Saturday, May 9, 2020



சிவலிங்கதத்வார்த்தம்.

சிவாகமத்தின் உண்மைப் பொருளிது வென விளக்குவதே இவ்வுபந்நியாசத்தின் கருத்தாம். தத்வார்த்த மென்பது உண்மைப் பொருளெனப்படும்.
      
சிவலிங்கமெனுஞ் சொற்றொடர் சிவமாகிய லிங்கமென விரியும், விரியுங்கால் சிவமென்னுஞ் சொல் தன்மையையும், லிங்கமென்னுஞ் சொல் தன்மையை உடையதனையுங் குறிக்கும். குறிக்கவே லிங்கத்தின் றன்மை சிவமெனக் கொள்ளக்கிடக்கும். இதனைச் சாரைப்பாம்பு யென்ற விடத்து சாரையாகிய பாம்பென விரிந்து பாம்பின் தன்மை சாரையெனக் கொள்வது போல அறிக.
      
ஆகவே சிவலிங்கமென்னுஞ் சொல்லிற்கு லிங்கத்தின் தன்மை சிவமென்பது பொருளாதலால் முதற்கண் லிங்கமென்னுஞ் சொற்பொருளையும், பின்னர் சிவமென்னுஞ் சொற்பொருளையும் விசாரித்து அதன் பின்னர் சிவலிங்கமானது பிருதிவி சம்பந்தமான மண், கல், படிகம், செம்பு, தங்க முதலியவற்றிலமைந்திருப்பதின் கருத்தையும் விசாரிப்பாம். அன்றியும் * சூசிகடாக நியாயம்பற்றி லிங்கமென்னுஞ் சொற்பொருளை முன்னரும் சிவமென்னுஞ் சொற்பொருளைப் பின்னரும் விசாரித்தலமையும். 

* சூசிகடாக நியாயம் - சூசி என்பது ஊசி, கடாகமென்பது. கடாரம் கடாரத்திற்காகப் பொருள் கொடுத்தவன் முன்னரும், ஊசிக்காகப்பொருள் கொடுத்தவன் பின்னருமாயிருக்கவும், கடாரத்தின் வேலை நாள் நீட்டிப்பை உடையதாகவும் ஊசியின் வெலை அவ்வாறில்லாததாகவமிருத்தல் பற்றிப் பின்னர் பொருள் கொடுத்தவனுக்கு முன்னர் ஊசியைச் செய்து கொடுத்து விட்டு முன்னர் பொருள் கொடுத்தவனுக்குப் பின்னர் கடாரத்தைச் செய்து கொடுத்தலாம் அதுபோல லிங்கமென்னுஞ் பொற்பொருள் சுருக்கமும் சிவமென்னுஞ் சொற்பொருள் பெருக்கமுமாம்.

லிங்கமென்னுஞ் சொல் அடையாளமென்னும் பொருளையுணர்த்தும் பொருளையுணர்த்தும். அடையாளமென்பது ஒரு பொருளை இத வெனவுணர்த்தற்குச் சிறந்தகுறியாம். அக்குறி பிறிதொரு பொருளை யுணர்த்தாது குறித்த பொருளை யுணர்த்தும். அக்குறியை எப்பொழுது உபயோகப்படுத்துவதென ஆராயுமிடத்து ஒரு பெரருளைப் பிறிதொருவருக்கு நேரிற் காட்டமுடியாத சந்தர்ப்பத்தில் அப்பொருளித்தன்மைத்தா யிருக்கு மென்று அத்தன்மையை விளக்குகின்ற ஒரு குறியைக்காட்டுவது வழக்கமாம். அது போலச் சிவமாகிய பொருளை நேரிற்காட்டமுடியாத சந்தர்ப்பத்தில் அச்சிவப்பொரு ளித்தன்மைத் தென்று காட்டும் அடையாளமாயிருந்தது லிங்கம், சந்திரசேகரர் முதலிய திருமேனிகளெல்லாம் பிறிதோரண்டத்தில் பேசுந்தெய்வமாகக் காணப்படுமாதலால் அத்திருமேனிகளை உள்ளவாறே காட்டும் அம்மூர்த்தங்களுக்கு லிங்கமென்ற பெயர் கிடையாது. உருவப்பொருளல்லாத சிவப்பொருளைக் குறிப்பதற்கே லிங்கமெனப்பட்டது. இனி லிங்கமென்பது எல்லாம் தோன்றி ஒடுங்குதற்குரிய மூலமெனவும் சித்திரித்தலெனவும் பொருள்படும், அவ்வாறு படுங்கால் பீடமும் லிங்கமுமாய்க்காணப்படுவது அவ்வியக்த லிங்கமெனவும் சந்திரசேகரர் முதலிய மகேசுரமூர்த்தங்கள் வியக்த லிங்க மெனவும் அறிக.
      
இனி, சிவமென்னுஞ் சொல்லில் சிகரம் சிவத்தையும் வகரம் அருளையுங்குறிக்கும். இவ்வுண்மையை உண்மை விளக்கமுதலிய சித்தாந்த நூல்களிற் காண்க. (வகரமின்றிய சிகரமட்டுஞ் சிவத்தையுணர்த்துமென்றல் எவ்வாறு பொருந்துமெனின் செம்மையாகிய அக்கினியென்ற பொழுது சூட்டைக்குறிக்காத செம்மையென்னுஞ்சொல் சூட்டையுடைய அக்கினியை யுணர்த்துவதுபோலச் சிகரமே வகரத்தோடு கூடிய சிவத்தை யுணர்த்து மென்க. சிகரம் சிவத்தை அவ்வாறு உணர்த்துகின்ற தெனின் சிகரம் பற்றின்மையைக் குறித்த ஒரெழுத்தொரு மொழி, இதனை நாயோட்டு மந்திரம் நாதனிருப்பிடம், நாயோட்டு மந்திரம் நான் மறைவேதம், நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி, நாயோட்டு மந்திரம் நாமறி யோமே,' என்னுந் திருமந்திரம் வலியுறுத்தும். வகரம் வாவென்னுங் கிருபைக்குறிப்பை யுணர்த்து மொழியாய்க் குறுகிநின்றது. ஆகவே சிவமென்னுஞ் சொல் பற்றின்மையினால் எப்பொருட்கும் வேறாயும் கிருபையினால் எல்லாப் பொருளுட னொன்றாயும் நிற்கு மென்பதைக் குறிப்பதாம். சிகரவகரங்கட்குக் கூறிய இப்பொருள் சித்தாந்த மாபுயென்னு நூலிற் கண்டது. வகரமானது கூடாமல் சிகரந்தனித்து நின்ற விடத்துத் தொனியினால் சிவத்தையுணர்த்தாமையால் வகரங்கூடி நின்றே தொனியினால் சிவத்தையுணர்த்தும். இதுபோல அருளோடு கூடிப் பிரிப்பின்றியே சிவம் விளங்குவதாகும். அருளெனினுஞ் சத்தியெனினு மொக்கும். நாயகன். நாயகி கூட்டத்தையே உலகத்தில் மங்கலமென்று சிறப்பித்துக் கூறுவர். கூறினும் ஒரு காலத்திற் கூடுதலும் மற்றொருகாலத்தில் பிரிதலுங்காணப்படலால் அக்கூட்டத்திற்குரிய மங்கலம் நித்தியமன்று. சிவபெருமானுந் திருவருளுங்கூடிய கூட்டம் அக்கினியிற் சூடுபோல என்று முள்ள தாதலால் சிவமென்பது மங்கலத்தையுடையது எனவுணர்த்தும். அன்றியும் ஏனைப் பொருள்களாலுண்டாம் மங்கலம் தனக்கு மேற்பட்ட பொருளைநோக்க அமங்கலமாய் முடியுமாதலின் சிவப்பொருள் எல்லாப்பொருளினும் வேறாயும் எல்லாப் பொருளினுங் கூடியும் நிற்றலால் எல்லாப் பொருளுக்கு மங்கலத்தைக் கொடுப்பதில் தனக்கு மேலொரு மங்கலப் பொருளின்மையை உணர்த்துதலின் சிவமென்பது மங்கலத்தைத் தருவதெனவு முணர்த்தும்.
      
இத்தகைய மங்கலமாகிய சிவப்பொருளின் வடிவம் யாதெனத்தெரிந்து கொள்ளாதபொழுது அப்பொருளையடைந்து மங்கலத்தைப் பெறுதல் கூடாது. ஆதலால் அச்சிவபொருளின் வடிவம் யாதென ஆராய்வாம்.
      
எல்லாப் பொருளோடுங்கூடியும் அப்பொருள்களிற் பற்றில்லா திருக்கும் பொருள் அகண்டவெளியாயிருத்தல் வேண்டுபேயல்லது உருவமாகவாவது அருவுருவமாகவாவது இருத்தல் கூடாது. இருக்குமாயின் ஏனைய பொருள்களோடு கூடியும் பற்றின்றியும் நிற்கமுடியாது. எதுபோல வெனின் மண்முதலாகிய நான்கு பூதங்களினும் கூடியும் பற்றின்றியும் நிற்கும் ஆகாயம் போலவென அறிக. இப்பூதவெளி அறிவில்லாதசடம். சிவப்பொருளாகிய அப்பாவெளி அறிவுடையசித்து, ஆதலால் அப்பரவெளியைச் சிதாகாயமென்றும், ஞானாகாயமென்றும் கூறுவர். இறைவன் வடிவம் வெளியேயென்பதை * [* திருவிளையாடற்புராணம்.] "பூதங்களல்ல பொறியல்ல வேறுபுலனல்ல வுள்ள மதியின், பேதங்களல்ல விவையின்றி நின்ற பிறிதல்லவென்று பெருநூல், “வேதங்கிடந்து தடுமாறும் வஞசவெளியென்ப'   எனவும் † [†தாயுமான சுவாமிகள் பாடல்.] ''சிற்பாவெளிக்குள் வளர்தற்பரம தானபரதேவதையை" எனவும் ‡ [‡௸] ''எல்லாம் வெளியேயென்ன எச்சமயத்தவர்களும் வந்திறைஞ்சா நிற்பர்'' எனவும் வருகின்ற திருவாக்குகளாற்றெளிக. இப்பரவெளியோடு பிரிப்பின்றி நிற்கும் உயிர்ப்பொருளுக்கு அப்பாவெளியை அறிதலே முத்தி, அதனை அறிய வொட்டாது மறைத்திருக்கும் அநாதிபந்தமாகிய ஆணவ மலத்தை நீக்குதற் பொருட்டுக்கருணை யோடு கூடிய பரவெளியாகிய சிவப்பொருள் மான், மழு, சதுர்ப்புஜ முதலிய திருமேனி கொண்டருளும், அத்திருமேனியும் இம்மண்ணுலகத்துள்ளார் தெரிசிக்கமுடியாது. இந்த அண்டத்தை விபாபித்து இதினின்று மேம்பட்டு விளங்கும் சூக்குமமான பிறிதோரண்டத்திலிருக்கும் உயிர்களே அவ்வுருவத்திருமேனியைத் தெரிசிக்கக்கூடும். இம்மண்ணுலகமாகிய தூல அண்டத்தையும் இதனை வியாபித்து மேலாய் நிற்கும் சூக்கும அண்டத்தையும்'வியாபித்து இவ்விரு அண்டங்களின் மேலாய் விளங்கும் அதிசூக்கும அண்டத்தில் வாழுமுயிர்கள் அப்பரவெளியாகிய சிவப்பொருளை அறியும், அவ்வாறாயின் இவ்வண்டத்துள்ள நம் பெரியோர்கள் சதுர்ப்புஜ முதலிய உருவத்திருமேனிபையும் அகண்டமாகிய பரவெளியையுந் தெரிசித்தார்களென்று கூறு நூல்களோடு இக்கருத்து முரணாதோவெனின்? முரணாது, எவ்வாறெனின் இத்தூல அண்டத்தின் பற்று அறவே நீங்கியபொழுது சூக்கும அண்டமும் அவ்வண்டத்துள்ள இறைவனுடைய உருவத் திருமேனியுந்தோன்றும். அச்சூக்கும அண்டத்தின் பற்று மறவே நீங்குங்கால் அதிசூக்கும அண்டமும் பரவெளியாகிய சிவபெருமானுடைய உண்மைச்சொரூபமுந் தோன்றும். எல்லா அண்டங்களிலும் வியாபித்திருக்கிற பரவெளியை உற்று நோக்கு வார்க்கு உணர்தல் கூடுமென்பதை ஒரு திருட்டாந்தத்தில் வைத்து மறியலாம்.' அதாவது ஒரு சொல்லுக்குப்பொருளிது வெனத் தோன்றாதபொழுது மனதை அகத்துத்திருப்பிச் சிந்திக்கின்றான், சிந்தித்தபொழுது புறப்பொருள்களின் பற்று நீங்குகின்றது. நீங்கவே பரவெளியின் சந்திப்பு உண்டாகின்றது. எல்லாப் பொருள்களும் பரவெளியிலிருப்பதால் கருதிய பொருள் தோன்றுகிறது. இவ்வனுபவம் ஞானிகளிடத்தும் அஞ்ஞானிகளிடத்து முளதேனும் பாவெளியைத் தலைப்பட்டுணர்ந்தோ மென்பதை ஞானிகளுணர்வார்கள். அஞ்ஞானிகளறிய மாட்டார்கள்.
      
ஆகவே இவ்வுலகத்துள்ளார்க்கு எல்லாப் பற்று மறவே நீங்கும்பொழுது பரவெளியாகிய சிவசொரூபத்தைத் தெரிசித்தல் கூடுமெனவும் பற்று நீங்காத பொழுது முடியாதெனவும் பெறப்பட்டன. ¶திருவாசகம்.] "அவனருளாலே அவன்றாள் வணங்கி'' என்ற திருவாக்கின்படி பற்று நீக்கத்திற்கும் அவனருள்வேண்டும், அவ்வருளுண்டாவதற்கவனை வழிபடல்வேண்டும். வழிபடுதற்கு அவனுடையதோற்றம் வேண்டும் தோன்றாத பொருளிடத்து வழிபாடுசெய்து பயன் பெற்றேனென்பது கண்ணில்லாதவன் அலங்காரமுள்ள ஒரு பொருளைக்கண்டின் புற்றே னென்பதை யொக்கும். ஆதலால் எல்லாப்பொருளுந்தானா யிருக்குந்தன்மை பர வெளியாகிய சிவபெருமானுக்கிருத்தலால் எல்லாப் பொருளிடத்தும் வழிபாடு செய்வேமெனின் அப்பொருளுக்கெல்லாம் தனித்தனிப் பெயரிருத்தலான் மனிதன் என்ற வொரு பொருளைக் கண்டமாத்திரத்தில் மனிதன் என்ற எண்ணம் உண்டாவதே யன்றி கடவுளென்ற எண்ணம் உண்டாவதில்லை. கடவுளைத் தெரிசித்த பின்னர் எப்பொருளுங் கடவுளாய்த் தோன்றும். முன்னர்த் தோன்றாது. ஆகவே இம்மண்ணுலகத்துள்ளார் கடவுளை வழிபடுவதற்குப் பார்த்த மாத்திரத்தே பொதுவான உணர்ச்சியுடையார்க்குக் கடவுளென்ற எண்ணமும் சிறப்பான உணர்ச்சியுடையார்க்குப் பரவெளியாகிய சிவ பென்ற வெண்ணமும் உண்டாகும் பொருட்டு அப்பரசிவமே சிவலிங்கமாகிய திருமேனியைக் கொண்டருளிற்று. இறைவன் கருணைப் பெருக்காற்றோன்றிய சிவலிங்கத்தைச் சுயம்பு, (ஒருவராற் செய்யப்படாத) லிங்கமென்பார். இதுவன்றி அப்பர வெளியைத் தெரிசித்த பெரியோரால் பிரதிட்டை செய்யப்பெற்ற சிவலிங்கமுமுண்டு. இச்சிவலிங்கம் எப்பொருளாலமைந்திருந்தாலும் அதனை க்கண்ட மாத்திரத்தே அப்பொருளினெண்ணம் உண்டாகாமல் சிவ லிங்கமென்னும் பெயரிருத்தலால் கடவுள் என்ற எண்ணமுண்டாகுமென்றது கூடும். பரவெளிய தென்ற எண்ணம் எவ்வாறு உண்டாகுமெனின் அச்சிவலிகத்தினமைப்பினால் உண்டாகும். எவ்வாறெனின் பூதவெளியாகிய ஆகாயத்தை உற்று நோக்குங்கால் உயர்ந்தும் அகன்றுந்தோன்றும். உயர்ந்த தோற்றம் அதீதமென்பதையும் அகன்ற தோற்றம் எல்லாந் தன்னுள்ளும் தான் எல்லாவற்றுள்ளுமென்பதையும் உணர்த்தும். இவ்வாறே ஞானவெளியாகிய சிவப்பொருளும் விளங்குமென்பதை உணர்த்துதற்கு உயர்ந்தும் வட்டமாக அகன்றுஞ் சிவலிங்கமமையப்பெற்றிருக்கின்றது. இதனை

குரைக்கின்ற வாரிக்குவலய நீரும்
      பரக்கின்ற காற்றுப்பயில்கின்ற தீயு
      நிரைக்கின்ற வாறிவை நீண்டகன்றானை
      வரைத்து வலஞ்செயு மாற்றியேனே''

என திருமந்திரத்தில் சிவலிங்கத்தைப்பற்றிக் கூறிய வாற்றானறிக.

இச்சிவலிங்க அமைப்பும் பரவெளியைக் குறித்த தாயினும் பிருதிவியம்சத்தில் அமைந்திருக்கின்றமையால் சிவலிங்க வழிபாடு ஏகதேச வழிபாடேயன்றி எல்லா மாயிருக்கின்ற இறைவன் வழிபாடாகுமாவெனின், ஆகும். எவ்வாறெனின் எல்லாமென்பது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், ஆகிய பூதங்களைந்து சூரியன், சந்திரன், ஆன்மா என்று மூன்று ஆக எட்டுமேயாம். இவ்வெட்டைத் தவிர வேறு பொருள் கிடையாது. எல்லாமாய் நிற்கின்ற இறைவன் நிலையை அட்டமூர்த்த மென்று பெரியோரருளினர். அவ்வெட்டினுள்ளும் இறைவனை வழிபடலாம். அவ்வழிபாடும் அகவழிபாடு, புறவழிபாடு என இருவகைப்படும். அவற்றுள் அகவழிபாடாவது ஆன்மாவினிடத்து இறைவனை வழிபடுதலாம், ஆன்மாவிடத்திறைவனை வழிபடுதலால் எல்லா மாயிருக்கின்ற இறைவனை வழிபட்டதாகுமா? ஆகும், எவ்வாறெனின் ஆன்மா ஒருடம்பைப்பற்றி யன்றி தனித்து நில்லாது. உடம்பில் பஞ்சபூதங்களும் சூரியன், சந்திரனிரண்டும் ஆக ஏழு முள்ளன. சூரியன், சந்திரன் உடம்பிலெவ்வாறிருக்கின்றனரெனின் சூரிய மண்டலம், சந்திர மண்டல மென்னும் பெயரால் உடம்பினுள்ளிருக்கின்றனர்.

இவ்வாறு ஏழு பொருள்களுங்கூடிய உடம்பில் ஆன்மா வினிடத்து இறைவனை வழிபடுதலால் அட்டமூர்த்தத்தையும் வழிபட்டதாகும். இவ்வழிபாடு புறப்பொருளினிடத்து ஆசையை விட்டு இந்திரியங்களை மனத்தினேவல் வழியிலடக்கி அம்மனத்தைப் பிராணவாயுவுடன் கூட்டி அகத்தில் ஆசிரியன் கற்பித்தருளிய ஓர் அநுசந்தானத்திற் பயிலும் யோகிகட்கே கூடும். இவ்வாறு புறப்பொருளிலாசையறாமலும், மனத்தையடக்கும் வல்லமை யில்லாமலுமுடைய ஏனையோர்க்கு இவ்வழிபாடு ஒரு சிறிதுங்கூடாது. கூடினதாகச் சொல்வராயின் வாசாகைங்கரியமேயன்றி உண்மையல்ல வென்பதை உண்மையறிவுடையாருணர்வர். ஆதலால் ஏனையோர் வழிபடுதற்பொருட்டுப் பெருங்கணைத் தடங் கடலாகிய சிவபெருமான் பிருதிவி அம்சத்தில் திருபேனிகொண்டருளினன். இப்பிருதிவி அம்சத்தில் எல்லாம் அடங்கியிருக் கின்றன. எவ்வாறெனின் சூரியன், சந்திரனிரண்டும் அக்கினியின் அம்சமாதலால் அக்கினியுளடங்கும். ஆகவே எல்லா மென் பது ஆறினுளடங்குவதாயிற்று. அவ்வாறினுள்ளும் ஆகாயத்தில் தன் குணமாகிய சப்தகுணமொன்றேயுள்ளது. வாயுவில் தன் குண மாகிய பரிசமும் ஆகாயத்தின் குணமாகிய சப்தமுமுள்ளன. அக் கினியில் தன் குணமாகிய ரூபமும் ஆகாயத்தின் குணமாகிய சப் தமும் வாயுவின் குணமாகிய பரிசமும் ஆக மூன்று முள்ளன. அப்புவில் தன் குணமாகிய ரசமும், ஆகாயத்தின் குணமாகிய சப்தமும், வாயுவின் குணமாகிய பரிசமும், அக்கினியின் குணமாகிய ரூபமும் ஆக நான்குமுள்ளன. பிருகிவியில் தன் குணமாகிய கந்தமும், ஆகாயத்தின் குணமாகிய சப்தமும், வாயுவின் குணமாகிய பரிசமும், அக்கினியின் குணமாகிய ரூபமும், அப்புவின் குணமாகிய ரசமும் ஆக ஐந்துமுள்ளன. மேற்கூறியவாறு அக்கினியினுள்ளே சூரியன், சந்திரனடங்கப்பட்டன. ஆகையால் பிருதிவியில் ஏழு அம்சமுமிருக்கின்றன. ஆன்மா வழிபடுகின்றவனாய் அப்பிருதிவியினோடு சம்பந்திக்கின்றான். ஆதலால் பிருதிவி அம்சமாகிய சிவலிங்கவழிபாடு எல்லாமாயிருக்கின்ற அட்ட மூர்த்தத்தின் வழிபாடேயாகும். பிருதிவி முதலாகிய பூதங்களில் மேற் கூறியவாறு குணங்களமைந்திருக்கின்றன வென்பதை
“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி,
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி,
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி,
வழியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி,
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி''

என்னும் மணிவாசகப்பெருமான் றிருவாக்காற்றெளிக. ஆதலால் சிவலிங்கம் எல்லாமாய் நின்ற இறைவனையும் இறைவனுடைய உண்மைச் சொரூபமாகிய பரவெளியையுங் குறிப்பதாகும். பிருதிவிலிங்கமேயன்றி அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயு லிங்கம், ஆகாசலிங்கமெனவும் வழங்கப்படுகின்றனவே, அவ்வலிங்கங்கள் எல்லாமாதலெவ்வாறு பொருந்துமெனின் அப்பு முதலியவற்றைப் பிருதிவிலிங்கமாக ஆக்கி அப்பு முதலிய அவ்வப்பெயரால் வழங்குவதேயன்றி பிறிதில்லையாதலால் எல்லாமாதல் கூடுமென்க.

இனி சிவலிங்கங்களில் ஒரு முகமும் மூன்று கண்களுக்காண ப்படுவதின் கருத்தென்னை யெனின, கண் சந்திரன், சூரியன், அக் கினி என்று மூன்று மாய்ப் பிரகாசிக்கின்றோ மென்பதனையும் முகம் கருணையையுடைத்தா யிருக்கின்றோமென்பதனையும் உணர் த்து தற்கென்க.

இனி இச்சிவலிங்கத்திற் காணப்படும் ஆவுடையாளென்பது எதைச்குறிக்கின்ற தெனின் சிற்சத்திபைக் குறிப்பதாம். எவ்வா றெனின் பரசிவமாகிய பரவெளியில் எப்பொழுதும் ஓரசைவுண்டு அவ்வசைவைச் சிற்சத்தியென்பர். அந்த அசைவு சுற்றிக்கொண் டேயிருக்கும். அச்சுழற்சி தண்ணறிவுடையார்க்கன்றி ஏனையோர்க் குத் தெரியவராது ஆயிலும் ஓரசைதலுண்டென்பதை யாவருஞ் சாதாரணமா யறியலாம். எவ்வாறெனின் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும் முதல் நிமிடத்திலிருந்தபடி மறு நிமிடத்திலிருப்பதில்லை. உதாரணமாக ஒருமனிதனையோ, செடியையோ கவனிப்போம். திரென்று வளர்ந்து விடுவதில்லை, நாளடைவில் வளரக்காண்கிறோம். ஆதலாலொவ் வொரு நாளும் ஒவ்வொரு கணந்தோறு மாறுதலடைந்தே வளர்ந்து வருகின்றனவென்பது அறியப்படும். அல்வாறு மாறுதலடைவது பரவெளியிலுள்ள அசைவினாலேயாம், இனி அப்பரவெளியிற்றான் அவ்வசைவு எதற்காக இருக்கின்றதெனின் பொருள்களைப் பாகம் பண்ணு முபகாரத்திற்காக சூடு அக்கினியிலிருப்பது போன்று உயிர்களின் மலமாகிய அறியாமையைப் பாகம் பண்ணுவதற்காக (கெடுப்பதற்காக) அசை நற்சத்தி பரவெளியிலிருக்கின்றது. அசைதலினால் இரும்பு முதலிய பொருள்களிலிருக்குங் கறை முதலியன நீங்கிப் பிரகாசமாதலும், ஓடுகின்ற தண்ணீரை படைந்த அசுத்தங்கள் அத்தண்ணீர் சிறிது தூரஞ் செல்வதற்கு முன் சுத்தமாதலும் பிரத்தியட்சப்தலால் அசைதற் சத்தி உயிரின் பல சத்தியைக் கெடுத்துச் சுத்தப்படுத்து மென்றறிக. இவ்வசை தற்சத்தி, பரவெளியிலுன்டென்பதை உணர்த்துதற்குப் பரவெளியை உணர்த்தும் சிவலிங்கத்தில் வளைந்திருப்பதான ஆவுடையாளமைந்திருக்கின்றது. அக்கினி முழுதும். சூடு நிறைந்திருந்தாலும் முற்பட்டுக் காணப்படுவது செம்மையும் அடங்கிக்காணப்படுவது சூடுமாதல் போலப் பரவெளி முழுமையும் அசைதற்சத்தி நிறைந்திருந்தாலும் முற்பட்டுக் காணப்படுவது வெளியும் அடங்கிக் காணப்படுவது அசைதலுமென்பதை உணர்த்துதற்கு அவ்வசைதலைக்குறிக்கும் ஆவுடையாள் பரவெளியாகிய சிவலிங்கத்தின் கீழடங்கிக் காணப்படுகின்றது.
      
இனி அவ்வாவுடையாள் வளைந்திருப்பதோடமையாது கோமுகி என்னும் பெயரால் ஒரு பக்கத்தில் நீண்டிருப்பதன் கருத்தென்னையெனின் மேற்கூறியவாறு உயிர்களின் மல சக்தியைக் கெடுக்குங்கருணையே அசைதலென்பதை யுணர்த்துதற்பொருட்டு உயிர்களை நோக்கிய குறிப்பாக அமைந்திருக்கின்றது. ஆவுடையாளென்ற பெண்பால் விகுதிபெற்ற பெயரினால் சத்தியென்றும் பெண்பாலடங்கியிருக்குமென்றும், கோமுகி என்றதனால் கோவாகிய பசுக்களை (உயிர்களை) கோக்குங் கருணையுடையதென்றும் அறியும்வண்ணமாகப் பெயர்களமைந்திருப்பனவுங் கவனிக்கத்தக்கனவாம்.
    
இனி ஆவுடையாளின் கீழ் எண் கோணடாகவும், அவ்வெண்கோணத்தின் கீழ் நாற்கோணமாகவும் பிரதிட்டாலிங்க மமைந்திருப்பதின் கருத்தென்னைபெனின் நான்கு திக்கும் எட்டுக்கோணமுமாயிருக்கின்ற எல்லா அண்டங்களும் சத்தியினாலாக்கப்படுவன வென்பதையும் பர வெளியாகிய தன்னுள்டூள அடக்க மென்பதையு முணர்த்துதற் கென்க.
      
இவ்வாறு பரவெளியாகிய ஒருபொருள் சிவனென்று மேம்பட்ட காரணத்தால் ஆண்பாலாகவும், சத்தியென்று அடங்கியிருக்குங் காரணத்தாற் பெண் பாலாகவும் நின்றமையால், அப்பரவெளியிலடங்கியிருக்கும் எல்லாப் பொருள்களும் ஆண், பெண் என்றஇருபகுதியாகவே காணப்படுகின்றன. இவ்வாறு ஆண், பெண்ணென இருபகுதியாக மனி நர், விலங்கு, பறவை முதலிய வற் றிற் காணப்படுவன போல் விருக்ஷங்களிடத்துங் காணப்படுகின் றனவோ பெனின் அவற்றிலும் ஆண் விருக்ஷம், பெண் விருகூ முண்டு .''குரும்பை யாண் பனை யீன்குலை யோத்தூர்'' என்னுந் தேவாரத்தால் ஆண்பனை, பெண்பனை உண்டென்றறியக் கிடத்தல் பற்றி, ஏனைய விருக்ஷங்களிலும் அவ்வாறுண்டென்பதை அறியலாம். அவ்விருக்ஷங்கள் எவ்வாறு கூடுகின்றன வெனின் அவற்றில் ஆண் விருக்ஷங்களிலுள்ள பூவின்தேனை வண்டுகள் அருந்தும் பொழுது அப்பூக்களின் மத்தியிலிருக்கும் கருவுற்பத்திக்கேது வாயிருக்கிற அணுக்கள் அவ்வண்டுகளின் கால் முதலி யவைகளில் படிந்து கொள்கின்றன. மறுபடியும் அவ்வண்டுகள் பெண் விருக்ஷங்களின் பூவிலுள்ள தேனை அருந்தும் பொழுது முன் படிந்துள்ள கருவுற்பத்திக்கேதுவாயிருக்கிற அணுக்கள் அப்புஷ்பங்களிற்படுகின்றன. அதனால் பெண் விருக்ஷங் காய்க்கின்றது.

இவ்வாறு பர வெளியிற் காணப்படும் எல்லாப்பொருள்களும் ஆண், பெண்ணென்ற இருபகுதியாகக் காணப்படுவதோடு மனிதருட் பல ஜாதி பேதமும், விலங்கு, பறவை, விருக்ஷ முதலியவற்றிலும் அவ்வாறே பலஜாதி பேதமுங் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுதற்குக் காரணம் என்னையோ வெனின் அக்கினியிலிருக்கின்ற சூடு ஒரு தன்மையே யாயினும் சுடு தற்றொழிலால் சுடப்பட்ட பொருள்களுள் சங்கு முதலிய சில வெண்மையாகவும், மண் முதலிய சில செம்மையா கவும், விறகு முதலிய சிலகருமையாகவும், சில நீலமாகவும், மண் முதலிய சில கடினமாகவும், பொன் முதலிய சில மிருதுவாகவு மாகின்றன. இதுபோல் அப்பாவெளியிலுள்ள அசைதற் சத்தி அசையுந் தன்மையா லொன்றாயினும் அசைக்கப்படும் உயிர்களின் கன்மத்திற் கேற்ப பலவருண பேதங்களை யடைந்திருக்கின்றன. ஜாதிபேதம் நம்மால் கற்பித்துக் கொள்ளப் பட்டதன்று. விலங்கு, பறவை முதலியவற்றிற்கு ஜாதிபேதம் நம்பாற் கற்பிக்கப்பட்டதாயின் மனிதருக்கும் நாம் கற்பித்துக் கொண்டதென்று சொல்லலாம். இத்தகைய சிவமும் சத்தியுமாகிய பரவெளியே எல்லாப் பொருளினுங் கலந்திருக்கின்ற தென்பதனையும் அப்பா வெளியாகிய சிவசத்தி சொரூபமே சிவலிங்க வடிவமென்பதனையும் இதனடியிற் காட்டுஞ்சிவஞான சித்தித் திருவாக்கானுந்தெளிக. அத்திருவாக்கு வருமாறு,
சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லா
       மொத்தொவ்வா வாணும் பெண்ணு முயர்குண குணியுமாகி
       வைத்தன னவளால்வந்த வாக்கமிவ் வாழ்க்கையெல்லா
       மித்தையு மறியார்பீட லிங்கத்தி னியல்பு மோரார்.''
      
இச்சிவலிங்கம் பரவெளியாகிய அருவத்தைக் காட்டுகின்ற உருவமாயிருப்பதால் அருவுருவத்திருமேனி யெனப்படும். அன்றியும் அதீத நிலையில் நிற்கின்றசிவம் உருவத்தைக் கொள்ளுதற்குச் சத்தியோடு கூடிய அவசரமாகிய சாதாக்கியத்தைக் குறித்தலினாலும் அருவுருவத்திருமேனி யெனப்படும். சாதாக்கியமானது சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கன்டம சாதாக்கியமென ஐவகைப்படும். அவற்றுள் மின்னல் போலப் பிரகாசிக்கும் இறைவன்நிலை சிவசாதாக்கியம். சூரியப்பிரகாசம்போல விளங்கும் இறைவன் நிலை அமூர்த்தி சாதாக்கியம். ஒருமுகமு மூன்று கண்களுமாக விளங்கும் நிலைமூர்த்திசாதாக்கியம். நான்கு முகங்களும் பன்னிரு கண்களும் எட்டுக்கரங்களுமாக விளங்கும் நிலைகர்த்திருசாதாக்கியம். இலிங்கமும் பீடமுமாகவிளங்கும் நிலை கன்மசாதாக்கியம். அன்றியும் எல்லாத் தோற்றத்திற்கு முதலாயுள்ளதோற்றம ஒலியாம். அவ்வொலியை நாதமென்றும் பிரணவமென்றும் சைவசித்தாந்தங்கூறும். சிவலிங்கவடிவம் பிரணவத்தையுங் குறிக்கும். இதனை
இலிங்க நற்பீட மிசையு மோங்காரம்
      இலிங்க நற்கண்ட நிறையு மகாரம்
      இலிங்கத்துள் வட்ட நிறைய முகாரம்
      இலிங்க மகார நிறைவிந்து நாதமே.''       என்னுந் திருமந்திரத்தாற் றெளிக.
      சிவனைக்குறிப்பது சிவலிங்க மென்பதொக்கும்,
1.     ''எரியலா லுருவமில்லை''       [திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்]
2.     "ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே' [திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்]
3.     விண்ணிறைந்தோர் வெவ்வழலின்னுரு'' [திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்]
4.     சோதியேசுட்ரே சூழொளிவிளக்கே”     [திருவாசகம்]

என்பனவாதிய திருவாக்குகளால் சிவனுக்குவடிவம் அக்கினியே யாமென்பது பெறப்படும். பிரமவிட்டுணுக்கள் தெரிசித்ததும் அக்கினியேயாம். ஆதலால் அக்கினி மேல் நோக்கிக் காணப்படுவதுபோல் சிவலிங்கம் அமைந்திருக்கின்றது. அக்கினி காரியத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஓம குண்டம் போல் ஆவுடையாளும் அமைந்திருக்கின்றதென்பதே பொருத்தம். பரவெளி இறைவன் வடிவமென்பதும் அப்பரவெளியைக் குறிப்பது சிவலிங்கமென்பதும் பொருந்தாதெனின். நன்று வினவினாய், அக்கினியைக் குறிப்பது லிங்கமாயின் அக்கினியைப் போல் அடிபருத்தும் முடிசிறுத்துங் காணப்படவேண்டும். லிங்கமோ அடியுமுடியு மொன்றாகவே காணப் படுகின்றது. அன்றியும் குண்டம் எப்பொழுதும் அக்கினியோடு பிரிப்பின்றி இருப்பதில்லை. அக்குண்டம் பிரிப்பின்றி நிற்கும் சத்தியாகமாட்டாது. அக்கினியே லிங்கமென்பது போல அக்கினியின் சத்தியே பீடமாதல் வேண்டும். ஆதலால் சத்தியேபீடம், லிங்கமே சிவமென்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்கோடு முரணி அக்கினியே லிங்கம்,  குண்டமே பீடம் என்றல் பொருந்தாது.

ஆயின் மேற் கூறிய திருவாக்குக்களின் கருத்துத்தானென்னையெனின் இறைவனுடைய திருமேனியின் தன்மை நம்முடைய வடிவம் போல் அப்பிரகாசமின்றிப் பிரகாசமுடைய தென்பதனைக்குறிக்கும். இவ்வாறன்றி வடிவத்தினமைதியைக் குறிப்பதன்று. அமைதியைக் குறிக்கமாட்டா தென்பதனை [திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்] 'எரியாடுமாறே" [திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம்] 'நட்டம்பயில்கின்ற பாஞ்சுடரை'' என்பனவாதிய திருவாக்குகளாலறிக. இத்திருவாக்குகள் நடராஜவடிவம் அக்கினியே யென்று விளக்குகின்ற தல்லவா. அக்கினியில் நடராஜவடிவத்திற் குரிய உறுப்புகளிருக்கின்றனவா? இல்லையே, அன்றியும் எரியலா லுருவமில்லை யென்றதற்கு அக்கினியே வடிவம் வேறுவடிவமில்லை யென்று கொள்வோமாயின் அரியலாற்றேவியில்லை யென்பதற்கு விட்டுணுவேதேவி, வேறுதேவியில்லை யென்று கொள்ளல் வேண்டும். இறைவனுக்குத் தேவி பராசத்தியாம், அப்பராசத்தியின் தொழிற்பாட்டின் பேதத்தாலுண்டான மூர்த்தங்களிலொன்று விட்டுணு, அவ்விட்டுணுவை ஆண்பாலாகவே நூல்கள் கூறுகின்றன. அவ்வாறாகவும் விட்டுணு எவ்வாறு தேவியாகும்? ஆகாதாயின் அத்திருவாக்கின் கருத்துத்தானென்னையெனின் பராசத்தியின் றொழில் இருத்தலேயாம். விட்இணுவின் தொழிலும் இருத்தலேயாம். இறைவனுக்கு இரட்சித்தலை பின்றித் தேவியில்லை, என்பதே கருத்தாம். இவ்வாறே எரியலா லுருவமில்லை என்பதற்கும் இறைவனுண்மை வடிவம் பிரகாகம்.
      
அவனாலாக்கப்பட்ட பூதங்களுள் அக்கினியும் பிரகாசம். ஏனைய பூதங்கள் அப்பிரகாசம் ஆதலால் பிரகாசத்தைத் தவிர வடிவமில்லை என்பதே பொருளாம். அன்றியும் பஞ்சபூதத்துளொன்றாகிய அக்கினி எல்லாமாயிருக்கும் இறைவனுக்கு உண்மைவடிவமாதல் எவ்வாறு பொருந்தும்? பராசத்தியையும் இறைவனையும் இத்தன்மைய வென்று காட்டுதற்கு அரியும் எரியும் உவமைப் பொருள்களென அறிக.
      
ஆயின் பிரம விட்டுணுக்களுக்குக் காணப்பட்ட இறைவன் வடிவம் அக்கினியல்லவோ வெனின்? அக்கினியேயாம். அது அவ்விருவருக்கும் உண்மையான ஜோதிப்பிரகாசம் நம்மின் வேறாயுண்டென்றுணர்த்து நிமித்தம் அந்தச் சோதியை அவர்கள் தெரியமுடியாத அந்த நிலையில் சோதிக்குச் சமானமாகிய அக்கினியாய் அடிமுடி காண முடியாத வண்ணமாய்த் தோன்றியதாம். அத்தோற்றமும் இறைவனருட் கோலமே யன்றிப் பூதாக்கினியன்று. பூதாக்கினியாயின் யாதாயினுமொரு பொருளைப்பற்றி நின்று காணப்படுமே யன்றித் தனித்து நின்று காணப்படமாட்டாது. இறைவன் அக்கினியாய்த் தோன்றிய பொழுது எந்த ஆதாரத்தைப் பற்றி நின்றான். அவ்வாறு பற்றின்றிப் பிரகாசிக்கும் அக்கினி போன்றவடிவம் இன்றைக்கும் யோகாப்பியாசத்தால் தெரிசிக்கக்கூடும்.
  
இதனை ''முழுச்சோதி நினைதந் திருத்தல்'' என்னுஞ் சிவஞானசித்தித்தித் திருவாக்காற் றெளிக. ஆதலால் அக்கினியின் அமைதியே சிவலிங்க வடிவமென்பது பொருந்தாது.
      
மேற்கூறிய வாறு பரவெளியே இறைவன் வடிவம் என்பதனையும் சோதி யென்பதும் அப்பரவெளியையே குறிக்கு மென்பதனையும் அப்பரவெளியாகிய இறைவன் வடிவத்தைக் குறிப்பது சிவலிங்க மென்பதனையும் இதனடியில் வருந்திருப்டாசுரத்தாலறிக. அது வருமாறு,

''மலர்மகனாகி மூன்றுவையமும் படைத்து மாலா
      யலைவறநிறுத்தி முக்கணாதியா யழித்தம்மூவர்
      தலைவனாய்ப் பரமாகாச சரீரியாய் முதலீறின்றித்
      தொலைவரும் சோதியாமிச்சுந்தர லிங்கந் தன்னில்.''
                                                 திருவிளையாடற் புராணம்.
முடிவுரை
      
சிவலிங்கமென்பது சிவத்தைக் காட்டு மடைபாள மென்பதூஉம், சிவம் மங்கலமாயிருந்து எல்லாப் பொருளுக்கும் மங்கலத்தைத் தருமென்பதூஉம், அச்சிவப்பொருளின் வடிவம் ஞானவெளியென்பதூஉம், அந்தஞானவெளியைக் குறிப்பதே லிங்கமென்பதூஉம், இவ்விலிங்கம் பிரிதிவியம்சத்தி லமைந்திருத்த லால் எல்லாமாயிருக்கின்ற அட்டமூர்த்த மெனப்படு மென்பதுஉம், 'ஆவுடையாள் சிற்சத்தியைக் குறிக்கு மென்பதூஉம், கோமுகி உயிர்களிடத்து நிகழ்கின்ற சிற்சத்தியின் கருணையைக்குறிக்குமென்பதூஉம் ஆவுடைபாளுக்குக் கீழுள்ள லிங்கத்தின் பாகம் எல்லா அண்டங்களுந் தன்னுவ டங்கி'பிருக்குமென்பதனைக் குறிக்கு மென்பதூஉம் பிறவுமாம்.

                       பொ. முத்தய்யபிள்ளை.
                      திருவாவடுதுறை யாதீனத்துச் சைவப் பிரசாகரர்.

சித்தாந்தம் – 1914 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴               


No comments:

Post a Comment