Saturday, May 9, 2020



கடவுளின் உருவம்.

கடவுளுக்கென ஒரு உருவம் இல்லை. அவரை யார்யார் எவ்வெ வ்வுருவமாக வழிபடுவார்களோ அவரவர்களுக்கு அவ்வவ்வுருவமாக இருந்து அவர் அருள் சுரப்பர். அவரை வணங்குவோர்களின் அன் பின் அளவாக அவர் அருள் வெளிப்படுதலால் அவரை வழிபடும் மெய்யன்பர்களின் அன்பே அவர் உருவமும் மனமே கோயிலுமாகும்.

திருமந்திரம்.

அன்புஞ்சிவமுமிரடென்பரறிவிலார்
அன்பே சிவமாவதாரு மறிகிலார் –
அன்பே சிவமாவதாருமறிந்தபின்
அன்பே சிவமாயமர்ந்திருந்தாரே.

அற்புதத் திருவந்தாதி.

வானத்தானென்பாரு மென்க மற்றும் பர்கோன்
றானத்தானென்பாருந்தா மென்க - ஞானத்தான்
முன்னஞ்சத்தாலிருண்டமொய்யொளிசேர்கண்டத்தான்
என்னெஞ்சத்தானென்பன் யான்.

கடவுள் என்றும் அழிவின்றி ஒரே தன்மையாய் நிலைபெற்றிருத் தலினாலும், உண்மைநெறியில் நிற்பார்க்கே அவரருள் சுரத்தலாலும், உண்மை அவர் உருவம் எனவும், தமக்கு ஒருவர் அறிவிப் பாரின்றி அறிவுக்கறிவாய் எல்லா உயிர்களுக்கும் உணர்த்தும் பேரறிவாயிருத் தலினால் ஞானம் அவர் உருவமெனவும், என்றும் வரம்பிலின்பமுடை யவராய்த்தம்மையடைந்த ஆன்மாவிற்கும் வரம்பிலின்பம் தருவதனால் ஆனந்தம் அவர் உருவம் எனவும் சொல்லப்படும். ஆதலால் அவ ரைச் சச்சிதானந்த உருவன் என்று கூறுவார்கள்.

சச்சிதானந்தம் என்பது சத்து சித்து ஆனந்தம் எனப்பிரிக்கப்பட்டு உண்மை அறிவு ஆனந்தம் எனப் பொருள்படும்.
கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருத்தலினால் எல்லாப்பொருள் களும் அவர் திருமேனியாகும். நிலம், நீர், தீ, காற்று ஆகாயம், சூ ரியன், சந்திரன், ஆன்மா ஆகிய இவ்வெட்டும் அவர் திருமேனியா யிருப்பதனால் அவரை அட்டமூர்த்தியென்பார்கள். இதுபற்றியே வை திகர்கள் இவ்வெட்டையும் வணங்குகிறார்கள். பிருதிவுரூபமான விக்கிரக வணக்கமும், கங்கைமுதலிய தீர்த்தவணக்கமும், யாகம் முதலிய அக்கினி வணக்கமும், சூரியபூசை, சந்திரபூசை முதலியனவும், அடியார்களைக்கடவுளாகப் பாவித்து வணங்கும் வணக்கமும், பஞ்ச பூதத் தலங்களில் செய்யும் பஞ்சபூதவணக்கமும் கடவுளின் அட்ட மூர்த்தவணக்கமேயாம்.

திருவாசகம்.

நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய வைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ.

தேவாரம்.

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமானனா
யெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் நாயிறாகி யாகாசம்
வட்ட மூர்த்தியாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி
நெருகிலையா யின்றாகி நாளை யாகி கிமிர்
புன்சடை யடிகணின்ற வாறே.

கடவுள் இருவகைப் பிரபஞ்சங்களினும் நீக்கமற நிறைந்திருப்பினும் அவையே தாமாகாமல் அவற்றின் வேறான முழுமுதற் பொருளாயிருக்கிறார். ஆதலால் அவர்நிலமல்ல நீருமல்ல, தீயுமல்ல, வளியுமல்ல வெளியுமல்ல, வேறெவையுமல்ல,.


தேவாரம்.
மண்ணல்லை விண்ணல்லை வலையமல்லை மலையல்லை கடலல்லைவாயு வல்லை, யெண்ணல்லை யெழுத்தல்லை யெரியுமல்லை யிரவல்லை பகலல்லை யாவுமல்லை, பெண்ணல்லையாணல்லை பேடுமல்லை பிறிதல்லை யானாலும் பெரியாய் நீயே, உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை யுணர்வரிய வொற்றியூருடைய கோவே.

திருவிளையாடற்புராணம்.

பூதங்களல்ல பொறியல்ல வேறுபுலனல்லவுள்ளமதியின், பேதங் களல்ல விவையன்றி நின்ற பிரிதல்லவென்று பெருநூல், வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளி யென்பகூடன்மறுகிற், பாதங்கணோவ வளை யிந்தனாதிபகர் வாரையாயு மவரே.
கடவுள் நமக்கென ஒரு உருவம் இல்லாதவராகவும் நமது உணர் வுக்கு எட்டாதவராகவுமிருந்தால், அவரை நாம் எப்படி வணங்குவது என்றால், அவர் தமக்கென ஒரு நாமமும் ஒரு உருவமும் இல்லாதவரா யிருப்பினும் அளவுபடாத காருணிய மேலீட்டினால் ஆன்மாக்கள் தம் மைவணங்கிப் பிறவிக்கடலினின்று நாம்கரையேறவேண்டிப் பற்பல அருளுருவங்களைத் தாங்கிப் படைத்தல் காத்தல் முதலிய தொழில்க ளைச் செய்கிறார். அன்றியும் துட்டநிக்கிரகம் சிட்டபரிபாலனம் செய்ய வேண்டியும், சிற்றறிவுடைய ஆன்மாக்கள் விதிவிலக்குகளை யறிந்து தீவினைகளை யொழித்து நல்வினைகளைச் செய்து தமது உண்மை நிலை யையுணறுமாறு வேதாகங்மளைத் திருவாய் மலர்ந்தருள வேண்டியும் கடவுள் எண்ணிறந்த அருட்கோலங் கொண்டனர். இவ்வருட்கோலங் களே நாம் வழிபட்டுய்யும் உபாசனா மூர்த்தங்களா யிருக்கின்றன.

தேவாரம்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடை யானென்னினல்லால், ஒப்புடையனல்ல னொருவனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, அப்படியு மந்நிறமுமவ்வண்ணமு மவனருளே கண் ணாகக்காணினல்லால், இப்படியனிந்திறத் தனிவனிறைவனென்றெழு திக்காட்டொணாதே.
கடவுள் தமக்கென ஒரு உருவமில்லா தவராதலால் அவரை ஆண்எனவாவ து பெண்எனவாவது அலிஎனவாவது சொல்ல இடமில்லை. ஆயினும், உலகம் சித்து அசித்து என இருவகையாகவும், அசித்துப் பொருள்கள் குணகுணிகளாகவும் இருப்பதுபோல் இவ்விருவகைப் பொருள்களையும் தமக்குச் சரீரமாகக்கொண்ட கடவுளும் அருளாகிய குணத்தையே சத்தி அல்லது வல்லமையென்னும் மனைவியாக உடையவராய் உயிர்களுக்கெல்லாம் தாயுந்தந்தையுமாகியெழுந்தருளிப் படைத்தல் காத்தல் முதலியதொழில்களைச் செய்கின்றார். கடவுளும் அவர் அருட்சத்தியுங்கூடி, ஆணும் பெண்ணுமாயிருத்தலினாலேயே சித்துப் பொருள்களெல்லாம் ஆணும் பெண்ணுமாகவும் அசித்துப் பொருள்களெல்லாம் குணகுணிகளாகவும் இருக்கின்றன.
(குணத்தையுடையது குணியெனப்படும்.)

திருவாசகம்.

உண்டொரொண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிராணலியென்றறி யொண்கிலை
தொண்டனேற் குள்ளவாவந்து தோன்றினாய்
கண்டுங்கண்டிலே னென்ன கண்மாயமே.
தோலுந்துகிலுங் குழையுஞ் சுருடோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமுந் தொக்கவளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிச் குளிர்ந்து தாய் கோத்தும்பீ.

கடவுள் உயிர்களுக்குத் தாயுந் தந்தையுமாகுந் திருமேனிகொள் ளாவிடில், அவருக்குப்படைப்பு முதலிய தொழில்கள் இரா. அவர் ஆன்மாக்களுக்கு அனுக்கிரகித்தலு இராது. இதையறியாதார் கட வுளைத் தாயுந்தந்தையுமாக வழிபடுவாரைப் பார்த்துக் கடவுளுக்கு மனைவிமக்களும் உளரோ எனப்பரிகசிப்பர், இவர்கள் அவரைத்தம் தையாக மாத்திரம் வழிபடுவர். தாயின்றித்தந்தையில்லையா தலாலும், தந்தையைக்காட்டிலும் தாய்க்கே மக்களிடத்தில் அன்பு அதிகமாத லாலும், தாயினுஞ்சால தயாநிதியாகிய கடவுளைத் தாயுந்தந்தையுமாக வழிபடுதலே சாலச்சிறப்புடைத்தாம்.

திருவாசகம்.

நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன்றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்
வானுந் திசைகளு மா கடலு மாயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கடவுள் நமக்குத் தாயுந்தந்தையு மாத்திரமாகவா இருக்கிறார்! நமக்கு இருவினையொப்பும் மலபரிபாகமும் வரும்போது நம்மையாட் கொள்ளும் ஞானாசிரியராகவுமிருக்கிறார். பிரமாதி தேவர்களுக்கு அவரவர்கள் உவகங்களையாளும் அரசுரிமைகளைக் கொடுக்கவும் நீக்கவும் வல்ல சர்வலோக சக்கிரவர்த்தியாகவும் இருக்கிறார். நாம் தீவினைகளைச் செய்ய முயலும் போது மனச்சாட்சியாயிருந்து செய்ய வேண்டாமென்று தடுக்குந் தோழனாகவுமிருக்கிறார். கனைக்குந்தோறுங் காணுந்தோறும் பேசுந்தோறும் கூடுந்தோறும் புதிது புதிதாகப் போகத்தை விளைவிக்கும் மனைவியுமாகவுமிருக்கிறார்.

தேவாரம்.

அப்பனீ யம்மைநீ யையனுநீ யன்புடைய மாமனுமாமியுநீ, ஒப் புடைய மா தரு மொண்பெருஞ யொருகுலமுஞ் சுற்றமு மோரூருநீ, துய்ப்பனவு முய்ப்பனவுந் தோற்றுவாய் நீ துணையா யென்னஞ்சந் துறப்பிப்பாய்க, இப்பொன்னீ யிம்மணி யிறைவனீ யேறூர்ந்தசெல் வனீயே,
கடவுளுடைய திருமேனி உருவத்திருமேனியெனவும் அருவத்திருமேனி யெனவும் உருவும் அருவும் சேர்ந்த ரூபாரூபத்திருமேனியெனவும் மூவகைப்படும். இம்மூன்று திருமேனிகளும் அவருக்கு அனாதியாகவே உண்டு. அவர் எங்கும் வியாபித்தும் உளக்கண்ணாலன்றி ஊனக்கண்ணாற் காணக்கூடாமையால் அவருக்கு அருவத்திரு மேனியும், படைப்பாதிதொழில்களைச் செய்தலால் உருவத்திருமேனியும், உருவெனவும் அருவெனவுஞ்சொல்லப்படாத நிலையினராய் ஏககாலத்தில் உருவும் அருவும் உடையவராயிருத்தலினால் ரூபாரூபத் திருமேனியும் கூறப்படும்.

சிவஞான சித்தியார்.

            அருவமோ ரூபாரூப மானதோ வன்றி நின்ற
         உருவமோ வுரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென் னில்
      அருவமும் ரூபாரூப மானதுமன்றி நின்ற 
       உருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக்குள்ள தாமே.

கடவுள் எங்குமாய் யாவையுமா யிருத்தலினால் அவருக்கு உலக மெல்லாம் உடலாகவும் உயிர்களெல்லாம் உறுப்புகளாகவும், திக்குகள் ஆடையாகவும் இருக்கின்றன. அவருக்குத்திக்குகள் ஆடையாயிருப்பதனால் திகம்பரன் என்னும் நாமம் உண்டாயிற்று.

குமரகுருபர சுவாமிகள் திருவாக்கு

நான்மணிமாலை.

      தேங்கு புகழாரூர்த் தியாகர்க் கெண்டிக்கு மொளி
      வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள் சூழ்
      கங்குற்போது கரும்படமாம் செம்படமரம்
      பொங்குற்ற புன்மாலைப் போது.

கடவுள் கொண்டருளும் அருட்டிருக்கோலங்கள் எண்ணிறந்தவாயினும், பூவுலகத்தினர் தம்மை எளிதில் வழிப்பட்டு உய்யும்படி கொள்ளுந்திருபேனிகள் குருலிங்கம் (விக்கிரகம்) சங்கமம் (அடியார்கள்) என்னும் மூன்றுமாம், பால்பசுவின் சரீரமுழுவதும் வியாபித்திருப்பினும், அதன் முலையின் வழியாகச் சுரப்பதுபோல், கடவுளுக்குயாவும் திருமேனியாயிருப்பினும் குருலிங்க சங்கமம் என்னும் மூன்றிடங்களே மனிதர்கள் அவரை எளிதில் வழிபட்டு அவரருளைப் பெறக்கூடிய இடங்களாயிருக்கின்றன.
                   இருக்கம் - ஆதிமூல முதலியார்.
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴



No comments:

Post a Comment