Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
சிவஞான சுவாமிகள் அத்துவிதக் கொள்கை.

பாயிரம்.*

* இப்பாயிரம் பரிபூரணாநந்த மென்னு நூலிலுள்ளது.

ஓங்காரதேவ வணக்க உரை.

வேதங்களையும் ஆகமங்களையும் ஞான சூக்குமங்களைக் கூறும் பல நூல் களையும் என்றுரைத்துழிப் பல நூல் ஞான சூக்குமங்களை கூறுமென விசே ஷித்தொழிந்து அவ்விசேஷணமின்றி வேதங்களையும் ஆகமங்களையும் என்று ரைக்கவே வேதாகமம் ஞான சூக்குமங்களைக் கூறாவென்பதூஉம், இன்னும் ஞான சூக்குமங்களைக் கூறும் பல நூலெனவே ஞான தூலங்களைக் கூறுவன வேதாகமங்களென்பதூஉம் அன்ன பிறவும் பெறப்பட்டன. அவை அங்ஙனமாமோ அன்றோவென ஐயமாதன் மேலும் பல நூலென்பனயாவை, ஞான சூக்குமங்களென்பனயாவை, அவையெத்துணையவென் பவும் பிறவும் ஐயமாம். இன்னுமின்னோரன்ன ஐயமே அதனுள் யாண்டுமாம். ஆகலின் அஃதாய்தல் மணற்சோற்றுட் கல்லாய்தல் போலும். ஆயினு மின்னு மொரு செய்யுளுரை ஐயம் ஒரு சிறிது மாத்திரம் வினவி யொழிதும். 125 - ம் பக்கம் 99 - வது செய்யுளுரை தத்தம் மதக் கோட்பாடுகளை விசேடித் துணர்த்துதற்கே அத்துவிதத்தோடு விசிட்டம் முதலிய சத்தங்கள் அவ்வம் மதாசாரியராற் சேர்க்கப்பட்டபடி சுத்தம் என்பதும், "புனித மெனு மத்துவிதம்" என்னுந் தாயுமானவர் முதலியோராற் சேர்க்கப்பட்ட தெனினும், சிவஞான முனிவர் விசிட்ட முதலியவற்றுள் யாதானுமொன் சுறான் விசேடிக்கப்பட்டு நின்று பொருளுணர்த்தாது. சுத்தமாய் நின்றே பொருளுணர்த்தலிற் சுத்தாத்துவிதமென வழங்கப் படுமென்னும் பொருந்து மாறின்று. என்னும் பிரதிஞ்ஞையை அவரும் அம்மதங்களும் தோன்று முன்னுள்ளது  'அம்மண்டலப் பிராமணமாகலின் - என்னு மேதுவால் சாதிக்கப்பட்டது. அங்ஙனந் தாயுமானவர் முதலியோரால் இடையே சேர்க்கப்பட்டதென்பது அவர்க்கு முன்னுள்ளது மண்டலப்பிராமண மாக லின் பொருந்தா தென்ப தொக்கும். விசிட்ட முதலிய வற்றுள் யாதானு மொன்றான் விசேடிக்கப்பட்டு நின்று பொருளுணர்த்தாது சுத்தமாய் நின்றே பொருளுணர்த்து தலிற் சுத்தாத்துவிதமென வழங்கப்படும் என்றுரைத்த சிவஞான முனிவர்க்கு முன்னுள்ளது, மண்டலப் பிராமண மென்பது அதிவியாத் தியாய் ஐயமேயாம். என்னை, சுத்தாத்துவிதப் பொருளாவது தூய தன்மையைக் காட்டுமொரு விசேட மொழியாகவே கொள்ள உளதும் இக்கதிக்கு வேறாய் கூறப்படுவன வெல்லாம் பாசத்தோடுள்ளன வென்பதை அறிவுறுத்த வுளதுமாம் என இங்ஙனம் பரிபூரணா நந்த போத சிவ சூரியப்பிரகாசவுரை யுரைத்தார்க்கும் முன்னுள்ளது அம்மண்டலப் பிராமணம். ஆகலின் அஃததிவியாத்தியாய் ஐயமேயாம். சிவஞான முனிவ ருரைப்பொருள் பொருந்தாமைக்கோது மேது எஃது அஃது இப்பொருள் பொருந்தாமைக்கு மொக்கும் என இங்ஙனமஃ ததிவியாத்தியாய் ஐயப் பாடாம் அஃதன்று, சிவஞான முனிவர் அப்பொருள் வைதிக சைவநூற் அணிபென்றாரல்லர் இவ்வுரையுடையார். அப்பொருள் 'வைதிக சைவ நூற் அணிபெனவும்”, “ சுருதிவசனமெனவும்”, “ சுருதிநெறியான சுத்தாத்துவித மெனவும்” உரைத்தனர். ஆகலின் அவ்வுரையிரண்டுந் தம்முளொக்குமாறு யாங்ஙனமாகலான் அஃததிவியாத்தியாமா றியாண்டைய தெனின், அஃ தன்று தூய தன்மையைக் காட்டுமொரு விசேடமொழியான் விசேடிக்கப்பட்ட சுத்தாத்துவித சித்தாந்தமென்னு முரையும் அவர் தம்வாய்மொழியே யல்லது சுருதிமுறை யன்று. என்னை, சுத்தாத்துவிதம் தூய தன்மையைக் காட்டும். ஏனையத்துவிதம் பாசத்துட்படு தலைக் காட்டுமென பாசத்துட் படாமை பாசத்துட் படு தல்கள் பற்றி அவையிரண்டு முறையே அத்து விதம் சுத்தாத்துவிதமென வழங்கப்படுமென் றிங்ஙனங் கிளந்து, அம் மண்டலப் பிராமண மெடுத்தோதாமையின், அஃதன்று அங்ஙன மாதற்கு சரபோபநிஷத்து வசனங் காட்டப்பட்டதாலெனின் அச்சரபோப நிஷத்தும் அங்ஙனங் கிளந்தோதாமை யறிக. இனியங்ஙனங் கோடுமேனும் “மண்டலப்பிராமண மல்லாத வேறுபல உபநிடதங்களுள் வரும் அத்து விதம் ஆன்மாவின் பெத்த தசையின் சம்பந்தம். மண்டலப் பிராமணத்துள் வரும் சுத்தாத்துவிதம் முத்த தசையின் சம்பந்தமென” அவரதனுளு ரைத்தொழிதலின் அதுபற்றியு மையப்பாடேயாம். அஃதன்று அத்து விதம் சுத்தாத்துவிதமென்னும் வேற்றுமைபற்றி யங்ஙன முரைக்கப்பட்ட தன்றி, சுத்தாத்துவிதப்பொருள் அவ்வுபநிடத்துள் காட்டப்பட்டது. ஆகலின் அதுபற்றியிழுக் கென்னையெனின், முத்த தசையின் சம்பந்தமாய சுத்தாத்துவித மோதாது பெத்த தசையின் சம்பந்தமாய ஏனை யத்துவிதமோதுஞ் சுருதி, சுத்தாத்துவிதப் பொருள் போதிக்கு மாறியாங்ஙனம், ஆகலி னஃததிவியாத்தியாய் ஐயப்பாடாதலறிக. அதுநிற்க, இனி 127 - ம் பக் கம் 21 - வது வரிசையுள் “சுத்தாத்துவித சித்தாந்தம் அநாதி' என்புழி வரும் ''அவ்வனாதி,, யென்பது “காரணசரீர'' மென்றுரைக்கப் பட்டது, சுத்தாத்துவித சித்தாந்தம் அனாதியென்புழிவரும் அனாதியும் காரண சரீரமோ அன்றோவென ஐயமாம். இனி சுத்தத்தான் விசேடிக்கப்படாத அத்து விதமும் அதனான் விசேடிக்கப்பட்ட அத்துவிதமும் முறையே பெத்த தசை முத்த தசைகளின் சம்பந்தமென்புழி தூய தன்மையைக் காட்டும் மதமாய தமது மதக்கோட்பாட்டை விசேடித்துணர்த்தற்கே சுத்தாத்துவிதமென விசேடித்தொழிந்து 126 - ம் பக்கம் 31 - வது வரிசையுள் தத்தம்மதக்கோட் பாடுகளை விசேடித்துணர்த்தற்கே அத்துவிதத்தோடு விசிட்ட முதலிய சத் தங்கள் அவ்வம் மதாசாரியராற் சேர்க்கப்பட்ட தென்றபடி சுத்த மென்பதும் தாயுமானவர் முதலியோராற் சேர்க்கப்பட்டதென்பது பொருந்தா தென்றோதல், அதிவியாத்தியாய் ஐயமேயாம். அஃதன்று, விசிட்டாத்து வித முதலிய வழக்கம் சுருதியுளின்றி அவ்வம்மதாசாரியர் தாமே புதுவது படைத்து வழங்கினர். அங்ஙனமன்றி சுத்தாத்துவித மென்னும் வழக்கம் சுருதிவழக்கம். ஆகலின் இஃதஃ தொக்குமாறு யாங்ஙனமெனின், சுருதியுள் சுத்தாத்துவிதமென்னும் வாக்கியவழக்க மாத்திரையே உள்ள தல்லது 'தூய தன்மையைக் காட்டுமொரு விசேடமொழியாகவே கொள்ளவுளது' ''சுத்தமென இங்ஙனம் அப்பொருளதனுட் போதிக்கப்படாமையின் அஃததிவியாத்தியாய் ஐயமாகாமை யாண்டையது, இனி தூய தன்மைப் பொருள்படும் சுத்தாத்துவிதத்தின் மறுதலையாய தூய்மையின்மைப் பொருள் படுவது ஏனையத்துவித்மெனின் அஃதேல் அஃத சுத்தாத்துவிதமென அங்ஙனம் விளங்ககிளந்து வழங்கப்படுக. அங்ஙன மன்றி அசுத்தமென விசேடிக்கப்படாத ஏனையத்துவிதம் அசுத்தாத்துவிதமெனின் அவ்வாறே. சுத்தமென விசேடிக்கப்படாத அவ் ஏனையத்துவிதமே தூயதன்மைப் பொருள் கொள்ள வுளதுமாம். ஆகவே சுத்தமாய் நின்றே பொருளுணர்த்தலின் சுத்தாத்துவிதமென வழங்கப்படுவ தாகவே கொள்ள வுளதாமோ, அசுத் தரத்துவிதத்தின் மறுதலையாய தூயதன்மையைக் காட்டுமொரு விசேட மொழியாகவே கொள்ள வுளதாமோ தள்ளவுள தாமோ வென் ஐயமே யாம். இனி சுத்தாத்துவிதம் “வெண்ணிலா வென்பது போல் இயற்கை யடை மொழியாயின் சுத்தாத்துவித மெனக்' கூறிக்கோடலாற் பயனொன்று மின்று. ஆகலின் அது சாலா தென்றார் என்றது "செஞ்ஞாயிறென் றாற்போலப் பரமேசுவரன் மகேசுவரன் என்னுமியற்கை அடைமொழிகள் பயனொடுபடுவ" என்னு மாசிரியர் அரதத்தனார் வசனத்தோடு முரணி அபரஈசுரனுமுளனோவென இங்ஙன மையமேயாம். 126 - ம் பக்கம் 15 - வது வரிசையுள் “அந்தமனோலயம் எது அது விண்டு பரமபதம் அவ்விண்டு பரமபதமே சுத்தாத்துவிதசித்தி” என்புழி விண்டுபரமபதமே மனோலயம் அதுவே சுத்தாத்துவித சித்தியென்னும் சிவகதியென்பது 127 - ம் பக்கம் பத்தாவது வரிசையுள் “விண்டுகதியாய பரமபதத்தைக் கீழ்ப்படுத்திக் கூறு” மென்புழிவிண்டுகதி பரமபதமென்னும் பெயர்த்து. அது கீழ்ப் பட்டதென்பதனோடு, மேல், "விண்டு பரமபதம் மேற்பட்டதென்பது" முரணியையமேயாம். இன்னுஞ் “சுத்தாத்துவிதமே சிவகதி'' யென்பது “சுத்தாத்துவிதம் சிவகதிக்கேது''  என்னுஞ் சுருதியோடு முரணியையமேயாம். 127 - ம் பக்கம் 21 - வது வரிசையுள், “அல்லாதவேறு பல உபரிடதங்களுள் வரும் அத்துவிதம் ஆன்மாவின் பெத்த தசையின் சம்பந்த'' மென்பது 159 - ம் பக்கம் 9 - வது வரிசையுள் அத்துவிதசொரூப அநுசந்தானத்தால் சாயுச்சிய கதியாய முத்ததசை யென்பதனோடு முரணியையமே யாம்.

இனி 127 - ம் பக்கம் 27 - வது வரிசையுள் “இச்சம்பந்தம் உடலுர்யி போல் அனாதிகலப்பும் உடனாதலும் வேறாதலுமாகிய மூன்றுமென அறிய வுள்ளது, என்னுமிப்பொருள் மண்டலப்பிராமண முதலிய சுருதிப்பொருளோ அன்றி சிவஞான முனிவருரைப் பொருளோவென ஐயமேயாம். அது பரிபூரணாநந்த போத சிவசூரியப் பிரகாசவுரைக்கு முன்னுள்ள மண்டலப் பிராமணத்துள் யாண்டு மின்மையின் தள்ளவுளதும் சிவஞான முனிவருரை வழிமொழியாகவே கொள்ளவுளதுமாய் ஐயமேயாம். இனி சிவப்பிரகாசத்துள் “வீடுவை திக சைவம்பகரு” மென்றபடி முகவுரை 7 - ம் பக்கம் 1 - வது வரிசையுள் சிவஞான முனிவர் வைதிக சைவ வசனம் அறியாதுரைத்து வைத்த உரைக்குறை நிறைப்ப எழுந்த பரிபூரணாநந்த போத சிவசூரியப் பிரகாச வுரைக்குறை நிறைப்ப சிவஞான முனிவருரைத்து வைத்த உரைக் குறைவசனமாய் வேறுடன் கலப்பு என்ற மூன்று வைதிக சைவ வசனங்களை யெடுத்துக்கொண்டு குறையை நிறையும் நிறையை குறையும் நிரப்புதல்பற்றி அந்நியோந் நியாச்சிரயமாய் ஐயமேயாம். மனக்கோட்டம் விட்டு நுண்ணுணர்வும் நடுவு நிலைமையும் உடையராய் நோக்கி யிங்ஙனம் நிகழுமையும் நிகழாதொழிக்குமாறு மிகப்பெரிதும் வேண்டுகோண் முறை யான் வேண்டிக்கோடும். இன்னுமின்னோரன்ன பிறவும் ஈண்டுரைத்தவாறு பற்றி யுணர்ந்தொழித்துக் கொள்க. அன்னபிறவு மன்ன.

அம்பலவாண நாவலன்.
நட்டபாக்கம்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment