Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சிவனடியார் சிறப்பும் அடியவர் பூஜாபலனும்

(தருமசங்கிதை)

எப்பொழுதுஞ் சிவபொருமானிடத்திலேயே தமது மனவாக்கு காயங்களை யொப்புவித்த சிவபக்தர்களை அச்சிவபெருமானாகவே பாவித்துப் பூஜித்தவன் எண்ணிறந்த போகங்களை யநுபவித்து ஆயுண் முடிவிற் சிவகடாக்ஷத்தாற் கைலாய பதவியையடைவான். ஆதலின் சிறந்த போகங்களை யநுபவிக்க வேண்டுமென்று கருதுகிறவன் சிவபக்தருக்குத் தன் சக்திக்கியன்ற வரையில் வஞ்சனை யின்றி, வஸ்திரம் ஆபரணம் அன்னம் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்துப் பக்தியோடு பூஜிக்கக்கடவன். சிவபக்தனுக்கு வவிசனையின்றித் தன்னாலியன்றவரையில் விதிப்படி பணிவிடை செய்தவன் பிரபுவாயினும் ஏழையாயினும் அவன் அடையும் பலனைச் சொல்லுகின்றேன். அவன் உயிர் நீங்கினவுடனே சூரியகிரணங்களைப் போன்ற வொளியுடைய திவ்ய விமானத்திலேறி, தன் முன்னோரில் ஏழுதலைமுறை வரையிலும் அதோகதியி லிருப்போரையும் உடன் கொண்டு சிவமந்திரத்தை யடைந்து மனோகரமான போகங்களை யநுபவிந்து, தேவ மாந கனிதமான அநேக ஆயிரவருஷங்கள் பலராற் சேவிக்கப்பட்டுப் பின்னர் விஷ்ணுபதவியை யடைந்து அங்குள்ள போகங்களை யறுபவித்து மேற்கூறிய காலவளவு அவ்விடத்துள்ளவராற் சேவிக்கப்பட்டுப் பிரம லோகத்தை யடைந்து, அங்குள்ள விமலமான ஸ்திரீ முதலிய போகங்களை மேற்கூறுய வளவு காலம் அநுபவித்து முறையே இந்திரலோகம் கந்தவர்வ லோகம் யக்ஷலோகம் இவற்றையடைந்து ஆங்காங்குள்ள அளவிறந்த போகங்களை யநுபவித்து மீண்டும் பூலோகத்திற் சிரேஷ்டமான வேதிய குலத்தில், தான் முன்னடைந்துள்ள விசேஷ ஞான குணமுடையவனாய்த் தோன்றி, ஜந்மாந்தர புண்ணியவசத்தாற் சற்குருவை யுபாசித்து அக்குரு வருளால் அகண்டமான சிவஞானத்தை யடைந்து, யோகோபாசனை செய்து, சமுசாரபந்தத்தினின்றும் விலகிச் சிவசாயுச்சியத்தை யடைவான்.

யாகம் கர்மயாகம் ஞானயாகமென்றிருவகைத்து அதில் கர்மயாக மானது பலவிதமான தானம் பூஜை அக்கினி காரிய முதலியவற்றாற் பிரசித்தமாயுள்ளது. தியானம் என்பது சர்வேசுரனையடைய வேண்டுமென்னுங் கொள்கையோடுஞ் சாந்திராயணாசரணமும், சுவாத்தியாயமும், ஜெபமுமென மூவகையாகப் பிரசித்தி பெற்றிருக்கின்றது. இதில் ஜெய் மென்பது எப்பொழுதும் அடிக்கடி சிவசிந்தனையுண்டாயிருத்தலின் அது ஞானயாகமென்ப் பெயருற்றது. அந்த ஞானயாகம் அத்தியாபனம், அத்தியயனம், வியாக்கியானம், சிரவணம், சிந்தித்தலென ஐவகைப்படும். இவை ஐந்தனுள், முதலாகிய அத்தியாபனத்தைக் காட்டிலும் அத்தியயனமும், அத்தியயன த்தைக்காட்டிலும் வியாக்கியானமும், வியாக்கியானத் தைக்காட்டிலும் சிரவணமும், சிரவணத்தைக் காட்டிலும் சிந்தித்தலும் ஒன்றற்கொன்று அதிகமாகச் சொல்லப்பட்டிருந்தலின் ஞான யாகத்தின் ஐவகையிற் சிந்தித்தலே சிவகடாக்ஷத்தால் முக்தியைக் கொடுக் கத்தக்கது. ஞானத்தையின்றித் தியானங் கைகூடாது. யோகமார்க்கத் தாலேயே ஞானம் பெறப்படும். ஆதலின் ஞானமுந் தியானமும் உடைத்தாயிருப்பவன் சமுசாரசாகரத்தை நீந்த வல்லவனாவான். ஞானமென்றது தாமசகுணமின்மையும், விவகாரமற்ற மனமும், அநித்தியப்பொருள்களில் அவாவின்மையுமுடையது. அவ்வகைய ஞானமும் எப்பொழுதும் யோக சாதனமுடைய பரிபூரண விரக்தனுகேயுண்டாகும். அந்த ஞானமே முக்தி மார்க்கத்தைக் கொடுக்கவல்லது. ஒருவர் சொல்வதைக் கேட்டு உண்டான ஞானமானது விகல்ப புத்தியையுண்டு செய்து இராகத்துவேஷாதிகளை யுடைத்தாகிச் சஞ்சலமாதலின் மோக்ஷத்தைக் கொடுக்கமாட்டாது. யோக மார்க்கத்தால் சுத்தமாகவும் இராகத் துவேஷாதிகளின்றி விளங்கும் ஞானத்தைப் பண்டிதனானவன் சிறிதுசிறிதாக அப்பியசிக்க வேண்டும், முன் கூறிய கேள்வியால் வரும் ஞானமானது ஆரம்பத்திலும் சிரவணத் திலும் அப்பியாசத்திலும் நிஷ்டையிலும் இராகத்துவேஷா திகளாற் பல வகையாகிப் பரிசுத்தமான ஞானமுண்டாவதற்கு வழியாகும்; பாத்திர சுத்தஞ் செய்ய வேண்டினோர் முதலில் அழுக்குஜலத்தாலும் பின்னர் சுத்த ஜலத்தாலுங் கழுவுகையில் முதலிற் கழுவிய நீரால் சிறிது அழுக்குப்போமாறு பயன் சிறிது தருமெனக் கொள்ள வேண்டும். புழுதியால் மறைக்கப்பட்ட ஆகாயமானது முறையே சிறிது சிறிதாகப் புலப்படுமாறு விகல்ப ஞானமானது சிறிதாகத் தோன்றி இறுதியில் பரிசுத்தஞானத்தை யன்டாக்கும். அலைகளாற் கலக்கப்பட்ட சமுத்திரமானது அசைவற்று நின்றாற் போல விஷயவாதனையால் அலைந்து கொண்டிருந்த மனமானது சகனமற்றிருப்பதே ஞானமெனப்படும். மற்றவை அஞ்ஞானம். இராகத்து வேஷாதிக ளில்லாததும், பாவனாமயமுமாகிய சிரேஷ்டமான ஞானமே முக்தியையளிக்க வல்லது. அஞ்ஞானமாகிய பாசத்தாற் கட்டப்பட்டுள்ள புருஷன் அமுக்தனெனப்படுவானாயினும், ஞானத்தால் அஞ்ஞானத்தையகற்றிய பின்னர் அப்புருஷனே முக்யனென்று கூறப்படுவான். சமுசாரத்திற்குக் காரணமாகவுள்ளது அஞ்ஞானம். அஞ்ஞானியானவனே சமுசாரச்சேற்றி லழுந்திக்கிடப்பான். அகண்ட தேஜஸாய், தமசு நசிக்குமாறு ஞானத்தால் அஞ்ஞானம் ஒழியும். அஞ்ஞானமுள்ளவரையில் இராகத் வேஷாதிகளால் தர்மாதர்மங்கள் உண்டாகின்றன. தர்மாதர்மங்களுள்ள வரையில் அவனுக்குச் சரீரமுண்டாகும். சரீரமுள்ள வரையில் கிலேசங்களாற் பாதிக்கப்படுவான். கிலேசத்தை யொழிப்பதற்காக மீண்டும் பிறவியடையாத வுபாயத்தைத் தேடவேண்டியது.

அஃதெவ்வாறெனில், தத்துவஞான மடைந்தாலன்றி அஞ்ஞானம் நசிக்கமாட்டாது. அஞ்ஞான நாசமுண்டான க்ஷணத்திலேயே இராகத் வேஷதிகள் உண்டாகா. இராகத் துவேஷாதிகளொழிந்தவுடனே புண்ணிய பாபக்ஷயமுளவாகும். புண்ணிய பாப்பரிக்ஷயத்தாற் பிறவியில்லை யாகும். பிறவியில்லாத பொழுது கிலேசமுதலியன உண்டாவதற்கிடமில்லை. கிலேசங்களற்றவிடத்தில் முக்தனென்று சொல்லப்படுவான். ஆதலின் மாநுடருக்குப் பலவித துக்கங்களும் அஞ்ஞானத்தாலேயே தோன்றுகின்றன. அந்த அஞ்ஞானத்தை ஞானத்தாலன்றிக் கர்மாதிகளால் நசிக்கச் செய்யமுடியாது. ஞானமொன் றனாலன்றி மற்றொன்றால் புண்ணியபாப பரிக்ஷயமுண்டாகாது. ஆதலின் மோக்ஷத்தையடைய வேண்டியவன் ஞானத்தையேயடைய வேண்டும். வெண்கலம் புளியினாற் புனிதமாகுமாறு ஒருவன் மனம் ஞானத்தாற் புனிதமாகும். ஞானமென்னும் அமிர்தரசத்தை ஒருமுறை பானஞ்செய்தவன் எல்லாக் காரியங்களையும் விடுத்து மீண்டும் அதனையே பானஞ்செய்ய எப்பொழுதும் விரும்புவான். ஒரு முறையேனும் ஞானாமிருத ரசபானஞ் செய்தவன் அதன் தன்மையை யுணரானாகி மற்ற விஷயங்களிலேயே மனதைச் செலுத்தி நிற்பான். ஞானாமிருதத்தால் திருப்தியடைந்த கிருத கிருத்தியனான சிவயோகி உலகத்திற் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமிராது. அப்படிச் செய்யத்தக்கதொன்றிருக்கும் பக்ஷத்தில் அவன் உண்ைையான தத்துவஞானியல்லன். இகலோக பரலோகங்களில் அவன் செய்தற்குரிய காரியஞ் சிறிதுமில்லையாதலின், அவன் இவ்வுலகத்திலேயே முக்த தசையை யடைந்து பரிபூரணனாக விளங்குவான். ஞானத்தைக் காட்டிலும் பரிசுத்தமானதும் பரிசுத்தமாக்குவதும் பிறிதொன்றுமில்லை. அதனைப் படிப்படியாக அப்பியசித்தபக்ஷத்தில் ஆத்ம சொரூபம் நன்கு விளங்கும். விரதா சரணங்கள் தானங்கள் தபசுகள் யாகங்கள் ஸந்நியாசமுதலிய ஆச்சிரம தருமங்கள் தீர்த்தயாத்திரைகள் முதலிய யாவுஞ்சுவர்க்க பதவியை மட்டும் உண்டு செய்ய வல்லவையேயன்றிப் பிறவியை யொழிக்க வல்லவையன்று. சாந்தியை யளிக்கும் சிறந்த ஞானமொன்றே புநர்ஜன்ம நாசஞ்செய்ய வல்லது. எப்பொழுதும் இந்திரிய நிக்கிரகமும் ஒரே மனதும் மகருஷிகளாற் கூறப்பட்ட புராண தர்மசிரவணமும் படனமும் உண்டாயிருக்கும் பக்ஷத்திற் பாடக்ஷயமுண்டாகி அவ்வகைய ஞானம் தோன்றி அதனால் முக்தி கைகூடுகின்றது. யாகஞ் செய்ய தவன் தேவபோகங்களை யடைவான். தவஞ்செய்தவன் பிரமபதவியை யடைவான். தானஞ்செய்தவன் பல வித போகங்களையடைவான். ஞானாப்பியாசஞ் செய்தவன் மோக்ஷத்தை யடைவான். அஞ்ஞானி புண்ணியபாவங்களால் துன்புறுவான். ஞானியோ தன் ஞானமாகிய கத்தியால், தன்னை ஜன்மத்திற்கிடக்கும் புண்ணியபாவங்களாகிய சூத்திரத்தை யறுத்து, பரம்பொருளாகிய சிவத்தையடைவான். ஞானிகளுக்குச் சுபாசுப கர்மங்களாற் பந்தமுண்டாயின, வினைக்கயிற்றாற் பந்திக்கப்பட்ட அவர்களுக்கு எவ்வாறு பரமுக்தி கைகூடுமென்பாயாயிற் சொல்லுகின்றேன். சுபாசுப கர்மங்கள் தேகமுள்ளவரையில் இகலோகத் திலாவது பரலோகத்திலாவது அநுபவித்தே தீரவேண்டும். தர்மாதர்ம பரிக்ஷயத்தால் முக்தி கைகூடுமென்றதால், தர்மத்தைச் செய்யாமலும் அதர்மத்தைச் செய்யாமலுமுள்ளவன் முக்தி பெறுவானோ வெனிற் பெற மாட்டான். எவ்வாறெனில் தர்மஞ் செய்யாதபொழுது அதர்மஞ் சித்தித்து நிச்சலத்துவ முண்டாகாது. அதர்மஞ் செய்யாத பொழுது தர்ம முங் கைகூடாது. ஆதலால் தர்மாதர்மங்களைப் பயன் விரும்பாது செய்து அதனால் விளையும் புண்ணிய பாபங்களை ஞானமாகிய அசியினால் நீக்கி முக்தி யடையவேண்டும்.

அக்கினியானது உலர்ந்த விறகைக் தகிக்குமாறு, ஞானமென்னுந் தீயானது சுபாசுபங்களாலுண்டான தர்மாதர்மங்களாகிய விறகினைத் தகித்துவிடுகின்றது. மணிமந்திரௌஷதங்களை யுடையவன் பாம்பொடு பழகியிருப்பினும் விஷபாதை யடையாதது போல, ஞானமுடையவன் இந்திரியங்களாகிய பாம்புகளுடன் கூடியிருப்பினும் அவற்றால் ஒரு துன்பமு.மடையான். மந்திரௌஷதியுடையவன் விஷபானஞ் செய்யினுந் துன்பமடையான் போல ஞானமுடையவனைப் பாபங்கள் துன்புறுத்தமாட்டா. ஞானத்தைப்போலவே தியானமும் விளங்கும். அவையிரண்டும் சமானமாகவுள்ளவை. ஞானத் தியானங்களையுடைய முனிவன் சௌக்கியமடைந்து ஆயுளிறுதியில் மோக்ஷத்தை யடைவான். தியானத்தால் அகண்டைசுவரியமும், ஐசுவரியத்தால் உத்தமமான சுகமுமுண்டாகும், பின்னர் ஞானத்தால் அந்தச் சுகத்தை வெறுத்துப் பிறவியை யொழித்து முக்தியையடைவான். உத்கீதாதி யுபசானைகள் - யாகதானாதி - அநுஷ்டா னங்கள் - தியான. சமாதி முதலியவற்றால், உண்டாக்கத்தக்க ஞானமானது நித்தமும் சுத்தமும் சூக்ஷ்மமும் பிரசன்னமும் தோஷரகி தமும் சிரேஷ்ட மும் முத்திக்கேதுவுமான தாகும். தியானயாகமே பிற யாகங்களைக் காட் டிலுஞ் சிறந்ததென்று கொள்ள வேண்டும். அந்தர்யோகமான இந்தத் இயானயாகத்தால் எப்பெழுதும் சிவபெருமானைப் பூஜை செய்பவன் அடைதற்கரிய உயர்கதியை யடைவான். இந்திரியங்களை யடக்கி மனத்தைச் சிவபெருமானிடத்திலிருத்தி, பத்துத் திசைகளிலும் நடுவிலும் இன்னும் பிற விடங்களிலும் அச்சிவபிரானே யிருக்கின்றார் என்று தியானிப்பவனைப் பரமயோகியென்றுணர வேண்டும். கர்மயாகத்திலுந் தட்பாயாகம் பத்துப்பங்கு உயர்ந்தது. தபோயாகத்தைக் காட்டிலுந் தியானயாகம் நூறு பங்கு உயர்ந்தது. ஞானத் தியான ஸ்வரூபமும் சூக்ஷ்மமுமான சிவயோகமே சிறந்த மஹாயாகமாம்.

சிவபூஜை செய்தவன் அகண்டமான பிரபல ராஜபோகமும், அக்கினி காரியஞ் செய்தவன் சம்பத்தும், ஜபஞ்செய்தவன் பாபரிவாரணமும், ஞானத்தியானங்கள் செய்தவன் முக்தியும் பெறுவான். பாபக்ஷயஞ் செய்தவனுக்கே ஞான த்தியானங்களில் மனஞ்செல்லும். ஒருகோடி வருஷப் பிரயத்தனத்தால் யோகசித்தியும், அரைக்கோடி வருஷப் பிரயத் தனத்தால் அக்கினி காரியசித்தியும், காற்கோடி வருஷப் பிரயத்தனத்தாற் புண்ணியஸ்தலவாசமும் புண்ணிய தீர்த்த ஸ்நானமுங் கைகூடும். அக்,கினிகாரியஞ் செய்பவனுக்குப் பகவான் அக்கினியிலும், பண்டிதர்களுக்கு அவர்கள் இதயத்திலும், அஞ்ஞானிகளுக்கு விக்ரஹங்களில் மாத்திரம் ஞானவான்களுக்கு எல்லாப் பொருள்களிலும் விளங்குவதாகக் கொள்கை. மகாயோகிகள் தங்கள் ஆத்துமாவே பரசிவமென்று கொள்வரன்றி விக்கிரஹங் களில் மாத்திரம் தியானஞ் செய்யமாட்டார்கள். அவ்விக்கிரஹங்களும் யோகிகளின் மனத்திற் றரிசித்தவகையாகவே நிர்மாணஞ் செய்யப்பட்டுள்ளன. சாந்தஸ்வரூபியாகிய சிவபெருமானைச் சர்வவியாபகனென்றுணர்ந்து ஸ்மரணை செய்பவன் எவனோ அவனிதயத்திலேயே சங்கரபகவானும் நீக்கமற எழுந்தருளியிருப்பர். இதயத்தில் தன்னுள்ளேயே விளங்குந் தலைவனைக் காணமாட்டாதவர்கள் இறைவனெங்கேயோ இருக்கிறானென்று திரிகிறார்கள். சர்வாந்தர்யாமியாய் எல்லாப் பொருள்களிலும் சிவபெருமானே நிறைந்திருக்கின்றார் என்றுணர்ந்த சிவயோகிகள் ஒருநாளாகிலும் அரைநாளாகிலும் வசித்த இடத்தின் பாக்கியமே பாக்கியம். அதுவே தீர்த்தம். அதுவே தபோவனம், யோகஞ் செய்யவேண்டுமென்று கருதியவன் அவ்வாறு நினைத்த மாத்திரத்திலேயே அடையும்பலனை அநேகயாகங்கள் செய்தவனும் அடையமாட்டான். நவமணியுங் கல்லும் இரண்டுங் கற்களேயாயினும், கல்லைச்சுமந்தவன் தேககஷ்ட முதலியன அநுபவித்தும் விசேஷ சுகத்தை யடையாமல், மணியைச் சுமந்தவன் சுகமடைவான் போல, கர்மயாகஞ் செய்தவன் கஷ்டம நுபவித்தும் விசேஷ பலனை யடையாமல் ஞான த்யான யாகஞ் செய்தவன் சிறந்த பலனையடைவான்.

உலகத்தில் அரசனாயிருப்பவனுக்கு அவனருகிலிருக்கும் மந்திரி முதலானார் பிரீதியுண்டுசெய்து பிறர் பிரீதி செய்யாததுபோல், தியானயோ கஞ்செய்தவர்கள் சிவபெருமானுக்குப் பிரியவான்களாய்க் கர்மயாகஞ் செய்தவர்கள் பிரியவான்களாகமாட்டார்கள். யானையின் தந்தங்களில் உள்ளே யிருப்பவை அறுக்கப்படாமற் சுகமா யிருப்பவையும் வெளியே தோன்றுபவை அடிக்கடி அறுபட்டுக் கஷ்டமடைவனவும் போல, சிவபெருமானை அந்தரங்கமான தியானயாகத்தாற் பக்தி செய்பவர்கள் சுகமடைபவர்களாகவும் புறம்பே கர்மயாகத்தாற் பக்தி செய்பவர்கள் கஷ்டமடைப்வர்களாகவுங் கொள்ளவேண்டும். ஆதலின் தியான யோகத்தால் மனத்துக்கு மாத்திரம் விஷயமாகவும் மகத்துவமுடையதுமான ஞான முண்டாகும். அவ்வகைய தியான யோகத்தை அறிவுள்ள புருஷன் அப்பொழுதுஞ் சிவார்ச்சனையாகச் செய்யவேண்டியது. ஆனால் கர்மயாகத்தாற் பலனில்லையோ எனக்கேட்பாயாயின், கர்மயாகத்தாலும் பயனுள்ளது. அஃதெங்ஙனமெனில், யானையைப் பிடிக்கவேண்டியவன் தன்னிடத்தில் நெடுநாளாகப் பழகிவந்த ஒரு யானையை உடன் கொண்டு வனத்தை யடைந்து ஆங் குப்பல யானைகளுடன் போர்செயது கொண்டிருக்கும் யானையைத் தன் யானையாற் பிடித்துக்கொண்டு வருமாறு, அடைதற்கரிய ஞானயாகத்தைத் தான் நெடு நாள் பழகிவந்த கர்மயாகத்தினாலேயேயடைய வேண்டியது. ஆகாயத்திற் பறக்க விரும்பும் பறவையானது தன் ஒரு சிறகினாற் சாத்தியப்படாது இரண்டு சிறகுகளாலும் பறக்குமாறு, சிவசாயுச்சியத்தை யடைய வேண்டியவன் கர்மயாகத்தால் அடைந்த தியானயாகவுதவியாலடைய வேண்டியது என்றும் பெரியோர் சிலர் சொல்லுவர். ஒரு முக்ஷுர்த்த காலம் சிவபெருமானைத் தியான யாகத்தால் அர்ச்சித்தவன் பெறும் பேறு இத்தன்மைய தென்று அளவிட்டுச் சொல்ல ஒருவருக்குந் தரமன்று. தியானயாகஞ்செய்ய யத்தனித்தவனுக்குத் தெய்வீகமாக அநேக விக்கினங்கள் சம்பவித்தபோதிலும், சிரத்தையும் குருபக்தியுமட்டும் உண்டாயிருப்பது பற்றி, உருத்திரலோகத்தை யடைந்து ஆங்குள்ள சகல சுகங்களையு மநுபவித்து யோகிகளது புனிதமான குலத்தில் ஜனித்து ஞானயாகம் பெற்றுச் சமுசார விரக்தியடைவான். அதமம் மத்திமம் உத்தமமெனச் சிரத்தையானது முத்திறப்படும். ஞானயோகமானது மூன்று ஜனனங்களிலுங் கைகூடப்பெறாதவனுக்கு அசிரத்தையுண்டென்று கொள்ளவேண்டும். பக்தியோடு சிவபெருமானைத் தியானஞ்செய்வோன் விரதத்தாலுந் தவத்தாலுங் கோரத்தக்கவையாவும், பெற்று ஞானமடைந்து நித்யமான மோக்ஷசுகத்தை யடைவான்.

கர்மயாகஞ் செய்வோருக்கு ஒருதரம் தானஞ்செய்தால், சாதாரணமான வேதியருக்குப் பத்து ஜனனங்களில் தானஞ் செய்த பலனும், தபோ நிஷ்டர்களுக்குத் தானஞ் செய்தால் ஏறு ஜனனங்களில் தானஞ்செய்த பலனும், கர்மயாக தயோகமுடையவருக்குத் தானஞ்செய்தால் ஆயிரஞ் சனனங்களிற் செய்தபலனும், சிவபக்தர்களான தியானயாக முடையவருக்குத் தானஞ் செய்தால் லக்ஷ ஜனனங்கனிற் செய்த பலனும் உண்டாகி, அது அற்பதானமாயினும் எக்காலமும் பலனளிக்கத்தக்கதாக முடியும். இதில் தேசம் காலம் விதி சிரத்தை முதலியவற்றாற் சற்பாத்திரமான சிவ பக்தனுக்கு அற்பமாயினும் விசேஷமாயினுஞ் சக்திக் கேற்பச் செய்த தானமானது அக்ஷயமான பதவியைக் கொடுக்கும். தேசகாலங்களைக் கவனித்து விதிப்படி சிரத்தையோடு சத்பாத்திரனுக்குத் தானஞ் செய்தவனும், ஹோமஞ் செய்தவனும் அக்ஷயமான பலனடைவதிற் சிறிதும் ஐயமின்று. ஞான மாகிய ஜலத்தால் புனிதமாக்கப்பட்ட மனத்துடன் ஆசாரம் வமிசம் விபூதிதாரணம் முதலியனவுடையவன் சற்பாத்திர சிரேஷ்டனும், தானஞ் செய்தவனது கோரிக்கைகளைக் குறை வறக் கொடுக்கவல்லவனுமாவான்.. ஞானமின்மையாகிய நுரையையுடைய சமுசாரமாகிய சாகரத்தில், ஞானமாகிய தெப்பத்தால் தாண்டித் தன்னுடன் பலரையுந் தாண்டச் செய்கிறவனும், பெரும்பாவமாகிய சமுத்திரத்தை ஞானமாகிய படகினாற் கரை கண்டு பலரையும் தன்னுடன் வரச்செய்து அவர்களால் எண்ணிறந்தவர் களையுங் கரைகாணச் செய்விக்கிறவனும், உத்தமபாத்திரமாவர். சிவயோகியானராவர் வீட்டில் ஒருவேளை பிக்ஷை யேற்கின்றானோ அவனுடைய வமிசத்திலிருப்பவர்கள் யாவரையும் முக்திக்கனுப்புவான். யாகத்தினாலும் தீர்த்தயாத்திரை முதலியவற்றினாலும் உண்டாகும் பலன் களெல்லாம் சிவபக்தர்களுக்கு அன்ன தானஞ் செய்தவனாலேயே உண்டாகும். சாந்தமும் சிவத்தியான முமுடைய ஞானவானுக்குச் சிரத்தையுடன் ஒருமுறை அன்னமளித்தவன் தன் பாவங்களை யெல்லாம் அப்பொழுதே ஒழித்து இஷ்டகா மியங்களை யெல்லாங் குறைவின்றி யடைவான்.

பிதுர்க்களை யுத்தேசித்துச் சிரார்த்தகாலங்களிற் சிவபக்தர்களுக்கு அன்னமளித்தவன் தன் குலத்தவர்களைப் பதினொரு தலைமுறை வரையில் உடன்கொண்டு சிவலோகமடைவான். போஜன காலத்தில் சிவா! சங்கரா! என்று பகவன் நாமத்யானஞ் செய்தவன் புசித்த உணவுகளெல்லாம் சிவப்ரீதியாய்ப் பலனையுண்டு செய்யும். சாஸ்திரோக்தப்படி சிவநிவேதனஞ் செய்து, அக்கினிகாரியம் (வைசுதேவம்) முடித்துத் தன் குருபாகத்தைக் குருவிற்குக் கொடுத்து அங்குவந்த பிராமண அதிதிகளுக்கும் அன்னமளித்துப் பின்னர் புசிக்கவேண்டும். அல்லாதவன் அன்னம் புசித்தவனாகாது சமஸ்த பாவங்களையும் பக்ஷித்தவனாவான். அஃதெங்ஙனமெனில் கிருஷி வ்ருத்தி வர்த்தகம் கோபம் ஸம்மார்ஜனம் முதலியவற்றாற் பலவிதமான - பாவங்கள் புருஷருக்கு விருத்தியாகிக் கொண்டிருக்கின்றன. அப்பாவங்களின் விருத்தியால் ஸம்மார்ஜனம் அஞ்சனம் தோயம் அக்கினிகுண்டம் நிபேஷணமென்னும் பஞ்சஸுநங்கள் எப்பொழுதுங் கிரகஸ்தர்களை ஆச்சிரயித்தே யிருக்கின்றன. தான் புசிக்கும் பக்குவான்னங்கள் யாவும் சிவ அக்னி குரு அதிதிகளுக்கு நிவேதித்துப் புசித்தால் இப்பஞ்ச ஸூநங்களும் இதரமான அநேகபாவங்களும் இல்வாழ்வோரை யடையமாட்டா. ஆதலின் அவ்வுணவினைச் சிவா திகளுக்கு ஆராதித்தே புசிக்கவேண்டும். சிவ அக்கினி குரு முதலியவர்க்கு எத்தனை பறிக்கை நிவேதிக்கின்றார்களோ அத்தனையாயிர வருஷங்கள் சிவபுரத்தில் வசித்திருப்பார்கள். நெய் பக்ஷியங்கள் அன்னம் இவற்றை நிவேதித்தவன் ஏறுபங்கு விசேஷ பலனையடைவான். சாஷ்டிகோதன நிவேதனஞ்செய்தவன் ஆயிரம்பங்கு பலனையுறுவான். சுகந்தமான சாலியரிசியாற் சமைத்த அன்னத்தை நிவேதித்தவன் முற்கூறியதிலும் பத்துப்பங்கு பலனை யடைவான். செஞ்சாலியன்னம் படைத்தவன் முற்கூறியதிலும் பத்துப்பங்குபலனைப் பெறுவான், கமலசாலியன்னம் நிவேதித்தவன் லக்ஷக்கணக்கான பலன் பெறுவான். இவ்வாறு ஒன்றற்கொன்று விசேஷ பலன் கொடுக்கத் தக்கவை. நல்ல பதார்த்தங்களோடு கூட்டி அன்னம்படைத்தவன் புண்ணிய விருத்தி அடைவான். க்ஷீரான்ன நிவேதனத்தால் பத்துப்பங்கு விசேஷபலன் கைகூடும். தயிர் சர்க்கரை கூட்டிய அன்ன நிவேதனத்தால் முந்தியதிலும் பத்துப் பங்கு அதிகபலன் வரும். நல்லசுவையும் குளிர்ச்சியும் பச்சைக் கர்ப்பூர முதலியவற்றின் மணமுமுடைய அறுசுவையோடு கூடிய அன்னம்படைத்தவன் பத்துக்கோடி பங்கு விசேஷ புண்ணியத்தை யடைவான். நெய்யாற் செய்த அதிரசங்களைப் படைத்தவன் பெறும் புண்ணியத்தைப் பெறு வான். இப்படி உருசியுடையதும் நெய்யாற் செய்ததும் மணமுடையது மாகிய இவற்றைப் பக்தியுடன் சிவ அக்னி குரு பந்துக்களுக்குச் சமர்ப்பித்துப் பின்னர் தான் புசித்தவளவில் அக்ஷயமான பலனை யடைவான். சிவயோகிகளைப் பிதுர் தினத்தில் வருவித்து இப்படிச் சுவையோடு கூடிய உணவைப் பக்தி பூர்வமாக அவர்களுக்குப் படைத்தவன் தன் பிதுர்க்கள் செய்த பாவங்களை நீக்கிச் சுவர்க்கலோக மடைவிப்பன். வஸ்திரம் அன்னம் பான முதலியவற்றைச் சிவயோகிகளுக்குச் சிரத்தையுடன் ஒருமுறை யாவது கொடுத்துப் பூஜைசெய்தவன் அப்பொழுதே பிரம விஷ்ணு ருத்திரர்களைப் பூஜித்தபலனையடைவான். சிரார்த்த தினத்திற் சிவாராதனை செய்து சிவயோகிகளைப் பிக்ஷைகொள்ளும்படி விளித்த பொழுதே அவனுடைய பிதுர்க்கள் ஆனந்தித்து நடனஞ் செய்தும் கானஞ்செய்தும் 'அவனை ஆசீர்வதிப்பார்கள்.

விபூதியை உத்தூளனஞ் செய்துகொண்டு உருத்திராக்ஷ மணிமாலை யணிந்து சிவாதி நாமங்களை யுச்சரித்துக்கொண்டு சிவயோகி யொருவன் வந்து வாயிலினின்றவுடனே, அவ்வீட்டிற்குத் தன தானிய சம்பத்துகள் சேரும். உத்தமமான சொர்க்கபதவியு முண்டாகும், ஆதலின், அதிதி வருவ துணர்ந்தவன். அவனை -'அஞ்சலியஸ்தனா யெதிர்கொண்டு அழைத்து வந்து சக்திக்கேற்றபடி பக்தியுடன் அன்னபானாதிகளால் அவனைத் திருப்தி செய்ய வேண்டும். அவ்வதிதி தேஜோரூப முடையவனாயினும் விரூபியாயி எனும் மலினனாயினும் மலின வஸ்திர முடையவனாயினும் அவன் இவ்வகை யினனென்று விசாரியாமல் இவன் சிவயோகியே யென்று உள்ளத்திற். கொண்டு உபசரிக்கவேண்டும்.

பா. கண்ணப்ப முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - அக்டோபர் / நவம்பர் / டிசம்பர் ௴


No comments:

Post a Comment