Saturday, May 9, 2020



உயிரின்தன்மை
(பசுலட்சணம்.)
"க்ஷரம், (அழி பொருள்) அக்ஷரம் (அழிவில்லாப் பொருள்), வியக்தம், அவ்யக்தமாயுள்ள எல்லாவற்றிற்கும் ஈசன் ஆதாரமாயுள்ளான். அநீசனாகிய ஜீவாத்மா பந்தப்பட்டிருக்கிறான், கர்மபலன்களை புசிக்கவேண்டியிருப்பதால். ஆயினும், தேவனையுணர்ந்தவுடன் சகலபாசங்களினின்றும் விடுபடுகிறான்.
''ஞன், (அறிவுள்ளவன் - ஈசன்) அஞ்ஞன் (அறிவில்லாதவன் அநீசன்) என்ற இருபதார்த்தங்கள் உள. இரண்டும் பிறப்பற்றது. ஒன்று பலமுடையது, இன்னொன்று பலமற்றது. பிறப்பற்றதாகிய (அநாதியாகிய) ஒருவரும் பாபாசக்தி) இருக்கிறாள். அவள் மூலமாக சீவனும் தன் கர் மபலத்தையடைகிறான். மேலும், முடிவில்லாத ஆத்மாவும் (ஈசன்), பல வற்றினும் தோய்ந்தும் தோய்வில்லாமல் உளன்.
''அழிபொருள் பிரதானம். அமிர்தமும் அழிவில்லாததும் அரன். ஒன்றேயாகிய தேவன் பிரதானத்தையும் ஆத்மாவையும் (சீவனையும்) ஆளுகிறான். அரனை தியானிப்பதனாலும், கூடுதலினாலும், அவனுடன் ஒன்றாதலினாலும், முடிவில் எல்லாமயக்கமும் அறுகின்றது.
                      (சுவேதாஸ்வதர உபநிடதம் - 1. 8 - 10)
''ஒரே மரத்தில், அகீசன், தன் துர்ப்பலத்தால் மயங்கி துன்பத்தில் அமிழ்ந்திக் கிடக்கின்றான். மற்றும் சாந்தனாகிய ஈசனைத் தரிசித்து அவன் மகிமையை யுணரின், அவன் துக்கம் விடுபடுகிறது''
                        (மாண்டூக்கிய உபநிடதம் - 3 - 1 - 2.)
      உயிரெனப்படுவதிந்த உடலின் வேறுள தாயுற்றுச்,
      செயிருறுமிச்சாஞானச் செய்திகளுடைய தாகிப்,
      பயில்வறு மின்பதுன்பப் பலன்களு நுகரும்பார்க்கின்
      றுயிலொடுமைந்தவத்தைப் படுமுண்மை துரியாதீதம்.
                          (சிவஞானசித்தியார். III. I)
இறுதியிற் காட்டிய பாட்டின் காணப்படும் ஒவ்வொருடொருளும் சீவலட்சணத்தைப்பற்றி மற்ற மதஸ்தர்கள் கூறும் பூர்வபட்சங்களை மறுத்து சித்தாந்தம் செய்தது வாகும். எவ்விதமெனில், அவர்களிற் சிலர், ஆத்மா  என்ற தனிப்பொருள் இல்லையென்றும், சிலர் உடலையன்றி வேறு உயிர் இல்லை யென்றும், சிலர் ஐம்புலன்களையும் சூக்கும தேகத்தையும் பிராணனையும், அந்தக் கரணங்களையும், கடவுளையும், முறையே உயிரென்றும், உடல் கூறுகள் எல்லாவற்றையுமே உயிரென்றும் சொல்லுகிறார்கள். உயிர் இவைபெல்லா மவ்லவாக தனித்த ஒரு முதற் பொருள் என விளக்கியிருக்கிறார்.
      "ஐந்து புலனைம் பூதம் கரணமாதி
      அங்த்தகுண மத்தனையுமல்லை யல்லை
      யிந்தவுடல் அறிவு அறியாமையு நீயல்லை
      யாதொன்று பற்றின தன் இயல்பாய் நின்று
      பந்தமறும் பளிங்கனைய சித்து நீயுன்
      பக்குவங் கண்டறி விக்கும் பான்மையேம்யாம்.''

என எம்மையுடையாராகிய தாயுமான சுவாமிகளும் அறுதியிட்டிருக்கிறார்கள். உயிர், சீவன், ஆன்மா, ஆத்மா, பசு, ஏஜமானன், சதசத்து என்பன பிரதிபதங்கள். முன்கூறியதெல்லாம், சத்தாகிய கடவுளிலும், அசத்தியமாயையிலு மடங்கும். இவையிரண்டு மல்லாததும், இரண்டையுமறியக்கூடிய நிலையிலிருப்பதுமாக ஆன்மாவுக்கு சதசத்து என்று பேருண்டாயிற்று. பாசத்தளையினாற் கட்டுப்பட்டிருப்பதால் பசு வெனப்பெயர் பெற்றது. இவ்வான்மா தூலம் அல்லது சூக்கும உடலோடு பந்தத்தில் ஒன்றாகவும், மோக்ஷத்தில் இறைவனோடு ஒன்றாகவும் காணப்படுகின்றது. இந்த சம்பந்தத்தையே அத்துவித நிலையெனக் கூறுகின்றார்கள்.
      ஆணவத்தோடத்து விதமானபடி மெய்ஞ்ஞானத்
      தாணுவினோடத்து விதமாகு நாளெந்நாளோ
                                                 (தாயுமானவர் பாடல்.)
இவ்வுயிருக்கு, இச்சை, அறிவு, தொழில்கள் உண்டெனினும், சிவபெருமானின் இச்சா ஞானக்கிரியைகளுக்கு ஒப்பிலது ஆன்மாக்கள் சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவையாகி, இறைவனால் அறிவித்தாலன்றியறியா வுளங்களாய் நிற்கின்றன. உயிர் வேண்டுதல் வேண்டாமை யுளதாகலின், இன்பதுன்பங்கள் அதற்கு உளதெனக் கூறப்பட்டது. சிலர் கூறுவதுபோல், இவ்வின்பதுன்பங்கள் அத்யாசமன்று. இதனாலும், உயிர், 'வேண்டுதல் வேண்டாமையிலான், பற்றற்றான்,'' மலமிலான் 'சஞ்சலமிலான்' எனக்கூறப்படும் இறைவனுடன் வேற்றுமைப் படுவதும் காணலாம்.
உயிரானது அதற்குள்ள கோசங்களினாலும் கட்டுப்படுகின்றது. இக்கட்டுகளும் அத்யாஸமன்று.
இவ்வளவு சொல்லியும், மற்றெங்கும் காணப்படாமல் சித்தாந்தத்தினிடத்தே மட்டும் காணப்படும் உயிரின் முக்கிய இலக்கணம் இன்னொன்று. கூறவேண்டும். அதனைக் கூறினாலொழிய, இவ்வாராய்ச்சியின் வழியிற்கிடக்கும் கரடுமுரடுகளை யொழிக்கமுடியாது. அது என்னெனின், முதற்கண்காட்டிய தாயுமான சுவாமிகளின் திருவாக்கில் கண்டபடி, உயிரின் அதுவது வாசற்றன்மையேயாம். இதனையே சார்ந்ததன் வண்ணமாதல்,' 'யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நிற்றல்'என விரித்தோதப்பட்டிருக்கின்றது. அதாவது, உயிரானது எந்தப்பொருளோடு சேர்ந்து இருந்ததோ அந்தச்சமயம், தன் சொரூபம் கெட்டு மற்றையது போலவே நிலைத்தலாம். இதற்கு உதாரணம், கண், ஆகாசம், பளிங்கு அல்லது கண்ணாடி. நமது மாட்சிமை பொருந்திய மகாராஜாவின் படத்தை நாம் எதிரேகாண்கின்றோம். அப்பொழுது வர்ணப்படம் நமது பார்வைக்கு அகப்படுமே தவிர கண்ணாடி அகப்படாது. கண்ணாடி யென்ற ஞானமில்லாத ஒருவன் அங்கே கண்ணாடி யில்லை யென்றேசாதிப்பான். கண்ணாடி இல்லாமற் போகவில்லை. ஆனால் அதுபடத்துடன் மறைந்து அதன் வண்ணமாய் தன்சொரூபம் செட்டு நிற்கின்றது. சூரியன் முன் வைத்த பொழுதும் கண்ணாடிகாணப்படாமல், சூரியன் ஒளியே பிரதிபலிக்கும். உயிர் உடலோ பெற்றி நின்றகாலத்து, உடலையேதானாகப் பாவித்துநிற்கும். இதுபந்தம். இது போலவே இறைவனுடன் ஒன்றா பாவித்து தன் சொரூபம் கெட்டு நிற்குமாகில், இதுதான் மோக்ஷம். இவ்வுயிரின் துர்ப்பலம் ஒன்றுண்டு. அது அதன் பற்றுக்கோடின்றி நிற்றலாகாமையே. அதாவது உயிரானது உடலையாவது, இறைவனையாவது பற்றிக்கொண்டே நிற்குமேதவிர தனித்து நில்லாது. இதற்கு உதாரணம், நெருப்பு கட்டையையாவது விளக்குத்திரியையாவது பற்றிநிற்குமே தவிர, தனியாகக் காணக்கூடாததுபோல. இவ்வுண்மைகளைக் காணாமையினால் தான், புத்தர் முதலிய நாத்திகராவார் உயிரில்லையென்றார்கள். இதனாற்றான் சங்கரர் முதலிய மகான்களும், உயிர் தனித்ததொரு பொருளில்லை யென்றார்கள்.
மேலைநாட்டு தத்துவ பரிசோதகர்களில், புரொபெஸ்ஸர் ஹென்ரி டிரம்மண்டு என்னும் பெரியோர் ஒருவர் மட்டுமே, மேற்சுட்டிய உயிரின் அது அத்வா தற்றன்மையை விளக்கியுள்ளார். அவர் கூறுவது. 'மானிடர்களெல்லாம் கண்ணாடிகள். உயிர்கள் உய்ய வேண்டியோ, அல்லது இழிய வேண்டியோ நடைபடும் வழிக்கு இதுமுதல் அஸ்திபாரம். மனிதன் உண்மைக் குணத்தைக் காட்டக்கூடிய உபமானங்களில், கண்ணாடி திருஷ்டாந்தமானது மிகவும் பொருந்தமுடையது.'
இந்தபளிங்கின் திருட்டாந்தத்தை அனுசரித்து பின்வறுமாறு வாய்ப்பாடு கூறலாம். "நான் கடவுளைப் பார்க்கின்றேன். என்னில் கடவுள் பிரதிபலிக்கின்றார். நான் கடவுள் போல் (சாரூபம்) ஆகின்றேன். நான் கடவுள் ஆகின்றேன். நானே கடவுள்''
இந்த உயிரின் தன்மைதான் (பிரதிபலித்தலும் ஒன்றாதலும்) நம்முடைய மந்திர தந்திரங்களுக்கும், உபாசனை, சாதனை, யோகம், பாவனைகளுக்கு ஆதாரம். இதனையே மாந்திரிகன் கருடமந் கிரடாவனை திருட்டாந்தத்தால் விளக்கியதும். மேலைநாட்டு தத்துவசாஸ்திரிகளும், இவ்வுண்மை சீவதத்வ நிகழ்ச்சியில் விளங்குவதை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். குதிரைகளோடும், பன்றிகளோடும் என்றும் பழகுகின்றவர்கள் முறையே குதிரை, பன்றிரூபம் அடைகின்றார்கள் என்றும், தலைவனும் தலைவியும் மனமொத்து வாழும்பொழுது இருவர் முகங்களும் முதலில் பேதமாயிருக்கினும் முடிவில் அபேத சொரூபமடைகின்றதென்றும், ஒரு குழந்தை செவிலித்தாயின் சொரூபத்தை அடைகின்றதென்றும் காட்டியிருக்கிறார்கள். ஆகையால் இந்த அது அதுவாதல் தன்மையால், ஒருவன் தாழ்ந்த மிருகப்பிராயத்தில் இழிவதும், உயர்ந்த தெய்வீகப்பதவியிற் சார்வதும் ஆகும்.
இந்தவுண்மைதான் தத்துவமசி முதலிய மகாவாக்கியங்களிலும் அமைந்தது. நான், கடவுள் என்ற இரண்டு பொருள்கள் ஒன்றாவதைக் குறிக்கவும், இத்தன்மையாலன்றி, இரண்டும் என்றும் ஒன்றாக. ஆகையால் தான் சோகம் சிவோகம் பாவனையிற் சிறக்கவேண்டு மென்றது.
இந்தவுயிர், கடவுளும், அதன் ஆபாசமும் பரிணாமமும் ஆகாது. அது சுயம் பிரகாசமின்றி. துருப்பிடிப்பதால், அதற்கு இச்சைஞானம் தொழில் உண்டாயினும் அவை நிகழ்தற்பொருட்டு, இறைவனுடைய இச்சைமுதலியன நிகழவேண்டும். இறைவனும் உயிரும் வெவ்வேறு நிலையில் (சக்கரத்தில்) உள்ளவர்கள். உயிர் உருவம், அருவம், உருவருவம், ஒன்றுமி ல்லாதது. சித்தும் அசித்தும் அல்லவாகி, சிதசித் அல்லது சதசத்து எனப்படும். அது அணுவும் விபுவும் அல்ல. அது அருவும், விபுவும் ஆகும், ஆயின், அசித்தைப்போலன்று. அதன் வியாபகத்தன்மையும் சார்ந்ததனோடு ஒன்றாகும் வியாபகமே. அதன் நித்திய அறிவு, மாயையினாலல்ல; மற்று ஆணவமலத்தினால் தடைபட்டிருக்கின்றது மறைக்கப்பட்டிருக்கின்றது. உயிர் சாக்கிரம் சொப்பணம் முதலிய ஐந்தவத்தைகளிற்படும். அன்னமயம் முதலிய ஐந்து கோசங்களிற்றங்கி அவையாகாமலும் நிற்கும்.
இதுவன்றி, உயிருக்கு கேவலம், சகலம், சுத்தம் என்று மூன்று அவஸ்தைகளும் உண்டு. பஞ்சகிருத்தியம் - ஆரம்பமாகுமுன், அறிவிச்சைதொழில் ஒன்றின்றி ஆணவத்தில் அழுந்தி நிற்றல் கேவலம். அக்கிருத்தியம் தொடங்கியபின் தனுகரணங்களைப் பெற்று, புண்ணிய பாவங்களைச்செய்து இன்பதுன்பங்களை அனுபவிக்கும் நிலை சகலம், சுத்த அவத்தையில், உயிர் இருவினைப்யொப்பெய்தி, மலபரிடாகம் பெற்று சற்குரு தரிசனமெய்தி சத்தினிபாதமடைந்து, பிறகு நமசிவத்தின் அளவிலா ஆநந்தத்தில் அழுந்தி என்றும் மீளா இன்பமுறுகின்றது.
மெய்கண்டான் பொன்னடிவாழ்க.
ஜே. யம். நல்லசாமி பிள்ளை
சித்தாந்தம் – 1912 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment