Saturday, May 9, 2020



ஐதரேயோபநிஷத்து

முதலத்தியாயம் கண்டம் 1.

1. இங்குக் காணப்படும் ஜகத்து சிருஷ்டிக்கு முன்னே ஒரு ஆத்து மாவேயிருந்தது. * அதனையன்றி வேறுவியாபாரமில்லை, அவ்வாத்துமா ஜகத்தினைச் சிருஷ்டிக்க வேண்டு மெனச் சங்கற்பித்தது.

* பிரளயகாலத்தில் குணருத்திரன் விட்டுணு பிரமன் முதலினோர் தொழிலிழந்துந் தூங்கியும் கிடத்தல் போல் கிடவாது விழித்திருந்தே பெயர்த்துஞ் சிருஷ்டி தொடங்கும் சிவபரம் பொருள் ஒன்றேயாகலின், ஆன்மா ஒன்றே யிருந்ததென்றதென்க. இங்ஙனம் கருப்பசிசுவைக் கருப்ப வயிற்றடக்கிக் கூறுமாற்றான் ஒருத்தியே யிருந்தனள் என்ற தொக்கு மெனினுமேயும். * அற்சகலினன்றே “ தஸ்மிந்தே வாகிலம் விச்வம் ஸங்கோசித படவர்த்ததே” என்று பைங்கலோபநிஷத்து கூறுவதாயிற்று. அதாவது அவனிடத்திலேயே எல்லாப்பிரபஞ்சமும் சித்திரப்படம் சுருட்டப்பட்டமைபோல அடங்கியிரு தது எனவாம். இராமாநுஜர் இச்சுலோகத்திற்கு வியாக்கியானம் செய்த போது பிரளயகாலத்தில் இலட்சுமியோடுங் கூடிய நாராயணனொருவனே யிருந்தானென்றும், சிவன் முதலியபக்தஜீவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாரென்றும் எழுதிவைத்தனர். இருபத்து நாலு தத்துவங்களுடன் கூடிய பிரதிஷ்டாகலையிலுண் டாகும் பிரகிருதிபிரளயத்தில் நாராயணனொருவனே யிருந்தானென்பதிற்றட்டில்லை. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த சாந்தியாதீத கலையிலுண்டகும் சர்வ சம்மாரகாலத்தில், ''சர்வகர்த்தாவான உருத்திர னொருவனேயுளன் இரண்டாமவனுளனெனயாரும் ஒருப்படுகின்றிலர்" எனும் பொருளைத்தரும் ''ஏகோருத்ர ஏக எவருத்ரோகதவி நீயாயதஸ்துர்ய " எனும் அதர்வசிரோப நிஷத்தானும், 'பிரமனும் விஷ்ணுவும் உருத்திரனும் எல்லாப்பூதங்களோடுஞ் சிவத்தாற் படைக்கப்படுகின்றனர், வடவைத்தீயால் ஜலம் நாசமாதல் போல அப்பூதங்களோடு அவர்களே இலயமேயடைகிறார்கள்'' எனும் பொருளைத்தரும் "ப்ரஹமாவிஷ்ணுச்ச ருத்ரச்ச ஸர்வாவா பூதஜா தய : நாசமேவாநு தாவந்திஸலிலா நீ பாடபம்'' எனும் மகோபநிஷத்தானும் சிவபெருமானொருவனே ஜகத் உற்பத்திக்கு முன் இருந்தானென்பது வச்சிரலேபமாம். அன்றியும், பாத்துக்குப் பாமாவன் பிரம்மன், அவனுக்குப்பரமாவன் விஷ்ணு, வனுக்குப்பரமாவன் ஈசனாகியசிவன்'' எனும் ''பராத்பரதரம் ப்ரஹ்மதத்' பராத்பாதோஹரி : தத்பராத்பரதோ ஹீச" எனும்சரபோபநிஷத்து கூறியிருக்கவும் ப்ரதிஷ்டாகலைக்குட்பட்ட பிரளயகாலத்தில் சிவன் தூங்கினானென்றெழுதிய எழுத்து ஊஷர பூமியிற் செய்தகிருஷியேயாம்.

மகாசங்காரமுடிவில் உலகங்களை மீளம்படைத்தற் பொருட்டுப்பாமாத் மாவாகிய ஈஸ்வரனுடைய பராசத்தி மாயையதிட்டிக்க அம்மாயை காரியப்பட்ட அவசரமே சங்கற்பமாம்.
2. இங்கனம் சங்கற்பித்து அம்பஸ் என்னும் சவர்கலோகத்தையும், அதன்மேலுள்ள உலகங்களையும், மகீசி என்னும் அந்தரிட்சலோ கத்தையும், மரம் என்னும் பூமியையும், ஆபஸ் என்னும் ஜலசம்பந்த - மான பூமியிற் கீழுள்ள உலகங்களையும் சிருஷ்டித்தனர்.

3. இவ்வுலகங்களைப் பரிபாலிப்பேனெனச் சங்கற்பித்தனர், புரு ஷாகாரமான வொருபிண்டத்தைப் பஞ்சபூதங்களினின் றுந் திரட் டினர்.

4. அப்பிண்டத்தினைப் பற்றிச் சங்கற் பித்தார். பட்சியின் முட்டை போன்று அப்பிண்டத்தில் முகமுண்டாயிற்று. அம்முகத்தில் வாக்குண்டாயிற்று, அவ்வாக்கினின்றும் அதன திஷ்டானமாக அக்கினிதேவதை தோன்றிற்று. பின் நாசியுண்டாயிற்று, அந்நா சி'யினின்றும் கிராணேந்திரிய முண்டாயிற்று. அதன திஷ்டானமாக வாயு தேவதை யுண்டாயிற்று. பின் கண்ணுண்டாயிற்று. அதில் நேந்திரேந்திரிய முண்டாயிற்று. அதன திஷ்டானமாகச் சூரியதேவதை யுண்டாயிற்று, பின்கா துண்டாயிற்று. அதில் சுபோத்ரேர் திரிய முண்டாயிற்று, அதன திஷ்டானமான திக்தேவதையுண்டாயிற்று, பின் தோல் உண்டாயிற்று, அதில் ஸ்பரிசேந்திரிய முண்டாயிற்று. அதன திஷ்டானமான ஒளடதங்களும் வனஸ்பதிகளும் தோன்றின, அந்தக் கரணத்தின திஷ்டானமான இருதயத்தினின்று மனம் தோன்றிற்று. அதன திஷ்டானமாகச் சந்திரதேவதை தோன்றிற்று. பின் நாபிதோன்னமாறிற்று. அதன் பாயு வென்னு மிந்திரியத்தில் அதன திஷ்டானமான மிருத்தியு தேவதையுண்டாயிற்று. பின் குகியம் தோன்றிற்று, அதன் ரேஜஸ்சுடன் கூடியகுக்ய இந்திரியத்தின் அதிஷ்டான மான ஜலமுண்டாயிற்று.

இரண்டாவது கண்டம்.

1. இத்தேவர்கள் சமுசாரத்திலழுந்தினர். இவர்கட்குக் காரணமாக விருந்த முதல் அப் புருஷபிண்டத்திற்குப் பசிதாக முதலியவற்றை யுண்டாக்கினர். அப்பிண்டத்தினின்றும் வெளிப்பட்டவர்கட்கு அங்கனம் பசிதாக முதலிய உண்டாயின. நாங்களெவ்விடமிருந்து அன்னத்தைப் புசிப்போமோ அத்தகைய விடத்தை காட்டியருளுகவென்று அவர்கள் முதல்வனைக் கேட்டார்கள்.

2. அவர்கட்கு (ஈஸ்வரன்) பசுவைக் காட்டினார். அது போதா தென் றனர், ஒரு குதிரையைக் காட்டினார், அதுவும் போதாதென்றனர். ஒருபுருஷனைக் காட்டினார். சந்தோஷயென்ற தேவர்கள் ஒப்புக் கொண்டார்கள், அவர்களை யதனுள் பிரவேசியுமென்றனர்.

3. வாக்கின் அபிமானியான சூரியன் நேத்திரத்திலும், சுபோத் - பாபிமானியான திக்குகள் காதுகளிலும், ஒளஷதிகளும் வனஸ்பதிகளும் துவக்கிலும், மனாபிமான சந்திரன் இதயத்திலும், அபானாபி மானியான மிருத்யு நாபியிலும் ரேதசாபிமானியான ஜலம் குகியத்திலும் அடைந்தார்கள்.

4. பசி தாகம் எங்கட்கிருப்பிடம் வேண்டுமென ஈஸ்வரனைக் கேட்டன. இத்தேவதைகளேயிடமென்றனர், அவர்கட்குக் கிடைக்கும் ஆகாரத்தில் உங்கட்கும் பாகமுண்டென்றனர். ஆகலின் எந்தத் தேவதையின் பொருட்டு அவிசானது கிரகிக்கப்படுகிறதோ அத்தே வதையிடத்தில் பசிதாகங்கட்குப் பாகமுண்டு.

மூன்றாவது கண்டம்

1. இந்தலோகங்களும் லோகபாலர்களும் பசிதாகத்தையுண்டாக்க ஈய்வானினைத்தார்.

2. ஜலங்களை (பஞ்சபூதங்களை) சங்கற்பித்தார், அவற்றினின்றும் சராசாரூபமானவை உண்டாயிற்று அவை அன்னம்.

3. அவ்வன்னம் லோகபாலர் முன்வைக்கப்பட்டது. அதனைக் கிரகிக்க அவர் திரும்பினார்கள். அவ்வன்னய் ஓடத்தொடங்கியது. முதவிலுண்டாகிய புருஷன் அவ்வன்னத்தை வாக்கினால் கிரகிக்க உத்தேசித்தான். அது முடியவில்லை, அங்ஙனமுடியுமாயின் அன்னத்தைப் பற்றிப்பேசுவதினாலேயே திருப்தியடையக் கூடும்.

4. பின்னர் மூக்கினால் கிரகிக்க உத்தேசித்தான், அதுமுடியவில்லை. அங்கன முடியுமாயின் அன்னத்தை முகத்தினாலேயே திருப்தி யடையக்கூடும்.

5. பின்னர் கண்ணால் கிரகிக்க உத்தேசித்தான். அது முடியவில்லை, அங்கன முடியுமாயின் அன்னத்தைப் பார்த்தலினாலேயே திருப்தியடையக்கூடும்.

6. பின்னர் காதினால் கிரகிக்க உத்தேசித்தான். அது முடியவில்லை, அங்ஙன முடியுமாயின் அன்னத்தைக் கேட்பதினாலேயே திருப்தியடையக்கூடும்.

7. பின்னர் பரிசத்தால் கிரகிக்க உத்தேசித்தான். அது முடியவில்லை, அங்ஙன முடியுமாயின் அன்னத்தைத் தொடுதலினாலேயே திருப்தியடையக்கூடும்.
8. பின்னர் மனதினாலேயே கிரகிக்க உத்தேசித்தான். அதுமுடியவில்லை, அங்ஙனமுடியுமாயின் அன்னத்தை நினைத்தலினாலேயே திருப்தியடையக்கூடும்.

9. பின்னர் குகியத்தாலே கிரகிக்க உத்தேசித்தான், அதுமுடியவில்லை. அங்ஙனமுடியுமாயின் விசர்ஜனத்தினாலேயே திருப்தியடையக்கூடும்.

10. பின்னர் முகமார்க்கமாக உள்ளே செல்லுகிற வாயுவினாலே கிரகித்துக் கொண்டது. வாயுவே அன்னத்தைக் கிரகிக்கத்தக்கது, அன்னத்தை யாதரவாக்கொண்டே வாயுஜீவிக்கிறது.

11. பேசுவது வாக்கானாலும்), கிரகிப்பது மூக்கானாலும், பார்ப்பது கண்ணானாலும், கேட்பது செவியானாலும், பரிசிப்பது துவக்கானாலும், தியானிப்பது மனமானாலும், கிரகிப்பது அபானமானாலும், ஆனந்திப்பது குகியமானாலும் இவை என்னையின்றி எங்ஙனம் நிலை பெறும் நான் எவ்வித சொரூபனென ஈஸ்வரனினைத்தார்.

12. உச்சியினைப்பிளந்து அவர் விதிருதி (பிளப்பு) வாயிலாகப் பிரவேசித்தனர். இது ஆனந்தமய துவாரம். இத்துவாரத்திற்புகுந்த இவருக்கு ஜாக்கிரம், சுவப்னம், சுழுத்தியென முறையேயிடம் கண், மனது, இருதயம் என மூன்றிட முண்டு.

13. இங்ஙனமுதித்த ஜீவன் நாமே எல்லாமென அபிமான முற்றும் பின்னர்த்தெளிந்து தன்னிடத்திற்றானே புருஷனைப்பார்க்கிறான்.

14. ஆகலினிப்புருஷனுக்கு இதந்திரனெனப் பரோட்சமாகச் சொல்லுவர்.

இரண்டாமத்தியாயம் கண்டம் - 1.

1. இச்சீவன் பிரதமத்தில் புருஷனிடம் கர்ப்பமாயிருக்கிறான். அன்னமயமான கோசத்தில் சகலவங்கங்களின் சாரமான ரேதஸ்ரூபமாகிற ஆத்மாவைத்தன்னிடம் பிதாதாங்குகிறான். அந்த ரேதஸ் ஸ்திரீயின் ஸம்யோகக்காலத்தில் வெளிவருப்போது அப்போது அச்சீவலுக்கு முதல் ஜென்மம்.

2. அந்த ரேதஸானது அந்த ஸ்திரீயினையே சார்ந்துவிடுகிறது. அக்கர்ப்பம் இவனைப்பாதிப்பதில்லை. இக்கர்ப்பத்தினை அவள் காக்கின்றாள்.

3. ஸ்திரீயானவள் கர்ப்பத்தைக் காப்பாற்றிவரப் பத்தாவது மாதத்தில் புத்திரன் ஜனிக்கின்றான். பிதாவே புத்திரரூபம். அப்புத்திரனுக்குப் பிதா சமஸ்காரஞ் செய்து தானாகப் பாவிக்கின்றான் அங்நனஞ்செய்தல் உலக விருத்தியை நாடியாம். இது இரண்டாவது ஜன்மம்.

4. இப்புத்திரன் பிதாவிற்குப் புண்ணியகர்மங்களை நிறைவேற்றப் பிரதி நிதியாகிறான். அப்போது பிதாவாகிய ஆத்மா கிருதகிருத்தியனாய் வயோதிகம் பெற்று இறக்கின்றான். பின் வேறு ஜென்மம் மூன்றாவதாக வடைகிறான்.

5. கர்ப்பவாசமாகவிருந்து அக்னியாதி தேவர்களின் சகல சன் மங்களையுமறிந்தனன். இரும்பு விலங்கிட்டுக் கிடந்த பல சரீரங்கள் முன்னர்க்காக்கப்பட்டன. இப்போது சேணமெனும் பறவை போன்று தத்துவஞானத்தால் புறப்போந்தேன் எனக் கர்ப்பத்திலிருந்தே வாமதேவ முனிவர் முன்னினர்.


மூன்றாவது அத்தியாயம் கண்டம் 2.

1. ஆத்துமா வென்று எவரைச்சாட்சாத்தாக உபாசிக்கவேண்டுமோ? 'அவரியாவர்? இருவர்கட்குள் எவராத்மா? எதனாலுருவத்தைக் காண்'கின்றானோ எதனாற் சத்தத்தைக் கேட்கின்றானோ? எதனால் வாசனையை முகருகின்றானோ? எதனால் வசனங்களைப் பேசுகின்றானே? எது கலம் எது தீமை என்றறிகின்றானோ அஃதியாது?

2. எஃதிருதயமோ? எதுமனதோ? அவையிரண்டாம், அவற்றின் பிரஞ்ஞான விருத்தியாவன – ஸமஞானம் (சேதனபாவம்), ஆக்ஞானம் (ஈஸ்வர பாவம்), விஞ்ஞானம் (இலௌகிகஞானம்), பாஞானம் (பேரறிவு), மேதா (மறவாமை), திருஷ்டி (நோக்கு), திருதி (தைரியம்), மதி (நினைவு), மநீஷா (நிச்சயம்) ஜுதி (மனத்துன்பம்) ஸ்மிருதி (நினைவு) ஸங்கல்பம் (ஏற்பாடு), க்ருது (தீர்வை), அஸு (ஜீவ விருத்தி), காமம் (இச்சை), வசம் (மாதராவல்),

3. இவரிந்தியன், பிரஜாபதி, தேவர்கள், பஞ்சபூதங்கள், சர்ப்பாதிகள், பீஜங்கள், அண்டஜந்துக்கள், கர்ப்பஜந்துக்கள், சுவே தஜந்து க்கள், விருட்சங்கள், அசுவங்கள், பசுக்கள், புருஷர்கள், கஜங்கள், பட்சிகள், ஸ்தாவரங்கள், எல்லாம் பிரமம், * யாவும் பிரஜ்ஞாநேத்திரம் யாவும் பியஜ் ஞானத்திலிருப்பன, உலகமே பிரஜ்ஞானகேத்திரம், பிரஜ் ஞையே பிரதிஷ்டை பிரஜ் ஞானமே பிரமம்.

* எல்லாம் பிரமமென்றது அகண்ட வியாபகமான பிரமம். கண்டப்பொருளாமெவற்றினும் அவ்வப்பொருளளவாகவும் கூடி ஆதாா அந்தரவத்தவாக நிற்றலினாலென்க. "ஐததாத்ம்ய மிதக்ஸர்வம்'' அந்த இந்தச் சத்தான ஆன்மாவையுடையதே இந்த (உலகு) எல்லாம் எனும் சாந்தோக்யோப நிஷத்திற் காண்க. அன்றியும் பிரமத்தைவிட்டு நீங்காப் பொருளனைத்தும் பாசம்பசுவினிரண்டிலடங்கும். அவை ப்பிரமமாகிய பதிக்குதேயு வாயு ஆகாயம் சந்தான் சூரியன் சீவான்மாவெனும் அஷ்டமூர்த்தங்களாயிருத்தலின் அப்பிரமத்தை எப்பொருளாக் கொள்ளினும் கொள்ளலாம் "ஆத்மா தஸ்யாஷ்டமீ மூர்த்தி சிவஸ்யபரமாத்மா" ஆன்மாவானது சிவமாகிய பரமான்மாவினது எட்டாவது மூர்த்தியாகும் எனும் உபப்பிருங்கணமும் கூறிற்று.

பிரஜ்ஞானம். பிரஹமம். இது மகாவாக்கியங்களிலொன்று. இதன் பொருள். பிரஜ்ஞானம் = பெரியஞானமே சொரூபமாகவுள்ளது. எனவே சிறிய ஞானமுடையது ஜீவான்மாவெனபது சொல்லாமேயமையும், பிரஜ்ஞான மாவது சத்தி'' சத்தியின் வடிவேதென்னிற்றடையிலாஞானமாகும்'' எனுந் திராவிடோப நிடதம். இச்சத்தியை யுடையவன் சத்தன். ஆகவே சத்தி தண மும் சத்தன்குணியுமாம். கதிரும் கதிரோனும் போலும், இங்கனமாயின் வேதம் பரமான்மாவைப் (பிரமத்தை) நிர்க்குணன் குணாதீசன் என்றதென்னை யெனின் அது பிரகிருதிபாற்பட்ட இராஜச தாமச சாத்துவிகங்களுடன் கூடிய சகுண பிரமம் போன்ற தன்றென்பதே தாற்பரியம். பரமான்மா எண்குணமுடையனாதலை'' கோளில் பொறியில் குணமிலவே யெண்குணத்தான் முளை வணங்காத்தலை,” என உத்தரவேதமும், “எட்டுவான் குணத்தீசனெம் மான் றனை எனத்” தேவாரமும், “இறையவனை மறையவனை பெண்குணத்தி னானை" எனத்திருப்பாட்டும், ''தாணுவெண்குணன் சங்கரன்” எனப்பிங்கல நிகண்டும் கூறியவாற்றலறிக. இவ்வெண்குணங்களும் சிற்குணங்களாம். இவையும் பரமான்மாவிற்கு வேண்டுவதில்லை யென்பாரேல் அப்பரமான்மா ஓரியல்புமில்லாவெறும் பாழாய் முடியுமென்க. மேற்குறித்த சிறிய ஞானமாகிய அஞ்ஞானத்தையுடைய ஜீவான் மாவின் சத்தியாகிய அறிவைச் சுருக்குகின்ற ஆணவமலமும் அந்த வறிவைக் கன்ம மலவழியே சிற்றறிவாச் செய்து நிற்கின்றமாயாமல முண்டென்பதும் பெறப்படும். இம்மூன்றும் பாசமாம். ஆக வே பிரஜ்ஞானம்பிரமம் என்ற மகாவாக்கியத்தில் பதிபசுபாசமாகிய திரிபதார்த் தவண்மை ஸர்வசம்பிரதிபந்தமாம். மற்ற மகாவாக்கியங்களின் உண்மைப் பொருளைச் சித்தாந்தம் தொகுதி - 1. பகுதி - 3, பக்கம் – 73 ல் கண்டுகொள்க.

4. முன்னர் கூறிய வாமதேவ முனிவரும், பிரமவித்துக்களும் இந்தப் பிரஜ்ஞானாத்மாவை யறிவதால் இவ்வுலக நீங்கிச் சுவர்க்க முற்றுச் சகலமுமனுபவித்து அமுர்தராகிறார்கள்.

மணவழகு

சித்தாந்தம் – 1916 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴


No comments:

Post a Comment