Saturday, May 9, 2020



ஈஸ்வரன்.

அக்கிராசனம் வகித்துப் பூஜ்ஜியபாதராய் விளங்கும் மஹாசுவாமிகட்கும் மற்றுமுள்ள அன்பர்கட்கும் பக்திபூர்வக விஞ்ஞாபனம்.
      
யான் இம்மகா சமாஜத்தின் முன்னர் பேசத்துணிந்த ஈஸ்வர விஷயம் கேவலம் பிரஞ்ஞாவான்களாலும் சிவானுபூதிச் செல்வர்களாலும் வியவகரிக்கத்தக்க தொன்று அத்தியான்மமும், அதீந்திரியமு மாதலின். அத்துணை அபாரமான அர்த்தத்தை தற்போதங்கொண்டும் சக்தி புத்திக்கேற்ப நூலாராய்ச்சி மாத்திரையில் சித்தித்த ஏகதேச அறிவைக்கொண்டு மொழியப்புகும் ஒருவன் பெற்றி “இறைவனார் கமலபாத மின்றியானியம்பு மாசை நிறையினார் குணத்தோர்க்கெல்லா நகையினை நிறுத்துமன்றே'' எனச் சைவவழி நூலாசிரியர் கூறியவாறாகும். ஆயினும் இது ஜிஞ்ஞாசையின்பொருட்டு எழுந்ததோர் முயற்சி ரூபமாதலின் இவ்வர்த்தத்தில் ஏற்கெனவே பிரமா தவசத்தால் புகும் குற்றங்களைந்து குணம் உள்தேல் அதைமாத்திரம் குறிக்கொள்வீர்களென திருவருளைப் பிரார்த்திக்கிறேன்.

ஈண்டெடுத்துக்கொண்ட விஷயம் ஈஸ்வரன். ''ஏஹசர்வேஸ்வர: நிருபாதிகமாகிய ஐஸ்வரியமுடையவன் ஈஸ்வரன் எனப்படுவன், 'ஈய்வரஸ் ஸர்வபூதாநாம்'' சேதநாசேதநரூபமாகத் தோற்றப்படும் பூதஜாலங்க ளியாவற்றிற்கும் நியாமகன் மற்றவைகளை சர்வாவஸ்தைகளிலும் ஆளுபவன். இது ஈய்வர சப்தத்தாற் சித்தித்த திரண்டபொருள். ஈண்டு ஈய்வரன் என்பது யாதாமொரு காரியகர்த்ரு விசேஷத்தையன்று பரமபதியாகிய பதிபதார்த்தத்தையே குறிக்கும், ஆகலின் சித்தாந்த சம்மதமாய் ஈய்வர நிரூபணம் செய்வதற்கு முன்னர் அநீல்வர் சாங்கியர் மதம்பற்றி எழுந்த பாதஞ்ஜலராதி ஈஸ்வரவாதிகளின் பிரதிபத்திகளைச் சற்று அநுவதிப்பது உசிதமாகக் காணப்படுகிறது.

சாங்கியர் ஆத்ம சந்நிதானத்தில் ஆன்மாவின் போக க்ஷேமத்தின்பொருட்டுப் பிரகிருதி தொழிற்படுங் காரணத்தால் பிரகிருதியே சகலப்பிரபஞ்சத்தையும் சிருஷ்டிக்கும். ஆதலின் பிரகிருதியே கர்த்தா. வேறொரு கர்த்தா வேண்டுவதில்லை எனக்கூறுவர். இதுவும் சரியன்று.
      
பாதஞ்சலர் - அசங்கசித் ரூபனாகிய புருஷசந்நிதியில் காந்தச்சிலையின் முன் இரும்பு சேடிக்குமாறு போல் வர்த்திக்கும் ஜடப்பிரகிருதிக்கு நியாமகனாகிய ஈஸ்வரன் ஒருவன் உளன். அந்யதா ஜடமாகும் பிரகிருதிக்கு ஜகத்சிருஷ்டியாதிகள் சம்பவியாது. ஆதலின் சுருதியும் “ப்ரதான க்ஷேத்ரக்ஞபதிர் குணேசயிதிஸ்ருதி:'' சத்வரஜஸ்தமோ குணங்களின் சாம்யாவஸ்தாரூபமாகிய ஜடப்பிரகிருதிக்கும் ஜீவர்களுக்கும் பிரபுவாகியும் மற்றும் அக்குணங்களுக்கு நியாமகனாகியும் ஒரானொரு ஈய்வரன் உளன் எனக்கூறும். இத்துடன் நில்லாது அந்தர்யாமிப் பிராஹ்மணத்தில் மிகவும் உல்லாசத்தோடும் சர்வாந்தர்யாமியாகிய ஈஸ்வரப் பிரதிபாதநஞ்செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவித்தை, அஸ்மிதை, அராகம், துவேஷம், அபிரிவேசங்களுடனேயும் புண்ணியபாபமிஸ்ர கர்மங்களுடனேயும், அக்கர்மமல விசேஷங்களாகிய மனுஷியாதி ஜாதி அதற்குத்தக்க ஆயுர்போகங்களுடனேயும் அவைகளின் சம்ஸ்காரங்கள் என்றால் பாவனைகளுடனேயும் பற்றுதலில்லா புருஷஸ்ரேஷ்டனே ஈஸ்வரன் என்றும் அவ்வீயவரன் ஜீவனைப்போல் அசங்கசித்ரூபன் என்றும் பதஞ்சலிகூறிய யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆதலின் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் கிலேசாதி கர்ம சாகித்தியராசித்தியமே விசேஷம் என பாதஞ்ஜலமதத்தால் அறிய வேண்டியது. இவர் மதமுஞ்சரியன்று. என்னை அசங்கனாகிய ஈஸ்வரனுக்கு நியாமகத்துவம் ஒவ்வாதென திரஸ்கரித்து ஞானம், பிரயத்தனம், இச்சை ஆகிய இம்முன்று குணங்கள் ஈஸ்வரனுக்கு நித்தியங்கள் மற்றும் சங்கியாபரிமாணம் பிருதக்த்வம் சம்யோக விபாகமென்கிற விசேஷகுணங்களும் ஈஸ்வரன் மாட்டுதார்க்கிகரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஞானப்பிரயத்தனேச்சைகளென்கிற முக்குணங்களும் ஈஸ்வரனுக்கு நித்தியமாயிருக்குங் காரணத்தால் அவ்வீஸ்வரன் ஜீவனினும் விலக்ஷணன். இதனாலேயே ஈஸ்வரனுக்குப் புருஷவிசேஷத்வம் உண்டாயிருப்பதன்றி வேறொன்றால் அல்ல. ஈஸ்வரனுக்கு ஞானாதி குணங்கள் நித்தியதர்மங்கள் என்பதில் "சத்யகாமஸ் ஸத்ய சங்கல்ப: என்னும் சுருதியே பிரமாணம் எனத்தார்க்கிகர் நாட்டுவர்.
      
இவர் மதமுஞ் சரியன்று. ஏனெனின் அந்தர்யாமியாகிய ஈஸ்வரனுக்கு ஞானம், இச்சைபிரயத்தனம் ஆகிய முக்குணங்களையும் நித்தியங்களாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கனம் நித்தமாயின் சர்வகாலத்திலும் ஜகத்து உற்பத்தியாதல் வேண்டும். ஓர் காலத்தினும் ஜகத்தின் பிரளயம் உண்டாதல் கூடாது அதனால் பிரளயத்தைக்கூறுவதாகிய சாஸ்திரத்திற்கு விரோதம் உண்டாகும். ஆதலின் அந்தர்யாமி ஈஸ்வரன் ஆகான். சமஷ்டி லிங்க சரீரியாகிய ஹிரண்ய கர்ப்பனே ஈஸ்வரன். இவ்விஷயம் உத்சீதம் என்கிற பிராம்ஹணத்தில் அதிவிஸ்தாரமாய்க் கூறப்பட்டிருக்கிறதென ஹிரண்யகர்ப்போபாஸகன் கூறுவன். இதுவுஞ்சரியன்று. ஸ்தூலதேகந்தவிர சூக்கும தேகம் கட்புலனுக்கு விஷயப்படாத காரணத்தினால் எல்லா சரீரங்களின் அவயவங்களையும் தன்னதாகவுள்ள விராட்புருஷனே ஈசுவரனாகத்தக்கோன். அவ்விராட்புருஷனின் உண்மையில் புருஷசூக்தப் பிரமாணம். அப்புருஷசூக்தத்தில் விராட்புருஷன் அநேக சிரசுகள் உள்ளவனாகியும், எங்கும் நேத்திரங்கள் உள்ளவனாகியும், மற்றும் அநேக பாதாதி அவயவங்கள் உள்ளவனென்றும் இந்தப்பிரகாரம் கேட்கப்படுகிறது. ஆகலின் விராட்புருஷனே ஈஸ்வரன் என்று விராட் உபாஸகர் கூறுவர். இப்படியே ஈய்வர விஷயகவாதிகள் இன்னும் அநேகர் உளர். அவர்களும் தங்கள் தங்கள் மதஸ்தாபனார்த்தம் அவ்வம்மதசாதக யுக்திகளையும் சுருதி சூத்திரவாக்கியங்களையும் கூட உதகரிப்பர். நிற்க. "வேதாந்தத்தில் பொருள் கொண்டுரைக்கு நூல் சைவமாதலின் வேதாந்திகள் பக்ஷத்தையும் சிறிது விரிப்பாம். பிரம்மத்திற்கு ஜகத்தின் உற்பத்தி ஸ்திதிலயங்களின் காரணத்தன்மை சாக்ஷாத் சுருதிப்பிரமாணத்தானும் வியாச பகவானது சூத்திரத்தானும் பெறப்படும். சுருதி யதொவா இமானிபூதாநிஜாயந்தெ என்பது எந்தப் பிரமத்தினின்றும் இவ்வெல்லா பூதங்கள் உண்டாகின்றனவோ உண்டான இவ்வெல்லா பூதங்கள் எந்தப்பிரம்மத்தால் ஜீவனத்தை யடைகின்றனவோ நாசத்தையடைந்த இவ்வெல்லா பூதங்கள் எந்தப் பிரம்மத்தினிடத்து லயபாவத்தை அடைகின்றனவோ (சூத்திரம்) ஜந்மாத்யஸ்யயத: எ - து. எந்த சர்வஞ்ஞசர்வ சக்தியுடைய காரணத்தினின்றும் இவ்வாகாய முதலிய பிரபஞ்சத்தின் ஜன்மதிதிலயங்கள் உண்டாகின்றனவோ அதுவே பிரமம். இதுவே சித்தாந்த நூலில் ''அந்தமாதி என்மனார் புலவர்'' என்னும் வாக்கியத்தால் சித்தித்த முழுமுதலாகும் பதிப்பொருள். அனாதிமலமுக்தன் பரமகிருபானு. அநந்தசக்திபேதன். சத்திகலா சாஹித்தியத்தினால் சகளத்துவமும் மாயாகலாராஹித்தியமும் கூறுவர். சிவன் தன் சொரூப பூதராகிய ஆன்மவர்க்கத்துக்கு மலத்தின் பக்குவாபக்குவம் பார்த்து முறைமையிற் சிற்றறிவு பேரறிவு விளங்கப் பண்ணி முறைமையிற் போக மோக்ஷங்களைப் புரியும் நிமித்தம் தன்சத்திபேரதிகாணத்தைக் கொண்டு கிருபாசம் சித்தபஞ்ச கிருத்தியம் அப்பஞ்சகிருத்தியமாவது. பூமியின் கண்ணே சரீரேந்திரியங்களோடே சனனமரணங்களிற் கூடுதல் பிரிதல், சுவர்க்க நரகங்களிற் போதல் வருதல் முதற்றொழில்களான் வருந்தொய்வு தீர்த்தல் சத்திகுன்றிய மாயைக்குத் திரும்பச்சாமர்த்திய முண்டாக்கலுமாம், கன்மபாக நிமித்தமுமாம். இது சங்காரம். பிரளயத்திற் அவரவர் கன்மங்கள் முற்றும் மலபரிபாகத்திற்கு நிமித்தமாய்ப் புசிப்பித்துத் தொலைப்பித்தல். (சிருட்டி) கன்மபலத்தைப் புசிப்பித்தல். (திதி) மலபாகம் வரும்பொருட்டுக் கன்ம மலபோக்கியப் பொருள்களிலமிழ்த்துதலாகிய திரோபாவகிருத்தியமும் தீக்ஷை பண்ணு தலாகிய அனுக்கிரஹ கிருத்தி பந்தானும் திரோபாவ கிருத்தியத்தால் கன்மசத்துவம் வருவித்தல் அனுக்கிரக கிருத்தியத்தால் மலம் நீங்கிச் சிவத்துவம் வருவித்தல் இந்தப் பிரகாரமாய்ச் சிவன்கிருத்திய கிருக்தானாலும் தன்மட்டாவது சிவ சத்திமட்டாவது யாதொரு விகாரமின்றியே சந்நிதி விசேஷத்தால் சேதனா சேதனப்பிரபஞ்சம் முழுதும் காரியப்படும். ஆதல் பற்றியே  'பவன் பிரம்மாசாரியாகும் பான்டொழி கன்னியாகும்''  என்றனர் வழி நூலாசிரியரும். ஆன்மாக்களுக்கு இவனைப்பெறத்தக்கபேறினும் வேறு பெறும் பேறில்லை. 'இறைவனடி ஞானமே ஞானமென்பர்' என்னும் வாக்கியத்தாலும் போதரும். இவன் உயிர்க்குயிராய் எல்லாப்பிராணிகளின் இருதயப்பிரதேசத்தின்கண் கோயில் கொண்டிருக்கும் பெற்றியால் பாசபந்தங்களினின்று விடுபட இவனையே வழிபடத்தக்கது. வேறுகதி இல்லை. பரதத்துவமும் பாமபிராப்பியஸ்தானமாய் விளங்கலின் கீதாசாரியரும் “க்ஷேத்திர க்ஷேத்திரஞயோர் ஞானம்யத்தத் ஞானம்மதம்ம” ஆதலின் மக்கள்யாக்கையைப் படைத்தாருக்கு இதுவே தவநெறி மற்றெல்லாம் அவநெறி. செய்யவேண்டிய வெல்லாம்செய்து முடித்தலும், அடையவேண்டியவெல்லாம் அடைந்தது மாயபெரும்பிரயோசனத்துக்கோர் நிலையமானது. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்டவரும்''   என்னும் பொய்யாமொழியும் உணர்த்தும்.

ஓம் தத் ஸத்.
                         ஆ ஏகாம்பர முதலியார்.
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment