Saturday, May 9, 2020



ஞான வாள்

[பத்திராசிரியர்]

உயிர், கடவுளுமன்று - உலகமுமன்று; ஆனால் இரண்டையும் அறியுஞ் சக்தியையுடையது. அறிவை வளர்த்தல் வேண்டும். அறியாமையைப் போக்கிக் கொள்ளவேண்டும். அறிவு உடைமையால் இன்பம் பெறலாம். அறியாமையால் துக்கம் பெறலாம். இவ்வுயிர் இன்ப துன்ப நுகர்ச்சியை யுடையது.

இப்போது நமக்கு இருக்கும் அறிவு இன்பத்தைத் ???????????????? ப்பட்ட இன்பம்? நிலைத்த இன்பம். அறி ?????????? க்கத்தைத் தரும். நிலைத்த இன்பத்தைத் ??????????? உண்டு. அதைக்காணவே இவ்வறிவை ?????????? சூரியன் வந்த பிறகே சந்திரன் ஒளி ?????????????? பரறிவு வந்த, பிறகே தற்காலத்திய ????????????? பொருளுடையவனே, கேட்ட பொழுது தரத்தகுந்தவன். அதேபோல், பேரறிவுடையவனே அவ்வறிவைத் தரத்தகுந்தவன். அவனும் அருளுடையவனாவான்.

"குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற்று உலகோ டுரைசிந் தையுமற்று
அறிவு அற்று அறியா மையும் அற்றதுவே''   - அனுபூதி

பேரறிவு வந்ததற்கு அடையாளம் உலகபந்தம் நீங்குதல். முதிரமுதிர புளியம் பழம் ஓட்டைவிட்டு நீங்குதல்போல அறிவு முதிர்ந்தோர் பேச்சைவிட்டு மௌன நிலையை அடை வர். உலக சம்பந்தம் நீக்கி, ஒன்றும் பேசாதிருந்து அறிவு நீங்கி, அறியாமையையும் நீங்கும் நிலை அந்நிலை. எப்போது உலகத்தோடு செறிவற்று, உரையற்று, சிந்தையுமற்று இருப்பது? தனிவேலை நிகழ்த்திடலும் என்ற போது. வேல் என்பது ஞானசக்தி. ஞானம் இன்பத்தைத் தரும். நேரே தரும் சக்தியுடையது. கல்வி, செல்வம், சரீரபலம், அதிகாரம் இவைகள் இன்பத்தைத்தரும் எனினும் ஞானத்தின் மூலமாகவே தருஞ் சக்தியுடையன.

"ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப்பறையறைமின்'' என்பது மணிவாசகர் திருவாக்கு. கடவுள் நமக்குக் கொடுக்கிற ஞானமே அறியாமையைப் போக்கி அழிவில்லாத இன்பத்தைத் தரும்.

சித்தாந்தம் – 1943 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment