Saturday, May 9, 2020



சிருட்டியில் மயக்க நிவாரணம்.
   
பிரபஞ்ச சிருட்டியிற் சிலருக்கு மயக்கவுணர்ச்சியுளதாகத் தெரியவருகின்றது. சீவசிருட்டிவேறு ஈசுரசிருட்டிவேறு எனச் சிருட்டியை இருவகைப்படுத்திப் பேசுகின்றனர். எமதன்பரொரு வரெழுதிய சடிதத்தில் தனக்கும் ஏகான்மவாதியாரொருவர்க்கும் நடந்த சம்பாஷணையில், ஏகான்மவாதியார், ஈசுரசிருட்டி வேறு சீவசிருட்டிவேறு, எனச்சிருட்டியை இருவேறுபகுத்து, காமக் குரோத லோப மோக மதமாச்சரியங்கள் சீவசிருட்டி என்றும், தாவர சங்கமங்கள் ஈசுரசிருட்டி என்றுஞ் சொன்னதாக வரைந்துள்ளார். சீவசிருட்டியுள தென்பதற்கு.

''இந்தச் சீவனால் வருமறு பகை யெலாமிவன் செயலல்லாமல், அந்தத் தேவனால் வருமென்ற மூடர்களதோ கதியடைவார்கள்.............என்னுங்கைவல்லிய நூல் வாக்கியம் மேற்கோளாகக் காட்டப்பட்டதாகத் தெரிகின்றது. அறுபகை - காமக்குரோதாதிகள். ஏகான்மவாதியாரது இக்கொள்கையை மறுத்து, வினைக்கீடாகச் செய்யுஞ்செயல்களெல்லாம் பரமன் கட்டளையின் படிச்செய்வதாம், என்று அன்பர்பதிலுரைத்த தாகவும் வரைந்தனர். அன்பர்கொள்கைக்கு. –
''அவனன்றியோரணுவு மசையாது.'' என்னும் தாயுமானவர்வாக்குப் பிரமாண மாக வுதகரிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இவ்விருவர் கொள்கைகளுஞ் சரியா? எனவிசாரித்தல் அவசிய மெனக்காணலால், ஈண்டிதனை யெழுதப்புகுந்தாமென்க.
   
தாவரசங்கமங்கள் ஈசுர சிருட்டி என்றது ஆஸ்திகரெல்லோர்க்கும் ஒப்பமுடிந்த வுண்மையாம். ஆனால், காமாதிகள் சீவசிருட்டிய? என்பதையும், ஈசுரனைப்போல சீவனுக்கும் சிருட்டி சுதந்தரமுண்டா? என்பதையும் முன்னர் அறிய வேண்டுவது ஆவசியகம். தொண்ணூற்றாறுதத்துவ வரிசைக்கிரம நிகழ்த்துமிடத்தில், காமக்குரோதாதி குணங்கள் ''ஆகாயத்தின் கூறு'' என்று சித்தாந்த நூல்களிற் காணப்படுகின்றன. ஆகாயதத்துவம் ஈசுரசிருட்டி, அதனால், அதன் கூறாயுள்ள காமக்குரோதாதிகளும் ஈசுரசிருட்டியாக வேண்டுமே யொழிய சீவசிருட்டி எனல் எங்ஙனம் பொருந்தும்? ஆகாயதத்துவம் என்ன பிரயோசனத்தின் பொருட்டு சிருட்டிக்கப்பட்டதோ, அதுபோலவே, காமக் குரோதாதிகளாகிய அதன் கூறுகளும் ஏதோ பிரயோசனங் கருதி சிருட்டிக்கப் பட்டனவாம் என்று கொள்ளுவதே நியாயமாகும். கூறுகுணம் - அமிசம் ஆம். காமாதிகளின் பிரயோசனம் பின்னால் விளக்கப் படும். அது நிற்க.

சீவனுக்குத் தனக்கென எந்தத் தத்துவ தாத்துவிகங்களையாவது, அவற்றின் குணவியல்புகளை யாவது சிருட்டிக்குஞ் சக்தி அல்லது, சுதந்தரம் உளதா? என்று விசாரிக்கு மிடத்து அற்பமில்லை யென்றே சாத்திரப் பிரமாணத்தினாலும், அனுபவப் பிரமாணத்தினாலும் நன்கு விளங்குகின்றது. அருணூலாகிய திவ்வியாகமங்களில் இது நன்குபரிஷ்கரிக்கப் பட்டிருக்கின்றது.
என்னை? ஸ்ரீமத் பௌஷ்கராகமத்தில், ஞானபாதம் உபதேசித்தருளல் வேண்டும் என்று மகருஷிகள், ஸ்ரீபரமேசுரரைப் பிரார்த்திக்க, பரமேசுரர் ஞானபாதம் உபதேசிக்கத் தொடங்கி, முதலில் பதி இலக்கணங் கூறுமிடத்தில் கீழ்வருஞ் சங்கோத்தரங்கள் நிகழ்ந்தன.

சுலோகம்.
   
ஈசுரர்:      “அசேதனம் ஜகத்விப்ராஸ் சேதனப்ரோணம் விநா
            ப்ரவ்ருத்தௌவாநிவ்ருத்தௌவா நஸ்வதந்தரம் ரதா திவத்''
            “யோத்ரப்ரவ்ருத்தகஸ்ஸக்த : ஸபதி : பரிபட்யதே''
   
பொருள்: - ஓ பிராமணோத்தமர்களே! பிரபஞ்சம் அசேதனம் (சடம்) சேதனனுடைய பிரேரணமில்லாமல் பிரவிருத்தியாவது நிவிருத்தியாவது (தோற்ற ஒடுக்கங்கள்) அடையுஞ்சுவதந்தாமில்லாதது. ரதத்தைப்போல. (ஆதலால்), பிரவிருத்தகசக்தராயிருப்பவர் எவரோ அவர் பதி என்று சொல்லப்படுகிறார். என்பதாம்.
   
ருஷிகள்:    “ஏவம்சேத்சேதனாஸ்ஸந்தி
                  புருஷா ஸ்ஸர்வஸம்மதா :
                  தேஷாமேவாஸ்து கர்த்ருதவம்
                  கிமன்யேனவதேஸ்வரா''
   
பொருள்: - அப்படியானால், ஸர்வமதஸ்தராலுஞ் சம்மதிக்கப்பட்ட புருஷர் (ஆன்மாக்கள்) என்னுஞ் சேதனர் இருக்கின்றனர். பிரோணகர்த்துருத்துவம் அவர்க்கிருக்கட்டும். அன்னியமாக (கர்த்தா) ஒருவர் என்னத்திற்கு? ஈசுரரே ! சொல்லியருளல் வேண்டும். என்பதாம்.
     
ஈசுரர்:       ''அஜ்ஞோஜந்துர நீஸோயம்
            ஆத்மாயஸ்மாத் த்விஜர்ஷபா :
            ஸோபிஸாபேக்ஷையேவஸ்யாத்
            ஸ்வரவ்ருத்தொளகடா திவத்''
            “இஷ்யதேஸகதம்கர்த்தா
            தஸ்மாத்கர்த்தர்மஹேஸ்வர :''
   
பொருள்: - (நீங்கள் சொன்ன) இந்த ஆத்மாவானவன் எந்தக் காரணத்தால் அறியாதவனும், சனன மரணசம் சாரத்தொடக்குண்டவனும், அநீசுரனுமாயிருக்கின்றானோ, அந்தக் காரணத்தால், அவனும் தன் இயக்கத்திற்கு அன்னிய சகாயத்தை யபேக்ஷித்தவனாயிருக்கின்றான். கடத்தைப் போல, அப்படிப்பட்ட ஆத்மா (சுவதந்தரமாகக்கிருத்தியஞ் செய்யவல்ல) கர்த்தா என்று எப்படி இச்சிக்கப்படுவான்? ஆதலால், மகேசுரரே சிருட்டிக்குங்கர்த்தா ஆவர், என்பதாம்.
   
என்று, ஈசுரர் ருஷிகளுக்குப் பதிலுரைத்ததில், ஆன்மா வாகிய சீவன் எந்ததத்துவ தாத்துவிகங்களையாவது, அவற்றின் குணவியல்புகளையாவது சுதந்தரமாகச் சிருட்டிக்க அசக்தன் என்று துணிவாயேற்படுகின்றது. இதனால், ஆகாயத்தின் கூறாகிய காமாதிகள் சீவசிருட்டியாகா என்னு முண்மை நன்கு நாட்டப்பட்டது. அன்றியும், சீவனுக்குத்தனக்கெனச் சிருட்டி சுதந்தரம் உண்டாயிருக்கில் அவன், தனக்குப்பகையாயிருந்து கெடுதிசெய்வனவற்றைச் சிருட்டித்துக் கொண்டு கெடவிரும்பானென்பதே யுண்மை.

“ஏயுமும்மலங்கடத்தந் தொழிலினையியற்றவேவும்
            தூயவன்றனதோர் சத்தி''
   
என்னும் சித்தியார் அரிய பிரமாணம் மேற்கருத்தை வலியுறுத்துதல் காண்க. சிவசத்தி ஆங்காங்கிருந்து தத்துவசத்திகளை இயக்காதாயின், தத்துவங்கள் அசைவற்றிருந்துவிடும். அத்தகையதத்துவங்களுடன் சேரும் ஆன்மாவும் தனது இச்சாஞானக்கிரியைகள் இயங்குதலின்றி யாதொரு செயலுஞ் செய்யவல்லதாகாது. ஆன்மாவின் இச்சாஞானக் கிரிபைகளும் சிவசத்தியியக்கினால் தான் இயங்கித் தொழிற்பட்டு போக்கிய வஸ்துக்களாகிய தத்துவதாத்து விகங்களையுபயோகித்துப் பலனருந்தும். எனவே, சிவசத்தி உடனிருந்து இயக்காவிடில், சேதனாசேதனப் பிரபஞ்சங்கள் அசைவற்றிருந்து விடுமென்பது கருத்து. ஆதலால், ஆங்காங்கிருந்து தத்துவசத்திகளை இயக்கித் தொழிற்படுத்துங் காரணத்தினால் ''அவனன்றியோரணுவு மசையாது' என்பது முதலிய ஆன்றோர் பிர மாணவுரைகளும், ''அசேதனம் ஜகத்விப்ராஸ் சேதனப்ரோ ணம்விநா'' என்பது முதலிய ஆகமப்பிரமாணவுரைகளு மெழுந்து உண்மையை விளக்குவனவாயின.
   
இவ்வாறன்றி அந்தப் பிரமாணவுரைகளுக்கு'' கடவுளே நேரிடநின்று, நன்மை தீமைகளாகிய சகலசெயல்களையுஞ்செய் விக்கிறார்'' என்று பொருள் கொள்ளில், மேலே விவரித்து விளக்கிய தோஷங்களெல்லாம் கடவுண் மேலேறி, அவரது மகாபரிசுத்தத்தன்மையை யழிக்குமென்பதுந்தவிர, நியாயப்பொருத்தமின்றி, அத்தகைய கொள்கையை யவலம்பிக்கும் மதம் கேவல ஆபாச மதமாமென்றும் அறிவுடையோரால் தள்ளப்படுமென்பது முணரத்தக்கது. சிவசத்தி உடனிருந்து இபக்கு முண்மையைச் சுருதியும் மிகவழகுறப் பிரகாசப்படுத்தும். என்னை? தைத்திரீயோபநிஷத்தில் :
  
இதம்ஸர்வமஸ்ருஜத:” இவையனைத்தையும் (அவர்) சிருட்டித்தனர். (தைத் : உ. சா.)
“தத்ஸ்ருட்வாத தேவாநுப்ரவிபாத்” - அதனைச் சிருட்டித்து அதனுட் பிரவேசித்தனர். (தைத். 2. சா.)

தத்துவங்களைச் சிருட்டித்து அவற்றினுள் பிரவேசித்ததாகச் சுருதிகூறுகின்றது. (இச்சுருதியினால், பிரபஞ்சம் மாயாகற்பிதம் (Delusion) என்பார் கோள் மறுக்கப்படுகின்றது. அநுப்பிரவேசித்தனர்? ஏன் அநூப்பிரவேசித்தனர்? தத்துவ சத்திகளை பியக்கித்தொழிப்படுத்தவாம், அனுப்பரவேசித்து இயக்குதற்கு முன் தத்துவங்கள் செயலற்றிருந்தன என்பது கருத்து. இவை போன்ற அரிய வேதாகமமாதி பரமாணவுரைகளின் நுட்பக் கருத்துக்களை ஊகித்து உண்மையுணர்தல் வேண்டும். நிற்க, " தத்து வதாத்துவிகங்கள் ஒன்றையொன்று பிரேரித்துங் காரியப்படுத்தியும் பிரபஞ்சத்தை நடைபெறச் செய்யும் என்றும்,'நியதி'' என்னுந் தத்துவ மொன்று இடையிலிருந்து கன்ம பலன்களை ஏறாமற்குறையாமல் சரிவரப் பகுத்துச் செலுத்தும் என்றும் " ஏன் சொல்லல் வேண்டும்? பரம்பொருளாகிய சடவுள் தாமே சேரிடக்கலந்து நின்று பகிரபஞ்சத்தை நடத்தி, நல்வினை தீவினைகளின் வழியாக, அவரவர் கன்ம பலன்களைத்தாமே வருவிக்கின்றார் என்று கொள்ளுவதில் விரோதம் என்னை?” என்று வினாவில் கூறுவாம்.
   
கன்மபலன்கள் (Cause and effect) ஏது - பயன் ரூபமாக ஆங்காங்கிருந்து இயல்பிலுண்டாகுமுறை மேலேவிளக்கினாம். இனி, தத்துவங்கள் ஒன்றையொன்று பிரேரித்தற்கு நியாயம் வருமாறு : பரம்பொருளினியல்பு “ஸூக்ஷ்மாத் ஸூக்ஷ்மதரம்" குஹ்யாத் குஹ்யதரம்” என்று சுருதிகளில் கேட்கப்படலால் பரமசூஷ்மமாயுள்ள பரம்பொருள், மிகுத்துத் தூலமாயுள்ள பிரபஞ்சத்துடன் நேரிடக்கலந்து நின்று நடத்துதல், அவ்விருபொருள்களின் இயல்புக்கு இயலாதாம். சூக்ஷ்மாதி சூக்ஷமப் பொருள் தூலாதி தூலப் பொருளைக்காரியப் படுத்தவேண்டில், இடையில் சூக்ஷ்மகருவிகளையேற்படுத்தி அவற்றுடனியைந்து நின்றே காரியப்படுத்தல் வேண்டும். திட்டாந்தம் : ஆன்மாவானது தூலதேகத்தைத் தானே நேரிடக்கலந்து நின்று ஏன் இயக்கலாகாது! அது, இந்திரிய அந்தக்கரணாதி சூக்குமகருவி கரணங்களின் வழியாகவே யியக்கி நடத்துகின்றது. ஏனெனில், ஆன்மசூக்கமதரப்பொருள். அது தூலதரப்பொருளாயுள்ள தேகத்துடன் கலக்கவேண்டில், சூக்குமகருவி கரணங்களின் வழியாகத்தான் கலக்கக் கூடும். ஆதலினாலே தான் தூலவுடல் சூக்குமகாணேந்திரியங்களினால் நடத்தப்படக் காண்கின்றோம். வேறொருசாமானிய திட்டாந்தத்தினாலும் இவ்வியல்பின் உண்மை நிலையை எளிதில் விளக்கலாம். என்னை? நீர்கனத்தவல்து, எண்ணெய் மிகலேசானது. எண்ணெய்பை நீரில் விட்டால் மேலே மிதக்கின்றதன்றி கலப்பதில்லை. எண்ணெய் நீருடன் கலத்தற்கு, ஆல்கொஹால் " என்னுஞ் சூக்கும திரவப்பொருளுடன் எண்ணெய் கலந்தால், அப்போது அது நீருடன் எளிதிற் கலக்கின்றது. இதுபோலும் - பர - அபரவஸ்துக்களிடத்தும் உண்மை யியல்பு காணல்வேண்டும். இந்தியமம் எற்றுக்கென்னில், அது பொருள்களுக்கு அனாதியே யேற்பட்டுள்ள தர்மமாதலால், சங்கை செல்லாமையுணர்க, சகச்சிருட்டி. யில் இயல்பு மாறி எதுவும் நடவாது. அது போலவே பரம்பொருளிடத்தும் வைத்து உண்மை காணல் வேண்டும். இந்த இயற்கை நியாயத்தினாலே தான் தூல - சூக்கும - பரரூபங்களாகத் தத்துவங்களையமைத்து, மகாமகிமை தங்கிய இயந்திரிகளாகுஞ் சிவசத்தியானது, அத்தத்துவங்களினுள் ''அனுப்பிரவேசித்து'' நின்று சேதனாச்சேதனப் பிரபஞ்சங்களை யியக்கி நடத்து முண்மை, நமதரிய வேதாகமங்களில் (Revealed) விளக்கப்பட்டுள்ளது அன்றியும், பரம்பொருள் நிஷ்களமாகிய தமது சொரூப நிலையிலிருந்து சிருட்டியா திகிருத்தியக்களைச் செய்யமுடியாது. ஏனெனில், நிஷ்களம் சத்திகளெல்லாம் அடங்கி நின்ற நிலை. அடங்கிநிற்குஞ் சத்திகளால் என்ன கிருத்தியநிகழும்? ஆதலால், சத்திகள் வெளிப்பட்டே பஞ்சகிருத்தியம் நிகழாநிற்கும். சாத்திவெளிப்பட்ட நிலையே சகலம் அல்லது, தடத்த நிலையெனப்படும். சகலம் - கரசரணாதி அவயவங்களுடன் கூடி நின்ற அற்புதத் திருவுருவமாம். சிவசத்தியே பரமசிவத்திற்குக் கரசரணாதியவயவங்களாயமையும். சத்தியின் வடிவம் ஞானம்.

      ''சத்திதன்வடிவே தென்னில் தடையில்லா ஞானமாகும். " - (சித்தியார்)

சித்கனன் என்றதும் இவ்வுண்மையற்றியேயாம். சித் - ஞானம். கனம் - மேனி - உருவம். பரமசிவம் அங்கனஞ்சகளத் திருமேனி கொண்டருளின தினாலேதான் ஆன்மாக்கட்குக் கதிமோக்ஷமுண்டாகக்காரணமாயிற்று. தனு கரணபுவன போகங்களும், வேதாகமசாத்திராதிகளும், தபசு - யோக - சித்திகளும் மோக்ஷசாம்பிராச்சிய சகலபாக்கியங்களும் ஆன்மாவுக்குண்டானது, மகாமகியை தங்கிய தடத்த திருக்கோலமாகிய அக்கருணையின் வடிவினாலேயாம். - பிரமாணங்கள் :
      “ஸ்ருஷ்ட்யர்த்தம் ஸர்வதத்வானாம் -
      லோகஸ்யோத்பத் திகாரணம் |
      யோகினாமுபகாராய ஸ்வேச்சயா சிந்திதம்பலில :''
   
சகல தத்துவங்களின் சிருட்டியின் பொருட்டும், சகலலோகங்களின் உத்பத்தியின் பொருட்டும், சகல லோகங்களின் உத்பத்தியின் பொருட்டும், யோகிகளுடைய தியான பூசைகளுக்கு உபகாரமாம் பொருட்டும் சிவம் சுவேச்சையாகச் சங்கற்பஞ் செய்தனர். (சங்கற்பஞ்செய்து, தமது சத்தியின் வழியாக சகலத் திருவுருவங் கொண்டருளினர் என்பது திவ்வியாகமப் பிரமாணம்.) முக்திக்கு ஞானமே காரணம், ஞானத்திற்கு உபாசனை காரணம், உபாசனை அதாவது, வழிபாடு இல்லாமல் ஞானம் வரமாட்டாது. வழிபாடு (உபாசனை) சகலத்திலேதான் நிகழ்த்தமுடியும். இவ்வுண்மையியல் பின் பொ
ருட்டே நிஷ்களம் சகளமாய் வந்ததென்பது சாத்திரநிச்சயம்.

      "யோகீனாஞ்சயதீனாஞ்ச - த்யானினாம்
      மந்த்ரிணாம்ததா | த்யானபூஜாநிமித்தாயா
      நிஷ்களம்ஸகளம்பவேத்'
   
யோகிகளுடையவும், தியானிகளுடையவும், மந்திரிகருடையவும், தியானபூசைகளின் நிமித்தம் நிஷ்களம் சகளமாய் வரும். (வாதுளம்)
      "சிவன் சகளத்துற்றான் நினைத்தருச்
      சித்துய்யநேயர்கள்'' - (சிவதருமோத்தரம்)
என்னும் பிரமாணங்களால் உண்மை மிகத்தெளிவாகும். ஞானத்திற்கு உபாசனை வேண்டப்படுமென்பது.

        “ஜ்ஞானோபானன கர்மாணிஸாபேக்ஷாணி பரஸ்பரம்=
கர்மம் - உபாசனை - ஞானம் ஆகிய மூன்றும் முறையே ஒன்றையொன்ற பேக்ஷித்து நிற்பனவாம்” (ராகிதை.) என்னும் பிரமாணத்தாலும் நன்கு விளங்கும். உண்மை பிங்கனமிருத்தலால், " ஞானம் ஞானம் " என்று வீணே சொல்லிக்கொண்டு, அதற்கு வழியாயுள்ளகிரியோபாசனைகளைக் கைவிட்டு காலங்கழிப்பார்நிலை பரிதாபமாவதறிக. இந்த நியாயங்களால் சகளோபாசனை யொன்றே ஆன்மாவுக்கு இன்றிய மையாப் பெருந்துணையுந் தெப்பமுமாயிருந்து, சம்சாரசாகரத் தைத்தாண்டு வித்துப் பரமானந்தப் பெருவாழ்விற் சேர்க்கவல்ல பரமோ பகாரியாமென முடிதலால், விவேகிகளானோர், உபாசனையிலுறு தியாய் நின்று, அதன் வழியுண்டா மனுக்கிரக விசேஷத்தால் மேலோருறவும், ஞான நூற்தெளிவும், திருவருண் ஞானப்பேறு மடைந்துய்க வெனத் திருவருளைச் சிந்திப்பாம்.

      ''நல்லாரிணக்கமம் நின்பூசைநேசமும் ஞானமுமே
      யல்வாது வேறு நிலையுளகோ !”             - (பட்டினத்தடிகள்.)
   
சிருட்டியில் மயக்க நீங்குங்கால், அதனுபகாரவியல்பு விளங்கவரும். வரவே, சிருட்டிப்பொருள்களை முறையுடனுப்போசித்துப் பயன்பெறும் நல்லறிவு திக்கும். உதிக்கவே, அத்தனை புமுதவியுபகரித்து வரும் பரம்பொருளின் கருணையும் நோக்கமும் இனைத்தெனத்தோன்றும். தோன்றவே, பரம்பொருளின் அனுக்கிரக மின்றிக்க திவாரா வுண்மை விளங்கும். விளங்கவே
அனுக்கிரகப்பேற்றின் பொருட்டுப் பரம்பொருளுபாசனையில் இச்சையெழும். ஆதலால், ஆரம்பத்தில் விளக்கியமுறையில் சிருட்டியினுண்மையை விசாரித்து மயக்க நீக்கிக்கொள்ள வேண்டுவது நம்கடனாவதறிக, சுபம்,
முற்றிற்று.
                               C. M. அரங்கசுவாமி நாயகர்.
சித்தாந்தம் – 1913 ௵ - மார்ச் / ஏப்ரல் / ஆகஸ்ட் ௴
                                                           

No comments:

Post a Comment