Saturday, May 9, 2020



சிவமயம்,
திருச்சிற்றம்பலம்
சிவத்தியானம்.

உலகத்திற் றோன்றிய உயிர்களெல்லாம் இன்பத்தையே விரும்பும். அதிலும் சின்னாளினொழிவதாகிய சிற்றின்ப போகாதிகளை யொழித்து என்றும் அழியாத பேரின்பத்தையே விரும்புவது அறிவறிந்த மக்கள் கடனாம். ஆகவே கால வரையறைக்குட் பட்டொழிவதாகிய சிற்றின்பம் யாது? காலவரையறை கடந்து என்றும் நிலைத்துள்ள பேரின்பம் யாது? என விசாரிக்கப்புகின்; பூவுலகத்து அரசபதவியும். பிரமாதி தேவபதவிகளும் அவ்வவற்றிற்குரிய காலங்கழிந்தவுடன் ஒழித்து விடுதலால் அழிதற்றன்மையன சிற்றின்பங்களே யாகும். இங்ஙனம் காலத்தின் அளவுக்குட்படாததும், என்றும் மாறாததும் ஆகிய மோக்ஷசாம்ப ராச்சியமான நியதிசயா நந்தமொன்றே பேரின்ப மெனப்பெறும். இத்தகைய பேரின்ப நிலையே தத்துவ நூலுணர்ந்த வித்தகர்களாகிய மெய்ஞ்ஞானிகள் யாவராலும் விரும்பப்படும் பெரும் பேறாம். பெறுதற்கரிய பெரும்பேறாகிய இதனை அடைதற்குச் செய்யும் உபாயமே மேற்குறித்த சிவத்தியான மென்றுணர்க. சிவத்தியானம் என்றால் சிவபிரானைத் தியானித்தல் என்று பொருள் தரும்.

மனம், வாக்கு, காயம் என்னுந் திரிகரணங்களின் மூலமாகவே எல்லாச் செயல்களும் நிகழ்வனவாம். இம்மூன்றனுள்ளும் காயத் தின் வழிப்படுஞ் செயலுக்கும், வாக்கின் வழிப்படுஞ் சொல்லுக்கும் மூலமாக நிற்பது மனத்தின் செயலாகிய நினைப்பேயென்பதும்; மனத் தில் நினைப்புத் தோன்றிய பின்னரே சொல்லுதலுஞ்செய்தலும் நிகழ் வனவல்லது மனம் ஒன்றை நினையாதபோது சொல்லுதலும் செய்த லும் நிகழாவென்பதும் யாவரும் அறிந்தனவே. ஆதலின் திரிகரண சுத்தி வேண்டுமாயின் முதலில் மனமொன்றை மட்டுஞ் சுத்தப்படுத் திக் கோடலேசாலும், மனச்சுத்தி வந்தவுடன் ஏனைய இரண்டும் தாமே வரும். கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிஷ்டாபரமாக இருந்த பெரியோர் பலரும் மனத்தின் தன்மையை நன்குணர்ந்தமைணாயாலன்றோ அம்மனத்தை அடக்க வேண்டுமெனவும், மனம் அடங்காவழி நன்மையடைய முடியாதெனவும், மனம் ஒன்றைமட்டுந் தன் வசப்படுத்திக்கொண்டால் உடனே மோக்ஷ வீடு சித்திப்பது நிச்சய மெனவும், மனத்தைச் சீர்ப்படுத்த முடியாமல் அது போனவழியே விட்டுவிட்டால் மீளாநரகிற்கே ஆளாகவேண்டுமெனவுங் கூறுவராயினர்? மனமானது எதனிடத்துப்பற்று வைத்ததோ அதனிடத்து முற்றும் ஈடுபட்டு அதன்மயமாகி விடும். தான் நன்மையானதொன் றைச் சிந்திப்பின் அச்சிந்தனை முதிர்ச்சியால் எல்லாம் நன்மையாகவே காணும். தீமையானதொன்றைச் சிந்திப்பின் எல்லாந்தீமையாகவே காணும். ஒருவன் ஒரு புலியைக்கண்டு மனம் பதறி மிக்க பயங்கொ ண்டு வரின் அவன் கண்ணுக்கு எதிர்ப்பட்டன வெல்லாம் புலியாகவே தோன்றும். இங்கனம் மனத்தின் நினைப்புவலியால் தோன்றும் உருவை உருவெளித் தோற்றம் என்பர். சீதையின் வடிவழகைச் சூர்ப்பநகை சொல்லக்கேட்டு ஆசைமேலீட்டால் அச்சீதையின் நினைவைத் தவிர வேறெல்லாம் மறந்த இராவணன் எங்கே பார்த்தாலும் தன் கண்களுக்குச் சீதையின் வடிவமே தோன்ற அதைக்கண்டு ஆச்சரியமடைந்து தங்கையாகிய சூர்ப்பநகையை வரவழைத்து "ஏ தங்காய் ! இவள் தானா நீ கூறிய சீதை'' எனக் கேட்டான். இராமனது வடிவழகிலீடுபட்டு ஆசைமீறி எல்லாம் இராமனின் திருவுருவாகவே கண்டு நிற்குஞ் சூர்ப்பநகை தான் நிற்கும் இடமும் தமையன் கேட்பதும் மறந்து “இவன் தான் இராமன்''  என்று விடை பகர்ந்தனள். அதுகேட்ட இராவணன் வியப்பெய்தி நான் கண்டது பெண்ணுருவ மாக நீ ஆணுருவென்று கூறுவதென்னையோ? என வினாவ “அண்ணா! தாங்கள் கண்ட உருவம் சீதையன்று. இங்ஙனந்தோன்றுவது தங்கள் ஆசைப்பெருக்கத்தால் தோன்றும் உருவெளித் தோற்றமேயாகும்'' என்றாள். ஆயின் யான் கண்டது சரி.'' நீ இராமனிவனென்றனையே, இதன் காரண மென்ன " என வினவ, ''இராமன் என் மூக்கையறுத்து மானபங்கஞ் செய்தது முதல் அச்சம் அதிகரித்தமையால் எனக்கு எங்குபார்த்தாலும் இராமன் வடிவமே காணப்படுகின்றது'' என்றாள். “

பொய்ந்கின்ற நெஞ்சிற் கொடியாள் புகுந்தாளை நோக்கி, நெய்க் நின்ற கூர்வாளவ னேருற நோக்கு கங்காய், மைந்நின்ற வாட்கண் மயில்நின்றென வந்தென் முன்னர், இந்தின்றவ ளாங்கொல் இயம்பிய சீதை யென்றான்.

செந்தாமரைக் கண்ணொடுஞ் செங்கனி வாயினோடும், சந்தார் தடந் தோளொடுந் தாழ்தடக் கைகளோடும், அந்தாரக லத்தொடும் அஞ்சனக்குன்ற மென்ன, வந் தானிவ னாகுமவ் வல்வில் இராமன் என்றாள்.

பெண்பா லுரு நானிது கண்டது பேதை நீ யீண், டென்பாலும் இலாததொ ராணுரு என்றி என்னே!, கண்பாலுறும் மாயை கவற்பதல் கற்ற நம்மை, மண்பாலவ பேகொல் விளைப்பவர் மாயையென்றான்.

ஊன்றும்முணர் வப்புற மொன்றினு மோடலின்றி, ஆன்றும் முள தாநெடி. தாசை கனற்ற நின்றாய்க், கேன்றுன்னெதி பேவிழி கோக்கும் இடங்கள் தோறும், தோன்றும் அனையாள் இது தொன்னெ றித் தாகும் என்றாள்.

அன்னாளது கூற அரக்கனும் அன்னதாக நின்னால் அவ்விராம னைக் காண்குறும் நீரேன் என்றான், எந்நாள் அவன் என்னைத் தீர்வ றும் இன்னல் செய்தான், அந்நாள் முதல்யானும் அயர்ந்திலன் ஆகும் என்றாள் "

ஆ ஆ ! மனத்திற்கு எவ்வளவு வன்மை யிருக்கின்றது? ஒருவனுயிர்க்கு நன்மை செய்வதுங் கேடு செய்வதும் இம்மனத்தையன்றிப் பிறிதொன்றுண்டோ? மனம் யாதானும் ஒன்றை ஊன்றி நினைக்குமாயின் நினைச்கின்ற தான் வேறு நினைக்கப்படு பொருள் வேறு என்பதின்றித் தானே அதுவாய்விடுகின்றது. இக்கருத்தையே இராவணன் சீதையை நினைத்து மோகித்த சமையத்தில் அவனது நிலையைக் கூறவந்த கம்பநாடர்.
 “சிற்றி டைச் சீதையென்னும் நாமமும் சிந்தை தானும், உற்றிரண் டொன்றாய் நின்றால் ஒன்றொழித் தொன்றை யுன்ன, மற்றொரு மனமும் உண்டோ மறக்கலாம் வருமற்றியாதோ, கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கவாமோ"
எனக் கூறியிருக்கின்றார்.

இஃதென்னே ! செய்யுளிலக்கணம் கற்கப்புக்க மாணாக்கனொருவன் அதே சிந்தனையாக உருப்போட்டுக் கற்றுவருங்கால் அவனுக்கு உ.ணவு படைத்த அன்னை நெய்யூற்றுதற்கு மறதியால் வேப்பெண் ணெயை எடுத்து ஊற்றினாளாக, அவன் சிந்தனை படிப்பிலேயே பீடு பட்டிருந்தமையால் கசப்பறியாது வழக்கப்படியுண்டு சென்றான், அன்னையோ தான் மறதியால் வேப்ப நெய்யை யூற்றியதையும், மகன் படிப்பிற் கொண்ட காதல் மிகுதியாற் கைப்பறியாது புசித் தகன்றா னென்பதையுங் கருதி இவனுக்குப் படிப்பில் எத்தனை காலம் இந்த ஊக்க மிருக்கின்ற தென்பதை யறிந்து கொள்ளும் பொருட்டுத் தினமும் நிம்பதைலத்தையே சோற்றிற் பெய்துவந்தனள். இங்ஙனஞ் சில காட் சென்றபின் யாப்பிலக்கண பாடம் படித்து முடிந்தவுடன் மைந்தன் மனம் முன்னிருந்த நிலையைவிட்டுத் திபூர் பிற்று. அன்று வந்து வழக்கப்படி உண்ணும்போது'தாயே நெய் கசக்கின்றதே'' என்றான். தாயுமது கேட்டுக்'' குழந்தாய் ! இன்று தான் உனக்குப் படிப்புங் கசந்ததுபோலும்'' எனப் பகர்ந்தனள். பின்னர் அன்னை தான் செய்து வந்ததைக் கூற, யைந்தன் தான் காரிகை நூற்பாடந் தொடங்கிக் கவலை படடன் கற்று முடித்தமையைக் கூற, இருவரும் மகிழ்ந்தனர் எனக் கர்ண பரம்பரையிற் கூறுங்கதையை நோக்கினும் மனத்தைப்பற்றி மேலே கூறிப் போந்தவை யனைத்தும் மெய்ம்மை யென்பது தெள்ளிதா மன்றோ?

இந்த மனம் என்னும் யானையானது காமாதிமதங்கொண்டு, பிரபஞ்சக் காட்டிற்புக்கு, அறுவகைத் தருக்களை பொடித்து, துயரக் கடலில் ஆழ்ந்து கெடாதபடி அறிவென்னும் அங்குசத்தாவடக்கி, நல் லொழுக்க மென்னும் பாசத்தாற் பிணித்துத்தியானம் என்னுங்கூடத் தில் நிறுத்தினால், அருளன்னுந் தெண்ணீர் பருகி இன்புறுதற் குரிய தாகும். இங்ஙனஞ் செய்வித்தல் ஞான மென்னும் பாகனது கடமை பாகனாகிய ஞானம் தன் கடமையைச் செய்யாவழி மதம் பொழியும் யானை தன் பாகனைக் கொன்று தொலைத்தல் போலவே மனமுந்தன் பாகனாகிய ஞானத்தைக் கொன்றுவிடுதல் ஒருதலை.

மனத்தை யடக்குவ தென்றால் சுலபமான காரியமன்று. அது கல்லினுங்கடிது; கல்லைச் சுற்றுளியால் எவருந் தகர்த்து விடலாம்! இதனைத் தகர்த்தல் அரிது, காற்றிடினுங்கடிது; வாயுவேகமெனக் கூறத்தக்க பிரசித்திபெற்ற காற்றுப்பொதிய மலையிலிருந்து இமய மலைக்குச் செல்வதென்றால் சிலகாலஞ் செல்லும், மனமோ லோகாந் தரங்கட்குங் கால் நிமிஷத்திலும் முந்திச்செல்லும், தீயிலுங்கொடி யது; தீயை நீரா லவித்து விடலாம், கடற்குட் புகினும் அருவியிற் றோயினும் மனத் தீயை அவித்தலியலாது, கடலினும் பெரிது; தோணியின் பணைடால் யாவரும் கடலைக் கடத்தலமையும், இம்மனத்தைக் கடத்தல் மிக அரிது. யமனினும் அஞ்சத்தக்கது; யமன் நியதிபெற்ற ஒருகாலத்திற் கொல்வான். இப்பாவிமனமோ நிமிஷந்தோறுங் கொன்று கொண்டிருக்கும், அம்மம! இதன் செய்கையை உற்று நோக்கினால் சாபாநுக்கிரஹ சீலர்களும் நடுநடுங்கி அங்கங் குலைவரன்றோர் "சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது''  என்றார் தாயு பானவரும்,

முற்பிறப்பிலே நாம் செய்த புண்ணிய பாவங்களெல்லாம் இப்பிறப்பிலே நாமனுபவிக்குஞ் சுகதுக்கங்களாக வந்து பரிணமிக்கின்றன. இப்பிறப்பிற் செய்யும் நன்மை தீமைகள் இனிவரும் பிறப்பிற்கு வித்தாகி அப்போது நமது சுகாசுகங்க ளாகின்றன. ஆகவே நன்மை தீமையிரண்டும் பொன்விலங்கும் இரும்புலிலங்கும் போற் பந்தித்து நிற்பனவேயாகும். ஆகவே இருவினைப் பற்றையும் ஒழித்து 'என் கடன் பணிசெய்து கிடப்பதே'' எனவும், “கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” எனவும், அருட்பெருந்தகையாளர் சட்டளை யிட்டருளியவாறு எவ்வித இன்பங்களயும் விரும்பாது சிவபிரான் திருவடி மலர்களையே சிந்தனை செய்ய வேண்டும். இச்சிந்தனை தான் பிறவிப்பிணிக்கு மருந்தாவது முழுமுதற்கடவுளுடன் இரண்டறக் கலப்பதாகிய சிவசாயுச்சியபதவியைத் தருவது. ஒருவன் மரணாந்தகாலத்தில் அவன் மனம் எதைப் பற்றுகின்றதோ அதுவே அவனுக்கு அடுத்த பிறப்பாக வந்து கூடும்.

ஆகலின் இறுதிக் காலத்தில் உலகப்பற்றில் மனம் புகாமல் சிவபிரான் திருவடி மலர்களையே மெய்யன்புடன் சிந்தனை செய்யவேண்டும் உள்ள நாளுள்ள மட்டும் மாயாவலையிற் சிக்கிப் பந்திக்கப்பட்டு நின்று பண்ட பதார்த்த பெண்டு பிள்ளை களிடத்தே பற்று மிகக்கொண்டு வாழ்ந்து, இறுதிக்காலத்தே திடீரென்று எல்லாப் பற்றையும் விட்டொழித்து இறைவன் றிருவடிமலர்களைத் தியானிப்பதென்றால் முடியத்தக்க தொன்றன்றே! பன்னாட்பழகிய வாசனை தானேமேலெழுந்து நிற்கும். மனைவி என் செய்வாள்? புத்திரனுக்கு விவாகமாகவில்லையே? வீடுகட்டி முடிக்கவில்லையே? யென்பனவாதிய பலவகைப் பந்தங்கள் வந்து சூழ்ந்து மனத்தைப் பிணித்துக்கொள்ளும். இந்தச் சமையத் தில் இஞ்சிதின்ற குரங்குபோலப் பசபசவென்று விழித்து மதிமயங் கிக் கண்ணீர் வடித்து மெய் நடுநடுங்கிக் கைகால் சோர்ந்து வாய்புலர் வுற்று நெட்டுயிர்ப்பெய்தி விம்மிவிம்மித் தியங்குவதல்லது பரமகருணா நிதியாகிய சிவபிரான் றிருவடி நீழலைச் சிந்தித்தல் சாத்தியமன்றே? ஆதலின் கடைக்காலத்திற் சிவத்தியானஞ் செய்தற்கு வழியாது? என்பதே இனி ஆராய்ச்சிக்குரிய விஷயமாயிற்று.

மரிப்பவன் மனமானது மனைவி மக்கள் பொன் பூமி முதலியவற் றைச் சிந்திப்பதற்கு என்ன காரணம்? மனத்துக்கும் அவைகட்கும் என்ன சம்பந்தம்? எதனால் இச்சிந்தனை எழுகின்றது? என்று நீளநினையு மிடத்து மனமானது இப்பொருள்களுடன் பிறந்ததன்று. வளர்ந் ததுமன்று. பன்னாட்பழகிய பழக்கமேலீட்டால் வந்த பற்று மிகு தியேயொழிய வேறில்லை. மனம் எதனிடத்தே அடுத்தடுத்துப் பழகு கின்றதோ அதனிடத்தே பற்றுதல் மிக்கு அதன்மயமே யாகின்றது. ஆனது பற்றி நாம் திடகாத்திரத்துட னிருக்கும் போதே உலகப்பற் றுக்களெல்லாவற்றையும் சிறுகச் சிறுகவிட்டு, விட்ட அளவிற் கேற்ப இறைவனிடத்தே பற்றுதலைச்செலுத்தி வருவோமாயின், நாளடை வில் எல்லாப்பற்றுக்களும் முற்று மொழிந்து சிவத்தியானமே மேற்பட்டு நிலைபெறும். இத்தியானம் வேரூன்றித் தங்கப் பெற்றால் கள்ளக்காதலனிடத் தன்புகலந்து வைத்தொழுகும் உள்ளக்காரிகை போல 'எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும், முத்தர் மனமிருக்கு மோனத்தே" என்றவாறு எந்தத் தொழிலைச் செய்யுங்காலத்தும் ஈசுவரத்தியானமே முற்பட்டு நிற்பதாகும். நாம் உண்பன உடுப்பனயாவும் சிவார்ப்பணமாகவும், எல்லாம் இறைவன் செயலே யென வுங் கடைப்பிடித்து, இன்ப மெய்தினுந் துன்பமெய்தினுஞ் சிவா என்ற மெய்ம்மொழியை மறவாது கூறி வரவேண்டும். இங்ஙனமே பழக்கத்திற் கொண்டுவந்து விட்டால் இறுதிக்காலத்தும் சிவசிந்த னையே நிலையுறுமென்பது நிச்சயம். இதனையல்லாது வேறு எவ்வித உபாயங்களும் இத்துணைப் பயனுதவுவதன்று. அவாவே பிறவிக் கேது என்பதை 'அவா வென்பவெல்லா வுயிர்க்கு மெய்ஞ்ஞான்றுந் தவர் அப்பிறப்பீனும் வித்து'' என்னுந் திருவள்ளுவரானும், இறுதிக் கட் போதருஞ்சிந்தனை அடுத்துவரு பிறப்பாகு மென்பதையும், அப்போது ஈசுவாத்தியானம் வருதற்பொருட்டு எப்போதும் அத்தியா னத்திலேயே பழகிவரவேண்டு மென்பதையும்,

மரிக்கும்போ துன்னும் வடிவினை யாவி
பரிக்கும் நினைவு பரித்து.

ஆதலினாற் சுற்றத் தவரைநினை யாதயலன்
பாக நினைக பரிந்து.''
என்னுஞ் சோமவார விரதகம் பத்தாலும்;

நின்று மிருந்துங் கிடந்து நடந்துகினை என்றுஞ் சிவன்றாளிணை''  
என்னும் வருத்தமறவுய்யும் வழியானும்,

''உடம்பி னீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப் பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்குந் துணிபாதலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேது வாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப்பொருளையே பாவித்தல் வேண்டும். அதனால் அதனை முன்னே பாவித்தலர்ய இதனின் மிக்க் வுபாயமில்லை யென்பதறிக'' என்னும் பரிமேலழகர் கருத்து முதலிய வற்றாலும் நன்கு தெளியலாம்.

''அழுக்கு மெய்கொடுன் றிருவடி யடைந்தே
னதுவு நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வ ரடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய பல்லான்
மற்று நானறி யேன் மறு மாற்றம்
ஒழுக்க வென் கணுக் கோர்மருந் துரையர்
யொற்றி யூரெனு மூருறை வானே.''

அங்கத்னத மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து, பங்கத்தைப் போகமாற்றிப் பாவித்தேன் பாமா வுன்னைச், சங்கொத்த மேனிச்செல்வர் சாதல்நாள் நாயேன் உன்னை, எங்குற்றா யென்றபோ தில் இங்குற்றேன் என் கண்டாயே.'' என்னுந் திருநாவுக்கரசுநாயனார் திருவாக்கும் மேற்கூறிப் போந்தவற்றையே வலியுறுத்து வன்வா மென்க.

இதுகாறுங் கூறிப் போந்த உண்மையைக் கொண்டு எக்காலத்தும் சிவத்தியானத்தை மறவாது பயின்று வருவோமாயின் ''பழக்கக் கொடியது பார் பாறையையுங் கோழி கிழிக்கும்" என்றாங்கு எச்சமையத்துஞ் சிவா என்ற மெய்ம்மொழியே நாவிற் பதிந்து மேலிடும். "நற்றவாவுனை நான் மற்க்கனுஞ் சொல்லு நா நமச்சிவாயவே" என்ற வண்ணம் பயிற்சிபண்ணிக்கொண்டால் எல்லாப் பேறும் எய்தல் எளி தாம். ஆதலின், சிவாய நமவென்ன சிந்தித் திருப்பார்க்கபாப மொரு நாளுமில்லை'' என்ற முது மொழியையே பின்பற்றவேண்டும்.

அங்ஙனஞ் சிவத்தியானஞ் செய்து வருவோமாயின் எல்லாப் பொருள் நம்மிடம் தயிரினுள் நெய்போல் வெளிப்பட்டு நின்று உண்ணப்படுவனவாகிய உண்டிப்பொருள்களானும், அனுபவிக்கப் பெறும் மனைவி முதலியோரானும் யாவரும் வணங்கத்தக்கதாகிய அரசாட்சியாயினும், அடையும் இன்பத்தினுஞ் சிறந்ததொரு நல்லின்பத்தையே நாளும் நல்கி வினைக்கீடாய் யாக்கையொழிவில் முத்திப்பேரின்பத்தை யுந்தந்து வாழ்வித்தல் ஒருதலை யென்க இதனாலன்றோ?

''கனியினுங் கட்டிட்ட கரும்பினும்
பனி மலர்க்குழற் பாவைநல் லாரினும்
தனி முடி கவித் தாளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்சிடை மருதனே

என்றார் திருநாவுக்கரசு நாயனார்.

சங்கார்சாரியசுவாமிகள் சிவபிரானைப் பிரார்த்திக்கு மோரிடத்தில் "சுவாமீ! அடியேன் மனங்குரங்காயிருக்கின்றது. இதனால் எனக்குச் சிறிதும் நன்மையில்லை. தேவரீரோ  பிக்ஷாடன மூர்த்தியாகிக் கையில் ஓடெடுத்துத் திரிபவர்ராதலால் இக்குரங்கைத் தேவரீரே எற்று கொள்ள வேண்டும் பிச்சை புகுபவர் குரங்கைக் கைக்கொண்டு சென்றால் எளிதிற் பிச்சை கிட்டும். ஆதலின் தேவரீருக்கே ஏற்ற தர்கும்'' என்று இக்கருத்தையே நன்கு விஸ்தரித்துக் கூறியிருத்தலும் நோக்கத் தக்கதாம். இதனால் மனத்தைச் சிவபிரானிடத்தே சேர்க்க வேண்டுமென்ற ரகஸ்யமும், அது மிகவும் அருமையாதலின் "அவனருளாலே அவன்றாள் வணங்கி' என்றவண்ணம் இறைவன் மிருவருளாற்றான் கிடைப்பதாகும் என்ற வுண்பையும் விளங்கப்பெற் றிருத்தல் மிகவும் பாராட்டற்பாலதொன்றேயாம்.

மனமானது அறிவின் வசப்பட்டு நிற்குமாயின் அதைவிடப் பெறும் பேறு பிறிதொன்றில்லை. தற்காலம் மேனாட்டுக் கலைஞர்கள் மெஸ்மரிசம், என்று சொல்வதெல்லாம் தம் மனத்தைத் தாம் வசப்படுத்திக்கொண்டு தாம் மனத்துக்கு அடிமையாகாமல் கடக்குஞ் சிறந்த முறையேயாகும். நமது முன்னோர் கருடபாவனை என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றோமே. அது தான் யாது. ஒருவனுக்கு விடந்தீண்டியவழி அதைத் தீர்க்கப் புக்க மாந்திரீகன் தன் ஆன்மாவைக் கருடனுக்கு அதிதெய்வ மாகிநிற்கும் மந்திர மூர்த்தியாகப் பாவித்துச் செபித்தலேயாகும். அங்கனஞ் செபித்தலாலே விடந்தீர்ந்து சுகமிறுதல் பிரயத்திபட்சமாம். இதனாலும் நாமறியக் சிடக்கின்றது மனத்தின் பாவனாசத்தி விசேடமேயன்றே? சிவோ கம்பாவனை செய்து வருஞ் சீவன்முத்தர்கள் சில மாந்தன்மைப் பெருவாழ் வெய்துதலை நூல்வாயிலாக அறிகின்றேம் சிவத்தினிடத்தே மனத்தைச் செலுத்தி நிற்கும் பெரியராவார் முப்பத்தாறு கருவிக்ளுங் கழன்று அருளிடத்தே நின்று ஞேயாக் தழுந்திவதாகிய சாக்கி ராதீதா வஸ்தையுடையராய் விதிவிலக்கின்றிச் செய்வன் வெல்லாந் தவமாகக்கொண் டொழுகுதலும், விழித்த கண்ணினராயும் புறப் பொருள்களைப் பற்றப்பெறாபாதலும் எதனால் எனின் அவர்கள் மனம் இறைவனிடத்திற் பின்னிக் கலந்து பிணிப்புண்டுகிடத்தலால் வேறொன்றிற் செல்லற் கிடனின்றி மனமிறந்து நிற்றலுற்றமையாலே யென்க.

"ஒழித்த நோன் பின பாடலர் பாடலருலகம், பழித்த செய்கை யாழுகையர் நகையினர் பாசங், கழித்த கண்களா லானுருக் கண்டு கொண்டுலசில், விழித்த கண்குருடாய்த் திரிவீரரும் பலரால்" என்பதாதியாக வரும் பெரியார் திருவாக்குக்களால் இதனுண்மையறியத் தகும்

சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெலாம் பெற்றாலும், மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபாமே''

நின்னை யாப்பெறு கிற்கிலே னன்னெஞ்சே
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
யறப்பெறுகிற்பேனேற் பெற்றேன் மற்றீண்டு
துறக்கந் திறப்பதோர் தாள்.

உள்ளூரிருந்துந்தம் முள்ள மறப் பெற்றாரேற்
கள்ளவிழ் சோலையாங் காட்டுள்ளார் காட்டுள்ளும்
உள்ள மறப்பெறு கல்லாரே னாட்டுள்ளு
நண்ணி நடுவூருளார்.''

என்பனவாதியாக மனத்தை வசப்படுத்துவதன் சிறப்பைப்பற்றி நம் முதியோர் கூறிவைத்த அற்புதச் செயுட்கள் பலவுண்டு. அவற்றையெல்லாம் விரிப்பிற்பெருகும்.

இதுகாறுங் கூறிப்போந்த வண்ணம் இடையறாப் பேரன்பு கொண்டு சிவத்தியானஞ் செய்து வரும்பொருட்டு வேண்டுவார் வேண்டுவதேயீயும் பரமகருணாகி தியாகிய முழுமுதற்கடவுள் முன்னின்று திருவருள் சுபந்து காத்தருள்க.

வியாசத்திரட்டு.

சித்தாந்தம் – 1915 ௵ - அக்டோபர் ௴
             

No comments:

Post a Comment