Monday, May 4, 2020


அத்வைதம்
சைவ சித்தாந்தத்தின்படி
சைவசித்தாந்தத்துக்கு ஒப்ப முடிந்தவாறு கடவுளுடைய சொரூபத்தைப் பற்றி 'The New Reformer' ''வமான சீர்திருத்தம்என்ற பெயரிய பத்திரிகைக்கு யாம் செய்த விஷயதான மொன்றினில் யாம் விரிவாக எழுதியிருந்தோம். இப்போதும் அத்வைத விஷயத்தை விளக்குவான் அமோகமாக இங்கே, எழுதுவதாகச் சங்கல்பிக்கின்றோம். ஆனால் இங்கே “அத்வைத சித்தாந்தம் என்று குறிப்பிடப்பட்டது. சித்தாந்த நூலாசிரியர்கள் போக்கைப் பின்பற்றிய தொன்றென் றுணர்க. இந்தியநாட்டுத் தத்வஞான விசாரணையை மேற்கொண்ட படிப்பாளிகள் யாவரையும் அன்பும் சிரத்தை  யுடனும் யாம் கூறுமவற்றைக் கவனிக்கும்படி பிரார்த்திக்க லாயினோம். இந்தத் தத்வஞானம் நாளடைவில் அதிகமாகவும் தெளிவாகவும் விளங்கக் கூடிய தொன்தலினால் எல்லா மதஸ்தர்களுடைய மனத்தையும் கவர்ந்து, எல்லோருக்கும் மனோற்சாகத்தையும் பெரு நம்பிக்கையையும் இது விளைவிக்கக்கூடியதொன்றேயாம் உறுதியாக நம்பியிருக்கின்றோம். யாம் முன்னம் எழுதிய வியாசத்தில் சுட்டிக்சாண்பித்த பிரகாரமே இந்தச் சிறந்த ஞானம் உலகத்தார் முன்பாகச் சுவல்பகாலத்திற் குள்ளாக, பிரகாசிக்கப் பட்டதென்றறிக. இதை - இந்த அரும்பெரும் விளக்கை ஏற்றிவர்கள் இதை ஒரு கூடையைக் கவிழ்த்து உலகமறியாமல்'ஒரு சிறு மூலையில் வைத்தவர்களல்லர். இனிமேல் வருங்காலமெல்லாம் இந்தத் தீபத்தின் அற்புத பிரிகாச காலமேயாகி; அதி உன்னதமான பர்வதத்தின் சிகரத்தினின்றும் பிகாசிக்கும் என்று நம்புகிறோம்.
முதற்கண் யாம். ஒரு விஷயத்தைக் குறிப்பித்துக் - காண்பிக்கக் கடமைப்பட் டிருக்கின்றோம். அத்வைதம் ன்ற தனி சப்தம் தங்களது அருமையான தத்வஞானத்தை விளக்குவான் சித்தாந்த நூலாசிரியர்க ளெல்லோராலும் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. சித்தாந்த சாஸ்திரங்களுள் “விசிஷ்டாத்வைதம்'' என்ற பிரயோகமானது எந்த இடத்திலும் காணப்படவில்லை. முதல் முதல் இந்தத் தத்வஞானத்தைத் தரிசிக்கும் பாக்கியத்தைப்பெற்ற சில புண்ணியர் உடனே இதை "விசிஷ்டாத்வைதம்'' என்று முன்பின் யோசியாமல் கூறிக் களியாட்டயரா நின்றனர். ஆனால் சைவ சித்தாந்திக ளெல்லோருமே தங்களைத் தாங்களே கண்டிப்பாக அத்வைதிகள்'' என்றே அழைத்திருக்கிறார்கள். இதையாழ்ந்து கவனிக்க.
ஸ்ரீசிவஞானபோதம்'' இரண்டாவது சூத்திரத்தின் வார்த்திகவுரையில் "ஸ்ரீ மெய்கண்டதேவர்'' ''அத்வைதம்'' என்ற பதத்தை யுபயோகித்திருக்கின்றனர் கண்டீர்! அந்த அவசரம் அடியில் வருமாறு காண்க.
                ''அத்துவிதமென்ற சொல்லே அந்நி
       நாத்தியை யுணர்த்துமா யிட்டு

அதைத் தொடர்ந்தே அவர்தம் “அத்வைத'' சித்தாந்தத்தை அருமை பெருமையாக விளக்குவான் புக்கார். மற்றோரவசரத்திலும், கீழே உதகரித்தபடி,
        "அத்துவிதமாதல் அகண்டமுமதைவமே
        அத்துவிதியன்பாற் றொழு"

அவர் தமது "அபிமதத்தை'' (System) ''அத்வைதம்'' என்றே கூறலாயினார். அதன்றியும், அவரே, தமது சீடவர்க்கங்களையும் “அத்வைதிகள்'' என்றே அழைக்கலாயினார்.
ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள் “சிவப்பிரகாசம்என்ற புண்ணிய நூலின் மேலே யுதகரிக்கப் பெறும் முகவுரைப்பாட்டில் அதையே “அத்வைத'' மென்ற சொற் பிரயோகத்தையே யெடுத்தாண்டிருக்கின்றனர்.
“புறச்சமயத்தவர்க்கிருளா யகச்சமயத்தொளியாய்
புகலளவைக்களவாகிப் பொற்பணி போலபேதப்
      பிறப்பிலதாயிருள் வெளிபோற் பேதமுஞ்சொற்பொருள் போற்
      பேதாபேதமுமின்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதர யுடலுயிர்க்கண்ணருக்கன் :'.
     அறிவொளிபோற்பிரிவறு மத்துவிதமாகுஞ்
      சிறப்பினதாய்வேதாந்தத் தெளிவாஞ்சைவ
      சித்தாந்தத்திறனிங்குத் தெரிக்கலுற்றாம்.''

ஸ்ரீதாயுமான வானவ பிரபுவள்ளல் ''அத்வைத'' மென்றவிந்த வரும் சப்தத்தைத் தாராளமாக ஆங்காங்கு முபயோகிக்க லாயினார் அவரது பரமகுரு ஸ்ரீ மெய்கண்ட நாதனைப் பாடிய போது அடியிற் கண்ட்படி துதிப்பாராயினார்.
“பொய்கண்டார் காணாப்புனிதமா மத்துவித
மெய்கண்ட நாதனடி மேவுநா ளென்னாளோ?''

பிறி தொரு பாவில் பிரபு தாயுமானார் இந்த புண்ணிய மொழியை மறுபடியும் இரண்டு முறைப் பூரித் துபயோகித்ததைக் காண்மின்! இந்த சப்தத்தின் அர்த்த புஷ்டியை விளக்கியும், இதற்குத் திருஷ்டாந்தம் தேடியும், கூறிய அவசரம் அது. இந்த விஷயத்தை யாமும் மேலே விரிவாக விசாரித்து முடிவு செய்வோ மென் பது நிச்சயம்.
"ஆணவத் தோடத்து விதமானபடி மெய்ஞ்ஞானத்
தாணு வினோடத்து விதமாகு நாளென்னாளோ?"
அந்தப் பதத்தையே மீண்டும் விசாரிக்கப் புகுவான் அடியிற்கண்ட வேதாக மந்திரங்களிலும் உபநிடத மந்திரங்களிலும், இன்னும் சிலவிடங்களிலும் அந்தப் பதம் காணப்படுகின்றது..
“ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாயதஸ்தே''
                                           (யஜுர் வேதம் 1 - 8 - 6)
      "ஏகோஹி ருத்ரோ நத்விதீயாயதஸ்தே''.
                                           (ஸ்வேதாஸ் உபநிஷத், 3 - 2)
      ''ஏகமேவாத் விதீயம்''                 சாந்தோக்யவுபநிஷத் (6 - 2 - r)
      “சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் ஆத்மா''
                                           (மாண்டூக்ய வுநிஷத் - 7)
"அமாத்ராஸ் சாதுர்தவ்ய வகாரிக பிரபஞ்சோப,
      சமஸ் சியோத்வை தவவே''

அகண்டாகாரமான நான்காவது பதார்த்த மானது. ஒருவராலும் உணரக் கூடாத தன்மைத்தா யுள்ளது, அதைக் கடந்து அப்புறம் செல்வது யாவரானும் முடியாத காரியமாயுள்ளது சிவாத்வைதம்.                   (மாண்டூக்ய வுடமிஷத் 12)
முதலிரண்டு வாக்கிபங்களும் இந்த வார்த்தையை யிதன் பிராகிருத ரூபமாகவே வெளிப்படுத்தி யுள்ளன. அந்த ரூபமோ!' fநத்விதீயம்” என்பதே இப்போது உபயோகத்தி லிருக்கும் வார்த்தையோ? '''” என்ற முதல் அட்சர நீக்கத்தினால் கிடைக்கப் பட்டுள்ளது. '' என்றது எதிர் மறைப்பொருளில் முதற் பகுதியாக முடிந்தது. அதனால் இந்த வார்த்தையின் பொருள் என்னவென்று விசாரித்தால் இரண்டில்லை, இரண்டல்ல'' எனவாகும் மேற்காட்டிய வாக்கியங்களில், சந்தர்ப்பங்களை நோக்கின் பல்வேறுபட்ட மத ஆசாரியர்கள் அநுவபித்துக் கூறும்படியான தத்வஞானார்த்தங்களுக்கு அவையிடந் தவே மாட்டா வென்க. அது சொல்ல வந்ததெல்லாம் கூடிப் பிரஸ்தாப புருஷனை விட வேறு அந்நியமான யாதொரு புருஷனும் கிடையவே கிடையா தென்பது, தான் அதன் அபிப்பிராயம். முதற்கண் உதகரித்த வாக்கியத்தில், ஒரு கடவுள் தான் உண்டு. இரண்டாவது கடவுள் இல்லை யென்று அது கூறியது. இது எப்படி யிருந்த போதிலும், பலமதங்களினும் கூறிப் போந்த பிரயோக உபயோகத்தைக் குறித்து யாம் இப்பொழுது விசாரணை மேற்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
எதிர்மறை முதலசைக்கு – அதாவது '''' என்ற அட்சரத்துக்கு பல அர்த்தங்கள் கூறுகின்றனர். (1) இன்மை அல்லது. அபாவம், இது. எதிர் மறையர்த்தம் கொண்ட அவசரம். (2) அன்மை அல்லது சாதிருசியம். (3) மறுதலை அல்லது விரோதம் - சம்ஸ்கிருத பாஷையிலும், இங்கிலீஷ் பாஷையிலும், ஒரேவார்த்தை முதற்கண் பேசிய இரண்டு அர்த்தங்களையும் காண்பிக்கும்படி உபயோகப்படுகின்றன. ஆனால் தமிழ்ப் பாஷையிலோ நமக்கு இரண்டு வேறு வேறு வார்த்தைகள் கிடைத்துள்ளன. அவை "இல்லை'' ''அல்லை' யென்ற இரண்டு வார்த்தைகளே “அத்வைதம்” என்ற வார்த்தையில் முதல் அர்தத்தை நாம் சமர்ப்பித்துப் பார்ப்போமானால், இரண்டில் யாதானு, மொன்றேனும், அல்லது. இரண்டுமேனும்' இல்லவேயில்லை.'' யென்று, சொல்ல வேண்டி வரும். மேலும் இரண்டிலொன்று தானுண்டு, என்றேனும், அல்லது இரண்டுமில்லை யென்றேனும் முடிவு சொல்லவேண்டி வரும். ஸ்ரீசிவஞான சுவாமிகள் நமக்குக் குறிப்பிட்டடுக் காண்பித்தபடி இதரமத ஸ்தாபனர்களாகிய ஆசார்யர்கள் இந்த ''அத்வைதம் என்ற சப்தத்தை, “ஒன்று” என்ற அதன் பா' அர்த்தத்தில், எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சாதிருசிய அர்த்தத்தில் அதை யுபயோகிப்போமானால், அது வேறு அல்லா'' அல்லது “இரண்ற்ற' என்ற அர்த்த புஷ்டியைத் தருமென்க. இந்த அர்த்தத்தை குறள் விளக்கியும் திருஷ்டர்ந்தித்தும் கூறாநின்றது.
திருக்குறள் 86 - வது அதிபாயம் முதல் குறள் தரிசனை செய்க
            பொருள் அல்லவற்றைப் பொருளென்றுணரும்
                                மருளானா மாணாப்பிறப்பு"

இங்கே பிரயோகிக்கப் பட்டுள்ள வார்த்தை அல்ல” என்பதே. அதனர்த்தம் தான் என்னை நம்முன்பாக விரண்டு பதர்த்தங்கள், - திருக்குறள் பிரதி யொன்றும் சிவஞானபோதம் பிரதி யொன்றும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். யாதானுமொருவன் ஒரு புத்தகத்தை மற்றொன்றாகக்கண்டு மருளுவாறானாதல், அவையே மாயையென்று சொல்லலாம். மித்யாஞானம், தப்பறிவு அல்லது அவித்யா அல்லது ஆணவம் என்று சொல்லுதலு மொல்லும். இங்கே இந்த இரண்டு புத்தகங்களுமிருக்கின்றன வென்ற வுண்மையை யொருவரு மறுத்திலர்.
ஆயின், “பொருள் அல்லவற்றை என்றதற்குப் பதிலாக, பொருள் இல்லவற்றை" என்ற பாதப்பிரயோகம் இருந்திருக்குமானால், அப்போது அர்த்தம் முழுமையும், வேறு பாடடைந்து போகத்தடையில்லை. அப்போது எடுத்துக்கொண்ட பிரஸ்தாப குறளுக்கு வேறு ஓர் அர்த்தம் உண்டாய் விடுமென்பதுண்மை, அதாவது, நம் முன்பாக யாதொரு குறளின் பிரதி யொன்று இல்லை யாகவும், யாதொன்று இருப்பதாக நாம் மனஸ்கரிக்கலாயினோம் என்ற விபரீத அர்த்தம். அது கொடுக்கக் கூடும். முன்னம் சொன்ன விஷயத்தில், நம்முன் னிருந்த பதார்த்தங்களின் இருப்பு சந்தேகிக்கப் படுதற்கு இடன் காணோம். இரண்டாவது யாம் மேற்கொண்ட விசாரணா விஷயத்தின் நம் முன்பாக விருந்த பதார்த்தத்தின் உண்மையான இருப்பு ஒப்புக் கொள்ளப்படாமற் போய்விட்டது கண்டீர். சாதாரணமா யெடுத்தாளப்பட்ட "கிளிஞ்சல் வெள்ளி'' என்ற திருஷ்டாந்தத்தில் இரண்டு பதார்த்தங்களும் எண்ணக் குறிப்புக்களும் வாஸ்தவமாக வுள்ளனவேயாம். அவையிரண்டும் உள்ள படியே தனித்தனியு மிருந்தும் வேறுபட்டுக் கிடந்தாலும் ஒன்றையொன்றாகக் மயக்கவறிவால் கொண்டோம். அப்படிக் கொண்டதும் இவையிரண்டனுக்கு முள்ள ஒரே மாதிரியான காட்சியைக் கொண்டும் நாம் மருள நேரிட்டது. கிளிஞ்சலைப் போன்ற யாதொரு காட்சி வெள்ளிக்கு முள்ளது. ஒன்றைப் போன்ற காட்சி மேற்கூறிய விரண்டு புத்தகங்கட்குமுள்ளது. நம் முன்பாகக்கிளிஞ்சல் இல்லாதபோது, வெள்ளி ஞானம் நம்முன்பாக தோன்றக் கூடுமானால் இது அபாவ, அர்த்தத்துக்குத் திருஷ்டாந்தமாகும். ஆனால் சாதாரணமாக அப்படிப்பட்ட யாதொரு பதார்த்தம் அல்லது எண்ணக் குறிப்பு நம்முன்பாகத் தோன்றவே மாட்டாது. இதே வித்தியாசம் இந்த இரண்டு மதங்களி,லும் நாம் அவைகளை உணர்ந்துழி நெடுகத்தோன்றுவ தொன்றாம். ஒரு மதமானது உடம்பும் உயிரும் உட்பட்ட பிரபஞ் சத்தை மெய்யாகவே கூறுகிறது. ஆனால் சாதாரணமாக நாம் உடம்பையே அறியாமையால் உயிர் அல்லது ஆத்மா வென்று நினைக்கின்றோம். அதனாலே அதற்கு - உடம்புக்கு - வேண்டிய விஷயங்களையே கவனிக்கலாயினோம். நம்முடைய கடமையோ ஆத்மாவின் ரக்ஷிப்பைப் பொறுத்த தொன்றாயிருத்தல் வேண்டும். இதை நாம் மறந்தோம். அப்படியே, சிலவேளை ஆன்மாவையும் அறிவின்மையால் கடவுளென்று எண்ணிப் பிராந்தியி லாழ்கின்றோம். இவைகளைத் தனித்தனியே ஆராய்ந்து பார்த்து இவைகளினுண்மையான சொரூபத்தை யுள்ளபடியே யுணர்ந்தோமாயின், மேலும் உடம்பைச் சார்ந்த சுகங்களின் அற்பத் தன்மையையும் உள்ளபடியே யுணரப் பெற்றோமாயின், அல்லாமலும் பரமேஸ்வரனோடு அத்வைத சம்பந்தம் பெற்று அநுபவிக்கும் அழியாச் சிவயோகத்தை யுத்தேசித்துத்தேயோகங்களைப் பின் லைதலை யதிலே வொழித்து விட்டோமாயின், நாம் செல்ல வேண்டிய மார்க்கம் பரிசுத்தமாய்ப் போய்விடுமே.
ஸ்ரீ திருவள்ளுவ நாயனார் இதே அபிப்பிராயத்தைத் தழுவினவராய் ஒரு குறள் கட்டளை யிட்டருளியுள்ளார்.
                  ''இருள் நீங்கி இன்பம் பயக்கு ருள் நீங்கி
     மாசறு காட்சியவர்க்கு

இந்த விசாரணையில் உலகத்தின் இருப்பை மறுப்பான யாதொரு முயற்சியும் ஏற்படக் காணோம். பாபத்தின் இருப்பும் மறுக்கப் படவில்லை. நம்முடைய இருப்பும் கடவுளிருப்பும் மறுக்கப் படவில்லை. ஆனால் இந்தப் பதார்த்தங்களுள் ஒன்றினின்றும் ஒன்றை வேறு பிரித்துப் பார்ப்பான் நாம் ஏவப்படுகின்றோம். மற்றைய மத திருஷ்டியில், உலகமென்ப தொன்றில்லை பாவமில்லை, ஆன்மாவில்லை - மேலும் இவை போன்ற எல்லா விபரீதமயக்கத் தோற்றங்களும் எழா ஒன்றன. ஆனால், “ஏன்” அப்படி எழல் வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் சமாதானமே கிடையாது. -
ஆனாலும், முதற் கண் நாம் ஒன்று உறுதியாகச் சொல்லி முடிப்போமாக. சித்தாந்த சாஸ்திர விசாரணையை மேற்கொண்ட பல நூல் ஆசிரியர்கள் எதிர்மறை அசையை - ந, என்ற முதலெழுத்தை - ''அபாவ'' அர்த்தத்தில் கொள்ளாமல் – அதாவது ''இன்மைப்பிரயோகத்தில் அமைத்துக் கொள்ளாமல் சாதிருஸய "அன்மைப்பிரயோகத்தில் அமைத்து மகிழ்வாராயினர். மேலே அவர்களுடைய மதவிசாரணையை அவர்கள் என்னவிதம் பூர்த்திசெய்கின்றார்கள் என்பதை யோதுவோமாக.
கவுண்ட் டால் ஸ்டா என்ற கனவான், மதமாவது மகனொருவன் தனக்கும் அதாவது தனது சொந்த வடிவத்துக்கும் முடிவற்ற பிரபஞ்சத்துக்கும் ஏற்படுத்திய சம்பந்தம் என்றும், “தருமாமவது(morality)  இந்தச் சம்பந்தம் காரணமாகத்தனாது வாழ் நாளைச் சீர்பெற நடாத்துதல் என்றும் கூறுகின்றார். சித்தாந்த நூலாசிரியர்களும்இதே மாதிரியாகவே கடவுளுக்குப் மக்கட்கு முள்ள சம்பந்தத்தையும் கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள சம்பந்தத்தையும் புகுந்து ஆராய்வான் முயற்சிப் பாராயினர்.
அப்படிச் செய்வதினால் எல்லாத் துன்பத்தையும் பாபத்தையும் அறவே ஒதிப்பான் பிரயோசனப்படும் கருவிகளை அல்லது சாதனத்தை நமக்கு வழித்துணையாம் படி அன்னாரே கூறுகின்றனர்.
சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தின் முதல் இரண்டு வார்த்தைகளிலேயே முதல் பிரமாணவுண்மை யடங்கி யிருத்தல் ஆழ்ந்து சிந்திப்பார்க்குச் சாலப்பிரகாச மாகும்.
 "அவையே தானே யாய்"
      கடவுள் அவைகளோடு ஒன்று பட்டும் வேறாகவும் இருக்கின்றார்.
இத்துடன் கூட ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் மற்றொரு சம்பந்தத்தையும் சேர்த்துச் சொல்கின்றார்கள். அதாவது ''உடன் அல்லது பேதாபேதம்” என்பதேயாம். இதில் அபேதம் - பேதம் - பேதா பேதம் என்ற சம்பந்தங்கள் எல்லாம் தொக்கு நிற்கின்றன.
ஆனால், மற்றைய மதங்களோ வென்றால் - இந்த சம்பந்தங்களில் ஒன்றை மட்டும் ஆதாரமாக வொப்புக்கொண்டு அதன்மேல் தத்தம் மதக்கட்டிடங்களைக் கட்ட வாரம்பிக்கின்றன ''அபேத” சம்பந்தத்தை நிரூபித்தற்கு உபயேப்படுத்தம் உபமானம், ''பொன்னும் பணியு" மென்பதே. “பேதசம்பந்தத்தைக் காண்பிக்கும்படி யெடுத்தாளப் பட்ட உவமை யலங்காரம் “இருளும் ஒளியும்” என்பதே. “பேதாபேத” சம்பந்தத்கத மெய்ப்படுத்துவான், துணைக் கொண்ட உபமானம் சொல்லும் பொருளும், என்பதே இந்த பல்வேறுபட்ட திருஷ்டிகளை (views) ஒன்றோ டொன்று ஒக்கச் செய்தலசாத்யமாகும். இவைகள் சந்திக்கத் தக்க இடம் ஒன்றும் காண்ப தரிதாயிற்றென்க. இந்த பல்வேறு பட்ட சம்பந்தங்களையுமே சித்தாந்த ஞானம்பீடிகையாக ஒப்புக்கொண்டு வியவகாரம் செய்யா நின்றது கண்டீர். ஆனால் சித்தாந்திகள் : இவைகட்கு வேறு திருஷ்டாந்தங்களை வெடுத்துக் காண்பிக்கின்றனர். அதாவது, ''உடம்புமுயிரும்'' என்றதை அபேத'' வாதத்துக்கு உபயோகம் செய்கிறார்கள். "கண்ணும் கண்ணொளியும் அருக்கனொளியும்" என்றதை “பேத'' வாதத்துக் குபயோகம் செய்திருக்கின்றார்கள். ''ஆன்மாவும் கண்ணொளியும்'' என்றதை ''பேதாபேத'' விலக்கணத்தைத் தரிசிப்பான் எடுத்து ஆளுகின்றார்கள். இவ்வுண்மை மேலே உதகரிக்கப் பெற்ற ஸ்ரீ உமாபதி சிவாசார்ய சுவாமிகளின் மெய்ம் மொழிகளைத் தரிசித்த வழியே நாம் காணலாகும். இம்மூவகையாக இருந்தும் ஒன்றை யொன் முரண்படுத்தாது இந்தவாதங்கள் சித்தாந்த மதத்தில் பிரகாசிப்பனவாயின. ஆதலினால், இந்த சித்தாந்த அற்புத திருஷ்டியில் ஏதோ நவீனமானதோ ருண்மை யிருத்தலை நாம் உணர்ந்தறியக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் இந்தப் பல்வேறுபட்ட சம்பந்தங்களை சமரஸப் படுத்திக்களிப்புறும் பெருமிதம் இதனிடம் தானே காணக்கிடைப்ப தன்றோா அப்படிக்கிருந்தும் தன்னுடைய கூற்றுக்கும் இவை முரண்படாமல் முடிந்தனவன்றோ? மேலும் ஒன்றை யொன்று கிரமப்பிரகாரம் தழுவி நின்று ஒரு பெரு முதலாகவும் இவை முடிந்தனவன்றோ? என்னே! இதனருமை பெருமை! மேலும் இந்த நவீன சம்பந்தத்தைத்தான் - சுலபத்தில் தொட்டுக் காட்டக் கூடாததும் இன்னதென்று வரை யறுத்துக் காட்டக் கூடாததுமாயுள்ள தாகியவிது - "அத்வைதம்'' என்ற அரும்பத பிரயோகத்தால் சித்தாந்தச் செல்வராகும் நம்மனோர் கூறி மகிழ்ந்தனர் அன்றே!
ஸ்ரீ மெய்கண்ட நாதனும் இரண்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் இந்த பதத்தைத் தானே விசாரிக்கப்புக்கார்.
 ''இது ஈண்டு அத்துவிதம் என்ற சொல்லானே ஏகமென்னில், ஏகமென்று சுட்டுவதுண்மையின் அத்துவிதமென்ற சொல்லே அந்நிய நாத்தியை உணர்த்துமா யிட்டு.''
அதாவது பொருள் மாத்திரத்தானே வித்யாஸ மிருப்பதுண்மையேனும், ஒன்றி னின்றும் ஒன்றைப் பிரித்தல் முடியாததால், அவைகளின் வேறன்மையை வற்புறுத்திய தாகும்.
இதற்கு அப்பெரியார் “உயிர் உடல்” என்ற திருஷ்டாந்தத்தை யெடுத்து வோதலாயினார். இவையிரண்டும் வேறு வேறாயிருந்தாலும் கூட, யாதொரு உயிர் தனது சரீரத்தோடு தான் ஒன்று பட்டுக் கிடக்கின்றது. அவையிரண்டனுக்கு முள்ள பிரிவு படாச் சம்பந்த விசேஷத்தால் இதே மாதிரியாகவே, உயிரும் தன் இறைவனுடன் ஒன்றாகவே தன்னைக் காணாநின்றது! ஆயினும் கடவுள் ஆன்மாவல்லர். ஆன்மா கடவுளாகாது. அதனானே கடவுள் ஒருவரே, அவர் ஆன்மாவுடன் ஒன்றாயிருந்தும் வேறாகவு மிருக்கின்றார். அவரது இண்டாவது வெண்பாவில் ஏகமேவாத் விதீயம் என்ற மந்திரத்தைக் கூறுபடுத்தி உதாரணமுகத்தால் விசாரிக்க லாயினார்.
ஒன்றென்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
      ஒன்றென்ற நீபாசத் தோடுளைகாண் - ஒன்றின்றால்
      அக்கரங்களின்றாம் அகரவுயிரின்றேல்
      இக்கிர மத்தென்னு மிருக்கு''

இந்தத் திருஷ்டாந்தத்தை யூகித்துச் சரிவரவுணர்ந்தோமேயானால் அதன் (அத்வைத பதத்தின்) உண்மையார்த்தம் நமக்கு உள்ளபடியே மென்மேலும் பிரகாசமாகத் தடையில்லை. உதாரணம் உயிரெழுத்தையும் மெய்யெழுத்துக்களையும் பொறுத்த தொன்றாம். அதாவது. உயிரும் மெய் அல்லது உடலும் - ஆத்மாவும் அதன் உடலும் என்ற அர்த்தத்தையும் தரும்.
     “'உடல் மேலுயிர் வந்து ஒன்றுவது இயல்பே.
உயிரெழுத்தானது மெய்யெழுத்துக்களோடு ஒன்றி நிற்பது இயற்கையைப் பொறுத்த சம்பந்தமேயாம். இது நன்னூல் சூத்திரம்.உடலும் ஆன்மாவும்'' என்ற திருஷ்டாந்தம் தான் முதல் பாட்டில் நமக்குச் சொல்லி வைக்கப்பட்டது. ஆகையினாலே கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நேரிட்டுள்ள சம்பந்தத்தை வெளிப்படுத்த நமக்கு இரண்டு விதமான உதாரணங்கள் கிடைத்திருக்கின்றன கண்டீர். ஒரே பெயரால் பேசப்பட்ட இந்த இரண்டு திருஷ்டாந்தங்களுமே, உயிருக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தம் தானே உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துகளுக்கும் ஏற்பட்டுள்ளன வென்று நமக்கு ஸ்பஷ்டமாக எடுத்துக் காண்பியா நின்றன,
விசிஷ்டாத்வைத மதநூலாசிரியர்கள் இந்த ''உடலுயிர்'' என்ற திருஷ்டாந்தத்தையே உபயோகித்துள்ளார்கள் என்பது நிச்சயமே. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அன்னார் இந்த சம்பந்தத்தைக் குறித்து யாதொரு விசாரணையு மேற் கொள்ளக்கானோம். இதன்றியும் “உயிரெழுத்து மெய்யெழுத்து சம்பந்தம்என்ற உவமானத்தையும் அவர்கள் உணர்ந்தவர்களாகக் கொஞ்சங்கூட ஏற்படக்காணோம்.
டாக்டர் பெய்ன் என்ற துரை இந்த கேள்வியைத் தமது ''மனசும் தேகமும் என்று மகுடம் புனைந்த நூலின்கண் விசாரணை மேற் கொண்டுள்ளா ரென்றறிக. நாம் அதைக் குறித்து சித்தாந்த தீபிகைஇரண்டாம் வால்யம் பக்கம் 13ல் எழுதியிருக்கின்றோம். அதையே மீண்டும் இங்கு விவரிப்பாம்.


உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும்.
(மனசும் தேகமும்)
“:ழுத்துகளிலே, நான் அகரமாயிருக்கின்றேன்.” - பகவத்கீதை.
 ஜடப்பொருளாகிய விஷயம், அல்லது பதார்த்தத்தோடும் பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தோடும் மனம் ஒன்று பட்டிருக்கின்றது. ஆனால், அந்த சம்பந்தம் அடைந்துள்ள மனதுக்குநிகளமகல மில்லாததால், மற்றதனுடன் இட சம்பந்தத்தையது பெறுதலு மரிது. இந்த அபூர்வமான ஒற்றுமையை எந்தவிதமான பாஷையினாலாவது வழக்கத்திலுள்ள எந்த விதமான உதாரணத்தினாலாவது விளக்கலா மென்றால் கஷ்டமாயிருக்கின்றது. எல்லா சாமான்யமான சேர்க்கைகளையும் நோக்கி இது முரணாகவும், நொடியுள்ளதாகவும் காணப்படுகின்றது.            [பெயின் பண்டிதர்)]
மேலே நாம் உதகரித்துள்ள வசனங்களானவை ‘மனமும் உடலும்' என்ற மகுடங் கொடுத்து டாக்டர் பெயின் எழுதியுள்ள முக்கியமான புத்தகத்தினின்றும் எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தி லடங்கியுள்ள பல அத்தியாயங்களும் நாம் சிரத்தையோடும் வாசிக்கக் கூடியவைகளையே யாம். ஆனால் மகா பண்டிதராகிய அவர்களின் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் காணோம். அவர் எண்ணுவது போல இவ்விதமான தத்வஞானம் தான் இனிமேல் வருங்காலத்து நிலைக்கு மென்றும் நாம் எண்ண வேண்டியதில்லை. ஆனால் முக்கியமாக இப்போது அவர் காட்சிப் பிரமாணத்தினால் அறியக்கூடிய விஷயங்களைக்குறித்து மட்டும் ஆராய்வது தான் நமது கடமை.
அதன்மேல் கிரமமான தர்க்கசாஸ்த்திர சம்பந்தத்தைக் கொண்டு நாம் அநுமானிக்கக் கூடிய விஷயங்களை யநுமானிக்கக்கூடும். இவ்விதமாக ஆராயப் புகுந்த விடத்து மனதுடல் இவற்றின் தன்மையும், அவற்றின் சம்பந்தமுந் தானென்ன. மனம் என்பது அறிவு (Intellect) இச்சை (Will) உணர்வு (feelings) (உணர்வு என்றபதம் ஐம்புலனுகர்ச்சியின் உண்டாகிய இன்பதுன்ப உணர்ச்சியுடன் காமகுரோத முதலிய அது.பவங்களையும் உணர்த்தும்.)
 "இவைகள் ஒன்றினில் மூன்றாயுள்ளது. இவைகள் மூன்றும் தம்மில் வேறுபட்டிருந்தும் ஒன்றைவிட்டு ஒன்று இயங்காத்தன்மையால் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றது. அறிவும் இச்சையும் உணர்வு நிகழ்ந்தாலன்றித் தனியே எதுவும் காணப்படமாட்டாது. உணர்வு பூரணமாக வெளிப் பாடடையுங்காலம் அவைகளோடும் கூட, மற்றவைகளின் மூலமும் தோன்றியே நின்றதென்க.''

உணர்வும் முடிவில் இன்பதுன்பமேயாகும்! அவ்வுணர்வை இச்சையுடன் ஒன்றாக மயங்குதல் சாலாது. ஆனாலும் டாக்டர் பெயின் என்பவர் மேலே உதகரித்த வாக்கியங்களில் அபிப்பிராயப் படுவது என்னவெனில், உணர்வு நிகழ்ச்சியின் பின்பற்றியே அறிவும் இச்சையும் வளருமென்றும் எண்ணமாவதும் அவ்வுணர்வுள்ளும் ஐம்புலன்கள் வழியாக உண்டாகின்ற தென்றும் தான் வெளியாகின்றன. மேலும் இன்பமும் உயிரை வளர்ககச் செய்யும் யாதொரு கர்மத்தினாலே உண்டாகக் கூடியதாயுள்ளது (உயிர்க்கிதம் செய்தல்) துன்பமும் யாதொரு உயிர்க்கு கேடு தேடியசெய்கையைப் பொறுத்ததாயுள்ளது (உயிர்கதம் செய்தல்) நீதி நூல்களினும் இதைக் கொண்டே நன்மை தீமை, புண்ணியம் பாவமெனவும் பாகுபாடு ஏற்படுகின்றது. மையைத் தான் காப்பு விதியென (Law of conservation) * மேலும் கூறுவர்.
* காப்புவிதி யென்றது பதார்த்தங்களின் சூட்சுமசக்தி யென்றும் குன்றுபடாது என்றும், அதிகப்படாதென்றும் கொள்வது.
ஆனாலும் எல்லா இன்பதுன்பங் கட்கும் ஒருவரையறை யுள்ளது. அதிக்கிரமித்தால் சந்தோஷமுங்கூட துக்கமாய் முடியும். இன்னொரு உண்மையு முண்டு. இம் மனோதத்வ சம்பந்தமாக அதை சம்பந்தவிதி யென்பார்கள்.
நாம் பிரஞ்ஞையோடு விளங்கவேண்டுமானால் நம்முடைய நினைப்பும் உணர்வும் மாறுபட்டு வரவேண்டு'' மென்பதே. எவ்வித வுணர்வும் அறிவும் நீண்டு அநுபவிப்போ மானால், அது வர வரக்குறைந்து மெலிந்தும் முடிவில் உணர்வு அற்றே அந்த காரமாய்ப் போய் விடும். மறுபடியும் உணர்வை நினைப்புக்குக் கொண்டு வரவேண்டுமானால் அதனை மறந்து வேறொன்றை நினைத்து மறுபடியும் முன் நினைப்பை நினைக்கவேண்டும் - தமிழ் தத்வஞானிகள் இந்த உண்மையை 'நினைப்புண்டேல் மறப்புண்டாம்' என்று கூறுகின்றார்கள்.
இந்த விதியின் உண்மை எட்டவில்லை விளங்கவில்லை யென்றார், பய்ன்பண்டிதர், ஆனால் ஹிந்து தத்வஞானிகள் இதற்கு தக்க நியாயம் கூறவல்லவராயினர். மனிதனறிவு சிற்றறிவு. அது நாளடைவில் அதிகமாகப் பலப்படுத்திக்கொண்டேபோகவும் நிறைந்த சாதனத்தினாலே, மனமுழுமையும் அறிவு மயமாகி விடக்கூடும். யோக அப்பியாசம் செய்யும் போது முதல் முதல் வரக்கூடியது இருளேயாம். பிரகாசமல்ல. இருட்டே அதிகரித்துக் கொண்டுபோகும் சில நேரம்., ஆனால் யோகசாதனையிலேயே ஒருவன் முற்றுவானானால் முடிவில் உண்மை ஒளிபிறக்கும். அவனுக் குண்டாய் விடுகிறது இடையிலுள்ள காலத்திலே அந்த வொளியின் பலவித வேறுபாட்டால் பலவித தப்பபிப்பிராயத்துக்குட் படுத்தப் படுகிறது. முடிவில் நம்முடைய இச்சைதான் நம்முடைய உணர்வு வழியே சென்று நம்முடைய கர்மங்களை ஏவுகின்றது. அறிவும் பேதவறிவென்றும் அபேத அறிவென்றும், *
[* பேத அறிவு (Sense of difference) என்றது பதார்த்தங்களை வெவ்வேறாக வைத்து அறியும் அறிவு - அபேத அறிவு (Sense of similarity) அப்பதார்த்தங்களில், ஒற்றுமை யிருப்பதையறியும் அறிவு.]
ஞாபக அறிவென்றும் பிரிகின்றது. ஞாபகசக்தி, புத்தி, தீர்மானம் செய்யும் சக்தி, முதலிய மற்றைய எல்லா மனோசக்திகளையும் இந்த மூன்று தலைப்பின் கீழாகக் கொண்டுவந்து விடலாம். அறிவுண்டாதற்கு மூலமாயுள்ளதது என்க. விஷயங்களில் பேதமில்லா விடில் எல்லாம் ஒரே தன்மையினதாகவே விருந்து விட்டால், யாதொரு அறிவும் அல்லது யாதொரு அறிவு நிகழ்ச்சியும் கூடாமை யாகும். ஒரே வர்ணமிருந்திருக்குமானால் சித்திர சாத்திரம் குதிரைக் கொம்பாக முடிந்துவிடும். ஒரே சப்தம், ஒரே சுரம், இருக்குமானால் நாம் சங்கீதம் கேட்பதற் கில்லாமற் போய்விடு மன்றே? இப்போதிருக்கிற விஷயங்களை யுய்த்து நோக்குவோமானால், சம்பந்த விதியானது *
 [* சம்பந்தவிதி - (Law of Relativity) என்றது நாமும் உலகமும் பேதீப்பட்டு நின்று தான் அறிவுண்டாகும் என்பதும், ஏகபதார்த்தமுண்டெனில் அதனைத் தரிசிக்க இயலா தென்பதும்.]
நம்முடைய எல்லா வியவகாரங்களுக்கும் அடிப்படையாயிருக்கின்றது. பேதமிருந்தால் மட்டும், அபேத ஞானம் நமக்கு உபயோகமாகும். ஆகையாற்றான் அபேத ஞானத்தையும் ஒரு அறிவின் கூறாக எண்ணப்பட்டு, உலக வியாபாரங்களை நவீனம் நவீனமாகக் கண்டு பிடிப்பதில், முக்கியகரமாயுள்ளது. கடந்துபோன நமதநுபவங்களையும் எண்ணங்களையும் நாம் ஞாபகம் பண்ணிக்கொள்ளும் சக்தி நமக்கில்லாத பட்சத்தில் அதியற்புதமான மனோசக்தியை நாம் பெறுதல் அருமையாய் விடும் மேலும் மனசுக்கு ஒரு அபூர்வமான குணமுண்டு. அதைய தன் தோஷமாகக் கூடச்சொல்லலாம். அதுவும் முன்னே சொன்ன சம்பந்த விதியை ஒட்டியது. நம்முடைய அறிவு நம்முடைய எல்லாப் புலன்களை ஒன்றாக ஒரே காலத்தில் அறியமாட்டாது கிடக்கிறது. ஒரே தடவையில் யாதொரு கண்ணினால் காணும் ஒரு பதார்த்தத்தையும், ஸ்பரிசத்தால் அறியும் மற்றொன்றையும், செவியால் தொடும் பிறி தொன்றையும், நாசியால் உணரும் இன்னமொன்றையும் அநுபவித்தல் கூடாமையே. எத்துணையற்பமாக அது காணப்பட்ட போதினுங் கூட னம் ஒன்றி னின்றும் ஒன்றுக்கு பாய்வதற்கு இடையில் கால அவகாசம் ஒன்றுண்டாய் விடுகிறது. அஷ்டாவதான சக்தியும் இதற்குமுரணல்ல வென்க. அவனுக்கு நல்ல ஞா பகசத்தி யிருத்தல் இன்றியமையாத தொன்றாம். அதைக் கொண்டும், எத்துணையதிகமான அவதானங்களை ஒருவன் செய்து முடிக்கின்றானோ அத்துணை திகமாக அவன் காலத்தை நீட்டியே செய்தல் வேண்டும்.
இப்படி மனோதத்துவத்தைக் கூறுபாடு செய்து காண்கிறபோது, யாதோ ருணர்வுக்கும் அதோடு சேர்ந்த பிரஞ்ஞைக்கும், இச்சைக்குப் அதோடு சம்பந்தப்பட்ட பிரஞ்ஞைக்கும் அதுமிதித்தற்கும் அதைத்தழுவி நிற்கும் பிரஞ்ஞைக்கு, பேதம் பாராட்டாமல் இரண்டும் ஒன்றாகவே எண்ணப்படுகின்றன. ஆயின் நம்முடைய தத்வ ஞான விசாரணையில் அவைகளின் வித்யாஸம் பேசப்படுகிற துண்மை. உணர்வு இச்சை அறிவினையும், அவைகளைத் தழுவிய பிரஞ்ஞையினின்றும் வித்யா ஸப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. சுத்தப்பிரஞ்ஞையைத்தான் ஆத்மா அல்லது சத்தென்று நாம் அழையா நின்றோம். மற்றைவை யெல்லாம் உடம்போடும் உலகத்தோடும் சேர்த்துப்படிக்கப்பட்டு அநாத்மா அல்லது அசத் என்று தள்ளப்படுகின்றன. இந்த வித்யாஸத்தைப்பற்றி மேலே போகப்போக நாம் விரிவாகப் பேசுவோம். ஆனாலும், அறிவு அறிவின் கூறுகளினின்றும் உடலும் லகமும் அதனுடைய வியாபாரங்களும் வேறு பிரித்துக் காட்டப்படுகின்றன. இவை யெல்லாம் மொத்தமாக ஐடமென்றேனும், அல்லது அநாத்மா வென்றேனும், அல்லது ஞேய (விஷயம்) (object) பதார்த்தமென்றேனும், அழைக்கப்படல் காண்க. இவைகட்கென்றே சில குணங்களுள்ளன. அவைகள் மனசினிடத்தே காணப்படவே வில்லை. அவையாவை? அகலமும் நீளமும் (இடசம்பந்தமான அமைப்பு) இடங்கொளல், கெட்டியாயிருக்குந் தன்மை, மிருதுவாயிருக்குந்தன்மை, (அசைவிலாமை) பளுவு, வர்ணம், சூடு, ஒளி, மின்சாரசத்தி, உறுப்புகளைச்சேர்ந்த தருமங்கள், ரசாயன சாஸ்திர சம்பந்தமான தருமங்கள் முதலிய. இவைகள் யாவற்றினும் முக்கியமாவது இடங்கொளற் றன்மை யென்பதே. மனம் அங்னமன்று. டாக்கடர் பெயின் கூறுவதாவது.
நமக்கு இந்த கஷ்டம் நேரிடுகிறது. மனோ நிலைகளும் தேகநிலைகளும் முழுவதும் வேறு வேறாக காணப்படுகிறது. அவை யொன்றா கவைத்தெண்ணப் படுவதற்கு மிகவும் பொதுவாகச் சொல்லலாகும், காலவொற்றுமையைத்தவிர எவ்விதமான சமத்வமும் சொல்லுவதற் கிடமில்லை. ஒன்றினிடத்து நாம் புத்தியை வைத்துள்ளபோது மற்றொன்றின் குணங்களின் வேறுபாடுகள் முழுமையுமே நாம் மறந்து விடவேண்டியிருக்கிறது. நாம் ஒரு மூளையையும், நரம்புகளையும் பற்றி விசாரணை மேற் கொண்டபோது, நாம் ஞேயபதார்த்தம் அல்லது ஜடபதார்த்த சம்பந்தமான விஷயத்திலேயே மனமுழுதையும் செலுத்தலாகிறோம். அந்த நிமிஷத்திலே உள்ளபடி அறிவின் தொழிலைச் சிந்திப்பது கூடாமையாயுள்ளது அதிதுரிதமாக, நாம் நினைப்பை மாற்றினாலொழிய. - நம்முடைய மனோ அநுபவத்திற்கும், நம்முணர்ச்சிகளுக்கும் நமதெண்ணங் கட்கும் பரப்பில்லை, இடமில்லை, உருவமில்லை, உருவம் போன்ற   குறியுமில்லை, பிரிவுமில்லை அவயவமுமில்லை. *
[* சிவஞான சித்தியார், 4 சூ - 15 பாட்டில், உயிரை அணுவென்றால் அதற்கு அவயவம் செப்பவேண்டி சடப்பொருளோடு ஒன்றாய்க்கெடும் என்றார்.]
வையெல்லாவற்றையும் மறந்தாலொழிய மானசவியாபார மொன்றையும் நாம் கவனிக்க முடியாது. நாம் நாட்டுப்புறத்தில் இளவேனிற் காலத்தில் உலாவித்திரியும் போது, நம்முடைய மனசானது அங்குள்ள கொடிகள் புட்பங்கள், புல் மேடைகள் முதலிய வைகளின் கண்ணே பிரவர்த்திக்கிறது கண் கூடாமே! இவைகள் முழுமையும் ஞேயபதார்த்தங்களேயாம். திடீரென்றும் பலத்தோடும் மேபிளாசம் என்ற புட்பத்தின் வாசனை நம்முடைய மனதைக் கவர்கின்றது.
"ஒருநிமிஷம் அந்த சுகவாசனையில் நாம் விழுங்கப்பட்டு நிற்கின்றோம். அந்தக்கணம் வரைக்கும் பிரபஞ்ச வாசனை நமக்கில்லாமற் போய் விடுகிறது. பரப்புள்ள பதார்த்தம் எதனையும் நாம் நினையாமல் நிற்கின்றோம். நமக்கு இடம் என்ற பொருளே இல்லாமற் போய்விடுகிறது. அப்படிப்பட்ட நிலைகளானவை வெகு சொற்பநேரம் தான் ஜீவிக்கின்றன. க்ஷணமாத்திரமாக மின்னல் போல மிளிர்வன. அவைகள் அடிக்கடி பிரபஞ்சவிஷய வாசனைக ளோடும் கலந்து மாறி மாறி வருகின்றன. அவைகள் இருக்கும் வரையில், முழுசக்தி யோடும் பிரவர்த்திக்கும் வரையில், நாம் வேறு லோகத்திலிருக்கின்றோம். ஜடவுலகம் கெட்டழிந்து போகின்றது. மறைக்கப்படுகின்றது, அந்த நிமிஷத்துக்கு நினைக்கக் கூடாதபடி போல் விடுகின்றது கண்டீர்.
இவ்வறிவு நிகழ்ச்சிகளை அதிசந்தோஷம் நமக்கு திடீரென்று உண்டாகுங் காலங்களினும், அல்லது சொல்ல முடியாத பெருந்துக்கம் நம்மை சடுதியில் மூடும் போதும், மற்றொன்றையு முணராது நாம் ஒரு தனி விஷயத்தில் புத்தி முழுதையும் செலுத்தி மனோவியாபாரம் செய்து கிடக்குமமையத்தும், முக்கியமாக தியான நிலையிலழுந்தும் போதும், நாம் சரியாக உணரக்கூடும். ஆனால் அவைகள் கொஞ்சம் காலத்துக்கு அல்லாமல் நீண்டகாலம் பரிசுத்தமாக நம்மால் நினைக்கப்படுவதில்லை. அடிக்கடி விஷயவாசனைகள் - பரப்பு இடமுள்ள உலகவிஷயம் – நம்மை யிழுத்துக்கொண்டு போய் விடுகின்றன.
எத்துணைபேதமுள்ள வைகளாக இவைகள் காணப்பட்டாலுங் கூட, ஒரு ஆச்சர்யமான விஷயமுண்டு. உணர்ச்சியுள்ள ஒரு ஆத்மாவினிடம் - மனிதன், அல்லது மிருகத்தினிடம் - அவை ஒன்று சேர்ந்துள்ளதைக் காண்பாம். இவ்விரண்டின் சேர்க்கை, ஒற்றுமை, அடுத்தடுத்து வளருந்தன்மை, - இவைகளைத்தான் டாக்டர் பெயின் துரையவர்கள் பல அத்தியாயங்களில் வெகுசிரமத்தோடும் நமக்குக் காண்பிக்க முயலா நின்றனர். இதை நாம் மறுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. இந்த சேர்க்கையாலும் ஒற்றுமையாலும், மனம் உடம்புக்குக் காரணமென்றாதல் உடம்பு மனசுக்குக் காரணமென்றாதல், நாம் யூகிப்பதற்கு யாதொருகாரணமுமில்லை யென்றே டாக்டர் பெயின் துரையும் ஒப்புக் கொள்ளுகின்றன ரன்றே? ஆனால், அவருடைய கட்சிதான் யாதோ வென்றால், சொல்லுதும். மனோதேகமே. (உடல் உயிர்) மனோதேகத்துக்குக் காரணம் என்கிறார். எவ்வளவு தூரம் சென்றும் நாம் கூறுபாடு. செய்து பார்க்கும் போது துவைதம் ஏற்படு கிறதே தவிரவேறில்லை. ஆனாலும் உடலை விட்டுத் தனியாக நிற் கும் யாதொரு உயிரையும் சித்திக்கத்தக்கதாயில்லை. இதனை விளக்க அவர் பல்வேறு சொற்களை யுபயோகிக்கின்றார். அவையும்?
பிரிக்கக் கூடாத இரட்டைப் பிள்ளைகள்'
'இரண்டு முகமுள்ள ஒருபதார்த்தம்'
'இருகுணமுள்ள ஒரு குணி' முதலியன.
இங்ஙனமாகவும் டாக்டர் பெயின் துரையவர்கள் ஏன் தாம் ஜடவாதிகளோடு சேர்ந்துக்கொள்ள வேண்டுமென்பது விளங்கவில்லை. அவரை இவையிரண்டனையும் டம் ஒன்றென்றே கூறிவிடவில்லையே. டம் மனசு அல்லது மனமும் - டமும் (சத்து அசத்து) மட்டுமாகத்தானே அவர் அவைகளை யழையாநின்றனர். ஒருவேளை அவயவம் பெற்றயாதொரு தேகத்துக் கந்நியதா மனசை யவர் நிரூபணம் செய்ய முடியாமையால், அவர் அவ்வாறு கொண்டனர் போலும். இந்த முடிவும் சித்தாந்தியை யசைத்திலது கண்டீர், அவன் ''முத்தியிலுமும் முதலுமுண்டு' என்று கொண்டமையால் சித்தாந்தியும் டாக்டர் பெயினைப்போலவே உடம்புக்கந்நியாதா உயிர் ஒன்றிருப்பதைநம்புவதேயில்லை. இவ்வுடம்பு 25 கீழ்த்தத்வங்களா லானதெனக் கொண்டான். சித்தாந்த தீபிகையின் முதல் தொகுதி 10வது சஞ்சி கையில் கண்டிருக்கும் தத்வமாத்தைப்படித்துப் பார்த்தால், சர்வோத்கிருஷ்டமான பெருந்தேவதைகட்குக் கூட அசுத்தம் அல்லது சுத்தமாயையினாலான வொரு தேகம் உண்டென்பது பிரகாசமாகும். மேலும் நாம் ஒன் முன்னமேயே குறிப்பிட்டிருக்கின்றோமல்லவா? டத்தை செயலற்றதோர் பதார்த்தமென்று சாதாரண சனங்கள் நினைக்கும் அபிப்பிராயம் தவறென்பதே. ஜடபதார்த்தத்தின் அதிசூக்கும் நிலையில் அபார சக்திகள் இருப்பதால் அவைகளையே கடவுளென்று பலர் மயங்கியும் போய் விடுகிறார்கள். நிற்க, இப்போது நாம் கவனிக்கத்தக்கது உடல் உயிருக்கு உள்ள ஒற்றுமையே யாம். அச்சம் பந்தத்தை யிங்கே பேசும் போது முதற்கண் நமக்குண்டாகும் எண்ணம் எல்லாம் இடத்தைப் பொறுத்த சம்பர்தமாகவே முடியும்.
டாக்டர் பெய்ன் துரை, அப்படிப்பட்ட இடசம்பந்தம் நினைக்கக்கூடிய தல்லவென்றும் அசாத்ய மானதென்றும் பன்முறையும் வற்புறுத்திக் கூறாநின்றனர். பாப்புள்ள, நீளமகலமுள்ள அசித்துப்பதார்த்தத்துக்கும் அங்ஙனமில்லாத சித்பதார்த்தத்துக்கும் இடத்தைப் பொறுத்த சம்பந்தம் இருத்தலமையாது. ஆகையினாலே, 'அகம்'' புறம்'' வியாபகம்'' வியாப்தி' என்ற பலவிதக் கூற்றுக்களெல்லாம் பிசகானவாயும் கெடுதியை விளைவிக்கக் கூடியனவாயுமுள்ளன. இந்த சம்பந்தம், காரணகாரிய சம்பந்தமல்ல. அப்படிப்பட்ட பொருத்தத்தை ஒன்றையொன்று இயக்கும் சம்பந்தமென்றும், அல்லது ஒன்று மற்றதை துணைக்காரணமாகக் கொண்டதாகவும் கூடாது. ஒரேவழியுண்டாகும் காரணசம்பந்தம் என்றதும், தெய்வாதீனமா யேற்படுத்தப்பட்ட பொருத்தமும், இப்போது பழங்கதைகளாகத் தள்ளுபடியாய் விட்டன. *
[* இப்பொருத்தங்களெல்லாம், ஐரோப்பிய தத்வஞானிகளால் கூறப்பட்டது.]
இவ் இயற்கைப் பொருத்தம் அபூர்வமானதென்று நாம் கருதவேண்டி யிருக்கிறது. இதைப்போன்ற வேறொரு தனிப்பொருத்தம் பிரகிருதி சம்பவங்களில் வேறெங்கும் கிடையவே கிடையாது. அப்படியிருந்தால் உதாரணத்தால் நாம் இவையோடு ஒத்திட்டுப் பார்க்கலாம். அல்லாமலும் அத்தகைய பொருத்தத்தை வெளியிடற்குத் தகுதியான சொல்லுங் கிடைப்பது அரிது. ஞேயபதார்த்த ஞானத்தினின்றும் ஞாதுரு அறிவினுக்கு மாறிச்செல்லும் மானசகர்மத்தைத் தெரிவிக்க, ‘நிலைமையின் வேறுபாடு' என்ற சப்தபிரயோகத்தான் திருப்திகரமாயுள்ளது. இதனை விளக்க சரியான சொல்லுமில்லை, உதாரணமுமில்லை. அச்சம்பந்தம் இருந்தும், ஒருவகையில் அது ஒரு குஹ்ய விஷயமாயினும், முடிவாக ஏற்பட்ட விஷயத்திற்கு, மேலும் காரணம் தேடுவது எந்த வகையாலும் தர்க்கசாஸ்திரத்திற்கு ஒவ்வாது. மேலும், நாம் செய்யக்கூடியன வெல்லாம் என்னவென்று பார்ப்போம். பல்வேறுபட்ட இந்த சம்பந்தத்தின் தோற்றங்களை முடிந்தகாரணங்களைத் தேர்ந்தவுடன் நாம் செய்யக் கூடியனவெல்லாம் செய்தாய்விட்டன வென்க. இரண்டிற்கு மேற்பட்ட யாதொரு பெருமுடிவுக்கு நாம் போகக்கூடாது நின்ற பட்சத்தில் நாம் அங்கேயேயிருந்து திருப்தியடைவதே உத்தமம். *  
[* இதுவரையும் பேய்ன் பண்டிதரின் கூற்றாகும்.]
இது நாம் தங்குவதற்கு உத்தமமான நிலையென்று நாம் நிச்சயமாக வறிகிறோம். இந்த வியாசத்தை நாம் எழுதப் புகுந்ததின் நோக்கம் இந்த அபிப்பிராயத்தி னின்றும் மாறுபடுதற் கல்ல. ஒன்றுமாத்திரம் கவனிக்க. தமிழில் இதற்கோ ருபமானம் இருக்கிறதென்று நாம் எண்ணலானோம். அது இந்த விஷயத்துக்கு முழுவதும் பொருந்துமென்க. மேலும் இந்த சம்பந்தத்தையும் அது அதிகமாகப் பிரகாசப்படுத்திவிடு மென்க. இவ்வுதாரணம், பௌதீக ஞானிக்கும் மேம்பட்டு உண்மையை விளக்காநிற்கும். மேலும் நாம் தினந்தோறும் ஒருவித சொல்லை உபயோகப்படுத்தி வருகிறோம். அச்சொல்லில் இந்த முரண்பாடும் நொடியும் அமைந்துகிடக்கவும் காணலாம். இதைக் கூறுமுன் பெய்ன் பண்டிதர் தமது மானசசாஸ்திரத்தில் (Mental science) காட்டிய சிலவுண்மைகளைக் காட்டுவோம். ஞேயவுணர்வெல்லாம் ஞா துருவுண்டென்பதையே அநுமானிக்கிறது என்பதே! “எல்லா ஞேயபதார்த்த - சம்பந்தமான அறிவு நிலையங்களும், ஒருவகையில் மானசசம்பந்த நிலை களுமாகுமென்க.” மனம் இருந்தாலொழிய, - பிரத்ஞையில்லாமல் இருக்கலாம் - ஒருபோதும் ஞேய பதார்த்தங்களின் அறிவு (நாம்) அடையவே மாட்டோம். உள்ளபடியே வெறும் ஞேய அறிவின் நிலைமை நமக்குக் கிட்டவே கிட்டாது. மனசு அதைத் தாங்கி நின்றாலொழிய விஷயஞானம் நமக்கெட்டாது. அந்த சமயத்துக்குமட்டும் மனசு இருக்கிறதென்ற அறிவை நாம் அடைவோமில்லை. அச்சமயம் அவ்வறிவு கெட்டழிந்து நிற்கிறது. அல்லது இப்படிச் சொல்லிப் பார்ப்போமா? ஒன்றையொன்று அவை ஒத்தில்லாமற் போய்விட்டாலும், மனசானது முழுமையும் ஜட பதார்த்தத்தோடும் ஒன்றுபட்டுப் போய்விட்டது என்று சொல்லுவோம். ஆனால் மனசானது சுத்த மனோநிலையையும் எட்டியடைதல் அமையும், அப்போது ஞேயபதார்த்தங்கள் உள்ளனவென்று அந்த உயர்ந்தநிலையில் அது உணராது. ஆனால் விஷயஞானத்தோடு சம்பந்தப்பட்டதோடு ஞாதுரு ஒன்றுண்டென் 'அநுமானித்தற்கு இடனுண்டு. அப்படிப்பட்ட சுத்த மனோநிலையத்தில் ஞேயவிஷய பதார்த்தம் எங்கேயிருக்கிறது? அதுவுங்கூட இல்லாதது போலாய்விட்டது (சூந்யம்). ஜடம்தான் ஆதிமுதல்லா தத்வம் என்று நினைத்தாலோ (அதற்கு பிரதிபந்தமாக) இந்தவுண்மை யொன்றிருக்கிறது காண்க. டம் உயிர் உள்ளதாயும் உயிரற்றதாயும் காணப்படுகிறது, இந்த இரண்டு டபதார்த்த அவஸ்தைகளுக்குள் எத்துணை வித்யாஸம் ஏற்பட்டுள்ளது. அதனுடைய உயிருள்ள வடிவத்தின் பெருமிதமிருக்கிறதே! அதென்ன? மனசினுடைய சாந்நித்பத்தின் விசேஷத்தினா லுண்டாயதா? அல்லது டத்திலேயே இயற்கையாயுள்ள ஒருகுணமா? உயிரற்ற டபதார்த்தமென்று சாமான்ய சனங்கள் கூறும் யாதொரு ஐடமும், அபாரசக்திகள் பொருந்தி யிருக்கின்றவென்று நாம் முன்னமேயே கூறினோம். அப்படியிருந்தும் நடத்தின் உயிரற்ற உருவங்களின் குணங்கட்கும் உருயிள்ள உருவங்களினுடைய குணங்கட்கும் யாதானும் ஒரு ஒற்றுமையிருக்கிறதா? இது எப்படியிருந்தாலும் இருக்கட்டும் நம்முடைய உவமானத்தை நாம் சொல்ல ஆரம்பிப்போம். அது தான் உயிரெழுத்து மெய்யெழுத்து உவமானமென்பது. கீதா சுலோகத்தை நாம் உதகரித்துக் காண்பித்தோமல்லவா? அதற்கு நாம் கொடுக்கப் பிரயத்தினப்பட்ட அர்த்தபுஷ்டி சங்கரபாஷ்யத்திலும் தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை. ஒருவேளை. சங்கரர் தமது முன்னமேயே தீர்மானம் செய்யப்பட்ட அபிப்பிராயத்துக்கு முரண்படுமபிப்பிராயத்தைச் சொல்ல வெளிவர மாட்டார் போலும் ஆகையினாலே அதில் உண்மையிருந்தால் அது அதன் கண்ணேயே மறைந்திருந்தது கண்டீர். அதனுடைய திறவுகோலும் சித்தாந்த நூலாசிரியர்களிடமே யிருந்து விட்டது. அதிபழமையான உவமானம் திருக்குறளில் ஒன்று உள்ளது அதன் முதற்பாவிலேயே அதுகாணலாகும்.
       ''அகரமுதல் வெழுத் தெல்லாமாதி
        பகவன்முதற் றேயுலகு.''

'' என்ற அக்ஷரம் எல்லா எழுத்துக்களுக்கும் முதலாயுள்ளது போலவே, பழம்பொருளாகிய பகவான் இந்த பிரபஞ்சத்தின்முதலாக விருக்கின்றார்.
'' என்ற எழுத்து முதலெழுத்தாகாது சில பாஷைகளில் இருந்தாலுமிருக்கலாம். இந்த உதாரணத்தால், கடவுளினுடைய இடத்தைப் பொறுத்த முதன்மையை விளக்க வேண்டியதாயின் இன்னும் எத்தனையோ உவமானங்களை யதற்காக நாம் காணலாம் அதனாலே பரிமேலழகர் அந்த வரிசைக்கிரமம் இடத்தைப் பொறுத்த தொன்றன்று, ஆனால் நாதமாத்திரையாகி இயல்பாற் பிறந்த தென்றார். இவ்வொலி முதல்முதல் நம். வாய் அங்காத்ததினால் உண்டாகக்கூடியது. அவ்வொலியும், மற்ற உயிர்களுக்கும் மெய்களுக்கும் ஆதியாயுள்ளது கண்டீர். மற்றைய உயிரெழுத்துக ளெல்லாம் அகரத்தின் சிதைவினால் உண்டாகிறதேயொழிய மற்றில்லையென்க. மேல் உயிர் மெய்யின் இலக்கணந்தான் என்னை? தானே ஒலிக்கக்கூடிய வெழுத்து உயிரெழுததென்  பேசப்படுகிறது. அதற்கு வேறு ஒலியினுடைய வுதவி வேண்டியதேயில்லை. மெய்யெழுத்தோ உயிரெழுத்தின் உதவியிருந்தா லன்றித்தானே ஒலிக்கக் கூடாதென்று கூறுப. இந்த ஒலிகளின் சுபாவத்தை இன்னும் கொஞ்சம் கூர்ந்து நாம் பரியாலோசனை செய்யப் புகுவாம். நாமொவ்வொருநாளும் இந்த ஒலிகளை சப்திக்கலாகின்றோம். அப்படியிருந்தும் அவைகள் சம்பந்தமாகவுள்ள அற்புதத்தைத் தெரிந்துக் கொள்ளாமல் போய்விடுகின்றோம்.
அது ஏன் அப்படி? அடிக்கடி அவைகளை நாம் தரிசிக்கும் பழக்கத்தினாலே. " அ'' என்ற அக்ஷரத்தை யுச்சரிக்க நாம் பிரயாசைப்படுகின்றோம். அது சர்வசாதாரணமாக வந்துவிடுகின்றது. வாயைத்திறப்பதினாலேயே அது வெளியாகிறது. யாதொருவிகாரமும் உதவியும் வேண்டியதில்லையே. ஆனால், நாம் (க்) என்ற சப்தத்தை யுச்சரிக்க முயற்சிப்போம். அதை இங்கிலீஷில் கே என்றும் தமிழில் க என்றும் க் என்றும் உச்சரிக்கிறோம் அதிலே ஒரு உயிரெழுத்தின் சப்தம் அடங்கியிருக்கிறது பாருங்கள். ஏ, அல்லது, , அல்லது, இ. இந்த உயிர்ச்சப்தத்தை நாம் பிரித்து விடுவோம். அப்புறம் மெய்யெழுத்தை யுச்சரிக்க முயல்லோம். முயற்சி வீண் முயற்சியாகும். மெய் ஒலியே பிறக்காமற் போய்விடும். ஆகையினாலே மெய்யெழுத்தில் எப்பேர்தும் ஒரு உயிரெழுத்தின் ஒலி இருந்தேதீரும். ஆனால் நாம் பிரக்ஞையோடும் அது அங்ஙனமிருப்பதாக அறிவது மட்டுமில்லை. ஆனால் தமிழ்ப்பாஷை மேம்பாடுடைய தத்வஞானார்த்தமுடையதா யுள்ளபடியினாலே, நாம் எப்போதும் அதனுடைய உயிர்ப்பைக் கவனிப்பதற்கா சுத்த மெய்யெழுத்தை யெழுதும்போது அதன் தலைப்பில் நாம் ஒரு புள்ளியைப் போடுகின்றோம். மற்றைய வளைவானவும், நோரனவும், செங்குத்தானவுமான கோடுகளைப்பற்றி பிறிதொரு சமயம் நாம் விவரித்துக் கூறுவோம். ஆகையினாலே, (க்) என்ற மெய்யெழுத்தை நாம் எழுத ஆரம்பிக்கும் போது, நெடுங்கணக்கையுண்டு பண்ணினவர்கள் எவ்வண்ணம் மெய்யெழுத்தின் கண் உயிர் அடங்கியும் அதற்கு ஆதாரமாகியும் உயிர்ப்பைக்கொடுத்தும் உள்ளது என்று வுண்மையைக் காட்டுவான் அந்த புள்ளியையுபயோகித்தார்களெனத் தெரியவருகிறோம்.'' என் எழுதும் போது, அப்புள்ளி, அநாவசியம், ஏனெனில், அவ்வுயிரொலி வெளிப்படையாயிருப்பதால். ஆகவே சுத்த மெய்யொலியில், உயிரொலி வெளியாகாது, மெய்யோடு அதுவது வாய்க்கிடத்தலையும் காண்க.
'இப்புள்ளியும், உயிரை உணர்த்தி நின்றது. எல்லா உயிரும், இப்புள்ளி அல்லது வட்டத்தை முதலாகக் கொண்டே ஆரம்பிக்கின்றது. நாம் மிகவும் பாண்டித்யத்துடன் மனசுக்கும் தேகத்துக்குமுள்ள சம்பந்தத்தைக் குறித்து விசாரணை செய்கின்றோம். ஆனால் எப்போதாவது உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கு (முள்ள அந்யோந்ய சம்பந்தத்தைக் குறித்து விசாரணை செய்யப் புகுந்தோமா? ஒன்று மற்றொன்றின் உதவியின்றி உயிர்வாழாத இந்தவிதமான அபூர்வ சம்பந்தமானது பிரகிருதி சம்பவங்களில் வேறெங்காவது காணக்கிடைக்குமா? மேலே காட்டிய அநந்ய சம்பந்தத்தைத் தவிர, வெறும் மெய்யெழுத்தாவது, ஒருபோதும் உயிரெழுத்தினின்றும் பிறந்ததில்லையென்றும், உயிரெழுத்தும் மெய்யினிடம் பிறந்ததில்லையென்றும், நாம் அறியலானோமல்லவா?
இவைகட்கு பிரபஞ்சத்தில் வேறெந்த இரண்டு வஸ்துக்களுக்குளுள்ள வித்யாஸத்தைவிட, அதிகமான வித்யாஸம் காணக்கிடக்கிறது. உற்பத்தி ஸ்தானம் வேறு. '' என்ற அக்ஷரம் வாயைத் திறப்பதனாலேயே ஒலிக்கப்படும். நாவானது அடித்தொண்டையோடு சேரக்கொண்டு வரப்பட்டாலொழிய '' என்ற ஒலி பிறக்கமாட்டாது. அதையே செய்து பார்த்தால் உயிர் பிறவாது. ஆனபடியினாலே உயிர் தான் மெய்க்கு பிறப்பிடமென்றும், அல்லது மெய்தான் உயிர்க்கு பிறப்பிடமென்றும் சொல்ல முடியாது. அல்லது மெய்யெழுத்தையேனும், மெய்க்கும் உயிருக்கும் உண்டான சம்பந்தத்தையேனும் பொய்யென்று சொல்லவுமுடியாது. மாயையென்றும் மயக்கமென்பூம் அவைதமைப் பேசவும் போகாது.
ஆகையினாலே பரிணாமவாதமாவது விவர்த்தமாவது இந்த சந்தர்ப்பத்திலே பிரயோசனப்படாதென்க. ஆகவே, நாம் சொல்வதெல்லாங்கூடி யிதுவேயாம். அவைகள் பிரிக்கக்கூடாத விதமாக ஒன்றோடொன்று சம்பந்தமடைந்துள்ளன. மேலும் உயியெழுத்துகள் மாத்திரம் கொண்டேனும் அல்லது மெய்யெழுத்துக்கள் மாத்திரத்தினால் மட்டும் யாதொருபாஷையும் ஏற்படமாட்டாது. ஒவ்வொரு மெய்யெழுத்தும் அதேசமயத்தில் உயிர் மெய்யெழுத்தாகுமென்றும் நாம் அறியவேண்டும். மெய்யெழுத்தில் உயிர் பிரகாசமாயேனும் அப்பிரகாசமாயேனும் வாழாநின்ற தென்க. உயிரெழுத்துக்கள் தனித்து நிற்பது சாத்தியமாகும். மெய்யெழுத்துக்கள் மட்டும் தனித்து நிற்றல் முடியாது. மெய்யெழுத்துக்கள் தாமே ஜீவிப்பது கானற்சலத்தின் இருப்பையே மானுமென்க. நல்லது, இதையெல்லாம் உயிருடம்பென்ற வியவஸ்தைக்குப் பொருத்திப் பார்ப்போம். உயிர் தான் உயிரெழுத்தாயிருக்கிறது, உடம்பு (டம்) தான் மெய்யெழுத்தாக விருக்கிறது. உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் எத்துணை வித்யாஸம் காணக்கிடக்கிறதோ அத்துணை வித்யாஸம் உயிருக்குமுடம்புக்கும் உண்டென்க. ஒன்றினின்றும் ஒன்று - பரிணாமத்தினாலாவது அல்லது விவர்த்தத்தினாலாவது பெறப்படுதல் குதிரைக் கொம்பேயென்க. அப்படியிருந்தும் இரண்டும் பிரிக்கக்கூடாத விதமாக சேர்ந்துள்ளன. மேலும், உயிர் தனக்கே ஒரு நிலைமையை சுவதந்தரமாக உடைத்தாயிருந்தும், சிற்சில வேளை தனது சொந்தமான வடிவமாகவே நின்றுவிடும் ஸ்வதந்திரத்தையது அடைந்துள்ளது, உடம்போ தனித்து உயிரின் சம்பந்தத்தைப் பெறாமலே ஜீவிக்கும் யோக்கியதை யுடையதன்றென்க. உடம்பு என்ற பொழுதே மனமும் தொக்கிநின்று, அதற்கு ஆதாரமாயும் உள்ளாயும் ஜீவிதமாயுமிருக்கின்றது. நாம் சுத்த அறிவு மயமாயிருக்கும்போது தேகம் இல்லையென்னும்படி அசத்தாயும் சூன்யமாயுமிருக்கிறது. உடம்பு சுத்த உடம்பாயிருக்கிறபோது, அறிவு கூட அங்கேயிருக்கிறது. ஆனால் தோற்றமாகிறது மட்டுமில்லை. அது உடம்புடன் ஒன்றி நிற்கிறது. மனசு அங்கேயிருக்கிற துண்மை. ஆனால் அது தன்னைத்தானே மறைத்துக்கொண்டு விடுகிறது. அதனுடைய சொரூபத்தை யது காண்பிக்கிறதில்லை. அது இல்லாதது போலவும் காணப்படுகிறது. எப்போதோ சில அபூர்வமான காலங்களில் மட்டும் ஒழிய, நம்முடைய அறிவு கேவலம் விஷய உலகவாழ்க்கையாக மட்டுமே ஒழிந்து போய்விடுகிறது. நம்முடைய உண்மை தத்வமாகிய அறிவு நிலைமையை சாதாரணமாக நாம் அறிவதே கிடையாது. இந்த உவமான உவமேயமாக அமைந்த இரண்டு திருஷ்டாந்தரங்களும் தமிழ்ப்பாஷையிலே வெகு அழகாக பரிமளிக்கப்பட்டுள்ளன கண்டீர். இவைகளிரண்டு மட்டுந் தான் உவமான உவமேயங்களாகக் கொள்ளக் கிடக்கின்றன. ஒரே விதமான வார்த்தைகள் அல்லது சப்தங்களே உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் உடலுக்கும் உயிருக்கும் அதிவிநோதமாக உபயோகிக்கப் பட்டுள்ளன. 'உயிர்' 'மெய்' என்ற வார்த்தைகளை நாம் கேட்கும்போது என்ன அற்புத வெளிச்சம் உண்டாகிறது பாருங்கள். 'உயிர்' என்ற வார்த்தை உயிரெழுத்துக்கும் உபயோகமாகிறது. மனஸ், அறிவு, ஆன்மாவுக்கும் உபயோகமாகிறது. 'மெய்' யென்ற மொழியானது உடலுக்கும் மெய்யெழுத்துக்கும் கூட உபயோகமாகின்றது. டாக்டர் பேய்ன் என்பவர் இந்த ஒற்றுமையறிவானது ஒன்றைப் புதுதாகக் கண்டுபிடிக்கும் நவீன அறிவைக் கொடுக்கும் என்பார். பௌதிக கலாசோதனையில் அருமையாகக் கண்டுபிடிப்பதும், இவ்விதமாக சிற்சிலகாலத்திலே விளங்கிய ஒற்றுமை ஞானத்தாலே உண்டாகியதென்க. ஆதியில், நம் தமிழர்கள் உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் 'உயிர்'' மெய்' யென்றழைத்தாரானால் அவர்கள் அப்பொழுதே பிறவிஞானிகள் என்று சொல்லத் தடையென்னை? மேலும் அவர்கள் உள்ளபடியே உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும், உயிருக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தத்தைக் கண்டுபிடித்தவர்களல்லவா? இந்த உதாரணத்தை முதல் முதல் ஸ்ரீமெய்கண்டதேவரும்பின் அவர் சந்தான பரம்பரையிலும் வெகு அருமையாக விளக்கியிருக்கின்றார்கள்.
(சிவஞானபோதம் 11 & 6 - ம் குறிப்புகள் பக்கம், 12, 19, 20 - ம் பார்க்க.) (திருவருட்பயன் பக்கம் 7 - ம் 8 - ம் பார்க்க)
ஸ்ரீமெய்கண்டதேவர் இந்த சம்பந்தத்தை விளக்குவான் அதேபாசுரத்தில் ஒரு பெயரொன்று கொடுத்திருக்கின்றார். இப்பெயரும் அத்வைதெமென்பது. இப்பெயர் அனேகருக்கு ஒரு அவிழ்க்கமுடியாத சிக்காய் முடிந்தது கண்டீர். அதற்கு அனேக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நமது தமிழ் தத்வஞானியார் இந்தவிதமாக அதை விளக்கியிருக்கின்றார்.
    "ஒன்றாகாமல், இரண்டாகாமல்,
     ஒன்றுமிரண்டு மின்றாகாமல்.''

என்று அவர் அதை விரிப்பாராயினார். அது ஒன்றென்றும் சொல்லப்படாது. அதை யிரண்டென்றும் கூறப்படாது. ஒன்று மிரண்டுமாகாமல் ஒழிந்ததோர் சம்பந்தமு மல்ல. டாக்டர் பேய்ன் துரை அதை முரண் என்றும் கூறியுள்ளாரே. அந்த விஷயத்தை சுவாமிகளது வாக்கியம் வெகு அருமையாக வெளிப்படுத்தாநின்றது கண்டீர். சித்தாந்திகளல்லாதவர் இவ்வுண்மையை அறிவது சுலபமல்ல. மேலும் தங்களபி மதத்திலேயே அவர்கள் ஊன்றி நிற்பதாலும், இவ்விதம் அறியாமற் போவதற்குங் காரணமாகின்றது. ஆனால், நாம் இன்னும் சிறப்பான நியாயங்களைவிட உயிர் மெய்யெழுத்தும் என்ற உவமானத்தையே அடிக்கடி எடுத்துக்காட்டி விஷயத்தை மிகவும் சுலபமாக விளக்கியிருக்கின்றோம்.
ஆகையினால் நாம் எந்த வார்த்தையை யுபயோகித்தாலுங்கூட, இந்த சம்பந்தத்தின் சுபாவம் பிரகாசமாயுள்ளது. வேதமந்திரங்கள் (முன்னெடுத்து ஆண்டவை) 'ஒன்றாந்தன்மையை' சொல்லினும் இப்போது வழக்கத்தில் வந்திருக்கும் மதங்கள் கூறப்படுவதற்கும் அதிகமாக வுயர்ந்த அர்த்தத்தில் அவைகள் அங்ஙனம் கூறா நின்றனவென்றே நாம் கொள்ளக் கடமைப்புட்டிருக்கின்றோம். இந்த அமைப்பில் அதிக வுயர்ந்ததும் அதிகவுண்மையானதுமான ஏகீபாவம் ஒன்று நம்மால் அடையப் பட்டது கண்டீர். “அ'' காரத்தைத் தவிர்த்து இதரமான யாதொரு அக்கரங்களும் கிடையவே கிடையாவென்று ஸ்ரீ மெய்கண்ட நாதன் கூறிய கூற்றை யெவ்வளவு சத்தியமான தொன்றென்று நாம் அறியக்கடமைப் பட்டிருக்கின்றோம். ஆகையினாலே, நாம், கடவுளையன்றி வேறு யாதொரு பதார்த்தமும் கிடையாதென்று கூறத்தடை யென்னை? ஒன்றுதான் உள்ளது. தனக்கு இரண்டாவதாகும் வேறொன்றில்லாதது" இதுவும் அதியுயர்ந்த ஞானம், சுவானுபூதி, சிவானுபூதி, என்ற அநுபவத்தின் பயனாகவே வெளிப்போந்தது கண்டீர். மேலும் இதுவே திருவாசகத்தின் ஹிருதய சுலோகத்தில் அருமையாகப் பெறப் பட்டுள்ளது!
"இன்றெனக் கருளி இருள் கடிந்துள்ளத்
                      தெழுகின்ற ஞாயிறே போன்று
      நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தே
                       நீயலாற் பிறிது மற்றின்மை
      சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
                       திருப்பெருந்துறை யுறை சிவனே
      ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை
                   யாருன்னை யறியகிற் பாரே.”

கடவுளை மகனொருவன் ஆராமையால் அணுகிச் செல்லச்செல்ல அவன் அணுவணுவாகக் கரைந்துபோதல் சம்பவமே! ஆகையினாலே, ஒன்றுபடும் அவசரத்தில், அம்மகன் றன்னதென்று கொள்ளத்தக்க பதார்த்தம் யாதொன்றுமில்லாமற் போய்விடுகின்றதன்றே? மிகுந்தது தான் என்னை? ஒரு பரம்பொருள் ஒரு தனி முதல் ஒரு முழு உண்மையாகிய ஸ்ரீபரமேஸ்வரனது திவ்ய சாந்நித்யமே - மிகுந்ததொன்றாம். அம்மகனுக்குத் தன்னுணர்ச்சியும், தனாது வர்க்கத்தைச் சேர்ந்தாரின் இருப்பைப்பற்றிய வுணர்ச்சியும் அந்தசமயம் உண்டுகொல்? கிடையவே கிடையாது. ஈஸ்வர சாந்நித்யம் சிவாநந்த பிராப்த மாத்திரத்தானே யாதொரு பக்தனிடம் உண்டான மெய்ப்பாடு. அப்பொழுது நான் ஒன்றானேன், நான் அநுபவியா நின்றேன் என்ற நினைவும் உண்டாகாது. அவ்வித நினைவு முனைத்திடின் முன் சொன்ன ஒன்றுதலும் ஆநந்தமும் உடனே மறைந்து போகும். அதனால் அணுவணுவாக அவன் கைவிடும் பொருள் தான் யாதோவென்று விசாரித்தால் என்ன ஏற்படும்? அவனுடைய பல்வேறுபட்ட கணங்களே.

''வான்கெட்டு மாருதமாயந்து அழல் நீர்மண்கெடினும்
      தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு உள்ளமும் போய்
      நான் கெட்டவாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.''

அவனது உடல் பிரக்ஞையும், அவனது உயிர் பிரக்ஞையும் அவனது மனோபிரஞ்ஞையும் இவைகள் தாமே அவனுடைய யான் என தென்ற புருஷத்தன்மையை (Individuality) விளங்கச்செய்கின்றன. இந்த நான் என்ற அஹங்காரத்தைத்தான் நாம் ஒழிக்கவேண்டிய வர்களாயிருக்கின்றோம். அதனால் இந்த நர்னாயிருந்த தன்மை யல்லது தனி சொரூபத் தன்மை யழிந்தபோதே - "நான் கெட்டவா'' அவன் உடனே சிவம் அல்லது கடவுள் ஆய்விடுகின்றான். "நான் கெட்டு சிவமானவா. ஒழிந்து போவதெல்லாங்கூடி ஆத்மாவின் தனிச்சொரூப லக்ஷணம் மாத்திரமே. அந்த அஹங்காரந்தானே துவைத ஞானத்துக்கு இடன் தந்தது கண்டீர்! ஆனால் மோக்ஷத்திலும் மிகுந்திருப்பது தான் யாதென்று. விசாரித்தாலோ? ஒன்று பெறப்படும் ஆத்மாவின் தற்சொரூபம்  (Personality) மட்டும் மிகுந்துள்ளது, அதற்கோ அந்த மோக்ஷ நிலையில் சுவாநுபவம் அல்லது சிவானுபவம் உண்டாய் விடுகிறது. அதனால் கடவுளோடு அது இரண்டற்று ஒன்றுபட்டு நிற்கிறது. கண்டீர்! 
     
ஆத்மா கடவுளோடு சேர்ந்துழி, கடவுளோடு ஒன்றாய்ப் பதார்த்தம் போல் (விஷயம்) (object) மாறிப்போய் விடுகிறது. கலா ஞானத்தின், ஏற்படும் அருமையான் ஏகத்வம் இதுவேயாகும். அதனாற்றனே ஸ்ரீமெய்கண்ட நாதன் பின் வருமாறு நொடிபடக் கூறலுற்றனர்.

நசித்தொன்றினுள்ள நசித்தலாலொன்ற
நசித்திலதேலொன்சாவதில்லை – நசித்துமல
மப்பணைந்தவுப்பி னுளமணைந்து சேடமாங்
கப்பின்றா மீசன் கழல்.

கடவுளோடு ஒன்றாகச் சேரும்போது ஆன்மா அழிந்து போகிறதா யிருந்தால் கடவுளோடு சேருவதற்கு யாதொரு தனிப்பதார்த்தமும் இல்லாமலே போய் விடுமல்லவா? வியவகாரம் செய்து பார்த்தோமே! அப்படி அது அழியாமலே இருக்குமானால் அது கடவுளோடு ஒன்றாய்ப் போய்விட முடியவே முடியாது. ஜலத்தில் கரைத்த உப்பானது கரைந்து நின்றது போல ஆன்மா தனது மலத்தை யொழித்து விட்டவுடனே அவனுடைய திருவடியோடு சேர்ந்து போய்விடுகிறது. அவனுக்கு அடிமையாக ஆய்விடுகிறது.
உப்புகட்டியாய்ச் சிறுகல்வடிவாக விருந்தது தான் அதனுடைய தனிவடிவ (Individuality) மென்று சொல்லலாம். - அப்போது அது வேறு ஜலம் வேறு என்று சொல்வதற்கு அது அவகாசம் கொடாநின்றது. ஆனால் அதை ஜலத்தில் கரைத்துவிட்டவுடனே அதனுடைய தனிவடிவாந் தன்மை யொன்றுமட்டும் அற்றுவிட்டதென்க. அதன் முதலற்றுப்போகக் காணோம். 
     
தத்வசாஸ்திர புத்தக மொன்றிலிருந்தும் அடியில் யாம் இங்கே உதகரித்து மகிழும் யாதொரு வாக்கியந்தானே எமது வாக்கியம் எவ்வளவு பொருத்தமா யிருக்கிறதென்ற வுண்மையை யினிது பிரகாசப்படுத்தும். ''யாதொரு யாறு கடலை யடைந்தவுடனே தனது யாறு என்ற தனிவடிவத்தை (Individuality) யொழித்து விடுகிற துண்மையே. சாகரத்தின் அமிழ்ந்திப் (Merged) போகிறது. அந்த சமுத்திர சம்பந்த முண்டானவுடனே அந்த யாறு தனது நீரோட்டத்தையும் அங்கே: பிழந்துவிடவும் உயர்ந்த பூமி மட்டங்களினின்றும் அது கொண்டுவந்து சேர்த்த மண், மாசு, தூசு, சண்ணமுதலிய பதார்த்த வகைகளை யங்கே அந்த சமுத்திரம் சேர்க்கை கிடைத்த அவசரத்திலே தானே வைத்திருக்கும் சக்தியை இழந்துவிட்டதல்லவா? மேலேபேசும் பிரகாரம், அதை, மறுபடியும் திரும்ப வாசித்துப்பார்த்தோமாயின் அதனுடைய உபயோகம் ஸ்பஷ்டமாக நமக்கு விளங்கும். ஆன்மாவானது தனது அகங்காரத்தை,, தனியே கிடந்த வருவத்தை, நான் என்ற அறிவை, ஆணவத்தை யிழந்து விட்டபோது, அது பகவானுடைய திருமேனியில் (சமுத்திராகாசம்). அமிழ்ந்து போகவும், அதனுடைய கர்மமும் (நீரோட்டம்.) ஒழிந்து உடனே அந்த உயிரை அநாதியாக பற்றிவந்து துன்புறுத்திய மலம் (மண்முதலியன) தன்னிடம் கலந்து நில்லாது கழலுகின்றது. இதே உதாரணம் தான் ஸ்ரீ மெய்கண்டநாதனும் உபயோகப் படுத்துவது,

''சிறைசெய்யநின்ற செழும்புனலினுள்ளஞ்
சிறைசெய்புலனுணர்விற் றீர்ந்து - சிறைவிட்
      டலை கடலிற்சென்றடங்கு மாறு போன்மீளா
      துலைவிலான்பாதத்தை யுற்று.               (சிவஞானபோதம். VIII. 4. 1.)
     
அன்பு காரணமாக செய்யப்பட்ட பெரிய யஜ்ஞம் இஃதே அகங்காரம் ஒழிதல்! இந்த யஜ்ஞம் தானே - பலி - நாம் கோயிலுட்புகுந்ததும் செய்யச் சொன்னது, அதைச் செய்து முடித்த அந்த நிமிஷமே நம்முடைய பசுத்வம் நம்மைவிட்டொழிந்து நாம் நந்தி - ஆந்தசிவம் ஆய் விடுகின்றோம். “ஏகவஸ்து வாதம்''  (monism) சொன்ன அதியுத் கிருஷ்டமான பவுண்மையைத் தான் சித்தாந்தம் வற்புறுத்திக் கூறாநின்றது. இதற்கு நிதர்சனமாக ஸ்ரீதிருமூலர் அருளிச் செய்த திவ்யமந்திரத்தினது ஹ்ருதமாயுள்ளதோர் வாக்கியத்தை நாமும் உதகரித்து மகிழ்வோமாக.
''தானான வேதாந்தம், தானென்னுஞ் சித்தாந்தம்'' வேதாந்தம ''அஹம்பிரயாஸ்மி” ''நான் பிரமம் ஆகின்றேன்'' என்ற மந்திரத்தை மகாவாக்யமாகப் போதியாநின்றது. சித்தாந்தம் ''தத்'' அது என்ற ஒன்றைமட்டும் இருப்பதாகக்கூறி மகிழாநின்றது. அதாவது, சித்தாந்தம் முடிவாகவும் முழுமையுமே ஒரேயொரு அநுபவத்தைத் தழுவிநின்றது. சிவாநந்தம், பிரமாநந்தம், அதன் கண் ஒன்றேயுண்டு. ஒரே தனி அநுபவந்தானே பெறப்படும். ஆனால், வேதாந்தமோ, இவ்வாநந்தத்தை யடையும் சாதனமாக சோஹம்'' மார்க்கங்களை கூறாநின்றது. சோஹம் பாவனையானது பிரஜ்ஞா சம்பந்தமுள்ளதென்றும், துவிதமான தொன்றென்றும், துவைத சித்தாந்தத் தொன்றென்றும் யாவரேனும் சுலபமாக அறிந்து கோடல் அமையும். இந்த அர்த்தபுஷ்டியால், சித்தாந்தம் தான் அத்வைதமென்றும், வேதாந்தம் துவைதமென்றும் யாவரேனும் அறிந்துகொள்ளலாம். ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகளது சீடகோடிகளில் வேதாந்தத்தின் அழியாக் கோட்டைக் கொத்தளங்கள் என்று கொள்ளப்பட்ட சில உதாரணங்கள் தாமும் சித்தாந்திகளால் சுலபமாக தங்கள் மதபரமாக அர்த்தம் செய்யக் கூடியனவையேயாம் ஸ்ரீசிவஜ்ஞான யோகிகள் எடுத்துச் சொன்னது போலவே பதார்த்தம் ஒன்றா அல்லது பதார்த்தங்கள் இரண்டா வென்ற பிரஸ்னையெங்கும் எழுந்திருக்கக்காணோம். ஆனால் அந்த பிரஸ்னை பேர்போனவாயுள்ள ''அஹம்பிருஹ்மாஸ்மி'' ''தத்வமசி'' முதலிய மஹாவாக்ய மந்திரசம்பந்தமாக எழுந்ததென்க. அவர் சொல்வதாவது: - "மற்றென்னையோ அத்துவிதமென்னும் சொற்குப் பொருளெனிற் சித்தாந்தசைவ ருரைக்குமாறு காட்டுதூம், 'அது நீயாகின்றாய்; எ-ம் அது நானாகின்றேன், எ-ம். அது விதுவாகின்றது எ-ம் மூவிடம்பற்றி நிகழும் தத்துவமசி முதலிய மகாவாக்கியங்களைக் கேட்ட வழி அதுவென்பது ஒரு பொருள், நீயென்பது ஒரு பொருளாகலின், ஒருபொருள் மற்றொரு பொருளாழாறி, யாங்ஙனம் என்னும் ஐயநீக்குதற்கு எழுந்ததாகலின் அது விதுவாதற் கேதுவாய், அவ்விரண்டிற்கு முளதாகிய சம்பந்த விசேட முணர்த்துதலே யத்துவிதமென்னும் சொற்குப் பொருளென் றுணர்ந்துகொள்க.''

அந்த பதமானது - ஒன்றென்று அர்த்தமாகவுமில்லை. அல்லது ஆரண்டு அல்லது இரண்டுக்குமேற் பட்ட எண்ணிலடங்கக் கூடியபதார்த்தங்களின் "இருப்பைமறுதலிப்பான் உபயோகிக்கப்பட்டிருக்க வில்லை. மற்று இவ்விரண்டிற்கு முள்ள சம்பந்தத்தையே விளக்கி நின்றது.

நம்முடைய முதல் நூலின் கண்ணேயே, நீண்டகால முன்பாகவே இந்த அர்த்த புஷ்டியின் மாட்டு நுங்கள் எண்ணங்களை நீயிர், செலுத்துமாறு ஏவியிருக்கின்றோ மன்றே? அப்போது ஸ்ரீ சிவஞ்ஞான யோகிகள் கூறப் புகுந்த இந்த அதிபிரகாச மமைந்த விளக்கத்தையும் கூட நாம் வாசித்ததில்லை! அந்த அவசரம் நாம் அடியில் வருமாறு இது சம்பந்தமாகக் கூறியிருக்கின்றோம். சிவஞ் ஞான போதம் பக்கம் 17ல் இதைக் காண்க: -
"இந்த திருஷ்டாந்த முகங்கள் துவாரா ஒன்றை யொன்று ஒத்திருப்பதாக நாம் கண்டாலும் கூட, ''சத்து'' (பொருள்) மாத்திரத்தில் ஒரு வித்யாஸம் இருப்பதாக நாம் உணரவருகிறோமே. இந்த சம்பந்தந்தான் சொல்லினால் சுலபமாகத் தெரிக்கப் படாமற் போனாலுங் கூட, மனோபாவ மாத்திரத்தானே உணரக்கூடிய தொன்றாயுள்ளது காண்மின்! அது தான் இரண்டாகக் காணப்படுவது (துவைதம்) அப்படிக் கிருந்தும் அதே சமயத்தில் அவை யிரண்டல்ல என்று சொல்வதற்கும் போதிய அவகாசம் ஏற்பட்டது கண்டீர்! இந்த சம்பந்தத்தைத் தான் "அத்வைதம்'' என்று பேசப்படுகிறது .'துவிதத்தில் ஏகம்' என அந்தசம்பந்தத்தையுண ர்ந்து ஓதும் தத்வஞானமதமே அத்வைத தத்வஞான மதமென்க.''
சென்ற இருபதல்லது முப்பது வருஷகாலமாக வெளிப்பட்ட அபாரமான வேதாந்த நூற்களுள்ளும் பிருஹ்மஞான சங்கசம்பந்தமான கிரந்தங்களுள்ளும் கூர்மையான அறிவோடு ஆராய்ச்சி  செய்வதிலும், ஹிந்துமத தத்வஞானத்தை யாழ்ந்து அறிந்துபேசும் விஷயத்திலும் “புரோபசர் குண்டே'' என்பவருடைய வியாசங்களைப் போன்றன ஒன்றுங்காணோம். அவர் பிருஹ்ம சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தின் முதல்பாதத்தின் மொழிபெயர்ப்பு இறுதியில் சொல்லியுள்ள சங்கிரஹநியாசம் அதிவழகுள்ளதாயும் நவீனமாயேற்பட்ட தொன்றாயும் காணப்படுகிறது. வெகு ஆச்சரியகரமாக ஸ்ரீசிவஞ்ஞான யோகிகளும் மிஸ்டர் குண்டேயென்ற கனவானும் ஒரே கேள்விகளைக் கேட்டு ஒரேவிடையையும் பிரசாதிக்கலாயினரே! அவர், துவைதபரமான விசாரணைக்கும் ஏகவாத பரமாகவும் பொதுவாக உபயோகமாகத்தக்க பலமந்திரங்கள் உபநிடதங்களில் பெறப்பட்டுள்ளன வென்று கூறாநின்றனர். ஏகாத்ம வாதிகளுக்கு ஒருபெரும் ஆதாரமா யுள்ளவைகள் மகாவாக்கியங்களென்று சொல்லப்பெறும் மந்திரங்களை யாமென்க.. இந்த மந்திரங்கள் தாமே துவைதிகட்கு பிரதிபந்தமாக நேர்ந்துள்ளன. அவர் பின்னும் அவைகளை '' ஏகாத்மவாதிகள்'' செய்யும் அர்த்தங்களானவை தர்க்கநியாய விசாரணைமுன் நிற்கமாட்டாமல் ஒதுங்கியொழியும் என்றே கூறலுற்றார். ஏனென்றால், உள்ளபடியே க்ஷ வாக்கியங்கட்கு அன்னார் கூறவெழுந்த அர்த்தங்கள் பொருந்தவே பொருந்தா, அவர்கள் சொல்வதெல்லாங் கூடி குறி பார்த்து எய்யாத அம்புகள் போல அப்பிரயோசனப்பட் டொழிந்தன கண்டீர் !
  
''என்ன செய்யலாம்? கடவுளைப் பிரபஞ்சத்தோ டொன்று படுத்திக்கூறும் சில வாக்கியங்கள் சந்தேகமில்லாமலே வேதத்திலுள்ளனவென்பது நிராக்ஷேபம். ஆனாலும் அனேகம் சேஸ்வர சாங்கியத்து அநுகுணமாய் அவற்றுள் இருக்கின்றன, ஆனால், பிரபஞ்சத்தைக் கடவுளாக வொன்றுபடுத்திக் கூறும் பல வாக்கியங்கள் சரியாக அர்த்தம் செய்யப்படா தவரையில், வேதங்கள் ஏகாத்மவாதத்தை கூறவில்லையென்ற விவாதமானது செலாவணியாக மாட்டாதே! மேலும் ஆஸ்திகர்கள் இவ்வாக்கியங்களை ஸமரஸப்படுத்துவது தூரமாயும் வலிந்து பொருள் கொண்டதா! - மிருக்கிறது. ஆனாலும், இச்சிற்சில ஏகான்மவாதச் சுருதிகள், ஆஸ்திகத்தை எவ்விதம் மறுக்கிறதென்பது எமக்குப் புலப்படவில்லை. ஏனெனில், அம்மந்திரம், அவ்விதமே பொருள் கொள்ளினும், ஆஸ்திகத்தையே யுறுதிசெய்திற்று.''
     
அவர் மேலும் இது யோகமாத்திரத்தானே அறியக் கூடிய தொன்றென்று காண்பிப்பான் புக்கனர். அவர் முதற்கண் ''சரியை, கிரியை" யென்ற ''பக்தியின்''  பல்வேறுபட்ட கிளைகளைக் குறித்து விளக்கமாக எழுதலாயினார். அவர் அது சம்பந்தமாக மீண்டும் கூறலுற்ற தாவது: - "அப்படிப்பட்ட பிரேமை ரூபமான பக்தியிலே ஒரு முக்கியமான அழகொன்றுள்ளது. இவைகள் அது ஆத்மாவின் அற்புத ஆனந்த நிலையமாகும். அந்த அரும் பெரும் நிலையமானது யாதொரு திருஷ்டாந்தர முகத்தாலறிந்தா லொழிய வேறு எவ்விதத்தானும் அறியப்பால தொன்றன்று ஒரு தாயானவள் தன் குழந்தையிடம் வைத்துள்ள யாதொரு பிரேமையை இதைவாசிக்கும் புண்ணியர் உணர்ந்தறிவாராக... யாதொருதாயல்லது யாதொரு குழவி சிற்சில வேளைகளில் இன்னதென்று வரையறுத்துக் கூறமுடியாத ஒரு அற்புத - மனோ நிலைமையையடைதல் சம்பவ மேயாகும். அவர்கள் அந்த அற்புத நிலைமையிலுள்ள போது அவர்களிடம் நேரிடும் மெய்ப்பாடுகளை அவர்கள் அந்த நிலைமையிலுள்ள போது கூறும் வார்த்தைகள் தாமே ஒருவாறு நமக்கு விளக்கக் கூடியனவாம். தாயானவள் சேரில் உள்ள குழந்தையை நேரில் கண்டு இன்னணம் பேசுவாள்.
''ஓ! என் தங்கக்கட்டியே! ஓ! என்னுயிரே! ஓ என்னறிவே உன்னையான் தின்று விடமுடியுமேயோ?' ''தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.'' அந்த சந்தர்ப்பங்களிலே தாயானவள் தனது உடம்பானது தன் குழந்தையின் உடம்பினின்றும் வேறான தொரு பதார்த்தமென்பதை மறந்து நிற்கின்றாள் கொல்லோ? அந்த குழந்தையும் அப்போது அதே வுணர்ச்சியுடைய தாயுள்ளது கண்டீர்! அப்படி ஒன்றி நிற்கும் யொதொரு அவசரமானது மனசின் அபூர்வ ஆனந்த சமயம் என்று கொள்ளத் தடையென்னை ! இது ஒரு முக்கியமான பக்தியவசரம் என்பதே உண்மை. இந்தமாதிரியான கடவுளோடு ஒன்று பட்டதிவ்ய அவசரம் யாதொரு யோகியானவன் உணரலாயினான். அதனானே வேதங்களிலும் உபநிடதங்களினும் இவ்வளவினன்றி வேறுவிதமாக ஏகான்மவாதம் செய்யப்பட வில்லை. மேலும் ஸ்ரீ பாதராயணரால் செய்யப்பட்ட பிருஹ்ம சூத்திரத்தில் இந்த ஏகான்மவாதம் போதிக்கப்படவில்லை. மேலும் அவரே அடியிற் கண்டவாறு மீண்டும் இது விஷயமாக விசாரணை மேற் கொள்ளலாயினார்.
  
''இந்திய வேதாந்தத்தின் சொரூப லக்ஷணமானது இதுவே தான். ஆத்மசக்தியை யதுவுணர்ந்து கூறியதேயாம். இதையோக சூத்திரம் விபரமாகக் கூறி நின்றது. அவை முறையே கிரமாமாக கீழேகண்ட விவாதங்களை வெளியாக்கின. பரமாத்வாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் சம்பந்தமுண்டு. மனிதனுடைய ஆத்மாவிற்கு வெளிப்படா தடங்கியிருக்கும் அனேக அபார சக்திகளுண்டு. சிற்சில சாதனங்களை மேற்கொண்டானானால் அவை ஆத்மாவின் அடங்கிக்கிடக்கும் சக்திகளை வெளிப்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சமயங்களில் மகனொருவன் - யோக அப்பியாசம் செய்யப்பு குந்தவன் பூர்வம் நடந்த சமாச்சாரங்களையும், மேலே வரக்கிடப்பனவாயுள்ள பலகர்ம விசேஷங்களையும் அறிந்து கூறுதெலொ மாமாகல்லும்.. உடம்பைவிட்டும் வெளிக்கிளம்பிய ஆத்மாவானது ஒரு அர்த்தத்தில் மட்டும் கடவுளில் கரைந்து மறைந்ததென்று சொல்லவும் இடனுண்டு. யோகமார்க்கம் வேதாந்தத்துக்கு முக்கிய அஸ்திபாரமாயிருந்தது?''
     
மற்றோரிடத்தில் நாம் ஒன்று காண்பித்திருக்கிறோம். யோகபாதமானது வேதாந்தத்தின் அஸ்திபார மட்டுமல்ல யோகபாதமே வேதாந்தமென்றும் ஆண்டு கூறிப் போந்தோம் ''உபநிடதம்'' என்ற வார்த்தையானது ''யோகம்'' என்னும் அர்த்தத்தையே தராநின்றதென்பது பிரகாசமாகப் பலரானும் அறியப்படவில்லை. "யோகம்" என்றால் கடவுளோடு ஆத்மாவைச் சம்பந்தப் படுத்துவான் கருதி யாதொரு மகன் அப்பியசிக்கும்'' சாதனம்'' என்று அர்த்தமாகும். ''உபநிடதம்'' என்பதும் யாதொரு மகன் நாளடைவில் கடவுள் சந்நிதானத்தை நெருங்கி நெருங்கிச் செல்லவும், தன்பந்தங்கள் ஒழிந்து இறைவனுடன் ஒன்று படுவதற்குள்ள சாதனமாகும். தாது அர்த்தம் (உ. ப - சமீபம், அல்லது சமீபத்தில் நி - முழுமையும் சத் - மாய்ந்து போதல்) முன்னம் திருவாசகத்தினின்றும் யாம் உதகரித்து மகிழ்ந்த மந்திரத்தின் அர்த்தத்தோடும் இந்த '' உபநிடதம்'' என்ற தாது அர்த்தம் அதிப்பொருத்தமாயுள்ளது. கோயிற்பதிகம் 7 - வது பாசுரம்.

                  ''சென்று சென்று அணுவாய்த்
தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்"
     
மேலும், சாந்தோக்கியம் (1 - 1 - 10) முதலிய பல வேதாந்த நூல்களில், இந்த ''உபநிடதம்'' என்ற பதமானது “யோகம்'' என்னும் பதத்தின் பிரதிமொழியாகவே உபயோகிக்கப் பட்டிருக்கிறது. இந்த தாதுவிசாரணையே, உபநிடதங்களின் பொருளைப் பூரணமாக விளக்காநின்றது. அதைத் தப்பிதமாக வறிந்ததன் காரணமாக எத்துனையோ குழப்பக்கள் நேரிட்டுவிட்டன. யோகபாத நூலாகவே சித்தாந்திகள் உபநிடதத்தை மதிக்கின்றார்கள். - - இதற்கும் மேலானதாயுள்ளது ஞானபா தமாக முடிந்தபடியால், '' உபநிடதம்' ''வேதாந்தம்” யோகம்'' ''ஸஹமார்க்கம்" "அல்லது'' “ஸோஹமார்க்கம்'' அல்லது “ஹம்ஸமார்க்கம்'' என்ற பதப்பிரயோகங்கள் எல்லாம் ஒருபொருட் கிளவியாக முடிந்தன. "வேதாந்தம்'' என்ற வார்த்தை உள்ளபடியே யோகம்'' என்ற அர்த்தத்தைத் தருகிறபடியால் வேதாந்தம், சித்தாந்தம் என்ற பதங்கள் வேறுபட்டனவாக எண்ணப்பட்டு, சித்தாந்தம் ஞானமார்க்கம் அல்லது ஞானபாதம் என்ற தாத்பரியம் கொடுக்கிறது. ஆயினும் அது, சரியை, கிரியை, யோகம் என்ற ஏனைய பாதங்களையும் தழுவி நிற்றலைக் கவனிக்கக்கடவீர். மஹாவாக்ய மந்திரங்களில் கூடமாக அமைந்திருக்கும் சாதன சம்பத் தென்னையோவெனின் - ஸோகம் பாவனை அல்லது சிவோகம் பாவனை என்றதொன்றே பெறப்படும். இந்த சாதனை முந்தியபிறகு ஆத்மா சிவத்தோடு ஒன்றியல்லது ஐக்கியப்பட்டு நிற்றல் சுலபமாம். அப்போது அஹங்காரப் பிரவிர்த்திகளும் ஆத்மாவிற் கில்லை. அப்போது அந்த ஆத்மா இன்னணம் சொல்லக்கூடும். "யானே உலகமெல்லாமாயினேன்.'' " யானே யுலகென்பனின்று." சிவஞான போதம்  2 - 1 - 4). ''என்னிலேதானே எல்லாம் உண்டாயிற்று. என்னிற்றானே அவையாவும் நிலைபேறடைந்தன. என்னிடமே எல்லாம் கலப்படைகின்றன. அந்த இரண்டற்ற பிரமம் யானே. (கைவல்ய உபநிடதம் - 22. )
   
புரோபசர் குண்டே என்ன சொல்கின்றார்? மனிதனிடத்தில் ஒரு சக்தியடங்கி யிருக்கிறது. அதை வெளிப்படுத்துவதினாலே, அவன் கடவுளோடு ஒன்றுபடக் கூடும். அதேமாதிரியாகவே ஸ்ரீ சிவஞ்ஞான யோகிகளும் அடிக்கடி இதையே எடுத்துக்காட்டி புள்ளார். இந்த சக்திதான் ஆத்மாவின் அதுவது வாதற்றன்மை, சார்ந்ததின் வண்ணமாதற்றன்மை யென, மெய் கண்ட தேவரும், யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நிற்றல் என்ற ஸ்ரீ தாயுமானவரும் கூறினார்கள். மேலும் இந்த சக்தி பளிங்கு அல்லது கண்ணாடிக்கு உவமித்து மிருக்கின்றது..
   
புரோபெசர் ஹென்ரி டிரம்மண்டு என்ற மேதாவி இன்னவிதம் ஓதுகின்றார். "எல்லா மனிதர்களும் கண்ணாடிகளாவார்கள். ஆத்மா வீடடைவதற்கோ, அல்லது பந்தப்படுவதற்கோ அடிப்படையான வாய்ப்பாட்டிற்கு முதல் விதியாகும். சீவசைக்குறித்து விவரிக்கப் போந்த உபமாணத்தில் இது அதியுத் கிருஷ்டமானது, மக்களை நிழலாடிகள் எனக்கொண்டது! "முதல் முதல் இந்த திருஷ்டாந்தம் உபநிடதங்களும் கீதையிலும் காணப்படுகிறது.
     
"யாதொரு உலகத்தினால் செய்த வட்டவடிவான பதார்த்தம் (நிழலாடி போன்றது) தூசிகளால் பிரகாசம் மழுங்கிப்போயிருந்து, பிற்பட்டு அதைச்சுத்திசெய்த அநந்தரம் கம்பீரமாகப்பிரகாசிப்பதுபோலவே, உடல் எடுத்த ஒருசீவன் தனது உண்மையான சொரூபத்தைத் தரிசித்தபிறகுதானே திருப்தியும் துக்க நீக்கமும் அடைகிறான். பின்னும், அவனுடைய உண்மைச்சொரூபத்தைத் தரிசித்தவழியே, அதையே ஒரு திருவிளக்காகக் கொண்டு பிரமத்தின் உண்மை சொரூபத்தை யறிந்து தத்வங்களைக் கடந்து நின்று பிறப்பற்ற அநாதி இறைவனாய்விடுகிறான். அப்பொழுது எல்லா பாசத் தொடர்பினின்றும் நீக்கப்படுகின்றான்.'' (சுவதேஸ்வதார உபநிஷத II. 14. 15.) அவனையே (பரமனையே) சிந்திக்கும் காரணப்பற்றி (அபிதியானாத்) அவனைச் சார்தல் காரணம்பற்றி (யோஜனாத்) அவனோடு அதுவதுவாய் போய்விடும் காரணம்பற்றி (தத்வபாவாத்) இறுதியில் மாயையின் மிகுந்த அதிகாரமும் அவன் மாட்டுச் செல்லாமல் ஒழிந்து போய்விடுகிறது. (சுவதேஸ்வதார உபநிஷத்  1. 10) ஒரு நெருப்பானது புகையால் மூடப்பட்டிருப்பது போலவும் பளிங்குமாசினால் மூடப்பட்டது போலவும் ஒரு பிண்டமானது கர்ப்பத்தால் மூடப்பட்டிருத்தலைப் போலவும், இந்த ஆன்மா ஆசையால் மூடப்பட்டிருக்கிறது. (கீதை  III. 3)
     
ஸ்ரீ மெய்கண்ட நாதனும் பின் வரும் வெண்பாவைக் கட்டளையிட்டிருக்கிறார் (VIll. 3. A)

    பன்னிற மேகாட்டும் பளிங்கே போல் இந்திரியத்
    தன்னிறமே காட்டும் தகைநினைந்து - பன்னிறத்தும்
    பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான்
    மெய்ப்பொருட்டுத் தைவமாம் வேறு.
     
இதனுடைய தருமமானது சாங்கிய மதத்தில் இனிது விளக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரங்களிலும் அங்கனமே. அங்கே காட்டியுள்ள திருஷ்டாந்தங்கள் பளிங்கும் வர்னமுமே. “உள்ளபடியே ஆன்மாவானது ஒன்றோடொன்றும் சம்பந்தமடைந்தில்லா விடினும், (மனோசங்கல்பம் அல்லது வியவகாரம் காரணமாத்திரத்தானே) விவேக்குறைவால், ஒருவிதமான கலப்பையது அடைந்து விடுகிறது. [ ஒன்றிலும் உள்ளபடியே சம்பந்தப்படாததாகிய ஒன்றில் உள்ளபடியே யாதொரு கலப்புமில்லை யென்றே சொல்லலாம் (ஆன்மாவுக்கு ரஸம் போலவேனும் அல்லது வேறு எந்தமாதிரியான வேறுசலப்பும் இல்லவேயில்லையென் - - கொள்ளக் கிடப்பதால்) அப்படிக் கிருந்தும், ஒருகலப்பொன் - அதற்கு அந்த ஆன்மாவிற்கு இருந்தாற்போலவும் காணப்படுகிறது. அதனானே அந்த கலப்பானது ஒருவித பிரதிபிம்பமாகவே கொள்ளப்பட்டுள்ளது. ஆன்மாவினின்றும் அஃதடைந்துள்ள கலப்பையல்லது கல்மிஷத்தை வேறு பிரித்தறியக் கூடிய சான்றோர் அங்ஙனம் கூறிநின்றனர். மோஹம் காரணமாக அந்த கல்மிஷம் அதற்கு உள்ளது போலவே காணப்படுகிறது.)" செம்பருத்திப்பூவும் பளிங்கும் போன்று யா தொரு கல்மிஷக்கலப்பு அதற்கு (ஆன்மாவிற்கு) இல்லை, ஆனால் அங்ஙனம் ஒன்றிருப்பதாக பிராந்தி மட்டும் தோற்றமாகிறது.''

பந்தமறும்பளிங்கனைய சித்த சுவாதீனமடைந்த ஒருவனுக்கு, ஞாதுரு ஞாஞேயம் சம்பந்தமாக, இதுவெல்லாம், இதற்கெல்லாமா தாரமாயுள்ளதுடன் ஒற்றித்துநிற்கும். (யோகசூத்திரம்,) (I. 41.)

உபநிடதத்தின் அடியிற் குறிக்கப்பட்ட வாக்கியங்களிலும் மனசு தனக்கு விஷயமாகும் பதார்த்தங்களோடு ஒன்றி நிற்கும் உண்மையானது பிரகாசமாகப் பேசப்படுகிறது.

      ''இப்போது, யாதொரு மனிதன் இதுவாகவும் அதுவாகவும் ஆகின்றது. அவனுடைய நடவடிக்கையையும் நடிப்பையும் பொடித்துள்ளது, அவனடிப்பையொட்டி, அவன் அங்ஙனமாவதும். யாதொரு நன்னடக்கையுள்ள மனிதன் நல்லவனாகவே ஆகிறான். துர்நடக்கையுள்ளவன் துஷ்டனாகவே முடிகிறான். பரிசுத்தமான கிரியா சம்பந்தத்தால் அவனே பரிசுத்தமாய் விடு கிறான்.. கெட்ட நடவடிக்கைகளால் கெட்டவனாகவே ஆய் விடுகிறான்.
   
*''அவனுடைய ஆசையெப்படி யிருக்கிறதோ ! அப்படியே அவனுடைய இச்சை இருக்கிறது. அவடைய இச்சை எப்படி இருக்கிறதோ அப்படியே அவனுடைய செய்கைகளும் இருக்கின்றன. எந்தகர்மத்தையவன் விளைவிக்கின்றானோ, அவைகளின் பலனை புசித்தே தீரவேண்டும்.
   
எந்தபதார்த்தினிடமாக யாதொரு மகனுடைய மனமானது நாடிக்கிடக்கின்றதோ, அதைத்தான் அவன் கர்மவசத்தால் அடைகிறான். பிருஹ்மமாயுள்ள ஆன்மாவை யெவனொருவன் ஆசிரியத் திருக்கின்றானோ, அவன் பிருஹ்மத்தினிடம் சேறல் சம்பவம். அந்த ஆத்மா உள்ளபடியே பிருஹ்மம்தான். (பிருஹதாரண்ய கோபநிஷத் iv. 5. 6)
     
இதே மாதிரியான பலவாக்கியங்கள் மஹாபாரதத்திலும் அகப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இதைக் குறித்து பழக்கத்தில் வந்துள்ளதோர் பழமொழியுமுண்டு.
     
யத்பாவம் தத்பவதி''
     
ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர் இந்த சேர்க்கையை “ முற்றும் ஒன்றுபடல்'' (absolute identity) எனக் கூறுகின்றார். இதுவே ஸ்ரீ மெய்கண்டநான் வாக்கியமாயுள்ள' அது அது ஆதல்' என்றதும். உபநிடத நூலாசிரியர்கள் - சாங்கியர், யோக்கியர், சித்தாந்திகள் இந்த உண்மையைக் கூறி, இதையே மோக்ஷத்துக்கு அஸ்திபாரமாகக் கருதுவது போலவே, புரோபெசர் ஹென்ரிடிரம் மண்டு என்ற கனவானும் கூட'' மறுவாழ்வு' என்ற தலைப்பின் கீழ் அவர் யாத்த வியாசத்தின் கண் இதையே மோக்ஷத்துக்கு சாதன மானதாக வற்பு த்திக் கூறுகின்றார். இவர் பீடிகையாக எடுத்துக் கொண்ட பிரமாணம் " பால் " என்னும் சித்தர் கூறிய கூற்றினுள் ஒன்றே.

நாமெல்லோரும் நம்முடைய முகத்திரையை நீக்கி ஒரு கண்ணாடி போல் நிற்கின்றோமாதலான் அந்த கண்ணாடியில் எதிர் நின்ற பொருள் பிரதிபலிப்பது சகஜம். பகவத்சாந்நித்தியம் பெற்றபோது பகவத் விலாசமும் நம்முடைய உள்ளங்களில் பிரிதபலித்தலிற் றடையென்னை? அவர் உருவமாகவே நாமும் மா றிப் போகின்றோம். பெருமிதத்தினின்றும் அதியுத் கிருஷ் டமான பெருமித நலங்களையே படையா நின்றோம். இப்படித் தானேயே கடவுளிடமிருந்து ஆன்மாவும் அபாரகௌரவங்களை யடைந்து சுகித்தது போலும்.''
அவர் அந்த வாக்கியத்துக்கு விருத்தியுரை யொன்று அடியிற் போந்த வாறு எழுதலாயினார்: -
''நாம் எல்லோரும் பரிசுத்தமடைந்த பிற்பாடு, கிறிஸ்துவையே நம்முடைய மனத்தில் பிரதிபலிக்கலாயினோம். அது ஏனென்றால் நாம் அவர் சந்நதியில் யாதாமொரு நிழலாடியைப் போல நிற்கும் பாக்கியம் பெற்றபடியால் என்க. அவ்விதம் நின்றுழி, கீழ்க் குணமிழந்து நற்குணமும், அதற்கு மேலும் குணமும், அப்படியே படிப்படியாய், முற்றும் நற்குணம் வாய்த்தல் அமையும். இதன் பொருள் கிறிஸ்துவினுடைய குணவிசேஷங்களை நீ பிரதிபலிக்கச் செய், நீ கிறிஸ்து ஆய்விடுவாய். அல்லது, நாம் கூறுவதுபோலவே கடவுளை நம்முடைய ஹ்ருயத்தில் பிரதி பலிக்கும்படிச் செய்வோமானால் நாமும் கடவுளைப்போல, அல்லது கடவுளாகவே ஆய்விடத் தடையில்லை.
     
ஆனால் அந்த ஏழமை பொருந்திய நமது குணமானது நாளுக்கு நாள் எப்படி அதன் ஏழமையை யொழித்துச் சேறல் சாத்யமாகும்? அல்லது பிரதிபலனத்தைத் தன்னிடமே யேற்றுக்கொள்ளும் நிழலாடியானது என்னணம் நாளடைவில் பரிசுத்தப் பட்டுக்கொண்டே போகக்கூடும்? கண்ணாடி (ஆத்மாவைச்) சுததிசெய்வதினாலும் அதிபிரகாசமான ஈஸ்வரஜோ தியோடு அதை நாளடைவில் ஒன்று படுத்துவதினாலும் இதைச் செய்து முடிக்கமுடியும்.
 
கண்ணாடியானது எப்போது பரிசுத்த நிலையையடைந்து விடுகிறதோ, எப்போது அருட்பெருஞ் சோதிமுன் அதிசமீபத்வத்தை படையப்பெற்றதோ, அப்போதே அந்தசோதி அமோகமாகப் பிரகாசியாநின்று கண்ணாடியை உள்ளடக்கி, அதனைக் காட்டாது, தன் சுயஞ்சோதியே பேலாயிற்றென்க. கல்வியிற் சிறந்தன புரோபெசர் உண்மையாகக் கூறுவதாவது ''நீங்கள் உணர்வதெல்லாங்கூடி கடவுளுடைய பெருமிதமேயாம். உலகம் உணர்வதும்கூட, அதனுடைய பிரதிபலம் சரியாயிருக்கும் பட்சத்தில், கடவுளுடைய அபார கௌரவங்களேயாம். ஒரு நிழலாடி.யை நாம் பார்க்க நேரிட்டபோது, அதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் அதில் பிரதிபலிக்கும்பாதொரு பதார்த்தமுண்டோ அதைத்தான் நாம் சிந்திக்கவும் பார்க்கவுமானோம். ஏனென்றால் யாதொரு நிழலாடியானது தன்னிடமே நமது ஞாபகத்தை யீர்ப்பதில்லை. அதனிடத்தில் யாதேனும் குற்றங்குறைகள் இருந்தால் மட்டும் நாம் அதனைக் கவனித்துப்பார்க்க நேரிடும்.'' இந்தக் குற்றங்களைத் தான் சித்தாந்திகள் வர்ணவேறுபாடுகள் என்று பேசாநின்றனர். சித்தாந்திகள் அவைகளைத் தாம் மாயையல்லது தேகத்துக்கு உவமானித்துக் கூறுகின்றனர். உடலோடொன்றிய பொழுது, உடல் காணப்பட்டதே யொழிய பளிங்கைப்போன்ற ஆந்மாவை யவன் அறிவதில்லை. கடவுளோடு ஒன்றியபோது கடவுள் பிரகாசமும் பெருமிதமும் மட்டுமே வெளியாகாநின்றன. நிழலாடிபோன்ற ஆந்மாவையுங்கூட அங்கே கண்டதில்லை. இந்த திருஷ்டாந்தத்தை யவர் எத்துணையழகாக விளக்கலாயினார் என்றறிவான் நாம் நம்முடைய நண்பர்களை அவரது வியாசமுழுமையும் ஒருமுறை யோதுவான் ஏவுவேமாயினேம். முதல்விதி பிரதிபலித்தல் ஆகவும், இரண்டாவது விதியாகிய அது அதுவாதலை பின்வருமாறு கூறுகின்றார். “இவ்வதுவாதற் றன்மை இரண்டாம் விதியாகும். இது மோக்ஷசாதனங்களில் முக்கியமாகியது. மக்கள்; ஒருகணத்தில் காட்சிக்கு விஷயமாகி மறுகணம் மறைந்துபடும் பல பதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிழலாடிகள் மட்டுமாக முடிந்தொழியாமல், அவைகளிடம் பிரதிபலிக்கும் பதார்த்தங்களின் வாசனாஸ்புருணத்தைத் தத்தம் ஆழ்ந்த சத்துக்களிலேயே பிரதிபலித்து நிற்கச்செய்து அப்படி பிரதிபலித்த பதார்த்தவகைகளை வாசனாரூபமாகத் தத்தம் உள்ளத்திடம் பூட்டிவைக்கின்றன போலும். ஆந்மா இந்த விஷயங்களையெல்லாம் என்னணம் தனக்குள்ளாகப் பிடித்து அல்லது கட்டிவைத்திருக்கிறதென்று ஒருவராலும் சொல்லவே முடியாது. இந்த அற்புதம் என்னணம் சித்தியாகிறதென்று ஒருவரும் அறியார்கள். இயற்கையில் நாமுணர்ந்த எந்தவிதமான காட்சியும், ரசாயன சாஸ்திரத்தின் எந்தவி தமான முறைகளும், மந்திரசாஸ்திரத்தில் கூறியுள்ள எந்த அத்யாயமும் நாம் இந்த ஆச்சர்ய சம்பவத்தையுணர்ந்து கோடற்கு அதுகுணமாக நேரிடக் காணேம். ஏனென்றால், யோசித்துப் பாருங்கள் ! சென்றகாலத்தில் நடந்தனயாவும் ஆந்மாவில் ஒருகாலத்தில் அழுந்தின மாத்திரமன்றி அங்கேயிருக்கின்றது. அது அங்கில்லாத பட்சத்தில், அது அங்கிருந்து எப்படி பிரதிபலிக்கும்? யாதொரு மகன் பிரபஞ்சத்தில் தான் கண்ட, அறிந்த, உணர்ந்த, நம்பிய எல்லா வஸ்துக்களும் அவனுடைய உள்ளத்திற்றானே கிடக்கின்றன. அவனுடைய ஒரு கூறாகவே அவைகள் ஆய்விட்டன; அவையே அவனாய்விட்டன. அவன் அவைகளின் பிரதீகையாகவே மாறிவிட்டனன்.''
   
இவ்விரண்டு உண்மைகள் தாமே நமது மந்திரங்கட்கும் உபாசனைகட்கும், சாதனங்கட்கும், பாவனைக்கும், யோகத்துக்கும் அஸ்திபாரமாகப் போந்தன. ஷபுரோபசர் அவர்கள் டார்வின் துரையின் அபிப்பிராயத்தை இந்த சந்தர்ப்பத்தில் திருஷ்டாந்தமாக எடுத்துக் காண்பிக்கின்றார். மனிதபரிணமிப்பிலும், மிருகபரிணமிப்பிலுமே, இந்தியாயம் புலப்படுகின்றது. பன்றிகளோடு என்றும் பழகும் மக்கள் பன்றி முகங்களையே யடைகிறார்கள். குதிரைகளோடு சர்வதாபழகும் மக்கள் குதிரை முகங்களையே பெறுகின்றார்கள் என்று கூறுவாராயினார். யாதொரு புருஷனும் அவன் பெண்சாதியும் பாஸ்பரம் ஒருவரை யொருவர் உள்ளன்போடும் நேசித்துறவாடி ஒன்றுபடும் பட்சத்தில் அவர்களுடைய தூலதேகங்கள் கூட ஒன்றையொன்று ஆச்சர்யமாக ஒத்துப்போதலை நாம் கண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட சக்தி மனுஷனுடைய மனதுக்கு உண்டு. அதனால் நன்மையும் உண்டு. தீமையும் யுண்டு. கேவலம் இழிந்த மிருக அந்தஸ்துக்கும் அது தன்னைத் தானே தாழ்த்திவிடக் கூடும். அல்லது அதியுன்னத நிலை யாகிய கடவுள் நிலைக்கும் அது தன்னைத்தானே உயர்த்தி விடவும் கூடும். இந்த விதியைத்தான் நம்முடைய புத்தகங்களில் கருட தியானம் என்று பேசப்பட்டிருக்கிறது..
 
“இயற்கை யுலகத்தில் காணப்பட்ட ஆத்மதர்மம்.'' என்ற மகுடம் புனைந்த நூலை யெழுதிய ஆசிரியர் (அமெரிக்காவில் ஷிகாகோ நகரத்தில் பர்டி அன்ட்கம்பெனியாரால் இது பிரசுரிக்கப்பட்டது) அடியிற் கண்டவிதமாக சித்தாந்தம் செய்கிறார்.

“எல்லா வஸ்துக்களினுடைய காரணங்களை விசாரித்தலையே பொருளாக மேற் கொண்ட எல்லோரும் அதோடு காரண சக்தி பொருந்தி ஒன்றுபட்டுப்போயினர். ஏனெனில் எதை நாம் ஆழ்ந்து உய்த்துணருகிறோமோ அல்லது யாதொன்றுடன் நாம் அதிகமாகப் பழகுகின்றோமோ, அப்போதும் அதைப்போலவும், நாம் ஆய்விடுகிறோமென்பது என்றும் மாறாதவி தியாகக் காணலாம். நாம் அடிக்கடி யாரோடிருந்து பழகிவருகின்றோமோ அவர்களுடைய நடையும், முகவடிவும், பேச்சு முதலானதுகளும் நமக்குப்படியும். சிற்சில வேளை ஒரு குழந்தையானது தனது தாயைப்போ லில்லாமல் தனக்கு பால் கொடுத்து சோறூட்டி வளர்த்த செவிலித்தாயைப் போல் ஆய்விடுதலும் சகஜம்.”

அந்த புஸ்தகமுழுதும் இந்த இரகசிய உண்மையையே போதிக்க வெளிவந்துள்ளது. மேலும் கடவுளை யுள்ளபடியே யடைதற்குப் பெருஞ்சாதனமாக அந்தபுத்தகம் ஒரு சாதனத்தைக்கற்பியா நின்றது. அது வருமாறு : - ஒருவன் உறுதியாய்ச் சாதனை சிந்திக்கவேண்டியது. உலகம் பொய். பொய்யும் பாவமும் இல்லவே யில்லை. வியாதி யென்பதில்லை மரணம் இல்லை. நான் கடவுளின் புத்திரன், சத்தியம், ஞானம், ஆநந்தம், இறைவனுடைய அநந்த சக்தி, முதலியனவே என்றும் பிரகாசமாயிருக்கின்றது. இந்த பிரபஞ்சத்தில் இவைகளைத் தவிர்த்து வேறு யாதொன்றும் இல்லவேயில்லை. நான் கடவுளின் பிரதிபிம்பம் நான் அவன் விக்ரகம், என்றும் அவரைப்போல இவ்விதம் அவன் பாவனை செய்ய அவன் உள்ள படியே வியாதியையும் மரணத்தையும் ஜயித்தவனாகி உள்ள படியே கடவுளின் குமாரனாகின்றான். இந்தபாவனை “ஸோஹம்பாவனை” அல்லது “சிவோஹம் பாவனையை முழுதும் ஒத்துப்போகிறதுங் காண்க.

அடியிற் குறிப்பிட்ட ஸ்ரீ அருணந்தி சிவாசார்ய சுவாமிகளின் பாட்டானது இந்த விசாரணையை முழுதும் சங்கிரஹப்படுத்திக் கூறுவதை யறிதிர் அன்பர்காள்!

''கண்டவிவையல் லேனானென்ற கன்று காணாக்
கழிபரமு நானல்லே னெனக்கருதிக்கசிந்த
தொண்டினொடு முளத்தவன் தன்னின்ற கலப்பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி
விண்டகலு மலங்களெல்லாங் கருடதியானத்தின்
விடமொழியு மது போல விமலமதையு மடையும்
பண்டைமறைகளு மதுநானானே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவத்தைக் காணே.'' (IX. 7)

நமக்கும் கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள சம்பந்தங்களை யெல்லாம் நாம் உள்ளபடியே யுணர்ந்தறிந்துய்ய வேண்டியது, நமது இன்றியமையாக் கடப்பாடானபடியால் ஸ்ரீ கண்ட. சிவாசார்ய சுவாமிகள் தமது சூத்திர பாஷ்யத்தில் (II. 1 - 21 - 3) இந்த விஷயமாக விசாரணை மேற் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அந்த பாகங்கள் முழுமையுமே நாம் அடியில் உதகரிக்கின்றோம். அவர் பலபேத சுருதிகளையும் மகாவாக்ய மந்திரங்களோடு மிகவும் அழகாக சமாஸப்படுத்தி யிருக்கின்றார்.'' கீழே பிரஸ்தாபித்த வியவஸ் தா சம்பந்தமாக சூத்திரகாரர் ஒரு ஆட்சேபனையைக் கிளப்பியதற்குச் சமாதானமும் தாமே கூறலுற்றார் : - 
     
மற்றொன்றோடு இருப்பதாகக் கூறப்படலான், இதத்தைச் செய்யாமை முதலிய தோஷம் எய்துகின்றது.
(ஆக்ஷேபம்)
தத்துவமசி (சாந். .அ. எ)
"அது நீயாகின்றனை''
அயமாத்மா பிரம்மா (பிரு. ச. டு. க)
   
“இந்த ஆன்மா பிரமம்'' என்றற்றொடக்கத்தவற்றிற் காரியமாகிய ஆன்மா காரணமாகிய பிரமமென்று கூறப்படலான், அவ்விரண்டும் வேறில்லை எனக் கூறப்பட்டது. இங்ஙனமாகுங்கால், சர்வஞ்ஞரும் வியாபகருமாகிய சிவபெருமான் உலகத்தைப் படையாமை அவர்க்கு நன்மையாகவும், அதனைப் படைத்தல் அவர்க்குத் தீங்காகவுமன்றோ நேர்கின்றது. ஆகலின், சர்வஞ்ஞரும் சத்தியசங்கற்பருமாகிய சிவபெருமான் தம்மினின்று வேறுபடாத ஆன்மாவினது தாபத்தைத் தம்முடையதென்று அறிந்தும் சம்சார நிமித்தமாயுந் தீதாயுமுள்ள சிருட்டியை எங்ஙனம் முயன்று இதமாகிய சிருட்டியாமையை விடுத்தனர்? அதுகொண்டு ஆன்மா அநன்னியமாயிருக்கும் போது, தமக்கு இதமாயுள்ளதைச் செய்யாடையானும் அகிதமாயதைச் செய்வதானும், அறிவு சூன்னியராதன் முதலிய தோஷஞ் சிவபெருமானுக்கு எய்துகின்றன; அதுபற்றி, காரியகாரணராம் ஆன்மாவும் சிவபெருமானும் அநன்னியமாதல் அயுக்தமே எனின்,
(உத்தரம்) யுக்தம் எனக் கூறப்படுகின்றது.
அதிகந்து பேதனிர்தேஸாத் (உ. க. உஉ)
ஆயின் (காரணம்) சிரேட்டம்; பேதங் கூறப்படலான்.
காரியமும் காரணமும் அநன்னியமாயினும்,
விஸ்வா திகோரூத்ரோமஹர்ஷிபி: தைத். ஆரணி. ( . கஉ. உஅ)

''உலகங்களுக்கெல்லாஞ் சிரேட்டர் மகர்ஷியாகிய உருத்திரர்''
என்று சுருதி கூறுதலான், ஈண்டுக் காரியமாகிய சிதசித்பிரபஞ்சத்தினின்று காரணஞ் சிரேட்டமென்று அறியப்படுகின்றது. அங்ஙனம் பின்னர்ப் போதருஞ் சுருதிகளினாலே, பேதநீர்த்தேசம் என்று சூத்திரம் கூறினமையின், ஆன்மாவும் சிவபெருமானும் வேறென்று காட்டப்படுகின்றனர்.

      வித்யாவித்யே ஈஸதேயஸ்து ஸோன்ய: (சுவே. . க)
     ''வித்தையையும் (ஆன்மாவையும்) அவித்தையையும் (அகேதனத்தையும்) ஆளும் ஈசுரர் வேறு''
க்ஷராத்மானா வீஸதே தேவஏவ : (சுவே. க. )
      (பிரதானமாகிய) க்ஷரத்தையும் ஆன்மாவையும் தேவர் ஒருவர் ஆளுகின்றனர்''
     ப்ருதகாத்மானம் ப்ரேரிதாரஞ்சமத்வா (சுவே. க.  )
''ஆன்மாவையுஞ் செலுத்துபவரையும் வேறு என நினைந்து''
      த்வாஸுபர்ணா ஸயுஜாஸகாயா - - (சுவே. ச.  )
      "பிரியா நண்பினோடு இரு அழகிய பக்ஷிகள் (ஆன்மா பரமான்மாக்கள்)'' -
  *த்வேப்ரஹமணீ வேதி தவ்யே பரஞ்சாபாஞ்ச (மைத்.  . உ).
      “பரமும் (பரமான்மாவும்) அபாமும் (ஆன்மாவுடாகிய) இரு பிரமங்களும் அறியற்பாலன"
ஜ்ஞா ஞௌத்வாவஜாவீஸயாநீஸௌ (சுவே. க. .)
"பிறவாதவராகிய அறிஞனும் அஞ்ஞனுமாம் இருவரும் (முறையே) ஈசரும் (சிவபிரானும்) அநீசனுமாம் (ஆன்மாவுமாம்)"
நித்யோ, நித்யானாம் சேதநஸ்சேதனானாம் (கட. . க)
''அவர் நித்தியப்பொருள்களுள்ளே நித்தியரும், சேதனப் பொருள்களுள்ளே சேதனரும்''
          அந்த: ப்ரவிஷ்டஸ்ஸரஸ்தா ஜனானாம்
                                           (தைத். ஆரணி. . கக. க)
   ''அவர் (பரமான்மா) ஜனங்களுள்ளே (ஆன்மாக்களுள்ளே)
  பிரவேசித்து, அவைகளை ஆளுபவராயினர்''

    மாயாந்துப்ரக்ருதிம் வித்யான்மாயினந்து மஹேஸ்வராம் (சுவே. . )
  அஸ்மான்மாயீஸ்ருஜ தேவிஸ்வமேதத்தஸ் மிம்ஸ்சான்யோ மாய
                      யா ஸந்நிருத்த:             (சுவே. . )
   ''மாயையைப் பிரகிருதி என்றும், மாயையுடையாரை மகேசர் என்றும் அறிக;" "இதினின்று மாயியானவர் இந்த விசுவத்தைச் சிருட்டிக்கின்றனர்; அதிலே மற்றது (ஆன்மா) மாயையாற் கட்டுண்டது''
      ஜுஷ்டம்பதா பஸ்யத்யன்யமீஸம் (சுவே. . )
      "அன்னியமாகிய இன்முடைய ஈசரை ஆன்மா காணுங்கால்
      ப்ராதன க்ஷேத்ரஜ்ஞபதிர்கணேஸ: (சுவே. . க)
      ''பிரதானம் ஆன்மா என்னும் இரண்டுக்கும் பதியாகிய குணங்களையுடைய ஈசர்'' 
      யேஷாபீஸே பசுபதி: பசூனாம் (தைத். சங். . க. . ).
      இந்தப் பசுக்களைப் பசுக்களுக்கு (ஆன்மாக்களுக்கு) பதியாயினார் ஆளுகின்றார்'' என்றற்றொடக்கத்த அனந்த சுருதிகளாற் சிவபெருமான் என்று மற்றோர் நாமம் பூண்ட பிரமமே விசுவத்திற்கு (பசுபாசங்களுக்கு) அதிகம் (சிரேட்டம்).
      (ஆக்ஷேபம்) ''ததநன்னியத்துவம்'' என்னும் (உ. க. க -ஆம்) சூத்திரங் கொண்டு அபேதம் பிரதிபாதிக்கப்படலானும்,
  அதிகந்து'' என்னும் (.க.உஉ-ஆம்) சூத்திரத்தினாலே பேதம் பிர் திபாதிக்கப்படலானும், (சேதன அசேதனப்) பிரபஞ்சம் பிரமம் என்பவற்றுக்குப் பேதாபேதம் சாதிக்கப்படுகின்றதாலோ எனின்,
      (உத்தரம்) அங்ஙனஞ் சாதிக்காது விசிட்டாத்துவிதத்தைச் சாதிப்பேம்.
    கடமும் படமும் போலப் பிரமமும் பிரபஞ்சமும் அத்தியந்த பேதம் என்றும் கூறேம்; அது அகன்னியம் என்னும் பாசுருதிக்கு விரோதமுறுதலின்.
     
நாம் இப்பி வெள்ளி என்பவற்றிற் போல, ஒன்றை மித்தை என்று கூறும் அத்தியந்த அபேதவாதிகள் அன்று; பிரபஞ்சத்துக்கும் பிரமத்தின் சுவாபாவிக்குணத்துக்கும் பேதங் கூறுஞ் சுருதிகளுக்கு விரோதமுறுதலான்.
பேதாபேதவாதிகளும் அன்று; வஸ்துவிரோதவுண்மையான்.
    
ஆயின் நாம் சரீரசரீரிபோன்றும் குணகுணி போன்றுங் கூறும் விசிட்டாத்துவிதிகளே. பிரபஞ்சத்துக்கும் பிரமத்துக்கும் அருன்னியத்துவமாலது மண்ணும் கடமும் போலவும், குணமும் குணியும் போலவும் (முறையே) காரண காரியத்தினாலும், விசேஷண விசேடியத்தினாலும் வேறுபடா திருத்தலேயாம். மண்ணை விட்டுக் கடம் காணப்படாதவாறு போன்றும், நீலநிறத்தை விட்டு நீலோற் பலமில்லாதவாறு போன்றும் பிரமத்தை விட்டுப் பிரபஞ்ச சத்தி இல்லை; சத்திக்கு வேறாகப் பிரமம் ஓர்போதும் இல்லை; உஷ்ணத்தைவிட்டு அக்கினி இல்லாமை போல. எதை விட்டு எதைக் கண்ட தில்லையோ, அது அதனோடு விசிட்டந்தான். அது (குணம்) அதாவதும் (குணியாவதும்) இயற்கையே; (சூடு தீயாவதும் இயற்கை தான்). ஆகலின், எப்பிரகாரத்தானும் பிரமம் பிரபஞ்சத்தினின்று வேறுறாது. அதுபற்றி அநன்னியம் என்று கூறப்படுகின்றது. அவ்விரண்டுக்கும் வேற்றுமை இயற்கை. ஆகலின், பிரபஞ்சத்தினும் பரப்பிரமம் (அதிகம்) சிரேட்டமே. காரணமாயும் காரியமாயுமிருத்தல் (உ. க. க) ல் நிரூபிக்கப்பட்டது. ஆகலின், பேதாபேத சுருதிகளுக்கு இந்நெறி விரோதமற்றதே.

          அஸ்மாதிவச்சததனுப்பத்தி: (உ. க. உ)
      கல் முதலியவற்றிற் போல, அது பொருந்தாது
(ஆக்ஷேபம்) எப்பிரகாரத்தானும் அபேதசுருதிகளால் ஆன் மாவும் சிவபெருமானும் அபேதம் எனின்,
(உத்தரம்) அங்ஙனம் இன்று; பொருந்தாமையின். அசே தனமாகிய கல், கட்டை, மண், புல் முதலிய போல ஆன்மாவுக் கும் அறியாமையுண்மையின் முற்றறிவு முதலிய குணங்களையு டைய சிவபெருமானினின்று அவன் அத்தியந்த விஜாதீயடாம் எனக் கேட்கப்படலான், அவ்விருவரும் ஒருவராமெனல் பொருந்தாது. ஆகலின், ஆன்மாவிலிருந்து சிவபெருமான் மற்றோர் பொருளே இங்ஙனம் ஆன்மா சேதனனாயினும், சிவபெருமான் சிரேட்டகுண முடையராம் பேதத்தினால், ஆன்பா சிவபெருமானோடு ஒப்பா கான். முற்றும் வேறாகிய அசேதனப்பொருள் சிவபெருமானுக்கு ஒப்பா காதென்று கூறவும் வேண்டுமா!! எவ்வாற்றானுஞ் சுருதி ஸ்மிருதி நியாயங்களினாற் காரியமா தல்பற்றித் தம்மினின்று வேறுறாத சேதனா சேதனப்பிரபஞ்சம் அனைத்துக்கும் சர்வஞ்ஞரும் சர்வசக்தியினருமாகிய சிவபெருமான் சிரேட்டரே (விசுவாதிகரே)''
   
I.II. I. பாஷ்யத்தின் கீழ், உயிர் உடல் என்ற உபமானத்தினால் அபேதத்தை விளக்குகிறார்.'' இவை அனைத்தும் பிரமம்; தோற்றம், நிலை, இறுதியாம் இவை பிரமத்தினாலாகலின், ஒருவன் அதனை உபாசிப்பானாக'' என்னும் உபக்கிரமசுருதியிலே சிவ்பெருமானே அனைத்துக்குங் காரணராய் உபாசிக்கற்பாலரென உபதேசிக்கப்படுகின்றமையின். இச்சுருதியின் தாற்பரியம் வருமாறு : படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் பிரமத்தின்பாலன; சித்தும் அசித்து மாயுள்ள இவையனைத்தும் பிரமமேயாகலின், ஒருவன் சாந்த முடையனாய்ப் பிரமத்தை உபாசிக்க என்பதாம். சமுத்திரத்திற்றோன்றி நின்றொடுங்கும் குமிழிக்கூட்டங்கள் ஜலமாயிருத்தல் போன்று, (பரா) சத்தியாரோடியைந்த பிரமத்தினாலெய்தும் படைப்பு முதலியன அப்பிரமமய மாகவேயன்றி, மற்றோர் பிரகாரமாகக் காணப்படுகின்றில. அங்ஙனமே,

  அஹமேக : ப்ரதமமாஸம் வர்த்தாமிச பவிஷ்ஃபாமிசனான்ய : கஸ்
  சின்மத்தேவ்யதிரிக்த : (அதர்வசிரசு. க)
   ''நான் ஒருவனே முதற்கண் இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன், எனக்கு வேறாகப் பிறர் யாரும் இல்லை'' என அதர்வசிரசிலே சிவபெருமானால் நிரூபிக்கப்பட்டது. பின்னரும்,
            ப்ரஹ்மாஹம் (அதர்வசிரசு. க)
  “பிரமம் நான்'' என்றற்றொடக்கத்தவற்றாற் பிரபஞ்சம் அனைத்தும் அவர் வடிவமென விரித்துரைக்கப்பட்டது :
        ஸோந்தராந்தரம் ப்ராவிஸத் (அதர்வசிரசு. க)
     
“அவர் மறைவினும் மறைவாய் உள்ளவற்றுள்ளே பிரவேசித்தனர்'' என்னும் சுருதியிலே “பிரபஞ்சத்துட் பிரவேசித்தமை” என்றது பிரபஞ்சம் அனைத்தும் அவர் சொரூபம் என உணர்த்துதற்குப் போந்த காரணமாதலை உணர்த்திற்று. பிரமத்துக்கு வேறாகப் பிரபஞ்சத்துக்குப் படைப்புநிலை, இறுதி இல்லையாமாகலின் அப்பிரபஞ்சம் பிரமத்தினின்று வேறுபடாது. இதுபற்றியே,

      ஸக்தியோஸ்ய ஜகத்க்ருத்ஸ்நம் ஸக்திமாம்ஸ்து மஹேஸ்வர :
      ஸக்திஸ்து ஸக்திமத்ரூபாத்வ்யதிரேகந்த வாம்சதி
      தா தாத்ம்ப மாயோர்நித்யம் வஹ்நிதாஹகயோரிவ
      ஸக்திஸக்தி மதோர்யஸ்மாதபேதஸ்ஸர்வதாஸ் தித :
      அதஸ்தத்தர் மதர் மித்வாத் பராஸக்தி : பராத்மந :
      நவஹ்நேர் தாஹிகா ஸக்திர்வ்யதிரிக்தர் விபாவ்வதே

"இவ்வுலகெலாம் அவர் சத்திகளே; மகேசுவரர் சத்திமான்; சத்திமானை விட்டுச் சத்திவேறுபடாள்; (சத்தியும் சிவமுமாம்) இருவரின் தாதான்மியம் அக்கினியும் சூடும் போல நித்தியம், சத்திக்கும் சத்திமானுக்கும் எக்காலத்தும் பிரிவில்லையாமாகலின். அவ்விருவரும் குணமும் குணியுமாதல்பற்றிப் பராசத்தியார் பரமான்மாவுக்கு உரியர். அக்கினியின் சுடுஞ் சத்தி தீயினின்று வேறாகக் கொள்ளப்படுவதில்லை'' என்றற்றொடக்கத்தனவாக அபியுக்தர் உரைக்கின்றனர்.

      ஸக்த்யாதிச ப்ருதிவ்யந்தம் ஸிவதத்வசமுத்பவம்
      தநைகேனது தத்வ்யாப்தம் ப்ருதாகும் பாதிகம்யதாட்
                        (வாயு. பூ. உரு: கஅ,  )
      பராஸ்யவிவிதாஸக்தி : ப்ரபோதாநந்தவிருணீ
      ஏகாநேகஸ்வரூவேண பாதிபானோரிவப்ரபா
                            (வாயு. உத். அ: )
     ''சத்திதத்துவமுதற் பிருதிவி ஈறாயுள்ள தத்துவம் சிவதத்துவத்தினின்று பிறந்தது; கும்பமுதலியன மண்ணினால் வியாபிக்கப்பட்டாற் போல, அச்சிவதத்துவத்தினால் அது வியாபிக்கப்பட்டது; ஞானானந்தரூபமாய் விளக்குகின்றனர்'' என வாயுசங்கிதையிற் கூறப்பட்டது.

      பராஸ்யஸக்திர்விவிதை ஸ்ரூய தேஸ்வாடாவிக்
      ஞானபலக்ரியாச (சுவே.  . அ)
      ஏகோருத்ரோந்த விதீயாய தஸ் துர்ய இமாந்லோசா நீஸத
    ஈஸநீபி : பாமஸக்தியி : (சுவே. உ)

"இவர்க்குச் (சிவபெருமானுக்குப்) பராசத்தியார் சுவாபாவிகமாம் ஞானசத்தி, பலசத்தி (இச்சாசத்தி), கிரியாசத்தி எனப் பல திறப்படுவாராய்க் கேட்கப்படுகின்றனர்; எவர் ஆளுகின்றனவும் பிறப்பிப்பனவ, மாகிய பரமசக்தி கொண்டு உலகம் அனைத்தையும் ஆளுகின்றனரோ, அவர் ஏகராகிய உருத்திரர்; இரண்டாவதற்காக அவர்கள் இருந்திலர்.'' என்றற்றொடக்கத்தசுருதிகள் பரப்பிரமமானது உலகத்தைப் படைத்து ஆஞ்ஞாபித்துக் காக்கும் முடிவிலாச் சத்தியை இயல்பாகவுடையதெனக்கூறுகின்றன. அநேகஞ் சொல்லி என்! சுருதி ஸ்மிருதி இதிகாசபுராணங்களினாலும், அபியுக்தசூக்திப் பிரமாணத்தினாலும் சகல சேதனாசேதனப் பிரபஞ்ச மாகவிபூதிரூபையாய், மகாசச்சிதானந்த சத்தையாய், சுவதந்திரமுடையதாய், தேசகாலங்களினால் வரையறுக்கப்படாத தாயுள்ள பராசத்தியார் அப்பரப்பிரம சிவனார்க்கு இயல்பாய் வாய்ந்து, அவர்க்கு உருவமும் குணமுமாய் முற்றுகின்றனர். அப்பராசத்தியாரை விடுத்துப் பரப்பிரமத்துக்குச் சர்வஞ்ஞத்துவம், சர்வசக்தித்துவம், சர்வகியந்திருத்துவம், சர்வோபாசியத்துவம், சர்வானுக்கிராககத்துவம், சர்வபுருஷார்த்தஹேதுத்துவம், சர்வவியாபகத்துவமுதலியவும் இன்று. மேலும் மகேசுவரர், சிவன், மகாதேவர், உருத்திரர் முதலிய பாமநாமங்களும் அவர்க்கு எய்தா. அங்ஙனம் சர்வசேதனா சேதனப் பிரபஞ்சசரீரவிசிஷ்டமுடைய பிரமம் சர்வசப்தத்தினாற் கூறப்படுகின்றது. நீலம் என்னும் பதமானது நீலநிறத்தை மாத்திரமன்றி, தன்னையுடைய நீலோற்பலத்தையும் உணர்த்தினாற் போல, பிரபஞ்சம் என்னும் பதமும் பிரமத்தை உணர்த்துகின்றது. ஆகலின்,
ர்வோவைருத்ர: (தைத். ஆணி. . ௨௪. ௪௨)

(சர்வமும்) அனைத்தும் நிச்சயமாய் உருத்திரர்'' என்றற் றொடக்கத்த சுருதிகள் சர்வ என்னும் சப்தத்தினால் உணர்த்தப்படுவது பிரமமெனக் கூறுகின்றன. அங்ஙனமே,

        ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்.  . க. க)

    "(சர்வம்) இஃதெல்லாம் நிச்சயமாய்ப் பிரமம்" என்ற சுருதி சர்வசேதனா சேதனப் பிரபஞ்சத்தைச் சரீரமாகவுடைய பிரமத்தை உணர்த்துகின்றது. இந்தப் பிரபஞ்சம் பிரமத்தின் சொரூபமாய்த் துவேஷமுதலியவற்றுக்கு விஷயமாகாமையின், யாவரும் சாந்தமுடையாய்ப் பிரமத்தை உபாசிப்பாராக. இந்தப் பொருள் பௌமாணிகர் வாக்கினாலும் வெளிப்படுகின்றது.

விக்ரஹம் தேவதேவஸ்ய விஸ்வமேதச்சராசரம்
ஏதமர்த்தம் நஜாநந்திபவை : பாஸகௌரவாத்.
                                           (வாயு. உத். : எ)
   
வித்யேதி சேதநாம் பராஹுஸ்ததா வியாம சேத
வித்யாவித்யாத்மகம் ஸர்வம் விஸ்வம் விஸ்வகுரோர்விபோ :
ரூபமஸ்ய நஸந்தேஹோ விஸ்வம் ஸ்யபிஸேயத :
                                           (வாயு. உத். : எ)

ஸத்யேஸ்'தௌசஸச் சப்தஸ்ஸத்பிரேவ ப்ரயுத்யதே
விபரீதேத்வஸச்சப்த : கத்யதே வேதவாதி :'
ஸச்சா ஸச்சஜகத்விஸ்வம் ஸரீரம் பாமேஷ்டி :
                                           (வாயு. உத். : கக, கஉ)

வருக்ஷஸ்ய மூலஸேகோ ஸாகா : புஷ்யந்தினவயதா
ஸிவஸ்யபூஜயா தத்வத்புஷ்யத்யஸ்யவபுர்ஜகத்
                                           (வாயு. உத். : உ)
      ஆத்மா தஸ்யாஷ்டமீமூர்த்தி : ஸிவஸ்யபாமாத்மர்
வ்யாபிகேதரமூர்த்திகாம் விஸ்வம் தஸ்மாச்சிவாத்மகம்
                                     (வாயு. உத், ': உஅ)

      தேஹிநோய்ஸ்ய சுஸ்யாபி நிக்ரஹ: க்ரிய தேயதி
அநிஷ்டமஷ்டமூர்த்தேஸ்ன்னாத்ரகார்யா விசாரனா -
                                     (வாயு. உத். . ஙஉ) 

ஸ்ரவோபகார கரணம் ஸர்வா துக்ரஹணம்
ஸர்வாபயப்ராதநம் சஸிவஸ்யாராதநம்விது:
(வாயு. உத். . ௩௰)

தேவாதிதேவருடைய வடிவம் இந்தச் சராசரம்; இவ்வுண் மையைப பாசமிகுதியினாற் பசுக்கள் அறிகின்றில; சேதனத்தை (பசுவை) வித்தை எனவும், அசேதனத்தை (பாசத்தை) அவித்தை எனவும் கூறுவர்; வித்தை அவித்தை என்னும் பிரபஞ்சம் அனைத்தும் சந்தேகமின்றி வியாபகராகிய விசுவகுருவின் சரீரம்; விசுவம் அவர் வசத்ததாகலின். சத் என்னும் மொழி சத்துக்கும் சாதுவுக்கும் செல்லும் என்று சத்துக்களாற் பிரயோகிக்கப்படுகின்றது. அசத்து என்றது அவற்றுக்கு மாறானவற்றை உணர்த்தும் என்று வேதவாதிகள் கூறுவர். சத்தும் அசத்துமாயுள்ள விசுவம் அனைத்தும் சிவபிரானாருடைய சரீரம்; விருக்ஷ மூலத்திலே இறைத்த நீரால் அம்மரச் சாகைகள் புஷ்பிக்குமாறு போல, சிவபெருமானுடைய பூசையினால் அவர் சரீரமாகிய உலகம் செழிக்கின்றது; பரமான்மாவாகிய சிவபெருமானுக்கு எட்டாவது மூர்த்தங்களுள்ளே வியாபகமாகிய ஆன்மா ஆகலின், உலகமனைத்தும் சிவசொரூபம்; எந்தத் தேகமுடைய ஆன்மாவேனும் நிக்கிரகத்துக்கு ஆளாயின், அது முழுமையும் அட்ட மூர்த்த முடையார்க்கு வெறுப்பாய் முடியும்; இதனையுற்று ஆராயவேண்டியதின்று; எல்லோர்க்கும் உபகாரமாயிருத்தலும், யாவர்மீதும் அருளுடைமையாதலும், எல்லோர்க்கும் அபயப்பிரதானஞ் செய்தலுமாம் இவையனைத்தும் சிவாராதனம் என்று கொள்ப; பிரமம் சர்வாகாரமாயிருத்தலிற் சர்வம் பிரமம்" என்றும்,

            ஸாந்தஉபாஸீத (சாந். .. க)

ஒவ்வொருவரும் சாந்தமாய்ப் பிரமத்தை உபாசிக்க'' என்றும் கூறல் பொருத்தம். ஆகலின், உபக்கிரமத்திலே உபாசிக்கற்பாலதாகக் கூறப்பட்ட பிரமமே மனோமய (ஞானமய) த்துவமுதலிய தர்மத்தையுடையதாகும். (இதற்குரிய) மனோ (ஞான) மயத்துவாதி குணம் சம்சாரிக்குரிய இலக்ஷணமன்று; பிரமமானது உபாசிக்கற்பாலதாம் ஓர் வடிவம் வாயிலாகப் பரிச்சேத முறுவான்.

(இம் மொழிபெயர்ப்பு, ஸ்ரீமத். ஸ்ரீ காசிவாசி செந்திநாதய்யரவர்களின் சைவ பாஷ்யத்தினின்றும் எடுக்கப்பட்டது).
     
ஸ்ரீகண்டர் இந்தவிஷயத்தைச் சொல்லும் முறைமையிலும் ஸ்ரீமெய்கண்டநாதர் இதைப் பிரஸ்தாபித்தலிலும் கொஞ்சம் வித்யாஸம் காணக்கிடக்கிறது. ஸ்ரீகண்டர் பாதாராயணரைப் பின்பற்றினவராக இந்த சம்பந்தத்தை காரணகாரிய சம்பந்தமாககூறி அதையே ஓரற்புதமான அபூர்வபரிணாமம் என்றும் அழைக்கின்றார். சாதாரண காரணகாரிய சம்பந்தம் போலல்லாமல், முதற்காரணம் இந்த வியவஸ்தையினாலே யாதொரு மாறுபாடும் அடைகிறதில்லையென்பது அவரது மதம். அவர் எடுத்துக்கூறும் உயிர் உடல் திருஷ்டாந்தமும் காரணகாரிய சம்பந்தம் குறிக்கவில்லை. சிவஞானயோகிகள் இரண்டு விதமான தாதாத்மியங்களுக்குள்ள வித்யாஸத்தை யெடுத்தோதலுற்றார். ஒருபொருள் இரண்டாகக் காணப்படுகிறது, குணம் குணியைப்போல. இது ஒருவிதம். மேலும் இரண்டு பதார்த்தங்கள் ஒன்றாகி ஒன்றோடொன்று சம்பந்தப்படவுங் கூடும், இதுவும் தாதாத்மியமாகும். இந்தக் கடைசி சம்பந்தந்தான் அத்வைதமென்று கூறப்படுவதொன்று. முந்தினது தாதாத்மியமென்று மாத்திரமே அறியப்படுகிறது. ஸ்ரீ கண்டர் முற்கூறிய தாதாத்மியத்தையே யநுசரித்ததாகக் காணப்படுகிறது.
     
மோக்ஷமூல பட்டாசாரியர் என்ற வித்வசிரோமணியார் கபிலருடைய சாங்கியத்துக்கும், சேஸ்வசாங்கியம் என்றழைக்கப்பெறும் பதஞ்சலியாரது யோகத்துக்கும் உள்ள வித்யாஸத்தைச் சரிவரக் கண்டவராகக் காணப்படவில்லை. அவர் எழுதிய ஆறுசாஸ்திர சம்பந்தமான தத்வஞான நூலின்கண்ணே, “கடவுள் மாட்டு பக்தி'' யென்றெழுந்த சூத்திரம் அவ்வளவு அதிக முக்கியமான தொன்றன்று எனக் கூறுகின்றா. கைவல்யத்தையடைதற் கேற்பட்டுள்ள பல சாதனைகளுள் அஃதொன்றே எனவும் கூறுகின்றார். கௌதமபுத்தர் கூறிப்போந்த நிர்வாண'' தசைக்கும், சித்தாந்திகள் அது சம்பந்தமாகக் கூறியிருக்குமவற்றிற்கும் உள்ள வித்யாஸத்தைக் குறித்து யாம் ''புத்தமதம்'' என்ற தலைப்பின்கீழாக சிவஞான சித்தியாரின் பரபக்ஷத்துக்கு யாமெழுதிய மொழிபெயர்ப்பு உரையிலும், நன்மைதீமையுணரும் அறிவு விருக்ஷம்' சம்பந்தமாகயாம் எழுதிய வியாசத்திலும் யாம் விரிவாக எழுதியிருக்கின்றோம். புத்தமதம், பாசக்ஷயம், அல்லது ஆசை துன்பங்களினின்றும் விடுதலை மட்டும் கூறலாயிற்று. ஆனால் அதற்கு அதிகமாக சித்தாந்தம் பிருஹ்மதிர்வாணம் அல்லது சிவா நுபவமாகிய பதிஞானத்தையும் வற்புறுத்திக் கூறுகிறது. மேலும் பதிஞானமின்றி பாசக்ஷயம் சாத்தியப்படாதென்று நாம் அங்கே நிரூபித்திருக்கின்றோம்.

சாங்கியமதஸ்தர்களும் யோகமதஸ்தர்களும் கூறுமாறு இது ஸ்படிகம் அல்லது நிழலாடியும் வர்ணபேதங்களும் என்ற உதாரணத்தால் அறியக்கூடிய தொன்றாயுள்ளது. நிழலாடியின் அருகாமையில் யாதொரு சிகப்பு நிறமுள்ள புட்பத்தைக் கொண்டுவந்து வைப்பதினாலே, அந்த சிகப்பு புட்பத்தினாலே நிழலாடி ஒரு வித நிறத்தையடைந்து போகிறது. அப்படியே, ஆந்மாவானது பிரபஞ்ச சம்பந்தம் பெற்றுள்ள போது, பிரபஞ்சத்தால் ஒருவித கல்மிஷத்தை யடைந்துபோகிறது. அதனால் சாவும், பிறப்பும், துன்பமும் அதற்கு நேரிட்டுவிடுகிறது. சாங்கியமதப்பிரகாரம் ஆத்மாவானது அதனிடத்தில் பிரதிபலியானின்ற வர்ணங்களினின்றும் தான் வேறான பதார்த்தம் என்ற உண்மையை உணர்ந்தவுடனே அது பாசநீக்கம் அடைந்து போகிறது என்று அறிகிறோம். வர்ணங்களாலும் பிரதிபலனத்தினாலும் அது யாதொருசலனமு மடைகிறதில்லையாம். அந்தஞானம் பிரதானத்தினுடைய கர்மத்தால்தானே அதற்குக் கிடைக்கிறதென்ப. ஆனால் ஆந்மாவிற்குத்தனது சொந்தமுயற்சிமாத்திரத்தானே இந்தஞானம் கைவரக் கூடியதாயுள்ளதா? அல்லது பிரதானத்தினுடைய முயற்சியினாலேனும் இது கிடைக்கக்கூடியதா யுள்ளதா? அப்படியானால், அந்த திருஷ்டாந்தத்தையே நாம் பரீக்ஷித்துப் பார்ப்போமாக. கண்ணாடியும் செம்பருத்திப்பூவும் ஒன்றையொன்று அடுத்துவந்துசேர்ந்து நின்றது. உடனே கண்ணாடியில் பிரதிபலனம் உண்டாயிற்று.

ஆனால் அவைகள் இரண்டும் ஒன்றையொன்று சமீபத்தது. கண்ணாடியின் முயற்சியினாலா? அல்லது அந்த சிகப்புபுட்பத்தின் முபற்சியினாலா? எப்படி யோ! அவைகள் அப்படி ஒன்றையொன்று சமீபித்து நிற்க நேர்ந்தனவென்று நாம் கொள்வோமாக. அப்படி வராமலிருப்பதும் அவைகட்குக் கூடாதகாரியம் போலும். அப்படி யொன்றையொன்று நெருங்கி நின்றபின்னர், கண்ணாடியில் உண்டாயிருக்கும் பிரதிபலனம் எப்படி கெட்டழிந்து ஒழிந்து போகச் செய்வது? இந்த காரியமானது கண்ணாடி யின் எந்தவிதமான முயற்சியினாலாவது அல்லது செம்பூவின் எவ்வித முயற்சியாலாவது ஆகக்கூடியதொன்றா? சாங்கியமதப்படி ஆந்மாபிரதானத்தைத் தவிர்த்தும், (நிழலாடி - - சிவந்த புட்பத்தைத் தவிர்த்தும்) வேறு யாதொரு பதார்த்தமும் பேசப்படாமையால் இந்த நீக்கம் அல்லது ஒழிவு எவ்விதம் சாத்தியமாதல் கூடும்? சாங்கிய மதஸ்தர்கள் கூறுமாறு விசாரித்துப் பார்த்தால் இந்த கஷ்டத்தினின்றும் விடுபடுதற்கு யாதொரு வழியுமில்லை; இக்கூட்டுறவும் என்றும் நீங்காது; வீடும் பேறும் என்றும் உண்டாகா. பெயரால் மட்டுமொழிய பிறப்பிறப்பென்னும் சம்சார சக்கரமும் என்றும் சுழல வேண்டியது தான்; இது நிச்சயம். ஆயின் யோகமதஸ்தர்களும்கூட இந்த உபமானத்தை யுதகரித்துக் காண்பிக்கின்றார்கள் ஆனபடியால், அந்த கண்ணாடியில் உண்டான பிரதிபிம்பம் கெடுவதற்கு ஏதாவது மார்க்கமுண்டோ? உண்டெனக் கூறுவாம்.

ஆனால் அந்த பிரதிபிப்பம் தான் எவ்விதம் உண்டாயிற்றேன்ற விஷயத்தை நாம் கவனிக்கவேணும். யாதொரு கண்ணாடியும் யாதொரு புட்பமும் நெருங்கிநின்றநிலையில் எப்பவும் மாறாதிருக்க இரவுகாலத்தில் பிரதிபலனத்தை நாம் காணக்கூடுமாவென்று யோசித்துப் பார்ப்போம். கூடாது. ஏன் கூடாதோ? ஏனென்றால் புட்பத்தின் பிரதிபலனமானது க்ஷ கிழலாடியில் தோன்றுவதற்கே அத்யாவசியமான ஆதாரமானது சூர்யனது பிரகாசமேனும் அல்லது வெளிச்சமேனும் அவசியமாயுள்ளதல்லவா? இப்போது இந்த உவமானத்தை நாம் உபயோகித்துவந்த காலமுழுதும் நாம் ஒன்றை மறந்தோம். அது யாது? சூர்யனுடைய ஒளி இதைச்செய்வதற்கு முக்கியமான கருவியென்பதே !

நல்லது இரவுகாலத்தில், யாதொரு பிரதிபலன மில்லா தபொழுது, யாதொரு கல்மிஷத்தின் ஞானம் இல்லாதபோழ்து, இதுதான் ஆத்மாவின் கேவல அவஸ்தையென்று நாம் சொல்வது. ஆத்மாவின் கேவலாவஸ்தையில் அதற்கு எந்தவிதமான இச்சையும் கிரிபையும் இல்லாமற்போகின்றது. அது தான் யாதொரு துன்பத்தையும் அடைந்திருப்பதாக அதற்கு அப்போது பிரத்ஞையே கிடையாது. அந்த துன்ப அவஸ்தையினின்றும் தான் விடுபட்டுப் போதற்கு அதற்கு ஒருமார்க்கமும் தேடக்கூடிய அறிவுமில்லையே ! சூர்யன் உதயமானவுடனே கண்ணாடியின்மீது பிரதிபலனம் விழலாச்சுது. இந்த சேர்க்கையினாலேயே, ஆத்மாவின் இச்சாஞானக் கிரிபைகள் இரண்டும் தூண்டப்பட்டு ஆன்மாவிற்கு சுகதுக்க அறிவும் உண்டாய்விடுகிறது. பாபமும் அது செய்பவாகிறது. அதனால் துன்பமும் அநுபவிக்கிறது. அதனானே அநுபவஞானம் ஆன்மா அடையலாச்சுது. அதனானே பாசநீக்கமும் இறுதியில் அஃதடைகிறதன்றோ?
     
சூர்யனானவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே போகப்போக, ஸ்படிகத்தைப் பின்னும் பின்னும் நெருங்கி நெருங்கி வரவும், சிவந்த புட்பத்தின் நிழலானது அந்த ஸ்படிகத்துள்ளே கொஞ்சம் கொஞ்சபாகக் குறைந்து குறைந்து போதலனுபவம். இறுதியில் அதிசயமொன்று காண்மின்! கடுப்பதற்காலத்தில் சூர்ய பகவான் ஸ்படிகக்கல்லை எவ்வளவு சமீபாக நெருங்கிச் சேறல் சடபடாமோ அவ்வள.) சமீபாக நெருங்கி கிற்றலும் அப்பளிங்கும் நாம் பார்க்கமுடியாத சோதியொளியால் மூடப்பட்டுப்போம். அதேசமயம், பிரதிபிம்பமும் அழிந்து போம். முற்கூறிய அவஸ்தையில், கண்ணாடி. சிவர், பட்டத்தோ டொன்றுபட் டிருந்தது. (பந்தம். அல்லது ஆவந்தோ டத்துவிதமான சபயம்) பிற்கூறிய அவஸ்தையிலோ, கண்ண சூர்யனோடும் ஒன்றாகப் போய்விட்டது! (மோக்ஷமல்லது கடவுவோடத்வைதம்) இதுவே ஆஸ்திக சாங்கிய மதஸ்தர் அல்லது போகமதன் தர் தம் கூற்றென்க. அதனானே,' “கடவுளிடம் பிரேபையுடன் சாரியையாதிகள் செய்தல்'' என்ற விஷபத்தின் முக்யத்வம் இங்கே இனிது பெறப்படும் ஆனால் முதற்கண் சித்தரோதம்என்ற தருமம் உள்ளபடியே  பக்தனொருவனுக்கு அமைதல் வேண்டியது இன்றி யமையாததான்றென்க.|
     
      ''அகனமர்ந்து அன்பினராய் அடிபசைச்செற்று
      ஐம்புலனு மடக்கிஞானப் புகலுடையோர் தம்முள்ளப்
      புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்.''           (தேவாரம்).
     
ஆன்டாவானது தனது முயற்சியாலேனும், அல்லது பிரதானம் என்றதொன்றின் முயற்சியிலானாலும்கூட தனது மலத்தை யொழித்துவிட முடியாது. அவைகள் இரண்டும் தத்தம் சொந்த சங்கல்பத்தாலேனும் தத்தம் சொந்த சக்தியினாலேனும் உண்டைவல்லபத்தை யடையப்பெறடாட்டா. பரமேஸ்வரனது உத்கிருஷ்டமான சங்கற்பமும் சக்தியும், "யான் அநேக வுருவங்களை யடைவேனாக !'' வென்று நினைத்தாலன்றி ஸ்ருஷ்டிக்கும் இடம் கிடையாது. பரிணாம கிரமத்துக்கும் அவகாசமேயிருந்திராது. பிரபஞ்சத்தினின்றும், ஆசையினின்றும், பிறப்பிறப்பில் வைத்த தாகத்தினின்றும் பந்தநீக்கம், கடவுளிடத்தில் ஆன்மாதனது பற்றையெல்லாம் வைத்தாலன்றி அல்லது அவன் திருவடித்தொண்டையே பொருளாக மேற்கொண்டொழுகினா லன்றி அசாத்யமாகும். சிவஞானபோதம் 10 - 11 - வது சூத்திரங்களில் பாசட்சயமும் பதிஞானமும் கூறப்போந்து இது தான் மலத்தையடியோடொழித்தற்கு ஏதுவென்று பிரகாசபாகக் காண்பிக்கப் பட்டிருக்கின்றதறிக. இந்த சாதனைகள் தாம் யாவையென்றாலோ கூறுதும். கேண்மின்.
     
கடவுளோடும் அத்வைதமாதல், நம்முடைய காமங்களையெல்லாம் இறைபணியாக்கல், கடவுளிடத்தில் இடையறாது அயரா அன்பு செலுத்தல். இவ்வித சிவார்ப்பணத்தினாலும் சிவபக்தியினாலும் ஆத்மா சிவனது ஆணைக்கு அடைந்து நடந்து யான் எனது என்னும் செருக்கறுகின்றது. கர்மபந்தமும் ஆணவயிருளும் அதைவிட்டு நீங்கிப்போகின்றன. அந்நிலையில் ஆத்மா இறைவனுடைய அருட்பெருங்கடலில் ஆழ்கின்றது.
     
கேவலம் அன்பேயுவமான இறைவனிடம் செலுத்தப் புகுந்த இந்த அன்பும் அடிமைத்திறமும், ஒருகுடி வெறியனுடைய தணிக்கமுடியாத தாகத்தை போன்றும்மை மறுபடியும் மறுபடியும் ஈர்க்கும் உலகவின்பம் போலல்லாமல், நம்முடைய முழு இச்சையினையும் பூர்த்திசெய்கிறது. உள்ளபடியே அஹங்கார ஒழிவினாலும் அன்பு பூரித்து நிற்றலினாலும் நம்முடைய உடம்புமுயிரும் அவன் பணியில்நின்ற வெல்லையில், இருகரையு முடைத்துக்கொண்டு புரண்டுபோகும் வெள்ளம் போலவே நம்முடைய ஹ்ருதயங்கள் இந்த அற்புத ஆனந்தத்தாலும் சுகத்தாலும் சந்தோஷத்தாலும் மூடப்பட்டுப் போகிறது. இந்த ஆநந்தம் நிறைகிறபோது தான், அவன் கடவுளாகிய ஆனந்தசாகரத்தில் தேக்கித் திளைக்கின்றான். கடவுளிடத்திலேயே சந்தோஷிக்கின்றான். கடவுளிடத்திலே ஓய்வையு மடைகிறான், மாண்டூக்ய உபநிடதம் கூறியபடி. (III. 1. 4.) அப்போதே அவன் இறைவனை நேசிக்கின்றான். சிவனிடம் பிரீதியெல்லாம் செலுத்தலானான். பராபரனிடம் தேக்கித் திளைக்கின்றான். கடவுளிலேயே சந்தோஷிக்கின்றான். ஸ்வராஜ்யமு மடைகிறான். எல்லா உலகங்களிலும் பிரபுவாகவும் எஜமானனாகவும் விளங்குகின்றான் - சாந்தோக்ய உபநிடதம் கூறியபடி. (VII. 25. 2.)
   
இந்த மாதிரியான ஸ்வராஜ்ய சாம்பிராஜ்ய அவஸ்தையிலே. அவன் கடவுளால் பூர்ணமாக நிறைவிக்கப்பட்டுப் போனவுடனே அவன் அங்கே உலாவித்திரிந்து அவன் சிரித்தாலும், சாப்பிட்டாலும், விளையாடினாலும், சந்தோஷித்தாலும், பெண்கள் வாகனாதிகள் பந்து சனங்களோடு சந்தோஷித்தாலுமே (சாந்தோக்ய உபநிடதம் VIII. 12. 3). இந்த கர்மங்களெல்லாம் அவனையசைக்கவே அசைக்கமாட்டா. எப்படி யென்றால், யாதொரு அக்நிஸ்தம்பம் பழகிய வொருவனை நெருப்பு தீண்டமாட்டாதது போல. (சிவஞானசித்தியாரின்கண் சொல்லி யிருக்கும் உண்மையைத் தரிசிக்க X. 5. 6.) இந்நிலை, பௌத்தர்கள் சாங்கியர்கள் முடிவு நிலையினின்றும், வேறுபடுவதை நாம் கவனிக்க வேண்டும். பாதஞ்சலரும் சித்தாந்த சீலர்களும் சொல்லும் பட்சம், இறைபணியும் அயரா அன்புமின்றி மோட்சம் என்றும் கிடைக்கவே கிடைக்காது. இதனை மிகவும் கவனிக்கற்பாலது.
   
திருவள்ளுவ நாயனாராலும் பரமேஸ்வரனிடத்து யாம் வைத்த அன்பு மாராமையு மாத்திரத்தினாலேயே நம்முடைய பவத்தை நாம் போக்கக்கூடுமென்ற உண்மை வெகு அருமையாகப் பிர காசப்படுத்தப்பட்டுள்ளது... -

பற்றுக பற்றற்றன் பற்றினை யப்பற்றினைப்
பற்றுக பற்று விடற்கு

''சார்புணர்ந்து சார்புகெடவொழுகின் மற்றழித்து
சார்தரா சார் தரு நோய்"

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.''
    
      இந்த அநுபவத்துடனும், கிறிஸ்தவர்கள் இன்பத்துடன் ஈடுபடுவதற்காகச் செய்யும் கர்மங்களை பொத்திட்டுப் பார்க்க.  இவ்வூனின் துன்பங்கள் நின்றுபோகக் கூடுமானால், பூமியிலுள்ள பிரதீகைகள் ஒழிந்து போகக்கூடுமானால், ஜலத்திலும் காற்றிலும் சஞ்சரிக்கும் பதார்த்தங்களின் விக்ரஹத் தோற்றங்கள் ஒழிந்து போகக் கூடுமானால், வானத்தின் துருவகக்ஷத்திரங்கள் ஒழிந்து போமானால் - உள்ளபடியே ஆன்மாவும் தன்னைத்தானே ஒழித்து நிற்குமானால் - தன்னை நினையாமலிருந்த நியாயத்தாலே தன்னைத்தானே ஆத்மா யிக்குமானால், எல்லா மதஞானங்களும் மறைந்து போகக் கூடுமானால், எல்லாச் சப்தங்களும் எல்லாக்குறிகளும் இன்றிருந்து நாளை மறைக்கூடிய யாவத்பதார்த்த ஞானமும் மறைந்து போகக் கூடுமேபானால், யாராவது ஆண்டு கேட்கக் கூடியவர்கள் ஏற்பட்டிருப்பார்களாமானால், இவை யெல்லாம் சொல்லு வதிதுவே!

நாம் நம்மையே உண்டாக்கிக் கொள்ளக்காணோம். எப்போதும் அழியாதுள்ள அவனே நம்மை உண்டு பண்ணினான்.'' அப்படிச் சொல்லியான பிறகு, சப்தமுமடங்கிவிடக் கூடுமேயாயின், - அவைகள் செய்ததெல்லாம் கூடி நம்முடைய சுரோத்தி ரோந்திரியத்தை அவைகளை யுண்டுண்ணிய அவன் சந்ததியிற் கொண்டு சேர்த்ததொன்றேயென்க, - அவன் தானே பேசுவானாமாயின், - அவைகள் துவாராவல்ல, அவன் துவாராவாகவே அவன் நம்மிடம் பேசுவானாயின் - நாம் அவனுடையவார்த்தையைக் கேட்டறிவோம். ஊன் சம்பந்தம் பெற்ற யாதொரு நாவினாலன்று! அல்லது தேவதூதன் வாக்கினாலுமன்று! அல்லது இடியின் கர்ச்சனை யினாலன்று, அல்லது யாதொரு விளங்கா உவமானத்தினாலன்று ஆனால் மற்று! நாம் அன்பு வைத்து நேசிக்குப் பதார்த்தங்களிலே அவன் சொல்வதை நாம் சிரவணம் செய்தல் சாலவடையும். இவை களில்லாமலேயே அவன் கூறுவதை நாம் நேரிலேயே பிரத்யக்ஷ பூர்வகமாக கேட்டறிவதும் முடியும். (ஏனென்றால் நாமும் இப்போது நம்முடைய கவன முழுமையும் சுரோத்திரேந்திரியத்தின் கண்னேயே செலுத்தி எல்லோரும் துரிதமான எண்ணம் துவாரா அழியாது இடையறாது கலந்திருக்கும் ஞானத்தைஸ் பரிசிக்க நேர்ந்த படியால்,) இதே அவஸ்தையைச் சற்று நீடித்து நிற்கப் பழகினோமாயின், இதை னேகமாக விரோதித்து நிற்கும் இதர அவஸ்தைகளை அங்கே தலைகாட்ட வொட்டாமல் அடக்கிக்கொண்டோமானால், இந்த அநுபவம் ஒன்றே நம்மை சுவீகரிக்கக் கூடுமேயானால் அது நம்மைவிழுங்கிப் போடுமேயானால், கான்பானை இந்த அகவின்பத்தினிடையே சுருட்டிவைத்து விடுமாயின், இவ்வொருக் கண அநுபவம் வாழ்நாள் முழுதும் நீடிக்குமானால், அது உன்னுடைய எஜமானின் சுகநிலைப்பில் நீநுழைத்து சுகிக்கக்கடவாய் என்பதின் உண்மையை விளக்கவில்லையா? (அகஸ்டின் என்ற சித்தர்).

முன்னர் நாம் ஸ்படிகமும் - வர்ணங்களும் என்ற திருஷ்டாந்தத்தையே உபயோகப்படுத்தி யிருக்கின்றோம். அது சிவந்த நிறப்புட்ப திருஷ்டாந்தமாயிலும் சரியே. அல்லது பல நிறமான மேகஜால திருஷ்டாந்தமாயினும் சரியே. சுத்த ஜலமானது தனது சொந்த சுவாபத்தினாலேயே ஸ்படிகம்போன்ற வஸ்துவாயுள்ளது. ஒரு, பல பட்டைகளையுடைய கண்ணாடியானது வெளிச்சத்தைப் பிரித்தும் பிரதிபலித்து நிற்பதும் போலவே, * சுத்த ஜலமும் சூர்ய வெளிச்சத்தைத் தன்னிடம் பிரித்தும் பிரதிபலிக்கச் செய்தும் விளங்கா நின்றது. கண்டீர். இந்த ஜலமானது அதனிடம் சோந்த அழுக்குகாரணமாக வர்ணமாறியும் சலனமடைந்தும் கிடக்கிறதறி திர், நம்முடைய அழுக்கும் அஹங்காரமும் ஒழிந்தவுடனே, ஜலமானது அதனுடைய சொந்தமான பரிசுத்த சுபாவத்தையடைந்து விடுகிறதைக் காண்மின். அப்போது பரவஸ்துவின் பிரதிபலனம் அதனிடம் அற்புதமாக அது விழப்பெறுகிறது. இது தான் முன் சொன்ன புகழ் பெற்ற பாடலின்கண் போந்த அற்பு தவுண்மையென்றறிக.

      உரையற்ற தொன்றையுரை செய்யுமூமர்காள்
      கரையற்ற தொன்றைகரை காணலாகுமோ
      திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்கு
      புரையற் றிருந்தான் புரிசடையோனே.              - திருமந்திரம்.

* இந்த அற்புதத்தை, அதாவது சலம் ஒளியின் ரேகைகளைப்பிரித்து வானவில்லில் காட்டுவதபோல். காட்டல், நந்தியாலுக்கடுத்த மகா நந்தி க்ஷேத்திரத்திலுள்ள திவ்வியபுஷ்கரணியில் காணலாம்.

ஜே.எம். நல்லசாமி பிள்ளை
சித்தாந்தம் – 1912 ௵ - செப்டம்பர் / நவம்பர் ௴                          

No comments:

Post a Comment