Saturday, May 9, 2020



சிவமயம்
சிவனடியார்.

பேயன்ன புறச்சமய பிணக்கு நூல் வழியனைத்தும் பிழையே - யன்றி, வாயன்மை தெளிந்த சைவசித்தாந்த வழிதேறி யதீதவாழ் விற், போயன்மி யஞ்செழுத்துந் திருநீறுங் கண்டிகையும் பொருளாக் கொண்ட, நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெறும் பேறு நான் பெற்றேனால்

கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து சிறந்து முதிர்ந்து முறுகிவளர்ந்த சிவபத்தி நிறைந்தவராய், நிஷ்காமிய வழிபாடுடையராயுள்ள மெய்யன்பர்களே சிவனடியாரெனப்படுவர். எந்நிலையினிற்கும் எவ்வெவரானும் மகாஞானிகளெனப் புகழ்ந்து துதிக்கப்பட்டுள்ளவர்களும் அவர்களெயாம். அவர்களது பெருமை, 'ஓர் புலவன் - பண்மலர் சாத்திப் பணிகொண்டவா பச்சைமால் சிவந்த கண்மலர் சாத்தியுங் காண்பரிதான கழன் மலரே'' என்றும், ''எவ்விடத்தவருனை யெண்ணினர் நீயுமற் - றவ்விடத்துளே யெனற்கையம் வேறின்றே............ கருணையொடு - நிலையில் பொருளு நிலையியற் பொருளுமுலையாமரபினுளங்கொளப்படுத்திப் - புல்லறிவகற்றி நல்லறிவு கொளீஇ – யெம்மனோரையுமிடித்து வரை நிறுத்திச் செம்மை செய்தருளத் திருவுருக்கொண்ட நற்றவத்தொண்டர் கூட்டம் - பெற்றவர்க்குண்டோ பெறத்தகா தெனவே''  என்றும், "மாமுகி றவழுமணிமதிற் கமலைப் பெம்மானருமைப் பெருமாளாயினு - மூனுண்வாழ்க்கைக் கானவர் குரிசில் - செஞ்சிலை சுமந்த கருமுகிலேய்ப்ப - வுண்டுமிழ்தீ நீருவந்தனாடியும் விருப்படிகொண்ட மிச்சிலுண் மிசைந்துஞ் செருப்படிக் கடிகள் செம்மாந் திருந்தும் - தொல்புகழ்வீசையன் வில்லடி பொறுத்து - மருந்தமிழ் வழு திபிரம்படிக்கு வந்து - நள்ளிறுள் யாமத்து நாவலர் பெருமான் - றள் ளாக்காதறணித் தற்கம்ம - பரவைவாய் தலிற் பதமலர்சேப்ப - வொருகா லல்ல விருகானடந்து - மெளியரினெளியராயின - ரளியர் போலு மன்பர் கடமக்கே" என்றும் செந்திற்குமரன்றிருவருளைச் செவ்விதிற்பெற்றநா குமரகுருபர சுவாமிகளும், ''செம்மலர் நோன்றாள் செரலொட்டாவம்மலங்கழீஇயன்பரொடு ட்ரீஇ - மாலற நேய மலர்ந்தவ வேடமு - மா லயந்தானு மானெனத்தொழுமே'' என்றும்,
"இனிச்சிவபத்தர்களோ டிணங்குக வென்றது, அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவராக லான் என்றும் பொய்கண்டகன்ற மெய்கண்டதேவரும், ''ஈசனுக்கன் பில்லாரடியவர்க் கன்பில்லா ரெவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமற் பில்லார் - பேசுவ தென்னறிவில்லாப் பிணங்களை நாமிணங்கிற் பிறப்பி னிலு மிறப்பினிலும் பிணங்கிவிடுவர் விடுநீ - யாசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்டவர் கருமமுன் கருமமாகச் செய்து - கூசிமொ ழிந்தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தா டித்திரியே' என்றும்,'' “ஞாலமதின் ஞானநிட்டை யுடையோருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன்றில்லை - சீலமிலை தவமில்லை விரதமொடாச்சிய மச்செயலில்லை தியானமில்லை சித்தமலமில்லை - கோ லமிலை புலனில்லை கரணமில்லை குணமில்லை குறியில்லை குலமுமில்லை - பாலருடனுன்மத்தர் பிசாசர் குணமருவிப் பாடலினொடாடலிவை பயின்றிடினும் பயில்வர்'' என்றும், 'சாக்கிரத்தே யதீத்தைப்புரி தவர்களுலகிற் சருவசங்கநிவிர்த்தி வந்த தபோதனர்களிவர்கள் - க்பா கியத்தைப்பகர்வது வெனிமையிலே யுயிரின் பற்றறுத்துப்பரத்தை யடைபராவுசிவ ரன்றோ - வாக்குமுடிக வித்தரசாண்டவர்க ளரிவைய ரோடனு பவித்தங்கிருந்திடினு மகப்பற்றற்றிருப்பர் - நோக்கியிது புரி யாதோர் புறப்பற்றற்றா லு நுழைவர் பிறப்பினின் வினைகங்கிடாவெ" என்றும் சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாசாரியரும் அருளிச்செய்த அருமைத்திருவாக்குக்களினாலும், "தில்லைவா ழந்தணர் தமடி யார்க்கு மடியேன்'' எனச் சுந்தரமூர்த்தி நாயனாரருளிச்செய்த திருத்தொண்டத் தொகையினாலும், தொண்டர் சீர்பரவு வாராகிய சேக்கிழார் நாயனாரருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தினாலும், விரிவஞ்சிவிடுத்த "ஆய்வார் பசுபதி பாசத்தினுண்மையை யாய்ந்தறி ந்து காய்வார் பிரபஞ்சவாழ்க்கை யெல்லாங்கல்வி கேள்வியல்ல. லோய் வார் சிவானந்தவாரியுள் ளேயொன்றிபண்டு மறத் தோய் வார்கமலை யுண்ஞான பிரகாசன் மெய்த் தொண்டர்களெ'' என்றற்றொடக்கத் தனவாய எணையபல்லாயிரம் பிரமாணங்களினாலும் நன்றாகச் சாதித்து நிறுத்தப்படும். இவைமாத்திரமா? நமது முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் தாமேதம்மை “அடியார்க்கடியன் சிற்றம்பலவன்” எனத்தமதருமைத் திருக்கரத்தினாலே எழுதியருள்வரேயானால், “புழுத்தநாயினுங் கடையரேமாய், அடியார் தமதடியார் தமடியார்க்குமடி யால்லே பாயுள்ள நாமா அவ்வடியார் பெருமையை அளக்கவல்லேம்.

மகா ஞானிகளாகிய சமய குரவர்களும் சந்தான குரவர்களும், சேக்கிழார் நாயனாராற் பெரிய புராண வாயிலாற்றுதிக்கப் பெற்ற திருத்தொண்டர்களும், சேக்கிழார் நாயனாரும், பட்டணத்தடிகளும், குமரகுருபர சுவாமிகளும் பிறரு மேற்கூறிய இலக்கணங்களெல்லாங் குறைவறவமைந்த சிவனடியார்களாம். சிவபெருமானைப் போல இவர் கனையுஞ் சித்தாந்த சைவர்களாகிய நாமெல்லாம் இன்றியமையாது வழிபட்டொழுகுங் கடப்பாடு பூண்டுள்ளேம். சிவபெருமானது திருவளக் கருத்து மஃதெயாம். அஃதன்றி, நமது சித்தாந்த சைவத்துக்குச் சிரத்தானமாயமைந்துள்ள சிவஞான போதத்துப் பன்னிரண்டாஞ் சூத்திரமும் தனைவலியுறுத்தி விதிக்குமேயாயின் அதற்கு வேறு பிரமாணமும் வேண்டுமா? பண்டைக்காலத்துள்ள ஞானிகளும் நூலாசிரியர்களும் இன்றுவரை அவ்விசேட வழிபாடாகிய ஆசாரத்தைப் பாதுகாத்துக் கொண்டே வருகின்றனர். சித்தாந்த வழிபாடு முடிதுக்கும் மறுதலையாவுள்ள மாயாவாதிகளும், அடியார் வழிபாட்டை இகழ்ந்தொதுக்கிவிட முயலாது கைக்கொண்டொழுகி வருவரேயா யின், அதனை நம்மவர் ஏத்துணை விசேடமாகக் கைக்கொண்டொழுகி வருதல் வேண்டுமென்பது சொல்லவும் வேண்டுமா? தந்தையராவுள்ளார், தம்மைப்பொருட்படுத்தித் தமக்கொன்று தவித் தம்மை வழியடா தொழியினும் தமது புத்திரரை மதித்துபசரித்து பகரிப்போர்க் கெத்துணையோ கழிபேரு வகைபூத்து அவர்க்காவன செய்து முடித்தலைத் கண்கூடாக நாங்கண்டிருக்கின்றோமன்றோ அதுபோலச் சிவபெருமானுந் தம்மை வழிபடாதொழியினும் தம்மடியார்களை வழிபட்டொழுகுவார்க்குத் தவறாது தமது திருவருளைச் சுரந்தருளுதலொருதலையேயாம். அவர் தமக்குமாறாகச் செய்யுங்குற்றத்தைச் சகித்தருள்வரேயெனினும், தமதன்பர்களுக்கு மாறாகச் செய்யுங் குற்றத்தைச் சகித்துக் கொள்ளவே மாட்டார். சூரியோஷ்ணத்தை ஒருவன் சகித் துக்கொண்டிருப்பினும், அவ்வுஷ்ண கிரணந்தோய்ந்த மணலிலே மிதி த்தலைச் சகிக்க வியலாதவாறு போலச் சிவாபராதத்துக்கு ஒருவாறு தப்பிக்கொள்ளினும் அடியாரபகாரத்துக்கு ஒருகாலத்தாவது தப்பிக் கொள்ள வியலாதேயாம்.

நமக்குக் கண்கண்ட தெய்வங்களாவுள்ளவர் சிவனடியாரேயாம். சகலவர்க்கத்தவராயுள்ள நம்மவர் வசிக்கும் இவ்வசுத்த தத்துவ புவனத்துச் சிவபெருமான் தாமதிட்டிக்குஞ் சுத்தமாயா சொரூபத்தோடு நேரே வெளிப்படவே மாட்டார். அது நோக்கியன்றோ சிவபெருமான் நம்மீது முகிழ்த்த பெருங்கருணைத்திறத்தால் தாங்கொண்ட மூவகைத் தடத்த வடிவங்களை விக்கிரக வாயிலாக வழிபட்டுய்ந் தீடேறுமாறு திருக்கோயில் வழிபாட்டை ஈண்டு விதித்தருளினார். அங்ஙனமாயினும், கண்ட பொருளிலன்றிக் காணாதபொருளிலே கருத்திறங்கல் அரிதெனவுணர்ந்தன்றே, தாம் இடையறாது அத்துவிதமாகக் கலந்து வீற்றிருக்கு மடியார்களைத் தம்மைப்போலப் பாவித்துத் தியானித்து வழிபட்டொழுகுமாறு விதித்தருளினார். சிவனடியார்களைச் சிவபெருமானாகப் பாவித்து வழிபடல் வேண்டுமென்பது, ''கண்ணுதலுங் கண்டக் கறையுங் காந்தருளி'' என்றற்றொடக்கத்து மேலோர் திருவாக்குக்களினாலே நன்கு துணியப்படும். அடியார் பெருமைகளை எளிதே விளக்கவல்லது பெரியபுராணமேயாம். அங்கனமேயாயின் ஆண்டுப் பேசப்படும் அடியார்கள் சிலரிடத்தெ, ஈண்டெடுத்து விளக்கிய இலக்கணங்கட்கு மறுதலையான குற்றங்களுமன்றோ காணப்படுகின்றனவெ யெனின், அவைகஞ் சித்தாந்த நூற்கருத்தொடு முாணுறா வென்பதையும் ஒருவாறு மிகச்சுருக்கி விளக்கிக் காட்டுவாம்.

சிவதருமம், மெல்வினை யெனவும் உலகத்தவராலே செயற்கரிய வல்வினை யெனவுமிருவகைப்படும். அவற்றுள், மெல்வினையாவது, சிவாகமங்மளிலே சொல்லப்பட்ட விதிவிலக்குகட் கமைந்து சிவபெருமானை வழிபட்டொழுகுதலாம். வல்வினையாவது, முற்சனனங்களிலே செய்த மெல்வினை காரணமாக முறுகிவளர்ந்த பத்தி மேலீட்டினாலே விதி விலக்குக்களை நாடாது தமது செயலெனப்படும், பசு ஞானபாசுஞானங்களை யொழித்துப் பதிஞானமொன்றனையே கண்ணாகக்கொண்டு அதன் வழியே ஒழுகுதலாம், மெல்வினை, வல்வினை யென்னுமிரண்டும், முறையே விதிமார்க்கம் பத்திமார்க்க மெனவுங் கூறப் படும். இவ்விருவகை வழிகளும் சிவபெருமானது திருவடிகளையடைதற்கு வாயில்களாம். இவ்விருவகை வழிகளையும் வாயில்களாகக் கொண்டொழுகி முத்திபெற மெய்யடியார் சரித்திரத்தை விளக்குதற் கெழுந்த நூலே பெரிய புராணமாம்.

மெல்வினையாகிய விதிமார்க்கத்தை அனுசரித்தொழுகிய மெய்யடியார்கள தொழுக்கத்தின் மீதா சங்கிப்பாரொருவரு மீண்டிலரேயாம். ஏனையவல்வினையாகிய பத்திமார்க்கத்தை மேற்கொண்டொழுகும் மெய்யடியார் மீது மாத்திரந்தான் சித்தாந்த நூற்பயிற்சி யில்லாதார் பலர் ஆசங்கிப்பர். சிறுத்தொண்ட நாயனார் தமது சிறுவனை அறுத்துக் கறி சமைத்தமையும், சண்டேசுர நாயனார் பாதகமென்றும் பழியென்றும் பாராது திருமஞ்சனப் பாற்குடத்தை எற்றினமை கொண்டு பிராமணனாகிய தமது பிதாவினது பாதங்களைச் சேதித்தமையும், கண்ணப்பநாயனார் காளத்தியப்பருக்கு இறைச்சியைநிவேதித்து வாய்நீர்  உமிமிழ்ந்து செறுப்புக் காலாலுதைத்தமையும், கல்லினுங் கமரினும் வாளினும் சாணைக்கல்லினும் சூதாடுகருவிப் பலகையிலும், திருக்குறிப்புத் தொண்டர் அறிவாட்டாயர் ஏயர்கோன் கலிக்காமர் மூர்த்தியார் மூர்க்கர் என்றும் நாயன்மா ரொவ்வொருவருந் தனித்தனியே ஒவ்வொரு செயற்கருஞ் செயல்களைச் செய்தமையுமாகிய இவை போன்ற பலசெயல்களே சித்தாந்த நூலுணர்ச்சியில்லா மந்தமதியினராற் குற்றமுடையனவென ஆசங்கிக்கப்படுவனவாம்.

சிறுத்தொண்டநாயனார் சிவனடியாரிடத்தே உறைத்த பத்தியினையுடையர். அவ்வடியர்கட்கன்ன மூட்டியன்றித் தாமுண்ணாப்பெரு விரதம் பூண்டுள்ளவர், தம்மை *  உடைப்பொருளாகவுஞ் சிவனடியார் களை உடையராகவும் தலைக்கொண்டு அங்ஙனமே வழுவாதொழுகும் பத்தியொன்றனையே தம்முயிரினுஞ் சிறந்ததாகப் பாதுகாத்தொழுகும் பேரறம் பூண்டுள்ளவர், சிவனடியார்களைச் சிவபெருமானாகவே உள்ளபடி பாவித்தொழுகுபவர். உடல்பொருளாவி மூன்றையுஞ் சிவபெருமானுக் கென்றே தானஞ்செய்துள்ளவர். தம்மைத்தானஞ் செய்தலாவது தாம் சிவனுக்குப் பரதந்திர ரென்றறிந்து அவரருளா லல்லது ஒன்றையுஞ் செய்யாராகி நிற்றலேயாம். இங்ஙனமாதலால் அந்நாயனார், தமது பத்திக்கிரங்கித் தம்மை ஆட்கொண்டருளுமாறு சிவனடியார் வேடங்கொண்டெழுந்தருளி வந்த சிவ பெருமானுக்கு உடைப்பொருளாகிய தமது குழந்தையை அறுத்துக் கறிசமைத்துக் கொடுத்தமையின் அதனால் வருஞ் சித்தாந்த வழுயாண்டைய தென்றொழிக. அங்ஙனங் கொடாது மறுத்தொழிதலே சித்தாந்த நெறிவழுவாமென்று கொள்க. நுணுகி ஆராயு மாராய்ச்சியினாலே அது நன்கு துணியப்படும்.

[* "உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள் உயிர் வருக்கமெல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின்காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்து கொள்க" என்றார் திராவிடமாபாடிய கர்த்தாவாகிய சிவஞான சுவாமிகள்.]

கண்ணப்பநாயனார், முன்னரீட்டிய மெல்வினையின் பயனாய் பத்தியினாற்றம்மை யொப்பவர் வேறிலராய் வேட்டுமரபிலவதரித்த பேரன்பினை யுடையவர். எண்ணிறந்த சனனங்கடோறுஞ் செய்துள்ள புண்ணியங்களெல்லா மொருங்கேதிரண்டு சூக்குமமாயமைந் திருந்து, அன்புருவாகிய தூலமா கவிரிந்து பொருந்தப் பெற்றுள்ளவர். துவாபரயுகத்தின் கடைக்கூற்றிலே அரிச்சுன்னாக அவதரித்துப், பத்திக்குவரம்பாகிச், சிவபூசைபுரிந்து, வேட்டுவவடிவங்கொண்டு வெளிப்பட்டுவந்த சிவபெமானோடு மல்யுத்தம் புரிந்து, அப்பெருமானை வேடனென்றிகழ்ந்த காரணத்தால், இக்கலியுகத்து முற்கூற்றிலே வேட்டுவகுலத் தவதரித்தருளிப் பெரும்பேறடைந்த பெம்மானிவரேயாம். அக்காலத்துச் சிவபெருமான் தமது சுவவடிவைத் தரிசிப்பித்தருளிய மாத்திரத்தே சிவசொரூபமாகி முத்தியை வேண்ட, அனுபவிக்கவேண்டிய அற்பவினை இன்னுமொறு பிறவிக்கிருத்தலின் ஆண்டே முத்தியைத் தந்தருள்வே மென் ஆஞ்ஞாபிக்க, அங்ஙனமே யவதரித்து முத்திபெற்றருளியவர் இந்நாயனாரென்க. சிறிதாவது பிரயாசமின்றிக் கல்விகற்பார் சிலர்க்குக், கடன்மடை திறந்தாற்போற் சகல கலைஞானங்களி னறிவுந்தானேவந் தேறுதலும், அற்பமுயற்சி செய்வார் சிலர்க்குச் செல்வம் பெருகுதலும் உடம்பாட்டானும், அங்கனம் முயற்சி செய்தும் வாராமை எதிர்மறையானுங் கண்கூடாகக் காணப்பட்டுக் கிடத்தலின், முற்றவ விசேடத்தால் ஞானமுதிக்கப் பெறுதல் நூதனமல்லவே. அதுபற்றியன்றே பிற்காலத்துச் சித்தாந்த பானுவாய் உதித்தருளிய நஞ்சிவஞான சுவாமிகளும் ''ஆளுடைய பிள்ளையார் முதலாயினார்க்குத் தவம் இன்றியும் ஞானம் நிகழ்ந்தவாறு என்னை என்னுங்கடாவை விடுத்தற்கு மேற்செய்துழி என ஈண்டும் வலியுறுத்தார்" என உரை உரைத்தருளினர். அதுமட்டோ! கல்லா தவருமன்றோ அவரை விட்டகுறையினால் வந்தவதரித்தவரென விதந்து கூறாநிற்பர்.

கண்ணப்பநாயனாரது அன்பின்பெருமை "கண்ணப்ப னொப்ப தோரன் பின்மை கண்டபி. னென்னப்ப னொப்பிலென்னையு மாட்கொண்டருளி – வண்ணப்பணித் தென்னை வாவென்றவான் கருணைச் சுண் ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்று பெருந்துறை புகுந்து பேரின் பவெள்ள மூழ்கியே புத்தலா மூங்கையராக்கிய வாதவூசெங்கோன் வாய்மொழிந்தருளிய சிவவாசகமாகிய திருவாசகத்தினாலும், பின்னர் அவ்வருள் வாசகத்தையே சிறப்பித் தருளப்பெற்ற 'கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற். கண்ணப்ப னொப்பதோரன்பதனைக் கண்ணப்பர் - தாமறிதல் காளத் தியாரறி தலல்லது மற் றாறியு மன்பன்றது" என்னுந் திருவாக்களிற்றுப்படியார்த் திருவெண்பா வினாலுமறியத் தக்கதேயன்றிப், பிரபஞ்சத்தையே பொருளெனக்கொண்டு மயங்கி, அதனுனிடையறாதழங்திக்கொண்டு கடவுளிடத்து மடியாரிடத்து மன்புடையேமென்று வாய்ஞானமொன்றே பேசிக்கொண்டு திரியுகம்மவரா அதனை அளக்கவல்லவர்! இந்நாயனாரது ஏனைய பெருமைகளும், சண்டேசுரநாயனார் தமது தந்தையின் தாள்களைச் சேதித்தமை குற்றான்று என்பதும், பிறவும் பெரிய புராண சூசனவாயிலாக ஸ்ரீலபர் ஆறுமுக நாவலரவர்களினாலே மிகவிரிவாக விளக்கப்பட்டிருத்தலின் நாமுமவற்றை விரித்தல் மிகையாமெனக் கருதியவற்றை விடுத்தனமென்க. இறைச்சி நிவேதனத்தாலெழுங் குற்றமொன்று மாத்திரம் இங்கே நிராகரிக்கப்படும். இதுகாறும் எடுத்துக் காட்டிய ஏதுக்களினாலே, ஏனைய மெய்யடியா சொவ்வருவரிடத்தும் உலகத்தவர்க்குக் குற்றம்போற் காணப் படுஞ் செய்கைகளைல்லாஞ் செயற்கருஞ் செயல்களேயா மென்றும், அவையனைத்துஞ் சித்தாந்த நூற்கருத்தோடு சிறிதும் முரணு தன வேயாமென்றுந் தெளிவுற விளக்கிக் காட்டி நிறுத்தப்படும். அவைகளெல்லாம் அவ்வவர் சரித்திர வாயிலாகத் தனித்தனி சூசனங்களாக வெளிப்படுத்தப்படும். ஈண்டேவிரித்தற் கிடனின்றாம். இவ்வடியார் சரித்திரங்களினின்றெழும் ஆசங்கைகளுக் கெல்லாம் தொகையாக ஒருவாறு சமாதானங்கூறப்புகின், நாம் பிறாண்டு விளக்கியவாறு சாமு சித்தர் வைநயிகர் பிராகிருதரென முத்திறப்படுஞ் சகல வர்க்கத்தவ (ருள்ளே, ஆற்றலுமறிவுங் காதலுமில்லாத பிராகிருதரையொழித்து ஒழிந்த இருவருள் வைந பிகராவார், ஞானிகளெல்லாம் பிரமாணமென் றறிந்து கைக்கொண்ட அலை ஓதி அதுவாயிலாக முத்திபெறவேண் டியவராதலினாலும், சாமுசித்தராவார், விஞ்ஞானாகலர் பிரளயாகலரைப்போல நூல்வழியானன்றித் தன்மை முன்னிலைகளால் இறைவனே முத்திசேர்த்துங் கடப்பாடு பூண்டுள்ளவராதலினாலும், பண் டை நற்றவத்தாற்றோன்றிப் பரமனைப் பத்தியண்ணுந் தொண்டமாகிய இவரை அவ்விறைவர்தாமே முன்னின்று நடத்துவாதலினாலும், இவர் செயலெல்லாம் இவ்விறைவன் செய்வாயே கொள்ளப்படுதலின் இவரிடத்தே குற்றம் யாண்டைய தெனக்கூறி விடுக்க, அது  'இவனுல கிலிதமகிதஞ் செய்தவெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார் பாலி சையு - மவனிவனாய் நின்ற முறையேகனாகி யான்பணியி னின்றிடவு மகலுங்குற்றஞ் சிவனுமிவன் செய்தியெல்லாமென் செய்தியென்றுஞ் செய்ததெனக்கிவனுக்குச் செய்ததென்றும் - - பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவாற்பாதகத்தைச் செய்திடினும், பணியாக்கிவிடுமே.'' என்றுஞ் சித்தியார்த் திருவிருத்தத்தினாலும் பிறவற்றினாலு நன்றாகச் சாதித்து நிறுத்தப்படும்,

யாழ்ப்பாணம், நல்லூர்.
இன்னும் வரும்
சு சரவணமுத்துப்பிள்ளை. உதயபானுபத் திராதிபர்.

சித்தாந்தம் – 1914 ௵ - ஆகஸ்ட் ௴


No comments:

Post a Comment