Saturday, May 9, 2020



சிவமயம்,
திருச்சிற்றம்பலம்.
ஒரு உபநிடத மந்திரம்.

''ஆத்மா னம் அரணிம் கிருத்வாப்ரணவந்சஉததாராணிம்
ஞான நிர்மதனாப் பியாஸாத்பாசம்த கதிபண்டித:"

“ஆன்மாவைக் கீழ் அரணியாயும், பிரணவத்தை மேல் அரணியாகவும் ஞானத்தினால் எவன் கடைகின்றானோ அவன் பாசத்தைச் சுட்ட பண்டிதனாவான்.” (கைவல்ய உபநிடதம்:)

நம் தமிழ் சித்தாந்த தீபிகை முதற்றொகுதியுள் இருமொழியினும் வல்லுனபாகிய ஸ்ரீமத் காசிவாசி செந்திநாதய்யரவர்களின் கைவல்ய உபநிடதமொழி பெயர்ப்பும், விருத்தியும் பதிக்கப்பட்டுள்ளது. அவர் விசேட உரையில் இவ்வுபநிடதத்திற் காணப்படும் மந்திரங்களுக்கும் மற்ற உபநிடதங்களிற் காணப்படும் இயைபுகளைக்காட்டி, உப்பிருங்கண வசனங்களையும் புகட்டிச் சித்தாந்த உண்மைகளை நாட்டியிருக்கின்றனர்.

இவ்வுபநிடதத்தில் காணப்படும் ஒருமந்திரத்தையே ஈங்கெடுத்து நாம் ஆராயப்புகுந்தது.

இவ்வுபநிடதத்தைச் சிலர் சமய சம்பந்தமானதென்றும், நவீன மென்றும் பகருவர். இதை நாம் மறுக்கின்றோம். எனினும் இது ஸ்ரீமத் நீலகண்ட சிவாசாரியருக்கும், ஸ்ரீமத் சங்கரருக்கும், ஸ்ரீமத் பாகவத புராணத்துக்கும் முற்பட்டதாகச் சொல்வோம். ஸ்ரீ சங்கரர் இதனைப் பஞ்சருத்ரங்களில் ஒன்றாகக்கொண்டுவிருத்தி செய்திருக்கின் மூார். பாகவத வசன வறுமாறு.

“கைவல்யம், சுவேதாசுவதரம், அதர்வசிரஸ், அதர்வசிகை, காலாக்னிருத்ரம் ஆகிய இவ்வைந்து உபநிடதங்களும் உன் ஐந்து முகங்கள், சிவனெனும் உன் பெயர் உயர் மெய்ப்பொருளாகும் (VII. 29.)

மேல், நாம் மேற்கோளாகக்காட்டிய இம்மந்திரம் சுவேதாசுவதர உபநிடதம் 1 - ம் அ. 14. மந்திரத்தோடு இயைபுடைத்தாகும். அது வருமாறு.

''ஸ்வதேக மரணிம்கிருத்வா ப்ரணவஞ் தோத்தராரணம்
த்யான நிர்மதனாம் யாசாத்தேவம் பஸ்யேனிகூடவத்.''

என்தேகத்தைக் கீழ்கடைக் கோலாகவும், பிரணவத்தை மேற் கோலாகவும் தியானத்தினாற்கடைந்து, உள்ளே ஒளித்திருக்கும் தேவனைப் பார்ப்பேன்'' (I, 14).

இம்மந்திரங்களை இதற்சமுன்னும் பின்னுமுள்ள மந்திரங்களு டன் கோத்துப்பார்க்கும் போது சில பூர்வபட்சிகளுடைய மதம் அவலப்பட்டொழிவதைக் காண்க. அவர் கூற்றும், ஈஸ்வரன் (சகுணப் பிரமம்) பிறப்பிறப்பென்னும் வலையிற்சிக்குண்டுழல்வதும், விறகிற் தீயைப்போலவும், பாலில் நெய்போலவும், மழுங்கிக்கிடந்த தன்சொரூபம் விளங்கும் பொருட்டே என்பது.

"அப்பிற் கரைந்த உப்பைப் போலவும், (சாந்தோக்ய உபநிடதம் VI. 14) கடையுமுன் கட்டையிற் றீயைப்போலவும், கடையுமப்பாலிற் படுவெண்ணெயைப் போலவும், (சுவேதாசு - உபநி I. 15; IV. 16) பிரமன் ஒவ்வொரு பிராணியின் ஆத்மாவாக மறைந்து நிற்கின்றான் (பெசண்டு அம்மையாரின் இந்துமதம் ப -) 6.) இவ்விதம் மயங்கியதின் காரணமும் அவ்வம்மையார், தாம்போனவழி அம்மந்திரங்களை உதகரித்துக் கொண்டதேயாம். அம்மந்திரங்களையும் உள்ளபடி உணரில் இம் மயக்கத்துக்கு இடந்தந்ததில்லை யென்க.

I. 11 - மந்திரம்.

“தேவனை அறிவதனால், சர்வபாசங்களும், துக்கமும் பிறப்பிறப் பும் அறும். அவனைத் தியானிக்கவும், உடலைக்கீழேவிட்டு, விஸ்வைஸ் வரியத்தோடு கேவல ஆப்தகாமனாகின்றான்.''

இப்பதிஞானமும் உயிருக்கு எப்படி உறுதியாகுமெனின், அடுத்த மந்திரம் அரைகின்றது.

இது என்றும் ஆன்மாவில் உறுதியாய் இருப்பதாய் அறிய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் உறுதியாய் அறியவேண்டு தின்று, உண்பவன், உண்ணப்படுவது இவைகளைப் பிரேரிப்பவன் என்பவற்றை உணர்ந்தானோ அவன் எல்லா முணர்ந்தவனாகின்றான். இதுதான் திரிவித பிரமம்.'' (I. 12.)

ஆன்றோர் வாக்கில் அவநம்பிக்கை உடையவர்கள், நாம்கடவுளைப் பார்க்கவில்லையே. எப்படி நம் ஆன்மாவில் கடவுள் மறைந்திருக் கின்றார் என்று கேட்பின், அதற்கு மறுமொழி அடுத்த மந்திரம் தருகின்றது.

''வக்நேர்ய தாயோனிகதஸ்ய மூர்த்திர்நத்திரியஷ்யதே - நைவசலிங்கநா ஸ, யூய ஏவெந்தனயோனிக்ரிஷ்யஸ்த்வோ பயம் வைப்ரணவேதேகே * ''

* இம்மந்திரத்தில் யோனி, லிங்கம் என்னும் பதங்கள் வருவதை கவனிக்கற்பாலது. யோனி என்னும் பதத்துக்குக் குழி என்னும் பொருள். ஈங்குக் குறிக்கப்படும் கீழ்கட்டைக்குப் பேர். வேதங்களில் ஹோமாக்கினி வளர்க்கும் குழிக்கு, யோனியென்றே பேர்வழங்கப்படுகிறது. அந்த யோனியிலிருந்த தீயை என்னிருதய குகையில் வைத்தேன் என மந்திரங்களில் பேசுகிறது. அக்குகையில் மேலோங்கி வளரும் திக்குலிங்க மென்று இம்மந்திரத்திலும் பேசப்படுகிறது. இந்த அகண்டாகாரசோதியையே இலிங்கபுராணத்தில் ஓங்காரவடிவாக அமர்ந்த இலிங்கமாகப் பேசப்படுகிறது. அக்கினியே ருத்ரனஎன இருக்கு வேதம் பேசியபடியால், அவ்விலிங்கமும் ருத்ரனுக்குப் பேரும் அடையாளமுமாயிற்று.

"எப்படி யோனிக்குள்ளிருக்கும் போது, தீயின் உருவம் விளங் கவில்லையோ, எனினும் அதன் இலிங்கம் எப்படி நசிக்கவில்லையோ அந்த இலிங்கமும், இருகட்டைகளைக் கடையவும் விளங்குமோ, அது போல், இவ்விரண்டும் தேகத்தில் பிரணவசக்தியால் காணப்படும் " (I. 13)

இதனை, மேற்காட்டியிருக்கும் 14 - வது மந்திரம் விரித்துப்பேசி யது. அடுத்த மந்திரத்தில் அநேக உதாரணங்களை அடுக்கியிருக்கின்றது.

“எள்ளில் எண்ணெய் போலவும், ததியில் வெண்ணெய்போலவும், கட்டையில் தீயைப்போலவும், ஆன்மாவில் (சீவன்) ஆன்மாவை (பரமான்மா) எவன் சத்தியத்தாலும் தவத்தாலும் தேடுகின்றானோ, அவன் பார்க்கக்கூடும்” (1, 15)

அடுத்தமந்திரமும்,

''பாலில் நெய்போலும், அப்பரமாத்மா எங்கும் வியாபித்திருக் கின்றான், அவனை ஆத்மாவில் உணரவேண்டும். அந்தப்பரமன் பரம உபநிடதங்களின் விஷயம். பரம உபநிடதங்களின் விஷயம்'(I. 16)

பூர்வபட்சியார் குறித்துள்ள 4 - ம் அ - 16 - ம் மந்திரத்தையும் காட்டுவோம்.

“பூதங்கள் தோறும் மறைந்து நின்று, எல்லாவற்றையும் காப் போனாவன். எல்லா மகிமையும் பொருந்திய மகரிஷிகள் பரமனைக் காண்கிறார்கள். அப்படி அவனைக் காணவும், இறப்பு என்னும் பாச த்தை (கயிற்றை) அறுக்கிறார்கள்.” (N. 15)

நெய்யினும் பரமாயும் நுண்ணிய தாயும் எல்லா பூதங்களிலும் கலந்து நிற்கும் சிவபெருமானை ஏகன் அநேகன் ஆகி எல்லாவற்றினு ள்ளும் கலந்திருக்கும் அத்தேவனை உணரின் ஒருவன் எல்லா பாசங்க ளினின்றும் விடுபடுகின்றான்'' (IV. 16)

இம்மந்திரங்களைத் தொடுத்துப் படிக்கும் யாவரும், பெஸண்டு அம்மையாரின் கட்சிபெருமையுடைய தன்றெனக் காணலாம். இம்மந் திரங்களில் சீவாத்மா, பரமாத்மாவினுடைய தன்மைகளையும், நுண் ணிய தினும் நுண்ணீயதாகிய சிவத்தை அறியும் ஆற்றல் இல்லாத உயிர், நெஞ்சுநெக்குருகி அயரா அன்பு பூரித்து உண்மையோடும், பிரவணத்தோடும் சிந்திப்பானாயின் எவ்விதம், எல்லாவற்றும் கலந்து மறைந்து கிடக்கும் அப்பரத்தைக் காணவும், சிவசூரியப்பிரகாசம் எழுந்து மாயையாகிய இருள் இரிந்து தன்கட்டுகள் எல்லாம் விடுமா றும் துலக்கியுள்ளது. நெய்பாலில் கலந்திருந்த போதிலும்; வெண்மை யாக மோரில் மிதந்தபோதிலும், அதன் தன்மை குன்றவும் அல்லது அதிகரிக்கவுமில்லை மறைந்திருந்து வெளிவந்ததனால், அந்நெய்க்கு ஒரு பயனுமில்லை, இருநிலையிலும் நெய் நெய் தான், ஆயின் வெண்ணெய் யாக முன்நின்றதனால் பின் யாவருக்குப் பலன் எனின், நூகருவானுக்கே, பாலைக்குடிக்கும் போது அதில் உள்ள நெய்யைச் சுவைப்பதினும், வெண்ணெய்க்காகத் திரண்டதை உண்பது எவ்வளவு சிறப்பு எனக்காணவும், நுண்ணியாதியை உடையார் பரமேஸ்வரன், மறைந் திருந்து வெளிவந்தால் அவனுக்கு ஏதோ பிரயோசனம் உளதென என்றும் மதியார். ஆயிலும், பிறவிப்பிணியில் உழலும் மாந்தர்க்கு, அவ்வமிர் தனாற் பயனுண்டு. இன்னுமொரு சாரார் முக்தியில் பாசட்சயம் என்றே நிகழ்வதாகவும். உயிர் ஞானமற்றுத் தற்சொரூப மெய்தி, அநுபூதியின்றித் தானாகின்றது என்பார்கள். உண்மையில், பாசவீக்கமாகும் அந்தக்ஷணமே, தற்சொரூப மடைவதும், சிவன் கழல் எய்தி அப்பரமா நந்தத்தில் முழுகுவதும் உண்டாகின்றது. ஆகையால் அந்த க்ஷணம் தன்னையும் தன் இறைவனையுமாகிய இரண்டு †பேற்றையும் பெறுகிறான்.

மேலேகாட்டியுள்ள 13 - ம் மந்திரத்தில் காணப்படும் (இரண்டு) என்பது இவ் விரண்டாகிய சீவனும் சிவனுமே. மீட் (G. R. S. Mead) மொழி பெயர்ப் பாசிரியர் இவ்விரண்டும் நிற்குணப் பிரமமெனவும் சகுணப்பிரம் மெனவும் பிழைபடக்கூறுகின்றார். மேலும் 14 - ம் மந்திரத்தில் காணப்படும் தேவன், சகுணப்பிரமமெனவும், 15 - 16 - ல் கண்ட ஆத்மா நிற்குணப் பிரமமெனவும் கூறுகின்றார். அறிஞர் அவ்விதம் வேற்றுமை காணாரென்பது திண்ணம்.

வேதாகமேதம் புருஷம் மகிந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவிதித்வாதி மிருத்யு மேதி நாய: பந்தா வித்யதேயனாய "

''இருளுக்கு அப்பால் ஒளிரும் சூரியனைப்போன்ற மகாபுருஷ. னைப்பார்க்கின்றேன். அவன் ஒருவினையே உணர இறப்பைத்தவிர்க் கின்றான். வேறுவழியில்லை'' (III. 8 சுவேதா - உபநி)

பலன் தேடுகிறவன் எவன், தேடும்பலமும் எது, தேடும் வழி எது என்பவைகளைப்பற்றி எவ்வித ஐயம் வராமல் தெள்ளிதாய்க் கூறும் இம்மந்திரத்தை விட வேறு கிடைப்பதரிது.

எனினும், தேடுவோனுடைய முயற்சியாலேயே இது முடியுமோ வெனின், அது முடியாது.

“அணோரணியான் மகதோமகியானாத் மகுஹாயாம் (நிகிதோஸ்ய ஜந்தோ : தமக்ருதம் பச்யதி வீதசோகோதாது: ப்ரஸாதானமகிமானமீசம்.



சிறிதிற்சிறி தாயும் பெரிதிற் பெரிதாயும் இந்த உயிரின் இருத யக்குகையின் கண்ணே அவ்வாத்மா (பரமாத்மா) இருப்பது. அதனை அவன், ஆசையற்று, துக்கநீங்கிப் பார்க்கின்றான், மகிமை பொருந்திய ஈசனுடைய பிரஸாதத் தினால்'' (ச. உ. III, 20) கட, உ. II. 20

அப்பரமாத்வை, வேதத்தினாலும், அறிவாலும் கேள்வியாலும் அடையமுடியா. எவனை அவ்வீசன் எடுக்கின்றானோ அவன் அவனை யடைபவன். அவன் (ஈசன்) அவன் (உயிர்) தனுவைத் தன்ன தாக்கிக் கொள்கின்றான். (கட, 2. II. 23)

இவ்விரண்டு மந்திரங்களின் கருத்து, திருவாசகத்தின் ஓர்திவ்ய சூக்தியிலமைந்து கிடந்தது.

“இன்றெனக்கருளி இருள் கடித்துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தே
நீயலாற் பிறிது மற்றின்மை
சென்று சென்றணுவாய்த்தேய்ந்து தேய்ந்தோன்றாம்
திருப்பெருந்துறை யுறைசிவனே
ஒன்று நியல்லை யன்றியொன்றில்லை
யாருன்னை யறியகிற்பாரே.''

இப்பாசுரத்தை நாம் ஒடுங்கிய உள்ளத்தோடும் சிக்திப்பாம். ஒன்வொரு பிறவிக்குருடனும் தன்கண்பெறப் பேராசைப்படுகின்றான். அவன் விரும்பிய வண்ணம் கண்பெற்றானாயினும் அவன் கண் இருள் நீங்குமோ? சிவசூரியன் போருள் - புரிந்து அவனுக்குப் பிரசன்ன மாகாவிடில் அது எப்போதும் முடியாதென்றே சொல்லலாம். அச்சூரியனாலும், அவன் குருட்டுத்தன்மை யிருக்கும் வரை ஒருபயனுமின்று ஆகவே ஒருவன் இருவினை யொப்படைந்து மலபரிபாகப் பெற்ற அன்றே தன் லுள்ளி துவரை மறைந்து நின்ற பேரருளாளனும் அவ னுக்குத்தரிசனமாவன் - இவ்விதபாசவீக்கத்தில் இன்பம் தலைப்படுமோ என முன்னும் கேட்டிருக்கின்றார்கள் இன்னும் கேட்பார்கள். நம் மெய்கண்டநாதனும் இவ்வின்பத்தின் அபரிமிதத்தை, கண் பெற்றா லுடைய இன்பத்தினின்றும் உய்த்துணரும்படி சொல்லுகின்றார். 16 அதில் இன்பம் உண்டோ இல்லையோ? என்னும் குருடனுக்கு, மறைந் தும், இப்போதே கண்பெற்றபோது அவனுக்குப் புலப்பட்டு முள்ள சூரியனுக்கு என்னோவேற்றுமை? என்னோ இழிவு ஏற்றம்?

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா வாநந்தம் பெற்றேன்
இயாது நீ பெற்ற தொன்றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான்
திருப்பெருந்துறை யுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய்
யானிதற்கிலனோர் கைம்மாறே.

நாம் தேடும் பொருள் நம்முடைய ஆன்மாவோ வென்பதின் ஐயம் நீக்குதற் பொருட்டே நாம் மேற்கோளாகக் கொண்ட சுருதி யில்,'' ஆத்மானம் அரணிம் கிருத்வா'' என்றமையால். சீவான்மா வையே கீழ்கடைக் கோலாகக் கொண்டிருக்கின்றது. சுவேதாதா சுருதி உடலை கீழ் அரணியாகக் கொண்டது. அப்பொழுது அடையும் பொருள் தன் ஆன்மாவும் ஆன்மநாயகனுமாகிய இரண்டு என ஏற்பட்டது. சாதாரணமாக, என் உள்ளம், என் உடல், என் கண், என் உயிர், என் சிந்தை என்பன வெல்லாம், ஒரே பொருளைத் தந்து, உயிரையும் அதன் கீழிட்ட கரணங்களையும் குறிப்பிக்கும். என் சிந்தையில் உள்ளான், என் கண்ணிலுள்ளான், என்னிலுள்ளான், என்னுட லிடங்கொண்டான் என்பன இறைவனையே குறிக்கும்.

ஜே. எம் - நல்லசாமி பிள்ளை, B A, B, L.

சித்தாந்தம் – 1915 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment