Saturday, May 9, 2020



ஞானம்.
ஞானமென்பது அறிவு என்னும் பொருள் தருவதோர் வடசொற்றிரிபாம். அறிவு என்பது ஒருபொருளை உள்ளவாறு அறிதல், ஒரு பொருளை உள்ளவாறு அறிதலெனவே, அறிவானும், அறியப்படு பொருளும், அறிதற்குக்காரணமும், கருவியும், காலமும், அறியாமையானுளதாய துன்பமும் அறிந்தபின் எய்துவதாய இன்பமும் எனப்பலவும் ஒருதலையான் ஆராயற்பாற்று. எப்பொருளையும் காணலுறுவதும், கேட்பதும் நுகர்வதும், சுவைப்பதும், உற்றறிவதும், கண், செவி, நாசி, நாமுதலிய ஐம்பொறிகளேயாயினும் அவையாவும் அறிவில் பொருள்களாகலான் அறிவனவன்று, அற்றேல் இவை தம்மை ஞானேந்தேரியங்கள் என்றும் ஐம்புளன்கள் (புலன் - அறிவு) என்றும் சு.றுவதெற்றுக்கோவெனின் அவை ஒரு பொருளை அறிதற்கு வாயிலாதல் பற்றியே என்பது. உறக்கத்தும் பிணக்கிடையினும் கண், செவி முதலிய பொறிகள் ஒரு பொருளைக் காண்டலும் கேட்டலும் இம்மை கண்கூடாக அறியப்படுதலின் அவை அறிவுடையனவாகா வென்பது தெற்றெனத் தெளியப்படும். இனி, ஐம்பொறிகள் வாயிலாதலே யன்றி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவும் ஒரு பொருளை அறிதற்கண் வாயிலா வனவாம். இவை தாமும் தாமே அறியவல்லன அல்ல வென்பது ஒன்றன் தொழிலை மற்றொன்று செய்யாமையானும், ஒன்றறிந்தது பிறிதொன்றுணராமையானும் இனிது உணரப்படும். இனி, அறிவான் யாபோவெனின், இவற்றையெல்லாங் கருவியாகக்கொண்டு அறிபவன் ஆன்மாவாம், ஆன்மா எக்காலத்தும் அழியாத அறிவிப்பொருள் என்பது பொருந்து மாற்றானும் அளவைகளானும், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய முழுமுதல் ஞான நூல்களானும் பெறுதும். அறியப்படு பொருள்கள் இந்நிலவுலகத்திற் காணப்பட்ட அறிவுப்பொருள், அறிவில் பொருள் என இருகூற்றினடங்கும் எல்லாப்பொருள்களுமாம். கண், செவிமுதலிய பொறிகளானறியப்படும் பொருள்கள் காட்சிப்பொருள்கள் என்றும், மனமுதலிய கரணங்களான் குறித்துணரப்படுவன கருத்துப் வனபொருள்களெனவுங் கூறப்படும். உதாரணமாக, நிலம், நீர், தீ, வளி, முதலியன காட்சிப்படுவனவாய உருவப்பொருள்கள். ஆகாயம், அருவப்பொருள். கருமை, செம்மை, நன்மை, தீமை, காதல், அன்புமுதலியன மனத்தாற் குனித்துணரப்படும் கருத்துப்பொருள்கள். இனி உள் பொருள், இல்பொருள், மெய்ப்பொருள், பொய்ப்பொருள், நித்தி யப்பொருள், அநித்தியப்பொருள், இயங்கியற்பொருள், நிலையியற் பொருள் முதலிய பலவாற்றானும் பொருள்கள் பகுத்தோதப்படும், அவற்றினியல் பெல்லாம் விரிப்பிற்பெருகும். அறிவு நூல்கள் வாயிலாக உணர்ந்து கொள்க. இனி, மனத்தாலுணரப்படும் பொருள்கள் முதற்கண் ஐம்புலன்களானு மறியப்பட்ட பின்னரே அறியப்படும். யாங்ஙனமெனின், கருமை, செம்மை, முதலிய பண்புகளை அறியலுறு வான் ஒருவன் அப்பண்புகளையுடைய பண்பிகளைக் கண்டாலன்றி உணர்தல் ஏலாது அன்பு, காதல், அச்சம் முதலியவற்றை உணர்தலுறுவான் முன்னர் அன்புடையார் மாட்டுஉளதாகும் கண்ணீரரும் பல், மெய்ம்மயிர் நிறுத்தல், அளவளாவல், முகமலர்ச்சியோடு முகத்தவை மொழிதல் முதலிய மெய்ப்பாடுகளையும், செயல்களையும் ஐம் பொறிகளான் அறிந்தாலன்றி உணர்தல் கூடாது. அச்சம் முதலிய வற்றிற்கும் இவ்வாறேகொள்க. இந்நுணுக்கங்களையெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலிற் பெரிதும் திறமுறத்தெளித்துக் கூறினார், ஆண்டுக்காண்க. எனவே, மனவறிவு ஐம்பொறி வாயிலாகவே நிகழப்பெறுமென்பதும் அருவப்பொள்கள், உருவப் பொருள்களின் இயல் புணர்ந்த பின்பே உணரப்படுமென்பதும் பெற்றாம். அற்றேல் கண், செவிமுதலிய இந்திரிய உணர்ச்சியில்லாக் குருடு, செவிடு முதலியன மனத்தானறிதலின்றோவெனின், நன்று கடாயினாய் கண்ணறிவில்லாப் பிறவிக்குருடன் ஒருவன் பொருள்களின் வடிவம், நாற்றம், ஓசை முதலியவற்றை ஏனைப்புலன்களால் உற்றும், நுகர்ந்தும் கேட்டும் அறிதலின்றி நிறம் முதலியவற்றை அறிதலிலன். அவ்வாறே செவிடனும் ஓசையை ஓராற்றானுமறி தலிலன். ஆகலின் இவர் கட்குக் காணாப்பொருள்வயினும் கேளாப்பொருள்வயினும் மனவறிவு இன்றென்க. ஒருபொருளைக் கட்புலனாற்காணாரும் ஒரொலியைச் செவிப்புலனாற் கேளாரும், அக்காண்டல், கேட்டல் உடையவேறொருவர் உரைப்பக்கேட்பின் அவர்தம் உள்ளத்தின் கண் உடனே அவற்றைக்குறித்து ஒருவகைய உ.ணர்ச்சி தோன்றி நிலையுதலுறும் அது பெரும்பாலும் திரிபுணர்ச்சியே. அதனையொத்த உணர்ச்சியே அவர்கட்குளதென்பது. இனி, கண், செவி, முதலிய பொறிகள் யாவும் பழுதின்றிப் பெற்றாருள்ளும் அவரவர் பயிற்சிக் கேற்கப் பெரிதும் வேற்றுமை உள்ளதை அனுவத்திலறிகிறோம். அவ்வாறே மனம அறிவு முதலிய அகக்கருவிகளும் ஒருசிலர்க்கு மாத்திரம் விளங்கிக் 'கிடப்பதும் பலர்க்கு விளங்காமற் கிடப்பதும், ஒருவர்க் கொருவர் வேற்றுமை பெரிதுடைத்தாதலும் அனுபவித்தறியற்பாலது.
இனி, அறிதல் பொதுவகையான் அறிதலும் சிறப்புவகையான் அறிதலுமென இருதிறப்படும் பொதுவகையான் அறிதலாவது ஒரு மரத்தைக்கண்டு ஐயவுணர்ச்சி, திரிபுணர்ச்சி இன்றி இதோ தோன்று கின்ற உருவமரமென்னுந் துணையுணர்தலாம் சிறப்புவகையான் அறிதலாவது அவ்வாறே ஒருமரத்தைக்கண்ணுற்று ஐயந்திரியின்றி இன்னபாரம், இவ்வியல்பிற்று, இவ்விவ்வினைகட கேற்றது, இவ்விவற்றிற்கு எலாதது என்று இன்னோரன்னதன் இலக்கணமெல்லா முணர்தலாம். ஐயமாவது இப்பியைக்கண்டு இப்பியோ வெள்ளியோ எனதலைப்படாது நிற்றல். திரிபாவது இப்பியை வெள்ளி யென்றே துணிந்து கோடல், இனி அளவை நூலார் மேற்கூறிய பொதுவறிவு, சிறப்பறிவுகளை முறையே நிருவிகற்பக்காட்சி, சவிகற்பக்காட்சி என்பர். இனி பொதுவிற்பொது, பொதுவிற் சிறப்பு, சிறப்பிற் பொது, சிறப்பிற் சிறப்பெனவும் நுண்ணுணர்வுடையோர் கூர்ந்தோதுவர். அவற்றினியல் பெல்லாம் உய்த்துணர்ந்து கொள்க நிற்க, பொருள்களை உள்ளவாறுணராமல் பிறழவுணரின் அது திரிபுணர்ச்சி என்றுரைக்கப்படும். இனி, ஒருபொருளை மயக்க உணர்தலும், விபரீதமாக உணர்தலு முறையே மயக்க உணர்ச்சி யென்றும், விபரீத உணர்ச்சி யெனவும் கிளந்தோ தப்பெறும் அறியாமை என்பது ஒருபொருளினுண்மை தெரியாமை. உண்மைகண்டு உளதாந்தன்மை. உதாரணமாக, ஆன்மா வென்றொரு பொருளுண்டென்பது கூட அறியாமை. திரிபுணர்ச்சி, மயக்க வுணர்ச்சி முதலியனவும் மெய்ம்மை உணராமைக்காரணம்பற்றி அறியாமை எனவும் ஒரோவழிக் கூடப்படும். இதனை, 'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினுமப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு' என்னுந் திருக்குறளானும் அதற்குப்பரிமேலழகியார் எழுதிய உரையானுமுணர்க. ஒருபொருளை உள்ளவாறு அறிதற்குக் கல்வி ஒருதலையாக வேண்டப்படும்,
தொட்டனைத்தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறு. மறிவு, எனவும் விலங்கொடு மக்களனையர் இலங்கிய நூல், கற்றாரோ டேனையவர்' எனவும் போந்த அருமைக்குறு வெண்பாட்டுக்களின் கருத்தை ஓர்ந்துணர்க. கல்வியின் றெனினும் கேள்வி ஒருவற்குப்பெறி தும் வேண்டற்பாலதாம். 'செவிச் செல்வஞ் செல்வத்துட் செல்வமச் செல்வஞ், செல்வத்து ளெல்லாந்தக' என்றும் 'கற்றில னாயினுங் கேட்க' என்றுங் கூறினார் பொய்யில் புலவரும். இனி, ஒரு பொருளை அறியாமையின் விளையுந் துன்பம் எடுத்துக்கூறல் வேண்டா. அனுபவத்தானுணரப் படுவதொன்றேயாம், அவ்வாறே, முன்னரறிந்தில்லா ஒருபொருளை அறிவதனான் உண்டாம் இன்பமும் கழியவும் பெரிது என்பது அனுபவத்தானறிந்ததேயாம். நிற்க, ஈண்டு ஞானம் என்ற தின்கண் மேற்கூறப்பட்டனயாவும் அடங்கப் பெறுமெனினும் சிறப்பாகக் கொள்ளப்படும் மெய்யுணர்ச்சியாம். பொய்யுணர்ச்சி என்பது மெய்ம்மையாக உள்ள தத்துவங்களின் உண்மையும். ஐம்பெருபூதமும், அவற்றின் இலக்கணமும் முதலிய பல்வகைப்படும்.

இக்கருத்தே பற்றியன்றே தெய்வப்புலவரும்  'அறிவுடைமை' என்றோர் அதிகாரம் வகுத்து அரசியலிலமைத்ததூஉம், 'மெய்யுணர்த' லென்றோர் அதிகாரம் வகுத்துத் துறவியனிலமைத்ததூஉமென்க, இவ்.வாற்றியப்படும் ஞானம் தத்துவஞானம் எனவும் சிறப்பு உண்மையறிவு எனவும் ஒறப்படும், அஃதாவது பிறப்பினையும், பிறப்பின் இன்பதுன்பங்களையும் வீட்டையும் அதனை ஒருதலையான் எய்தற் குரிய சாதன மின்னதென்பதும் இவைபோல்வன பிறவும் அறிதல். மெய்ப் பொருள் காண்டலாவது 'கோச்சேரமான் யானைக்கட் சேஎய் மாந்த.ஞ்சேரலிரும் போறைஎன்ற வழி அரசனென்பதோர் சாதியும், சோமானென்பதொரு குடியும், வேழநோக்கினை யுடையானென்பதோர் வடிவம், சேயென்பதோரியற்பெயரும், மாந்தரஞ் சேரலிரும் பொறை யென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனை யாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரிழுகிய தத்துவங்களின் தொகுதியென வுணர்ந்து, அவற்றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றாற் காரண காரியங்களிரண்டுமின்றி முடிவாய் நிற்பதனையுணர்தலாம். 'இனிஞானம், பாசஞானம், பசுஞானம், பதிஞானமென முத்திறப்படும். பாசஞான மென்பது பாசம் வாயிலாக நிகழும் பசுஞானம். அது உபசாரமாக பாசஞானமென வழங்கப்பட்டது. பாசம் தத்துவக் கூட்டம்.. தத்துவங்கட்கு உணர்ச்சியின்றென்பது ஆராயும் வழிப்பெறப்படும். பகஞான மென் பது ஆன்மஞானம் .'காதலினால். நான்பிரம மென்னுஞானங் கருது பசுஞானம்' என்னுந்திருவாக்கான் பசுஞானமென்பது தன்னைப் பிறமப்பொருள் என்றுணருமுணர்ச்சியே பசுஞானமென்பது. இனிப் பதிஞானமென்பது சிவஞானமாம். சிவஞானம் என்பது திருவருளாற் பெற்ற ஞானம். இது திருவடிஞான மெனவும் பரஞானம் எனவும் கூறப்படும். இதுவே தலையான ஞானமாம்.

மணி - திருநாவுக்கரசு முதலியார்.

சித்தாந்தம் – 1914 ௵ - ஜூன் / ஜூலை ௴




No comments:

Post a Comment