Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சிவபாரம்மியம்
(விஷ்ணுபாகவதம்.)

முதலாவது அத்தியாயம்.
      
சத்வ, ரஜஸ், தமஸ் ஆக பிரகிருதியின் குணங்கள் மூன்று. இவைகளுடன்கூடி பாபுருஷன் இவ்வுலக சிருட்டி முதலியவைகளின் பொருட்டு ஹரி, விரிஞ்சன், ஹர எனும் பெயர்களை முறையேகொள்கிறார். இவைகளுள் (சத்வதனு) சத்வவடிவமாயுள்ளவரிடமிருந்து மனிதன் நன்மை தேடுகிறான், - ii. 23.

குறிப்பு: - இதனால் திரிமூர்த்திகளினின்றும் பாபுருஷர் வேறானவரெனவும் அவர் சதுர்த்தம் எனவு மேற்படுகிறது.

மாண்டூக்யோபநிஷத்.
      “ப்ரபஞ்சோப சமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம்"
            நிருசிம்மபூர்வ தாபிக்யுபநிஷத்.
“ப்ரபஞ்சோப சமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே''
            நாரதபரிவ் ராஜகோபநிஷத்..
“ப்ரபஞ்சோப சமம் சிவம் சாந்தமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே"
            ராமோதரதாபிநியோபநிஷத்.
"ப்ரத்ய யஸாரம் ப்ரபஞ்சோப சமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே"
                
பஸ் மஜாபாலோபநிஷத்.
"அத்வைதம் சதுர்த்தம் ப்ரம்மவிஷ்ணு ருத்ராதிதமோ மாசாஸ்யம் பகவந்தக் சிவம்" எனவரும் வேதஞானகாண்டங்களின் இருதயவுண்மையினையே இச்சுலோகந்தெரிவிக்கிறது.

       அஸ்வத்தாமன் உருத்திரமூர்த்திக்குப்பயந்து சூரியன் போல்''  தன் பிராணனுக்காக ஓடினான். அல்லது மற்றொருபாட பேத்தின்படி "உருத்திரமூர்த்திக்குப் பயந்து பிரமனைப்போல்'' தன் பிராணனுக்காக ஓடினான். Vii. 18.
    
பரீக்ஷித் என்பவருடைய ஜாதகத்தினை ஜோசியர்கள் எழுதியபோது அவர் (அருள்) பிரசாதத்தில் கிரீசனை ஒப்பார்''  என்று கூறினர். Xii. 24.
குறிப்பு: - பூர்வசாஸ்திரங்களில் பிரசாதம் என்னும் பதம் பக்குவப்பட்ட சிவபக்தர்களுக்குப் பரமேஸ்வரன் புரியும் திருவருள் சம்பந்தமாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது.

திருமந்திரம்.
சிவனருளாற் சிலர் தேவருமாவர்
            சிவனருளாற் சிலர் தெய்வத்தோடொப்பார்
            சிவனருளால்வினை சேரகிலாமை
            சிவனருட் கூறிலச் சிவலோகமாமே.
    
என வருதலாற்காண்க. ''அவனருளாலே யவன்றாள்வணங்கிஎன்பது மிக்கருத்துப் பற்றியே யென்க.

அர்ச்சுனன் தன் பழைய அற்புதங்களை நினைக்கிறபோது "சூலாயுதம் ஏந்திய ஹிமவான் மகளொடும் மகிழ்ந்து அவரது சொந்த பாணமாகிய பாசுபதாஸ்திரம் எனக்கு அளித்தார்''     XV. 12.
    
ண்டாம் அத்தியாயம்.
    
கல்வி (ஞானம்) வேண்டுவோர் கிரீசனை வணங்கவேண்டும். உத்தம வாழ்க்கைத்துணைப் பெற விரும்புவோர் கற்புவடிவாம் உமாதேவியை வணங்க வேண்டும். iii. 7.
குறிப்பு: - இதனால் சிவபெருமானாலேயே ஞானம் அடையத்தக்கதென்று ஏற்படுகிறது.

கைவல்யோபநிஷத்.
      ''ஜ்ஞாத்வாதந்ம் ருத்யுமத்யேதிகாந்ய: பந்தாவிமுக்தயே''

திருமந்திரம்.
      சிவமான ஞானந்தெளிய வொண்சித்தி
      சிவமான ஞானந்தெளிய வொண்முத்தி
      சிவமான ஞானஞ் சிவபரத்தேயேகச்
      சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.             என்றதனாற் காண்க.

மூன்றாம் அத்தியாயம்.
      
இவ்வுலகத்தினின்றும் கிருஷ்ணன் போய்விட்ட பிறகு துவகையிலிருந்து திரும்பி வருகிற போது உத்தவரை நோக்கி விதுரர்  குறித்தகேள்வியைக் கேட்கிறார். அதாவது சாம்பன் சௌக்கியமாயிருக்கிறாரா. அழகு வாய்ந்த விஷ்ணுவின் உத்தம புத்திரர். சாரதிகளுள் தலைவர். பூர்வகாலத்தில் அம்பிகை தெய்வக்குகனாகிய சுப்பிரமணியமூர்த்தியைப் பெற்றது போல், ஜாம்பவதி சிவபிரானுக்கு விரதம் அனுஷ்டித்து, பெற்றெடுத்தாள். I. 30.

குறிப்பு. - இதனால் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்குத் தெய்வம் சாம்பவமூர்த்தி யெனத் தெரியவருகிறது. யாதவகுலம் பரமேஸ்வரனுடைய அழிக்கும் அம்சம் பெற்றுள்ளவனான சாம்பன் மூலமாய் அழிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. இந்தத் (அழிக்கும்) தொழிலைச்செய்யும் ஒவ்வொருவரும் சிவ அம்ஸத்தை அச்சமயம் அடைகிறார்கள்.
(Xi. 2. 14 முதல் 16 வரையில் ஸ்லோகங்கள் பார்க்க.)
    
தாமஸ சிருஷ்டியில் பிரமன் திருப்தி டையாதபோது சனகர் முதலிய குமாரர்கள் மனோபாவனைபால் உற்பத்திசெய்து ஆன்மாக்களைச்சிருஷ்டிக்கும்படி கூறினான். அவன் கட்டளையின்படி நடக்க அவர்கள் உடன்படாததால், அடங்காப் பெருங்கோபம் உண்டாயிற்று. ஆனால் அதை அடக்கப் பிரமன் முயற்சித்தான். தன்புத்தியினாலதை அடக்கிய போது பிரஜாபதியின் கண்ணிமைகளின் மத்தியிலிருந்து அவன் கோபம் இளமையான நீலலோகிதராய்  (ருத்ரராய்)  உற்பத்தியாய்த் தோன்றினர். Xii. 7.
      
அவனையும் சிருஷ்டித் தொழிலை ஏற்றுக்கொள்ளும் படி பிரமன் வேண்டினான். ஆகவே அவ்வேண்டுகோளின்படி நீலலோகிதர் இயற்கையாகவே சத்வகுணமுடைமையால், தன்னைப் போலவே பல ஆன்மாக்களைச் சிருஷ்டிக்கத்தொடங்கினார். ஆகவே அநேக ருத்ரர் சிருஷ்டிக்கப்படுவதைப் பிரமன் கண்டு அச்சிருஷ்டியை நிறுத்தும்படி கூறினான். Xii, 13. 14. 16.

குறிப்பு. - இச்சரித்திரம் ஒவ்வொரு புராணத்திலும் பிரமன் சிருஷ்டி செய்ய முயலும் சந்தர்ப்பங்களில் காணப்படுகிறது. ருத்ரமூர்த்தியில்லாமல் படைப்புத்தொழிலும் காத்தற்றொழிலும் இயங்காவாம் என்பது இதனாற் போதரும்.
      
பிரதோஷகாலத்தில் மாரீசனது மனைவி தன் காமத்தைத் திருப்தி செய்யக் கட்டாயப்படுத்திய போது, இவ்வித்மாக பாரீசன் கூறுகிறான். ற்புடையாளே! ஆன்மாக்களைச் சிருஷ்டிக்கும் பரமேஸ்வரன்  இச்சந்தியா காலத்தில் பரிவார தேவர்கள் சூழ மகிமையுள்ள ரிஷபவாகனத்தின்மீது வருகிறார். சேதுவைக் கட்டியவர். பிரமன் முதலானோர் அதற்குக் காவலாளர்கள். பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணர். மாயாசக்தியோடு கூடியவர். பூதங்களோடு அவர் புரியும் செய்கைகள் திருக்கூத்தேயாம். Xiv. 22. 23. 28.
      
திதி என்பவள் தன் குறியின் சௌக்கியத்திற்காக இவ்வாறு ருத்ரமூர்த்தியைத் துதிக்கிறாள், ''ருத்ரரைப் பணிகின்றேன், பெரியவரே! தேவரே! உக்கிரரே, வேண்டும் அபீஷ்டங்களை வழங்கும் வள்ளலே, சிவனே, சாந்தமானவனே, ஆண்டவனே, கோபமானவனே, தன்சக்தியின் சகோதரியாய் அவர்க்கும் பந்தம் உள்ள எனக்கு நன்மை புரிவாராக, திருவருளுக்கு பாத்திரரா யிருப்பவர்களுக்கெல்லாம் அருளுடையர். முக்கியமாய் ஸ்திரீஜாதியிடத்துக் கற்பரசியின் பதியாதலால் நன்மைபுரிவர். Xiv. 33. 34 35.

நான்காவது அத்தியாயம்

மகப்பேறுக்காக அத்திரிரிஷி தவஞ்செய்த காலத்து, இவ்விதமாகத் துதிக்கிறார் லோகத்தின் நாயகனைச் சரணடைகின்றேன், என்னையொத்த ஒரு புத்திரனை எனக்கருள்வாரா. பின்னர் மும்மூர்த்திகளும் முறையே ரிஷபம், அன்னம், கருடன் ஆகிய வாகனங்களின் மீது அந்த ரிஷியின் முன்னர் தோன்றினார்கள். அப்போது அத்திரி இவ்விதமாகக் கூறுகிறார். லோகத்தின் சிருஷ்டி, திதி, சம்ஹாரத்தின் பொருட்டு ஒவ்வொரு கற்பத்திலும் மாயையின் முக்குணங்களுக்கேற்ப உருவெடுத்து முறையே பிரமன், விஷ்ணு, கிரீசன் எனும் பெயர் தாங்குகிறீர்களென்பதை அறிவேன். உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் உங்களுள் என்னால் உபாசிக்கப்பட்டவர் யாவர்? என்றனர் உன் சங்கல்பம் எப்படியோ அப்படியே நடக்கும், வேறு விதமாக நடவாது ஓ பிராமணனே ! நீ சத்திய சங்கல்பன் (உண்மையான தீர்மானமுடையவன்) ஆதலால் நீ உபாசித்தமூர்த்திகள் நாங்களே.''   i. 20. to. 30.

குறிப்பு: - மும்மூர்த்திகளுக்குச் செய்யும் வணக்கம் துரியமூர்த்திக்கு முரியதென்பதாம்
      
விதுரர் கேட்கிறார் 'கற்பு வடிவமாகிய தன் புத்திரியை நோக்காது நல்லோர்க்கெல்லாம் மோலானாவாகிய சிவபிரானிடத்துத் தன் புத்திரியினிடம் பிரியமுள்ள தக்ஷன் ஏன் விரோதம் பூண்டனன்.'' ii. 1. |
      
ஜகத்துக்கு வழிகாட்டியராய், யாதொரு விரோதமில்லாதவரும் தன்னுளே ஆனந்தமுடையராய்ச்சாந்தமான தோற்றமுடையவரும் ஜகத்தின் பமதேவருமாகிய அவரிடம் யார் தான் விரோதம் கொள்ளக்கூடும். ii. 2.
      
ஒருவர்க்காகப் பிரதி தீமை செய்யாதவராகிய கடவுளுக்கு துன்பம் நினைக்கின்றானோ? அவன் வேறுபட்ட மனத்துடன் சத்திய விரோதம் ஆகின்றான். ii. 22.
      
அறிவில்லாததாகிய ஆன்மா (பசு) தன் முடிவை மறந்து லௌகிக விஷயங்களில் சிக்கிக்கொள்ளட்டும் ii. 24.
      
மூடன் அறிவின்மையோடு கூடிய செய்கையைக் கல்வி விசேடமெனக்கொள்வான். சிவபிரானை இகழ்ந்தோரைப் பற்றுகிறவர்களும் ஜெனன வாழ்வை அடைவார்கள். ii. 25.
      
தேவி தக்ஷனைப்பார்த்து நீயல்லது வேறுயார் சர்வவியாபகரும், விரோதத்தின்றும் புனிதமானவரும், தனக்கு அன்புள்ள நண்பனையாவது விரோதிபையாவது இவ்வான்மகோடிகளிலில்லாதவரும், பிறர் அன்புசெலுத்தக்கூடிய தன்மையருமாகிய பரமேஸ்வரனை இகழ்வார்கள். iv. 11.
      
துஷ்டர்கள் நல்லோர்க்குத் தீக்குணம் உரைப்பார்கள் ஆனால் இருபிறப்பாளனே! உன் போன்ற பக்குவமுடையார் அப்படி செய்யார். சிறிய நற்குணங்களையும் மேலோர் விசேஷமாகவே மதிப்பார்கள். அவர்களுக்சத் தீமை கூறுகின்றாய். iv. 12.

அவரது திருநாமமாகிய இரண்டு அக்ஷரங்களை எதோ ஒரு முறை உச்சரிக்கின், மனிதர் பாபங்களை ஒழிக்கும், நீயோ, அமங்களமானவன். இகழ்கின்றாய், நல்லபுகழும் தடுக்கமுடியாத ஆக்கினை உடையாய். iv. 14.

குறிப்பு: - சிவ என்ற இரண்டட்சரங்கள் சகல பாபங்களையுயொழிக்கு மென்பதாம். -
திருமந்திரம்.
            சிவசிவ வென்கிலர் தீவினையாளர்
      சிவசிவ வென்றிடத் தீவினைமாளும்
      சிவசிவ வென்றிடத் தேவருமாவர்
      சிவசிவ வெனச் சிவகதிதானே.
                                                 எனவருதலாற் காண்க.

மஹான்களுடைய தேனீ போன்ற மனம் பிரம்ம ரசமெனுந்தேனை உண்ணும். அவாவுடன் தாமரை போன்ற அவர் திருவடிககளைப்பற்றுகிறார்கள். வேண்டுவார்க்கு வரங்களை வழங்கும் வள்ளலும் யாவர்க்கும் நண்பரானவருமாகிய (ஈசனை) நீ இகழ்கின்றாய். iv. 15.
      
நீ நீங்கலாக பிரமனும் எனையோரும் (மங்களகரமான) சிவபிரானை (அசிவன்) அமங்களகரமாக நினைக்கின்றாரிலர்... iv. 16
      
தர்மரக்ஷகனாகிய ஈசனை இகழ்கின்றபோது ஒருவர் காதைமூடிக்கொண்டு போய்விடவேண்டும். வல்லமையுடையராயின் தாழ்வு பேசிய நாக்கை வேகமாய் அறுக்க வேண்டும். அல்லது உயிரைவிட்டு விடவேண்டும். இது தான் தர்மம். iv. 17.

குறிப்பு: -  சிவ தூஷணங்களைத் தாம் நேரே செய்யாராயினும் பிறர் செய்வதை இசைந்து கேட்டுக்கொண்டிருப்பினும் பாவமேயாம்.

சித்தாந்தசிகாமனி.
      கண்டனனாயின் முக்கட்கடவுளை நிந்திப்போனைத்
      தண்டனைபுரிந்து கொல்கவரிதெனிற் சபிக்கநின்ற
      மண்டனில் வலியனன்றேல் வான்செவித்துணைகள் பொத்திக்
      கொண்டவனகன்று செல்க குலைகுலைந்த மலபத்தன்.
      
ஸ்ரீ கண்டரை இகழ்ந்த உன்னிடமிருந்துண்டான இத்தேகத்தை உயிருடன் வைக்க மாட்டேன். தடுக்கப்பட்டவுணவை பிரமித்து உண்டவனுக்கு உய்யும் வழி அதனை வாந்திபண்ணி விடுதலே. iv. 18.
      
ஆன்ம விளக்கம் அடைந்த மஹாமுனிவருடைய சமயோசித உணர்ச்சி வேதவாக்கியங்களால் கட்டுப்படாது. iv. 14.
      
அம்பாள் தன் நாயகன் தாமரை போன்ற திருவடிகளின் தேனைத் தியானித்துக்கொண்டிருந்ததால், வேறொன்றும் காணவில்லை. தன் தேகம் புனிதமாகியது. சமாதியிலிருந்துண்டான அக்கினியால் தகிக்கப்பட்டது. iv. 27.
      
மைத்திரேயர் கூறுகிறார் ''பிறகு தேவர்கள் எல்லாரும் சூலாயுத முதலிய ஆயுதங்களை ஏந்தி பருத்ரகணங்களால் புடைக்கப்பட்டுக்கால்கள் ஒடிந்த பிறகு அங்குக்கூடியுள்ளோர்களுடன் பிரமனிடம் சென்று தண்டாகாரமாய் விழுந்து நடந்தன யாவும் கூறினார்கள். vi. 1. to. 2.

இப்படி நடக்குமென்று முன்னமே உணர்ந்து (உந்தித்) தாமரையிற் பூத்த பிரமனும் சர்வவியாடக விஷ்ணுவும் தக்ஷயாகத்துக்குச் செல்லவில்லை. vi. 3.

குறிப்பு: - ஈண்டுவியாபகமென்பது பிரதிஷ்டாகலை வரையிலுள்ள வியாபகமேயாம் விஷ்ணு தட்சயாகத்திற்குச் சென்று பரிபவப்பட்டதாக சில புராணங்கூறும்.

இவைகளைக்கேட்டுப் பிரமன் சுகம் விரும்புவோர் தெய்வங்களுக்குக் கெடுதிசெய்யின் க்ஷேமமடையார்'' என்றார் vi. 4.
      
சிவபிரானது அவிப்பாகத்தை நீக்கிய படியால், நீங்கள் குற்றஞ்செய்தீர்கள். அவர் திருவடிகளைப்பற்றுங்கள். அவர் எளிதிற் சந்தோஷமடைவர். சுத்தசித்தத்தோடு தியானஞ்செய்மின். vi. 5.
குறிப்பு: புருஷசூக்தத்தில் விஷ்ணுவை ''யஜ்ஞரூபி'' எனவும் ருத்ரமூர்த்தியை யஜ்ஞபதியெனவும் கூறுமாற்றால். சர்வதேவதநூர்ப்பூதராகிய சிவபெருமானே அவிப்பாகத்திற்கு உரியர்.
      
யானாவது (யஜ்ஞராகிய) விஷ்ணுவாவது, நீங்கள் எல்லோருமாவது, மஹான்களாவது, பிறர்யாராவது அவர் உண்மை நிலையையும் ஆற்றலையும் வல்லபத்தையும் அறியோம். சுயேச்சையான அவரைத்தணிப்பதற்கு வழி போதிப்பர். vi. 7.
      
பிரமன் இவ்விதமாகத் தேவர்களுக்கு அறிவுறுத்தித் தன்னிடம் விட்டுப் பிதிர்கள் பிராஜபதிகளோடு, திரிபுரமெரித்த பரமேஸ்வான் விரும்பியிருக்கும் ஸ்தானமும், மலைகளுட் சிறந்ததுமான கைலையங்கிரியை யடைந்தான். vi 8.
      
பிறப்பு, மருந்து, தவம், மந்திரம், யோகம் ஆகிய இவைகளால் முதிர்ச்சியடைந்தோரும், கின்னரரும், மனிதரல்லாதவரும் கைலையங்கிரியில் வீற்றிருக்கின்றார்கள். vi. 9.

குறிப்பு: - சுமார் இருபத்தைந்து சுலோகங்களில் பெரிய ஆலவிருக்ஷமுதல் கைலையின் வனப்புகளைத் தனித்தனி வர்ணித்திருக்கிறது. வைகுந்தமும் இவ்வளவு விரிவாக வர்ணிக்கப்படவில்லை.
      
மஹாயோக விருக்ஷத்தினடியில் சிவபிரான் எழுந்தருளியிருப்பதைக் கண்டார்கள். மோக்ஷம் விருப்பு வோர்க்குத் தாயகமாயிருப்பவர். குபேரனும் சநந்தனரும் யோகசித்தியும் இருவினை யொப்புமுள்ள ஏனையரும் வணங்குகின்றார்கள். சிவபிரான் புத்தியின் வழிகளும், யோகத்தின் துறைகளும் யோசிக்கின்றார். தபஸ்சிரேஷ்டர்கள் விரும்பும் உருவம் கொள்கிறார். மஞ்சம் புல்லாசனத்தின் மீது பஸ்மதாரணராய் அழியா உண்மையை நாரதருக்கு விளக்குகின்றார். நாரதர் கேள்வி கேட்கின்றார். ஏனையர் கவனிக்கின்றார்கள். அப்பரசிவம் தமது இடது காலை வலது முழந்தாள் மேல் வைத்துக்சொண்டு ஜெபமாலையைக் கையில் பிடித்துக் கொண்டு தாரகமுத்திரையின் சின்னத்தைக் காட்டிக்கொண்டு வீற்றிருக்கிறார். vi. 33 to 38.
      
மகரிஷிகளும் அஷ்டதிக்குப் பாலகர்களும் அவரை வணங்குகிறார்கள். அவர் சமாதியில் மஹாயோக சாதனையால் அடையக் கூடிய ஆன்ம அனுபவம் அடைகின்றார். மனுகுலத்தோருள் முதல்வர் vi 39.
      
பிரமன் கூறுகிறார்: - தேவரீரை ஜெகந்நாதனென்றும், பிரபஞ்சத்தைக் கடந்தவரென்றும், முதற்காரணரென்றும், சத்தியும் சிவமும் என்றும், பரப்பிரம் மென்றும் அறிவேன் vi. 12.
      
தேவரீரே சிவசத்திகளின் கூட்டுறவால் விளையாட்டுச் சிலந்திபோலப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டி, திதி, சர்ஹாரம் செய்கிறீர்.   vi. 43.

குறிப்பு: - ஜீவசித்தாகிய சிலந்தி அசத்தாகிய உடலினின்றும் நூலைக் காரியப்படுத்துவதைப் போல, சிவசித்தாகிய இறைவன் மாயையினின்றும் பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துவனென்பதாம்.
      
தக்ஷன் ஏவுதலால் தர்மார்த்தத்தின் பயனை அனுபவிக்க யஞ்ஞர்களை அவர்கள் உண்டாக்கினார்கள். பிராமணரும் ஏனையரும் அழுத்தமாக அனுசரிக்கும் (ஜாதிகளின் வித்தியாசங்களின்) வரையறையளவுக்குத் தேவரீரே காரணர். vi. 44.
      
அமங்கள காரியங்களை மங்களமாக்குவீர். செய்கைகளுக்கு இவ்வுலகத்திலும் மற்ற உலகங்களிலும் சன்மானம் அளிக்கின்றீர். தீமை புரிவோரைக் கடுநரகில் தள்ளுகிறீர். vi. 45.
      
பசுவாகிய அறிவிலா ஆன்மாக்களைத் தேவரீர் திருவடி பற்றிய சிந்தையாளராய் எல்லா ஆன்மாக்களிலும் தேவரீரிடத்தே காண விரும்புகின்ற பெரியோர்களைப் பசுவாகிய அறிவிலாத ஆன்மாக்களிடத்துச் செய்வது போலக் கோபமானது பெரும்பாலும் செல்லாது. vi. 46.
      
தன்முதுகின்மீது யாகமிருகத்தின் தலையை வைத்திருந்தபோ துருத்ரமூர்த்தி பார்க்கத்துக்கத்தினின்றும் விழிப்பதுபோல் தக்ஷன் எழுந்தான். தன்முன்னே சிவபிரானைக்கண்டான். vii. 9.
      
ருத்ரமூர்த்தியிடம் விரோதங்கொண்டதால் கலங்கிய மனத்தனாகிய அப்பிரஜாபதி சிவபிரானைத் தரிசித்த விசேடத்தால் குளிர்ந்த காலத்திலிருக்கும் குளபடபோல (துர்க்குணங்களாகிய) மலத்தினின்றும் விடுபட்டான். vii. 10.
       
முதல் முதலில் தேவரீர் முகத்தினின்றும் பிராமணரை உற்பத்தி செய்தீர். பிரம்மத்துக்கும் ஆன்மாவுக்குமுள்ள உண்மையைப் பரவச் செய்வதற்காக உண்டாக்கினீர். அவர்கள் நல்லொழுக்கமும் கல்வியின் நிமித்தம் உறுதிகொண்டிருக்கிறார்கள். பரமனே ! நிரை மேய்ப்பவன் கோல்கொண்டு பசுக்களைக் காப்பாற்றுவது போல எல்லா ஆபத்துகளிலும் அப்பிராமணர்களைக் காப்பாற்றுகிறீர். vii. 14.
      
அப்பரமனது உண்மைச்சொரூபம் அறியாமல் சபையில் அம்பு போன்ற கொடிய வார்த்தைகளால் நான் தூஷித்த அப்பரமன் தனக்குத்தானே சந்தோஷப்படட்டும். பெரியோரைத் தூஷித்த தற்காகத் தண்டாகாரமாய் வணங்கியபோது திருக்கண் கிருபா நோக்கத்தால் காப்பாற்றினார். Vii. 15.
      
மறுபடியும் கூடிய சபையை நோக்கி விஷ்ணு கூறுகிறார், ''நானும், பிரமனும், சிவமும் பிரபஞ்சத்தின் மூலகாரணர். பரமான்மாவும், ராஜாக்களும், சாட்சிகளும், ஆன்மதரிசனிகளும், அதீதர்களும் ஆவோம். vii. 50.

''மூடனானவன் பிரமன், ருத்ரன் முதலனோரைத் தனங்கிரண்டாவதில்லாத பரமான்மாவாகிய பிரமத்தினின்றும் வேறாக நினைக்கிறான். vii. 52.

குறிப்பு: -  "ஏக எவருத்ரோ நத்வீதியாய தஸ்தே" எனவும் சிவ வ கேவலா'' எனவும் வருவனவற்றால் சிவபெருமான் இரண்டாவதல்லரென்றும் அவாதிஷ்டானத்தால் மூவரும் வாழ்பவராகலின் இவர்களை வேறாக நினைக்கக்கூடாதெனவும் கூறியவாறாயிற்று.

''பிரமனே! சொரூபத்தில் ஒரு தன்மையராயும் யாவற்றிற்கும் மூலமாயும் இருக்கும் மும்மூர்த்தியுள் வித்தியாசங்கொள்ளா தவனே சித்தத்தெளிவு அடைகிறான்'' vij. 54.
      
மைத்திரேயர் கூறுகிறார்: தக்ஷயாகத்தை அழித்த சிவபிரானது இவ்வெற்றியைப் பிரகஸ்பதியின் அவதாரமாகிய உத்தவர் எனும் என் பக்திமானாகிய மாணவனால் கேள்விப்பட்டேன்.   vii. 61.
      
, பரீக்க்ஷித்! கற்றபிறகு பக்தியுடன் தினந்தோறும் புகழ் விருத்தியும், தீர்க்காயுளும் பாபக்கமும் விளைக்கும் பரமேச்சுரனது மகிமைகளைப் பாராயணஞ்செய்பவனே பாபத்தைத் தொலைக்கின்றான். vii. 62.
      
பூமிதேவி நிலத்து உழைப்பாளிகளுக்குப் பலன் கொடாத போது திரிபுர தகனரைப் போலப் பிருத்விராஜன் கோபமடைகிறானென்று கூறப்படுகிறது. (x. 7, 29, x. 76, 12 பார்க்க). xvii. 13
      
பிருத்விராஜன் அஸ்வமேதயாகஞ்செய்தபோது, இந்திரன் அக்குதிரையைத் திருடிக்கொண்டான். ராஜன் அதைக்கண்டு பிடித்து அவன்மீது பாணங்களை ஏவ இருந்தபோது, இந்திரன் சடைமுடியுடன் பஸ்மதாரணனாய் தோன்றினான். மகிமையுள்ள அத்தோற்றத்தினிடத்துண்டான பக்தியின் பாணங்களை ராஜன் நிறுத்தினான் xix. 14. 8

குறிப்பு: - இவ்விடத்தில் மெய்ப்பொருணாயனார் சரித்திரம் கவனிக்கத் தக்கது.

விதுரர் கேட்கிறார்: ஹான்களுக்கும் தியானித்தல் தானே முடிகிறபடியாலும், மிருத்துக்களால் சந்திக்க முடியாதபடியாலும், பிராசிதர்களுக்கு எப்படி சிவபிரானை இவ்வுலகத்தில் நேரே காண முடியும்? சிவபிரான் தானே சந்தோஷடைந்து லோகத்தின் சுகம் பொருட்டுத் தனது சங்காரசக்தியுடன் பவனி வருவார் என்று கூறப்பட்டிருக்கிறது...... தங்கள் தகப்பனார் வழித்துணையைக்கொண்டு வடபால் மானசு ஏரீவரை சென்றனர். (ஏரிவருணனை இங்கு விசேடமாயிருக்கிறது). அங்கே அவர்கள் தேவ சங்கீதங்களைக் கேட்டு உருக்கிய சொர்னதேகத்தோடும் தேவர்கள் சூழக்கிருபா முத்தோடு திரிநேத்திரதாரியாகிய சிவபிரான் தங்களெதிரே வருவதைக்கண்டார்கள். பிராசிதர்கள் சந்தோஷத்துடன் சேவித்தார்கள். பிறகு தனது பக்தர்களின் கஷ்டங்களை நீக்குபவரும் தர்மத்தை பரிபாலிப்பவருமான ருத்ரமூர்த்தி அவர்களுக்குக் கூறுகிறார்........ முக்குணவயத்தராய் ஜீவான்மாவுக்கு அதீதராகிய வாசுதேவரைச் சரண் அடைகின்றார் எமக்குப்பிரியமானவர்...  xxiv. 17 to 31.

ஐந்தாம் அத்தியாயம்.

பூகோள வரலாற்றில் இலவரத கண்டத்துக்கு பவாவே தெய்வம்.

ஆறாவது அத்தியாயம்.

விருத்திராசுரனோடு நேர்ந்த யுத்தத்தில் இந்திரன் "யமனுக்கு முன்னே கோபத்தோடு நின்ற ருத்ரமூர்த்தி போல தோன்றினான் xvii 15.
    
விஷ்ணு மூர்த்தி அளித்த ஆகாயதத்தில் சித்ரகேது செல்லும் போது சித்தர்களும் சரணர்களும் சூழ இருக்கும் சிவபிரானைக் கண்டார். முனிவர் கூட்டத்துள் பார்வதியைச் சிவபிரான் தழுவுவதைப்பார்த்துச் சித்ரகேது சிரிப்புடன் கூறுகிறான், "லோகத்துக்கு உதாரணமாயிருப்பவர், மனிதர்களுள் தர்மங்களைத்தானே பரவச்செய்பவர், பிரமத்தின் உண்மையை விளக்குபவர், மஹா விரதங்களை அனுஷ்டிப்பவர் இத்தகைய சிவபிரான் சாதாரண மனிதனைப் போலப் பலரறிய தன் பாரியாளோடு சுகிக்கிறார். ''சிவ பிரானது உண்மை மகிமை உணராத சித்ர கேதுவுக்குப் பார்வதி தேவி கூறுகிறார், "பிரமனாலும் பிரமபுத்ரராலும்; நாரதாதியராலும், குமாரராலும், கபிலராலும், மனுவாலும், இப்பொழுது நீ ஒழுக்கந்தவறியவரென்று பேசிய அவரது உண்மை நிலை அறிய முடியவில்லை.'' தாமரைபோன்ற அவரது திருவடிகளை மேற்குறித்தவர்கள் தியானிக்கின்றார்கள். உலகத்துக்கு வழிகாட்டியாயிருக்கிறர். சர்வமங்களங்களுக்கும் மங்களமானவர். அத்தகைய பெரியோர்களைத் தாழ்வு பேசியதற்காக உனக்கு தண்டனை நியாயம் xvii 4 to 12.

ஏழாவது அத்தியாயம்.

திரிபுரதானருடைய சரித்திரங்கள் கூறியிருக்கின்றன x. 53 to 71. -
      
யாத்திரைக்குரிய திவ்ய ஸ்தலங்களாகிய சேது, வாரணாசி, மதுரா, பிந்துசரஸ், (ஒரிஸாவிலுள்ள) புவனேசுவரம் முதலிய வைகள் கூறப்பட்டிருக்கின்றன xiv 28 to 32.
எட்டாவது அத்தியாயம்.

திருப்பாற்கடல் டையும் போது மந்தரமலையும் கயிறும் கடலுள் அழுந்திவிட ஆரம்பித்தது. அதைத் தூக்குவதற்குத் தேவர்கள் எல்லாருடைய வலிமையும் போதாதாயிற்று, “விக்னேசுரர் பூசை செய்யாததால்'' இது நேர்ந்ததென உணர்ந்தார்கள். vii. 8.
      
கடலைக் கடைகிறபோது பிரசித்திபெற்ற விஷம் தோன்றியது. தேவர்கள் உதவியற்றவர்களானார்கள். கூட்டமாய்ச் சிவபிரானது அடைக்கலம் பெறக்கைலாசஞ்சென்றார்கள். சிவபிரான் சந்நிதியில் தண்டாகாரமாய் விழுந்து இவ்விதமாகத் தோத்திரஞ் செய்தார்கள் : - vii. 19. to. 20.
      
தேவர்களுக்கெல்லாம் பதியே, பராபதியே, எல்லாவற்றிற்கும் ஆன்மாவாயுள்ளவரே, ஜீவர்களைப்படைப்போரே! மூவுலகையும் எரிக்கும் படியான விஷத்தினின்றும் தேவரீரைச்சரண்புகுந்த அடியேங்களைக் காப்பற்றுங்கள். vii. 21.
      
சர்வலோக ஒற்றுமைக்கும் மோக்ஷத்திற்கும் தேவரீரே தலைவர். புத்திமான்கள் தேவரீரையே பூஜிப்பார்கள். தேவரீர் குருவும் பக்தர்களின் துன்பங்கள் நீக்குவோருமாவர்.          vii 22
      
தேவரீர் சக்தி பால் பிரபஞ்சத்தைப் படைத்துக்காத்து அழிக்கிறபோது பிரம, விஷ்ணு, சிவன் என்னும் பெயர் தாங்குகிறீர்.            vii. 23.

குறிப்பு: - ஒருருவாயினை - - - - - - - படைத்தளித்தழிப்பமும் மூர்த்திகளாயினை" என்ற ஆளுடையபிள்ளையார் திருவாக்கைக்காண்க.
      
தேவரீரே பிரமம் பரமராசியம், பிரபஞ்சக்தோற்றமும் தேவரீரே. மறைவும் தேவரீரே. பல்வேறு சத்திகளாய்த் தேவரீரே தோன்றுகிறீர்கள். லோகநாயகனாய்ப் பரமான்மாவும் ஆவீர்                 vii 24

குறிப்பு: - நான்கு ஸ்லோகத்தால் (வீரரூபமாகிய) சமரசரூபத்தை வர்ணித்திருக்கிறது. 25 to. 28.

(1) கைவல்ய உபநிஷத்து
(2) சுவேதாஸ்வதர உபநிஷத்து
(3) அதர்வசிரஸ் உபநிஷத்து
(4) அதர்வசிசை உபநிஷத்து
(5) காலாக்கினிருத்ர உபநிஷத்தி
ஆகிய இவ்வைந்து உபநிஷத்துக்களும் (இவ்வைந்தும் சாதாரணமாய் (ஐந்து ருத்ரர் என்று வழங்கப்படும்) தேவரீரது ஐந்து திருமுகங்களே......... தேவரீர் நாமமாகிய  'சிவன்' பரம உண்மையாகும்.... vii 29.

ஓ கிரீசனே! பிரபஞ்சத்தை ஆள்கின்ற பிரம விஷ்ணு இந்திரராலும் தேவரீர் பரப்பிரகாசம் அடைய முடியாது. vii. 31.

குறிப்பு: - ஜீவபோத மிருக்கிற வரையில் எத்தகையரும் முதல்வனையடைவது துல்லபமாம்.
தமிழ்வேதம்.
      மூவருமுப்பத்து மூவருமற்றொழிந்த
      தேவருங்காணாச் சிவபெருமான் - மாவேறி
      வையகத்தேவரும் ழிந்தவார்கழல்கள் வந்திக்க
      மெய்யகத்தே யின்பமிகும்.      என்ற ஆளுடைய வடிமையருட்டிருவாக்காற் காண்க.
      
ஓ மஹாதேவனே! இதற்குமேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தேவரீருடைய காரியங்கள் எங்களுக்கு விளங்குவதில்லை. தேவரீரைப்போல உருவெடுத்திருப்பது உலகத்தின் க்ஷேமத்தின் பொருட்டு. vii. 35.
      
பிரசித்தமான விஷத்தைச் சிவபிரான் விழுங்கிய அற்புதத்தைக் கேட்டவுடன் பிரமன், விஷ்ணு, பார்வதி, பிரஜாபதி துதித்தார்கள். vii. 45.
      
கஸ்யபருடைய மனைவி மகப்பேறுக்காகபயோவிரதம் அனுஷ்டித்தாள். மற்ற துதிகளோடு சிவபிரானை சிவனே போற்றி, ருத்ரா போற்றி, சக்திசமேதனே போற்றி (அல்லது முருகனுடையாய் போற்றி) எல்லா வித்தைகளின் தலைமை நாயகாபோற்றி, எல்லா ஆன்மாக்களின் அரசே போற்றி'' என்று துதிக்கிறாள். Xvi, 32.

விஷ்ணு அவதாரமான வாமன மூர்த்தியாகிய சிறுவனது உபநயனசடங்கு காலத்தில் கற்பு உருவாம் அம்பிகையாகிய உமாதேவியார் முதற்பிச்சையை இட்டார். Xviii. 17.

ஒன்பதாம் அத்தியாயம்.
      
கங்கையைப்பார்த்துப் பகீரதர் கூறுகிறார்: - எல்லா ஆன்மாக்களுக்கும் பரமன்மாவும் வேஷ்டியிலுள்ள நூலைப்போலப் பிரபஞ்சமானது தன்னகத்தேசிக்கிக்கொண்டிருக்கும் ருத்ரமூர்த்தியே உன் ஓட்டத்தின் வேகத்தைத்தாங்குவார். ix. 7.

பத்தாம் அத்தியாயம்.
      
காத்யாயனி விரதத்தைக் கோபிகாஸ்திரீகள் அனுஷ்டித்தார்கள். மணலுரு ஒன்று தங்கள் முன் அமைத்துச் சந்தனமாதிகளால் பார்வதி தேவியைப் பூஜைசெய்தார்கள். இம்மந்திரந்தால் பார்வதிதேவியை உபாசித்தார்கள்:

"ஓ காத்யாயணி,  ஓ மகாமாயை, மஹாயோகினி, ஆதீஸ்வரி, நந்தகோபருடைய மகன் எங்களுக்கு புருஷனாக வரமளி''             xxii, 1, to, 4.

குறிப்பு: - வடமதுரையிலிருந்தார் யாவருக்கும் குடும்பதெய்வம் அம்பிகையேயாம்.
     
ஸ்ரீகண்ணன் கோபிகாஸ்திரீகளிடம் செய்த விளையாடல்கள் எவ்விதமாகப், ஒழுக்கத்துக்குப் பொருந்துமென்று பரிக்ஷித் சுகரைக் கேட்கிறார். (அதற்குச்) சுகர் இவ்விதமாகப்பதில் கூறுகிறார். பெரியோர்களுடைய செய்கைகளைச் சாதாரண அளவைகளைக் கொண்டு அளக்கக் கூடாது. பிரசித்தமான விஷத்தை ருத்ரமூர்த்தி உண்டனர். அது போலவே நாமும் செய்யலாமா?     xxxiii 31

குறிப்பு: - கிருஷ்ணமூர்த்தியின் லீலைகள் யாவும் நாடகமாத்திரையேயாம்.
      
ஒருகாலத்தில் கோபிகாஸ்திரீகள் 'அம்பிகைவனம்' எனும் ஸ்தலத்திற்குச் சென்று தங்கள் குல தேவதையாகிய சர்வவியாபகராகிய பசுபதியையும் அம்பிகையும் பூஜித்தார்கள்.              xxxiv, 1.

ருக்மணி கிருஷ்ணமூர்த்திக்கு எழுதுங்கடிதத்தில் விவாகத்திற்கு முன்னாள் குலதெய்வமாகிய கிரீஜனப் பூஜித்தல் என்னும் வழக்கம் (சம்பிரதாயத்தைக்) குறிக்கிறது. lii, 40,

உள்ள படி நடந்தகிரீஜன் பூஜையை விவரமாகக் கூறியிருக்கிறது, lii, 25, 44, to 46.
      
பலியின் மூத்தபிள்ளையான பாணா (சூரன்) பெரிய சிவபக்தன், 1xiy, 3)

குறிப்பு: - இச்சிவபத்தனைக் கிருஷ்ணமூர்த்தி வென்ற தென்னையோ வெனின், பாணன் சிவபொருமானிடத்தில் வரம்பெற்றும் அசுரவி பரீத புத்தியால் அவரையே யெதிர்த்த போது, தாம் கொடுத்தருளிய வரங்களைத்தாமே யொழிப்பது பிரபுத்வஹானியெனக்கொண்டு தனது வேறொரு சிவபத்தராகிய கிருஷ்ண மூர்த்தியினால் அபகருஷம் வரச்செய்தனர்.
      
பலராமர் யாத்திரையில் மற்ற ஸ்தலங்களோடு இவைகளையுந்தரிசித்ததாகக் கூறி யிருக்கின்றது: ஸ்கந்த (கிரி), ஸ்ரீசைலம், காஞ்சி, (நந்திதுர்க்கம் எனும்) வ்ருஷபத்ரி, தென்மதுரை, சேது, கன்னியாகுமரி, எஞ்ஞான்றும் தூஜாதியின் ஆன்மஞானம் இன்றும் விளங்குகிற கோகர்ணமும் ஆம், 1xx 11 to 19.

பதினோராவது அத்தியாயம்.

கிருஷ்ணமூர்த்தி உத்தவரை நோக்கி ''வில்லாளருள் திரிபுராந்தகன் யான்.''
(பகவத்கீதையில் ''வில்லாளருள் ஸ்ரீஇராமன் யான்'')        vii 20

பன்னிரண்டாம் அத்தியாயம்.

ருத்திரமூர்த்தியை  மார்க்கண்டேயர் சந்தித்தபோது ருத்திரமூர்த்தியானவர் பிரம, விஷ்ணு, ருத்ரன் ஆகியமும் மூர்த்திகளை வித்தியாசமாய் நோக்காதே என்று போதித்ததாகக் கூறி பிருக்கிறது.               x. 21.
      
சர்க்கம் என்னும் பெயருள்ள விஷ்ணுவின் அம்பு (சம்ஹரிப்பதற்கு ருத்ர அம்சமாகிய) கலா எனும் பெயர் பெற்றது.          xi 15

               சித்தாந்தசரபம் - அஷ்டாவதானம்
                   பூவை - கலியாணசுந்தர முதலியார்.
                                 (மணவழகு)

சித்தாந்தம் – 1914 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment