Saturday, May 9, 2020



சீதையின் திருமணம்
[“காந்தருவன்"]

மிதிலை மன்னன் தன் நாட்டிலே வதிந்த அருந்தவ முனிவர்களையு மந்தணரையு மழைத்துத் தன் உள்ளக் கருத்தினை யறிவித்தனன். அவர்களும் மன்னன் கூறி யாங்கு ஒரு பெரிய வேள்வி யொன்றை வேட்டற் கிசைந் தனர். இப்பெரிய வேள்விக்காக வேண்டிய பொருட்களெல்லாம் மிதிலா நகரத்தே வந்து குவிந்தன. இரும் பினைத் திரித்து முறுக்கி விட்டாலன்ன திரண்ட கொம் பினையுடைய ஏறுகளைப் பளிக்கு நுகத்திற்பூட்டி, வரம் பில்லாத மணிகளாற் புனையப்பட்ட பொற்கலப்பையிலே, வயிரத்தானியன்ற திண்ணிய கொழுவினைப் பொருத்தி, பெரிய வேள்விக்கான நிலத்தைப் பன்முறையுமுழுதனர்.

மன்னன் வேட்கும் வேள்வியாலாயபேறு வேட்கா முன்னரே கைகூடியாங்கு. கொழுமுனையிடத்தே கதிரவனுதித்தா லென்னவும், புவிமடந்தையின் றிருவெழுந்தா லென்னவும், பாற்கடற்கண்ணே யமிர்தத்துடன்றோன் றிய திருமகளும் நாணி யொதுங்கும்படி தொழுந் தகைமையளாய பெண்ணரசி யொருத்தி தோன்றினாள். அழகு பன்னெடுங்காலம் தவமுயன்று பெற்ற பேறென்னுந் தன்மையளாய விவடன் குணங்களையென் கூறுவது. அவை இவளையடைந்து பெருமைபெறத் தம்முட் பிணங்கு வனவாமே. புலவோர் உவமைக்காய் எடுத்தாளும் அத் திருமகடானே ஈங்குற்றன ளென்னில் அவட்கு வேறு ஒப்பு எங்ஙனம் கூறவமையும். அவளது அழகொழுகு திருமேனியின் வனப்பைக் கண்டுளந்தேறல் எவர்க்கோ தான் பொருந்துவது. கணமுமோயாது கடிதினிமைக்கின்ற கண்களையுடைய, இந்த இழிந்த மண்ணோர்க்கு அது கூடுவ தின்று. இமையா நாட்டம் பெற்றும் இருகண்ணால் அமையாதென் றொழிந்தார்கள் தேவர்கள். அவளைச் சிர மீது கரங்குவித்து இறைஞ்சுதலும் எம்மனோர்க்குக் கூடுவதின்று. உமையாளொக்கும் மங்கையரே விழைந்து அங்ஙனஞ் செய்தற்குரியர். இத்தகையளாய சீதையின் திருமேனி கண்டபின் மேனகையை யுள்ளிட்ட தெய்வம் பெண்களெல்லாரும் பொலிவிழந்து வருந்த, தன்னேரில் லாத மங்கையரடிபோற்ற மின்னரசென்னும்படி பெண்மை நலங் கனிந்து நின்றாள்.

'சொல்லுந் தன்மைத் தன்றது குன்றுஞ் சுவருந்திண்
கல்லும் புல்லும் கண்டுருகப் பெண்கனி நின்றாள்"

குன்றுஞ் சுவருமுதலானவே அவளழகு கண்டு உருகிய விட்டனவென்னின் வேறு யாமுரைப்பதென்னை?

சனகனும் இவளின் திருமணத்தையுன்னிக் கவலையுறது அருந்தவர்களை யுசாவினன். மேருவை வில்லாக வாங்கிய வீரன் தன்பாகத்தே யுரைகின்ற வுமையினை யிகழ்ந்த "னெனத் தக்கன் வேள்விசார்ந்து, தன் கைக்கொண்ட கார்முக மொன்றினாலவரை மடங்கடித்து, அவன் வேல யையு மழித்துத் தனது பெருஞ் சீற்றத்தையு மாற்றம் அக்கொடிய சிலையைக் காணவுந் நடுங்குந் தேவா கிரங்கி, சனகன் குலத்துட்டோன்றிய மன்னனொருவன் வைத்தனன். அக்கார்முகத்தை யேற்றும் ஆற்றல் வா தானே மங்கையின்றிருமணத்திற்கு முரிய னென்பது முதலிய யாவர்க்கு முடம்பாடாயிற்று.

தேனிலே பொய்த்தெழும் வண்டரென்ன, நில ரெல்லாரும் சீதையின் பொற்புக்குத் தம்முள்ளமு'' முடைதலாலே, திருமணத்தை விரைந்து வந்து கூடி தக்கன் வேள்வியைப் பொடி செய்து வெற்றிகொண்ட அக் கார்முகத்தைக் காணவுங் கூசி யாற்றாராய் மனந்தளர்ந்த னர். கையினாற் றீண்டவு மஞ்சி நடுங்கி யகன்றாரெனினும், காதற் கடவுள் எய்து தொலைக்கும் பூங்கணைகட்காற்றாராய். சீதையை வலிந்து கொள்வான் றொடங்கிப் பெருஞ்சமர் விளைத்தனர். மிகவும் உக்கிரமான போர்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. ஈற்றில் இரவிலே கூகையைக் கண்டஞ்சிய காக்கைக ளென்னும்படியாக, அரிதினகன்று மறைந்தனர். அற்றை நாட்டொடக்கம் அப்பாழுஞ் சிலை யருகு சென்றவ ரெவருமிலர். அன்று மறைந்த வேந்தரி லெவராவது மீண்டுந் தோன்றினாரல்லர். சனகனுக்குத் துக்கம் பொங்கி வழிந்தது. இனிச் சீதைக்கு மணமில்லை பென்றே அவன் நினைந்துவிட்டான். அவளுடைய நல்வாழ் லைச் சிதைத்த சிலையின் மீது பெரிய வெறுப்புண்டாயிற்று.

சனகன் கவன்றான். விதியின் விளைவு அவனுக்கு எப் படித்தெரியும். அந்த வரம்பில்லாத பெரிய அழகினை யுடை யாளை, மணஞ்செய்தற்குரியவன் இராமனே யென்பதை, அவன் எவ்வாறு அறியமுடியும். சீதையின் மனத்தைச் சனகனால் நிறைவேற்ற முடியாவிட்டால் தருமமாவது இல்லையா?'' தருமமே தூது செல்ல'' என்கின்றார் கம் பரும். தருமமே வடிவான விசுவாமித்திரன் தனாது வேள்வி காத்தற்கு இராமனை வேண்டிக்கொண்டான். "பெரிய காரியமுள' என்று கூறியவனை மிதிலைக்கும் வருமா றழைத்தே விட்டான்.

இந் நிலவேந்தர்க்கெல்லாம் காணவேயுள்ளம் நடுங்கச் செய்யும் சிலை இராமனுக்கு ஒருபொருளன்று. நிலமகளது நெடிய முதுகு வலிக்கும்படி மேருமலையும் நாண நின்ற அக் கார்முகம், சீதை என்னும் நங்கைக்குச் சூட்டுதற்குரிய மலர் மாலையாகவே தோன்றலாம். அராவணை துறந்துபோந்த அமலற்குமரியதுண்டோ? தெய்வப்புலமை வாய்ந்த கம்பர் பெருமானுக்கு, இராமனைக்கொண்டு அச்சிலையை முறித்து, மணஞ்செய்விக்க மனமிசையவில்லை. வில்லேற்றினானிவளை யெய்தும்; கொல்லேறு தழுவினானிவளை யெய்தும் என்ற்ற றொடக்கத்தன வெல்லாம் வடநாட்டாரது மணமுறைகள். இம்முறைகளே ஆசுரமணம் எனவுங் கூறப்படுவன. அரக்க ரால் எல்லாவுலகும் துன்புறுதலைக் கண்டுளம்பரிந்து அயனு மரனுஞ் சென்று வேண்டுதலாலே தயரதன் மதலையாயத தரணியிலுற்ற எம்பெருமானுக்குக் கைக்கிளைப்பாலதாய இந்த இழிந்த ஆசுரமணத்தைப் பொருத்துதற்கு எள்ளள வேனும். கம்பருக்கு உள்ளமிசைந்திலது. ஐந்திணையென்னும் அன்புடைக் காமத்தைப்பற்றிக் கம்பர் ஏலவேயறிந்திருந் தார். தமிழ் மணம் என்று சிறப்பித்தோதப்படும் மணவினை யைப்பற்றி அவர் சிந்திக்கலானார்.
''காந்தர்ப்ப மென்பதுண்டாற் காதலிற்கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்தகூட்டம்

என்றெல்லாம் காந்தருவ மணத்தை அவர் பின்னருங் கூறு கின்றார். காந்தருவ மணமாவது உருவுந் திருவுங் குலனும் குணனும் பிறவுந் தம்முளொத்த தலைவனுந் தலைவியும், கொடுப்பாரு மடுப்பாருமின்றி, பால்வரை தெய்வமிடை நின்று புணர்க்க, ஒரு பொழிலகத்துத் தமியராய் எதிாய் பட்டுத் தம்வயமழிந்து புணர்வதாம். இத்தலைமக்களும் முன் னர்க் கருங்கடற் பள்ளிக்கண்ணே கூடியிருந்து பிரிந்து மீண்டுங் கூடிவாழ விழைந்தவர்கள். தம்மை யொப்பாரும் மிக்காரு மில்லாத தலைவர்கள். சிதைக்கு உண்மையான பொருத்தமான தலைவன் இராமனே. இஃது எங்கும் வென ளிடை மலையாய்த் தோன்றிய பின்னருமேன், ஒருவாக கொருவர் முந்துறப் போட்டி செய்து பெறும் ஆசுரமன் முறையினைக் கைக்கொள்ள வேண்டுமெனக் கம்பர் பெரு மானுடைய மனசிலே தோன்றிற்று. தம்மையாளுடைய நாயகற்குக் காதல் மணவினையே செய்வதென முடிவு கொண்டுவிட்டார் கம்பர்.

சிவபிரான் தக்கன் வேள்வியைப் பொடிசெய்த வில்லை சனகன் குலத்திலே வைத்தது உண்மைதான். அதனை வளைத்து நாணேற்றுவானே சீதையின் மணத்திற்குரிய னென யாவராலு முறுதிப்படுத்தப்பட்டது முண்மைதான். அவ்வுறுதிப்பாட்டினின்று அவர்கள் ஒருபோதும் தவற மாட்டார்கள். எனவே இராம காதையைச் செய்தவர் பலரும், இராமன் அந்த வில்லை முறித்தே சீதையைப் பெற்றா னென்று கூறிவிட்டனர். கம்பருக்கு இம்மணம் பொருந் கவேயில்லை. காதலின் தெய்வீக சத்தியை யறிந்தவர் கம்பர். மும்மையால் உலகந்தந்த முதல்வற்குடா காதல் அரிதாயிற்று. ஆயினுமித் தலைமக்களை ஒரு பொழிலிடத் கெதிர்ப்படச்செய்து புணர்ப்பது முடியாதாயிற்று. என்னை, அக்கொடிய கார்முகத்தை யேற்றினானே நங்கைக்குமுரிய னென்ன வுறுதிப்பட்டதை யாங்ஙனம் மறுக்கலாகும்.

இராமனுஞ் சீதையும் ஒரு பொழிலகத் தெதிர்ப்பட்டுத் தமியராய்ப் புணர்ந்தாரென்னலே உண்மையில் கம்பருக்கு மகிழ்ச்சி யளிப்பதாகும். இராமனுக்கு அது கூடுவதாயி னுஞ் சீதைக்கு முடியாது. சீதை வில்லை வாங்கியவருக் கன்றே உரியள். இந்தப் பாழுஞ் சிலையைப்பற்றிய விடர்ப் பாடுகளை யொதுக்கி வைத்துவிட்டார் கம்பர். இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடென்ற முறையாக வொழுக்கங்க ளைக் கூறாவிடினும் காந்தருவமணத்தின் உள்ளீடான செய்தி களை யவர் கூறத்தொடங்கினார். பால்வரை தெய்வத்தினாணை யால் ஒருவரை யொருவர் முந்துற வெதிர்ப்பட்டுத் தம்வய மென்பதழிய உள்ளங்க ளொன்றிவிடுதலே காந்தருவ மணத்தின் உயரிய அம்சமாகும். இராமனையுஞ் சீதையை யும் எதிர்ப்படச் செய்து அவர்களுள்ளங்களை யொன்று விப்பதாய உள்ளப்புணர்ச்சியை யளிப்பதென்று புலவர் நினைந்துவிட்டார். இப்போது அப்பாழுஞ் சிலையைப்பற்றிச் சற்றே மறந்துவிட்டார். இத்தகைய சந்தர்ப்பங்களிலே தான் கம்பருடைய புலமையும் பொங்கி வழிவது. அதுவும் இராமனுடைய திருமணமென்றாற் சொல்லவும் வேண் டுமோ?

''வடகடலிட்ட ஒரு நுகம் ஒரு தொளைதென்கடலிட்ட கழியிடைச்சென்று கோத்ததுபோலவும், வெங்கதிர்க்கனலி யுந் தண்கதிர்மதியமுந் தங்கதி வழிவித் தலைப்பெய்தது போலவும். அவனுமிளைஞர் குழுவினீங்கி, இவளுமாயத்தாரி நீங்கி, தமியராய் ஒரு பொழிலகத் தெதிர்ப்பட்டனர்” என் றெல்லாங் கூறுகின்றார்களன்றோ, அவ்வாறே இராமனும் அயோத்தி நீங்கி யருந்தவன் வேள்விகாத்து, இளவலோடும் முனிபுங்கவரோடும் மிதிலாநகரத் தெருவீதிவழியே வந்து கொண்டிருந்தான். சீதையுங் கன்னிமாடத்தே, தன் தாதியா புடைசூழத் தாரகை நடுவண் தண்மதிபோலப் பொலிவுற்று விளங்கினாள். மனத்தினாலே எண்ணற்குமரிய பெண்மை நலங் கனிந்த விப்பேதை இவ்வகையளாய்க் கன்னி மாடத்தே நிற்ப, எதிரே வீதியில் இராமனும் வருவதானான்.

ஏதோவொரு பெரிய காந்தசத்தியவர்களை யீர்த்தது போன்றிருந்தது. அவர்கள் ஒருவரை யொருவர் திரும்பி நோக்கினார்கள். கண்ணிணைகள் ஒருவழியியைந்தன. எங்கா வது அகன்றிடாதவாறு இறுகப்பிணித்துக்கொண்டன. அவ்வளவே சீதையும், நாணமும் மடனுமச்ச மென் றினைய வெல்லாந் துறந்தாள் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்து உள்ளத்தைப்பறிகொடுத்தாள். இராமனும் என்றும் நல்வழி யிலே ஏகுகின்ற மனத்தினையும் கலங்கா நிறையினையு மிழக தான். அண்ணலு மவளும் தம்வய மென்பதழிந்து உள்ளம் நெகிழப் பெற்றனர். இருவருணர்ச்சியு மொன்றியது. கனணிணைகள் தம்முட்பிணித்ததும் உள்ளம் நெகிழ்ந்துணாக யொத்ததும் நோக்கிய கணமே நடந்தேறியன.

“எண்ணரு நலத்தினா ளினைய னின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி யொன்றையொன்
றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட
அண்ணலு நோக்கினா னவளு நோக்கினாள்''

ஒரு பொருளினை யொருவர் கண்டாராயின், சிறிது போழ் தாவது, அதனை நோக்கி, அதன் சிறப்பினாலே தம்முள்ள முந்தப்பட்டு, அதனை விழைதல் செய்தலென்றே யுலகத் தியற்கை. காந்தருவ மணத்திலே தலைமக்கள் ஒருவரை யொருவர் விழைதல் அங்ஙனமன்று. எக்காலமுந் தம் மொழுக்கங்களிற்றிரியாத தலைமக்கள் தம்வயமழிந்து விழைவு செய்தல் விதியின் பாலதாம். எனவே அவர்கள் விறைதல் காட்சி நிகழ்ந்த பின்னரன்றாம். காட்சியோ இடன் கிளர்ந்தே நிறையழிவுமுள வொருப்பாடு முண்டாம். இவ்வாறான தூய தமி ழொழுக்கத்தினைக் கம்பர் நன்கறி வர். கண்ணிணை யொன்றையொன்று கவ்வ, உணர்வு நிலை பெறாதுள்ள மொன்றிட, அண்ணலு மவளு நோக்கினா ரென்கின்றார். நோக்கும் பொழுதும், உணர்வழிந்துள்ள மொன்றிய பொழுதும், ஒன்றெனவே அபேதமாகக் கூறிய கம்பர் பெருமானது புலமை விழுப்ப மறிந்து போற்றற் குரியது. காட்சியோடுடன் றொடர்ந்தே, நிறையழிவும் உள்ள மொன்றலு முண்டாமென்னுங் காந்தருவ மணத்தின் தன்மையைக் கம்பர் அழகாக அமைத்துவிட்டார்.

சீதை நோக்கிய நோக்காகிய கூரிய வேலிணைகள் இரா மனது வலிய புயத்திற் றைத்தன. தாக்கிக் கொல்லும் அணங்கனைய ளென்றும் பாராது இராமனது நோக்கும் அவடனத்திற்றைத்தது, இவர்கள் இயற்கையாக நோக்கும் நோக்குகளல்ல இவை. இயல்பாய நோக்கு காட்சியை மாத்திரம் பயப்பது. இந்நோக்கிய நோக்குகள் தைத்து வருத்து மியல்பின வென்கின்றார்.

"கண்ணொடு கண்ணிமை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள், என்ன பயனுமில'' இவர்கள் வாய்ச் சொற்களினாலே ஒருவர்க்கொருவர் தம் வேட்கையையுரைத்து அன்பு செய்ய வேண்டுவதின்று. அவர் தம் கண்ணினானே தம் உள்ளக்கிடக்கை யெல்லாம் வேண்டியவா றுணர்த்துவர். “அறைபறை யன்னகண்ணார், என்றார் வள்ளுவரும். இம்மட்டோ இவர்கணோக்கு ஒருவரை யொருவர் தமமட்து தீர்த்துக் கொள்ளும் பாசமுமாயிற்றாம். இராமன் தனது நோக்காகிய பாசத்தினால் சீதையைப்பிணித்துத் தன் மனத்தே வைத்தான். சீதையும் இராமனைத் தன்மனத்தே யீர்த்துக்கொண்டாள். இங்ஙனமாக இவர்கள் இதயங் களிலே மாறிப் புகுந்து கொண்டார்கள்".

''பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்
தொருவரை யொருவர் தம் முள்ள மீர்த்தலால்
வரிசிலை யையனு வாட்க ணங்கையும்
இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார்''

"ஆனந்த வெள்ளத்தழந்து மோருயிரிருருக் கொண், டானந்த வெள்ளத்திடைத் திளைத்தாலொக்கும்” என்று கூறப்பட்ட இன்பத்தினை நுகர்தற்கு, ஒருயிரே இராமனுஞ் சீதையுமாக ஈண்டுற்றார்கள். அவர்கள் கண்டமாத்திரததே இரண்டுடற் குயிரொன்றாயினார்கள், இன்னுங் கருங்கடற் பள்ளியினீங்கி இத்துணைக் காலனும் கலவிதவாது பிரிந்துறைபவர் மீண்டு கூடினால் அவர்கள் மகிழ்ச்சியும் சொல்லும் தரத்ததாமோ. அஃது இயலாதெனவே கம்பர் கூறி யொழிந்தார்.

“கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்
பிரிந்தவர் கூடினாற் பேச வேண்டுமோ"

அந்தமற்ற அழகினை யுடையானாகிய இராமனை யணைய முடியாமையினால், அவள் ஓவியப்பாவையை யொத்தாள்.இராமனுந் தன் சிந்தையையும் நிறையையும் பின்னே விட்டு அக்கொடிய முனியுடனப்பாற் செல்லலானான். ஐந்திணை யென்னு மொழுக்கத்திலே, இயற்கைப் புணர்ச்சிக்குத் தமியராய் எதிர்ப்படலன்றே யிலக்கணம். கம்பர் அதனைப் பொருட்படுத்தாது முனிவனோடும் இளவலோடும் இராமனை யெதிர்ப்படச்செய்து, இயற்கைப் புணர்ச்சியிலே சிறந்த தாய் உள்ளப் புணர்ச்சியைப் பொருத்தி விட்டார். மேல். மெய்யுறு புணர்ச்சிக்கெல்லா மிடையூறா யிருந்தவன் அம் முனிவனே யென்ற வெறுப்புணர்ச்சி, "முனியொடு மறை யப் போயினான்'' என்ற சொற்றொடரிலமைந்திருப்பது நுனித்தறிவார்க்கு நன்கு புலனாம்.

கம்பர் பிடிவாதமாகத் தாம் விழைந்ததை நிறைவேற்றியே விட்டார். இங்ஙனம் தம்முளொத்த இத்தலைமக்கள் களவொழுக்கம் நிகழ்த்தி முறையானே வரைந்துபோகும் தமிம் மணத்தையின்னும் பெறமுடியாது, இயற்கைப் புணர்ச்சியிலே விழுமிதான உள்ளப் புணர்ச்சியொன் றையே கம்பராற் றரமுடிந்தது. இராமன் சீதையை மணக்க வேண்டின் அக்கொடிய சிலையை நாணேற்றியே தீரவேண்டும். கம்பருக்கு இனி யதில் வெறுப்பின்று. நூறுதரமும் அதைச் செய்விக்க அவரிசைவார்.

மறுநாளே முனிவனிராமனை யழைத்துச் சனகன் கொலுமண்டபத்தே கொண்டு சென்றான். ஆண்டு இராமன் குலமுறையினையும் ஆண்மை நிலையினையும் எடுத்தெடுத்து மொழிந்தான். சனகனுக்குப் பழைய துக்கம் மேலும் வளர்வதாயிற்று. அவன் மனம் அந்த வேதனை தருகின்ற வில்லை நோக்கியது. தனது மாதினையு மெண்ணி னான். அவன்நிலை யாராலுணர்த்த முடியும். போத கத்தை யொத்த, இராமனது பொலிவினை நோக்கிப் பெரு மூச்செறிந்து “ஐயன்வில், ஏற்றுமேலிடர்க் கடலேற்றும்., என மொழிந்தனன். முனிவனுமிராமனைப் பார்த்தான்.

“பொழிந்தநெய் யாகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கன லென்ன வெழுந்தான்''

இராமன், நெய்வார்க்கப்பட்ட எரியென்னும்படி யெழலும், முனிவரார்த்தனர். விண்ணவர் பூமழை பொழிந்தனர். நகர மாந்தர்கள் அகமலர்ந்தனர். இராமன் 'மாகமடங்கலும் மால்விடையும் பொன்,னாகமு நாகமு நாண நடந்தான்.'' அவன் தன் கையிலே சிலையை எடுத்தானோ இல்லையோ செவிகளெல்லாம் செவிடுபடும்படியான பேரொல் பிறந்தது. சனகன்றுயரும் விண்டது. முனிவன் அகம் மலர்ந்தது. நகர மாந்தர் மகிழ்ச்சியைக் கூறவும் வேண டுமோ?

இராமனும் சீதையும் ஒருவரையொருவர் காதலித்து விட்டனர். இனியவர் பிறரையுள்ளிற் கற்பழியும், இராமன் அன்று தன்னுளத்தைக் கலக்கிய கன்னிகையை யன்றி வேறெவரையும் கண்ணினாற் பாரான். ஆயின் சிலையேற்றலும் அந்நங்கையைப் பெறுவதற் கென்பது தெரிந்ததாகை யால், அதனைவிழைந்து செய்து உள்ளம் மகிழ்ந்தான. சீதையென் செய்வாள் பாவம், தன் கருத்தினைக் கொள்ளை கொண்ட அந்தக் கொண்டல் வண்ணனையன்றி வேறு கருதாளாமே, பிறரெவராவது சிலையேற்றித் தன்னை மண் நேர்ந்தாலென் செய்வது. இதனை யெண்ணவே சீதையின் றுயர மளவுகடந்தது. அவ்வமையமே வில்லிறுத்த செய்தியு மந்தப்புரத்தை யெட்டியது. சீதை கலங்கினாள். தன் உள் ளத்தினைக் கவர்ந்த அக்கார்வண்ணன்றானோ வில்லேற்றினா னென்று ஏங்கினாள், பிறனாயின் என் செய்வதெனப் பதைத் தாள். தன் தோழி கூறிய குறிப்புக்களைக்கொண்டு அவன்றானே வில்லேற்றியிருக்க வேண்டுமென் றெண்ணினாள். சொல்லிய குறியினத் தோன்றலேயவ னல்லனே லிற்பம் னென்றகத்து ளுன்னினாள்.''

இன்று வில்லேற்றியவன் தான் கண்ட விராமனென் பது ஒரு ஐயவுணர்வே. இவ்வையவுணர்வு கொண்டு கடி மணத்திற் கிசைதலெங்ஙனம். மங்கையருக்குக் கற்பன்றோ கண்ணாவது. அன்று வீதியிற் கண்டவன்றானோ வில்லேற் றினா னென்பதை, எங்ஙனம் உறுதியாக, அவளால் அறிய மையம். அவளோ ஊமனைப்போன்று தனக்குற்ற நோயை நுவலாமடியாது விம்மலுறுகின்றாள். முன்னரே இராமனைக் காணாது வில்லேற்றி மணஞ் செய்திருந்தால், சீதைக்கு இக்கலக்கமான துன்ப நிலையேற்படாது. கம்பர் தமிழ் மணஞ் செய்துவைக்க முற்பட்டது சீதைக்குப் பெரிய ஆபத்தாய் முடிந்தது. கம்பர் இந்நிலையில் அவளைக் கைவிட விரும்பவில்லை. காதல் மணத்திற்குச் சந்தர்ப்பம் கொடுத்த வாறே, சீதையின் ஐயவுணர்வு தெளிதற்கு மொரு சந்தர்ப் பத்தை யளிக்கிறார். ஐயவுணர்வுபோய், மெய்யுணர்வு பிறந்துவிடின் கடிமணத்திற்குத் தடையேது?

தயரதன் முதலானோர் வந்து சேர்ந்தனர். சேடியர் சீதையைக் கோலஞ் செய்து மண்டபத்தே தருவித்தனர். தன் தாதை பக்கலிலே யிருந்தாள் சீதை. இவ்வமையத்திலே தன் ஐய வுணர்வைப் போக்குதற்குச் சீதைக்கு இடம் வகுத்தார் கம்பர். ஆயின் பெண்டிர் தமது நாண்டகைமையால், அவ் வமயத்திலெவரையுந் தலைநிமிர்ந்து பாராரன்றே. அதுவு மிராமனைப் பார்த்தால் முடியாதன்றே. இதற்கென்ன செய்வதென்று கம்பர் தயங்கவில்லை. அவள் தனது கைவளை திருத்தும் சாட்டாகக் கடைக்கண்ணினானே, இராமனை யுணர்ந்தாளென்று கூறிவிட்டார்.

“ஐயனை யகத்துவடி வேயல பறத்தும்
கைவளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்''

சீதையின் ஐயம் தெளிந்தது, அவளினியிறக்க வேண்டிய தில்லை. ஏன்? அவள் தனது அகத்திலிருந்த வடிவத்தைப் புறத்திலுமே கண்டுவிட்டாள். அன்று தன் கண் வழி நுழைந்த கள்வனையே இன்று கடிமணமயரப் போகின்றாள்.

கடிமணம் வெகு விமரிசையாய் நடந்தேறியது. கம்பர் பிடிவாதமாக நின்று இவர்களுக்கோர் காதல்மணமே செய்து வைத்தார். வில்லேற்றுதலையுமவர் ஒழித்துவிடவில்லை. அதனையும் பொருத்தமாகக்கொண்டு நுழைத்துவிட்டார். சிதையையும் அவடன் கற்புநெறி வழாது கடிமணத்திற் குடமிட்டும் வகைசெய்து, அவள் காதல்மணவினையை முற்று வித்து விட்டார்.

சித்தாந்தம் – 1942 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment