Saturday, May 9, 2020



யஜுர்வேத
வாஜஸ்நேய சங்கிதையில்
ஈசாவாஸ்யோபநிஷத்து

1. எவ்வளவு சிறிய பொருளாயினும் பூமியிலுள்ள உலகமாகிய இவையெல்லாம் ஈசனால் * கலந்திருப்பது. ஆகலின் நமக்கென்கிற புத் தியை விடுவதினால் (தன்னைக்) காப்பாற்ற வேண்டும், எவனுடைய பொருளையும் விரும்பாதே.

* ஈண்டுக்குறித்த ஈசசப்தம் சங்கராசாரியர் கூறும் ஆன்மாவுக்கேனும், இராமநுஜரும் மத்துவரும் கூறும் காராயணருக்கேனும் செல்லாது. சிவபெரு மானுக்கே யுரியதென்பது வேதசம்மதமாம். உபநிடதங்களில் பரமான்வை ஆன்மாவெனக் கூறலின், சங்கராசாரியர் ஈசசப்தத்திற்கு ஆன்மாவென்றது பொருந்து மெனின், அது பொருந்தாது. எங்கனமெனில்? 'ஆத்மந்யே வாத்மாநம் பர்யேத் " (ஆன்மாவிலே ஆன்மாவைக்காண்க) எனச் சாந்தோக்யோபநிடதமும், மற்றும்பல உபநிடதங்களும் உபய ஆன்மாவைக் குறிக்கின்றன. ஈண்டு ஆன்மாவிலே என்றது ஜீவான்மாவை, ஆன்மாவை யென்றது பரமான்மாவை. உபநிடதங்களில் பரமான் மாவை ஆன்மாவென்றது அங்காங் கிலட்சணை. இங்ஙனமாக, சங்கராசாரியருக்கு உபயான்மா உடன்பாடன்று. அவரேகான்மவாதி. இவர் குறிக்கும் ஆன்மா இவர் கொள்கையின் படி இருபத்து நான்கு தத்துவங்களைக் கடந்தது. இவ்வான்மா முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து அங்காங்கி லட்சனையாற் கூறப்படும் ஆன்மாவாதலெங்கனம்.

அன்றியும், "சம்புரீச: பசுபதீ:' எனும் அமரஸிம்ஹத்தால், ஈசசப்தம் சிவபெருமானுக் குரியது. ஈசன், ஈசுவரன், மசேசுவரன், பாமேசுவரன் முத லிய பதங்கள் சிவபெருமாலுக்கே ரூடியாதலின், நாராயணனைக் குறிப்பதற் கிடமில்லை. பாஞ்சராத்திரிகள் தங்கள் மூர்த்தியையும் ஈசுவரனெனச் சொல்லிக் கொள்ளுகிறார்களே யெனின்? அவர்கள் தங்கள் கோயிலை ஈசுவரன் கோயிலென அழைக்கக் கூசுவதென்னை? தாங்கள் ஈசுவர ஐயங்கார் எனப் பெயர்வைத் தழைத்துக் கொள்ளச் சம்மதியாத தென்னை? எனக் கடாவி மறுக்க.

அன்றியும்,'ஈசாவாஸ்யாதி மந்தராந்யோஜ பேத் நித்யம்மமாக்ரதா, மத் பாயுஜ்யமவாப் நோதிமமலோகே மஹீயதே'' (ஈஸாவாஸ்யம் முதலிய மந்தி ரங்களை எவனெனக் கெதிரிலிருந்து தினந்தோறும் ஜபிக்கின்றானோ, அவ னென துலகில் பெருமை பெறுவதும் தவிர என்னுடன் சாயுஜ்யத்தை யடைகி றான்) எனச்சிவபெருமான் இராமருக்குப் போதித்ததாகச் சிவகீதை 15 - வது அத்தியாயத்திற் காணப்படுகிறது.

2. இவ்வுலகில் கன்மங்களைச் செய்துகொண்டே நூறு வருஷம் (ஆயுள்வரையில்) பிழைத்திருக்க விரும்பக்கடவன் மனிதனாகிய நின்னிடத்தில் இக்கர்மங்களைக் காட்டிலும் வேறில்லை. (ஞான சாதனமான) கன்மமானது (சாமான்ய சுவர்க்கமுதலிய பயன் கட்கு) ஒட்டுவதில்லை.

கருமமானது பிரமஞான மில்லாதவர்களைக் குறித்ததன்றிப் பிரமஞானி களைக் குறித்ததல்லவெனச் சங்கராச்சாரியர் கூறுவரேயெனின்? அது'' வித் யாஞ்சா வித்யாஞ்ச'' என்ற மந்திரத்துள் கூறும் விதிக்கு முற்று முரணும், அன்றியும் பரமான்மாவை அறிந்தவனாயினும் கன்மங்களுக்குத் தன் ஆயுசைச் செலுத்தவேண்டுமென வேற்படுகிறது. 'தமேதம் வேதாநுவசநே நப்ராம் மணாவி விதிஷந்தியஜ்ஞே ந தாநோத பராநாட்கோ'' (பிராமணர் வேதாத்தி யனத்தினாலும், யஞ்ஞத்தினாலும், தானத்தினாலும், தவத்தினாலும், விர தத்தினாலும் அவரை பறிகின்றார்கள்) எனப்பிருகஜாபால சுருதி கூறுதலா னும்,'' யாகாதிகளும் சிவபெருமானால் நியோகிக்கப் பட்டிருந்தலினாலுமாம். குதிரை கமனத்துக்குச் சாதனமாயிருந்தாலும், அது கமனத்துக்கு உடுப்பு முதலியவற்றை வேண்டி நிற்றல்போல, ஞானம் கன்மத்தை அபேட்சிக்கும், பலத்தை அபேட்சியாது செய்யப்படும் கன்மமானது ஞானத்திற்குச் சொரூப உபகாரமாகி அங்கமாயிருத்தலின், முத்தி பலம் அந்தக் கன்மக்தினால் எய்த வில்லை. ஆனால் சாட்சாத்தாக ஞான பலமே மோட்சம் ஆதலின், கிரகஸ்தர் விஷயத்தில் ஞானமானது யஞ்ஞ முதலிய கன்மங்களை அபேட்சிக்கின்றது. எல்லா ஆசிரமிகளுக்கும் அவ்வவர் ஆசிரமத்திற்குரிய கன்மங்களோடு ஞான மிசைந்திருக்க வேண்டும். ஆதலின், வித்தை கன்மத்தோடு சேர்ந்திருக்க வேண்டு மென்பதே யுக்தம். ஆகவே கன்மம் ஞானத்திற்கு அங்கமாம்.

3. அசுரவியற்கை யுடையோர் உலகில் அஞ்ஞான ரூபமான அந்தகாரத்தால் மூடப்பட்டிருக்கின்றனர். ஆன்மாவை (அஞ்ஞானத்தால்) கொன்றவர்கள் எவரோ அவர்கள் மரணமடைந்து ஜென்மங்களையெடுக்கிறார்கள்.

4. சலியாததும், ஏகமானதும், மனதைக் காட்டிலும் வேகமானதும், முன்னமே எல்லாவற்றிலு நிறைந்ததுமான இவ் (வீசனை) இந்திரியாதிகளடைவதில்லை. இது ஓடுகிற மனோவாக்குக் காயங்களை அதிக்கிரமிக்கிறது. இதிலிருக்கிற வாயு (முதலிய அதனாற்றலால்) தரித்திருக்கிறது.

மனத்தாலளவப் படாதவிடத்திலும் ஈசனிருத்ததால் மனத்தினு மிகு வேகமுடைய தென்றது உபசாரம்.
எங்குமுள்ள ஈசன் ஓடின பொருளுக்கு முன்னுமிருத்தலால் அதனைக் கடந்து அதிக்கிறமிக்கிறது என்பப துசாரம்.

5. அது அசைகின்றது, அது அசையாதது, அது அறியாதார்க்குச் சேய்மையானது, அது அறிந்தார்க்கு அண்மையானது. இரண்டிற்கு நடுவிலுள்ளது, பிரபஞ்சத்தைக் கடந்தது.
6. எந்த (ஞானி) எல்லாவற்றினையும் ஈசனிடத்தே பார்க்கின் றானோ, அவ் வெல்லாவற்றிலும் ஈசனைப் பார்க்கின்றானோ § அக்காரணத்தால் (அவன் யாதொன்றையும்) நிந்திப்பதில்லை.

§ எல்லாவற்றினையு மீசனிடத்தே பார்ப்பது வியாப்பியத் தன்மையையும், எல்லாவற்றிலு மீசனைப்பார்ப்பது வியாபகத் தன்மையையும் அறிந்து கொண்டபடியாம்.

7. மேற்கூறியவற்றை யுணர்ந்தவனுக்கு (தியானயோக) காலத்தில், (சித் அசித் என்னும்) எல்லா பூதங்கள் (இறைவனேயாகாது) வேறாயிருப்பினும், அத்தகைய யோககாலத்தில் (அங்காங்கி என்னும் கருத்தால் பிரிக்கவறியாத நித்தசம்பந்த முணர்ந்தவனுக்கு) நான் சுதந்தரனென்னு மஞ்ஞானமேது, (எல்லாமிறைவனுடைமை யென்றுணர்ந்தபின்) துன்பமேது.

8. சுத்தமுடையவனும், (ஏயமான) சரீரமில்லாதவனும், ஊறு படாதவனும், நரம்பில்லா தவனும், நிருமலமானவனும், வினைத்தொடக் கற்றவனுமான (ஈசனை) அந்த ஞானியடைகிறான். அவன் ஈசுரனிடத்து மனமுடையவன், காமாதியை வென்றவன், வல்லபமுடையவன், உண்மையான பொருளை விசாரித்து ஆயுள் பரியந்தம் தியானத்திருப்பன்.

9. எவர்கள் அவித்தையை (காமியகர்மத்தை மாத்திரம்) அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் கடாந்தகார இருளை (நரகத்தை) யடைகிறார்கள், எவர்கள் வித்தையை (நிஷ்காமிய கர்மத்தைவிட்டு) ஞானத்திலாசையை யுடையவர்களோ அவர்கள் அதனினும் பெரிய விருளிற் பிரவேசிக்கின்றனர்.

10. எவர்கள் அவித்தையையும், வித்தையையும் நமக்குச் சொன்னார்களோ (அவர்கள் கருமமற்ற) ஞானத்தால் முத்திக்கேது வேறே யென்றும், (ஞான மற்ற) கருமத்தால் முத்திக்கேது வேறே யென்றும் கூறுவர். * இங்ஙனம் தீரர்களால் கேள்வியுற்றனம்.

* நிஷ்காமிய கர்மத்தை விட்டு ஞானந்தேடுகிறவனும், ஞானத்தை விட்டுக் காமியகர்மத்தைத் தேடுகிறவனும் பமுத்தியை யடையான்.

11. எவன் ஞானத்தை (யதற்கங்கமாகிய) கருமத்துடன் (அங் காங்கிபாவனையாலொருங்கு) இரண்டினையு மனுட்டிக்கிறானோ அவன் கருமத்தால் மிருத்துவைக்கடந்து ஞானத்தால் அமுர்தத்தை (மோட் சத்தை) யடைகிறான்.

12. எவர்கள் பாசங்களை உபாசிக்கிறார்களோ, அப்பாச ஞானிகள் கடாந்தகாரமான இருளையடைகிறார்கள். எவர்கள் பசுக்களிடத்து ஆசையுள்ளவர்களோ அப்பசு ஞானிகள் அதைக்காட்டிலும் அதிகமான அஞ்ஞான விருளிற் பிரவேசிக்கின்றனர்.

13. எவர்களதை நமக்குச் சொன்னார்களோ (அவர்கள்) பாச ஞானத்திற்கு (முத்தி) வேறாகவே சொல்லுகிறார்கள். பசு ஞானத் திறகும் (முத்தி) வேறாகச் சொல்லுகிறார்கள். இப்பிரகாரம் தீரர்களுடைய (வார்த்தைகளைக்) கேட்கிறோம்.

14. எவன் பாச (கன்ம) உபாசனையையும் பசு (ஆன்ம) உபாசனையையும் ஒருங்கு அனுஷ்டிக்கிறானோ? அவன் பாச உபாசனையால் பாவத்தைக்கடந்து பசு உபாசனையால் (பிரகிருதிலய லட்சணமாகிய) முத்தியை யடைகிறான்.

15. பிரகாசமான பாத்திரத்தினால். சூரிய மண்டலத்திலிருக்கிற துவாரம் மூடப்பட்டிருக்கிறது, ஓய் சூரியன் ! மூடிய அவ்வாயிலை நீ சத்தியமாக வுபாசிக்கும் எனக்குப் பார்க்கத்திறந்து வைக்கக்கட வாய்

16. உலகைக் காக்குந்தன்மையுடையவனே! இணையற்றவனே! எல்லாருள் ளுமிருந்து நடத்துபவனே! கிரணங்களால் நீரைக் கிரகிப்பவனே! பிரமன் சந்தான மானவனே! ஓ சூரியனே! நினது கிரணங்களை நீக்கிக்குளிர்ந்த பிரகாசத்தினைக் கூட்டுதி. உனது சுலபமான வடிவினைப் பார்க்கறேன். சூரிய மண்டலத்தில் வசிக்கிறவ னெவனோ அப்புருஷன் $ என்னுளிருக்கிறான்.

$ சூரிய மண்டலத்தில் வசிக்கிறவன் சிவபெருமானே யென்பது திண்ணம், எங்கனமெனில், ''ரரஸ்மாரோபர்கா' என வடமொழி நிகண்டும், “பதேருத்ரோபர்கா” (இந்த உருத்திரர் பர்க்கர்) என மைத்திராயணோப நிடதமும் கூறி, சூரியனை "நீலக்ரீவோலிலோகித" (நீலகண்டமும் செந்திறமுமுடையார்) எனத்தைத் திரியமும், “த்ரிகேத்ரோ ரவி" (முக்கட் சூரியன்) என அபியுக்தரும் வர்ணித்திருத்தலாற் காண்க.

17. இனி யிச்சரீரமானது பஸ்மத்தை முடிவாக வுடையது. சரீரத்திலிருக்சிற பிராணன் நாசமல்லாத சூட்சும பக்தியோக வடிவினன். ஓம்! தயவோடு எனை நினைந்திடுக. ஏதேனுமென்னால் நன்மை செய்யப்பட்டுளதேல், அதனைக் குறித தென்னைக் காத்தருள்க.

18. அக்னிசப்த வாச்சியார்த்தனே! எங்களைச் சம்பத்தின்பொருட்டு நல்ல வழியி லழைத்துக்கொண்டுபோம், தேவனே! எல்லா ஞானங்களையும் அறிந்த நீர், வஞ்சகமாகச் செய்த பாவங்களை எம்மினின்றும் வேறுபடுத்துக. பலவாகிய தோத்திரங்களை தமக்குச் செய்கிறோம்.

இங்னம் சூரியனை வேண்டுவதே னெனின், இதயத்துள்ள சிவபெரு மான் அனுக் கரசத்தினால் துவாரம் தலையிற் பிரகாசிக்க, உபாசகன் தலை நாடி வாயிலாகத் தேகததை விட்டுப் புறப்பட்டு, சூரிய மண்டலத்தின் மூலமாகப் பரமசிவனை யடைய வேண்டியதின் பொருட்டு இங்ஙனம் கூறப்பட்டது. "யத்ராலொகே புறாந்தோவி வர்த்ததே வ்யபோஹ்ய சீர்ஷகபாலே பூரித் யக் கௌப்ரதி திஷ்டதி பூவ'பிதிவாயௌ ஸுவரி த்யாதித்யே மகயிதி ப்ரம் மணி ஆப் சோதில்வா ராஜ்யம்'' (உரோமத்தின் வேர்பிரியுமிடத்தில், அவன் தலையில் இருபக்கங்களையும் பிளந்து, பூ என்று கூறி அக்னியிற் பிரவேசித்து, புவ என்று சொல்லிவாயுவிற் பிரவேசித்து, சுவஎன்று சொல்லிச் சூரியனிற் பிரவேசித்து, மஹ என்று சொல்லிப் பிரமத்திற் பிரவேசித்து, அங்கே சுவராச்சியத்தை அடைகிறான்) என்றதை த்ரியோபநிடதசுருதியால், பிரமப்ராப்தியானது 'ஒளிமார்க்கத்தை அடையப்படுவதாகப் பெறப்படுகிறது. ஆகலின், சிவப்ராப்திக்குச் சூரியமார்கம் நியமமாம்.

மணவழகு.

சித்தாந்தம் – 1914 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment