலகில் வேற்றுமையின்றி நிற்றலாலும்; அயக்காந்த சந்நிதியில் அயத்துக்குச் சேட்டையுண்டாவது போல முதல்வன் சந்நிதி மாத்திரத்தால் பிரபஞ்ச நிகழுமாகலினாலும் எல்லாம் பிரமமே யென்றனர். வேதத்துள் உருத்திரன், விச்சுவா திகன், விச்சுவகா ரணன், விச்சுவத்திற் கந்தரியாமி, விச்சுவரூபியென்று கூறும் சுருதிகளே சான்றாம்.
    இவ்வுபநிடத சுலோகம் பகவத்கீதையில், 4 - வது அத்தியாயத்தில் 24 - வது சுலோகமாக ஆளப்பட்டிருக்கிறது.

28.    மகாமுனிவரே! சார - ஈஸ்வரன் திருமேனியில் விஷ்ணுவாதி சீவர்கள் எப்பொழுதும், பாதி - விளங்குகிறார்கள். ஆகையினாற்றான் எல்லாவற்றையு முண்டருளும் இறைவனுக்கு முத்தியை நேரேயளிப்பவனென்பதாகிய சரபம் என்னும் பெயர் வழங்குகிறது.

29.    அவருடைய மாபையினால் தேவதேவர்கள் மோகத்தால் கலக்குண்டு கிடக்கின்றார்கள்.

30.    அவரது மகிமையை அணுவில்ணு வேனும்கூற வொருவராலுமுடியாது.

31.    அதீதப்பட்டவர் பிரமன், அவருக் கதீதப்பட்டவர் விஷ்ணு, அவருக்கதீதப்பட்டவர் ஈசர். அவ்வீசனுக்கு மேற்பட்டவராவது சமத்துவமானவராவது ஒருவருமில்லை.

32.    ஒரே சிவந்தானுண்டு. அது நித்தியமானது. சிவந்தவிர ஏனையர் யாரும் தியானிப்பவர். ஆகையினால் விஷ்ணு முதலியயாரையும் நீக்கிச் சிவபிரானொருவரையே தியானித்தல் வேண்டும். சம்சாரபந்தத்தை யவரே யொழிப்பவர்.

33.    உலகமுண்டவராகிய மகேஸ்வரரைப் போற்றுவோமாக.

34.    பைப்பலாதரே! இப்பெரிய சாஸ்திரத்தை இஷ்டப்படி நாஸ்திகர், நன்றியிலார், தீயவெண்ணமுடையார், டம்பர், பொய்கற்பிப்பவர் ஆகிய இன்னோர்க்குக் கொடுத்தலாகாது. சுகிர்தன், பத்திமான், நல்விரதத்தன், நற்சுபாவமுடையவன், குருபத்தி வாய்ந்தோன், சாந்தியுடையோன், புத்திமான் இத்தகையோர் மூலமாக இவ்வுபநிடதத்தைப் பரம்பரையாக வுபயோகப்படுத்தலாம். சத்தியந்தவறாத மாணவர்கட்குப் போதிக்கலாம். ஏனையோர்க் காகாது. பிராம்மணங்களுள் மிகச்சிறந்ததாகிய இவ்வு பநிடதம் இரகசியமாகப் போற்றத்தகுந்தது.

35.    பைப்பலாத சாஸ்திரத்தைப் படிப்போரும், கேட்போரூமாகிய விருபிறப்பாளர். ஜனன மரணத்தினின்றும் விடுபடுவர். அச்சாஸ்திரத்தைச் சொல்லுவோர் இறவா நிலை பெறுவர். மதுபானம் பண்ணும் பாபத்தினின்றும் புனிதமாவர். பொற்களவு, பிரமகத்தி, குருபத்தினிபையிச்சித்தல் ஆகிய பாவங்களினின்றும் விடுபடுபவர், சர்வ வேத பாராயண பலனையும், எல்லா தேவாகளையும் தியானித்தலாகிய பயனையுமடைவர், மகா பாதகங்களின்றும் புனிதமாவர், மோட்சத்தின் பயனடைவர். சிவப்பிரியராவர், சிவசாயுச்சியம் பெறுவர், மறுபிறப்படையார் மறுபிறப்படையார், பிரமமேயாவர். இங்ஙனம் பிரமன் கூறினார். உபநிடதமிவ்வாறு முற்றியது.

                                 மணவழகு.
சித்தாந்தம் – 1912 ௵ - நவம்பர் ௴
.

No comments:

Post a Comment