Monday, May 4, 2020



அன்பு.

      "அன்புஞ் சிவமுமிரண்டென் பரறிவிலர்
அன்பே சிவமாவதாரு மறிகிலர்
அன்பே சிவமாவதாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந் திருப்பாரே.''

1. அன்பு என்பது நம் உள்ளத்திலெழும் ஓர்வகையுணர்ச்சி. இவ்வுணர்ச்சி நமக்கு விஷயமாகும் பொருள்களாலுண்டாவது. சிற் சில பொருள்களை நாம் விரும்புகிறோம். வேறு சில பொருள்களை நாம் வெறுக்கிறோம். எனவே நம் உள்ளத்திலெழும் உணர்ச்சி,யிருவகையினதாய் முடியும். அவை விருப்பஉணர்ச்சி வெறுப்புணர்ச்சி யென்பன. இவ்விருப்ப உணர்ச்சியே 'அன்பு' என்னுஞ் சொல்லால் வழங்கப்படும். இவ்வுணர்ச்சி, சடப்பொருள்கள் மாட்டுஞ் செல்லும். உயிருடைப்பொருள்கள் மாட்டுஞ்செல்லும். மனித உயிர்கள் மாட்டுஞ்செல்லும். மற்ற உயிர்கள் மாட்டுஞ் செல்லும். இவ்வாறு நம்பிரியம் அல்லது அன்பு நிகழ்தற்குக்சாசணம், அவ்வப்பொருள்களின் றன்மைகளே. அத்தன்மைகளென்னையென விசாரிப்பாம்.

       2. ஒர் நல்ல உருவத்தைப்பார்க்கிறோம். அது நம் கண்ணுக்கு நல்ல காட்சியின்பத்தைத் தரும். அதன் பால் நம் பிரியம் நிகழும். ஓர் நல்ல புட்பத்தைப்பார்க்கிறோம். அது நல்ல வாசனை பின்பத்தைத்தரும். அதன்பாலும் நம்பிரியம் நிகழும். அப்படி யேஈல்ல சுவையின்பத்தைத் தரும் பொருளின்பாலும், நல்ல குரலின்பத்தைத்தரும் பொருளின் பாலும், நம்பிரியம் நிகழும். எனவே சடப்பொருள்களி லொவ்வொன்றின் பாலும் நம் பிரியம நிகழ்தற்குக் காரணம், அவ்வவற்றாற்றா நின்ற இன்பமே. இதுவே உயிருடைப்பொருள்களையும் நாம்விரும்புதற்குக் காரணம். நல்ல பசு, நல்ல குதிரை, இவற்றின் பாலெல்லாம், நம்பிரியம் அல்லது அன்பு நிகழ்தற்குக் காரணம், அவ்வவற்றாற்றப்படுமின்பமே. அப்படியே நல்மனைவியர், நம்புதல்வர், நர்சுற்றக்சார், நல்லுறவினர், இவர் பாலெல்லாம் நம்மன்பு நிகழ்தற்குக் காரணம், இவரால் நமக்குப்போகரு மின்பமே.

3. எனில், இன்பமிருக்கும் பொருள்களிலெல்லாம், நட்டன்பும் நிகழுமா? இல்லை. அப்பொருள் கட்கும் நமக்கும் தொடர்பிருந்தால் மட்டும், அவற்றின் பால் நம்மன்பு நிகழும். யாதானுமோரிடத்தில் ஓர் நற்கனியிருப்பதாகக் கேட்டதும், நம்பிரியம் அதன்பால் நிகழ்வதில்லை. அப்படியே, யாதானுமோர்தேயத்தில், நல்லுறவுக்குரியானொருவன், இருப்பதாகக் கேட்டதும், நம்மன்பு அவன் பால் நிகழ்வதுமில்லை. அவனுக்கும் நமக்கும், ஓா தொடர்புண்டாய பின்னரே, நம்மன்பு அவன்பால் நிகழும். நம்மனைவியர், நம்புதல்வர், நம்முறவினர் நஞ்சுற்றத்தார், நந்தேயத்தார், என நமக்கும் அவர்க்கும் ஓர் தொடர்புண்டாய பின்னரே, அவர் பாலெல்லாம் நம்மன்பு நிகழும். வேறு அநேகர், நற்குண நற்சீலங்களுடையரேனும், நமக்கும் அவர்க்கும் யாதானுந் தொடர்புண்டாதற்குமுன், அவர் பால் நம்மன்பு நிகழ்வதில்லை. எனவே நம்மன்பு நிகழ்ச்சிக்குப் பொருள்கள் மாட்டுள்ள இன்பமாத்திரமன்றி, அவற்றிற்கும் நமக்குமுள்ள தொடர்புங்காரணமாம்.

4. மேற் கூறிய காரணங்களிலெது அதிகரித்தாலும், அதனோடு நம்மன்பும் அதிகரிப்பதாகும். பொருள்களாற்றரப்படுமின்பம், அதிகரித்தாலும், அவற்றிற்கும் நமக்குமுள்ள தொடர்பு அதிகரித்தாலும், அவற்றின்பாலுள்ள நம்மன்பும் அதிக
ரிப்பதாகும். எனவே தம்மாட்டு மிகுந்த இன்பமும், நம்மாட்டு மிகுந்த தொடர்புமுள்ள பொருள் எதுவோ, அதன்பாலே நம் மிகுந்த அன்பு நிகழ்வதாகும். அத்தன்மைத்தான பொருள் பரம்பொள் ஒன்றேயாம். உலகப்பொருள்களில், எவ்வசைப் பொருள்களாற் றரப்படுமின்பமும், மிகக்குருகியதே. அதுவுந்தனித்த இன்பமல்ல. துன்பம் விரவியதே நிலைபேறுடையதுமல்ல சிறிது காலத்தில் மாறுவதே. அப்பொருள் கட்கும் நிலைபேறில்லை. அவைகள் நிலைநிற்கும்வரை யின்பந் தருமென்பது மில்லை. பரம்பொருள் இத்தன்மைத்தல்ல வென்பதை, எல்லாச்சமயிகளும் ஒப்புவர் எல்லாச் சமயங்களின் கருத்தின்படியும், அப்பொருள் என்று மிருக்கும் பொருள். அளவிறந்த ஆனந்தத்தை விளைக்கும் பொருள்,

      "அண்டங் கடந்த பொருள், அளவில்லதோர் ஆனந்த
வெள்ளப்பொருள், பண்டுமின்று சென்று முள்ளபொருள்.''

என்று கூறுதற்குரிய பொருள் சிவபொருளொன்றே. இது வேயன்றித்தாமே பன்முறை பிறந்திறந்துழலும் பொருள்களியாவும், அத்தன்மைத்தான பொருளன்று, அவற்றையடைந்தாரும், பிறப்பிறப்புமுதலிய துன்பத்தினை யடைவரன்றிப் பேரின்பசுகத்தினையடையார். அதனை யடைதற்குரியார் சிவபரம்பொருளையடைபவரே. இக்கருத்தினையே நம்மணிவாசகப்பெருமான்,

      "துன்பமே பிறப்பே யிறப்பொடு
      மயக்காந்தொடர் பெலாமலுத்தநற்சோதீ
      யின்பமேயுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்''           என்னும்

''பானினைந்தூட்டுந்தாயினுஞ்சாலப்பரிந்து நீபாவியேனுடைய
ஊனினையுருக்கியுள்ளொளிபெருக்கியுலப்பிலாவானந்தமாய
தேனினைச்சொரிந்துபுறம்புறந்திரிந்தசெல்வமேசிவபெருமானே
யானுனைத்தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன் "
   
என்றுங் கூறியுள்ளார்.

5. இனியிச்சிவபரம் பொருட்கும் நமக்கும் யாதானுந்தொடர்புண்டா வென்பதே, நம்மால் அடுத்து விசாரிக்கக்கிடப்பது. அப்பொருட்கும் நமக்கும் யாதானுந் தொடர்பிருந்தாலன்றியப் பொருளின்பால் அளவற்ற ஆனந்த மிருந்தாலும், அதனால் நமக்குப்பயனில்லை யென்பதை முன்னரே விளக்கினாம். இப்பசம்பொருள் நம்மோடு தொடர்புடைய பொருளென்பதே, நஞ்சைவசன்மார்க்கவுண்மை. நாமே பரம்பொருள், நமக்கு அன்னியமாகப் பரம்பொருளேனும், வேறுபொருளேனுமில்லை யென்னுங்கொள்கை, நஞ்சன்மார்க்கக்கொள்கையல்ல. இக்கொள்கைவுண்மையாயின், நம்பாலின்ப மிருப்பினும், அதனை நாம் அனுபவித்தலுமில்லை. நம்மாட்டு அன்பு நிசழ்தலுமில்லை. இதுவன்றிப் பரம்பொருள், நம்பால் யாதோர் தொடர்புமின்றி நமக்கு முற்றிலு மன்னியமாயுள்ளபொருள் என்னுங்கொள்கையும், நஞ்சைவ சன்மார்க்கக் கொள்கையல்ல. இக்கொள்கையுண்மையாயின் எத்துணையின்பம் பரம்பொருளின் கண்ணிருப்பினும், நமக்கும் அப்பொருட்கும் யாதொருதொடர்ப மின்றாதலால், அதனபால் கம்மன்பு நிகழுமாறு மில்லை. நமக்கும் பரமபொருட்கும், சாந்நித்தியத்தொடர்பேயுளதெலும் கொள்கையும், நஞ்சைவசன் மார்க்கக் கொள்கையல்ல. இததொடர்பும் ஏகதேசவியல்பினதேயாதலால், இதனால் விளையும் அன்பும் ஏகதேசவியல்பினதேயாம்.

6. நஞ்சைவசன்மார்க்கத்தின் படியோ, பரம்பொருள், மற்றெல்லாப் பொருள்களைப் பார்க்கிலும், நம்பால் விசேஷதொடர்புடைய பொருள். இஃதொன்றே, நம்மில் ஒவ்வொருவர்பாலும், எந்நாளும் பிரிப்பின்றி யிரண்டறக்கலந்து கிடக்கும் பொருள். இக்கலப்பினையுண்மையிலறியாதாரே, ஜீவர்களாகிய நாமும் பரம்பொருளும், ஒன்றேயெனக்கூறிமயங்குவர். இவ்விருதிறத்துப் பொருள்களும், ஒன்றேல், இவற்றுள் தொடர்பென்பதே யின்றாமென்பதையறியார். இவரேயன்றி வேறு சிலர், நாமும் பரம்பொருளும் வேறென்ப துண்மையாயினும், இவைகள் ஒன்றோடொன்று கலத்தலில்லையென்பர். இலர் கொள்கையின்படியும், பரம்பொருட்கும், நமக்கும் யாதுந்தொடர் பின்றாய் முடியும். அன்றி ஏதேனும் தொடர்பிருப்பினும் ஏகதேசமாய் முடியும், எனவே பரம்பொருட்கும் நமக்கும் என்றும் பிரிதலில்லாத அதிவிசேஷ அத்வைத தொடர்புள்ளதாகக் கூறும் மார்க்கம், நஞ்சைவ சன்மார்க்க மொன்றேயாம். இத்தகைய தொடர்பினாலேயே பரம்பொருள் நமக்கு ஓர் பெரிய உபகாரத்தினைச் செய்து வரும். இவ்வுபகாரம் சூரியனொளியின் கலப்பினால், கண்ணுக்குப் போதரும் உபகாரம் போலொத்ததொன்றாம். நங்கண்களில், இவ்வொளி கலத்தலின்றேல், அவைகள் சூரியனைக்காணலுங் கூடாதாகும், பிறபொருளைக் காணலுங் கூடாதாகும். அதுபோலப் பரம்பொருள், நம்மறிவினூடு கலக்க வில்லையேல், நம்மறிவு, அப்பரம் பொருளினையு மறியாது, வேறொன்றனையு மறியாது. எனவே அப்பரம்பொருளின்பால், எத்துணையின்ப மிருப்பினும், நமக்குப்பயனின்றாய் முடியும். அவ்வின்பத்தை நமக்குத் தருதற்கென்றேயப்பரம் பொருள் நம்மோடு அத்து விதமாய்க் கலந்து நிற்கும்.

      தேனாயின்னமுதமுமாய்த்தித்திக்குஞ் சிவபெருமான
தானேவந்தென துள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான்''     என்றும்  

      "உருத்தெரியாக் கோலத்தேயுள் புகுந்தென்னுளமன்னிக்
      சுருத்திருத்தியூன்புக்கு கருணையினாலாண்டுகொண்ட
      திருத்துருத்திமேயானைத்தித்திக்குஞ்சி சிவபதத்தை
      அருத்தியினானாயடியேனணி கொடில்லை கண்டேனே.''
    என்றும், நமது மணிவாசகசுவாமிகள் அருளிப்பாடியுள்ளார்கள். இவ்விதமாய் நம்மோடு பிரிவறக்கலந்து நின்று, தன்மாட்டுள்ள பேரானந்தவின்பத்தினை நமக்குத் தருதலினாலேயே யிப்பரம் பொருள் நமக்கு எவ்வாற்றானும் உரிமையாகும். இப்பரம்பொருள் மற்றெல்லாப் பொருள்களினு மிகுந்த இன்பத்தினையுடையதும், நம்மாட்டு மிகுந்த தொடர்பினையுடையது மாதலால், அவையெல்லாவற்றினும் இஃதொன்றே நம்விசேஷ அன்புக்கு எவ்வாற் நானும் உரியதாகும். இக்கருத்தினையே நம்மணிவாசகப் பொருமானும் "ஈறில்லாப்பதங்கள் யாவையுங்கடந்தவின்பமே யென்னுடை யன்பே' என்றருளியதும். இது நிற்க, ஏனைப்பொருள்களும் நம்மன்பிற்கு எத்துணை யேனும் உரியனவாவெனபதை ஆராய்வாம்.

7. யாரேனும், ஒருவர்பால் உண்மை யன்புடையான் அவர்பால் மட்டுமன்று, அவரது தொடர்புடையார் பாலெல்லாம், அன்புடையனாகின்றான். தம்மனைவிபால் மிகுந்த அன்புடையான், அவள் உறவினர்பாலெல்லாம் அன்புடையனாகின்றான். அது போல், உண்மையிற் சிவபரம்பொருளின்பாலன்புடையான் அப்பரம் பொருளின் தொடர்புடைய எல்லாப் பொருள்களின்பாலும் அன்புடையனாவான். அப்பரம்பொருளின் தொடர்போ, மனித உயிர்கள்பால் மட்டுமல்ல, மற்ற உயிர்கள் பாலும், உயிரில் பொருள்கள் பாலும் எந்நாளுமுள. பிறபொருள்களின் பால் அத்தொடர் பிருத்தலினாலேயே, அப்பொருள்கள், நம்மறிவிற்கு விஷயமாகின்றது. சூரியனொளி நம் கண்களிற் கலந்திருந்தாலும் பொருள்களின்கண் கலக்கவில்லையேல், அப்பொருள்கள் நமக்கு விஷபமாதலில்லை. அதுபோலப் பரம்பொருள் நம்மறிவின்கண் கலந்திருந்தாலும், ஏனைப் பொருள்களின் கண் கலக்கவில்லையேல், அப்பொருள்களி லொன்றும் நமக்கு ஒரு சிறிதும் விஷயமாகாது. எனவே நம்மறிவிற்கு விஷய மாகும் எவ்வகையுயிர்கள் பாலும், நம்பரம்பொருள் நம்பாற்போல அத்துவிதத் தொடர்பினையுடையது என்பது விளங்கும். இத்தகைய தொடர்புடைய எல்லாப் பொருள்களின் கண்ணும் நம்மன்பு நிகழ்வதாகும். என்பவே பரம்பொருளன்றியேனைப் பொருள்களின் பால், நம்மன்பு நிகழ்தற்குக்காரணம் இரண்டு விதமாய்முடியும். அவையாவன, அப்பொருள் கட்கும் நமக்கும் நேரிலுள்ள தொடர்பும், அவற்றிலுள்ள இன்பமும் ஒருவித காரணங்களாம். அன்றி நம்மோடு விசேஷதொடர்புடைய சிவபரம் பொருட்கும் அப் பொருட்குமுள்ள தொடர்பும், அச்சிவபாம் பொருளிலுள்ள இன்பமும் மற்றொருவி தகாரணங்களாம். இவ்விருதிறத்தனவாய அன்பில் எது மிகச்சிறந்த தென்பதை யடுத்து ஆராய்வாம்.

8.ம்பொருளன்றி யேனைப் பொருள் கள்பாலுள்ள இன்பட மிகக்குருகியதே யென முன்னரே கூறினாம். அன்றியும் நமக்கும் அப்பொருள்கட்குமுள்ள தொடர்பும் மிக ஏகதேசமே. அத்தொடர்பும் எல்லா உயிர்கள்பாலுமில்லை. சிற்சில உயிர்கள் பாலேயுளது. நிலைபேறுடையதுமல்ல சிறிது காலத்தில் மாறும் தகைமைத்து என்பவே யித்தகைய தொடர்பு காரணமாய் வருமன்பும் எல்லா உயிர்கள் பாலுஞ் செல்லாது எல்லாக் காலங்களிலும் நிகழாது மிகக்குருகியதுமாகும். இவ்வன்பிற்கும் சிவபரம் பொருட்குமயாதொரு சம்பந்தமுமில்லை. அப்பரம் பொருளை யுண்மையிலறியாதார் மாட்டு நிகழும் அன்பு இதுவே. இத்தகைய அன்பினையுண்மையாகக் கொள்பவரே,

      "அன்புஞ் சிவமுமிரண்டென்பறிவிலர்''
   
ஆவர். இது நிற்கச், சிவபரம்பொருளின் தொடர்புகாரணமாயுண்டாமன் போயது போலன்று. அத்தொடர்பு எல்லாத்தொடர்புகளிலும் அதிவிசேஷ தொடர்பு. அது எல்லாப் பொருள்களிலுமுள்ள தொடர்பு. இவ்விததொடர்பாலுண்டா மன்பும், அத்தன்மைத் தேயாம். இவ்வன்பிற்குஞ் சிவத்திற்கும் வியாபகம் சமமாம்.
இவ்விரண்டும் ஒன்றோடொன்று விரவிப்பேதமற நிற்கும். இதனை எல்லாருமுணரார். சிவபரம் பொருளையுண்மையிலுணர்வாரே யிதனையுணர்வார். இவரே அன்பே சிவமாவதென அறிவர்,

     "அன்பேசிவமாவதாருமறிகிலர்
      அன்பேசிவமாவதாருமறிந்தபின்''

என்றது இத்தகைய அன்பினையே. அன்றியும், இவ்வன்பே எல்லாவுயிர்கள் பாலும், ஒரே தன்மைத்தாய் நிகழுமன்பு. இதுவே பிறவுயிர்கள் யாவையுந்தன்னுயிர்போற் கருது மன்பு. பரம ஜீவகாருண்ணியமென்பது மிதுவே. இதுவன்றி யேனைச்சமயிகளாலும், எனை பெவராலும் கூறப்படும் ஜீவகாருண்ணியம், போலி ஜீவகாருண்ணியாகும். எனவே நம் சைவசன்மார்க்கத்திற் கூறப்படும் ஜீவகாருண்ணியமே உண்மை ஜீவகாருண்ணியமென்பது பெற்றது. இச்சன்மார்க்கம் வளந்தோங்க நிலவும் இத்தென்னிந்தியாவில் மட்டும் புலாலுண்ணல், மிகக்குறைதற்குக் காரணமுமிம்மார்க்கமே. இதன்படி பொருள்கள் உள்பொருள்களே யாதலாலும், அவையாவும் நம் உன்மை யன்பிற்குரியனவே யாதலாலும், நம்பரம் பொருள் எவ்வுயிர்களை யேனும் வதைக்கலாமென யாதோர் கீதையுமெக்காலத்திலுங் கூறினாரில்லை.
   
9. இது நிற்கச் சிவபாப் பொருளொன்றே, நம் மன்பிற்கு மிக உரிமையாம் பொருளென்று கூறினோம். ஆனால், அப்பொருளின்பால், எக்காலத்திலும் நம்மன்பு செல்லாதிருக்கக்காரணந்தானென்னை, கூறுதும். யாதானுமோர் பொருளின்பால், இன்பமிருப்பினும், அப்பொருட்கும் நமக்குத் தொடர்பிருப்பினும் அப்பொருளினையுந் தொடர்பினையும், நாம் உணர்ந்தாலன்றி, நம்மன்பு அப்பொருளின்பா லுண்டாதலில்லை. சர்க்கரையில் இனிப்பிருந்தாலும், அது நம் நாவிற் சேர்ந்திருந்தாலும், நம் நாதிமிர் கோய் முதலியவற்றாற் றடைப்பட்டு, அச்சர்க்கரையின் பால் நிகமாது அது போல, ஓர் பொருளின்பால், நம்மன்பு நிகழ்தற்குக் காரணம், அப்பொருளையும் அதன்றொடர்பினையு முணர்தலாகும். அவ்வன்பின் பெருக்கிற்குக் காரணம் அவ்வுணர்விலழுந்தி நிற்றலாகும். சிவபாம் பொருளின்பால் நிகழவேண்டும் அன்பிற்குங் காரணம் இதுவே. அஃதாவது சிவபாம்பொருளினையும், அதன் தொடர்பினையுமுமுணர்ந்து அதன் கன்ணழுந்தி நிற்றலாகும். இத்தகைய உணர்விலழுந்தி நிற்றலே சரியைபாதி வழிபாடுகளாம். இவ்வழி பாடுகளாலேயே, சிவ பரம்பொருளின்பால், நம்மன்பு பெருகவேண்டுவதாகும். இவ்வழிபாட்டினையே, நம் மணிவாசக மூர்த்தியும்,

“ஆமாறுன்றிருவடிக்கே யகங்குழை யேனன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்புத்தேளிர்
கோமானின்றிருக்கோவிறூகேன் மெழுகேன்கூத்தாடேன்
சாமாறேவிரைகின்றேன் சதுராலேசார்வானே.''
   
என்று கூறியதும், இனியிவ்வழிபாட்டினை யியற்றும்விதமென்னையென யாராய்வாம்.
   
10. சிவபாம்பொருளோ, அதிவியாபகமும், அதிசூக்குமமுமான பொருள். இதனினும் வியாபகப்பொருளுமில்லை. இதனினும் சூக்குமப் பொருளு மில்லை. இத்தகைய பொருளை, இதனை நோக்க மிகத் தூலமும், மிக ஏசுதேசமுமான நம்மறிவாலுணர்தல், ஒருவாற்றானு மேலாதாம். இவ்வேலாமையை யுணர்ந்தே, நம்சிவ பரம்பொருள், தன்னை நமக்குணர்த்த வேண்டி, தமது அருட்குணாதிசயங்கள் கம்சுட்டறிவிற்கிலக்காம் பொருள்களில் விளங்கும்வண்ணம், அருட்கோலங்கொண்டு நிற்கும். இவ்வருட்கோலங் கொள்ள வில்லையேல், எம்மால் அப்பரம்பொருளை யுணர்தல் ஒரு சிறிதும் முடியாது. இவ்வருட்கோலங்களே யப்பொருளின் தடத்த வடிவங்களாம். இவ்வடிவங்கள், நம் சுட்டறிவிற்படும் பொருள்களி னியற்கையமைப்பிலுங் காணப்படும். அத்தகைய பொருள்களின் சேர்க்கை யமைப்பிலுங் காணப்படும். இயற்கையமைப் பிற் காணும் வடிவங்களே குருசங்கம வடிவங்களாம். சேர்க்கையமைப்பிற் காணும் வடிவங்கள் இலிங்க வடிவங்களாம். இம்மூவகை வடிவங்களிலும், பாம்பொருளின் குணாதிசயங்களை யுணர்ந்து, அவற்றின்பா லழுந்திநிற்றலே, அப்பொருளின்பால் நம்மன் பினை வளர்த்தற் குபாயமாம். இதுவே பத்திநெறி யெனப்படும். இந்நெறியிற் சென்றாரே, முத்திநெறியினை யடைவார். இக்கருத்தினைபே நம்பாமாசாரிய சுவாமிகள்,

“முத்திநெறியறியாத மூர்க்கரோடு முயல்வேனைப்
பத்திநெறி யறிவித்து''

என்று கூறியுள்ளார்கள். இனியின்னெறி நின்றார் திறத்தினையும், ஒரு சிறிது ஆராய்வாம்.

11. மேற்கூறிய மூவகைவடிவங்களிலும் பரப் பொருளினைக் கண்டு வழிபடுவார்க்கு, அப்பொருளின் பாலன்பு, மென்மேலும் பெருகிவருவதாகும். இவ்வழிபாட்டில் முற்றிய இவர் பால் அன்பின் பெருக்கோடு பேரின்பப் பெருக்குமுண்டாம். “என் அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றதும் இப்பேரின்பத்தினையே, இவர் உடல் உயிர் முற்றம் இவ்வின்பமயமாயே நின்று உருகுவதாகும்.

''அன்பினாலென்றன் னாவியோடாக்கை
      யானந்தமாய்க் கசிந்துருக''
   
என்ற திருவாசகம், இவர் மாட்டு மிகவுண்மையாய் முடியும். இவர் பரம்பொருளன்றி வேறெவ்வகைப் பொருளினும் எவ்வகையின்பத்தினையுங் காணார். இவர் கருவிகரணாதிகள் யாவும், இப்பேரின்ப சுகத்தினையே காணும். இவரே,

காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணுமடியார்'' இவரது குணங்கள் பாவும் சிவபரம்பொருளது அருட்குணங்களாய் மாறப்பெறும். இவரது அன்பின்றிறமே யருட்டிறமாக மாறும். இவரே யாவராலும் சிவபரம்பொருளென வழிபடுதற்குரியார். இவர் பாலே அன்புஞ்சிவமு மொருங்கு கூடி யாதொரு பேதமுமின்றி விளங்கும். இவரது வடிவமே அன்பின் வடிவம். இதுவே, சிவத்தின் வடிவம். இவரே யன்பே சிவமா யமர்ந்திருப்பவர்.

"அன்புஞ்சிவமு மிரண்டென்ப ரறிவிலர்
      அன்பே சிவமாவ தாருமறிகிலர்
      அன்பே சிவமாவ தாருமறிந்தபின்
      அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே.''

திருச்சிற்றம்பலம்.

V. P. காந்திமதி நாதப்பிள்ளை,
                      வக்கீல், அம்பாசமுத்திரம்.

சித்தாந்தம் – 1913 ௵ - ஆகஸ்ட் / செப்டம்பர் ௴
     

No comments:

Post a Comment