Saturday, May 9, 2020



கணபதி துணை
தமிழுலகம்.*

* N. B. தமிழ் + உலகம் = தமிழுலகம். இவ்விரண்டும் தமிழ் மொழியே. சிலர் கூறும் வண்ணம் உலகம் என்னும்பதம் வடமொழி யாகாது.
தமிழ் - தாமம் என்னும் பகுதி அடியாகப்பிறந்தது. தாமம் - ஒளி.
உலகம் - ஓலம் = (க) கடல்; அதாவது, ஒலத்தாற் சூழப்பட்டது.
உலகம் or (2) உலம் + கம் எனப்பிரித்து, கம் = நீரி னின்றும், உலப் = திரண்டது; அதாவது, அப்பு தத் துவத்தினின்றும் உண்டாயது என்று அர்த்தம்.
தமிழர்கள் தத்துவஞானிகள் ஆனபடியாலும், சிவபெருமானே உருக்கொடுவந்து தமிழ்ப்பாழையை வரையறுத்ததாலும், தமிழ்ப் : பதம் ஒவ்வொன்றிலும் தத்துவார்த்தம் முதலிய அர்த்தங்கள் நிறைந் திருக்கின்றன, ''ஒன்றியிருந்து நினைமின்கள்''
சத்து  = That which exists or entity.
அசத்து = That which does not exist or Non - entity.
சிருட்டி = சூக்குமமாய்க்கிடக்கும் அணுக்களை இயைத்துத் தூலவுருவாக்கல்.

முதல் அத்தியாயம்

உற்பத்தி - Origin
1. அனாதிகாலம்
அதாவது சிருட்டிக்கு முந்தியகாலம்.

அப்பொழுது சத்தும் இல்லை அசத்தும் இல்லை, நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஒன்றும் இல்லை. பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. நித்தியம் இல்லை. அநித்தியம் இல்லை : பகலிரவு கிடையாது. நினைப்பு மறைப்புக்கிடையது. நிலையும் நிலையாமையும் கிடையாது.

ஆனால், என்ன இருந்தது? ஒருவன் இருந்தான்; அவன் தன் வயத்தன், தூயவுடம்பினன், இயற்கை அறிவினன், முற்று முணர்ப வன், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கினவன், பேரருளாளன், வரம்பிலின்பன், முடிவிலாற்றலுடையவன். இன்னும் என்ன இருந்தது?

ஆணவமலத்தில் கட்டுண்ட (அந்தகாரத்தில் மூழ்கின) ஆன்மாக்கள் இருந்தன; ஆணவம் (இருள்) இருந்தது. மகாமாயை இருந்தது.

இவை, சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் எனக்கூறப்படுவன. இவை மூன்றும் அனாதிகாலத்திலுள்ளன.

இவை மூன்றும் அனாதிகாலத்தில் அதாவது சிருட்டிக்கு முந்தியகாலத்தில் உள்ள காரணத்தால் அனாதி என்று கூறப்படுகின்றன. *
* Vide Rig Veda, X Mandala, 1296h Hymn. “There was then neither Sat, nor Asat.'' here was no atmosphere, nor sky above. What enveloped all? Where is the receptacle of what was it contained? Was it Water the proformed Abiss?

Compare Paradise Lost, Book II, 890 - 920: -
''The Secrets of the hoary deep, a dark
Illimitable Ocean, without bound,
Without dimension, where length, breadth, and height,
And time, and place, are lost; w. here eldest Night
And chaos, ancestors of nature, hold eternal anarchy, amidst the noise
Of endless wars - This wild Abyss,
The womb of nature, and perhaps her grave,
Of neither Sea, nor shore, nor air, nor fire,
But all these in their pregnant causes mixed.

இவ்வாங்கிலேயப் புலவரின் கருத்தை இப்பாவினிடத்து நோக்கு மிடத்து, ஒவ்வொருவருக்கும் அனாதிகாலத்தின் நிலை நன்றாய் விளங் கும். அவர், ஆணவ இருள் என்று சித்தாந்த பரிபாழையில் சொல் லாதபோதிலும், ஆணவு இருளை, (a dark illimitable Ocean) வரை யற்ற இருட்கடலென்றும், காலம், இடம் அற்றதென்றும் உலக சிருட் டிக்கு மூலம் என்றும் சிருட்டிகருக்கொள்ளுமிடம் (womb) என்றும் சிருட்டியின் ஒடுக்கத்தானம் (grave) என்றும், எல்லாவித அணுக் களும் சேர்ந்த இடம் என்றும் (all these in their pregnant causes mixed) கூறுகின்றார். இவருடைய அனாதிகாலத்தின் வருணனையா னது எல்லோருக்கும் மேற்படிகாலத்தின் நிலையைத்தெளிவாய் விளக்குகின்றது.

Sankara in Taittiriya Brahmanam says: — The Supreme soul is not Subject to the dominion of desire like men. He had no desire unfulfilled. He is independent of all things and also of Himself, For the interest of living beings, - so that they might enjoy life - He originated Desire which is nothing else but True knowledge.
கதிர்கள் - Rasmi, “Rays." It has also been explained as “Bond or Cord." It is the mysterious "Power'' that conneets Entity with Non - Entity etc., that which remaining on all sides and up and below the Universe, makes it manifest from an unmanifest States.

பொஷ்கரம் = உசனன் என்னும் தமிழன் புஷ்கரன் என்னும் ஆரியனுக்குக் கூறியது.
உசனன் என்பது சுக்கிரனுடைய பெயர். தமிழர்களில் சுக்கிர னுடைய பெயரை வைத்துக்கொள்வது வழக்கம். சுக்கிரத்தேவன் சுக்கிரன் பாளையம் முதலிய பெயர்களை இன்றும் கோயமுத்தூர் ஜில்லாவில் கேட்கலாம். ஆகையால் உசனன் என்பது தமிழ்ப் பெயர் என்று தெரிகிறது.

(2) (ஆதிகாலம் or (சிருட்டியாரம்பம்)

பிறகு, இறைவன் அனாதி கேவலநிலையில் (கேவலநிலை = ஆன் மாக்கள் ஆணவமலத்தால் கட்டுப்பட்டு, செயலின்றி, அறிவொளி மழுங்கி ஒன்றும் தெரியாமல் கிடக்கும் நிலை) கிடக்கும் ஆன்மாக்க ளின் மீது கொண்ட கருணையினால் ஆன்மாக்களின் மலவழுக்கைப் போக்கி மூலபண்டாரம் வழங்கும் எண்ணத்துடன் ஆன்மாக்களுக்கு, தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்க இச்சைப்பட்டார். இந்த "இச்சை'' (Desire) தான் அவரிடத்தில் முதலில் எழுந்தது. இப்படி முதலில் அவரிடத்திலிருந்தும் எழுந்த இச்சைக்குத் தமிழில்'' அருள்'' என்று பெயர்: இச்சைக்கும் அருளுக்கும் வித்தியாசமென்னவென்றால், இச்சை பசுக்களிடத்துத் தோன்றுவது, அருள் இறைவன் மாட்டுத்தோன்றுவது.

இவ்வருளே சிருட்டிக்குக் காரணம். இவ்வருளுக்குத் திருவருட் சத்தி யென்றும் பெயர்.

ஆகையால், இச்சை, அருள், திருவருட்சத்தி இம்மூன்றும் ஒரு பொருட்கிளவிகள்.

அழுக்கு மூடிய ஆன்மாக்களைக் காப்பாற்ற வேண்டுமென்கிற அருள் உண்டாகவே பரஞ்சோதியாகிய முதல்வனிடத்திலிருந்து கதிர்கள் தோன்றும்.

ஆகையால் முதன்முதலில் திருவருட்சத்தியினின்றும் கதிர்கள் தோன்றின. இக்கதிர்களுக்கு ரஸ்மி என்றும், சிற்சத்தி என்றும், பின்னாபின்னாசத்தி என்றும் கிரணங்கள் என்றும் தமிழர்களால் ஆரியர்களுக்குக் குறித்துக்கொடுத்த பௌஷ்கரம் முதலிய ஆகமங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்படும்.

ஆகையால், கதிர்கள்,ஸ்மி, ரேஸ், சிற்சத்தி, பின்னாசத்தி, கிரணங்கள் இவைகள் ஒருபொருட்கிளவிகள்.

கடவுளின் செய்கை ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்துவி தமா தலால் அவருடைய கதிர்களாகிய சத்திக ளும் ஐந்து பேதமாய்த் தோன்றும். அவைகளாவன: -

பரை, தி, இச்சை, ஞானம், கிரியை.

இக்கதிர்களைச் சித்தாந்த பரிபாழையில் பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்று கூறுவர்.

இக்கதிர்கள் யாரிடத்தினின்றும் தோன்றினவோ அவருக்குச் சித்தாந்த பரிபாழையில் சிவம் என்றும், நின்மலசிவம் என்றும், நிஷ்கள சிவம் என்றும் விமலன் என்றும் பரஞ்சோதி என்றும், பரம்பொருள் என்றும் கூறுவர்.

இதுகாறும் நின்மலம் சிவம், அருள், அருட்கதிர்கள் இம்மூன்றினையும் பற்றிக்கூறினாம். இனிமேல் தத்துவோற்பத்தியைப் பற்றிக் கூறுவோம்.

(3) தத்துவோற்பத்தி

- நாத உற்பத்தி அழித்தல் (= சங்காரம்) என்பது பிறந்து இறந்து திரிந்த ஆன்மக்களின் இளைப்பு நீங்கும் பொருட்டு ஆன்மாக்களை முதல்வன் முதற்காரணமாகிய மகாமாயை யில் ஒடுக்கி வைத்தலாம்.

இவ்வொடுக்கம் வேறு, முத்திப்பேறு வேறு என்பதை ஒவ்வொரு வரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நாம் ஈண்டு எழுதப்புகுந்தது உற்பத்திக் கிரமம் ஆகையாலும், நூல் "தமிழுலகம்" ஆகையாலும் அவ்விரண்டின் வித்தியாசத்தைஈங்குக்கூறாமல் மேலே போகின்றோம்.

இறுதிக்காலத்தில் (= சர்வசங்கார காலத்தில்) சரம் அசரங்கள் எல்லாம் நீறாக்கப்பெற்று வெளியெங்கும் பரவிநிற்கும். சகல அண்ட பிண்டங்களும் சகல அண்டங்களிலுள்ள சராசரங்களும் நீறாக்கப் பெற்றதால், இந்நீறாகிய புழுதிதங்கும் இடம் இல்லாமல் இறைவனையே நாடி நிற்கும். இந்நீறானது முதல்வனுக்கு அபின்னமாயுள்ள சிற்சத்தி சந்நிதிபட்டிருக்கும். இதற்குத்தான் விபூதி யென்று பெயர். இதற்குத்தான் தூலநிலையில் (Matter) மாயை என்று பெயர். இப் போது, ஒவ்வொருவரும் Indestructibility of matter என்னும் பௌதிக சாஸ்திரத்தின் உண்மையைக் கவனிக்கத்தக்கது *
* உதாரணமாக: - பனிக்கட்டி - தூலநிலை. தண்ணீர் பனிக்கட்டியை நோக்க சூக்கும நிலை, நீராவி தண்ணீரைநோக்க அதிசூக்கும் நிலை. அது போல, பொருள்கள் (Matter) தூல நிலையில் மாயை (அசுத்தமாயை) என்றும் அதிசூக் கும் நிலையில் விபூதி யென்றும் பெயர் பெறும், இவ்விதியானது இறைவன் சந்நிதிப்பட்டு, ஆன்மாக்களுக்கு இடம் தந்து நிற்கும் அவசரம் மகாமாயை என்று பெயர் பெறும்.

இம்மாயையின் (Matter அதிசூக்கும் நிலையே மகாமாயை என் னப்படும். இம்மகாமாயையில் ஆன்மாக்கள் ஓடுங்குவதே அழித்தல் (= சங்காரம்) என்று சொல்லப்படும்.

இம்மகா மாயையில் முதல்வனுடைய பரையாதி அருட்கதிர்கள் வீசுதலால் நாதம் உண்டாகிறது அப்படி உண்டாகும் நாதம் தான் பரநாதம். இதுதான் படைப்பில் முதற்றத்துவமாகிய சிவதத்துவம்.

(4) கந்தழி - பரவிந்து உற்பத்தி

இதுகாறு பரநாதத்தின் உற்பத்தி கூறினாம். இனிமேல், ஒவ் வொருவரும் முக்கியமாய் அறிய வேண்டிய சங்கதி ஒன்று உளது. அதனை ஈண்டுக் கூறுவாம்.

சனி அண்டத்தைப்பற்றி வான நூல் வல்லார் ஒவ்வொருவரும் செவ்வனே அறிவார். வான நூல் வல்லார் அல்லார் பள்ளிக்கூடங் களில் வாசிக்கும் பொழுதாவது அவ்வண்டத்தின் உருவைப் படங்களில் பார்த்திருப்பார் என்பதற்குச் சந்தேகம் இல்லை.

சனி அண்டத்தைச்சுற்றிலும் 7 - மதிகளும் பிரகாசமாகிய விருத்தங்கள் இரண்டும் கருமையாகிய விருத்தம் ஒன்றும் இருக்கின்றன. அவ்விருத்தங்களுக்கு மத்தியில் தூண்டுபோல் உள்ள அண்டத்தின் மேல்புறம் பிரகாசமாகவும் கீழ்ப்புறம் கருமையாகவும் இருக்கின் றதை ஒவ்வொருவரும் அறிவர்.

சனி என்றால் ஓர் கிரகம்; ஓர் வாரம், கடவுள், தாய், சனியென் னேவல் ஈசானம் என்று அர்த்தங்கள் ஆகின்றன.

ஈசான மூலையைச் சனிமூலை (வடகிழக்கு) என்றும் சனியைச்சனி யீச்சுரன், சனிக்கடவுள் என்றும் வழங்குவதை யாவரும் அறியாதவரல்லர்.

சனி என்ற பதத்திலேயே பிறத்தல் என்னும் அர்த்தமும், ஒடுங்குதல் என்னும் அர்த்தமும் இருப்பதை யாவரும் கவனிக்கத்தக்கது அதனால் தான் சோதிட நூற் பிரகாரம் சனியை ஆயுள் காரகனாக எடுத்திருக்கிறார்கள்.

எந்த இடத்தில் சர்வமும் ஒடுங்குகின்றதோ, எந்த இடத்திலிருந்து பிறக்கின்றதோ அந்த இடத்தைத் தான் தமிழர்கள் சனி என்றும் கந்தழி என்றும் கூறி வந்தார்கள்.
கந்தழி என்பது கந்து + அழி என்ற இரண்டு வார்த்தைகளால் ஆயது கந்து என்பது கந்தம் என்ற பதத்தினின்றும் வந்தது,

கந்தம் = அணுத்திரள்

ஆகையாலும் கந்தழி என்பதற்கு அணுக்களெல்லாம் சேரவும் பிரியவும் ஆக உள்ள ஒரு இடம் என்று அர்த்தமாகும்.

அல்லது கந்து என்பதற்கே பசுக்கட்டும் தறி, தூண் என்ற அர்த்தங்கள் இருக்கின்றன.

கந்து என்பது பசுக்களாகிய ஆன்மாக்கள் தங்கும் தூண் என்றும்,

அழி என்பது அத்தூணினின்றும் ஆன்மாக்கள் பிரிவெய்தும் அவசரம் என்றும் நன்றாய் விளங்குவதை ஒவ்வொருவரும் அறியலாம்.

சிவபெருமானை நமது நாவுக்கரசு "மழபாடி வயிரத்தூணே'' என்று விளித்தமை ஒவ்வொருவரும் கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் இக்கந்தழியை இலிங்கம் என்ற பெயரால் வழங் கலாயினர். இது ஆரிய வழக்கு.

பிரகாசமான இரண்டு விருத்தங்களையும் கருமையான ஒரு விருத் தத்தையும் கொண்ட சனி அண்டத்தை ஒருவர் சவனித்துப் பார்த் தால் அது இலிங்க உருவமாயிருப்பதை யாவரும் அறிவர்.

கருமையான விருத்தமும் கருமையான கீழ்முகமும் அதாவது அதோமுகமும் என்ன வென்றால் ஆருயிர்களின் கூட்டமும், அண் டங்களும் சராசரங்களும் நீறான விபூதியும் தங்கியிருக்கும் காட்சி,

திருமந்திரம்.

“ஆமே பிரான் முகமைந் தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக் கதோமுகமும் ஆறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கு,
நாமே பிரானுக்கு நாரியல் பாமே."


“அண்டமொ டென்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறிவா ரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பார் உணர்விலோர்.
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

மேலும் பௌதிக சாஸ்திரப்படி மேலே பிரகாசமும் கடுவில் ஒரு பொருளும் இருந்தால் அடித்தலம் இருண்டிருப்பது பிரத்தியக் கப்பிரமாணம். அதுபோல, சனி அண்டத்தின் மேல் முசமும் (ஊர்த் துவமுகம்) மேல் இரண்டு விருத்தங்களும் பிரகாசமான சோதிரூபம், அச்சோதியை அடுத்திருப்பது ஆன்மாக்களும் அணுக்கூட்டமும், ஆகையால் அடித்தலம் இருண்டிருப்பது சகசமே.

இச்சனி அண்டத்திற்கு அதிபதி கணபதி என நூல்கள் கூறாநிற்கும். கணம் என்றால் கூட்டம் ஆன்மாக்களாகிய கணங்களுக்கு பரமசிவம் பதியாயிருப்பதால் அவ்விமலனுக்குக் கணபதி என்னும் ஒருபேர் ஏற்பட்டது.

ஆகையால், சனி, கந்தழி, இலிங்கம் கணபதி என்பன ஒருபொருட்கிளவிகள்,

கணபதி என்றால் அடீர் ஆனைமுகனாயிற்றே. அப்பேர் இலிங்கத்துக்கு எவ்வாறு பொருந்தும்? என்பார் சிலர். என்னே! யானை முகன் என்றால் அல்லவோ ஆனைமுகனாகும். மேலும், தமிழர்கள் வீடுகளில் மஞ்சள் பிள்ளையார், சாணிப்பிள்ளையார் பிடித்துவைத்துப் பூசிப்பதை ஒவ்வொருவரும் நன்றாய் அறிந்திருப்பர். அது இலிங்க சொரூபமே யொழிய வேறென்ன?  

மேலும், திருவிளையாடற் புராணம் வலை வீசினபடலத்தை ஒவ்வொருவரும் படித்திருக்கலாம். பாமசிவத்திடத்திருந்த புத்தகங்களை யெல்லாம் வாரிவாரிக் கடலில் எறிந்தபொழுது பரமசிவம் முருகருக்கு ஊமையாகப் பிறக்கும்படி சாபம் கொடுத்ததாகவும், நந்தியெம்பெருமானுக்கு மீனாகப் பிறக்க சாபம் கொடுத்ததாகவும் கணபதிதாமாக இருப்பதால் சாபம் கொடுத்தால் தம்மையே சாரும் என்று எண்ணிச் சாபம் கொடுக்கவில்லை யென்றும் கூறப்பட்டிருக்கின்றது, அதணுண்மையைக் கவனித்தால் நன்கு விளங்கும், கணபதி தத்து வாதீதர். சனி அண்டமும் தத்துவத்திற்கு உள்பட்டது அல்ல என்பதை தத்துவம் வல்லார் அறிவர்.,

ஆகையால் சனியண்டம் என்று கூறுவதும், சனியண்டத்துக் குக்கர்த்தாவாகிய கணபதி யென்பதும் இலிங்கம், கந்தழியென்பதும் ஒன்றே.

பிள்ளையார் என்னும் விடயத்தைப்பற்றி இனி வெளி வரப்போகும் "பண்முறை விளக்கம்'' என்னும் நூலில் பரக்கக்காணலாம்,

சித்தாந்த நூற்பிரகாரம், சதாசிவநாயனார் அண்டங்களை உருவாக்கினபொழுது சனி அண்டத்தை உண்டு செய்யவில்லை யென்பதும் மற்ற அண்டங்களை உண்டாக்கினார் என்பதும் நன்றாய் வெளியாகிறது,

சனி அண்டத்தில் மேல் பாகம் நின்மலசிவம். அது சோதி சொரூப மானது. அதை அடுத்து உள்ள பிரகாசமான விருத்தம் தான் அருட்கதிர்கள். அக்கதிர்கள் முதல்வனிடத்தில் தோன்றிய போது விரிசடைமாதிரி இருக்கும். " மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைக்க வேண்டியது. அப்போது தான் அவருக்கு விரிசடையோன் என்று பேர்

அவ்வருட்கதிர்கள் ஆருயிர்களின்மேல் (அதாவது அதோமுகத் தின்மேல்) படும் பொருட்டுக் குவிந்தபொழுது முதல் பிரகாசமான விருத்தமாயிற்று,

அவ்வருட்கதிர்கள் வீசும்போது நாதம் உண்டாகும் என்று முன்னமேகூறினாம். அந்நாதத்தோடு அக்கதிர்கள் அதோமுகத்தில் படும் போது நீறாயிருந்த மூவகை முதற்காரணங்களும் உணர்வு பெற்றுப் பிரியும். பிரிந்த சுத்தமாயை தான் பரவிந்து, இப்படிப் பிரிந்து விரிதலே கருமையான மூன்றாவது விருத்தமாகும். இனி முதல் பிர காசமான விருத்தத்துக்கும் மூன்றாவது கருமையான விருத்தத்துக் கும் நடுவில் இருப்பது என்னவென்றால் அது ஒரு பிரகாசமான விருத் தம். அது தான் எதிர்வெளிச்சம் (Reflective light) பிரமாசமான அருட்கதிர்கள் அணுக்கூட்டங்களின் மீது படும்போது எதிர்ப்பு (Reglection) உண்டாகும் அல்லவா? அதுவே இரண்டாவது பிரகாசமான விருத்தம்..

இவ்வாராய்ச்சியை எழுதும் நானும் அவ்வதோமுகத்தில் இருந்தவனே. இதைப்படிக்கும் நீங்களும் இருந்தவர்களே,

நாம் பிறந்து இறந்து திரியும் இளைப்பை நீங்கச்செய்வதும் அவ்வதோமுகமே.

நமக்குத்தனு கரண புவனபோகங்களைக் கொடுப்பித்து மலத்தை க்கழுவி முத்திப்பேற்றை நல்குவதும் அவ்வதோமுகமே...

இவ்வதோமுகத்தைத்தான் சுவர்க்கநீக்கம் (Paradise Lost) என்னும் புத்தகத்தில் பண்டிதர் மில்டன் என்பவர் “ This wild Abyss, the womb of nature, and pérhaps her grave'' என்று கூறினது.

ஆகையால் நமக்கு இளைப்பை நீக்குவதும், முத்திப்பேற்றை நல்குவதுமான அவ்வந்தமில் சக்தியை அதோமுகமாகக்கொண்ட பரஞ் சோதியை யாம் மன மொழி மெய்களால் வணங்க வேண்டாமா? யார் தான் மறப்பார்கள்? மறந்தால் நன்றிகொன் றவர் ஆகமாட்டோமா?

ஆகையாற்றான் இதையறிந்த தமிழர் தாம் எங்கிருந்து வந்தார்களோ, பின்பு எங்கே போய் ஒடுங்கிறார்களோ எது தமக்கு முத்திப்பேற்றை அடையும்படி செய்விக்கிறதோ, எது முத்திப்பேற்றைக் கொடுக்கிறதோ அந்தப்பொருளை வணங்குவார் ஆயினர்.

அது சனிஅண்டம் என்பதும் அது இலிங்க சொரூபம் என்றும் தமிழர்கள் சனி, கந்தழி, கணபதி என்னும் பேரால் வணங்கிவந் தார்கள் என்னும், பின்னால் இலிங்கம் என்னும் பேரைக் கொடுத்து வணங்குகிறார்கள் என்றும் அறிகிறோம்.

தமிழர்களிடத்தில் ஆரியர்கள் இவ்வுண்மையை அறிந்துகொண்டு பிறகு இலிங்கபூசை செய்யக் கற்றுக்கொண்டார்கள். பிறகு மற்ற நாட்டாரும் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆகையால், இலிங்கத்தின் உருவத்திற்குக் காரணம் தெரியாத அநேகர் பலவாறு தங்கள் வாயில்வந்த வண்ணம் கூறுவதை இவ்வாராய்ச்சி அறவேயொழித்ததென்க,

இவ்விலிங்க சொரூபத்தின் காரணம் மறந்துபோன பிற்றைநாள்களில் (அதாவது புராகாலத்தில்) ஆபாசக் கதைகளை யெல்லாம் கவிராயர்கள் பாடிவிட்டார்கள். அதைப்பாமரர்கள் மெய்யென்று நம்பி யொழுகுகிறார்கள். இது இதரமதத்தர் கூடி நகைக்க இடம் தந்தது.

துடிசைகிழார் - அ - சிதம்பரனார்.

சித்தாந்தம் – 1914 ௵ - அக்டோபர் / நவம்பர் ௴


No comments:

Post a Comment