Monday, May 4, 2020


அத்வசோதனை
எவயோ நன்னவிஜயே ஸர்வாத்வாவதி தீக்ஷயா |
தீக்ஷிதஸ்யோதுநாபந்தார் நபிபேதி பவாத்மகான் ||

என்றது பராக்கியை யென்னுடாகமம். இவ்விதமாக சகல அத்வாக்களின் சோதனையை தீக்ஷையாலறிந்தவன் சம்சாரபந்தத்திற் பயப்படான் என்ற பொருள்படும்.
இப்பொழுது அத்வாவென்பதென்ன? அதன் காரியமென்ன? அதனாலடையக்கூடிய பிரயோஜனமென்ன? வென ஆராயவே ! இங்கு கூடியிருக்கின்றோம். எடுத்துக்கொண்ட விஷயம் பெரியதாகையாலும், இதனைப் பற்றி சவிஸ்தாரமாக இச்சபையின் முன்னர் சென்றவாண்டில் வேதாரணியம் ஸ்ரீமான். வை. இரமண சாஸ்திரிகள் பேசியிருப்பதால் அதனையேயானும் எடுத்துப் பேசுவது தகுதியற்றதாயினும், அப்பிரசங்கம் ஆங்கிலம் கற்றோருக்கே பயன்பட்டதே யொழிய மற்றையோருக்கு அறிய இயலாததாயிற்று. அவர்களும் கேட்டு ஆனந்தமடையும் பொருட்டு தெரிந்தமட்டில் சொல்ல முன்வந்ததில் குற்றங்குறைகளிருப்பினும், சபையோர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
அத்துவாவென்ற பதத்திற்கு வழியெனப் பொருள் தரும்; அதாவது சிவபெருமானையடைவதற் குற்ற வழிகளாகும். சாஸ்திரிகள் இதனை விவகாரிக்கும் போது. "Though the word adhvan eludes definition however skilfully we may endeavour to put forth one yet - I. think it will be an apt description of the general nature and character of the adhvans, if I borrow a term from physiological psychology of the westerns and say that the Shadadhvans are the six Conduction - paths of matter in universe and in Man, along which the Light of the Father or the Holy Spirit works to bring about the redemption of souls." என்றார்.
அத்துவா வென்பதை எவ்விதமாக வேனும் வியவகரிப் போமென்றாலும் முடியாத காரியமாயினும், வியவகரிக்கும் வகையில், மேல் நாட்டாரது தேகக்கூற்று முறைப்படி. ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சிவபெருமானின்கிருபா நோக்கம் பிரதி மனிதனிடத்தும் உலகத்தினிடத்தும் செல்ல அதனால் ஓரிடத்திற் கொண்டுபோய் சேர்க்கும் அறுவழிகள். என்கிறார்."
சிவபெருமானுக்கு மரம்போல் சகள ரூபமும், மரத்தினது நிழலைப்போல நிட்கள ரூபமும்பூவும் மணமும் போலசகள் நிட்கள ரூபமும் உண்டென்றாலும், அத்துவா வென ஒன்று என்பதென்னை என்னும் ஆசங்கை யெழுந்தபோது ஸ்ரீ அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் தமது சிவஞானசித்தியில்.
   
அத்துவாமூர்த்தியாக வறைகுவதென்னை யென்னி
னித்தனாய் நிறைந்தவற்றினீங்கிடா நிலைமை யானுஞ்
சித்துடன் சித்திற்கெல்லாஞ் சேட்டிதனாகலானுஞ்
வைத்த தாமத்துவாவும் வடிவெனமறைகளெல்லாம், என்பர்

இச்செய்யுளுக்கு எழுதிய உரைகாரரெல்லாம் விசேஷமாக எழுதாமற் போயினும், இலக்கண விளக்க பரம்பரை சிதம்பரநாத தேசிகர்தாம்ழுதிய உரைவிசேஷக்குறிப்பில் " அத்துவாவடிவான முறையெங்கன மென்னில் சாந்தியதீதகலை திருமுடி; சாந்தி திருமுகம்; வித்தையார்பு; பிரதிட்டை குய்யம்; நிவர்த்தி முழந்தாளும் பாதமும்; பஞ்சகலைகளும் அங்கமாகவும், புவநங்கள் உரோமம்; வர்ணங்கள் தோல்; மந்திரங்கள் சோரி, பதங்கள் நரம்பு, தத்துவங்கள் என்பும் சதையும். இப்படியாறத் துவாவும் சதாசிவற்கு திருமேனி அவருக்குப் பிராணன் பரமசிவனெனவறிக, என்றெழுதுகிறார்.
அஃதாவது அத்துவாக்கள் ஆறென்றும், அவை அடைவே கலை, புவனம், வன்னம், மந்திரம், பதம், தத்துவம் எனப்பெயருடையன வெனவும் பெற்றாம்.
இதனையே மகா ஞாதாவான திருமூலர் தமது திருமந்திரத்தில்.
        "தத்துவம் ஆறாறு தன்மது வேழ்கோடி
மெய்த்தகுவன்னம் ஜம்பானொன்று மேதினி
ஏத்து இருநூற்றிருபத்து நான்கு எண்பானான்கு.
வைத்தபதம் கலைஓரைந்தும் வந்ததே'' என்றார்.

                தத்துவம் முப்பத்தாறு (36) - சப்தகோடிமகாமந்திரங்கள், வர்ணங்கள் ஐம்பத்தொன்று (51), இருநூற்றிருபத்துநான்கு (224) புவனங்கள். பதம் எண்பத்தொன்று (81), கலை ஐந்து,(5)
சிவதீக்ஷை பெற்றவர்கள் நித்தியசா மாநுஷ்டானங்களில் வருவனவாயினும் அவற்றை ஏற்காதோரும் அறியும் படி ஐம்பூதங்கள், ஞனேந்திரியங்கள் 5, தன் மாத்திரைகள் 5, சர்மேந்திரியங்கள் 5, அந்தக்காணம் 3. ஆகக்கூடிய 24ம் ஒன்றான ஆத்மதத்துவமும், சுத்தா சுத்த தத்துவுமென்று பெயர்பெற்ற காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயையென்னும் - வித்தியாதத்துவங்கள் ஏழும், சுத்த வித்தை, ஈசுவரம், பாதாக்கியம், சத்தி சிவம் என்னும் சிவதத்துவங் ஐந்தும் கூடி தத்துவங்கள் முப்பத்தாறாயின.(36)
மந்திரங்கள் எழுகோடி அவைவிரிக்கின் பெருகும். வர்ணங்களாவது அக்ஷரங்களென்னப்படும். அவை அகாரமுதல் க்ஷகார இருவாய் ஐம்பததொன்று. மேதனி அல்லது புவநங்கள் பத்ரகாள்பை முதல் அகநாஸுதை இறுதியாக இருநூற்றிருபத்து நான்கு. பதங்கள் மகாதேவபதம் முதல் ஒங்கார பதமிறுவாய் எண்பத்தொன்று.
கலை, நிவர்த்தி, பிரதிஷ்டை வித்தை, சாந்தி, சாந்தியதீத மென" ஐவகைப்படும்.
மேலைச் செய்யுளில், வந்ததே, என்பதால் ஒன்றினின்றும் மற்றொன்றுவியாபக வியாப்பியமுறையாய் ஏற்பட்டதென்பது பெறப்படும். அதாவது தத்துவங்கள புவனத்தின் பாற்பட, புவருங்கள் இப்படி ஒவ்வொன்றாக கலைகளிலொடுங்கும். அவையாவன நிவர்த்திகலையின் பாற்படுவது தத்துவயொன்று, புவநங்கள் நூற்றெட்டு, வண்ணமொன்று, பதம் இருபத்தெட்டு, பிரதிட்டையின் பால் தத்துவம் இருபத்துநான்கு, புவங்கள் 56, வர்ணங்கள் இருபத்துநான்கு, பதம் இருபத்தொன்று, மந்திரம் 2, வித்தையின் பால்தத்துவம், 7 புவனம் 27, வர்ணம், 7 பதம் 20, மந்திரம் 2.
சாந்திகலையில் தத்துவம் 3, புவநங்கள் 18, வர்ணம் 3, பதம் 12, மந்திரம் 2ம். சாந்தியதீதகலையில் தத்துவம் 2, புவனம் 15, வர்ணம் 16, பதம் ஒன்று, மந்திரங்கள் 3ம் ஒடுங்ககும்.
இப்படி மந்திரங்களை முடிவில் நிறுத்திய டோதினும் மந்திரங்கள் தான் முக்கியமான வைகளாய் ப ற்படுகின்றன. மந்திரங்களாவன மனதினிடையுண்டாகும் எண்ணம்மாகும் அவைகளை காரியப்படுத்துவதும் அதுவே அன்றியும் சிவபெருமானை யெளிதிலடைய அதுவே வழியன்றி அவரும் மஹாமந்திரம், பஞ்சாக்க்ஷரிபோன்ற மந்திரங்கள் மூலமாகநிறைந்திருக்கின்றார். நாம் தினந்தோறும் பலர் மந்திரமஹிமையால் பல அதிதேவதைகள் வசமாயிருப்பதை சகஜத்தில் காண்கிறோம். ஆனால் அவர்கள் கட்டுண்டிருப்பதாகக் கருதக் கூடாது. அவர்கள் மந்திரங்களிடத்துள்ள பிரீதியால் அப்படி யிருப்பதாகக் கொள்ளல் வேண்டும். அப்படி யாயின் பஞ்சா க்ஷரி முதலாய மஹாமந்திர கர்த்தாவான சிவபெருமானைக் கூறு வானேன்? இதனையே அருணந்தி சிவாசாரிய சுவாமிகள்.
              மந்திரம் அத்து வாவின் மிகத்தொரு வடிவமாகத்
தந்தது அரனுக் கென்னிற் சகத்தினுக் குபாதானங்கள்
விந்து மோகினிமான் மூன்று மிவற்றின் மேலாகி விந்துச்
சிந்தை யாரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும், என்றார்.

அதாவது இப்பிரபஞ்சோற்பத்திக்குக்காரணமான குண்டலி என்னும் சுத்தமாயை, அசுத்தமாபை, பிருதிவிமாயை, யென்றும் மூன்று உபாதனைகருவிகளுள் சுத்தமாயையான விந்துவில் ஆன்மாக்கள் மனதினாற் கூட உன்னுதற்கரிய சிவசத்தியதனையதிட்டித்து நிற்க அதனில்வாக்குண்டாய் அதன் காரியப்பாடாக மந்திரங்களுண்டாக அவை சுத்தனான சிவபெருமானுக்கு திருமேனியாகின்றன. இதனையே பின்னரும் சித்தியாருடையாரும்,
            சுத்தமாம் விந்துத் தன்னிற் றோன்றிய வாத லானுஞ்
சத்திதான் பிரேரித்துப் பின்றான திட்டித்துக் கொண்டே
யத்தினாற் புத்திமுத்தி யளித்தலா லரனுக் கென்றே
வைத்தவா மந்திரங்கள் வடிவென மறைகளெல்லாம்.

என்றார். அத்தினால் என்றதனால் சத்தியாலுண்டாக்கப்பட்டு பின்காரியப்படுத்தி நிற்கும் மந்திரங்களைக்கொண்டு சிவபூசை, அக்கினி காரியம் முதலியவை செய்ய சிவபெருமான் போக மோக்ஷங்களை தந்தருளுகிறான் என்றேற்பட்டது. இன்னும் மந்திரங்கள் சத்தசோடியென்றோம்? * அவையெல்லாம் விசேஷமானவையே யெனினும் விசிட்டம் இருக்க வேண்டியதவசியமாகலின் அதனைப் பின்வரும் விருத்தத்தாற் கூறுகின்றார்.
[* சப்தகோடி என்றது ஏழுகோடி என்ற கணக்கெண் அல்லவென்றும், ஏழு மந்திரங்களின் கோடியில் அல்லது கடையில் நின்றமந்திரங்கள் என்றும் எம்மையாண்ட காஞ்சி நகர் ஞானப்பிரகாசமடாலயத் தெழுந்தருளியிரானின்ற ஸ்ரீ மகா சந்நிதான செவியறிவுறுத்திற்று. இதற்கு நிதரிசனமாக, மேலே கலைகளுக்குப் பிரித்த மந்திரங்களின் எண் ழேயாகின்றது. [ ப - ர்.]]
      மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவமாகத்
தந்திரஞ் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக்கேணி
முந்திய தோற்றத்தாலு மந்திர மூலத்தாலு
மந்தமில் சத்தி யாதிக்கிசைத்தலு மாகுமன்றே. என்றார்

அதாவது மந்திரங்கள் சப்தகோடியாக அவற்றுள் பஞ்சபிரம்மங்கள் விசேஷத்திற்கு பாத்திரமெப்படியென்னில் எல்லாம் சுத்தமாயை மூலமாக உண்டாயினும், அப்படியுண்டாவதற்கு அடிப்படையாக விருப்பது இந்தப் பஞ்சப்பிரம்மங்களே யாகையால் ஆதியாகிய சதாசிவமூர்த்திக்கு ஈசானி, பூரணி, ஆரத்தி, வாமை, மூர்த்தியாகிய சத்திகளைந்தும் ஈசானமுதலிய பஞ்ச மந்திரங்களையும் அதிட்டித்துக்கொண்டு பஞ்சகிருத்தியங்களைச் செய்கையால், இவ்வைந்துமே திருமேனியாயிற்று.
இவ்வைந்து திருமந்திரங்களையுமுடைய கர்த்தாவின் செய்கைகளின்னின்னவென கவனிப்போம். முதலாவதான நிவர்த்தி கலைக்கு ஏற்பட்ட தத்துவம் பிருதுவி, இந்தப் பிருதுவிதத்துவந்தான் வெகுநுட்பமானது. இந்தப் பிருதுவிதத்துவத்திற் செய்யும் காரியங்களைக்கொண்டு தான் மற்றவை ஏற்பட வேண்டும், நன்மை செய்யில் நிவர்த்தியிலும் தீமையிழைக்கில் பிரவர்த்தியி லகப்பட்டு உழலவும் கூடிய இரண்டு வழிகளையுடையது இதுவாகும். இதற்கு அதிதேவதையான பிரும்பாசிருஷ்டித்தொழிலைச் செய்கின்றார். அதெப்படியெனில்; பதிபசுபாசம் என்பது சித்தாந்திகட்கு சங்கற்பமாகையால், பதியான பரமசிவனுடைய பராசத்தியருளால் குடிலையில் நாதம் தோன்றும், நாதத்தில்விந்து தோன்றும், விந்துவிலே சாதாக்கியம் தோன்றும், சாதாக்கியத்தில் மாகேசுரம் தோன்றும், மாகே சுரத்தில் சுத்தவித்தை தோன்றும். இவை சுத்தமாயை யென்று சொல்லப்படும். குடிலையென்பது என்ன, விந்து வென்பதென்னவெனின் சுவயம்பு ஆகமத்தில்
              ஸ்ரிஷ்டிகாலே துகுடில்: குண்டல்யாகாரைஸ்தித: |
தந்மத்யே ஞானமுத்பந்தம் தத்ரூபம் நாதமுச்யதே ||
என்று சொல்லப்படுகிறது.
அதாவது சிருஷ்டிகாலத்தில் குடிலை (அதாவது பிரணவம்) குண்டலி அல்லது நித்திரையிலிருக்கும் அரவுபோல் வளைவாக உண்டாயிற்று; அதன் மத்தியில் நாதம் உண்டாயிற்று. அதுதான் ஞானமென்பது. இந்தக் குண்டலியே குடிலை. அதுவே பிரணவ சொரூபம். இந்தக் குடிலை அல்லது சுத்தமாயை யினிடத்துத்தான் ஆன்மாக்கள் ஒடுக்கம். சுத்தமாயை யென்றழைப்பானே னெனில் ஆன்மாக்களுக்கு அவரவர்கள் பக்குவத்துக்கு தக்கபடி ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களுண்டு; இவைகளினின்றும் அதீதயாகையால் சுத்தமாயை என்றழைக்கப்படுவது. இந்த மும்மலங்களில் ஆணவமலமொன்றுமே யுடையாரை விஞ்ஞானகல ரென்றும், ஆணவம் கன்மம் இரண்டு முடையாரை பிரளயாகலரென்றும், ஆணவம், கன்மம், மாயை மூன்று முடை யாரை சகளரென்றும் சொல்லுவார்கள். இந்த குடிலை யிடித்து இப்பசுக்கள் ஒடுக்கமென்றோம். இவ்வான்மாக்கள் பரிணாமவிதியால் ஈசுரனது கிருபானோக்கம் உண்டாக நிவர்த்திகலைக்குட் படுகின்றன. நிவர்த்தி என்பதற்கு இங்கு பாசசீக்கம் என்று பொருள் தரும். ஆன்மாக்கள் கேவலா வஸ்தையிற்பட்டு பிரக்ஞைபெறவேண்டிய விடம் இதுவே. ஆகையால் இதனை சிருஷ்டி என்பதும், மேலே இந்த தத்துவத்தில் உண்டாகியதைக் கொண்டுதான் மற்றவை என்றதுவும் இதற்கு அடுத்த கலையான பிரதிஷ்டா கலையில் தான் இந்தக்கலையில் தநுகரணபுவன போகங்களைச் சரியான வழியிற் பிடிக்க, வேண்டும். இங்குதான் ஆணவமலம் கண்ணுக்குப்படலம் போற் காணப்படுவது. மாயையின் வசத்தனாகி அதன் வஞ்சனைக்குட் படுவானாகில் கரை யேற வழியில்லை. அதனைத் தவிர்த்து முற்படுவானாகில் ஈக ரகிருபையும் கை கூடி கண்ணினை மறைக்கும் மாசு வில கத்தலைப்படும், இது தான் ஸ்தூலபிரகிருதியில் ஸ்திதியென்பது. இதற்கு அதிதேவதையாக விருப்பவர் மஹாவிஷ்ணு.
இதற்கு அடுத்தகலை வித்தை. இதுவும் அசுத்தமாயா காரியமாயினும் ஸ்தூலபிரகிருதியினின்றும் சூக்ஷம பிரகிருதியிற் செல்லும். இந்த சூக்ஷமப்பிரகிருதியில் சம்ஹாரம் எனப்பெயர் பெறும். இதற்கு அதிபதியாகவிருப்பவர் ருத்திரமூர்த்தி. ஸ்தூலதேகம் சம்ஹாரம் செய்யப்படுவ தொன்றென்பதாயினும் அந்தரார்த்தத்தில் ஆன்மாவுக்கு பந்தசேதனம் ஆகின்றது தென்பது தான் சம்ஹாரமென கொள்ளல் வேண்டும். அவனருள் பாலிக்க நாம் எவற்றையும் செய்கிறோம் அடைகிறோ மென்று கொள்ளும் வரையில் நமக்கு ஈடேற்றம் கிடையாது. இந்த வித்தியாகலையில் தான் சிவபெருமானது சோதனைகளும் நடப்பது. நமது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் எத்தனையோபேர் சோதிக்கப்பட்டிருப்பது அறியாத காரியமல்ல இதற்கு பயப்படாதவன் தான் திருவடி நிழலைச் சேரக்கூடியவன். இதுதான் தசகாரியத்திற் கூறிய ஆத்மதெரிசனமும்.
இதற்கு அடுத்தகலை சாந்தி. அதாவது பசு அவஸ்தைப்பட்டு கன்மம் மாயை என்னும் இரண்டுமலங்களையும் விட்டு மூலமலமொன்றுடன் வந்து சாந்தியடையக் கூடியது. இதற்கு திரோபவ மெனச்சொல்லுவார்கள் பெரியோர். இது சுத்த வித்தைசாதாக்கியதத்துவங்களில் நிற்கும், இதற்கு மகேசுரன் அதிதேவதையாக நிற்பர்.
இதற்கடுத்தபடி தான் சாந்தியதீதகலை. இந்தப்பாதம் தான் அநுக்கிரகம், சர்வேசுரனது திருவடி நீழலையடைவது இதிற்றான், இந்தப்பதம் கிடைப்பது கடந்தஞானி கட்கேயன்றி எடுத்துப்பேசுதற்கும் வகையறியாஎம்மைப்போன்றவர்களுக் கன்று. இதற்குமேலும் பதங்கள் மேலே கூறினாமாயினும் அவை இத்தன்மைய வெனயாமும் அறியோம். சொல்லக்கேட்டிருப்பினும் வியவகரிக்கசக்தியுடையோ மல்லோம் இப்படி ஈசன் அநுக்கிரஹிப்பனென்பதை அருநந்தி சிவாசாரிய சுவாமிகள் திருக்கோயிலுள்ளிருக்கும் என்னும் திரு விருத்தத்தில் நன்கு விளக்கியுள்ளார்கள். ஆக, இவ்வத்து வாக்கள் இவையென்பதும் இவற்றின் காரியங்கள். இன்னின்னவை யென்டதும் எடுத்துக் காட்டினோம். இன்னும் அந்த அத்துவாக்களின் விசேஷத்தை ஆன்மாயறியுங்காலத்தை மத்திய ஜாக்கிர அவஸ்தையென்று சொல்லுவார்கள். இதனையே திருமூலர் தமது திருமந்திரத்தில்
      நாடிமண்டல மூன்று நலந்தெரிந்து
      ஒரு மவரோடு உள்ளிருபத்தைஞ்சும்
      கூடுவர் கூடி குறிவழியே சென்று
      தேடிய பின்னர் திகைத்திருந்தார்களே,
      சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
      ஆக்கிய தூல மளவாக்கி அதீதத்து
      தாக்கிய வன்பான் தாண்டவஞ் சார்ந்தது
      தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே. என்றார்.

இதனை நன்றாயறிக. அவஸ்தை யென ஒன்று குறிப்பிட்டோம். அஃதென்னவென அறியவேண்டு வதசியமாகும். அவஸ்தைகள், கீழாலவஸ்தையல்லது கேவலாவஸ்தை மேலாலவஸ்தை அல்லது சகலாவஸ்தை, சுத்தாவஸ்தை யென மூன்றாய், மூன்றிற்கும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்தவத்தைகளுடன் கூடபதினைந்தாகி காரணாவஸ்தை மூன்றும் கூட பதினெட்டவஸ்தைகளாம், இந்த கேவாலவஸ்தையிற்றான் ஆன்மா பரிமிப்பது, பிறகு நற்கதியடையும் பொருட்டு சகலாவஸ்தை யென்னும் படியேற இருளினின்றும் கரையேறியவொருவன் வெளிச்சத்தைக் காணினும் முடத் தேனாயினாற் போன்றது. இதற்காகத்தான் சம்சார சாகரத்திற் தள்ளுண்ணப்படுகிறான். இதினின்றும் கரையேறியவன்றான் சுத்தா வஸதை யென்று சொல்லப்படும் நின்மலாவத்தையைப் பிடிக்கிறான். இந்தப்பாதத்திலுள்ள முதற் படியைத்தான் திருமூலர் கூறுவதும். இதன் விரிவை சிவபிரகாசக் கட்டளையிற் காணலாம் இப்பொழுது மேலே கூறிய பின்பா தெற்றெனவிளங்கும்.
முதற்பாவில் கூறிய மண்டல மூன்றும் என்றது அக்நி, ஆதித்திய சந்திரமண்டலங்களை - நிவர்த்தியினின்றும் பிரதிஷ்டா கலைக்குச் சென்றதும் அக்கினிமண்டலமுண்டாகிறது. இது ஆன்மாவின் சூக்ஷம தேகத்தில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம் என்னும் மூன்று ஸ்தானங்களிலும் வியாபகம். ஆதித்திய மண்டலம் வித்தியாகலைக்கு உரித்தாய் அனாகம் விசுத்தி ஸதானங்களில் வியாபகம், சந்திரமண்டலம் சாந்தியதீதகலைக்குரியதாய் ஆக்ஞைக்குடையது. இம்மூன்றுந்தான் கூறப்பட்டது இதனில் கூறிய கலைகளைப்பற்றி முன்னர் கூறினாம்.
ஒடும் இருபத்தைந்தும் என்றது ஆத்மதத்துவத்தில் கூடிய இருபத்து நான்கும் மற்றை வித்தியாதத்துவம் சிவதத்தவம் இரண்டனையும் ஒன்றாகச் சேர்த்தே. இப்படி மண்டலமறிந்து அதன் காரணமான கலையறிந்து பின் அவஸ்தையின் பாற்பட்டுத்தேறி சக்திநிபாதம் பெறுவர்.
இவ்விதமாக அத்துவாககளினால் அடையக் கூடிய பிரயோஜனமும் இவை என்பதையும் ஒருவாறு விளக்கினேன். குற்றங்குறைகளிருப்பினும் பெரியோர்கள் க்ஷமிக்கவேண்டுமாறு மற்றுமொருமுறை பிரார்த்திக்கின்றேன்.
திருவாரூர். சோமசுந்தரதேசிகன்.
சித்தாந்தம் – 1912 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment