Saturday, May 9, 2020



சுருதிசூசனம்.

1
இருக்குவேத மந்திரம்

அந்தரிச்சந்தி தஞ்சநெருத்ரம்ப ரோமநீஷயா
கிரக்ணந்தி ஜிக்வ யாஸஸம்.''

(இ - ள்) ஜநே - மனிதர்களுள், பரா - மேன்மை பொருந்தியவனை, ருத்ரம் - உருத்திரனை, மஷயா - தியானத்தால், அந்தா உளத்தில், அச்சந்தி - தியானிப்பவர்கள், ஜிக்வா - நாவினால், ஸஸம் - சுவைபொருந்திய சோற்றை, கிரக்ண - உட்கொள்வார்கள்.

ஆகார மருந்துவதற்கு முன் சிவபெருமானை வழிபட்டொழுக வேண்டுமென்பது கருத்து.
2

எஜுர்வேதம் - ச - ம் - கண்டம் உருத்திரசங்கிதை மந்திரம்.

''யோருத்ரோ அக்னௌயோ அப்ஸடய ஓஷ பதீஷுயோருத்ரோ
விச்வாபுவனாவி விவேசத ஸ்னமருத்ராய நமோ அஸ்து.''

(இ - ள்) யா - எந்த, ருத்ரா - உருத்திரன், அக்னௌ - அக்கினியின் கண்ணுள்ளான், யோ அப்ஸ - நீரின்கண்ணுள்ளான், யஓஷதீஷ அவுதங்களிலுள்ளான், யோருத்ரோ விஸ்வாபுவநாவிவேச - உலகத்திலுள்ள பொருள் அனேகங்களில் பிரவேசித்துள்ளான், தஸ்மைருத் ராயநமோ அஸ்து - அவ்விதம் தொண்டர்களை ஆட்கொள்ள பலதிரு மேனிகளைத் தாங்கி எங்குநிறைந் துநிற்கும் ருத்ரனுக்கு நமஸ்காரம்.

நீரெனவே கலசமுதலியவற்றிலும், ஒளஷதி எனவே கொன்றை வில்வ முதலியவற்றிலும், விஸ்வமெனவே, லோகம், மண், கல், சூரியன், முதலியவற்றிலும் இறைவனிருப்பனென்பதாம்.
ப – ர்

சித்தாந்தம் – 1914 ௵ - ஆகஸ்ட் ௴

             

சுருதிசூசனம்
இருக்கு யஜுஸ் சாமம் மூன்றிலுமுள்ள மந்திரம்.
“ஆவேராஜனமத்துவாஸ்யருத்திரம்ஒதாரம்ஸத்தியயஜம்ரோதஸ்யோ
அக்கினிபுராதனயித்னோரசிததாதஇரண்யரூபம்வஸேகிருணுத்வம்.”

      (இதன் பொருள்) ஆரோதஸ்யோ – வானத்திலும் பூமியிலும் புகழ்ப்பெற்றவர், அத்தாஸ்ய – யாக முதலிய பலகருமங்களுக்கு, ராஜானம் – சுதந்தரரா யுள்ளவர், ஸத்தியயஜம் – உண்மையால் பூஜிக்கப்படுகிறவர், ஒதாரம் – எல்லாராலும் பூஜிக்கப்படுவர், அக்னிம் – அக்னியின் கண்ணுள்ளார், ருத்ரம் – பரமேஸ்வரரிவரை சித்தாத் – மனதிற்கெட்டாததாயுள்ள; தனயித்னோ – மேகம்போன்ற மரணத்திற்கு, புரா – முன்னரே அவஸே – மோட்சத்திற்காக, இரண்யரூபம் – சூரிய மண்டலத்தில் ஆராதிக்கத்தக்கவரைக் கிருணுத்வம் – பூஜைசெய்க.

ப – ர்

சித்தாந்தம் – 1914 ௵ - அக்டோபர் ௴

சுருதிசூசனம்
யசுர்வேதம்
      “விருபேப்யோ விஸ்வரூபேப்யச்சவோநமோ.”
      (இதன் பொருள்) விரூபர்க்கும் விசுவரூபர்க்கும் நமஸ்காரம்.
௸ 1.
      “நீலக்ரீவாயச ஸிதிகண்டவாயச”
      (இதன் பொருள்) நீலக்கிரீவர்க்கு நமஸ்காரம் சிதிகண்டர்க்கு நமஸ்காரம்.
இருக்குவேதம்
      “ஆவோராஜா நமப்வரஸ்ய”
      (இதன் பொருள்) உன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு உன்யஞ்ஞத்திற்குக் கர்த்தாவாக உருத்திரரைத் தேடிக்கொள்.
யசுர்வேதம்
      “நமஸ்தே ருத்ரமந்யவே”
      (இதன் பொருள்) உருத்திரரே உமது ஞானத்திற்கு நமஸ்காரம்.
ப – ர்

சித்தாந்தம் – 1914 ௵ - நவம்பர் ௴



No comments:

Post a Comment