Saturday, May 9, 2020



கல்வி.

"கைப்பொருடன்னின் மெய்ப்பொருள் கல்வி'
'(கல்வியைக் கல்கற்றபடி நில்.)

      குஞ்சி அழகுங்கொடுந்தானைக் கோட்டழகும்
      மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து
      நல்லம்யாம் என்னும் நடுவு நிலமையால்
      கல்வி அழகே அழகு.

இளமைப் பருவத்தில் கல்வியைக்கற்கவேண்டும். கல்வியைக் கற்க சோம்பலுற்றவன் தரித்திரத்தையடைவான்.

கல்வியால் நல்லறிவு மிகும், அது பெரியோர்கள் சென்ற நல்லொழுக்கத்தில் புத்தியைச் செலுத்தும்.
      
கணித நூலும், இலக்கண நூலும், மனிதருக்குக் கண்களைன்று சொல்லத்தக்கவைகளாம். ஆதலால், கற்றவர்கள் கண்ணுடையவர்களென்றும் கல்லா தவர்கள் குருடர்களென்றும் சொல்லப்படுவார்கள். வராக
      
இக்கருத்து நோக்கியே நமது தெய்வப்புலமை வாய்ந்த திரு வள்ளுவநாயனார் திருவாய்மலர்ந்தருளிய செய்யுளால் விளக்குவாம்.

      "கண்ணுடையரென்போர் கற்றோர் முகத்திரண்டு
      புண்ணுடையோர் கல்லா தவர்''         என்றும் வற்புருத்தியிருக்கின்றனர்கள்.
      
நன்றாய் வாசித்தறிந்தவர்களை யாவரும் வணங்கி யுபசரிப்பார்கள்; ஆதலால் கல்வியினிடத்து இடைவிடாது சிந்தைவைத்துக் கற்கவேண்டும்.

மணற்கேணி தோண்டுமளவும் நன்னீர்சுரப்பது போலக் கல்வியைக் கற்குமளவும் நல்லறிவு மிகும்.
      
மிகுந்த தூரத்திலிருக்கும் அன்னிய தேசத்திற்கூட ஸ்வதேசத்திற் போல வுபசரிக்கப் படுவதற்குக் கல்வியே காரணமாதலால் அதை ஒருபொழுதும் விடாது பயிற்சி செய்து வரவேண்டும்.


இம்மையிற் கற்ற கல்வி எழுபிறப்பினுந் துணையாமென்று பெரியோர் கூறுவாராதலால், கல்விப்பயிற்சியினிடத்துச் சோம்பலையகற்றிக் கற்க வேண்டும்.
    
கற்றகல்வியினாலே யுண்டாகிய பிரயோசனங் கற்றவர்க்கு மாத்திரமன்று, அவர்களை படுத்த மற்றவர்க்கு முண்டாகும்.
    
பிறருக்குப் போதிக்கின்றவர்களது கல்வி திநேதிநே வளர்ந்தேறுமென்பதற்குப்பிர மாணாந்தரம் வேண்டுவதில்லை.
    
சாஸ்திரங்களிற் சொல்லியிருக்கின்ற விதியையும் விலச்கைபும் அறிந்து நடக்கின்ற பெரியோர்களுக்குத் தொண்டுசெய்து நடப்பதே வித்தியார்த்தியின் கடமையாம். அறிவுடையவர்களினது ஸபையிற்செல்லுங் கல்வித்திறத்தோர்க் கழகாம்.
    
சாஸ்திரங்களிற் சொல்லியிருக்கின்ற முடிவான பொருளின்னதென்று அறிவதற்கு அதிக கேள்வியும் அறிவும் வேண்டுமாயினும் அதற்குக் கல்விபே காரணமா தலால் அதைக்கற்கவேண்டும்.
    
சாஸ்திரங்களை ஆராய்ந்து அவற்றிலுள்ள பொருள்களை பகுத்தறிந்து பிறருக்குப்யோ ஈப் படுத்துவதனால் நன்மையுண்டாகும்.
    
கல்வியை கற்றும் அறிவு விளங்கா தாயின் கற்றதனாற் பயனில்லை. ஆதலால், அறிவோடு கல்விகற்க வேண்டும்.
    
அறிவுடையவர்கள் கற்ற கல்வியின் உண்மை விருத்தி சந்திரன் போல் வளர்ந்தேறும். ஆதலால், அவர்களிடத்து எப்போதும் பழகுகலால் வித்யார்த்திகளுக்கு மிகுந்த நன்மையுண்டாகும்.
    
நன்மார்க்கத்தையடைய விரும்புகின்றவர்கள், பல நூல்களை ஓதியுணரவேண்டும், அதனால் மனதிலுள்ள பற்று நீங்கும். கல்விப் பொருளையறிந்த அறிவுடையவர்களுடைய வரவுக்கு யாவரும் எதிர் பார்ப்பார்கள். மற்றவர்களையோ வென்றால், அப்படி, நோக்காராதலின், கல்விப்பொருளே யெல்லாவற்றிலுஞ் சிறந்த தென்றறிய வேண்டும்.
    
இலக்கண நூலை யறியாதவர்களோடு பழக வேண்டாமென்று பெர்யோருரைத்தது சரியே யென்று நம்பவேண்டும்.
    
இலக்கண நூலையறிந்து மறியாதவனைப் போல நடப்பவன் ஸ்னேகம் செய்யலாகாதென்பதும் அப்படியே.
கல்வியைக் கல்லாத அறிவீனர்களுடைய கூட்டத்திற் கலந்து சேர்ந்தால் பல தீமையுமுண்டாகுமென்றறிய வேண்டும். பொய், களவு, முதலான தீயவைகள் நம்மைச் சேராமலிருக்கும்படி முன்னதாக ஸஜ்ஜன மந்திரி போலிருந்து எச்சரிக்கை செய்கின்றது கல்வியாதலால், அதை விரும்பிகற்கவேண்டும்.

கல்வியை நன்றாய்க் கற்ற புத்திமானுக்கு அதை விடத்தோழமை வேறு வேண்டுவதில்லை யென்று பெரியோருரைத்திருக்கின்றார்கள்.
      
தீபம் இருளைத் துலக்குவது போலக் கல்வியாகிய தீபம் மனிதர்களுடைய தெரியாமை யென்னும் இருளைத் துலக்கி நல்லறிவை விளக்கும்

சூரியன், சந்திரன், சுடர் இம்மூன்று மிருளைத் துலக்குமாயினும் ஒவ்வோர் காலத்திலும் ஒவ்வோரிடத்திலு மாத்திர மப்படிச் செய்யும், கல்வியானது அதனைப் பெற்ற வருக் கெப்போதும் எவ்விடத்திலு மிருளையகற்றி எப்பொருளையும் விளங்கச் செய்யும். ஆலால் அது கல்விச் சூரியனென்றும், கல்விச்சந்திரனென்றும், கல்விச்சுடரென்றும் சிறந்த பெயர்களைப்பெறும், கல்விப்பொருளிலுஞ் செல்வப்பொருளிலும் கல்விப் பொருளே சிறந்ததாம்; ஏனெனில் செல்வப்பொருள் செலவழிந்துவிடும். அதைக்குறித்து களவு செய்யப்படும். கொடுக்கப்பட்டால் குறைந்து போகும், கல்விப்பொருளோ வெனில், கொடுக்கக் கொடுக்க மேன்மேலும் விருத்தியாகும், செலவழித்தாலும் பெருகுமேயல்லது குறையாது; களவிற்கும் உரித்தாகாது. ஆதலால், கல்வியைக்கற்றவனுக்கு ஒருக்காலுங் குறைவில்லை.
      
திரவியத்தினிடத்தில் வைத்த ஆசையால் கல்வியாகிய தெப்பத்தைக்கைவிட்டால் திரவியமிருந்தும் பயன்படாது, அதையுடைய வரும் பெருமை யடையார்.
      
கல்வியினால் நல்லொழுக்கமும், நல்லொழுக்கத்தினால் யோக்கியதையும், யோக்கியதையினாற் பொருளும், பொருளினால் தர்மமும் அதனால் ஸுகமுமுண்டாகுமாதலால், எல்லா நன்மையும் கல்வியே காரணமாக விருக்கின்றது.

      ஒரு வித்வான் படிப்பிலூற்றமில்லாமல் விளையாடிக்கெட்டுப் போகிற தனது குமாரரைப் பார்த்து “ஐயோ பிள்ளைகளே! நீங்கள் கல்வி கற்கச் சோம்பலுற்றிருக்கிறீர்களாதலால், உங்களுக்கு வயது வரும் போது கல்விமான்கள் முன் உளையிலழுந்திய கடாப்போல் விழிப்பீர்க''  ளென்றான். ஆதலாலிதைக்கருதித் தக்கபடி நடக்க வேண்டும்.
      
கல்வி கற்றவன் எவ்வளவு தாழ்ந்தவனாக விருந்தாலும் அது அவனை மேம்பாடடையச்செய்யும், ஆதலால் பருவமிருக்கும் போதே வித்தையைக் கற்கவேண்டும். இக்கருத்து நோக்கியே நமது மூதாபிராட்டியாராகிய ஒளவை செய்த சிறிய நூலில் "இளமையிற் கல்'' என்னும் வாக்கு எழுந்தது. இன்னும் ஒரு செய்யுள் என் சிற்றறிவுக்கு புலப்படுகின்றது.
      "எக்குடிப்பிறப்பினும் யாவரேயாயினும்
      அக்குடியிற்கற்றோரை வருகவென்பர்''
      "நாற்பார்குலத்தின் மேற்பாலொருவன்
      ற்றிலனாயின் கீழிருப்பவனே''
       என்னும் செய்யுட்களால் இனிது விளங்கும். சஸ்திரவித்தை, சாஸ்திர வித்தை இவ்விரண்டிலும் சாஸ்திரவித்தையே சிறந்ததாம். ஏனெனில், முற்கூறியது முதுமையில் உபயோகப்படாது, பிற்கூறியது எப்பொழுதும் பெருமைபெறும். கல்விமான்களிடத்தில் நற்குணங்களே விளங்கும், மூர்க்கரிடத்தில் குற்றங்கள் விளங்கும், ஆதலால், ஆயிரம் பெயர் மூர்க்கருக்குள் கல்விமானொருவனிருந்தாலும் அவனே பூஜிக்கப்படுவான்.
       எல்லாச் சங்கைகளையும் அறுத்துப் புறப்பொருள்யாவையும் விளக்கும் சாஸ்திரங்களே கண்களெனப்படும். ஆதலால் அக்கண்களில்லாதவன் குருடனெனப்படுவதற்குச் சந்தேகமில்லை.
      கல்வி ஆரம்பத்தில் வருத்தமெனுந் துன்பத்தைத் தோற்றுவிக்கும், பின்பு ஸாதிக்கப்படுமாகில் மடமையெனும் அறியாமையை நீக்கி விவேகத்தையுண்டாக்குவது மன்றி, செல்வத்தையுஞ் சிறப்பையும் பெருகச்செய்யும். எப்படியெனில், பயிர்செய்யுங் குடியானவனுக்கு அது முதலில் கஷ்டத்தையுண்டாக்கி முடிவில் சௌக்கியத்தைக்கொடுப்பது போலே தான்.
இக்கருத்துக்கிணங்க: -
       "தொடங்குங் காற்றுன்பமா யின்பம் பயக்கும்
       மடங்கொன்றறி வகற்றுங்கல்வி - நெடுங்காமம்
       முற்பயக்குஞ் சின்னீர் இன்பத்தின் முற்றிழாய்
       பிற்பயக்கும் பீழை பெரிது''

யாவருக்குமழகுண்டாகும் நவரத்தினாபரணங்களுக்கு அழகு செய்ய வேண்டுமோ? அப்படியே கல்வியெனும் பூஷணத்தையுடையவனுக்கு வேறு கல்வியானது தாழ்ந்தவனை யடைந்திருந்தாலும் அவனை மேம் பாடான ராஜஸமுகத்திற் சேர்க்கும். எப்படியெனின் மகாநதியானது இயல்பாகத் தாழ்ந்தவிடத்தையடையதக்கதாயினும் எளிதிற் சேரக்கூடாத சமுத்திரராஜனைச் சேர்வது போலேதான்.
      
முதலிற் கல்வியைக் கற்று பின்பு பொருளையீட்ட விரும்பிய புத்திமான் அத்தொழில்களை நடத்துகிற விஷயத்தில் தனக்கு முதுமையும், மரணமுமில்லையென கருதவேண்டும். தர்மம் புரிவதிலோவெனில் அப்போதே கூற்றன் குடுமிகொண்டதாக நினைக்கவேண்டும்.
      
ஆதலால் கல்வியானது சகல விதத்திலும் முக்ய பிரயோஜனத்தையுண்டாக்கு மெனக் கருதி, அக்கல்விச்செல்வத்தைப் பெருக்கி வாழவேண்டும்.
     ''கற்கை நன்றே கற்கை நன்றே
      பிச்சைபுகினுங் கற்கை நன்றே

                         S. மெய்கண்ட பிள்ளை.
சித்தாந்தம் – 1914 ௵ - பிப்ரவரி ௴
    

No comments:

Post a Comment